யாரையும் அழைக்கவில்லை

யாரையும் அழைக்கவில்லை

அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். மே மாதம் வசதியான ஒரு நாளில் எனது இரண்டாவது மகனுக்கு இன்ஷா அல்லாஹ் திருமணம் நடக்கவுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் எனது முதல் மகனுக்கும் எனது மகளுக்கும் ஒரே நாளில் திருமணம் நடைபெற்றது. இத்திருமணம் குறித்து பின்னர் கேள்விப்பட்ட நண்பர்களும் எனக்கு அறிமுகமானவர்களும் தங்களை மட்டும் அழைக்கவில்லை என்று குறைப்பட்டுக் கொண்டார்கள்.

நான் ஒருவருக்கும் சொல்லவும் இல்லை. அழைக்கவும் இல்லை. மாநில நிர்வாகிகள் கூட வர வேண்டாம்; துஆச் செய்தால் போதும் எனக் கூறியதை அவர்களுக்கு விளக்க வேண்டியதாகி விட்டது.  

மற்ற அனைவருக்கும் சொல்லி விட்டு எனக்கு மட்டும் சொல்லாமல் விட்டுவிட்டார்கள் என்று ஒவ்வொருவரும் நினைத்துக் கொண்டனர்.

வழக்கம் போல் பித்னா கூட்டம் பீஜே மகன் திருமணம் படுஆடம்பரமாக ஊரை அழைத்து விருந்து போட்டு நடந்தது என்று பரப்பி விட்டார்கள். இதை நான் எதிர்பார்த்ததால் ஆதாரத்துக்காக திருமணத்தை வீடியோவில் பதிவு செய்து வைத்திருந்தேன். பல மாதங்களுக்குப் பின் அதை வெளியிட்ட பின்னர் வாயடைத்துப் போனார்கள்.

அந்த வீடியோ இதுதான்

http://onlinepj.com/vimarsanangal/pj_patriya_vimarsanam/pj_illa_thirmnam/

அது போன்ற நிலையைத் தவிர்க்கவே இந்த மடல்.

எனது இரண்டாவது மகனின் திருமணம் தொண்டி தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகத்தில் வைத்து நடைபெறும்.

பத்திரிகை மூலமோ ஊர் ஊராக பயணம் செய்தோ நான் யாரையும் அழைக்கவில்லை. இரத்த சம்மந்தமான உறவுகளுக்கு மட்டும் தொலைபேசி மூலம் தெரிவிக்கவுள்ளேன்.

மிகமிக எளிமையாகவும், குறைந்த செலவிலும் பந்தா பகட்டு எதுவும் இல்லாமலும் இன்ஷா அல்லாஹ் நடக்கும்.

எனது மகனுக்காக துஆச் செய்தால் போதும். யாரும் வரவேண்டியதில்லை என்று அறிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்

பீ.ஜைனுல் ஆபிதீன்துஆச்செய்தால்போதும்யாரும் வரவேண்டியதில்லை

Published on: April 30, 2013, 5:23 PM Views: 7202

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top