திருவிதாங்கோடு பள்ளிக்கு

திருவிதாங்கோடு பள்ளிக்கு திருவிதாங்கோடு குத்பிய்யத் ஓதும் பள்ளிவாசலுக்கு கமாலுத்தீன் மதனி சவூதியில் பணம் வாங்கிக் கொடுத்தார் என்று பீஜே அவதூறாகக் கூறிவிட்டார் என்பது உண்மையா

நீங்கள் சிலோனில் பேசும் போது ஜாக் பிரிவினை ஏன் என்ற தலைப்பில் பேசும் போது திருவிதாங்கோட்டில் உள்ள குத்பிய்யத் ஓதும் பள்ளிக்கு எஸ். கமாலுத்தீன் மதனி பணம் கொடுத்ததாகப் பேசி உள்ளீர்கள். அதற்குத் தகுந்த ஆதாரம் வேண்டும்.?

அபூதானிஸ் திருவிதாங்கோடு அழகியமன்டபம்)

கமாலுத்தீன் மதனி சவூதிக்கு எழுதிய கடிதம், அங்கிருந்து பணம் வந்த விபரம், திருவிதாங்கோட்டில் அவர் பணம் ஒப்படைத்ததற்கான காகித ஆதாரம் ஆகியவற்றைக் கேட்டால் அத்தகைய ஆதாரங்கள் என்னிடம் இல்லை. இது போன்ற ஆதாரங்களை சம்மந்தப்பட்டவர்கள் தான் தங்களிடம் வைத்திருப்பார்கள். எனவே இது போன்ற ஆதாரங்கள் கமாலுத்தீன் மதனியிடம் தான் இருக்கும்.

இது மட்டும் தான் ஆதாரங்கள் நினைத்துக் கொண்டு இக்கேள்வியைச் சிலர் கேட்டு வருகின்றனர். ஆதாரங்கள் பல வகைப்படும். சம்மந்தப்பட்டவரே ஒன்றை ஒப்புக் கொண்டால் அதன் பிறகு காகித ஆதாரம் தேவைப்படாது. சம்மந்தப்பட்டவர் முன்னிலையில் ஒரு குற்றச்சாட்டு சொல்லப்படும் போது அதை அவர் மறுக்காமல் இருந்தால் அதுவும் கூட ஆதாரம் தான். நம்பகமான சாட்சிகள் அதை உண்மைப்படுத்தும் தகவல்களைக் கூறினால் அதுவும் ஆதாரமே. இப்படி பல வகையான ஆதாரங்கள் உள்ளன என்பதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆரம்ப காலத்தில் தவ்ஹீத் பிரச்சாரம் செய்த போது அதைக் கடுமையாக் எதிர்த்த ஊர்களில் திருவிதாங்கோடு முக்கிய இடத்தை வகித்தது. அங்கே பிரச்சாரக் கூட்டம் நட்த்த விடாமல் அங்குள்ள உலமாக்கள் மக்களைத் தூண்டி விட்டனர். இது குறித்து நான், கமாலுத்தீன் மதனி, ரஹ்மதுல்லாஹ் இம்தாதி ஆகியோரும் மற்றும் சிலரும் இருந்த சபையில் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ரஹ்மதுல்லா இம்தாதி கமாலுத்தீன் மதனியை முன்னால் வைத்துக் கொண்டே பின்வரும் விபரத்தைக் கூறினார்.

இவர் எந்தப் பள்ளியின் விரிவாக்கத்துக்கு உதவினாரோ அவர்கள் தான் இப்போது எதிர்க்கிறார்கள். விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த இடம் குத்பிய்யத் ஓத பயன்படுகிறது என்று கூறினார்.

எனக்கு இது புது விஷயமாக இருந்ததால் விபரம் கேட்டேன். கமாலுத்தீன் மதனி முதலில் இங்கு தான் மவ்லவி பட்டம் பெற்றார். அவர் பெயருக்குப் பின் போடப்படும் அன்வரி எனும் பட்டம் திருவிதாங்கோட்டில் கொடுத்தது தான். அவர்கள் உதவி கேட்ட போது மறுக்க முடியாமல் சவூதிக்குச் சிபாரிசு செய்தார் என அவர் விளக்கினார். ஷிர்க்கின் கேந்திரம் என்று தெரிந்திருந்தும் அவர்களுக்கு உதவி செய்தது ஏற்கத்தக்கது அல்ல என்று அப்போது நான் குறிப்பிட்டேன்.

ரஹ்மதுல்லா இம்தாதி இவ்வாறு கூறிய போதும் நான் கண்டித்த போதும் கமாலுத்தீன் மதனி இதை மறுக்கவில்லை. இதை ரஹ்மதுல்லா இம்தாதி உறுதிப்படுத்துவாரா என்பது தெரியவில்லை.

பீஜே கூறுவது பொய் என்று அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்யத் தயார் என்றால் நான் கூறுவது உண்மை என்று சத்தியம் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

அல்லாஹ்விடம் இதை ஒப்படைப்பது தான் நம்மால் செய்ய முடியும். இதற்கு அவர்கள் உடன்பட மறுத்தால் அதுவே ஆதாரமாகி விடும்.

இது தவிர கடும் எதிர்ப்பை மீறி திருவிதாங்கோட்டில் தவ்ஹீத் பிரச்சாரக் கூட்டம் நடந்தது. நான், கமாலுத்தீன் மதனி, ரஹ்மதுல்லா இம்தாதி ஆகியோர் உரையாற்றிய அந்தக் கூட்டத்தில் (சுமார் 300 பேர் இருந்திருக்கலாம்.) வஹாபிகளின் காசு மட்டும் இனிக்கிறது கொள்கை மட்டும் கசக்கிறதோ என்று இதைக் குறித்து இம்தாதி பேசினார். ஆரம்ப கால தவ்ஹீத்வாதிகளிடம் கேட்டால் இதை உறுதி செய்வார்கள். அல்லது நானே அதை நேரடி சாட்சிகள் முலம் நிரூபிக்க வேண்டும் என்று கமாலுத்தீன் மதனீ கேட்டால் அதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

பலவேசத்தார்கள் இதற்கு முயற்சிக்கட்டும்.

ஆனால் நான் இலங்கையில் பேசும் போது பள்ளிவாசல் கட்டிக் கொடுத்ததாகக் கூறினேன். பள்ளிவாசலின் விரிவாக்கத்துக்கு உதவுவதும் பள்ளி கட்டிக் கொடுத்ததாகத் தான் பொருள் என்பதால் அவ்வாறு கூறினேன். திருவிதாங்கோட்டில் கட்டப்பட்ட பள்ளிகள் அனைத்தும் கமாலுத்தீன் மதனி பிறப்பதற்கு முன்பே கட்டப்பட்டவை பார்த்தீர்களா பீஜே பொய் சொல்கிறார் என்கின்றனர். இது நேர்மையான செயலா?

 ஷிர்க் கேந்திரத்தை தவ்ஹித் கேந்திரம் என்று சித்தரித்து சவூதி நிறுவனததை ஏமாறுவது தான் இதில் அடிப்படையான விஷயம். இதற்குத் தான் அவர்கள் பதில் சொல்ல வேண்டும். அவர்களின் மறுப்பில் இதற்கு விடை உள்ளதா எனப் பாருஙகள்.

இதை வெளியிட்ட இன்று 28/9/2009 குமரி மாவட்டத் தலைவர் ஹாஜா நூஹ் அவர்கள் அங்கு வைக்கப்பட்டுள்ள கல்வெட்டை நேரடியாகப் பார்த்து விட்டு தகவல் தந்தார். அதாவது 1977ல் அவுகாதர் குட்டி நஹா அடிக்கல் நாட்டியதாகவும், 1983ல் சுலைமான் சேட் திறந்து வைத்ததாகவும் ஆங்கிலத்தில் உள்ளது. அரபியில் ஷைக் காலித் பின் அப்துல் அஸீஸ் செலவில் கட்டப்படுள்ளதாக அதில் குறிப்பிட்டிருப்பதாகவும் த்கவல் தந்தார். குத்பிய்யத் ஓதும் மதரஸாவுக்கோ பள்ளிவசலுக்கோ அரபு நாட்டு ஷைகுடன் என்ன தொடர்பு இருக்கும்? மதனிகள் பரிந்துரை இல்லாமல் அங்கிருந்து பணம் வாங்க முடியுமா? கல் வெட்டின் போட்டோக்களை பாருங்கள்


28.09.2009. 01:10




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
104 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி