பீஜே பெயரில் மதுரை சொத்து
பீஜே பெயரில் மதுரை சொத்து
மதுரையைச் சேர்ந்த சகோதரர் உஸ்மான் என்பவர் மதுரை திருமங்கலம் பகுதியில் உள்ள தனது சொத்தை நல்ல பணிகளுக்காக எழுதித் தருவதாகவும் அதை பீஜே பெயரில் தான் எழுதித் தருவேன் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் மதுரை மாவட்ட அப்போதைய தலைவர் கலீல் ரஹ்மான் என்னிடம் தெரிவித்தார்.
தனி நபர் பெயரில் இருந்தால் அது எதிர்காலத்தில் சிக்கலை உண்டாக்கும்; ஜமாஅத் பெயரில் தான் இருக்க வேண்டும் என்று நான் அவரிடம் பேசும்படி மாவட்டத் தலைவரிடம் நான் சொன்னேன்.
மாவட்ட நிர்வாகிகள் அவரிடம் பேசிய போது அவர் அதை ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறினார்கள்.
இந்த நிலையில் நிர்வாகக் குழுவில் வைத்து இதை விவாதித்த போது ஜமாஅத்துக்காக வரும் சொத்தை நாம் இழந்து விடக்கூடாது என்பதால் அவர் பீஜே பெயரில் எழுதித் தந்தாலும் உடனே ஜமாஅத் பெயருக்கு மாற்றிக் கொள்வோம் என்று முடிவு செய்தனர்.
இதை மாவட்ட நிர்வாகிகளுக்கும் தெரிவித்தனர்.
இதன் பின்னர் இதை நாங்கள் மறந்து விட்டோம்.
இந்த நிலையில் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமைக்கு புதி நிர்வாகிகள் தேர்வு செய்யும் பொதுக்குழு நடந்தது.
அந்தப் பொதுக்குழுவுக்கு வந்த மதுரை மாவட்ட நிர்வாகிகள் மேற்கண்ட சொத்தை அவர் எழுதித் தந்து விட்டார் எனக் கூறி அதற்கான பத்திரத்தை என்னிடம் பொதுக்குழுவில் வைத்து சீலிட்ட உறையில் வைத்து ஒப்படைத்தனர்.
நான் அதைப் படிக்கவும் இல்லை. திறந்து பார்க்கவும் இல்லை. அந்த இடத்திலேயே அதை புதிய பொதுச் செயலாளர் கையில் ஒப்படைத்து விட்டேன். என் பெயரில் உள்ளதை எப்போது வேண்டுமானாலும் மாற்றி வாங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறி விட்டேன்.
அவர்களும் அந்த ஆவணத்தை அப்படியே ஜமாஅத் ஃபைலில் வைத்து விட்டனர்.
இந்த நிலையில் இது குறித்து பாக்கரும் அவரது கும்பலும் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர். தனி நபர் பெயரில் எப்படி சொத்து இருக்கலாம் என்று கேட்க ஆரம்பித்தனர்.
என் பெயரில் சொத்து எழுதப்பட்டதாக என்னிடம் கூறப்பட்டதன் அடிப்படையில் இதற்குப் புதிய நிர்வாகம் தான் பொறுப்பு. சொத்தை மாற்றி எழுதும் செலவைக் கருத்தில் கொண்டு தாமதப்படுத்துகிறார்கள் என்று நான் பல ஊர்களில் விளக்கம் அளித்தேன்.
இது வரை நடந்தது தான் எனக்குத் தெரியும்.
இதற்கிடையில் ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது.
அதாவது சவூதியில் உள்ள ஒரு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் எனது இந்த விளக்கத்தைக் கேட்டு விட்டு பத்திரச் செலவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று தலைமையைத் தொடர்பு கொண்டனர். அப்போது தான் புதிய நிர்வாகிகள் பத்திரத்தை எடுத்துப் பார்த்த போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்காக அதன் தலைவர் பீ.ஜைனுல் ஆபிதீன் என்று தான் பத்திரம் எழுதப்பட்டதை அறிந்துள்ளனர்.
சொத்தைத் தந்தவர் ஜமாஅத் பெயரில் எழுதித் தர மறுத்தாலும் கடைசியில் நாம் கேட்டுக் கொண்ட படியே தான் எழுதித் தந்துள்ளார் என்பது அப்போது தான் நிர்வாகிகளுக்குப் புரிந்தது.
பத்திரச் செலவை ஏற்றுக் கொள்வதாகச் சொன்ன மண்டலத்திற்கு இந்தத் தகவலைச் சொல்லி விட்டனர். ஆனால் எனக்கு இதைச் சொல்ல மறந்து விட்டனர்.
இந்தநிலையில் இன்றைய தினம் (டிசம்பர் 27) ட்ரஸ்ட் சம்மந்தமாக நான் வெளியிட்ட ஆக்கத்தில் கடைசி பாராவில் மதுரை சொத்து பற்றி முன்னர் குறிப்பிட்ட வாசகமும் இடம் பெற்றிருந்தது.
அதைப் பார்த்த பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத் அவர்கள் என்னை அவசரமாக தொடர்பு கொண்டு ஒரு செய்தியை உங்களிடம் சொல்ல மறந்து விட்டேன் எனக் கூறி பத்திரம் ஜமாஅத் பெயரில் தான் உள்ளது என்பதையும் இது குறித்து பத்திரச் செலவை ஏற்க முன்வந்த மணடலத்திற்கு அப்போதே தகவல் தந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
உடனே எனக்கு அதை ஸ்கேன் செய்து அனுப்புமாறு கூறியதன் அடிப்படையில் அதை எனக்கு அனுப்பி வைத்தார்.
மதுரை சகோதரர் என் தனிப்பட்ட பெயரில் எழுதவில்லை என்பதும் நான் கேட்டுக் கொண்டபடி ஜமாஅத்துக்காக என் பெயரில் எழுதி கொடுத்து அனுப்பியுள்ளார் என்பதும் எனக்கு இப்போது தான் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவனங்களை நான் எப்போதும் முழுமையாக வாசித்துப் பார்ப்பது வழக்கம் என்ற போதும் நான் தலைவர் பொறுப்பில் இருந்து மாறிய சில மணி நேரத்தில் என் கைக்கு வந்ததாலும் அது மூடப்பட்ட நிலையில் இருந்ததாலும் அதை வாசிக்கும் கடமையும் பொறுப்பும் எனக்கு இல்லை என்பதாலும் அப்படியே நிர்வாகிகளிடம் ஒப்படைத்து விட்டேன்.
எத்தனையோ விஷயங்களீல் அல்லாஹ் எனக்கு நினையாப் புறத்தில் உதவி செய்துள்ளான். அது போல் இப்போதும் உதவி செய்துள்ளான். அந்தப் பத்திரத்தின் காப்பியை கீழே காணலாம்.
மதுரை சொத்து பீஜே பெயரில் உள்ளது என்ற இரண்டரை ஆண்டுக்கால பிரச்சாரம் இத்தோடு முடிவுக்கு வந்து விட்டது
அல்ஹம்து லில்லாஹ்
27.12.2010. 10:29
