பீஜே அவர்களின் மகன் விஷயமாக‌

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) அண்ணன் பி.ஜே அவர்களுக்கு, தங்கள் மகன் முஹம்மது ஒரு மாற்று மத பல் டாக்டர் பெண்ணை காதலித்ததாகவும், அதற்கு அந்த பெண்ணை நீங்கள் த.த.ஜ. வின் செல்வாக்கை வைத்து மிரட்டினீர்களாம். அந்த பெண் இஸ்லாத்திற்கு வருவதாக தெரிவித்தும் நீங்கள் உங்கள் மனைவிக்கு பிடிக்காத காரணத்திற்காக வேண்டாம் என்று கூறியதாகவும் அவதுாறு கூறுகிறார்கள். மேலும் உங்களது பயானைக் கேட்டுதான் பல பேர் விரும்பியவரை திருமணம் செய்கின்றார்கள். ஆனால் தங்கள் மகன் விஷயத்தில் இஸ்லாத்திற்கு வர கூடிய பெண்ணைக் கூட வரவிடாமல் செய்துவிட்டதாக பலர் கூறி வருகின்றனர். மற்றவர்கள் குடும்பத்திற்கு ஒரு நியாயம். தங்களுக்கு ஒரு நியாயமா? என்று கேட்கின்றார்கள். இதற்கு தகுந்த விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். அசத்தியம் எனும் இருளை அகற்றி, சத்திய வாதிகளாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக

மூன்பப்ளிகேசன் வாடகைக்கு இருந்த கட்டடத்தில் ஒரு முஸ்லிம் பல் டாகடரிடம் இந்து பெண் ஒருவர் நர்சாக இருந்தார். அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் நிலையில் மார்க்க வரம்பு மீறாமல் பழகியது உண்மை. என்னிடம் இந்தப் பிரச்சனை வந்த போது அந்தப் பெண் புர்கா போடுவது உள்ளிட்ட இஸ்லாத்தின் நடைமுறைகள் பிடிக்கவில்லை எனக் கூறி விட்ட்டார். அந்தப் பெண்ணை நான் பார்க்கவும் இல்லை. பேசவும் இல்லை. அழைக்கவும் இல்லை. மிரட்டவும் இல்லை. அப்படி இருந்தால் அப்பெண்ணையோ அப்பெண்ணின் உறவினர்களையோ கொண்டு நிரூபிக்கச் சொல்லுங்கள் என்று கேட்ட போது பொய்யன் ஜமா அத் குரூப் மவ்னமாகி விட்டது. அப்பெண்ணின் தந்தையை அழைத்து நான் பேசினேன். அவர்களின் குடும்பத்தில் இஸ்லாததை ஏற்பது சாத்தியமே அற்றது என்று அவர் கூறினார். அதே சமயம் உங்களோடு பழகிய வகையில் உங்களூடன் நட்புறவைத் தொடருகிறேன் என்று கூறினார். சென்ற மாதம் அவரது மகன் திருமணத்துக்கு நேரில் வந்து அழைபு தந்தார். அவரது சொத்து சம்பந்தமாக சிலர் மோசடி செய்தார்கள் என்று உதவி கேட்டு இரண்டு மாதங்களுக்கு முன் என்னை அணுகினார். மாநிலச் செயலாளர் அப்துல் ஜப்பாருக்கு பரிந்துரை செய்து அந்தக் காரியம் முடிக்கப்பட்டது. மிரட்டி இருந்தால் இப்படி நடந்திருக்காது. உங்களோடு பழகிய பிறகுதான் இஸ்லாத்தின் உண்மை நிலையே எனக்குத் தெரிகிறது எனக் கூறும் அளவுக்கு அவர் நெருக்கமாக உள்ளார். ஜமா அத்தின் செல்வாக்கை எனது சுயநலனுக்கு பயன்படுத்திக் கொண்டதாக் எனது எதிரிகளும் கூற மாட்டார்கள். இந்த அவதூரைப் பரப்பும் பொய்யன் கூட்டத் தலைவர் போல் என் மகன் அந்தப் பெண்ணுடன் 16 மனி நேரம் பயணம் செய்யவில்லை. சினிமா பீச் என்று சுற்றவில்லை. தனித்திருக்கவில்லை. பெற்றோருக்குத் தெரியாமல் மறைக்கவில்லை. அந்நியப்பெண்ணுடன் தனித்திருந்தால் தப்பா என்று இவர்கள் கொடுத்து போல் ஃபத்வா கொடுக்கவில்லை. இவ்வாறு கூறுவோர் மார்க்க அடிப்படையில் நிரூபிக்கச் சொல்லுங்கள்.

28.09.2009. 01:11




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
87 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி