உங்கள் ஆக்கங்களை பயன்ப்டுத்துவது தவ
பெருமை அடிக்கும் நோக்கம் அல்லது புகழுக்காக இல்லாமல் உங்கள் ஆக்கங்களை பயன்படுத்திக் கொள்ளலாமா? மேலும் இஸ்லாமிய பார்வையில் அறிவு என்பது இறைவனின் உடமை. தான் நாடுவோருக்கு அதை வழங்குகிரான்.அதை நீங்களும் உங்கள் ஆக்கம் என்று பெருமைப்படுவது thavaruthaaneஉங்கள் மூலமாக இறைவன் மக்களுக்கு வழங்கும் அறிவை தங்குதடை இன்றி அனைவரும் பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிப்பதுதானே முறை.?
முஹம்மது காசிம்
பெருமைப்படக்கூடாது என்பதும் இஸ்லத்தின் கட்டளை தான். பிறரது ஆக்கத்தை தன்னுடையது போல் காட்டிக் கொள்வதும் தடுக்கப்பட்டது தான். நாங்கள் பெருமையைத் தவிர்க்க வேண்டும். அது போல் நீங்கள் பிறரது ஆக்கங்களை உங்களது ஆக்கம் போல் காட்டுவதைத் தவிர்க்க வேண்டும். பயன்படுத்திக் கொள்ள எந்தத் தடையும் இல்லை. பயன்படுத்துகிறோம் என்ற பெயரில் நீங்கள் பாவியாகக் கூடாது அல்லவா?
இது குறித்து நூல்களின் துவக்கத்தில் நாம் குறிப்பிட்டுள்ளதைக் கவனிகவும்
மார்க்கத்தின் எச்சரிக்கை!
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர். இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பபட்டது என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக இவ்வாறு செய்கின்றனர்.
சில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு தம்முடைய ஆக்கம் போல் காட்டுகின்றன.மேலும் சில புத்தக வியாபாரிகளும் எனது நூல் உட்பட மற்றவர்களின் நூல்களைச் சிறிது மாற்றியமைத்து அனாமதேயங்களின் பெயர்களில் வெளியிட்டுச் சம்பாதிக்கின்றனர்.
உலகைப் பற்றியும் இவர்களுக்கு வெட்கம் இல்லை. மறுமையைப் பற்றியும் பயம் இல்லை. இஸ்லாத்தில் இவ்வாறு செய்ய அனுமதி இல்லை. இவர்கள் நல்லது செய்யப் போய் மறுமையின் தண்டனைக்கு தம்மைத் தாமே உட்படுத்திக் கொள்கின்றனர். பிறரது ஆக்கங்களைப் பயன்படுத்துவோர் இது இன்னாருடைய ஆக்கம் என்று குறிப்பிடாமல் தன்னுடைய ஆக்கம் போல் காட்டுவது மார்க்க அடிப்படையில் குற்றமாகும். இவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையை இங்கே சுட்டிக் காட்டுகிறோம். தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது. திருக்குர்ஆன் 3:180
04.03.2010. 21:12
