மாமியார் உடைத்தால் மண் குடம்
மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்தமுமுக வின் இணைய தளத்தில் நீங்கள் கேட்டவை என்ற தலைப்பில் ஒரு கேள்வியையும் அதற்கான பதிலையும் தமுமுக வெல்யிட்டுள்ளது. அந்தக் கேள்வி பதில் இவர்களைத் தோலுரித்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது.
அந்தக் கேள்வி பதில் இது தான்.
தன்னைக் கொல்ல சதி நடப்பதாக P.ஜெய்னுல் ஆபிதீன் அவரது இணைய தளத்தில் கூறி வருகிறார். இது குறித்து தமுமுகவின் நிலைபாடு என்ன?
முஜிப், நெல்லிக்குப்பம்
கருத்தியல் ரீதியாக எதையும் எதிர் கொள்ளும் அறிவும், துணிச்சலும் இன்றைய முஸ்லிம் தலைமைகளுக்கு இருக்கிறது. முஸ்லிம் தலைமைகள் யாரும் ஒருவருக்கொருவர் இப்படி செய்ய மாட்டார்கள். எல்லோருமே முதிர்ச்சி பெற்றிரிக்கிறார்கள் என்றே நாம் கருதுகிறோம்.
இப்படிப்பட்ட நிலையில் சிறையிலிருந்து வெளிவந்து மறுவாழ்வு பெறுபவர்களுக்கும், சிறையில் மறுவாழ்வுக்காகவும், விடுதலைக்காகவும் காத்திருப்பவர்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தும் நோக்கில் எதையாவது பேசுவதும், எழுதுவதும் தேவையற்ற குழப்பங்களைத் தான் ஏற்படுத்தும்.
துப்பாக்கி, அரிவாள் கலாச்சாரங்களை நாம் எதிர்ப்பவர்கள் என்பதும், அதை இப்போதும் யார் ஆதரிக்கிறார்கள் என்பதும் மக்கள் அறிவார்கள். நாம் மாற்றி கருத்தாளர்களையும் மதிப்பார்கள், பாதுகாப்பார்கள் என்பதற்கு ஒரு உதாரணத்தை கூறுகிறோம்.
2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பதவிக்கு வந்த இரண்டு வாரமிருக்கும். அப்போது அவரது செயல்பாடுகளையும், பேச்சுகளையும் பிடிக்காத ஒரு குழு அவரை கொல்ல சதி செய்வதாக நமக்கு தகவல் வந்தது. நமது தலைமை நிர்வாகக்குழு இதை கவலையோடு பகிர்ந்து கொண்டு, அதன் பேரில் தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலியும், இன்றைய மமக துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரியும், அன்றைய உளவுத்துறை அதிகாரிகளை சந்தித்து இந்த தகவலை கூறி, P.ஜெய்னுல் ஆபிதீனுக்கு பாதுகாப்பை பலப்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டனர். சகோ. ஹைதர் அலி அவர்களுக்கு அப்போது PJ-யுடன் இருந்த சகோ. பாக்கரிடம் போனில் பேச PJ-யை பாதுகாப்பாக வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
கடும் மோதல்களை இருந்த அக்கால கட்டத்தில் கூட நமது எண்ணமும், செயலும் கண்ணியமாகவும், மார்க்க அடிப்படையிலுமே இருந்தது. இப்போதும், எப்போதும் மாற்று கருத்துடையவர்கள் விஷயத்தில் நமது நிலைபாடு இதுதான்.
இப்போது P. ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் என்னைக் கொல்ல சதி என எழுதுவது, திருவிடச்சேரி படுகொலையிலிருந்து சமுதாயத்தை திசை திருப்புவதற்கும், குழப்பத்திலிருக்கும் தனது இயக்கத்தினரை தக்க வைப்பதற்குமென ஒரு அரசியல் தந்திரம் என்றே பலரும் குற்றம் சாட்டுகிறார்கள்.
எனவே மக்களை திசை திருப்புவதற்காகவும், சூழ்நிலைகளின் நெருக்கடிகளிலிருந்து தப்புவதற்காகவும் பொறுப்பற்ற வகையில் பேசுபவர்களும், எழுதுபவர்களும் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ள வேண்டும் என்பதுதான் நமது வேண்டுகோள்.
நமது கேள்வி
பீஜேயைக் கொல்ல சதி செய்பவர்கள் பற்றி பேசுவதால் அது சிறைவாசிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்த பதிலில் கூறப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட வாசகத்தில் இருந்து இதை அறிந்து கொள்ளலாம்.
இப்படிப்பட்ட நிலையில் சிறையிலிருந்து வெளிவந்து மறுவாழ்வு பெறுபவர்களுக்கும், சிறையில் மறுவாழ்வுக்காகவும், விடுதலைக்காகவும் காத்திருப்பவர்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தும் நோக்கில் எதையாவது பேசுவதும், எழுதுவதும் தேவையற்ற குழப்பங்களைத் தான் ஏற்படுத்தும்.
சிறையில் இருப்பவர்களுக்குச் சிக்கல் ஏற்படக்கூடாது என்பதால் இது போன்ற கொலை மிரட்டலை அலட்சியப்படுத்தி செத்து விட வேண்டும் என்று தமுமுக கூறுகிறது. இவர்கள் இப்படிக் கூறி விட்டு இவர்களே முரண்பட்டுக் கூறுவதைக் காணுங்கள்
2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பதவிக்கு வந்த இரண்டு வாரமிருக்கும். அப்போது அவரது செயல்பாடுகளையும், பேச்சுகளையும் பிடிக்காத ஒரு குழு அவரை கொல்ல சதி செய்வதாக நமக்கு தகவல் வந்தது. நமது தலைமை நிர்வாகக்குழு இதை கவலையோடு பகிர்ந்து கொண்டு, அதன் பேரில் தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலியும், இன்றைய மமக துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரியும், அன்றைய உளவுத்துறை அதிகாரிகளை சந்தித்து இந்த தகவலை கூறி, P.ஜெய்னுல் ஆபிதீனுக்கு பாதுகாப்பை பலப்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டனர். சகோ. ஹைதர் அலி அவர்களுக்கு அப்போது PJ-யுடன் இருந்த சகோ. பாக்கரிடம் போனில் பேச PJ-யை பாதுகாப்பாக வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அதாவது பீஜேயைக் கொல்ல ஏற்கனவே ஒரு முயற்சி நடந்துள்ளது இவர்களுக்குத் தெரிந்துள்ளது என்பது இதன் மூலம் உறுதியாகிறது. அப்படிப்பட்ட எண்ணம் யாருக்கும் இல்லை என்று எழுதியிருப்பது பொய் என்று இதன் மூலம் நிரூபணமாகிறது.
அடுத்ததாக பீஜேயைக் கொல்ல திட்டம் போடப்பட்ட செய்தியை இவர்கள் உளவுத்துறைக்குச் சொல்லி இருக்கிறார்கள் என்றும் இவர்கள் கூறியுள்ளனர்.
யார் இவ்வாறு திட்டம் போட்டுள்ளனர்?
இந்தத் தகவல் எப்படிக் கிடைத்தது
என்றெல்லாம் இவர்கள் உளவுத்துறைக்கு சிலரைப் பற்றி ஆள்காட்டி உள்ளனர் என்பது தெரிகிறது.
அப்படியானால் சிறைவாசிகளுக்கு நெருக்கடி ஏற்படும் என்று சொன்னார்களே அந்த வாதம் என்னவானது?
உளவுத்துறையில் போட்டுக் கொடுத்தால் சிறைவாசிகளுக்கு நெருக்கடி ஏற்படாதா? அவர்களின் விடுதலைக்கு பாதிப்பு ஏற்படாதா?
ஒரு வேளை இவர்கள் போய் உளவுத்துறையில் போட்டுக் கொடுத்ததால் தான் சிறைவாசிகளுக்கு இவ்வளவு காலம் ஜாமீன் கிடைக்காமல் இருந்ததா? என்ற சந்தேகம் நமக்கு வருகிறது.
இறை நம்பிக்கையாளர்கள் உண்மைக்கு சாட்சியாளர்களாக இருக்க வேண்டுமே தவிர சிலரது நன்மைக்காக சிலரைப் பலி கொடுக்கும் அநீதிக்கு சாட்சிகளாக இருக்கக் கூடாது. சிறைவாசிகளின் அல்லது விடுதலாயானவர்களின் உரிமைக்குக் குரல் கொடுக்கிறோம் என்ற போர்வையில் அக்கிரமத்துக்கு முட்டுக் கொடுக்கக் கூடாது என்று சொல்லி வைக்கிறோம்.
அவர்களுக்கு இது போன்ற தகவல் கிடைத்தால் அது உண்மை. எங்களுக்கு அது போன்ற தகவல் கிடைத்தால் அது பொய்யா?
இவர்கள் ஆளும் கட்சியின் கூட்டணியில் இருக்கும் போது உளவுத் துறைக்கு தகவல் கொடுத்தும் உளவுத்துறை அப்போது பீஜேக்கு எந்தப் பாதுகாப்பும் கொடுக்கவில்லை.
இது எதைக் காட்டுகிறது?
பீஜே கொல்லப்பட்டால் அந்தப் பழி தங்கள் மீது தான் விழும் என்ற நிலை அப்போது இருந்தது. அப்படி பழி விடக்கூடாது என்பதற்காக மேலோட்டமாக உளவுத்துறையில் சொல்லி தற்காப்பு செய்து கொள்வதற்காக பார்மாலிட்டிக்காக சொல்லி இருக்கிறார்கள் என்பது இதில் இருந்து உறுதியாகிறது.
பீஜேக்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்க நினைத்தால் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் ஆற்காடு வீராசாமியின் மூலம் அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய ஏற்பாடு அல்லவா செய்திருக்க வேண்டும். ஒரு வார்த்தை சொன்னால் உடனே நடந்து விடும் அளவுக்கு அரசுடன் நகமும் சதையுமாக இருந்தவர்கள் அதைச் செய்யாமல் உளவுத் துறையில் மட்டும் போட்டுக் கொடுத்தது ஏன்?
பொது மக்கள் சிந்திக்க வேண்டும்.
01.10.2010. 10:42
