கடலூர் முபாஹலாவின் நிலை என்ன‌

கடலூர் முபாஹலாவின் நிலை என்ன‌
 Assalamu Alaikkum<br /> kadaluril kalimullah kuda nadantha mubahalla en edharkkaga nadanthadhu<br /> adhai web site il thayu seithu udane update pannaum innum srilanka moulavikalukku adikkadi pathil kodukkaum en yendral thangalayum nammudaiya jamath (TNTJ) pathiyum adhiga fithnavai parappi varukirargal adhai kettu munnal sakkal ippothaya intj anuthabigal inkeyum (dubai) ellaridamum solliyum kindalum adithu varukirargal idhai nan pala murai ungal kavanathukku kondu vanthu irukkiren thamathikkamal thayu seithu pathil thevai. ur's always Jahir.

கடலூர் மாவட்ட முன்னாள் நிர்வாகிகள் சிலருடன் நடந்த முபாஹலாவைச் சிலர் சரியாகப் புரிந்து கொள்ளாததால் பாக்கர் இப்போது நீக்கப்பட்ட பின் கடலூர் மாவட்ட முன்னாள் நிர்வாகிகள் கூறியது உண்மையாகி விட்டது என்று பரப்புகின்றனர். பாக்கர் எந்தத் தவறும் செய்யவில்லை எனக் கூறி நான் முபாஹலா செய்யவில்லை. அவர் தவறு செய்தார் என்பதால் தான் சில மாதங்கள அவர் நீக்கப்பட்டிருந்தார். அளித்த தண்டனை போதும் என்ற அடிப்படையில் தான் அவர் மீது எடுத்த நடவடிக்கை கைவிடப்பட்டது. இதில் எனக்கும் கடலூர் மாவட்ட முன்னாள் நிர்வாகிகளுக்கும் கருத்து வேறுபாடு இருக்கவில்லை. பாக்கர் விபச்சாரம் செய்தார் என்று நான் லால்பேட்டையில் கூறியதாக கடலூர் மாவட்ட முன்னாள் நிர்வாகிகள் கூறினார்கள். அதைத் தான் நான் மறுத்தேன். விபச்சாரம் செய்தார் என்று ஒருவர் மீது குற்றம் சாட்ட நான்கு சாட்சிகள் வேண்டும். அப்படி இருக்கும் போது நான் எப்படி கூறி இருப்பேன்? விபச்சாரத்துக்கு நெருக்கமான குற்றத்தைச் செய்தார் என்று தான் நான் கூறினேன். இதில் யார் உண்மையாளர்கள் என்பதற்குத் தான் முபாஹலாவுக்கு அழைத்தனர். நான் ஏற்றுக் கொண்டேன். அதில் இப்போதும் நான் கூறியதே சரி என்பதில் உறுதியாக இருக்கிறேன். முபாஹலாவில் பங்கேற்ற கடலூர் சகோதரர் மின்சாரம் தாக்கி மரணித்து விட்டார். லால்பேட்டை சகோதரர் இப்போது நமது ஜமாஅத்துடன் சேர்ந்து கொண்டார். அது போல் பெண்ணாடம் சகோதரரும் நமது ஜமாஅத்தில் சேர்ந்து நிர்வாகியாகவும் உள்ளார். அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு விட்டதால் எனக்கு அவர்கள் மீது எந்தக் கோபமும் இல்லை.

28.09.2009. 01:18




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
92 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி