பெரியார் அப்துல்லாஹ்வுக்கு மடல்

பெரியார் அப்துல்லாஹ்வுக்கு மடல்

பெரியார் அப்துல்லாஹ்வை விமர்சிக்கலாமா? தனியாக சுட்டிக் காட்டலாமே என்றும் சிலர் இப்போது வாதிடுகின்றனர். ஆனால் பகிரங்கமாக ஒரு பேட்டி அளிக்கிறார். அதில் என்னைப் பொய்யனாக்கும் வகையில் கருத்துக் கூறுகிறார். என்னிடம் பேட்டி அளித்து விட்டு அதை எழுத்து மூலமாகவும் ஒப்புக் கொண்டு விட்டு மறுக்கிறார். இதன் பின்னரும் நான் மவுனமாக இருந்தால் நான் அவர் அளிக்காத பேட்டியை கற்பனையாக வெளியிட்டதாக ஆகிவிடும் என்றால் நான் அதை ஒப்புக் கொள்ள முடியாது. அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதால் யார் மீது வேண்டுமானாலும் பொய்யை கூற அல்லாஹ் அனுமதிக்க மாட்டான். அவர் பகிரங்கமாக என்னைப் பொய்யன் என்று கூறி இருக்கும் போது நான் பொய்யன் இல்லை என்பதையும் அவர் தான் பொய்யர் என்பதையும் நானும் பகிரங்கமாகத் தான் கூற வேண்டும். இதைப் புரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பெரியா அப்துல்லாஹ் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்கு மறுமையில் இறைவனின் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்பது தான் காரணம் என்று கூறி வருகிறீர்கள். அல்லாஹ் உங்கள் நல்லெண்ணத்தை நிறைவேற்ற துஆ செய்கிறோம்.

இஸ்லாத்தில் இணைந்த யாரும் இணைந்த உடன் இஸ்லாத்தின் அனைத்து கொள்கைகளையும் கோட்பாடுகளையும் அறிந்திருப்பதில்லை. படிப்படியாகத் தான் அறிந்து கொள்வார்கள். பாரம்பர்ய முஸ்லிம்களே இஸ்லாத்தைத் தவறாக விளங்கி வைத்திருக்கும் போது இஸ்லாத்தை ஏற்றவர்கள் சில அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாமல் இருப்பது ஆச்சரியமானது அல்ல. அந்த அடிப்படையில் நீங்கள் இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமாக சில விஷயங்களைப் பொது மேடையில் பேசி வருகிறீர்கள். அது பற்றி அடுத்த மடலில் தெளிவு படுத்துவோம்.

ஆனால் தெரிந்து கொண்டே நீங்கள் பொது மேடைகளிலும் பேட்டிகளிலும் பொய்யான தகவல்களைக் கூறி வருவது தான் கவலை அளிக்கிறது. இதனால் இவ்வுலகிலும் உங்கள் இமேஜ் சரிந்து விடும். மறுமையிலும் மாட்டிக் கொள்வீர்கள் என்பதைச் சுட்டிக் காட்டவே இந்த மடல்.

பொய் ஒன்று

9-4-2010 அன்று இரவு 7.00 மணிக்கு விஜய் டிவியில் வாங்க பேசலாம் என்ற உங்கள் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

இந்த நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொள்ளலாமா என்பது குறித்து தனியாக விளக்குவோம்.

இப்போது பொய்யை மட்டும் கவனிப்போம். அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகர் ஸ்ரீகாந்திடம் 10 வருடமாக நீங்கள் நடிக்கும் படங்களைப் பார்த்து வருகிறேன் என்று கூறினீர்கள்.
டவுன் லோட் விஜய் டிவி கிளீப்
பிளே 
விஜய் டிவி கிளிப்

ஆனால் அண்ணாசாலை, அமிஞ்சிக்கரை பள்ளிவாசல்களில் பேசும் போது நான் சினிமாக்களில் நடித்துள்ளேன். ஆனால் 25 வருடமாக சினிமா படமோ டீவி சீரியலோ பார்த்ததில்லை. இவை மனச்சிதைவை ஏற்படுத்திவிடும். நான் மனோதத்துவம் படித்திருப்பதால் இதை நன்றாக அறிந்துள்ளேன் என்று பேசினீர்கள்.

பத்து வருடமாக ஸ்ரீகாந்த் நடித்த சினிமாவைப் பார்த்துள்ளேன் என்று கூறியது உண்மையா? 25 வருடமாக சினிமா பார்த்ததே இல்லை என்று நீங்கள் கூறியது உண்மையா?

மேடைக்குத் தக்கவாறு பொய் கூறுவதில் உங்களுக்கு கிடைக்கும் ஆதாயம் என்ன?

பொய் இரண்டு

இஸ்லாத்தை ஏற்றவுடன் நீண்ட காலமாக என்னிடம் இருந்த புகைப் பழக்கத்தை விட்டுவிட்டேன் என்று பேட்டிகள் அளித்தீர்கள். அதுவும் காபாவுக்கு அருகில் வைத்து இந்த முடிவை எடுத்ததாகப் பேட்டி கொடுத்தீர்கள்.

ஆனால் குவைத்தில் நீங்கள் தங்கி இருந்த ஹோட்டலில் பால்கணியில் நின்று கொண்டு சிகரெட் ஊதியதைப் பல நண்பர்கள் பார்த்து விட்டு உங்களைச் சந்திக்காமலே திரும்பிச் சென்றது உங்களுக்கே தெரியும்.

புகைப் பழக்கத்தை நீங்கள் விடவில்லை என்றால் அது பற்றி பேசாமல் இருந்திருக்கலாம். எதற்காக இப்படி பொய் சொல்ல வேண்டும்?

பொய் மூன்று

மக்கா மஸ்ஜிதில் நீங்கள் பேசும் போது உங்கள் வீட்டு வாசலில் ஹவுல் (உளூ செய்யும் தடாகம்) கட்டியுள்ளதாக நீங்கள் கூறியதை ஷம்சுத்தீன் காசிமி எடுத்துக் காட்டினார். பார்ப்பவர்கள் இது பற்றி கேட்க வேண்டும். அதை வைத்து இஸ்லாத்தைக் கூற வேண்டும் என்று காரணமும் கூறினீர்கள். ஆனால் நாங்கள் உங்களைச் சந்திக்க உங்கள் வீட்டுக்கு வந்த போது வீட்டு வாசலில் எந்தத் தடாகமும் இல்லை. தடாகத்தின் தடயமும் இல்லை.

நாங்கள் கண்ட இன்னும் பல உள்ளன. அவை இப்போது தேவை இல்லை.

பெருமைக்காக இப்படி பொய் சொன்னால் அது ஒரு நேரத்தில் வெளிச்சத்துக்கு வந்து விடும் என்பது கூடவா உங்களுக்குத் தெரியவில்லை.

பொய் நான்கு

எனது தமிழாக்கம் குறித்து நீங்கள் பாக்கர் வகையறாவுக்கு பேட்டி அளிக்கும் போது கீழ்க்கணடவாறு கூறியதாக வெளியிட்டுள்ளனர்.

? நான் பலருடைய குர்ஆன் தமிழாக்கங்களை வாசித்துள்ளேன். எல்லாத் தமிழாக்கத்திலும் உங்கள் தமிழாக்கம்தான் முஸ்லிமல்லாதவரை இஸ்லாத்தின் பக்கம் ஈர்ப்பதாக உள்ளது என நீங்கள் கூறியதாக மவ்லவி ஒருவர் கூறியுள்ளது பற்றி...

அப்துல்லாஹ்: என்னைச் சந்தித்த அந்த அறிஞர், எனது தமிழாக்கத்தைப் படித்தீர்களா, எப்படியுள்ளது? என கேட்டார். அப்ப என்னை என்ன சொல்லச் சொல்றீங்க? நான் சொன்னது இதுதான்... அதாவது மற்ற தமிழாக்கங்களிலிருந்து மாறுபட்டு எளிய தமிழ் தர முயற்சித்துள்ளீர்கள். அதில் வெற்றியும் பெற்றுள்ளீர்கள் என்று தான் கூறினேன். மற்றபடி மற்ற தமிழாக்கங்களை விட உங்கள் தமிழாக்கம் தான் மேலானது, சிறந்தது என்று நான் சொல்லவில்லை. எல்லாத்தையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தினா நான் என்னங்க பண்ண முடியும்!

நானோ என்னுடன் வந்தவர்களோ எனது தமிழாக்கம் பற்றி எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. நீங்களாகத் தான் வலிய வந்து அது பற்றி பேசினீர்கள்

என்னிடம் கீழ்க்கண்டவாறு நீங்கள் குறிப்பிட்டீர்கள்

பீஜேயாகிய உங்களின் தமிழாக்கத்தையும் நூல்களையும் நான் படித்துள்ளேன். உரைகளையும் கேட்டுள்ளேன். இன்னும் பலருடைய தமிழாக்கத்தையும் நான் வாசித்துள்ளேன். எல்லாத் தமிழாக்கத்திலும் உங்கள் தமிழாக்கம் தான் முஸ்லிமல்லாதாரை இஸ்லாத்தின் பக்கம் ஈர்ப்பதாக உள்ளது என்று நான் எல்லா இடங்களிலும் சொல்லி வருகிறேன்.

மஸ்ஜித்களில் நடந்த கூட்டங்களில் மனிதர்கள் இரண்டு வகையில் உள்ளனர். இஸ்லாத்துக்கு வந்தவர்கள்; வர இருப்பவர்கள் ஆகிய இரண்டு பிரிவுகள் உள்ளனர். இஸ்லாத்துக்கு வர இருப்பவர்களுக்கு குர்ஆனைக் கொடுக்க விரும்பினால் பீஜே மொழி பெயர்த்து மூன் பப்ளிகேசன் வெளியிட்ட தமிழாக்கத்தைக் கொடுங்கள். அது தான் குர்ஆனை விளங்கும் வகையில் எளிதாக உள்ளது என்று நான் கூறினேன்.

உங்களுடைய தமிழாக்கத்தில் உள்ள 26 ஆம் பக்கம் ஒன்றே போதும். (எட்டாவது பதிப்பில் 29 ஆம் பக்கம்) இதில் எடுத்துக் காட்டும் சான்றுகளை ஒருவன் படித்தால் அவனை இஸ்லாம் ஈர்க்கும் வகையில் உள்ளது.

எத்தனையோ தமிழாக்கங்களில் சிந்திப்பது இதயம் என்று மொழி பெயர்த்த இடங்களில் நீங்கள் உள்ளம் என்று மொழி பெயர்த்து உள்ளீர்கள். இதயத்துக்கும், சிந்தனைக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. இது சிறப்பாக உள்ளது.

அது போல் அலக் என்பதற்கு அட்டைப் பூச்சி என்றும் தொங்கிக் கொண்டிருப்பவை என்றும் பலவாறாக விளங்காமல் மற்றவர்கள் மொழி பெயர்ர்த்திருக்கும் போது கருவுற்ற சினை என்று அனைவருக்கும் விளங்கும் வகையில் மொழி பெயர்த்துள்ளீர்கள். இதை எல்லாம் நான் பல இடங்களில் சொல்லி இருக்கிறேன்.

இப்படி நீங்கள் என்னிடம் கூறினீர்கள். நீங்கள் கூறியதை கம்போஸ் செய்து உங்கள் பார்வைக்கு அனுப்பி வைத்தேன். நீங்கள் வரிக்கு வரி படித்து சில திருத்தமும் செய்து கைஎழுத்தும் போட்டுக் கொடுத்தீர்கள்

இப்படி என்னிடம் கூறிய நீங்கள் பாக்கரிடம் வேறு விதமாகக் கூறியதாக் வெளியிட்டுள்ளனர்.

என் தமிழாக்கம் பற்றி நான் கேட்டதற்காக நீங்கள் ஒபுக்குச் சொல்லி இருந்தால் எனது தமிழாக்கத்தில் இருந்து சில எடுத்துக் காட்டுகளை எடுத்துக் காட்டி விலாவாரியாகச் சொல்லி இருக்க முடியுமா?

பல பள்ளிவாசல்களில் இப்படி கூறி வருகிறேன் என்று கூற முடியுமா? ஏதோ எனக்காக கொஞ்சம் மிகைப்படுத்தி கூறி இருப்பீர்கள் என்று எண்ணித்தான் கம்ப்போஸ் செய்து தவ்ஹீத் ஜ்மாஅத் ஊழியர் மூலம் அனுப்பப்பட்டது.

நீங்கள் மேற்கண்டவாறு கூறியது ஒப்புக்காக என்றால் இதைச் சுருக்கி மேலோட்டமாக மாற்றி அமைத்திருக்கலாமே? வாசித்துப் பார்த்து எப்படி கைஎழுத்து போட்டீர்கள்?

எனது தமிழாகம் குறித்து பேட்டி எடுக்க நாங்கள் வரவில்லை. நீங்களாக வலிய இதைப் பற்றி பேசி விட்டு மறுப்பது ஏன்?

இந்தப் பொய்யினால் உங்களுக்குக் கிடைக்கும் நன்மை என்ன?

பொய் ஐந்து

மக்கா பள்ளியில் பேசும் போது பீஜேயின் தமிழாக்கம் பற்றி நான் கூறினேன். அதை மட்டும் எடிட் செய்து விட்டு வெளியிட்டுள்ளனர் என்று எங்களிடம் கூறினீர்கள். நாங்கள் இதை நம்பி உங்கள் பேட்டியில் சேர்த்து உங்களுக்கு அனுப்பி இருந்தோம். அதை மட்டும் தான் அந்தப் பேட்டியில் வெளியிட வேண்டாம் என்று கூறினீர்கள். குறிப்பிட்ட் நிர்வாகத்தைக் குறை கூறும் பேட்டிகள் என் பெயரில் வர வேண்டாம் என்பதற்காக அதை மட்டும் நீக்கி விடுங்கள் என்று கூறி உங்கள் கையால் அதை மட்டும் அழித்தீர்கள்.

ஒரு சகோதரர் மக்கா மஸ்ஜிதில் நீங்கள் எனது தமிழாக்கம் பற்றி பேசவில்லை என்று தெரிவித்தார்..

அப்படி இருந்தும் எஙளுக்கு ஏற்றவாறு ஏன் மக்கா மஸ்ஜித் இமாம் பற்றி பொய்யான ஒரு தகவலைக் கூறினீர்கள். என்னிடம் மட்டும் இல்லாமல் வெளிநாட்டில் உள்ள தவ்ஹீத் சகோதரர்கள் சிலரிடமும் மக்கா மஸ்ஜித் உரையில் பீஜேயின் தமிழாக்கம் பறி குறிப்பிட்டதாகக் கூறியுள்ளீர்கள். இந்தப் பொய்யினால் உங்களுக்குக் கிடைத்த நன்மை என்ன?

இடத்துக்குத் தக்கவாறு பெசும் வழக்கத்தை விட்டு ஒழியுங்கள். பொய் நீணடநாள் நிலைக்காது.

பொய் ஆறு

பீஜேக்கு எதிராக பாக்கர் கூட்டம் உங்களிடம் கேமராவைத் தூக்கிக் கொண்டு பேட்டி கேட்டதாக எங்களிடம் கூறினீர்கள். நான் யாரைப் பற்றியும் அப்படிப் பேச மாட்டேன் என்று கூறியதாகக் கூறினீர்கள். ஆனால் அதே பாக்கரிடமும் மற்றவர்களிடமும் நீங்கள் எனக்கு எதிராக பேட்டி கொடுத்துத் தான் இருக்கிறீர்கள்.
ஏதாவது ஒரு நிலையில் இருங்கள்.

உங்கள் உரைகளிலும் நிகழ்ச்சிகளிலும் இஸ்லாத்தின் கொள்கைக்கு தவறான வடிவம் தரும் வகையில் பேசியுள்ளவை பற்றி அடுத்த மடலில் தெரிவிக்கிறேன்.

அன்புடன்

பீ.ஜைனுல் ஆபிதீன்

மீலாது விழா குறித்து அவர் கூறியதிலும் உண்மை இல்லை என்பது அடுத்த மடலில் விளக்கப்படும்.
சிந்திக்கும் திறனுடைய நடுநிலையாளர்களே! பெரியார் அப்துல்லாஹ் அவர்கள் கையெழுத்திட்டு அளித்த பேட்டியை ஆதாரமாக வெளியிட்டுள்ளோம்.
இதில் கவனிக்க வேண்டிய சில விஷயங்களைச் சுட்டிக் காட்டுகிறோம்.
1- இந்தக் கையெழுத்து எங்கள் முன்னிலையில் போடப்பட்டதல்ல. அப்படி போட்டிருந்தால் முகத் தாட்சண்யத்துக்காக போட்டிருக்கலாம் என்று கருத முடியும். அவரைச் சந்தித்த மறுநாள் தவ்ஹீத் ஜ்மாஅத் ஊழியர் மூலம் தான் கொடுத்து அனுப்பப்பட்டது. கையெழுத்தெல்லாம் போட முடியாது என்றோ வெளியிட அனுமதி இல்லை என்றோ அவர் மறுத்திருக்கலாம். ஆனால் அவர் வரிக்கு வரி வாசித்துப் பார்த்து சின்ன சின்ன வார்த்தைகளைக் கூட அவர் கைப்பட திருத்தியுள்ளார். அப்போது உளப்பூர்வமாகத் தான் இதைச் செய்தார். ஆனால் பாக்கர் வகையறா அவரை மிகுந்த முக்கியத்துவப்படுத்தியதால் அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப தன் நிலையை மாற்றிக் கொண்டார். ஆனாலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அல்லாஹ் நமது ஜமாஅத் மீது அருள் புரிந்தது போல் இப்போதும் அருள் புரிந்ததன் வெளிப்பாடு தான் இந்த ஒப்புதல் கையெழுத்து.

2- ஷம்சுத்தீன் காசிமி பற்றி அவர் எங்களிடம் சொல்லாமல் இருந்தால் அதை கம்போஸ் செய்து அவருக்கே நாங்கள் அனுப்புவோமா? நான் சொல்லாத ஒன்றை எப்படி நீங்கள் எழுதலாம் என்று அவர் கேடபாரே! நம்மைப் பற்றி தவறாக நினைப்பாரே என்ற அறிவு கூட இல்லாமல் அவரது ஒப்புதல் பெற அனுப்புவோமா? அவர் அவ்வாறு கூறினார் என்பதற்கு ஆதாரம் அவருக்கே அதை நாம் எழுதி அனுப்பியது தான். மக்கா மஸ்ஜித் நிர்வாகம் தப்பாக நினைப்பார்கள் என்பதற்காக அதை வெளியிட வேண்டாம் என்று தான் அவர் அதை அடித்தார். தொலைபேசியிலும் தெரிவித்தார்.

3-இதில் உள்ள அடித்தல் திருத்தல்கள் அனைத்தும் பெரியார் அப்துல்லா அவர்கள் தமது கைப்பட செய்தவையாகும். இதில் சந்தேகம் இருப்பவர்கள் இறுதியில் அவர் எழுதி அவர் போட்ட அகையெழுத்துடன் ஒப்பிட்டுக் கொள்ளலாம். 

4- பெரியார் அப்துல்லாஹ் அவர்கள் எங்களிடம் உண்மையைச் சொன்னது போல் தொடர்ந்து சொல்லிவந்தால் அனைவரும் அவரை எதிர்ப்பார்கள். உண்மையை தாட்சண்யமின்றி சொல்வதை ஊக்குவிக்கும் தவ்ஹீ ஜமாஅத் தான் அப்போது அவரை அரவணைக்கும் என்ற கருத்தையும் நாம் எழுதி அவரிடம் அனுப்பினோம். அதையும் வாசித்து அவர் கையெழுத்துப் போட்டார். ஆனால் இவ்வாரு நாம் கூறியதன் மூலம் ஜோசியம் சொல்லியுள்ளதாக பாக்கர் கூட்டத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அவர் ஒப்புக் கொண்டதையே கிண்டல் செய்கிறார் என்றால் இவர் இடத்துக்குத் தகுந்தபடி பேசுகிறார் என்பது உறுதியாகிறது.

5- ஒரு இயக்கத்தின் மீது குற்றம் சாட்டுவது என்றால் ஆதாரத்துடன் சுமத்தட்டும். ஆதாரமில்லாமல் இவ்வாறு குற்றம் சுமத்துவதை அவர் இஸ்லாத்துக்கு வந்தவர் என்பதற்காக ஆதரிப்பது மார்க்கத்துக்கு உகந்ததல்ல






16.06.2010. 00:32




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
92 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி