விவாதக் களம் சேர்க்கை
விவாதக் களம் சேர்க்கை
முந்தைய கடிதங்களைக் காண இங்கே கிளிக் செய்க
செங்கொடியின் பதில்
இதற்கு செங்கொடி அவர்கள் அளித்த பதிலை இனிமை நமக்கு அனுப்பியுள்ளார்.
சென்ற 9 ந் தேதியே இந்த செங்கொடியின் பதிலை பதிவு செய்தேன். சரியாக பதிய வில்லையோ என்ற சந்தேகத்தில் மீண்டும் பதிவு செய்கிறேன். முன்னர் தந்தது சரியாக இருந்தால் இதை பொருட்படுத்த வேண்டாம்.
அவர் தளத்தில் 8 ந் தேதியே தந்த பதில் இது,செங்கொடி தளத்திற்கும் பிஜே அவர்களின் தளத்திற்கு பாலமாக செயல்பட்ட நண்பர் இனிமை அவர்களுக்கு நன்றி.
நேரடி விவாதத்தின் குறைகளாக நான் குறிப்பிட்டிருந்தவைகளை நேர்படுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யலாம் என அறிவித்ததற்கும், பரிசீலனைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததற்கும் பிஜே அவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் நன்றி.
நான் இந்தியாவில் இல்லை என்பதாலும், தேதி குறித்து ஊர்வரும் அளவிற்கு நான் மேல்நிலை ஊழியனாக இல்லாததாலும், விடுப்பிற்கான காலம் இன்னும் ஒரு வருடத்திற்கு மேல் இருப்பதாலும் இப்போது நாள் குறிக்க முடியாத நிலையில் இருக்கிறேன். என்றாலும் இன்னும் ஆறு மாதத்திற்குள் ஊர் வர முயற்சிக்கிறேன். அது சமயம் நண்பர் இனிமைக்கோ அல்லது நேரடியாக பிஜே அவர்கள் தளத்திற்கோ தகவல் தெரிவிக்கிறேன்.
இப்படி ஒரு ஏற்பாட்டிற்கு முனைந்த தூண்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
தோழமையுடன்
செங்கொடி
பிகு: நண்பர் இனிமைக்கு, இதையும் செங்கொடி சார்பில் பிஜே தளத்தில் வைப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.//
காத்திருப்போம், இன்ஷா அல்லாஹ்.
நமது பதில்
வெளிநாட்டில் இருப்பதால் விவாத ஒப்பந்தத்தில் கலந்து கொள்ள முடியாது என்ற காரணம் ஏற்கத்தக்கது தான். அவர் ஊர் வரும் போது தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றட்டும், அது வரை நாம் காத்திருப்போம். - பீஜே
12.01.2010. 16:53
