புனைப் பெயரில் எழுதுவது தவறா
புனைப் பெயரில் எழுதுவது தவறா
புனைப் பெயரில் எழுதுவது தவறா என்று பிரச்சனையைச் சிலர் திசை திருப்பி வருகின்றனர். புணைப் பெயர் சூட்டிக் கொள்வது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதல்ல. இது யாருக்கும் தெரியாத விஷயமும் அல்ல. தனது பிள்ளைகளுடன் அபூ உம்மு என்பதைச் சேர்த்து அழைத்துக் கொள்வதும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டது அல்ல. இதுவும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.
பத்திரிகைகளில் புனைப் பெயர்களில் அறிமுகமாவதும் இப்போது பிரச்சனை இல்லை.
என் பெயர்
பிரச்சனை என்னவென்றால் ஒருவர் மற்றவர்களை விமர்சனம் செய்வதற்காக களம் இறங்குகிறார். தனி நபர்களையும் சில இயக்கங்களையும் விமர்சனம் செய்து கொண்டே இருக்கிறார். தான் யார் என்பதை அவர் மறைத்துக் கொள்வதால் இதில் சம்மந்தப்படாத பலர் மீது சந்தேகம் எழுகிறது. இந்தச் சந்தேகத்தைப் போக்கிட யார் என்று உன்னை அடையாளம் காட்டு என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. இப்போதும் தன்னை மறைத்துக் கொண்டு கோழையாய் பேடியாய் பயந்தாங்கொள்ளியாய் ஒருவன் ஒளியலாமா என்பது தான் பிரச்சனையே தவிர புனைப் பெயர் வைப்பது பிரச்சனை அல்ல.
மற்றவரை ஒருவர் விமர்சிக்கும் போது அதற்கான தகுதி அவருக்கு இருக்கிறதா? அவர் எதை விமர்சிக்கிறாரோ அதை அவர் செய்யாமல் இருக்கிறாரா என்று அறியும் அவசியம் மற்றவர்களுக்கு குறிப்பாக யாரைப் பற்றி விமர்சிக்கிறாரோ அவருக்கு ஏற்படுகிறது. மற்றவர்கள் எப்படி விமர்சனத்துக்கு உரியவர்களோ அது போல் விமர்சனம் செய்பவரும் விமர்சனத்துக்கு உரியவர் தான். நான் தான் விமர்சிக்கிறேன்; நான் உங்களை விமர்சிப்பது போல் என்னையும் நீங்கள் விமர்சிக்கலாம் என்று நெஞ்சுயர்த்தி அவர் தன்னை அடையாளம் காட்ட வேண்டும்.
ஒருவர் இன்னொருவர் பற்றியோ இன்னொரு இயக்கம் பற்றியோ விமர்சிக்கிறார். அவர் விமர்சிப்பது பொய்யானதாக இருந்தால் அவர் இஸ்லாமிய அடிப்படையில் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தமது இறுதிப் பேருரையில் செல்வங்கள் பற்றியும் உயிர் பற்றியும் குறிப்பிட்டதோடு தனி மனிதனின் மானம் மரியாதைகளும் புனிதமானவை என்று கூறினார்கள். எனவே ஒரு மனிதன் பற்றி அவனிடம் இல்லாத ஒன்றை இன்னொருவன் விமர்சனம் செய்தால் அது முற்றிலும் உண்மையாக இருக்க வேண்டும். உண்மையாக இல்லா விட்டால் அவன் அவதூறு கூறியவனாவான். அவதூறு கூறியதாக ஒருவன் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் போது அந்தக் குற்றசாட்டைச் சொன்னவன்யார் என்பது தெரிந்தாக வேண்டும். அப்போது தான் அவனை விசாரிக்க முடியும்.
இப்போது இவர் யார் என்று தன்னை அடையாளப்படுத்தியே ஆக வேண்டும் என்பது மார்ர்க்கக் கடமை இது தான் நாம் சொன்னது. புனைப் பெயர் வைக்கக் கூடாது என்று கூறவில்லை. நானே புனைப் பெயரில் ஒன்றை எழுதுகிறேன். தவறில்லை.நான் எழுதியதில் உண்மை இல்லை என்று என் எழுத்தால் பாதிக்கப்பட்டவர் முறையிட்டால் அப்போது அந்தப் புணைப் பெயருக்கு உரியவன் நான் தான் என்று என்னை உடனே அடையாளம் காட்ட வேண்டும். அபூ சுமையா என்ற போலிப் பேர்வழி இப்படி நடக்க வேண்டும் என்பது தான் மார்க்கத்தின் நிலை.
ஒவ்வொருவரும் எப்போது பார்த்தாலும் நான் இன்னாரின் மகன் என்று தன் பெயருடன் தந்தையின் பெயரைச் சேர்த்துச் சொல்வதில்லை. அரபுகள் தவிர மற்றவர்கள் இப்படிச் சொல்லும் வழக்கம் இல்லை. தந்தையின் முதல் எழுத்தை மட்டும் போடுவார்கள்.
ஆனால் உன் தந்தை யார் என்று கேட்கும் போது இன்னார் தான் என் தந்தை என்று ஒவ்வொருவரும் கூறி விடுவார்கள்.
ஆனால் ஒருவன் தந்தை பெயரைச் சொல்லாமல் தன் பெயரை மட்டும் சொல்கிறான். உன் தந்தை யார் என்று கேட்கும் போதும் சொல்ல மறுக்கிறான். நீ ஒரு தந்தைக்குப் பிறந்தவன் இல்லை என்று ரோஷம் வருமளவுக்கு கேட்கும் போதும் தந்தை யார் என்று அவன் சொல்ல மறுக்கிறான். அல்லது சொல்ல முடியவில்லை என்றால் இவனது நிலை என்ன?
இவனது நிலைக்கும் அபூ ஸுமையா என்ற பெயரில் ஒளிந்து கொண்டு தன்னை மறைப்பவனுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.
ஓடி ஒளிய மாட்டேன் என்று ஜம்பம் வேறு அடிக்கிறான். தன் அடையாளத்தை மறைத்துக் கொள்வதே ஓடி ஒளிவது தான்.
நான் தரக்குறைவாக அவனை விமர்சித்ததாகவும் புலம்புகிறான்.
நான் எந்த மனிதனையும் இப்படி கூறவில்லை. இல்லாத கற்பனைப் பாத்திரத்தைத் தான் இப்படிக் குறிப்பிட்டேன்.
நான் யாரையாவது பொம்பளை பொறுக்கி என்று விமர்சித்தேன் என்று கூறுபவர் நான் யாரை விமர்சித்தேன் என்று சொல்லட்டும். அவனது பெயர் என்ன? அவனது விபரம் என்ன/? என்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டால் தான் இதைக் கேட்க முடியும்.
இப்போதும் சொல்கிறேன்! நீ யார் என்று தெரிய வேண்டும். ஒரு தந்தைக்குப் பிறந்தவன் உன் தந்தை யார் என்று கூறும் போது தந்தையைக் கூறுவது எவ்வளவு அவசியமோ அது போல் இதுவும் அவசியம்.
அதைச் சொல்ல நீ மறுத்தால் நீ எதை விமர்சிக்கிறாயோ அந்தத் தவறு உன்னிடமும் இருக்கிறது. அதனால் தான் முகமூடி அணிகிறாய். அல்லது அதை விட அதிகமான தீமைகள் உன்னிடம் இருக்க வேண்டும். அது வெளிப்பட்டு விடும் என்பதற்காக நீ உன்னை மறைக்கிறாய் என்பது தான் பொருள்.
கீழைப் பொய்யராக இருக்குமோ? மவ்லவியாக இருக்குமோ? ஜவாஹிருல்லாவாக இருக்குமோ? ரஹ்மதுல்லாவாக இருக்குமோ, முஜீபாக இருக்குமோ ஆர் எஸ் எஸ் காரனாக இருப்பானோ, சுன்னத் ஜமாஅது காரனாக இருப்பானோ, அல்லது ஜாக் இயக்கதுக்காரனாக இருப்பானோ வேறு எந்தக் கழிசடையாக இருப்பான் என்றெல்லாம் சந்தேகம் ஏற்படுத்துவதற்கு உனக்கு வெட்கம் வர வேண்டாம்?
இவ்வளவு கடுமயாகக் கேட்ட பிறகாவது ரோஷம் வந்து அடையாளம் காட்டுவாய் என்று தான் எழுதினேன். இப்போதும் ரோஷம் வரவில்லை. அப்படியானால் நான் நினைத்ததை விட கேவலமானவனாக நீ இருப்பாய் என்பது இன்னும் உறுதியாகின்றது.
உணர்வில் புனை பெயரில் எழுதவதில்லையா? என்று இவன் கேட்கிறான்.
உணர்வில் எழுதும் யாரைப் பற்றியாவது முழு விபரம் வேண்டும் என்று கேள்! நாம் அதை தருவோம். தேவைப்படும் போது சொல்லத் தயாராக இருந்து கொண்டு புணைபெயரில் எழுதுவதும், நீ செய்வதும் ஒன்றா?
ஒருவன் யார் என்று கேள்வி பிறக்கும் போது யார் என்று சொல்லாமல் மறைப்பவன் யாராக இருந்தாலும் எனது கருத்து இது தான்.
இவன் எதையாவது எழுதி விட்டு எத்தனை பேர் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறான்.
பாக்கராக இருக்குமோ, ஜவாஹிருல்லாவாக இருக்குமோ, கமாலுத்தீன் மதனியாக இருக்குமோ, ஜமீலாக இருக்குமோ, ரஹ்மதுல்லாவாக இருக்குமோ அபூ ஃபைசலாக இக்பாலாக இருக்குமோ என்றெல்லாம் இவன் குழப்பத்தை ஏற்படுத்துகிறான்.
அல்லது சங்பரிவாரமாக இருப்பானோ கிறித்தவ சதியாக இருக்குமோ என்றும் இவன் சந்தேகத்தை ஏற்படுத்துகிறான்.
அவர்கள் மக்களிடம் மறைத்து விடலாம். அல்லாஹ்விடம் மறைக்க முடியாது. இறைவனுக்குப் பிடிக்காத பேச்சுக்களை இரவில் பேசி அவர்கள் சதி செய்த போது அவன் அவர்களுடன் இருந்தான். அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவனாக இருக்கிறான்.
திருக்குர் ஆன் 4:108
தவறையோ, பாவத்தையோ செய்து சம்பந்தமில்லாதவன் மீது அதைச் சுமத்துபவன் அவதூறையும் பகிரங்கமான பாவத்தையும் சுமந்து விட்டான்.
திருக்குர் ஆன் 4:112
இதற்கு பதில் எங்கே என்று கேட்டால் என் நண்பர்களுக்குத் தெரியும் என்கிறான்.
உன் தந்தை யார் என்று கேட்கும் போது அது என் தாய்க்குத் தெரியும் என்று கூறுவது போல் என்னைப் பற்றி என் நண்பர்களுக்குத் தெரியும் என்று கூறுகிறான். மக்களை மடையர்கள் என்று நினைக்கிறான் என்பதற்கு இது ஆதாரம்.
சமுதாயத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ஒருவரை பற்றி மக்கள் அறிய வேண்டும் என்று நம்மை விமர்சிப்பதற்குக் காரணம் கூறுகிறான். மக்களால் அறியப்பட்ட ஒருவரைப் பற்றி விமர்சனம் செய்ய்யும் இவனுக்கு அடையாளம் தேவை இல்லையாம். இதுவும் மக்களை மடையர்களாக்கும் போக்கு தான்.
இவன் யார் என்று தெரிந்ததால் தான் எத்தனையோ தவ்ஹீத் சகோதரர்கள் இவனுக்கு மெயில் அனுப்பினார்கள் என்கிறான். இப்போதும் இவன் மக்களை மடையர்களாகத் தான் கருதுகிறான்.
எல்லா கள்ளப் பேர்வழிகளும் முகம் மறைத்துக் கொண்டு பொய்ப்பெயரில் மின் அஞ்சல் முகவரி வைத்திருப்பார்கள். அதற்கு யாராவது மின்னஞ்சல் அனுப்பி விட்டால் அவன் கள்ளப் பேர்வழி இல்லை என்று ஆகுமா? அவனது சுய ரூபத்தை அறிந்து கொண்டு தான் அவனுக்கு மின்னஞ்சல் அனுப்பினார்கள் என்று மூளயுள்ள யாரும் கூற மாட்டான்.
இவை அனைத்தும் முடிவுக்கு வந்தாக வேண்டும். தவறான விமர்சனம் செய்பவர்களை விட இது போல் முகமுடி போட்டுக் கொண்டு குழப்புவது கடுமையானது. குழப்பம் கொலையை விடக் கொடியது என்பதில் இவன் செய்யும் குழப்பமும் அடங்கும் என்பதால் தான் இதை ஓய்த்துக் கட்ட கடும் நிலைபாட்டை எடுக்கும் அவசியம் ஏற்படுகிறது.
இவன் யாரென்று இவனது ஊர், இவனது தந்தை பெயர், இவன் இப்போது இருக்கும் இடத்துடன் தன் முழு விபரத்தையும் சொன்னால் தான் இவன் யார் என்பதை அறிய முடியும்.
இவன் தர்கா வழிபாட்டை எதிர்க்கும் தவ்ஹீத் வாதி போல் வாதிட்டு விட்டு இவன் சாப்புமார்களில் ஒருவனாக இருக்கலாம். அப்படியானால் இவன் நோக்கம் தவ்ஹீத் வாதிகள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்துவது தான் என்பது தெளிவாகி விடும்.
இவன் மத்ஹபைப் பின்பற்றுபவனாக இருந்து கொண்டு அவ்வாறு இல்லை என்பது போல் காட்டிக் கொண்டிருக்கலாம். இவன் யார் என்று தெரிந்தால் அது உலகுக்குத் தெரிந்து விடும்.
எத்தனையோ அப்பாவிகள் இவன் யார் என்று தெரியாமல் இவனிடம் மன்னிப்பு கேட்டு மெயில் அனுப்பலாம். அல்லது இவன் தமுமுக, ஜாக், பாக்கர் கூட்டம் ஏதாவது ஒன்றின் பிரமுகராக இருந்து கொண்டு தான் எந்த இயக்கத்தையும் சேராதவன் என்று நடிக்கலாம். அல்லது சங்கப்பரிவாரமாக இருக்கலாம். அடுத்தவனை விமர்சிக்கும் இவன் யார் என்பது தெரியாமல் போகக் கூடாது.
நண்பர்கள் எனது கடுமையான வார்த்தைப் பிரயோகம் பற்றி தவறாக எண்ண வேண்டாம். அவன் இவன் என்று நான் யாரையும் எழுதுவதில்லை. எழுதவும் மாட்டேன். தன்னை மறைத்துக் கொள்பவனைப் பற்றி எழுதும் போது எந்தக் குறிப்பிட்ட மனிதனைப் பற்றியும் நான் எழுதியதாக ஆகாது. தந்தை யார் என்பதைச் சொல்லாமல் மறைப்பவனுக்கு எந்த வழிமுறையைக் கையாள வேண்டுமோ அதே அழிமுறையைத் தான் இவனுக்கும் கையாள வேண்டும். ஒளிந்திருப்பவன் நல்லவன் என்றால் அவன் வெளியே வர வேண்டும் என்பதற்காக இது அவசியமாகிறது.
அவன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டால் நான் இன்னார் என்று தெளிவு படுத்திவிட்டால் எனது விமர்சனத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு அவனது கருத்தைக் கன்னியமாக நான் எதிர் கொள்கிறேன்.
விரைவில் இவனது முகத்திரை கிழியும். இன்ஷா அல்லாஹ்.
18.12.2009. 01:01
