மொட்டைப் பிரசுரங்கள்

மொட்டைப் பிரசுரங்கள் மூலமும், கள்ள வெப்சைட்கள் மூலமும், போலி மின்னஞ்சல்கள் மூலமும் நமது ஜமாஅத்துக்கு எதிராக அவதூறு பரப்புவோருக்கு தங்களின் பதில் என்ன?

நமது ஜமாஅத்துக்கு எதிராக அவதூறு பரப்புவோர் அனைவருக்கும் நாம் ஒற்றை வரியில் ஏற்கனவே பலமுறை பதிலளித்து விட்டோம். அவதூறு பரப்புவோர் அதை நிரூபிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அந்த அவதூறை நமது முன்னிலையில் மக்கள் பார்வையில் கூறி நிரூபிக்கத் தயாரா? என்பது தான் அந்தப் பதில். இதை ஏற்கத் திராணியில்லாத கழிசடைகள் நாம் மதிக்கத் தேவையில்லை. இவர்களை நாம் மன நோயாளிகளாகத் தான் கருதுகிறோம். உண்மையாகவே இவர்கள் ஒருவிதமான மனநோயாளிகள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

மேலும் இந்த மனநோயாளிகளால் நம்க்கு எள்ளளவும் பாதிப்பு ஏற்பட்டால், இவர்களின் அவதூறை மக்கள் நம்பி நமது ஜமாஅத்துக்குப் பின்னடைவு ஏற்பட்டால் இவர்களின் அவதூறுக்கு விளக்கம் அளிக்க சிறிதளவாவது முகாந்திரம் இருக்கும்.

அப்படி எந்த தாக்கத்தையும் இவர்களால் ஏற்படுத்த முடியவில்லை.

நமது ஜமாஅத் மீது அவதூறு பரப்பி, இவர்களிடம் ஃபித்ரா தொகையை வழங்காதீர்கள் என்று தீவிரப் பிரச்சாரம் செய்தனர். இதன் விளைவு என்ன? சென்ற ஆண்டை விட 33 சதவிகிதம் அதிகமான மக்கள் நம்மிடம் தான் ஃபித்ரா வழங்கினார்கள். சென்ற ஆண்டு 24 லட்சம் வழங்கிய மக்கள் இவர்களின் அவதூறுக்குப் பின் 32 லட்சம் ரூபாய்களை வழங்கினார்கள்.

இவர்கள் அவதூறு பரப்புவதற்கு முன்னால் நமது ஜமாஅத்துக்கு என்று சொந்த கட்டிடங்களோ, சொந்த இடங்களோ இல்லாமல் இருந்தன் இவர்களின் அவதூறு பிரச்சாரத்துக்குப் பின் தமிழகத்தில் 20 கிளைகள் சொந்தமாக மர்கஸ் அமைக்க இடம் வாங்கும் அளவுக்கு மக்கள் ஆதரவைப் பெற முடிந்திருக்கிறது.

இவர்களின் அவதூறுக்கு முன்னால் தலைமையின் நேரடி நிர்வாகத்தில் தலைமை அலுவலகம் மட்டுமே - அதுவும் வாடகைக் கட்டிடத்தில் இருந்தது. இவர்களின் அவதூறுகளுக்குப் பின் ஆண்களுக்காக இரண்டு தஃவா சென்டர்கள், பெண்களுக்காக ஒரு தஃவா சென்டர் வாடகைக் கட்டிடத்தில் இயங்குகிறது. தஃவா சென்டருக்காக சொந்த இடமும் வாங்கப்பட்டுள்ளது. மதுரையில் பல லட்சம் மதிப்பில் அல்புர்கான் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடம், தலைமைக்கென சொந்த வாகனம் என்று மக்கள் நம்பிக்கையோடு அள்ளித் தருகின்றனர்.

கிளைகளின் எண்ணிக்கையானாலும், உறுப்பினர் எண்ணிக்கையானலும், திரட்டப்பட்ட ஜகாத் - ஃபித்ரா தொகையானாலும், இரத்தானம் செய்வோரின் எண்ணிக்கையானாலும், பிரச்சாரம் செய்யும் தாயிகளின் எண்ணிக்கையானாலும், நடாத்தப்படும் போராட்டங்களானாலும், அதில் பங்கெடுக்கும் மக்கள் திரளானாலும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றனவே தவிர எள்ளளவும் பின்னடைவு ஏதும் ஏற்படவில்லை.

பிரச்சாரக் கூட்டங்களானாலும், துண்டுப் பிரசுரங்களானாலும், மாநாடுகளானாலும், தொலைக்காட்சி வழியாகச் செய்யப்படும் பிரச்சாரம் ஆனாலும் எதுவுமே நாள் தோறும் அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை.

எனவே இவர்களின் அவதூறு பிரச்சாரத்துக்குப் பின்னர் தான் - இத்தகைய தரங் கெட்டவர்களையா நாம் ஆதரித்தோம் என்று அவர்களை நம்பியவர்களே உண்மையை உணரத் தலைப்பட்டு வருகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளாக நாம் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நமது ஜமாஅத் அதன் கொள்கைகள் மற்றும் பிரச்சாரத்தின் மூலம் வளர்ந்ததை விட நம்முடைய எதிரிகளின் உளரல்களாலும், தரங்கெட்ட பிரச்சாரத்தினாலும் தான் அதிகம் வளர்ந்நிருக்கிறது என்பதை எடை போட்டு அறிந்திருக்கிறோம்.

இவர்களின் முரண்பாடுகள், எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கீழ்த்தரமான போக்கு நமது ஜமாஅத்தால் தூக்கி எறியப்பட்டவர்களைத் தூக்கிப் பிடிக்கும் அரசியல் போன்ற காரணங்களால் நமது ஜமாஅத்தின் நம்பகத் தன்மை மென்மேலும் உறுதிப்படுத்துகிறது என்பது தான் உண்மை நிலவரம்.

எனவே, நேருக்கு நேர் எதிர்கொள்ள திராணி இல்லாத பேடிகளை, மொட்டைகளை நாம் கண்டு கொள்ளத தேவையில்லை.

13.08.2009. 01:34




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
102 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி