அடையாளம் காட்டுவது அவசியம்

அபூ சுமையா யார் என்று தெரிய வேண்டியது அவசியமே.

மார்க்க அடிப்படையில் அபூ சுமையா என்பவர் யார் என்று தெரிவிக்க வேண்டும் என்று நான் கேட்டிருந்தேன்.

ஒளிந்து கொண்டு குற்றச்சாட்டு கூறலாம் என்பதற்கு மார்க்க அடிப்படையில் ஆதாரம் காட்ட வேண்டும். அல்லது அபூ சுமையா யார் என்பது தெளிவுபடுத்த வேண்டும்.

இதை விடுத்து சில சகோதரர்கள் எனக்கு அவரைத் தெரியும்; இவரைத் தெரியும் என்று எழுதுவதில் மார்க்க அடிப்படையிலான எந்த நியாயமும் இல்லை.

நான் நேரில் சந்தித்துள்ளேன் என்று சிலர் கூறுவது மார்க்க அடிப்படையில் போதுமானதல்ல. அவரது கொள்கை கோட்பாடு போன்றவற்றை அறிந்திடவும், அவர் விமர்சிக்கும் குறைகள் அவரிடம் உள்ளதா என்பதை அறியவும் அவரது சொந்த ஊர். தந்தை பெயர் அவர் எந்த இயக்கத்தையும் சேர்ந்தவரா (பெரிய ஊராக இருந்தால் அவரை அடையாள காண்பதற்குரிய விபரம்) போன்றவை வெளிப்படையாகத் தெரிய வேண்டும்.

வழக்குப் போடுவதற்காக அல்ல. வழக்குப் போடும் வகையில் எழுதினால் அவர் தன்னை அடையாளம் காட்டாமலே என்னால் வழக்குப் போட முடியும்.

யாரைப் பற்றி எழுதுகிறாரோ அவரிடமிருந்து மார்க்க அடிப்படையில் ஒளிந்து கொள்ளக் கூடாது.

பீஜே என்ற நான் இருக்கிறேன். என்னைப் பற்றிய எந்தக் கேள்வியும் என்னிடம் கேட்கலாம். அதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில் பீஜேயைப் பற்றி விவாதிப்போம் என்று ஒருவன் தன்னை ஒளித்துக் கொண்டு நான் இல்லாத சபையில் வர வேண்டிய அவசியம் என்ன?

என் சார்பில் யார் பெயரையோ பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன? முதுகெலும்பு இருந்தால் யாராக இருந்தாலும் என் முன்னே விவாதிக்கலாம்.

முகமூடி போட்டுக் கொண்டு, அவசியம் ஏற்படும் போது கூட தன்னை மறைத்துக் கொள்வோர் யாராக இருந்தாலும் அவர்கள் இதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது என்பதைத் தான் காட்ட வேண்டும். எனக்குத் தெரியும் உனக்குத் தெரியும் என்பதெல்லாம் எடுபடாத வாதங்கள்.

எனது கொள்கை எனது ஜமாஅத்தின் கொள்கை கோட்பாடு பற்றி விவாதிக்க விரும்பும் யாராக இருந்தாலும் என்னுடனும் என் ஜமாஅதுடனும் தான் விவாதிக்க வேண்டும். இந்தக் குறைந்த பட்ச அறிவு கூட இல்லை.

இன்று வரை அபூ ஸுமையா தன்னை அடையாளம் காட்டவில்லை என்றால் அவருக்குப் பல முகங்கள் இருப்பது உறுதியாகிறது. அதில் ஒரு முகத்தை சிலர் பார்த்திருப்பது போதாது.

இறுதியாக ஒன்றைச் சொல்கிறேன். தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடு பற்றி யார் விவதிக்க விரும்பினாலும் எனது இணைய தளத்துக்கு எழுதலாம். அதை அப்படியே முழுமையாக எடிட் செய்யாமல் முழுமையாக வெளியிட்டு நான் பதில் தருவேன். அபூ சுமையா என்ற முகமூடிப் பேர்வழி தன்னை அடையாளம் காட்டிக் கொண்டால் அவரும் விவாதிக்கலாம். ஒரு வார்த்தை கூட விடாமல் வெளியிட்டு பதில் அளிக்கிறேன்.

இதை விடுத்து அவருக்குத் தெரியும் இவருக்குத் தெரியும் என்று மீண்டும் மீண்டும் ஓடி ஒளியாமல் நான் தான் உன்னை விமர்சிப்பவன்; என் தந்தை இன்னார். என் கொள்கை இது. எனக்கு இரண்டு முகம் இல்லை என்று தெளிவாக அறிவிப்பது மார்க்கக் கடமை.

முகமூடி போட்டுக் கொண்டு ஒளிந்து கொண்டு அவர் விமர்சிப்பதைச் சரி காண்பவர்கள் மார்க்க அடிப்படையில் ஆதாரம் காட்டி விட்டு நான் காட்டிய ஆதாரத்துக்கு பதில் எழுதி விட்டு சரி காண வேண்டும்.

அதை விடுத்து அபூ ஸுமையா தன்னை அடையாளம் காட்டத் தேவை இல்லை என்று ஃப்தவா கொடுக்க வேண்டாம். ஆதாரத்தோடு அந்த ஃபத்வாவைக் கொடுக்க வேண்டும்

22.12.2009. 00:46




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
100 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி