தவ்ஹீத் மேடையில் ஷிர்க் உரை - 2

தவ்ஹீத் மேடையில் ஷிர்க் உரை - 2

தகவல் மாஹீன் முஹம்மத்

 ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

வந்தே மாதரம் பாடுவது இஸ்லாத்திற்கு எதிரானது என்பது அனைவரும் அறிந்ததே!

ஏனெனில் இந்து தெய்வங்களையும் மண்ணையும் வணங்குவதாக அமைந்துள்ளது தான் வந்தே மாதரம் எனும் பாடல். ஒரே இறைவனை வணங்கும் முஸ்லிம்கள் எக்காரணத்தைக் கொண்டும் இந்தப் பாடலை பாடமாட்டார்கள். இதை ஜாக் அமைப்பும் தனது அல்ஜன்னத்தில் எழுதி இருக்கின்றது.

மத்ஹபை ஆதரிக்கும் தேவ்பந்த் உலமாக்கள் கூட வந்தே மாதரம் பாடக் கூடாது என்று தீர்ப்பளித்துள்ளனர்.

ஆனால் ஜாக் இயக்கத்தின் சார்பில் நடத்தப்படும் அல்ஜாமியத்துல் ஃபிதௌஸியா அரபிக்கல்லூயின் எட்டாவது பட்டமளிப்பு விழா மேடையில் ஜாக் தாயிகளின் முன்னிலையில் வந்தேமாதரம் பாடுவது தவறல்ல. இது அலட்சியப்படுத்த வேண்டிய விஷயமென்றும் இப்படியெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் எவரும் இஸ்லாத்திற்கு வரமாட்டார்கள், இஸ்லாத்தில் இருப்பவர்களும் இத்தகைய கட்டுப்பாடுகளைக் கண்டு வெளியேறி விடுவார்கள் என்று பேசப்பட்டது.

பட்டமளிப்பு விழாவில் வாழ்த்துரை வழங்கிய ஜாக் அமைப்பிற்கு ஆதரவான அஷ்ரஃப் பள்ளிவாசலின் தலைவர் தைக்கா சாகிப் அவர்கள் இஸ்லாத்தைப் பற்றிய தனது அறியாமையை அந்த மேடையில் வெளிப்படுத்தினார். வந்தே மாதரம் பாடுவது பெரிய விஷயமல்ல. இது இஸ்லாத்தில் இல்லாத விஷயம் (!?), இப்படி கட்டுப்பாடுகளை விதிப்பதால் தான் நம்மை மோசக்காரன் என்று சொல்கிறார்கள். சிலர் மக்களைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை இங்கு படித்த ஆலிம்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இவர் மார்க்க அறிவு இல்லாதவர் என்பதால் இவர் இப்படிப் பேசியதில் ஆச்சரியமில்லை. ஆனால் அதை ஆமோதித்த மதீனாவில் படித்த செய்யது முஹம்மது மதனி, தைக்கா சாகிபின் வார்த்தைகளுக்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்.

மத்ஹப் வாதிகள் ஷிர்கை விளங்கி அதைக் கண்டிக்கின்றனர்,. ஆனால் தவ்ஹீதைச் சொல்லி இயக்கம் நடத்துவோர் ஷிர்குக்கு ஆதரவாக உள்ளதை ஜாக்கில் ஒட்டிக் கொண்டிருக்கும் சகோதரர்கள் சிந்திக்க வேண்டும்.

யாரும் இல்லாத நேரத்தில் இந்த வார்த்தைகள் சொல்லப்படவில்லை. ஃபிர்தௌஸியா கல்லூரி வளாகத்தில் பொது மேடையில் இவை பேசப்பட்டன. அந்த மேடையில் புதுப்பேட்டை ஜாக் மர்கஸ் பொறுப்பாளர் மவ்லவி ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தௌஸி, திருமங்கலம் ஜாக் அழைப்பாளர் மவ்லவி முஹம்மது ரஃபி ஃபிர்தௌஸி, ஜாக் துணைத் தலைவரும் கல்லூரி ஆசிரியருமான மவ்லவி செய்யதலி ஃபைஸி, ஜாக் மாநிலத் தலைவர் மவ்லவி எஸ்.கமாலுதீன் மதனி, கல்லூரி முதல்வா; மவ்லவி எம்.எஸ்.செய்யது முஹம்மது மதனி, கல்லூரி ஆசிரியர் மவலவி அப்துர் ரஹ்மான் மன்பஈ, மவலவி ரஃபீக் ஃபிர்தௌஸி உட்பட பல ஜாக் மௌலவிகளும் கோவை மசூது மற்றும் பட்டம் பெற்ற புதிய மாணவ ஆலிம்களும் பேராசிரியர் இம்தியாஸ் அஹமது, தாருல் ஹூதா நிறுவனர் உமர் ஷரீஃப் காஸிமி ஆகியோரும் இருந்தனர். (நாம் விவாதத்துக்கு அழைத்த உமர் ஷரீப் தான் இவர். )

இத்தனை பேர் இருந்தும் அந்த ஷிர்க்கான பேச்சுக்களை எவரும் கண்டிக்கவில்லை. மறுப்பு தெரிவிக்கவில்லை. மக்களிடம் அந்த வார்த்தைகள் தவறானவை என்று விளக்கப்படவில்லை. வந்தே மாதரம் பாடுவது தவறல்ல என்று தான் அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த மார்க்க அறிவு இல்லாத மக்கள் கருதிச் சென்றனா;.

வந்தே மாதரம் என்பது ஷிர்க், ஷிர்க் வைப்பது பாவம் என்று நாம் உட்பட பலர் சொல்வதைக் கொச்சைப்படுத்தி, அவ்வாறு இணை வைக்கும் சொற்களைச் சொல்வது தவறல்ல, அது அலட்சியப்படுத்தப்பட வேண்டிய விஷயம், இணை வைப்பது பாவம் என்று சொல்வதால் மக்கள் இஸ்லாத்திற்கு வரமாட்டார்கள், இஸ்லாத்தில் இருப்பவர்களும் இது பயங்கர கட்டுப்பாடான மார்க்கம் என்று கூறி இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுவார்கள்இதனால் தான் நம்மை மோசக்காரன் என்று சொல்கிறார்கள். வந்தே மாதரம் என்பது ஷிர்க், ஷிர்க் வைப்பது பாவம் என்று சிலர் கூறுவது இஸ்லாமல்ல, இது இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட விஷயம் என்று கூறி இங்கு படித்த ஆலிம்கள் மக்களிடம் எடுத்துக் கூறி மக்களை நல்வழிப்(!?) படுத்த வேண்டுமென்று தைக்கா சாகிப் குறிப்பிட்டதை எந்த ஆலிம்களும் தடுக்கவில்லை.

தவ்ஹீத் மேடையில் பிறரை அனுமதிப்பதால் கொள்கைப் பிரச்சனை ஏற்பட்டுவிடும் என எண்ணி நாம்  அதைத் தவிர்க்கும் பொழுது கொள்கைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் ஷிர்க்கான வார்த்தைகள் ஜாக் மேடையில் பேசப்பட்டு வருகின்றது. 
தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமின்றி இன்னும் ஏராளமான இயக்கங்கள் வந்தே மாதரத்துக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியுள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது

 

ஜாக் மேடையில் பேசப்பட்ட ஷிர்க் உரைகள் வீடியோ கிளிப்பாக உள்ளது.

வீடியோ கிளிப் பார்க்க

தவ்ஹீதுக்கும் தூய இஸ்லாத்துக்கும் இவர்கள் எதிரிகளாக ஆனதற்குக் காரணம் யாரை வேண்டுமானாலும் மேடையில் ஏற்றலாம் என்ற பலவேசக் கொள்கை தான் என்பதில் சந்தேகம் இல்லை.

 அஸ்ஸலாமு அழைக்கும்
தவ்ஹீத் மேடையில் ஷிர்க் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட விமர்சனதிலுள்ள அல் மஸ்ஜிதுல் அஷ்ரப்  பள்ளியின் தலைவர் மீண்டும் தைக்க சாஹிப் மீண்டும் வருகின்ற   21   வெள்ளிக்கிழமை    ஜாக் சார்பாக கோட்டார் கதிஜதுள் குப்ரா மகளிர் கல்லூரியில்  நடைபெறும் 9 பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார் . அவர்தான் பட்டமளிப்பு நிகழ்ச்சி தலைமை ஏற்கிறார்.
 
நசீர் அஹ்மத்
தம்மாம்
 

 

 வந்தே மாதரம் பாடுவதுஇஸ்லாத்திற்குஎதிரானது என்பதுஅனைவரும் அறிந்ததேமுஸ்லிம்கள்

Published on: May 19, 2010, 9:06 AM Views: 1823

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top