பிறை விவாத சவடால்

பிறை விவாத சவடால்

ஏர்வாடி ஜாக் என்ற பெயரில் விவாத அழைப்பு விடப்பட்டுள்ளதே அதற்கு பதில் என்ன என்று சிலர் கேள்விகளைப் பரப்பி வருகின்றனர்.

அந்த விவாத அழைப்பு மடமையின் தொகுப்பாக உள்ளதால் அதை நாம் கண்டு கொள்ளவில்லை. திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொண்டு திரிவதால் அது குறித்து நமது பதிலை இங்கே பதிவு செய்கிறோம்.

அவர்கள் விவாத அழைப்பில் இப்படி கூறப்பட்டுள்ளது.

தலைப்பு:-
பிறைகள் விஷயத்தில் குர்ஆனை நிராகரிக்கலாமா?
டி.என்.டி.ஜே யின் நிலைபாடான தத்தமது பகுதி பிறை சரியா?

நீலிக்கண்ணீர் வடிக்கும் பி.ஜே, ஜாக் தலைவரை அழைத்து பேசி, ஒரு சேர விவாதத்திற்கு வந்தால் நாங்கள் மேற்கண்ட இரு தலைப்பில் விவாதம் செய்யத்தயார்.

இதில் உள்ள அபத்தத்தை நாம் முதலில் சுட்டிக் காட்டுக்கிறோம்.

ஒரு இயக்கத்துடன் விவாதிப்பது என்றால் தலைப்பு பற்றி இரு சாராரும் பேசிய பிறகு தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் இரண்டு தலைப்புகளை அவர்களாகக் குறிப்பிட்ட மடமையை பாருங்கள்

பிறைகள் விஷயத்தில் குர்ஆனை நிராகரிக்கலாமா என்பது ஒரு தலைப்பு. உலகத்தில் எந்த முஸ்லிமாவது குர்ஆனை நிராகரிக்கலாம் என்று கூறுவானா?  குர்ஆனை நிராகரிக்கலாம் என்று தவ்ஹீத் ஜமாஅத் கூறினால் அது பற்றி விவாதிக்க அழைப்பு விடலாம்.

குர்ஆனில் இல்லாததை குர்ஆனில் உள்ளதாக புளுகும் மடையர்கள் இவர்கள் என்பது தான் நமது நிலைபாடு.

குர்ஆனை நிராகரிக்கக் கூடாது என்பது தான் நமது நிலை. ஒரு வேளை இவர்களின் நிலை குர்ஆனை நிராகரிக்கலாம் என்பதாக இருந்தால் அது குறித்து விவாதிக்கலாம். நாங்கள் காபிர்களாகி விட்டோம் என்று அவர்கள் அறிவித்து விட்டு குர்ஆனை நிராகரிக்கிறோம் என்று கூறுவார்களானால் இது பற்றி அவர்களுடன் விவாதிக்க முடியும்.

பிறை சம்மந்தமாக விவாதிக்க வேண்டுமானால் அது குறித்து அனைத்து கோணங்களையும் உள்ளடக்கிய வகையிலும் இது வரை அவர்கள் உளறிய அனைத்தையும் தோலுரித்துக் காட்டும் வகையிலும் தலைப்பு அமைக்கப்பட வேண்டும். அது ஒப்பந்தத்தின் போது தான் தீர்மானிக்கப்பட வேண்டும்

மேலும் பிறை மட்டுமின்றி அதை விட பாரதூரமான கொள்கை வேறுபாடுகள் அவர்களுடன் நமக்கு உள்ளன. இஸ்லாத்தை விட்டு வெளியேற்றக் கூடிய கொள்கையை அவர்கள் கொண்டுள்ளதால் பிறை மட்டுமின்றி அதை விட முக்கியமான அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்கும் வகையில் ஒப்பந்தம் செய்ய வேண்டும்.

சமீபத்தில் ஹிஜ்ரத் குறித்து இவர்கள் எழுதியுள்ள வடிகட்டிய முட்டாள் தனம் உட்பட அனைத்தையும் விவாதிக்க வேண்டும்.

பிறை குறித்த அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கும் வகையில் இரு சாராரும் பேசி ஒப்பந்தம் செய்து அதனடிப்படையில் விவாதிக்கத் தயார் என்றால் அதைக் குறிப்பிட்டு தவ்ஹீத் ஜமாஅத் தலைமைக்குக் கடிதம் எழுதி அனுப்பட்டும்.

மேலும் கருத்து வேறுபாடுள்ள அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கத் தயார் என்றும் ஒப்புக் கொண்டு கடிதம் எழுதினால் தவ்ஹீத் ஜமாஅத் உடனே அதை ஏற்று ஒப்பந்தம் செய்வதற்கான நாளை அறிவிக்கும்.

அப்போது தான் நாட்டில் உள்ள இயக்கங்களிலேயே மடமையில் இவர்களை யாரும் மிஞ்ச முடியாது என்பதை மக்களுக்கு அடையாளம் காட்ட முடியும்

அடுத்து அவர்கள் விவாதத்துக்கு அழைக்கும் இலட்சணத்தைப் பாருங்கள்.

நீலிக்கண்ணீர் வடிக்கும் பி.ஜே, ஜாக் தலைவரை அழைத்து பேசி, ஒரு சேர விவாதத்திற்கு வந்தால் நாங்கள் மேற்கண்ட இரு தலைப்பில் விவாதம் செய்யத்தயார்.

அட கூறு கெட்டவர்களா நாங்கள் ஏன் உங்கள் தலைவர் கமாலுத்தீன் மதினியைச் சேர்த்து அழைத்து வர வேண்டும்? இதை எழுதும் போது மூளையைக் கழற்றிக் காயப்போட்டு விட்டுத் தான் எழுதினீர்களா? எங்களுடன் விவாதம் செய்வது என்றால் எங்களை அழைக்கலாம். எங்கள் எதிரியான உங்கள் தலைவரையும் நாங்கள் அழைத்து வரவேண்டும் என்று எழுதும் அளவுக்கு உங்கள் புத்தி பேதலித்து விட்டதா?.

திகவை விவாதத்துக்கு அழைக்கும் போது ராம கோபலனை அழைத்து வரத் தயாரா என்று அவர்கள் கேட்டால் அது மடமை அல்லவா? ஷேக் அப்துல்லாவை விவாதத்துக்கு அழைக்கும் போது தப்லீகையும் அழைத்து வாருங்கள் என்று கேட்டால் அதுவும் மடமை தான்.

அந்த மடமையைத் தான் இவர்கள் நிபந்தனையாக்கியுள்ளனர். விவாதத்துக்கு அழைப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும் ஆனால் ஓடி ஒளியும் வகையில் அந்த அழைப்பு இருக்க வேண்டும் என்று பாமரனும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் விவாத அழைப்பு இருந்ததால் தான் இதை நாம் கண்டு கொள்ளவில்லை.

கீழ்க்கண்டவாறு அவர்கள் தெளிவு பட கடிதம் எழுதினால் உடனே விவாத ஒப்பந்தத்துக்கான ஏற்பாடுகளைச் செய்வோம்.

எங்களுக்கும் உங்களுக்கும் இடையே முரண்பாகவுள்ள பிறை தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும் மேலும் நமக்கிடயே கருத்து வேறுபாடுள்ள பாரதூரமான அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்க நாங்கள் தயார்

மேற்கண்டவாறு எழுதி விவாதக் குழுத் தலைவர், தமிழ்நாடு தஹீத் ஜமாஅத், 30 அரண்மனைக்காரன் தெரு, மண்ணடி சென்னை-1 என்ற முகவரிக்கு கடிதம் மூலம் எழுதி விவாதத்துக்குச் சவடால் விட்டதை மெய்யாக்கட்டும்

அன்புடன்

பீ.ஜைனுல் ஆபிதீன்பொய் கூறும் ஜாக் இமாம்அல்லாஹ்வின் மீது பயமின்றி பொய் கூறும்உண்மையை நிரூபிக்கமுபாஹலாவுக்கு

Published on: September 20, 2010, 4:10 PM Views: 2457

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top