பின்வாங்கியது மசூத் தான்

بسم الله الرحمن الرحيم

பிறை குறித்து விவாதம் செய்யாமல் பின்வாங்கி ஓடிய கோவை மசூத்

கோவை ரஹ்மதுல்லாஹ் எழுதுவது அஸ்ஸலாமு அலைக்கும். கோவை மசூத் அவர்கள் பின் வாங்கிய செய்தியை வெளியிட்டிருந்தீர்கள். நடந்ததை விளக்கமாக நான் தெரிவிக்கிறேன். அதை மசூத் மறுத்தால் நான் நிரூபிக்கிறேன்.

 

பிறை குறித்து தவ்ஹீத் ஜமாஅத்திடம் விவாதம் செய்ய ஜாக் அமைப்பினா; அறைகூவல் விட்டதாகவும் அதற்கு தவ்ஹீத் ஜமாஅத்தினர் மௌனம் சாதிப்பதாகவும் அந்த அமைப்பச் சேர்ந்த கோவை.மசூத் அவதூறு பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால் உண்மையிலேயே பின்வாங்கிய கூட்டம் யார்? என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

கடந்த 2007 - ரமலான் மாதம்; வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஜாக் அமைப்பின் சார்பில் பிறை குறித்து உள்ளரங்குக் கூட்டம் நடத்தப்படுவதாகவும் அதில் உரை நிகழ்த்த அந்த அமைப்பின் மாநில நிர்வாகி கோவை மசூத் வரப் போவதாகவும் துண்டுப் பிரசுரம் வெளியிட்டிருந்தனர்.

உடனே பேரணாம்பட்டு tntj சார்பில் ஏமாறாதீர்! ஏமாற்ற வருவார்கள் என்ற தலைப்பில் பிறை குறித்த நமது நபி வழி நிலைப்பாட்டை விளக்கியதுடன், பிறையைக் கண்ணால் பார்க்காமல் முன்கூட்டியே கணிப்பின் அடிப்படையில் நோன்பையும் பெருநாளையும் தீர்மானிக்கும் அவர்களின் அபத்தங்களையும் தெளிவுபடுத்தி ஒரு பிரசுரத்தை நாமும் வெளியிட்டிருந்தோம்.

அதையடுத்து அவர்கள் சார்பில் நடந்த அந்தக் கூட்டத்தில் நமது சகோதரர்கள் சிலர் மசூத் அவர்களிடம் சில கேள்விகளைத் தொடுத்தனர். அதற்கு அவர் சரியான பதிலை தர இயலவில்லை.எந்த அளவுக்கென்றால் நம் சகோதரா; பயாஸ் என்பவர், அவரிடம், இந்த வருடம் (2007) சவுதிக்கு ஒரு நாள் முன்னதாகவே நோன்பு பிடித்துள்ளீர்களே அரபா உடைய நாள் வரும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? அவர்களோடு சேர்ந்து ஒரே நாளில் நோன்பு பிடிப்பீர்களா? அல்லது அவர்கள் அரபா நாளில் ஒன்று கூடுவதற்கு முந்தைய நாளிலேயே நீங்கள் அரபா நோன்பு நோற்று உங்கள் கொள்கைக்கு உயிரோட்டம் கொடுப்பீர்களா? என்று கேட்டதற்கு அதை அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று மசூத் அவர்கள் மழுப்பிவிட்டார். இதற்கு வீடியோ ஆதாரம் அவர்களிடமே உள்ளது.

நொந்து போன நமது சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் (பேரணாம்பட்டு tntj துணைத் தலைவர்), இவ்வாறு குழப்பிக் கொண்டிருக்கும் நீங்கள் உங்கள் வாதத்தில் உண்மையாளராக இருந்தால் நான் எங்கள் ஜமாஅத் சார்பில் மவ்லவி.பி.ஜே அவர்களை விவாதத்திற்கு அழைத்து வருகிறேன். நீங்கள் விவாதிக்கத் தயாரா? என்று கேட்டார். அதற்கு கோவை மசூத் கூறிய பதில் இதோ,

விவாதம் செய்வதாக இருந்தால் எங்களை விட்டுவிடுங்கள்.அதற்கு நாங்கள் தயாரில்லை. என்னை கோழை என்று நீங்கள் நினைத்துக் கொண்டாலும் பரவாயில்லை. விவாதத்தினால் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை.என்று கூறிச் சென்று விட்டார். ஆனால் இவர்கள் பிறை குறித்து முஜாஹித் அமைப்புடன் விவாதித்தனர் என்பது இவர்களின் பொய் வாதத்தை எடுத்துக் காட்டுகிறது.

உடனே நமது சகோதரர்கள் அந்த சபையிலேயே , இன்ஷா அல்லாஹ் பிறை குறித்து அவர்களது அனைத்து அபத்தங்களுக்கும் கோவை.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் பதிலளிக்க உள்ளார்கள்.அனைவரும் வாருங்கள் என்று அழைப்பு விடுத்தனர். அதைத் தொடந்து பிறை குறித்து ஜாக் தரப்பினா; (குறிப்பாக ஜாக் மாநிலப் பொருளாளா; ரபீக் அஹ்மத் உட்பட) நம்மிடம் பல கேள்விகளைக் கேட்டனர்.அதற்கு நாம் ஆதாரப்பூர்வமான பதில்களைத் தந்ததோடு அவர்களது நிலைப்பாட்டின் பல்வேறு அபத்தங்களைப் பட்டியலிட்டோம். அதற்கு அந்த அமைப்பின் பேரணாம்பட்டு நிர்வாகி ஷப்பீர் அஹ்மத் அவர்கள் நம்மிடம் , நீங்கள் எங்களிடம் பல்வேறு கேள்விகளைப் பட்டியலிட்டு விட்டீர்கள்.அதற்கு நாங்கள் விரைவில் பதில் சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது என்று கூறிச் சென்றுவிட்டார். அன்று சென்றவர்கள் இன்று வரைக்கும் பதில் சொன்ன பாடில்லை.

 ஜாக் அமைப்பினா; அறைகூவல் விட்டதாகவும்தவ்ஹீத் ஜமாஅத்தினர் மௌனம் சாதிப்பதாகவும்கோவை.மசூத் அவ

Published on: January 18, 2010, 11:40 PM Views: 2316

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top