கோவை அய்யூபின் புளூகு மூட்டை

கோவை அய்யூபின் புளூகு மூட்டை

இலங்கையில் உள்ள ஒரு நிறுவனத்திடம் பள்ளிவாசல் கட்டுவதாகக் கூறி பீஜே ஐந்தரை லட்சம் வாங்கி வந்து பள்ளிவாசல் கட்டாமல் ஏமாற்றி விட்டார் என்று கோவை அய்யூப் என்பவர் வெளியிட்ட ஒரு வீடியோவில் கூறியுள்ளார். இது பற்றி இலங்கை மவலவி ஹஃபீள் அவர்கள் என்னிடம் விசாரித்தார். என்னிடம் கேட்பதை விட யாரிடம் நான் பணம் வாங்கியதாக கோவை அய்யூப் கூறினாரோ அந்த ஷபாப் நிறுவனத்திடமும் அதன் தலைவர் ரஷீத் மவ்லவி அவர்களிடமும் நீங்களே விசாரித்துக் கொள்ளலாம் என்று நான் பதில் அளித்தேன். அவர் தொலைபேசி மூலம் விசாரித்தறிந்ததை கீழே தந்துள்ளார்.

 ஜம்இய்யத்துஷ் ஷபாப்பிடம் ஐந்தரை இலட்சமா?

 இலங்கையிலுள்ள ஜம்இய்யத்துஷ் ஷபாப் என்ற அரபு நாட்டு நிதி பெறும் அமைப்பிடம் பள்ளி கட்டவென பீஜே ஐந்தரை இலட்சம் ரூபாய் வாங்கி வந்து இதுவரை பள்ளி கட்டவில்லை என பரிசுத்தவான்(?) கோவை ஐயூப்  ஒரு பொது மேடையில் பேசியுள்ளார்.

 Play Without Downloading Download To your computer

 

இந்த அவதூறை நம்பிய சிலர் பீஜேயும் அரபு நாட்டு நிதி பெறும் அமைப்பிடம் பணம் வாங்கி விட்டு மோசடி செய்துள்ளார் என்று என்னிடமும் கூறினர். இன்னும் பலரிடமும் பரப்பி வருகின்றனர்.

 இது பற்றி உண்மையை அறிய வேண்டும் என்று உடனே நான் பீஜேவிடம் கேட்டேன். எந்த அமைப்பிடமும் நான் பள்ளி கட்டவோ வேறு எனது தேவைகளுக்காகவோ நான் பணம் வாங்கியதில்லை என்று திட்டவட்டமாகக் கூறி விட்டார். இதை ரஷீத் மவ்லவியிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு மிகத் துணிவாகப் பதில் கூறினார்.

 கோவை ஐயூப் எந்தளவு உண்மையாளன் என்று அறிய வேண்டும் என்று ரஷீத் மவ்லவியைத் தொடர்பு கொண்டேன். அதற்கு அவர் பீஜே எங்களிடம் பணம் வாங்கவில்லை. ஹாமித் பக்ரி தனிப்பட்ட முறையில் தான் வாங்கினார். அவர் வாங்கும் போது பீஜே கிட்ட இருக்கவும் இல்லை. ஹாமித் பக்ரி தனியே ஒரு தடவை வரும் போது தான் நான்கு இலட்சம் வாங்கினார் என்றார்.

 வாங்கிய பணம் தொடர்பாக  நடவடிக்கை எடுக்கும் படி பீஜேயிடம் நீங்கள் கூறவில்லையா என்று நான் கேட்ட போது, இங்குள்ளவர்கள் அவசரப்பட வேண்டாம் என்றனர். அதனால் நான் விட்டு விட்டேன் என்று கூறினார். மேலும் அப்பணத்தை திர்மிதி வெளியிடப் பயன்படுத்தியதாக பக்ரி கூறினார் என்றும் என்னிடம் கூறினார்.

 இதை நான் ரஷீத் மவ்லவியிடம் கேட்டு ஒரு வாரத்தின் பின்னர் சகோதரர் ரஸ்மின் அவர்கள் அவருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, பக்ரி ஒரு பள்ளி கட்டியுள்ளார். ஆனால், அது நான்கு இலட்சத்திற்குப் பெறுமதி உடையதல்ல என்று மவ்லவி .ரஷீத் கூறுகின்றார். அது ஆன்லைனில் முன்னர் வெளியிடப்படடிருந்தது.

 ரஸ்மின் ரஷீத் மவ்லவி உரையாடல்

திர்மிதி வெளியிடப் பயன்படுத்தியதாகச் சொன்ன ஹாமித் பக்ரி ஒரு வார காலத்திற்குள் பள்ளி கட்டிக் காட்டினாரா?

 பீஜேவிற்கு ஹாமித் பக்ரி வாங்கியது நன்கு தெரியும் என்று ரஷீத் மவ்லவி என்னிடம் கூறினார். ஆனால் ஒரு வாரம் கழித்துப் பேசிய சகோதரர் ரஸ்மினிடம் பீஜேவிற்கு தெரியுமாயிருக்கும் என்று உறுதியற்ற நிலையில் சொல்கின்றார். திர்மிதி வெளியிட்டதாக என்னிடம் கூறிய அவர், சகோதரர் ரஸ்மினிடம் பக்ரி அப்பணத்தை வேறு எதற்கோ பயன்படுத்தியதாகச் சொன்னார் என்கிறார். இவ்வாறான அவரது முரண்பட்ட தகவல்களில் எனக்கு சில சந்தேகங்கள் எழுகின்றன.

 பக்ரியின் மோசடியை பீஜேவிடம் முறையிடத் தயங்கியவர் ஏன் கோவை ஐயூபிடம் கூறினார்? பீஜே மீது அவதூறு பரப்பப்பட்டதைத் தவிர இதில் அடைந்த நன்மை என்ன?

 அரபு நாட்டிலிருந்து பள்ளி கட்டவென வந்த பணம் எந்தப்  பொறுப்புணர்வுமில்லாமல் பக்ரியிடமிருந்து மீளப் பெறும் நடவடிக்கையுமில்லாமல் விடப்பட்டால் பள்ளி கட்டப் பணம் வழங்கியவர்களுக்கு எவ்வாறு நான்கு இலட்சத்திற்குக் கணக்குக் காட்டுவது?  இது பற்றி யாரும் கேள்வி எழுப்பாதது ஏன்? அவதூறைப் பரப்பிய நியாயவான்கள் எங்கே போயினர்?

ரஷீத் மவ்லவி நான்கு இலட்சம் பணம் தான் பக்ரி வாங்கிச் சென்றார் என்கிறார். பரிசுத்தவான் கோவை ஐயூப் ஐந்தரை இலட்சம் ரொக்கமாக வாங்கி வந்தீர்களே! எங்கே பள்ளி என்று எப்போதும் போலவே அவதூறையும் தனது இரண்டாந்தரப் பாணியில் சொல்கிறார்.

பக்ரி வாங்கிய பணத்திற்கு ஏதோ பள்ளி கட்டியதாக ரஷீத் மவ்லவி சொல்கிறார்.

ஐயூப் பள்ளியும் பணமும் எங்கே என்று கேட்கிறார்.

 அந்த உரையில் இந்த அவதூறைச் சொல்லுவதற்கு முன்னர் கோவை ஐயூப் இன்னும் சில அவதூறுகளைச் சொல்லுகின்றார்.

அதில் மஸ்ஜித் முபாரக் தொடர்பான அவதூறுகளுக்கு கள ஆய்வு மூலமும் இருபக்க விசாரணைகள் மூலமும் நண்பர் முஹம்மது மாஹீன் அவர்கள் தக்க பதிலை வழங்கியிருந்தார்.

ஐயூப் பொய்யன் என்பதையும் அதில் நிரூபித்திருந்தார். அவரது ஆக்கத்தைப் பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

அதைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 


ஹாமித் பக்ரி தனிப்பட்ட முறையில் இலங்கை வந்து வாங்கிய நான்கு இலட்சத்தை ஐந்துதரை இலட்சமாக்கி சம்மந்தமே இல்லாத பீஜேவுடன் தொடர்பு படுத்தி அவதூறு பரப்பும் இந்த அயோக்கியத்தனமே இவரது முகத்திரையைக் கிழிக்கப் போதுமான சான்றாக உள்ளது. மேலும் அங்கு ஐயூப் உளரிய அனைத்தும் புழுகு மூட்டைகள் என்பதற்கு இதை விட வேறு ஆதாரம் தேவையில்லை.

 இன்றும்  உயிருடனுள்ள ரஷீத் மவ்லவியிடம் கேட்டுத் தெளியக் கூடிய விஷயங்களிலேயே துணிந்து அப்பட்டமாகப் பொய் சொல்லக் கூடிய, ஒழுக்க ரீதியாக இன்னும் பல பாரதூரமான தொடர் குற்றச்சாட்டுக்கள் உள்ள இப்படிப்பட்ட ஒருவனைத் தான் சிலர் மேடையேற்றி அழகு பார்க்கிறார்கள் என்பது தான் வேதனையான விடமாக உள்ளது.

இன்னொரு உரையில் இந்த மகா ஞானி,இஸ்லாமிய வரலாற்றில் ஜமல் - ஸிஃப்பீன் யுத்தங்கள் நடை பெறவில்லை. அண்ணன் ஆய்வு செய்யபாமல் சொல்லி விட்டார் என்று நவீன ஆய்வாளன்(?)ஐயுப் ஆய்வு செய்து சொல்லியுள்ளார்.

இலங்கையில் இவர் போன்ற ஒரு டாக்டர் உளறியதை அப்படியே வாந்தி எடுத்துள்ளார். அந்த இரண்டு யுத்தங்கள் நடந்ததா இல்லையா என்று  சுய ஆய்வு செய்ய வேண்டும். அது பற்றிய தரவுகள் ஆங்கிலத்திலுமுள்ளது. இந்த இரண்டு மொழியிலும் புலமை இல்லாத ஐயுபால் எவ்வாறு இதை விமர்சிக்க முடியும்? தனக்கு அறிவில்லாத ஒரு விடயத்தில் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்? குர்ஆன் வசனங்களையே அர்த்தம் திரிபடையும் வகையில் அரை குறையாய் உச்சரிக்கும் இந்த ஞானி தான் வரலாறு பற்றிப் பேசுகின்றார். வரலாற்றுப் பொய்யன் என்பதற்கு அதுவும் ஒரு ஆதாரமாக உள்ளது.

 எம்.ஏ.ஹபீழ்.இலங்கை.

mahsalafi@gmail.comகோவை அய்யூபின்புளூகுமூட்டை

Published on: June 9, 2010, 10:21 AM Views: 4060

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top