ஜாக் மீது உணர்வு அவதூறு கூறியதா

ஜாக் மீது உணர்வு அவதூறு கூறியதா

உணர்வு இதழ் உரிமை 15 குரல் 3 ல் நாம் ஜாக் இயக்கத்தினர் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பற்றி விமர்சித்து எழுதி இருந்தோம். அதற்கு ஜாக் இயக்கத்தினர் உணர்வு ஏட்டின் அவதூறுக்கு மறுப்பு என தலைப்பிட்டு தங்களது இணையதளத்தில் அநாகரிமாக எழுதி இருக்கின்றனர். அது பற்றிய மறுப்பை நமக்கு அனுப்பி இருந்தால் நாம் தவறுதலாக செய்திகளை வெளியிட்டிருப்போமானால் அதற்காக நாம் வருத்தம் தெரிவித்திருப்போம். ஆனால் ஜாக் இணையதளம் தேவையற்றதைக் கூறி நம்மை பொய்யராக்க முனைவதால் அதற்கு பதிலளிக்கும் நிர்பந்தத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

ஜாக் இணைய தளத்தில் எழுதியதற்கு வரிக்கு வரி பதில்

ஜாக் வாதம்

தரமான உண்மையான செய்திகளை நாகரீகமான முறையில் மக்களுக்கு வழங்கி அவர்களை விழிப்படையச் செய்வது தான் பத்திரிகை தர்மம் என்பார்கள். ஆனால் உணர்வு ஏடு இந்த தர்மத்தை மீறுவது வாடிக்கையாகி விட்டது.

நமது மறுப்பு

அல்ஜன்னத் இதழைப் போல கீழ்த்தரமாகவும் பொய்களையும் வெளியிடுவதைப் போல இது வரை உணர்வு நடந்து கொண்டதில்லை. ஆதாரம் தேவைப்படுமாயின் பகிரங்கமாக வெளியிடப்படும்.

ஜாக் வாதம்

முன்பு ஒரு முறை 'விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக' நமது jaqh அமைப்பின் மீது அவதூறு செய்தி பரப்பி வாங்கிக் கட்டிக் கொண்டது போதாதென்று இப்போது மீண்டும் அதே பாணியில் ஒரு அவதூறு செய்தியை வெளியிட்டு தனது அரிப்பை தீர்த்துக் கொள்ள முனைந்துள்ளது.

நமது மறுப்பு

எவ்வாறு வாங்கி கட்டிக் கொண்டது என்பதைக் குறிப்பிட்டால் அதற்கான விளக்கத்தைத் தர ஏதுவாக இருக்கும்.  அது சம்பந்தமாக அதை வெளியிட்ட உணர்வு இதழுக்கு ஒரு மறுப்பு அனுப்பவும் இயலாமல் அவமானத்தால் குறுகி தங்கள் இயக்கத்தவருக்கு மத்தியில் மட்டும் மறுப்பு வெளியிட்டது அல்ஜன்னத் நிர்வாகம் தான் என்பது தமிழகம் அறிந்த விஷயம். தங்களுக்குள் வெளியிட்ட மறுப்பையே பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்ட உணர்வு நிர்வாகம் உடனடியாக பகிரங்கமாக தனது இதழில் மறுப்பு வெளியிட்டது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பற்றியும் உணர்வு இதழைப் பற்றியும் அவதூறாக எழுதி வரும் அல்ஜன்னத் அது சுட்டிக்காட்டப்பட்ட பின்பும் மறுப்பு வெளியிட்டதுண்டா? 

ஜாக் வாதம்

பிற அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் மீது கண்ணை மூடிக் கொண்டு களங்கம் சுமத்துவதும் சேற்றை வாரி இறைப்பதும் உலகம் காக்க வந்த (!)இந்த உலக மகா உத்தமர்களுக்கு கை வந்தக் கலையாகி விட்டது.

நமது மறுப்பு

எந்த இயக்கத்தின் மீதும் நாம் களங்கம் சுமத்துவதில்லை. தங்களை தவ்ஹீத் இயக்கம் என்று கூறிக் கொண்டு ஷிர்க்குக்கு ஆதரவாக நடக்கும் பேச்சாளர்களைக் கொண்டுள்ள ஜாக்கின் செயல்களையும் நபிகளாரைப் பின்பற்றினால் குழப்பம் ஏற்படும் என்று கூறி, நபி வழியைப் பின்பற்றியதால் பள்ளியிலிருந்து வெளியேற்றிய ஜாக்கின் இது போன்ற செயல்பாடுகளையும் நாம் கண்டித்தோம். அதை மறுக்கவில்லை.

ஜாக் வாதம்

'நாடும் நடப்பும்' என்ற பெயரில் 6 வது பக்கத்தில் அது வெளியிட்டுள்ள செய்தியில் நமது jaqh அமைப்பை தேவையில்லாமல் சம்பந்தப்படுத்தி வலிய வம்புக்கு இழுத்துள்ளது.

நமது மறுப்பு 

ஒரு இயக்கம் செய்யும் கீழ்த்தரமான செயலை தவ்ஹீத் ஜமாஅத் சுட்டிக் காட்டுவதை தேவையில்லாமல் வம்புக்கு இழுப்பதாகக் கூறினால் இது போன்று வம்புக்கு இழுப்பதை உணர்வு தொடர்ந்து செய்யும். அதை நன்மையாகவே கருதுகிறது. 

ஜாக் வாதம்

நாகர்கோவில் ஹனீபா நகர் பள்ளிவாசல் jaqh நிர்வாகத்தின் கீழுள்ளது அல்ல என்பதை நன்கு தெரிந்திரிந்தும் அவ்வாறு குறிப்பிட்டுள்ளது உள்நோக்கம் கொண்டதாகும். தங்களின் ஆதரவாளர்கள் தவிர மற்ற அனைத்து தாயிகளும் இந்தப் பள்ளிவாசலில் ஜும்ஆ குத்பாவுக்காக போய் வருகிறார்கள். இவர்களுக்கு மட்டும் இங்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இந்த ஆத்திரத்தைத் தான் வார்த்தைகளில் கொட்டித் தீர்த்துள்ளனர்.

நமது மறுப்பு 

ஜாக் இயக்கம் திசை திருப்பும் கலையில் கைதேர்ந்து விட்டது. மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் மார்க்க முரணான செயல் ஒன்று நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை யாராவது சுட்டிக்காட்டும் போது மேலப்பளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் பதிவு செய்யப்பட்டது அல்ல என்று நாம் கூறினால் அது நேர்மையான பதிலாக இருக்குமா? 

ஹனீபா நகர் பள்ளி யார் பெயரில் உள்ளது என்பதை விட யாருடைய தளமாக கிளையாக செயல்படுகிறது என்பதைத் தான் பார்க்க வேண்டும். மார்க்கப்பிரச்சாரம் கொள்கை கோட்பாடுகளில் ஜாக்கைச் சார்ந்து உள்ள ஒவ்வொரு பள்ளியும் ஜாக் பள்ளி தான். தவ்ஹீத் ஜமாஅத் கொள்கையை ஏற்று நடக்கும் பள்ளிவாசல்கள் தவ்ஹீத் ஜ்மாஅத் பெயரில் இல்லா விட்டாலும் அது தவ்ஹீத் ஜமாஅத் பள்ளி தான். இந்த அடிப்படையில் ஹனீபா நகர் பள்ளி ஜாக் பள்ளி என்று குறிப்பிட்டதில் எந்தத் தவறும் இல்லை.

எங்களுக்கு வாய்ப்பு வழங்குங்கள் என்று இதுவரை நாம் கேட்டதில்லை. மாறாக அவர்கள் எங்களை அழைத்த போதும் அந்த மேடைக்கு நாங்கள் வரமாட்டோம் என்று தான் சொல்லி இருக்கின்றோம். பித்அத் செய்பவர்களையும் ஷிர்க் செய்பவர்களையும் மேடையில் ஏற்றும் ஜாக்கின் கொள்கைக்கு நேர் மாறாக, எங்கள் மார்க்கமேடையில் வேறு எவரையும் ஏற்றமாட்டோம் என்ற கொள்கையை கொண்டது தான் தவ்ஹீத் ஜமாஅத். பித்அத் செய்பவர்களையும் ஷிர்க் செய்பவர்களையும் ஜாக் மேடையில் ஏற்றியதற்கான ஆதாரம் தேவைப்படுமாயின் அதுவும் பகிரங்கமாக வெளியிடப்படும்.

ஜாக் வாதம்

மேலும் இப்தார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததும் JAQH நிர்வாகம் அல்ல. குமரி மாவட்ட ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாகத் தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நமது மறுப்பு 

இஃப்தார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது குமரி மாவட்ட ஐக்கிய ஜமாஅத் என்பதை நாமும் மறுக்கவில்லை. 

ஜாக் வாதம்

உண்மை இவ்வாறிருக்க வேண்டுமென்றே நமது அமைப்பை இதில் சம்பந்தப்படுத்தி வம்புக்கு இழுத்திருப்பது உணர்வு ஏட்டின் வாய்மை மற்றும் நேர்மையற்ற நிலைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு JAQH பேச்சாளர்கள் யாரும் அழைக்கப்படவுமில்லை. கலந்து கொள்ளவுமில்லை.

நமது மறுப்பு 

ஜாக் கலந்து கொள்ளவில்லை என்பது அல்லாஹ்வின் மீது அச்சமின்றி கூறும் அப்பட்டமான பொய்யல்லவா? ஜாக் பேச்சாளர்களின் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வராததலால் முழப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்க்கும் நீங்கள், உங்கள் ஆதரவுடன் பாட்டும் கூத்தும் நடக்கும் இஸ்லாமிக் சானலில் அந்தப் பூசணிக்காயை மறைக்காமல் விட்டு விட்டீர்களே? அந்தப் பள்ளியில் இமாமாக இருக்கும்
குலசேகரத்தைச் சார்ந்த சாகுல் ஹமீது என்பவர் ஜாக் பேச்சாளர் இல்லை என்கிறீர்களா? 

அல்லது கமாலுத்தீன் மதனியின் நிறுவனமாகிய கோட்டாறு ஜம்மிய்யாவில் ஃபஜர் தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு நடத்தி வருபவரும், ராஜீவ் காந்திக்கு சிலை வைக்க ஏற்பாடு செய்தவரும், ஜாக் சேவை மையத்தின் தலைவருமான மலுக்கு முதலியை ஜாக் பேச்சாளர் இல்லை என்கிறீர்களா?

நாம் இரண்டாவதாகக் குறிப்பிட்ட ஜாக் பேச்சாளரான முன்னாள் டி.எஸ்.பி மலுக்கு முதலியை நகர நிர்வாகியாகத் தேர்ந்தெடுத்த போது 'அவரைத் தேர்ந்தெடுக்காதீர்கள், இஸ்லாம் சிலை வணக்கத்திற்கு எதிராக இருக்கும் நிலையில் இவர் ராஜீவ் காந்திக்கு சிலை வைக்கும் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தவர், அதற்கு ஆதரவு காட்டுகிறார், பிறரது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அந்த மத வழிபாடுகளுக்கு உடன்படுகிறார், குத்து விளக்கு ஏற்றும் நிகழ்ச்சியில் பங்கெடுக்கிறார் எனவே அவரை நிர்வாகியாகத் தேர்வு செய்ய வேண்டாம் என்று மலுக்கு முதலியின் முன்னிலையிலேயே பொதுக்குழுவில் பலர் எதிர்த்த போதும் ஜாக் நிர்வாகம் அவரை தேர்ந்தெடுத்தது. அதனால் வெறுப்புற்று ஜாக்கில் ஆரம்ப காலம் தொட்டே செயல்பட்டு வந்த ஒருவர் ராஜினாமாவும் செய்தார். அந்த மலுக்கு முதலி ஜாக் பேச்சாளர் இல்லையா?

ஜாக் வாதம்

கடந்த தேர்தலில் 'அம்மா' வை எப்படியாவது ஆட்சிக் கட்டிலில் அமர்த்த வேண்டுமென்ற தாய்ப் பாசத்துடன் (?) கட்சித் தொண்டர்களையும் மிஞ்சும் அளவிற்கு ஊர் ஊராக தெருத் தெருவாக மைக் பிடித்து களமிறங்கி தேர்தல் பணியாற்றிய இவர்களுக்கு இப்தார் நிகழ்ச்சியில் அரசியல் வாதிகள் கலந்து கொண்டதை விமர்சிக்க என்ன யோக்கியதை இருக்கிறது?

நமது மறுப்பு 

கடந்த தேர்தலில் தமிழ் தெய்வத்தை எப்படியாவது ஆட்சிக் கட்டிலில் அமர்த்த வேண்டுமென்று உடன் பிறப்பே எனக்கூறி கட்சி தொண்டர்களையும் மிஞ்சும் அளவிற்கு ஊர் ஊராக, தெருத் தெருவாக மைக் பிடித்து களமிறங்கி தேர்தல் பணியாற்றி விட்டு எதுவுமே செய்யாதது போல் ஜூம்மா மேடைகளில் அல்லாஹ்வின் அச்சமின்றி ஜாக் பொய்யுரைத்ததைப் போல, தனது வேட்பாளருக்கு சீட் வேண்டும் எனக் கூறி தெருவில் இறங்கி ஜாக் ஆர்ப்பாட்டம் செய்ததைப் போல தவ்ஹீத் ஜமாஅத் எதையும் செய்திடவில்லை. ஒரு ஊரில் காங்கிரஸூக்கு வாக்களியுங்கள், மற்றொரு ஊரில் திமுகவில் எங்களுக்கு சீட் தாருங்கள், இன்னொரு ஊரில் கேடுகெட்ட தவ்ஹீத்வாதிகள் அரசியலில் ஈடுபடுகிறார்கள் என்று ஒரே நேரத்தில் பலவேசங்களைப் போட்ட ஜாக்கின் யோக்கியதையைக் கண்டு ஊரே சிரித்ததை யாரும் மறந்து விடவில்லை. 

ஜாக் வாதம்

அது சரி...! திருவாரூர் கொலைச் சம்பவத்திற்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளது என்று சொன்னால் இதை இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?அவ்வாறாயின் அதே அச்சமும் எச்சரிக்கை உணர்வும் கொஞ்சமாவது மற்றவர்கள் விஷயத்திலும் இருக்க வேண்டாமா?

நமது மறுப்பு 

அதை உங்கள் கூட்டாளிகள் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். பள்ளிவாசல்களில் அந்த அவதூறுகளைப் பரப்பிக் கொண்டு தானிருக்கின்றனர். அதற்கு நாம் நேரடி மறுப்புகளை வழங்குவோமே தவிர ஜாக்கை போன்று மாவட்டத்திற்கு மாவட்டம் எதிர்மறையாகப் பேசமாட்டோம்.

ஜாக் வாதம்
காதுக்கு வந்த செய்திகளையெல்லாம் ஊர்ஜிதம் செய்யாமல் வெளியிடுவது இஸ்லாமியப் பார்வையில் குற்றம் என்பது இவர்களுக்கு எப்படி தெரியாமல் போனது?

'கேள்விப்பட்ட செய்திகளையெல்லாம் வெளியிடுவதே ஒருவன் பொய்யன் என்பதற்கு போதுமான சான்றாகும்' என்பது நபி மொழியாகும் (முஸ்லிம்)

நமது மறுப்பு 

நிச்சயமாக கேள்விபட்டதையெல்லாம் சொல்பவன் பொய்யனே! அந்த வசனம் தங்களுக்கு எத்தனை அழகாக பொருந்திப் போகிறது கவனியுங்கள்! நாம் கேள்விப்பட்டதையோ காதுக்கு வந்த செய்திகளையோ வெளியிடவில்லை. களத்திற்கு நேரடியாகச் சென்று கண்ணால் கண்டு பதிவு செய்தவைகளைத் தான் வெளியிட்டுள்ளோம்.

'ஈமான் கொண்டவர்களே தீயவன் ஒருவன் உங்களிடம் செய்தி கொண்டுவந்தால் அதை தீர விசாரித்துக் கொள்ளுங்கள்' (இல்லையேல்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமூகத்துக்கு நீங்கள் தீங்கு செய்துவிடலாம் பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே வருத்தப்படுவீர்கள்' (அல் குர்ஆன் - 49:6)

தீயவன் கொண்டு வந்த செய்தியை தீர விசாரிக்காமல் மறுப்பு எனும் பெயரில் வெளியிட்டு விட்டீர்கள். இப்போது வருத்தப்படுகிறீர்கள். உடனடியாகத் தீர விசாரித்து ஜாக் பேச்சாளர்கள் அங்கு சென்றதை உறுதி செய்து தவறுக்கு வருந்தி உணர்வு வெளியிட்டது உண்மை தான் என்பதை இதே இணையத்தில் பதிவு செய்யுங்கள். அல்லாஹ்விடத்தில் தவ்பாச் செய்யுங்கள்.

ஜாக் வாதம்

எனவே காதுக்கு வந்தவற்றையேல்லாம் செய்தியாக்கி காசு பண்ணுவதை விட்டு விட்டு உணர்வு ஏடு பத்திரிக்கை தர்மத்தை மீறாமல் பார்த்துக் கொள்வது நல்லது என்று சொல்லி வைக்கிறோம்.

நமது மறுப்பு 

காதுக்கு வந்ததையும் கண்ட பத்திரிகைகளிலிருந்தும் சுட்டு  வெளியிடுவது அல் ஜன்னத்தின் பணியே தவிர உணர்வுக்குக்கென செய்தியாளர்கள் இருக்கிறார்கள். தங்களுக்கு தேவைப்படுமாயின் இன்னும் சில இஃப்தார் நிகழ்ச்சிகளில் ஜாக் பேச்சாளர்கள் கலந்து கொண்ட விபரங்களையும் அவர்கள் தருவார்கள் இன்ஷாஅல்லாஹ்.

நபிகள் பெருமானாருக்கே பிறந்த நாள் கொண்டாட அனுமதி இல்லாத போது தான் இமாமாக இருக்கும் அஷ்ரஃப் பள்ளியின் தலைவரான தைக்காசாகிப்,  கலைஞர் பிறந்த நாளில் கலந்து கொண்டதைக் கண்டிக்க முடியாமல் வருமானத்திற்காக மௌனமாக இருப்பவர் தான் ஜாக்கின் துணை தலைவர் செய்யதலி ஃபைஸி. 

இவர் இந்த ஷிர்க்கான செயல்களைக் கண்டிக்காமல் இருப்பதுடன் இது போன்ற செயல்களில் தானும் கலந்து கொள்கிறார். ஜாக் துணைத் தலைவரான இந்த செய்யதலி ஃபைஸி, மத நல்லிணக்கம் என்ற பெயரில் உருவப்படங்களுக்கு மத்தியில் கிறிஸ்து பிறப்பு விழாவில் கலந்து கொண்ட படங்கள் செய்தித் தாளில் வெளியாகி சந்தி சிரித்தது.

கமாலுத்தீன் மதனி நிறுவனமான கோட்டாறு ஜம்மிய்யாவில் இமாம் வராத நேரத்தில் தொழுகை நடத்துபவரும் குழந்தைகளுக்கு குர்ஆன் பாடம் சொல்லிக் கொடுப்பவருமான அப்துர் ரசாக் என்பவர், முதல்வர் கலைஞர் நாகர்கோவிலுக்கு வந்த போது ஆண்டவரே! என கலைஞருக்கு பேனர் வைத்தது, போன்ற ஜாக்கின் அருவருப்பான செயல்கள் நமது செய்தியாளர்களால் நேரடியாக அனுப்பப்பட்டவை. தேவைப்படுமாயின் அதையும் பகிரங்கங்கமாக வெளியிடுவோம். மறுக்கத் தயாரா? 

உணர்வு ஏட்டின் அவதூறுக்கு மறுப்பு என தலைப்பிட்டு ஜாக் வெளியிட்ட செய்தியில் விடுபட்ட ஒரு விஷயத்தையும் இங்கே நினைவூட்டுவது அவசியம். அதே உணர்வு ஏட்டில் 'தவ்ஹீத் ஜமாஅத்தினர்கள் எல்லோரும் குற்றவாளிகள், பாவிகள் என்று சொல்ற ஜாக்' எனும் ஒரு வரியும் இருந்ததே? அதை ஜாக் மறுக்காததேன்? ஒப்புக் கொண்டதாலா?

குறிப்பு : அழகிய முறையில் மறுப்பு வெளியிட்டிருந்தால் நாமும் அழகிய முறையில் விளக்கமளிப்போம். மாறாக அதில் கேலியும் கிண்டலும் அவதூறும் இருக்குமானால் நமது பதிலும் இவ்வாறே இருக்கும்.

நமது செய்தியாளர் மாஹீன்

 ஜாக் மீதுஉணர்வுஅவதூறு

Published on: September 27, 2010, 9:02 AM Views: 1884

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top