ஜாக் இமாமை டிஎன்டீஜேவினர் தாக்கினார

 ஜாக் இமாமை டிஎன்டீஜேவினர் தாக்கினார்களா

 தகவல் மாஹீன் முஹம்மத்
ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

டி.என்.டி.ஜே குண்டர்களைக் கைது செய், இவண் - ஜாக், தமிழ்நாடு
என்று நாகர்கோவிலில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

அரசியல் கட்சிகள் தான் இவ்வாறு போஸ்டர் ஒட்டுவார்கள், இவர்கள் ஏன் ஒட்டியிருக்கிறார்கள், அதுவும் கடையநல்லூரிலுள்ள பிரச்சனைக்காக இங்கு ஏன் ஒட்டுகிறார்கள் என விசாரித்த போது இவர்கள் இங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இவ்வாறு பிரச்சாரம் செய்கிறார்கள் என்று சிலர் சொன்னார்கள். காரணமென்ன என விசாரித்த போது கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் பள்ளியில் ஜாக் அமைப்பினருக்கும் டி.என்.டி.ஜே அமைப்பிற்கும் பிரச்சனை என்று சொல்லப்பட்டது. 

 போஸ்டர் ஒட்டி ஒரு அமைப்பைக் குற்றம் சொல்லுமளவிற்கு டி.என்.டி.ஜே என்ன செய்தது? அங்கு என்ன பிரச்சனை என்பதை அறிய நானும் எனது நண்பரும் வீடியோ காமிராவுடன் கடையநல்லூர் சென்றோம். நாங்கள் விஷயத்தைத் தெரிந்து கொள்ளும் நோக்கத்தில் சென்றதால் எந்த அமைப்பின் சார்பாகவும் செல்லவில்லை. அங்கு முதலாவதாக ஜாக் அமைப்பினரிடம் பேட்டி எடுத்தோம். பின்னர் ஊர் மக்களிடம் பேட்டி கண்டோம், தமுமுகவினரிடம் பேட்டி கண்டோம். டி.என்.டி.ஜேவினரிடம் பேட்டி கண்டோம்.

 முதலாவதாக ஜாக் அமைப்பினரிடம் பேட்டி எடுத்த போது, அந்தப் பள்ளியில் இமாமாக இருந்த அப்துல்லாஹ் உமரி, 'என்னை டி.என்.டி.ஜேயினர் அடித்தார்கள், கடுமையாகத் தாக்கினார்கள், பிளேடால் கிழித்தார்கள் நான் 22 நாட்கள் மருத்துவமனையில் கிடந்தேன்' என்று நம்மிடம் சொன்னார்.

 விஷயத்தைப் பெற்றுக் கொண்ட நாம் டி.என்.டி.ஜே மாநிலத் துணைத் தலைவராக இருந்த கடையநல்லூர்வாசியான எஸ்.எஸ்.யு.சைபுல்லாஹ் ஹாஜாவிடம், ஒரு இமாமை அடித்திருக்கிறீர்களே? பள்ளிவாசலில் தகராறு செய்திருக்கிறீர்களே? இது நியாயமா? எனக் கேட்டோம்.

அப்போது அவர், நாங்கள் யாரும் அவரை அடிக்கவில்லை என்று சொன்னார். நாங்கள் அப்துல்லாஹ் உமரியிடம் சென்றுவிட்டுத் தான் வந்திருக்கிறோம், டி.என்.டி.ஜேயினர் என்னைக் கடுமையாகத் தாக்கினார்கள், அடித்தார்கள், பிளேடால் கீறினார்கள், அதனால் நான் 22 நாட்கள் மருத்துவமனையில் கிடந்தேன் என்று கூறி உங்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளாரே இதற்கு உங்கள் பதிலென்ன என்று கேட்டோம்.

 அவர்கள் அவதூறு கூறுகிறார்கள், அதை அவர்கள் நிரூபிக்க வேண்டும். நாங்கள் அவரை அடிக்கவில்லை, பிளேடால் கீறவில்லை, அவரை எதுவும் செய்யவில்லை என்பதை நாங்கள் நிரூபிப்போம். நாங்கள் எங்கள் மனைவி மக்களுடன் வருகிறோம், அப்படி எதையும் செய்யவில்லை என்று கூறுகிறோம், உண்மையை நிரூபிக்கிறோம், அவரை வரச் சொல்லுங்கள், நாங்கள் அவரை அடித்தோம், பிளேடால் கீறினோம், அதனால் தான் அவர் ஆஸ்பத்திரியில் கிடந்தார் என்பதை அவர் கூறட்டும். அல்லாஹ்வின் சாபம் பெறக்கூடிய அந்த முபாஹலாவுக்கு அவர் தயாரா என்பதைக் கேட்டுச் சொல்லுங்கள் என்று சைபுல்லாஹ் ஹாஜா சொன்னார்.

 விஷயத்தைத் தெரிந்து கொண்டு ஊருக்குச் செல்ல இருந்த எங்களுக்கு வேலை அதிகமாகி விட்டது. இரவு அங்கேயே தங்கிவிட்டு மறு நாள் காலையில் மீண்டும் ஜாக் அமைப்பைச் சேர்ந்த அப்துல்லாஹ் உமரியிடம் சென்றோம். அவரிடம் சைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் சொன்னதைச் சொல்லி, நீங்கள் உண்மையை நிரூபிக்கத் தயாரா? முபாஹலாவுக்கு தயாரா? எனக் கேட்டோம்.

ஆனால் அதற்கு அவர், என்னைத் தொழவைக்க விடாமல் அப்துல் நாஸரை முன்னால் உட்கார வைத்தார்களா இல்லையா? என்னைத் தொழவைக்க விடாமல் தடுத்தது உண்மையா இல்லையா?

 என்று தான் திரும்ப திரும்ப சம்பந்தமில்லாமல் சொன்னாரே தவிர பிளேடால் அறுத்து 22 நாட்கள் மருத்துவமனையில் இருந்தது உண்மை அவர் கூறவில்லை.

அவர்கள் உங்களை அடித்தார்கள், பிளேடால் கீறினார்கள், 22 நாள் ஆஸ்பத்திரியில் கிடந்தேன் என்றல்லவா எங்களிடம் சொன்னீர்கள், அதை நிரூபிக்க அவர் முபாஹலாவுக்கு அழைக்கிறார். எனவே அதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள் என்று மீண்டும் நாங்கள் கேட்க அவர், என்னை அவர்கள் தொழக் கூடாது என்று சொல்லவில்லையா? தொழவிடாமல் தடுக்கவில்லையா? என்று தான் சொன்னார்.

 இறுதியாக அப்துல்லாஹ் உமரி, முபாஹலாவுக்கு நான் தயாரில்லை. முபாஹலா என்பதெல்லாம் வேஸ்ட். அது மக்களைத் திசை திருப்புவது. முபாஹலா, விவாத மேடை இவற்றிலெல்லாம் நமக்கு நம்பிக்கை கிடையாது. இவை மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு நாடகம். இதில் எந்த பிரயோஜனமும் கிடையாது. இது தேவையில்லாத விஷயம் என்று கூறி உண்மையை நிரூபிக்க மறுத்து விட்டார்.

 மேலும் நான் தான் அடாவடி செய்தேன் என்று அவரையும் அறியாமல் உண்மையை சொல்லி விட்டார். மவ்லவி அப்துந்நாஸரை நான் தொழவிடாமல் பின்னால் போகச் சொன்னேன். அவரிடம் இருந்து மைக்கைப் புடுங்கினேன் என்று அவரே வாக்குமூலம் தந்தார். 

 

நேரடியாக நாங்கள் சென்ற போது ஜாக் இமாமினால் உண்மையை நிரூபிக்க முடியவில்லை.

ஆனால் ததஜவினர் அராஜகம் செய்கிறார்கள் என்று கூறி இன்றுமு; ஜாக் அமைப்பினர் அவதூறுகளை பரப்பிக் கொண்டுதானிருக்கின்றனர். டி.என்.டி.ஜே குண்டர்களைக் கைது செய் என்று போஸ்டர் ஒட்டுவது, ஆர்.எஸ்.எஸ் காரர்கள் பள்ளியை இடித்தார்கள், ததஜவினர் பள்ளியை அபகரித்தார்கள் என்று அல்ஜன்னத்தில் கட்டுரை எழுதுவது, பொது மேடையிலே கேள்வி கேட்டு விடுவார்களே என பயந்து கேள்வி கேட்க இயலாத ஜூம்மா மேடையில் அவதூறு பிரச்சாரங்கள் செய்வது என எதுவும் நின்றபாடில்லை.

பரிசுத்தவான் கோவை.அய்யூப், ஒருபடி மேலே போய் கடையநல்லூர் பிரச்சனைக்காகவென்றே ஒரு சி.டி தயாரித்து அதில் அப்துல்லாஹ் உமரி பனியனைக் கிழித்துக் கொண்டு கிடக்கும் காட்சியைக் காட்டி ததஜவினரால் கடுமையாகத் தாக்கப்பட்ட இமாம் என்று பின்னணிக் குரலும் கொடுக்கின்றார். அதை பலவேசம்.காமும் தனது இணையத்தில் பெருமையுடன் போட்டுள்ளது. இன்றும் அதை சில ஏமாளிகள் மெயிலில் ஃபார்வேர்டு செய்து கொண்டுதானிருக்கின்றார்கள்.

 ஒரு வழக்கை பலப்படுத்துவதற்காகவும் பிறரிடம் அனுதாபம் பெறுவதற்காகவும் அரசியல் கட்சியினர் மருத்துவமனையில் படுத்துக் கொள்வார்கள். அப்துல்லாஹ் உமரியும் அதே தந்திரத்தைக் கையாண்டு, தாமாகவே பனியனைக் கிழித்துக் கொண்டு மருத்துவமனையில் படுத்துக் கொண்டுள்ளார் என்பது அன்று எங்களுக்குத் தெளிவானது.

 பணியனைக் கிழித்துக் கொண்டு போஸ் கொடுக்கும் ஜாக் இமாம். 

ததஜவினர் அடித்ததால் 22 நாள் மருத்துவமனையில் இருந்தேன் என்று பொய் கூறும் ஜாக் இமாமின் தரத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் மீது பயமின்றி பொய் கூறும் இவர்களை தவ்ஹீத்வாதிகள் என்று சிலர் குறிப்பிடுகின்றனர். உண்மையை நிரூபிக்க வராமல் முபாஹலாவுக்குத் தயாரில்லை எனக் கூறி ஓட்டமெடுக்கும் ஜாக் தாயிகளை இன்னமும் நம்புவதா?   

ஜாக் தாயியின் வாக்கு மூலம் வீடியோ

ஜாக் தாயியின் வாக்கு முலம் 2 வீடியோ

 பொய் கூறும் ஜாக் இமாம்அல்லாஹ்வின்நிரூபிக்க வராமல் முபாஹலாவுக்குதயாரில்லை

Published on: May 19, 2010, 7:58 PM Views: 1989

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top