ஜாக் பிரிவினை ஏன்

ஜாக் பிரிவினை ஏன்

தமிழகத்தில் தவ்ஹீத் எழுச்சி ஏற்பட்ட பின் முதன் முதலில் துவங்கப்பட்ட அமைப்பு அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக பீ.ஜைனுல் ஆபிதீன் தேர்வு செய்யப்பட்டார். சுமார் ஒரு வருட காலம் தலைவராகப் பணியாற்றிய பின் தலைமைப் பொறுப்பு பிரச்சாரப் பணிக்கு தடங்கலாக உள்ளதால் தலமைப் பொறுப்பிலிருந்து பீ.ஜைனுல் ஆபிதீன் விலகிக் கொண்டு கமாலுத்தீன் மதனியைப் பரிந்துரை செய்தார்.

கமாலுத்தீன் மதனியின் தலைமையில் ஜம்மிய்யது அஹ்லில் குர் ஆன் வல் ஹதீஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

எவ்வித பொறுப்பும் வகிக்காமல் பல ஆண்டுகள் பீ.ஜே ஜாக்கில் உறுப்பினராக இருந்து கொண்டு பிரச்சாரம் செய்து வந்தார். ஆனால் நாளடைவில் ஜாக் தடம் புரண்ட போது உள்ளே இருந்து போராடினார். பல தாயிகளும் ஜாக்கின் செயல்பாட்டில் மனம் வெதும்பினார்கள். திருந்தவே மாட்டார்கள் என்ற நிலை ஏற்பட்ட பின்பு தான் அனைது தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இது தான் பின்னர் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்தப்பிரிவினைகு காரணமான ஜாக் தன் தவறை மறைப்பதற்காக ஒரு வீடியோவை தயார் செய்து அவதூறு பரப்பிய போது அதற்கு பதிலளிக்கும் விதமாக நாம் ஐந்து குறுந்தகடுகள் தயாரித்தோம். ஆனால் அதை பொது மக்களுக்கு வழங்கக் கூடாது என முடிவு செய்தோம். அவதூறு பரப்புவதில் ஜாக் தான் முன்னிலை வகிப்பதால் இனி அதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சென்ற ஆண்டு முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தான் இதை வெளியிடுகிறோம்.ஜம்மிய்யது அஹ்லில்குர் ஆன்வல் ஹதீஸ்தவ்ஹீத் எழுச்சி

Published on: September 11, 2009, 6:25 PM Views: 4758

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top