ஜாகிர் நாயக்

நீங்கள் dr.சாகிர் நாயக் அவர்களை காபிர் என்று சொன்னதாக ஒரு தமுமுக சார்ந்த சகோதரர் கூறுகிறார் உங்கள் பதில் என்ன டாக்டர் சாகிர் நாயக் அவர்களை பற்றி உங்கள் கருத்து என்ன ?

எந்தத் தனி நபரைப் பற்றியும் குறிப்பாக ஜாகிர் நாயக்கைப் பற்றி காஃபிர் என்று நாம் கூறியதில்லை. மார்க்கம் தொடர்பாக அவரது பல நிலைபாடுகளில் நாம் மாறுபடுகிறோம்முஸ்லிமல்லாத மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்று அவர் பேசுகிறார். குர்ஆன் ஹதீஸில் இல்லாமல் பின்னர் உருவாக்கப்பட்டவை குறித்து கேள்வி கேட்டால் அதை நியாயப்படுத்த முடியாது என்பதால் இந்த நிலைபாட்டை எடுக்கிறார்.

ஆனால் பெரும்பாலான முஸ்லிம்கள் மத்ஹப். இஜ்மா கியாஸ் போன்றவற்றை ஆதரிப்பவர்களாக உள்ளதால் முஸ்லிம்களின் சபைகளில் இவற்றை நியாயப்படுத்தி பேசுகிறார். இது போன்ற இரட்டை நிலை மேற்கொள்வோரை நம்பக் கூடாது என்பதைப் பல சந்தர்ப்பங்களில் நாம் விளக்கியுள்ளோம்.

அது போல் அறிவுப்பூர்வமாக இஸ்லாத்தை விளக்குகிறேன் என்ற பெயரில் பல சந்தர்ப்பங்களில் தவறாகக் கூறி இருக்கிறார். உதாரணமாக والأرض بعد ذلك دحاها79:30 வசனத்தில் பூமியை இதன் பின் விரித்தான் என்று கூறப்படுகிறது. இந்த வசனத்தில் தஹாஹா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைப் பற்றி இவர் குறிப்பிடும் போது தஹா என்றால் முட்டை என்று பொருள். பூமி முட்டை வடிவில் இருப்பதை அன்றே குர்ஆன் கூறி விட்டது என்று கூறுகிறார்.

அரபு மொழி அறியாதவர்கள் ஆஹா ஓஹோ என்று இதைப் புகழ்வார்கள். இவர் கூறுகிறபடி தஹாஹாவுக்குப் பொருள் செய்தால் அதன் பின் பூமியை அவன் முட்டை என்று வரும். குர்ஆனைக் கேலிக் கூத்தாகுகிறார் என்று தான் அரபு மொழி அறிந்தவர்கள் கூறுவார்கள். தஹா என்பது வினைச் சொல்லாகும். அதன் பொருள் விரித்தான் என்பதாகும். வினைச் சொல்லுக்கு முட்டை என்று பொருள் கொள்வது அறியாமையாகும். இது போல் இவர் தப்பும் தவறுமாக எழுதியதைக் குறித்து சுமார் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் நெல்லை ஏர்வாடியைச் சேர்ந்த ஒரு பெரியவர் டாக்டர் பக்ருத்தீன் அவர்கள் என்னிடம் கேட்ட போது ஜாகிர் நாயக் தவறுகளைப் பட்டியல் போட்டு அவரிடமே விளக்கம் கேளுங்கள் என்று கூறினேன். ஆங்கிலப்புலமை உடைய அவர் ஆங்கிலத்த்தில் ஜாகிர் நாயக்கின் தவறுகளைச் சுட்டிக்காட்டி நேரடியாகக் கடிதம் எழுதினார். அதன் நகலையும் எனக்கு அனுப்பினார். ஆனால் ஜாகிர் நாயக்கிடமிருந்து பதில் வரவில்லை. மீண்டும் அந்தப் பெரியவர் நினைவூட்டல் கடிதம் எழுதியும் பதில் இல்லை என்று அவர் என்னிடம் தெரிவித்தார்.

(அப்பெரியவர் இதை வாசிக்க நேர்ந்து அந்தக் கடிதம் அவரிடம் இருந்தால் அனுப்பி உதவுமாறு வேண்டுகிறேன்.) அந்தப் பெரியவர் மூலம் சுட்டிக்காட்டப்பட்ட தவறுகள் உண்மையில் தவறுகள் அல்ல என்றிருந்தால் அதை ஜாகிர் நாயக் விளக்கி இருக்க வேண்டும். அல்லது நீங்கள் சுட்டிக்காட்டிய தவறுகளை இனிமேல் திருத்திக் கொள்கிறேன் என்று கூறி இருக்க வேண்டும்.

தவறை ஒப்புக் கொண்டால் தன் இமேஜ் பாதிக்கப்படும் என்று நினைப்பவர் மார்க்கத்தில் நம்பகமானவர் அல்ல என்று பல சந்தர்ப்பங்களில் அவரைப் பற்றி நான் விமர்சித்துள்ளேன்.

இதன் பின்னர் அவர் சென்னை வந்த போது அவருடைய முரண்பட்ட கருத்துக்கள் பற்றி அவருடன் விவாதிக்க முயன்ற போது அவர் மறுத்து விட்டார். இப்போதைய தமுமுக தலைவர், பொதுச் செயலாளர், இப்போது தமுமுகவின் மாநில நிர்வாகிகளில் ஒருவராக உள்ள ஜிப்ரீ காசிம் ஆகியோர் இதற்கு முயற்சித்தனர். ஆனால் இம்மூவரும் இப்போது இதை ஒப்புக் கொள்வார்களா மறுப்பார்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஜாகிர் நாயக் குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாகப் பேசியுள்ள பல விஷயங்கள் பற்றி நான் அவருடன் விவாதிக்கத் தயார் என்பதால் நீங்களே முயற்சித்துப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

மேலும் இயேசு இறை மகனா என்று நான் எழுதிய நூலை ஆங்கிலத்திலும் மொழி மாற்றம் செய்து வெளியிட்டேன். அந்த நூலை ஜாகிர் நாயக் சென்னை வந்த போது என் சார்பில் பாக்கர் மூலம் கொடுத்து அனுப்பினேன். இதன் பின்னர் ஆறு மாதம் கழித்து ஜாகிர் நாயக் சகோதரர் அல்லது உறவினர் பெயரில் இயேசு இறை மகனா என்பது குறித்து ஒரு நூல் ஜாகிர் நாயக் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டது. அது அப்படியே எனது நூலின் தழுவலாக இருந்தது. கிறித்தவ பாதிரியாருடன் விவாதிப்பதற்காக நான் ஆறு மாதம் உழைத்து திரட்டிய தகவல்களைத் தான் அந்த நூலில் குறிப்பிட்டிருந்தேன்.

அவர் வெளியிட்ட ஆண்டு என்ன? நான் எத்தனை வருடங்களுக்கு முன் வெளியிட்டேன் என்பதை ஒப்பு நோக்கும் எவரும் இந்த உண்மையை உறுதி செய்து கொள்ளலாம் சென்னையில் ஒருவர் தவ்ஹீத் போர்வையில் நூல் வெளியிடும் ஒருவர் மற்றவர்களின் நூல்களைக் காப்பி அடித்து வெளியிட்டு வருவதை பலரும் அறிவார்கள். அவரைப் போன்று இழிந்தவராக இவரும் இருக்கிறர் என்று நான் பேசியதுண்டு. அவரை காஃபிர் என்று பேசியதில்லை. இது துவக்கமாக உங்களுக்குத் தரப்படும் தகவல். ஜாகிர் நாயக் அவர்களின் எழுத்திலும் பேச்சிலும் உள்ள மார்க்க முரணான கருத்துக்களையும் அதுபோல் மக்களால் அறியப்பட்ட மற்றவர்களின் தவறான கருத்துக்களையும் அம்பலப்படுத்தவே என் முழு கவனத்தையும் இணைய தளத்தின் பக்கம் திருப்பியுள்ளேன

மற்றொரு நேயரின் கருத்து

ASSALAMU ALLAIKUM ANNAN PJ AVARGALE, SRILANKAVIL IHWAN JAMATHAI SERNTHA PALAR KOORUKIRAARGAL,DR.ZAKIR NAIK UNGALAI(PJ) DEBATE KU ALLAITHA THAAGAVUM APPOYHU NEENGAL(PJ) SONEERGALAAM AYYO UNGALUDAN DEEBATA ? ENNAKU MUDIYATHU, UNGALOODU PANNINNAL NAAN MAATIKKOLVEN MELUM ENNAKU ENGLISH THERIYATHU ENDRU THAPITHU VITEERGALAAM APPOTHU AVAR (ZAKIR NAIK) SONNERAAM PARAVAIILAI INDIAVIL ULLA PALA PERUKKU URUDU HINDI THERIYUM THAANE ANTHA MOLIYIL DEBATE PANNUVOUM APPOTHU NEENGAL(PJ) SONEERGALAAM ILLAI MUDIYATHU MUDIYATHU AVARODU DEBATE? NAAN THOLVI ADAIVEN ENDRU PAYANTHU NEENGAL PALTI ADITHEERGAL ENDRU YOOSUF AL QARLAAWI, HASSANUL BANNA, SEYED QUTUB PONDRAVALIN PAKTHA KODIGAL ENGALAI PAARTHU KELI SEIKERAARGAL. ITHU UNMAIYAA ? ENGALUKKU ITHU SAMBANTHAMAAGE POORANA VILLAKAM THARVUM. WASSALAM KM

இது போன்று சிலர் உளறுவது பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன். அவர்கள் ஜாகிர் நாயக்கை விவாதத்துக்கு ஒப்புக் கொண்டு சம்மதம் வாங்கச் சொல்லுங்கள். மொழி பெயர்ப்பாளரை நடுவில் வைத்துக் கொண்டால் மொழி ஒரு பிரச்சனை இல்லை பில்லி சூனியம் இஜ்மா கியாஸ், சஹாபாக்களைப் பின்பற்றுதல், மறைமுக மத்ஹப் ஆதரவு, அவரது இரட்டை நிலை, ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீன்டும் மீன்டும் ஜகாத் கொடுத்தல், குர்ஆன் ஹதீஸ் பற்றி அவருக்கு உள்ள அறியாமை உள்ளிட்ட அனைத்தைப் பற்றியும் விவாதிக்க பகிரங்கமாகவே அவருக்கு அறைகூவல் விடுகிறேன். மற்றவர்கள் விவாதிப்பதற்கு தயங்கலாம். நேரடிக் கேள்விகளுக்கு பதில் சொல்லி பல மேடைகளைச் சந்தித்தவருக்கு தயக்கம் தேவை இல்லை. அவரோ அவர் சார்பில் யாருமோ என்னை விவாதத்துக்கு அழைக்கவில்லை. நான் தான் அழைத்துக் கொண்டிருக்கிறேன்.

 

 

இன்னொரு நேயரின் கருத்து


ஜாகிர் நாயிக் சம்பந்தமான பல விமர்சனங்களை தங்களது இணையத்தளத்தில் நான் பார்க்க நேர்ந்தது. முஸ்லிமல்லாத மாற்று மத சகோதரர்களுக்கு அவர் செய்யும் தஃவா நிகழ்ச்சிகளில் ஒருசிலதை நானும் பார்த்ததுண்டு. என் உள்ளம் கவர்ந்த அழைப்பார்களுள் அவரும் ஒருவராயிருந்தார் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் தங்கள் இணையத்தளத்தில் அவர் சம்பந்தமான விமர்சனங்களைப் பார்த்ததிலிருந்து அவரது கொள்கைகள் என்ன, இஸ்லாம், தவ்ஹீத் சம்பந்தமாக அவரது நிலைப்பாடு என்ன? ஹதீஸ் கலை சம்பந்தமாக அவருக்கிருக்கும் ஞானம் எவ்வளவு? தூய வஹியான அல்குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் ஆகிய இரண்டையும் மாத்திரம் பின்பற்றும் ஒருவரா இந்த ஜாகிர் நாயிக்? என்று கடந்த சில நாட்களாக நான் தேடிப் பார்த்தேன்.

உண்மையில் ஆன்லைன்பீஜே.காம் இணையத்தளம் ஜாகிர் நாயிக்கைப் பற்றிக் கூறியிருப்பது முற்றிலும் உண்மையென்றே இப்பொழுது தோன்றுகிறது. மன்ஹஜ் (Methadology) என்றும், ஸஹாபாக்களைப் பின்பற்றலாம் என்றும், மார்க்கத்தில் வளைந்து கொடுத்துக் கொண்டும் உள்ள ஸலபுகளின் கூட்டத்தினர் கூட தமது இணையத்தளங்களில் ஜாகிர் நாயிக்கைப் பற்றி 'இஸ்லாத்தின் அடிப்படை அறிவில் கூடத் தெளிவில்லாதவர்', 'இடத்துக்கிடம் மாற்றிப் பேசுபவர்', 'பகட்டையும், ஆடம்பரத்தையும் நாடக் கூடியவர்', 'குர்ஆன் வசனங்களுக்குத் தப்புத் தப்பாக விளக்கம் கொடுக்கக் கூடியவர்', எல்லாவற்றுக்கும் மேல் 'ஆபத்தானவர்' என்றெல்லாம் பகிரங்கமாக விமர்சித்திருப்பதைப் பார்க்க முடிந்தது.

(பார்க்க:
http://www.salafitalk.net/st/viewmessages.cfm?Forum=9Topic=2538,
http://www.salafitalk.net/st/viewmessages.cfm?Forum=19Topic=2478,
http://www.salafitalk.net/st/viewmessages.cfm?Forum=8Topic=4240
)

மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் எனது நுனிப்புல் மேயும் தேடலின் போது சிக்கியவை. இது சம்பந்தமாக இன்னும் ஆழமாக ஆராய ஆரம்பித்திருக்கிறேன். இன்ஷா அல்லாஹ் அவற்றையும் முடித்த பின் இன்னும் வலுவான ஆதாரங்களோடு நான் மீண்டும் ஒருமுறை எனது கருத்தை அனுப்புகிறேன் பிரசுரிப்பீர்களா?

தூய இஸ்லாத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், யாருக்கும் வளைந்து கொடுக்காமல், தனக்கென்று ஒரு கருத்தும், பிறருக்கென்று வேறொரு கருத்தும் என்ற இரட்டைப் போக்கில்லாமல், அல்லாஹ்வைத் தவிர எவனுக்கும் அஞ்சாமல், தன்னைத் தவறென்று கண்டுவிட்டால், சிறுவனிடமாயிருந்தாலும் தாழ்மையோடு ஒப்புக்கொள்ளத் தயங்காமல் நடந்து கொள்ளும் தங்களது எளிiமாயன, அப்பழுக்கற்ற போக்கு தான் உலகிலுள்ள ஒட்டுமொத்த உலமாக்களை விட உங்களையும், உங்கள் ஜமாஅத்தையும் என் உள்ளத்தில் ஒரு படி உயர்த்தி வைத்திருக்கிறது. அந்த உணர்வின் வெளிப்பாடு தான் எனது இந்தக் கருத்து.
வஸ்ஸலாம்.
Sadath
Chilaw - Sri Lanka

 

 ஜாகிர் நாயக்கின் அறியாமை
 

இஸ்லாத்தில் இல்லாததை இஸ்லாம் போல் சித்தரிக்கும் ஜாகிர் நாயக்கின் அரியாமையை அறிந்திட

 

 

 

ஏர்வாடிப் பெரியவர் யார்

 

   அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். டாக்டர் ஜாகிர் நாயக் குறித்து நெல்லை மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த ஒரு பெரியவர் என்னிடம் கேள்வி கேட்டது பற்றியும், அப்போது ஜாகிர் நாயக்கின் கருத்துக்கள் பல தவறாக உள்ளன என்பதை அப்பெரியவருக்கு எழுதியதையும் இது குறித்து ஜாகிர் நாயக்கிடம் விளக்கம் கேட்குமாறு நான் அந்தப் பெரியவருக்கு கடிதம் எழுதியதையும் குறிப்பிட்டிருந்தேன். அந்தப் பெரியவர் யார் என்பது மறந்து விட்டது என்று நான் குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால் இது குறித்து சில விமர்சகர்கள் கேள்விகளை எழுப்பினார்கள்.

நான் பொய்யான தகவலைக் கூறுகிறேன் என்று அவர்கள் கருதினார்கள். என்னைப் பொருத்தவரை நான் கூறியது உண்மை என்றாலும் அதற்கான ஆதாரத்தை என்னால் எடுத்து வைக்க முடியாத போது அவர்கள் அதை நம்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்களுக்கு என் கூற்றில் நம்பிக்கை இல்லாததால் நான் கூறுவது பொய் என்று அவர்கள் கருதினால் அது அவர்களைப் பொருத்த வரை சரியானது தான்.

அதன் பின் அந்தப் பெரியவர் யார் என்பதைக் கண்டு பிடிக்க நான் பல வகையிலும் முயற்சி செய்தேன். பலனில்லை. அல்லாஹ்வின் அருளால் அந்தப் பெரியவர் யார் என்பது இப்போது தெரிந்து விட்டது. அந்தப் பெரியவர் தாமே இது குறித்த விபரங்களை எனக்கு அனுப்பியுள்ளார். அந்தப் பெரியவர் டாக்டர் கே.எம். ஷம்ஸுத்தீன் ஷாஃபி ஆவார்.

அவர் எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்ட முக்கிய விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புச் சகோதரர் மதிப்பிற்குரிய பீ.ஜே.அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். (வரஹ்)

நான் தங்களுக்கு 2002 ஆம் ஆண்டு ஒரு தபால் எழுதி எனது ஐய்யங்களுக்கு விபரம் அளிக்குமாறு வேண்டினேன்.

தாங்களும் விபரமாக பதில் எழுதி எனக்கு அனுப்பி வைத்தீர்கள்.

தாங்கள் ஆன்லைன்.பீஜே.காம் அறிவிப்பு செய்திருப்பதை ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றும் எனது 2வது மருமகன் n.m. பீர் முஹம்மது M.Sc, MEd, M.phil அவர்கள் அதைப் பார்த்து விட்டு ஏர்வாடியைச் சேர்ந்த தவ்ஹீதுப் பெரியவர் என்பது நானாகத் தான் இருக்க முடியும் என்று எண்ணி எனக்குத் தெரியப்படுத்தினார்கள். அத்துடன் ஏர்வாடி டிஎண்டிஜே யைச் சேர்ந்த m.a.k.முகைதீன் அவர்களும் என்னைத் தொடர்பு கொண்டார்.

இதன் பின்னர் ஃபைல்களை நான் தேடிப் பார்த்ததில் தங்களுக்கு நான் எழுதிய தபாலின் நகல் கிடைத்து விட்டது. ஆனால் தாங்கள் எனக்கு அனுப்பிய விபரமான பதில் தபால் கிடைக்கவில்லை.

இத்துடன் அந்தத் தபாலை அனுப்பியுள்ளேன்.

500 கிராமுக்கு அதிகமான எடை உள்ள பொருளை தூக்கக் கூடாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளதால் உங்கள் தமிழாக்கத்தை படிக்க முடியவில்லை. அதைச் சிறிய பைண்டிங்குகளாக ஆக்கினால் நான் படிக்க முடியும்.
இப்படிக்கு
அன்புள்ள
k.m.s.shaafi

இவ்வாறு அந்தப் பெரியவர் எழுதி நான் அவருக்கு எழுதிய கடிதத்தின் நகலையும் அனுப்பியுள்ளார்.

இதற்கு நான் எழுதிய விரிவான பதிலில் தான் ஜாகிர் நாயக் கூறுவது குர் ஆன் ஹதீஸுக்கு முரணானது என்பதை விளக்கி அவரிடமே விளக்கம் கேட்குமாறு எழுதினேன்.

அந்தக் கடிதம் இது தான்.

 

இன்ஷா அல்லாஹ் ஜாகிர் நாயக்கின் தவறுகளைச் சுட்டிக் காட்டி அந்தப் பெரியவர் வழியாக நான் எழுதிய கடிதமும் கிடைக்க துஆ செய்கிறேன்.
பீ.ஜைனுல் ஆபிதீன்

 

மற்றொரு நேயரின் நேரடி ரிப்போர்ட்

அன்புள்ள சகோதர்களுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும்.ஜாகிர் நாயக்கையும் அவரது அமைப்பையும் தூக்கிப் பிடிக்கும் சகோதர்களுக்கு நான் அங்கே கண்ட நிலையைத் தெரிவிக்கின்றேன். இரண்டு வாரங்களுக்கு முன் நான் மும்பை சென்றிருந்த போது நானும் ,என் உறவினரும் ஜாகிர் நாயக்கின் அமைப்பான IRF க்கு சென்றிருந்தோம் .அன்று ஜாகிர் நாயக் இல்லாததால் அவருக்கு பதிலாக நிசார் நாதியாவாலா என்பவர் கேள்வி பதில் நிகழ்ச்சியினை நடத்தினார். அப்போது நாம் இணை கற்பிக்கும் இமாமை பின்பற்றலாமா என்ற கேள்வியை கேட்டோம் . அதற்கு அவர் பதிலளிக்கையில் ஜூம்மா தொழுகை தவறிவிடும் என்றிருந்தால் இணை கற்பிக்கும் இமாமை பின்பற்றலாம் என்ற தீர்ப்பைக் (?) கூறினார். இணை கற்பிப்பவரை எப்படி தொழுகையில் நம் தலைவராக ஏற்று கொள்வது என்று கேட்டதற்கு அவரை தலைவராக ஏற்று கொள்ளாதீர்கள்,ஆனால் அவருக்குப் பின்னால் தொழலாம் என்றார். அடுத்து திருமணத்தைப் பற்றிய அவர்களின் நிலைபாட்டினைக் கேட்க முயன்ற போது நேரம் முடிந்துவிட்டது என்றார்கள். எனவே அவரைத் தனியாகச் சந்தித்து ஆடம்பரமாக நடக்கும் திருமணத்திலே கலந்து கொள்ளலாமா என்று கேட்டோம்.அதற்கு அவர் தாராளமாக கலந்து கொள்ளலாம் என்றார்.அப்போது நாம் தீமையைக் கண்டால் மனதால் வெறுத்து ஒதுங்குவது தான் ஈமானின் குறைந்த நிலை என்ற ஹதீஸைக் கூறினோம்.அதற்கு அவர் மனதால் வெறுத்து ஒதுங்குவது என்பது புறக்கணிப்பது அல்ல,அங்கே இருந்து கொண்டே வெறுக்கலாம் என்று கூறினார். அன்று மதியம் அங்கே இருந்த லைப்ரரிக்குச் சென்றோம்.அப்போது அங்கே பணிபுரியும் மதனி ஒருவர் எங்கள் முன் அமர்ந்திருந்தார். அவரிடம் காலையில் நாம் கேட்ட இரண்டு கேள்விகளையும் கேட்டோம்.அதற்கு அவர் நிச்சயமாக இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றி தொழக் கூடாது.ஆடம்பரமாக நடக்கும் திருமணத்திலும் கலந்து கொள்ளக் கூடாது என்றார்.அப்போது நாம் அவரிடம் காலையில் நாம் இந்த கேள்விகளைக் கேட்ட போது பதிலளித்தவர் அளித்த பதிலையும் கூறினோம். அதற்கு அந்த மதனி கூறினார் நீங்கள் கேட்ட கேள்வி ஒரு வேளை அவருக்குச் சரியாக விளங்கியிருக்காது,அது மட்டுமல்லாது அந்தச் சபையில் பலதரப்பட்ட மக்களும் இருப்பார்கள்.ஆகவே நாம் இப்போது நமக்கிடையே கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதைப் போல் மக்களிடையே சொல்ல முடியாது என்றார். இத்தனைக்கும் அந்த சபையில் முப்பது பேர்களுக்கு உள்ளாகத் தான் இருந்தார்கள்.அவர்களில் இருபத்தைந்து பேர்களுக்கு மேற்பட்டவர்கள் தர்கா வழிபாடு தவறு என்ற கருத்து உடையவர்களாகத் தான் இருந்தார்கள். அவர்களின் லைப்ரரியில் உள்ள தமிழ்ப் பகுதிக்கு பீஜே அவர்களின் திருக்குர்ஆன் மொழிப்பெயர்ப்பை அன்பளிப்பாக அளித்து விட்டு தமிழகத்திலே மக்களுக்கு அஞ்சாமல் சத்தியத்தை எடுத்து கூறும் மார்க்க அறினர்களை தந்த அல்லாஹு ரப்புல் ஆலமீனுக்கு நன்றி செலுத்தியவர்களாக வீடு திரும்பினோம்.

 

Admin Rpl ? va alaikumus salam ஆடம்பரத் திருமணத்தில் கலந்து கொள்வது குறித்தும் இணை கற்பிப்பவரின் பின்னால் தொழலாமா என்பது குறித்தும் ஜாகிர் நாயக்கின் கருத்தை அவரது எழுத்து, மற்றும் பேச்சு ஆதாரம் வைத்திருப்பவர்கள் அனுப்பி வைத்தால் அது குறித்து நம் கருத்தைக் கூற முடியும்.ஸ்லிம்கள்மத்ஹப். இஜ்மா கியாஸ்இரட்டை நிலை மேற்கொள்வோரைநம்பக் கூடாது என்பதைப்பல சந்தர்ப்ப

Published on: September 10, 2009, 6:50 AM Views: 11035

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top