ஏர்வாடிப் பெரியவர் யார்

 

ஏர்வாடிப் பெரியவர் யார்
அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். டாக்டர் ஜாகிர் நாயக் குறித்து நெல்லை மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த ஒரு பெரியவர் என்னிடம் கேள்வி கேட்டது பற்றியும், அப்போது ஜாகிர் நாயக்கின் கருத்துக்கள் பல தவறாக உள்ளன என்பதை அப்பெரியவருக்கு எழுதியதையும் இது குறித்து ஜாகிர் நாயக்கிடம் விளக்கம் கேட்குமாறு நான் அந்தப் பெரியவருக்கு கடிதம் எழுதியதையும் குறிப்பிட்டிருந்தேன். அந்தப் பெரியவர் யார் என்பது மறந்து விட்டது என்று நான் குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால் இது குறித்து சில விமர்சகர்கள் கேள்விகளை எழுப்பினார்கள்.

நான் பொய்யான தகவலைக் கூறுகிறேன் என்று அவர்கள் கருதினார்கள். என்னைப் பொருத்தவரை நான் கூறியது உண்மை என்றாலும் அதற்கான ஆதாரத்தை என்னால் எடுத்து வைக்க முடியாத போது அவர்கள் அதை நம்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்களுக்கு என் கூற்றில் நம்பிக்கை இல்லாததால் நான் கூறுவது பொய் என்று அவர்கள் கருதினால் அது அவர்களைப் பொருத்த வரை சரியானது தான்.

அதன் பின் அந்தப் பெரியவர் யார் என்பதைக் கண்டு பிடிக்க நான் பல வகையிலும் முயற்சி செய்தேன். பலனில்லை. அல்லாஹ்வின் அருளால் அந்தப் பெரியவர் யார் என்பது இப்போது தெரிந்து விட்டது. அந்தப் பெரியவர் தாமே இது குறித்த விபரங்களை எனக்கு அனுப்பியுள்ளார். அந்தப் பெரியவர் டாக்டர் கே.எம். ஷம்ஸுத்தீன் ஷாஃபி ஆவார்.

அவர் எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்ட முக்கிய விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புச் சகோதரர் மதிப்பிற்குரிய பீ.ஜே.அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். (வரஹ்)

நான் தங்களுக்கு 2002 ஆம் ஆண்டு ஒரு தபால் எழுதி எனது ஐய்யங்களுக்கு விபரம் அளிக்குமாறு வேண்டினேன்.

தாங்களும் விபரமாக பதில் எழுதி எனக்கு அனுப்பி வைத்தீர்கள்.

தாங்கள் ஆன்லைன்.பீஜே.காம் அறிவிப்பு செய்திருப்பதை ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றும் எனது 2வது மருமகன் n.m. பீர் முஹம்மது M.Sc, MEd, M.phil அவர்கள் அதைப் பார்த்து விட்டு ஏர்வாடியைச் சேர்ந்த தவ்ஹீதுப் பெரியவர் என்பது நானாகத் தான் இருக்க முடியும் என்று எண்ணி எனக்குத் தெரியப்படுத்தினார்கள். அத்துடன் ஏர்வாடி டிஎண்டிஜே யைச் சேர்ந்த m.a.k.முகைதீன் அவர்களும் என்னைத் தொடர்பு கொண்டார்.

இதன் பின்னர் ஃபைல்களை நான் தேடிப் பார்த்ததில் தங்களுக்கு நான் எழுதிய தபாலின் நகல் கிடைத்து விட்டது. ஆனால் தாங்கள் எனக்கு அனுப்பிய விபரமான பதில் தபால் கிடைக்கவில்லை.

இத்துடன் அந்தத் தபாலை அனுப்பியுள்ளேன்.

500 கிராமுக்கு அதிகமான எடை உள்ள பொருளை தூக்கக் கூடாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளதால் உங்கள் தமிழாக்கத்தை படிக்க முடியவில்லை. அதைச் சிறிய பைண்டிங்குகளாக ஆக்கினால் நான் படிக்க முடியும்.
இப்படிக்கு
அன்புள்ள
k.m.s.shaafi

இவ்வாறு அந்தப் பெரியவர் எழுதி நான் அவருக்கு எழுதிய கடிதத்தின் நகலையும் அனுப்பியுள்ளார்.

இதற்கு நான் எழுதிய விரிவான பதிலில் தான் ஜாகிர் நாயக் கூறுவது குர் ஆன் ஹதீஸுக்கு முரணானது என்பதை விளக்கி அவரிடமே விளக்கம் கேட்குமாறு எழுதினேன்.

அந்தக் கடிதம் இது தான்.

 

 

 

இன்ஷா அல்லாஹ் ஜாகிர் நாயக்கின் தவறுகளைச் சுட்டிக் காட்டி அந்தப் பெரியவர் வழியாக நான் எழுதிய கடிதமும் கிடைக்க துஆ செய்கிறேன்.
பீ.ஜைனுல் ஆபிதீன்ஏர்வாடிப்பெரியவர்டாக்டர் கே.எம். ஷம்ஸுத்தீன் ஷாஃபி ஆவார்

Published on: December 20, 2009, 10:22 AM Views: 3504

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top