Youtube - விமர்சனமும் விளக்கமும்

Youtube ல் அப்லோடு செய்யப்பட்டுள்ள தனது வீடியோக்களை நீக்குமாறு பி.ஜே அவர்கள் கூறி இருந்தார்கள். இதை பலரும் ஏற்றுக் கொண்டு வீடியோக்களை நீக்க ஆரம்பித்து வருகின்றனர்.  அல்ஹம்துலி்ல்லாஹ்.

எனினும்  சிலருக்கு
இந்த முடிவு குறித்து பின்வரும் கேள்விகள் எழுந்துள்ளது.

1.மாற்று ஏற்பாடு இல்லாமல் Youtube வீடியோக்களை நீக்க சொல்வது சரியா ? எப்படி நாம் உரைகளை கேட்பது?

2.Youtube இல்லை என்றால் எதுவும் இல்லை, உலகமே இன்று Youtube ல் தான் உள்ளது. Youtube ஆ இதை தயாரித்து  வெளியிட்டுள்ளது? யாரோ ஒருவன் அப்லோடு செய்துள்ளான்.  Youtube என்ன செய்யும் பாவம்? எப்படி அனைத்து வீடியோக்களையும் Youtube நீக்க முடியும் ? அது தான் சாம் பாசைல் போட்ட வீடியோவை நீக்கி விட்டதே? பிறகு ஏன் இந்த முடிவை நாம் எடுக்க வேண்டும்?

3.இந்த திரைப்படத்தை யாருமே கண்டு கொள்ளவில்லை. நாம் தான் தேவையில்லாமல் ஆர்ப்பாட்டம் செய்து பெரிதாக்கி விட்டோம். நாம் பெரிதாக்கி விட்டு Youtube  ஐ காரணம் காட்டி இந்த முடிவு எடுத்தது சரியா?

மேற்கண்ட கேள்விகளை விமர்சனங்களாக கூறி வருகின்றனர்.

முதல் விமர்சனத்திற்கு விளக்கம்

நமது இணையதளத்தை பார்த்து அதிலிருந்து பதிவிறக்கம் செய்து தான் அனைவரும் Youtube ல் அப்லோடு செய்து வைத்துள்ளனர்.

ஆனால் Youtube க்கு மாற்று ஏற்பாடு செய்யவில்லை எனக் கூறி,  Youtube ல் இருந்து வீடியோக்கள் நீக்கப்பட்டால் நமது வீடியோக்களை யாரும் பார்க்க முடியாது  அது பலரையும் சென்றடையாது என்ற கருத்தில் கூறவது சரியல்ல.

யாரேல்லாம் Youtube ல்  அப்லோடு செய்துள்ளார்களோ அவர்கள் அனைவரும் நமது ஆன்லைன்பிஜே இணையதளத்தை பார்த்து அதிலிருந்து  தான் எடுத்து போட்டுள்ளனர் என்பதை அவர்கள் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

எனவே Youtube ல் இருந்து நமது வீடியோக்களை நீக்குவதினால் நமது வீடியோக்கள் மக்களை சென்றடைவதில் அவர்கள் குறிப்பிடுவது போன்று எந்த பிரச்சனையும் இருக்காது.

குறிப்பாக நாம் ஆடியோ வீடியோ மொபைல் என மூன்று பார்ட்மட்டுகளில் உரைகளை வெளியிடுவதால் பிரச்சனை வர வாய்ப்பில்லை. மொபைல், கணிணி மற்றும்  MP3 ப்ளேயர் என அனைத்து தரப்பினரையும் சென்றடைகின்றது.

எனினும் Youtube ஐ ஒப்பிடும் போது வீடியோக்களை பார்ப்பதில் தொழில் நுட்பம் சார்ந்த கூடுதலான  சில வசதிகள் நமது இணையதளத்தில் இல்லாமல் இருக்கலாம்.

இவைகள் கூடுதலான வசதிகளே தவிர விடியோக்களை பார்ப்பதிலோ அவைகள் பலரையும் சென்றடைவதிலோ எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தாது.

நமது மக்கள் வீடியோ விற்கு Youtube link ஐ கொடுத்தே பலகி விட்டனர். அதை ஒரு பேசனாக கருதுகின்றனர். அதை மாற்றி நமது இணையதளத்தின் இணைபை கொடுக்க அவர்களை தூண்ட வேண்டும்.

தேவைப்பட்டால் நமது இணையதளத்திலேயே Youtube ல் உள்ள வசதிகள் கொண்ட தனி வீடியோ இணையதளத்தை துவங்கிக் கொள்ளலாம். பொதுமக்களே அதில் அப்லோடு செய்து கொள்ளுமாறும் செய்து கொள்ளலாம்.

இரண்டாவது விமர்சனத்திற்கு விளக்கம்

இரண்டாவதாக, சிலர் Youtube இல்லை என்றால் எதுவுமே இல்லை. வீடியோக்களை நாம் எப்படி பார்ப்பது? பாவம் Youtube என்ன செய்யும் ? வீடியோவை தான் நீக்கி விட்டதே? ஏன் நீங்கள் தவறான முடிவு எடுத்தீர்கள் ? என்ற கருத்தில் விமர்சிக்கின்றனர்.

Youtube ஐ போன்று ஏராளமான Video sharing இணையதளங்கள் உள்ளன, Youtube ல் உள்ள அனைத்து வசதிகளும் அவைகளிலும் உள்ளது என்பதை முதலில் அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த இன்டர்நெட்டும் Youtube இடம் தான் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது எனக் கூறுவது சரியல்ல

Youtube நிறுவனம் நன்கு விளம்பரம் செய்கின்றது, Search Engine, Google ல் பொதுமக்கள் தேடும்  போது அவனது Youtube வீடியோக்களுக்கே முன்னுரை கொடுத்து  முதலி்ல் காட்டப்படுகின்றது,

கண்ட கருமாந்திரத்தையும் freedom of express என்ற பெயரில் போட அனுமதிக்கின்றது. அதனால் Yotube பலரவலாக பயன்படுத்தப்படுகின்றது.

சைனாவில்  Google, Youtube க்கு இன்று வரை முழு  தடை உள்ளது.

ஜனத் தொகையில் முதல் இடத்தில் உள்ள அவர்கள் எப்படி வாழ்கின்றார்கள்? அவர்கள்  வளர்ச்சியில்
என்ன குறைந்து விட்டார்கள்? நாம் பயன்படுத்தும் எல்லா  பொருட்களிலும் made in china என்று தான் உள்ளது.

எனவே Youtube இல்லை என்றால் எதுவே இல்லை என்று கூறுவது தவறு.

அடுத்து Sam Basile போட்ட வீடியோவை நீக்க விட்டதாக கூறியுள்ளனர். அந்த வீடியோ நீக்கப்படவில்லை ஒரு சில இஸ்லாமிய மற்றும் இந்தியா இந்தோனேசியா போன்ற நாடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை அமெரிக்க நாட்டு ஐபி மாற்றி இந்தியாவில் எடுக்கப்பட்ட screen shot கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவிற்கு இன்று காலை வரை கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

இந்த கருத்தை விமர்சனம் செய்பவர்கள் வசிக்கும் நாட்டில் அந்த வீடியோ நிறுத்தப்பட்டுள்ளது. அதை பார்த்து விட்டு சாம் பாசைல் என்பன் போட்ட வீடியோவை கூகுள் முழுவதுமாக நீக்கி விட்டது என தவறாக புரிந்துள்ளார்கள்.

ஒபாமா சொல்லியே  நீக்க மாட்டேன்னு சொல்லிட்டான் இந்த கூகுள் காரன். பிறகு எப்படி இவர்கள் நீக்கி விட்டாக கூறுகின்றார்களே தெரியவில்லை.

அந்த வீடியோவை நீக்க மறுத்ததோடுமட்டுமல்லாமல்
”விதிமுறைக்கு உட்பட்டு தான் இருக்கின்றது” என அப்பட்டமான பொய்யையும் கூகுள் கூறியது நினைவிருக்கலாம்.

இது ஏதோ எதார்ச்சையாகவோ அல்லது கூகுளை மீறியோ நடந்த செயல் அல்ல.

நூற்றுக்கணக்கான பெயர்களில் இன்னமும் அந்த வீடியோக்கள் Youtube ல் இடம் பெற்றுள்ளன.

இந்தியாவில் நிறுத்தப்பட்ட வீடியோவை ஒரு வார காலத்திற்கு மேலாக முகப்பிலேயே வைத்திருந்தது இந்த Youtube.

கூகுள் நினைத்தால் ஒரே program commend ல் நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தும் அனைத்து வீடியோக்களையும் நீக்க முடியும் மேலும் அதை பதிவேற்றம் செய்யாமல் தடுக்க முடியும்.

ஆனால் உலகம் முழுவதும் இவ்வளவு பெரிய அளவில் எதிர்ப்புகள் வெடித்தும் வேண்டுமென்றே அந்த வீடியோவை பரப்பி வருகின்றது Youtube.

picture ஐ அனலைஸ் செய்யும் தொழில் நுட்பத்தை கூகுள் பல இடங்களில் பயன்டுத்துகின்றது. அதை வைத்து இதை தடுப்பதும் நீக்குவதும் அவர்கள் விமர்சிப்பது போன்று google க்கு முடியாத விசயமல்ல.

Youtube ஐ நிறைய நபர்கள் பார்க்கின்றார்கள் , பயன்படுத்துகின்றார்கள் என்பதற்காக அவன் செய்யும் அயோக்கியத்தனத்தையும் அக்கிரமத்தையும் பொறுத்துக் கொண்டு Youtube ல் நமது விடியோக்களை பதிவேற்றம் செய்து ஊக்கப்படுத்துங்கள் என்று சொல்வது நியாமல்ல.

மாற்று கருத்துடைய முஸ்லிம்கள், மற்றும் பிறசமய சகோதரர்கள்  நிறைய நபர்கள் Youtube பார்க்கின்றார்கள், அவர்கள் இஸ்லாம் குறித்து தேடும் போது அவர்களுக்கும் தூய இஸ்லாம் குறித்த கருத்துக்கள் சென்றடைய வேண்டும் என்ற கருத்து வழுத்தால் (வழுத்தால் மட்டுமே) பின் வருமாறு வேண்டுமானால் செய்து கொள்ளலாம்.

அந்த அந்த தலைப்புகளை குறிப்பிட்டு, வீடியோவை பார்க்க description ஐ பாருங்கள் என வெறும் படத்தை மட்டும் Youtube ல் போட்டு description ல் அந்த வீடியோவிற்குரிய நமது இணையதளத்தின் இணைப்பை கொடுத்துக் கொள்ளலாம்.

இதை பார்த்து நமது இணையதளத்திற்கு வருபவர்கள் அந்த குறிப்பிட்ட விசயத்தை தெரிந்து கொள்வதோடுமட்டுமல்லாமல் நமது இணையதளத்தில் உள்ள மற்ற ஏனைய மார்க்க விசயங்களையும் அறிந்து கொள்வார்கள்.

பின்னர் Youtube க்கு செல்லாமல் மார்க்க விசயங்களை தெரிந்து கொள்ள நமது இணையதளத்திற்கு வர ஆரம்பித்து விடுவார்கள்.

மேலும் இவ்வாறு இணைப்பு கொடுப்பதினால் நமது Youtube வீடியோ மூலம் நேயர்கள் Youtube ஐ பார்க்கும் நேரமும்  கூடாது. அதே நேரத்தில் இஸ்லாம் தொடர்பாக தேடுபவர்களுக்கு தூய இஸ்லாம் குறித்த கருத்துக்களும் சென்றடையும்.

மேற்கண்ட கருத்து வழுத்தால் மட்டுமே இவ்வாறு செய்து கொள்ளலாம். இதையும் தவிர்த்துக் கொள்வது நல்லது.

காரணம், பொதுவாகவே நமது வீடியோக்களை youtube ல் பார்க்கையில் அசிங்மான வீடியோக்களும் Related Video ல் சேர்ந்து இடம் பெறுகின்றது.

நல்ல எண்ணத்தில் வருபவர்களை நாமே அசிங்கமான வீடியோக்களை பார்க்க தூண்டுவது போன்று ஆகி விடுகின்றது..

மூன்றாவது விமர்சனத்திற்கு விளக்கம்

இந்த வீடியோவை யாரும் கண்டு கொள்ள வில்லை நாம் தான் ஆர்ப்பாட்டங்கள் மூலம் பெரிதாக்கி விட்டோம் என்ற கருத்தில் சிலர் கூறுகின்றனர்.

யாருக்கும் தெரியாமல் ஒருவன் குற்றம் புரிந்தால் அதை நாம் கண்டு கொள்ளக் கூடாது, தடுக்க முயற்சி செய்யக் கூடாது என்று கருத்து தவறானது என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

உலகத்தில் உள்ள அனைத்தையும் விட நபிகள் நாயகத்தை நாம் நேசித்தால் தான் நாம் ஈமான் கொண்டவராக ஆக முடியும். எனவே நமது நேசத்திற்குரியர் அவமதிக்கப்படும் போது எதிர்த்து கூறல் கொடுப்பதும் , கண்டிப்பதும் இஸ்லாத்தின் நம்பிக்கை தொடர்பான செயலாகும். இதை அனைத்து முஸ்லிம்களும் செய்ய வேண்டும்.

யாருக்கும் தெரியாமல் செய்தது எப்படி ? அமெரிக்க நாட்டை தாண்டி எகிப்திற்கு சென்றது ? பிறகு எப்படி இந்தியாவில் உள்ள நமக்கு தெரிந்தது

எப்படியோ ஒரு விதத்தில் பரப்பி விட்டனர். அதை பார்த்து விட்டு முஸ்லிம்களை இவர்கள் வெறுமென சும்மா இருக்க சொல்கின்றார்களா ?

2 மாத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட திரைப்படம் அதனால் நாம் கண்டிக்க தேவையில்லை எனக் கூற வருகின்றார்களா? சமீபத்தில் எடுத்தால் தான் கண்டிக்க வேண்டுமா?

திரையரங்குகளில் வரவேற்பு கொடுத்து திரையிடப்பட்டால் தான் நாம் கண்டிக்க வேண்டுமா ?

நபிகள் நாயகத்தை எவ்வளவு கொச்சைபடுத்த முடியுமோ அவ்வளவு கொச்சைபடுத்தி படம் எடுத்துள்ளனர் மேலும் அதை உலகம் முழுவதும் Youtube பரப்பியுள்ளது.  இதை பார்த்து ஒரு முஸ்லிம் எப்படி சும்மா இருப்பது ?

இது குறித்து  கருத்து சொல்ல விரும்பினால் நமது இணையதளத்திற்கு தெரியப்படுத்தலாம்.

 

Published on: September 26, 2012, 8:03 PM Views: 1326


www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top