வக்பு வாரிய மருத்துவக் கல்லூரி?

வக்பு வாரிய மருத்துவக் கல்லூரி? 

வக்பு வாரியத்தின் சார்பில் மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப் போவதாக சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், பணம் படைத்தவர்களுடன் கலந்துரையாடல்கள், தனியார் தொலைக் காட்சி நிகழ்சிகள் மூலம் வக்பு வாரியம் மூலம் மருத்துவக் கல்லூரி துவங்க இருப்பதாகவும் தனவந்தர்கள் பத்து லட்சம் ரூபாய் ஷேர் கொடுத்து உறுப்பினராகலாம் என்றும் மக்களுக்குச் சொல்லப்படுகிறது.

ஆனால் உண்மை என்னவென்றால் வக்பு வாரியத்துக்கும் இவர்கள் துவங்குவதாகக் கூறும் மருத்துவக் கல்லூரிக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. வக்பு வாரியத்தின் பெயரைப் பயன்படுத்தி நிதி திரட்டும் மோசடி என்ற சந்தேகம் தற்போது மேலும் உறுதியாகி வருகிறது.

உணர்வு வார இதழில் கீழ்க்கண்ட தலையங்கம் எழுதப்பட்டது.

நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா எனும் மதரசா சார்பில் தானமாக வழங்கிய 25 ஏக்கர் இடத்தில் வக்ஃபு வாரியத்தின் சார்பில் மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப் போவதாக கடந்த சில வாரங்களாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது. இதற்கான ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றது.

இது குறித்து தகவல் அறிய மூன்று நபர்களின் தொலைபேசி எண்கள் நீடூர் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எஸ்கொயர் சாதிக், இஸ்மாயீல் நாஜீ, ஜர்ஜிஸ் ஆகிய மூவரின் செல்போன்கள் தொடர்பு எண்ணாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களைத் தொடர்பு கொள்ளும் போது ஒவ்வொருவரும் முரண்பட்ட தகவல்களைக் கூறுகின்றனர்.

இவர்களிடம் விசாரிக்கும் போது மருத்துவக் கல்லூரியை வக்ஃபு வாரியம் நடத்துவதாகக் கூறாமல் மக்களிடம் ஷேர் சேர்த்து தனி டிரஸ்டாக நடத்த இருப்பதாகக் கூறுகின்றனர்.

இந்தக் கல்லூரிக்கு மக்களிடம் ஷேர்  பங்கு சேர்க்கிறோம். ஒரு ஷேர் பத்து லட்சம் ரூபாய். ஐந்து ஆண்டுகள் கழித்து ஆண்டு தோறும் ஒரு மாணவருக்கு ஷேர் வாங்கியவர்களுக்கு மெடிக்கல் சீட் கொடுப்போம். அதை யாருக்கும் அவர்கள் கொடுத்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர்.

இது வக்ஃபு வாரியத்தால் நடத்தப்படுகிறதா என்று கேட்கும் போது இல்லை. நாங்கள் தனியார் தான் நடத்துகிறோம். கவிக்கோ அப்துர் ரஹ்மான் முதல்வரிடம் செல்வாக்குப் பெற்றவராக உள்ளதால் அவர் பெயரைப் பயன்படுத்திக் கொள்கிறோம் என்று இவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் சாதிக் என்பவர் மீது ஏற்கெனவே நீடூர் பள்ளிவாசலுக்காக நிதி திரட்டியது குறித்து புகார் உள்ளதாகவும் இஸ்மாயில் நாஜீ மீது வேறு விதமான புகார்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இவர்களை நம்பி சமுதாயத்தின் தனவந்தர்கள் கொடுக்கும் பல கோடிகளுக்கு யார் பொறுப்பு?

வக்பு வாரியம் இதற்கு பொறுப்பேற்றுக் கொள்ளுமா?

பொறுப்பேற்றுக் கொள்ளாது என்றால் வக்ஃபு வாரியத்துக்கும் நடத்த விருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள கல்லூரிக்கும் என்ன தொடர்பு?

மக்களிடம் ஷேர் வாங்குவது நீடூரைச் சேர்ந்த சிலரா? அல்லது வக்ஃபு வாரியமா? மக்கள் ஷேர் எவ்வளவு?

வக்ஃபு போர்டின் ஷேர் எவ்வளவு?

ஆனால் மேற்கூ றிய பிரதிநிதிகள் வக்ஃபு போர்டிற்கும் மருத்துவக் கல்லூரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அனைத்து ஷேர்களும் தனியாருடையது தான் என்று கூறுகின்றனர். மயிலாடுதுறைக்கு மிக அருகில் சிதம்பரத்தில் மருத்துவக் கல்லூரி இருக்கும் போது மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கிடைக்குமா?

இதற்கான எல்லா சாத்தியக் கூறுகளும் ஆராயப்பட்டதா?

கல்லூரி இப்போது ஆரம்பிக்கப்படாது. இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஆரம்பிக்கப்படும் என்றால் அது வரை அந்த நிதி யார் வசம் இருக்கும்?

·25 ஏக்கர் நிலத்தை (ஏக்கர் இரண்டு லட்சம் ரூபாய் பெறுமானமுள்ளது) யாரோ தருவதை மட்டும் அடிப்படையாக வைத்து அவர்கள் வக்ஃபு போர்ட் பெயரைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டதா?

இதன் ஆரம்ப முயற்சியில் இருந்து அனைத்து விஷயங்களையும் வக்பு போர்டு சட்டப்படி தன் பொறுப்பில் நடத்துகிறது என்றால் எந்த அடிப்படையில் மூன்று தனி நபர்களின் பெயர்கள் அதுவும் புகார்களுக்கு உள்ளானவர்களின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டன?

வக்ஃபு போர்டை யாரோ கருவியாகப் பயன்படுத்துகிறார்களா?

அல்லது இந்த மூவரும் வக்ஃபு வாரியத்தின் பிரதிநிதிகளா?

வக்ஃபு வாரியத்தில் இவர்களின் பொறுப்பு என்ன?

இவர்களுக்கும் வக்ஃபு வாரியத்துக்கும் சம்மந்தம் இல்லாவிட்டால் இவர்கள் எப்படி பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்?

இதுபோன்ற கேள்விகளுக்கு வக்ஃபு வாரியம் தெளிவாக பதில் தர வேண்டும்.

இது குறித்த அனைத்து பொறுப்பும் அனைத்து நிர்வாகமும் வக்ஃபு போர்டிடம் இல்லாமல் தனி நபர்களிடம் இருந்தால் ஷேர் சேர்வதற்கு முன் நன்கு யோசித்துக் கொள்வது சமுதாயத்தின் கடமையாகும்.

ஏற்கனவே சமுதாயத்துக்கு நாளிதழ் நடத்தப் போகிறேன் என்று மக்களிடம் சிலர் ஷேர் சேர்த்து அதன் கதி என்னவானது என்பதை சமுதாயம் மறந்திருக்காது.

வக்ஃபு வாரியத் தலைவரின் பெயரைப் பயன்படுத்தி யாரோ சிலர் உள்வேலை செய்வதாக எழுந்துள்ள சந்தேகத்தை நீக்கி வக்ஃபு வாரியமே அனைத்துக்கும் பொறுப்பு ஏற்று அனைத்து அறிவிப்புகளும் வக்ஃபு வாரியத்தின் பெயரால் அறிவிக்கப்படா விட்டால் சில தனியார்கள் சமுதாயத்தை ஏமாற்ற முனைகிறார்கள் என்று தான் நாம் கருத வேண்டியிருக்கும்.

வக்ஃபு வாரியத்துக்கு இதில் சம்மந்தம் இல்லை என்றால் வக்ஃபு வாரியத்தின் பெயரைப் பயன்படுத்துவதை வக்ஃபு வாரியம் தடை செய்வதுடன் பயன்படுத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். வக்ஃபு வாரியம் தான் இதை நடத்துகிறது என்றால் இதன் அனைத்து அறிவிப்புகளையும் அனைத்து ஒப்பந்தங்களையும் பணம் செலுத்துவோருக்கு அளிக்கும் அனைத்து உத்தரவாதங்களையும் வக்ஃபு வாரியமே கொடுக்க வேண்டும்.

அதன் விதிகள் பொது அறிவிக்கை மூலம் மக்களுக்கு வெளியிடப்பட வேண்டும். வக்ஃபு வாரியம் தாமதமின்றி இதை தெளிவுபடுத்த வேண்டும் என்று சமுதாயத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேற்கண்ட கேள்விகள் வெறும் ஊகத்தின் அடிப்படையில் எழுப்பப்படவில்லை. மாறாக இவர்கள் கொடுத்த தொடர்பு எண்ணில் பேசி அதை நாங்கள் ரிகார்ட் செய்து வைத்துக் கொண்டே இக்கேள்வியை எழுப்பியுள்ளோம்.

அப்துர்ரஹ்மான், கலைஞருக்கு நெருக்கமானவர் என்பதால் அவர் பெயரைப் பயன்படுத்திக் கொள்கிறோம். இதை நாங்கள் சில தனியார்கள் தான் நடத்துகிறோம் என்று இவர்கள் வாயலேயே ஒப்புக் கொண்ட ஆதாரம் இருக்கிறது.

அப்படியானால் வக்பு வாரியக் கல்லூரி என்று ஏன் விளம்பரம் செய்ய வேண்டும்? வக்புக்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?

நம்முடைய கேள்விகள்

உணர்வு இதழில் நாம் சமுதாயத்தின் செல்வத்தைப் பாதுகாப்பதற்காக சில கேள்விகளை எழுப்பினோம். பல நூறு கோடி ரூபாய் கொண்ட இத்திட்டம் வக்பு வாரியத்தின் மூலம் தான் நடக்கிறது என்றால் தலையங்கம் எழுதப்பட்டு 20 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் வக்பு வாரியம் வாய் திறந்திருக்க வேண்டும். ஆனால் இதை வக்பு வாரியம் தான் நடத்துகிறது என்று வக்பு போர்டின் மூலம் இது வரை எந்த அறிவிப்பும் இல்லை.

சமுதாய வேடம் போடும் புகழ்போதைக்கு அடிமையான ஒரு காங்கிரஸ்காரரை வைத்து நம்மை தனியார் தொலைக் காட்சி மூலம் திட்டுகிறார்களே தவிர வக்பு போர்டு மூலம் எந்த அறிவிப்பும் இது வரை வந்ததாகத் தெரியவில்லை.

இன்னும் வக்பு போர்டு மருத்துவக் கல்லூரிக்கு நிதி சேர்க்கும் நீடூர் இணைய தளம் அளித்துள்ள விளக்கம் நம்முடைய சந்தேகத்தை மேலும் உறுதி செய்வதாக அமைந்துள்ளது. 

சமுதாய அக்கறையில்(?!) உணர்வலைகளில் வெளியான கேள்விகளுக்கு பதில் வேண்டுமா?

அது சரி இவர்களை சமுதாயம் எங்கே அங்கீகரித்தது? தமிழகத்தில் எந்த ஒரு முஸ்லிம் ஜமாஅத்தாவது இவர்களை இதுவரை ஏற்றுக் கொண்டுள்ளதா? இவர்களுக்கும் சமுதாயத்திற்கும் என்ன சம்மந்தம்?இவர்களின் இந்த திடீர் சமுதாய அக்கறையின் காரணம் என்ன இவர்களிடம் யாராவது வந்து யோசனை கேட்டார்களா? அல்லது நன்கொடை கேட்டார்களா? இவர்களின் உண்மை முகம் அறிந்து அன்றாடம் விலகி வருகின்ற இளைஞர்களின் எண்ணிக்கைக் கூடிக் கொண்டுதானே இருக்கிறது. இவர்களின்  சாரி இவரின் மிக நெருக்கத்திற்குரியவராக இருந்த ஒருவரின் கமெண்ட் இதுதான். அவரை சேர்த்துக் கொண்டு செய்யாத எந்த காரியத்தையும் அவர் இப்படித்தான் சொல்வார் இவரது கட்டுரையை ஒரு காமெடி பீஸாக நினைத்து பெரிது படுத்தாமல் விட்டுவிடுவது சிறந்தது.

வக்ப் வாரிய மருத்துவக் கல்லூரியில் தங்களது பங்களிப்பை செலுத்த விரும்பும் அனைவரும் தெளிவாக உள்ளோம். யாரும் தொடர்புக் கொண்டு தெளிவடையலாம். தன்னால் இப்படியொரு பெரும் திட்டத்தை நிறைவேற்றவோ நினைத்துப் பார்க்கவோ முடியாதே என்கிற விரக்தியில், அனுமானத்தின் அடிப்படையில், எந்தவகையிலும் உறுதி செய்யப்படாத அவதூறு செய்தியை வெளியிட்டமைக்கு வெளியீட்டாளர்கள் மீது இதுவரை சட்டம் தனது கடமையை செய்யத் துவங்கி இருக்கும்.

இன்னொரு விஷயம்: எமது இணையதளத்தில் வக்ப் வாரிய மருத்துவக்கல்லூரியைப் பற்றிய செய்திகளை வெளியிடத் தொடங்கியதும் ஏராளமான சகோதரர்கள் தொடர்பு எண்களைக் கேட்டு நச்சரித்தார்கள். அதன் காரணமாக மருத்துவக்கல்லூரி ஏற்பாட்டாளர்களைத் தொடர்புக் கொண்டு அவர்களின் அனுமதியோடு தொடர்பு எண்களை வெளியிட்டோம். கல்லூரியின் ஏற்பாட்டாளர்கள் தாங்களாக முன்வந்து தொடர்பு எண்களை வெளியிடுமாறு எங்களைக் கோரவில்லை.

நமது இணைய தளத்தைப் பொறுத்த வரை எல்லாத் தரப்பினரும் பார்க்கும் வண்ணம் கருத்து மோதல்கள் தவிர்த்து பொதுவான விஷயங்களைத்தான் வெளியிட்டு வருகிறோம். தமிழகத்தின் கடந்த 25ஆண்டுகளின் தோன்றிய இசங்கள், சித்தாந்தங்கள், இயக்கங்கள், அவற்றின் ஏற்றத்தாழ்வுகள் அனைத்தையும் அளந்துதான் வைத்திருக்கிறோம். எல்லோரைப் போலவும் தரந்தாழ்ந்த விமர்சனங்களை செய்ய நாங்கள் விரும்புவதில்லை. தமிழகத்தின் இயக்க சிந்தனை உடைய பொதுவான சகோதரர்களிடம்சமுதாயத்திற்கு ஒரு நிலையான பணியை சிந்தியுங்களேன் என்று பலமுறைக் கூறி வந்துள்ளோம். இந்த மருத்துவக் கல்லூரி முயற்சி சாதாரணமான ஒன்றல்ல. இதுதான் நிலையான Constructive-ஆன சேவை. இதன் வெற்றிக்கு கருத்து வேறுபாடு மறந்து எங்களால் இயன்ற முயற்சியை செய்துக் கொண்டே இருப்போம்.

இது தான் நாம் கேட்ட கேள்விக்குரிய பதிலா? 
யாரும் யோசனை கேட்டால் தான் யோசனை சொல்ல வேண்டுமா? ஏமாற்றுப் பேர்வழிகளிடம் ஏமாறக் கூடாது என்று எச்சரிக்கை செய்ய யாரையும் கேட்க வேண்டியதில்லை.

இவர்கள் குறிப்பிடும் அந்த ஒரு நபராகிய நான் சமுதாயத்தில் செல்லாக்காசாக ஆகி விட்டதாக அவர்கள் ஆசைப்படி வைத்துக் கொள்வோம். இவர்கள் மோசடி செய்ய இந்தக் காரணம் போதுமா
?

என்னை அந்தக் கமிட்டியில் சேர்க்காத காரணத்தால் தான் எதிர்ப்பதாகவும் இவர்கள் கண்டு பிடித்துள்ளனர். அனைத்திலும் முகம் காட்டும் வெறி கொண்டவர்களைப் பற்றி இப்படிச் சொல்லலாம். இதற்கு முன் இவர்கள் செய்துள்ள எல்லா தில்லுமுல்லுகளிலும் நான் பங்கு வகித்து இப்போது என்னைக் கூட்டு சேர்க்காமல் இருந்தால் இப்படிச் சொல்வதில் அர்த்தம் இருக்கும். இவர்கள் தங்கத் தாம்பளத்தில் வைத்து என்னை அழைத்தாலும் அதன் தலைவராக என்னை நியமித்தாலும் இவர்களின் அழைப்பை நான் ஏற்க மாட்டேன். மக்களை வஞ்சிக்கும் யாருக்கும் நான் துணை நின்றதில்லை. இதற்கு இவர்கள் ஒரு உதாரணத்தைக் கூட கூற முடியாது.

சரி என்னை இவர்கள் சேர்க்கவில்லை என்பதற்காகவே நான் எதிர்த்தாலும் நான் கேட்ட கேள்விகள் சரியா தவறா? என் கேள்விக்கு பதில் சொல்லாவிட்டால் இவர்கள் வாரியத்தின் பெயரைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர் என்பது மேலும் உறுதியாகிறது..

இது வக்பு வாரியம் நடத்துகிறதா? அல்லது அதன் பெயரைப் படுத்தி .தனியார் நடத்துகிறார்களா என்பதை நீதி மன்றத்தில் வழக்காக போடலாமா என்று நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.வக்பு வாரியத்துக்கும்மருத்துவக் கல்லூரிக்கும்எந்தச் சம்மந்தமும் இல்லைமக்களிடம் ஷேர் பங்

Published on: January 12, 2011, 11:26 PM Views: 1691

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top