சமுதாயம் ஒன்றுபட்டது!

சமுதாயம் ஒன்றுபட்டது!

முஸ்லிம் சமுதாயம் பிளவு பட்டு சிதறிக் கிடக்கிறதே என்று கவலைப்பட்ட மக்களுக்கு மருந்திடும் விதமாக சமுதாயம் இப்போது ஒன்றுபட்டுள்ளது.

இது தான் ஒற்றுமையின் இலட்சனம்.

ஆதாரமின்றி அவதூறு பரப்பும் இழி செயலைச் செய்வதில் இவர்கள் அத்தனை பேரும் ஒன்று பட்டு விட்டனர். 

நம்மை எதிர்ப்பது தவிர வேறு எந்த செயல் திட்டத்திலும் இவர்கள் ஒன்று பட்டதே கிடையாது.

தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாஅத் என்றும் தவ்ஹீத் ஜ்மாஅதுக்கு எதிரானவர்கள் என்றும் இரண்டே அணிகள் தான் உள்ளன. அவர்கள் 19 பிரிவாக இருந்தாலும் தவ்ஹீதை எதிர்ப்பது என்று வந்து விட்டால் அத்தனை பேரின் நிறமும் ஒரெ நிறம் என்பது உறுதியாகி விடும்.

உலகில் முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்கள் என்று இரண்டே அணிகள் தான் உள்ளன. முஸ்லிமல்லாதவர்கள் பல மதங்களாகக் காட்சி தந்தாலும் இஸ்லாத்தை எதிர்ப்பது என்று வரும் போது அனைவரும் ஒரே குரலில் பேசுவதை நாம் காண்கிறோம். அது போல் தான் இவர்களின் நிலையும் உள்ளது.

திருவிடைச் சேரி துப்பாக்கிக்ச் சூட்டுக்கும் தவ்ஹீத் ஜ்மாஅத்துக்கும் சம்மந்தம் இல்லை என்று தெரிந்து கொண்டே அனைவரும் சேர்ந்து கொண்டு தங்களின் கயமைத் தனத்தைக் காட்டும் வகையில் சுவரொட்டி ஒட்டி இது வரை ம்றைத்து வைத்திருந்ததை வெளிப்படுத்தி விட்டனர்.

இப்படி சுவரொட்டி ஒட்டினால் தவ்ஹீத் ஜமாஅத் மீது அதிகார வர்க்கம் பாய்ந்து பிராண்டும் என்று தப்புக் கணக்கு போட்டுள்ளனர். அதில் அவர்கள் வெற்றி பெறப் போவதில்லை. தவ்ஹீத் ஜ்மாஅத் மீது எந்த அதிகார வர்க்கமும் ஆதரமின்றி கை வைக்கத் துணியாது என்று இவர்களுக்குச் சொல்லி வைக்கிறோம். இவர்கள் ஒன்று திரண்டு பேரணி நடத்தினாலும் அதனால் ஆகப் போவது ஒன்றும் இல்லை.

இப்படி சுவரொட்டி ஒட்டினால் பாமர மக்கள் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவார்கள் எனவும் இவர்கள் கணக்குப் போட்டனர். சென்ற வாரம் இந்தச் சுவரொட்டி ஒட்டப்பட்டும் இவர்கள் எதிர்பார்த்த விளைவு இல்லை. எனவே இந்த வாரமும் தமிழகமெங்கும் இதே சுவரொட்டியை ஒட்டியுள்ளனர். 

ஆனால் மக்கள் மக்கள் இவர்களை விட அறிவாளிகளாகவும் உண்மையின் பால் நிற்கக் கூடியவர்களாகவும்,  எதையும் ஆராய்ந்து பார்த்து முடிவு செய்பவர்களாகவும் உள்ளனர் என்பதைக் கூட இவர்கள் விளங்க்வில்லை. இவர்களின் தரம் தான் சந்தி சிரிக்கிறதே தவிர வெறு எதனையும் இவர்களால் சாதிக்க முடியாது.

தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிரான திட்டம் தவிர வேறு எந்த ஒன்றிலும் இவர்கள் ஒன்றுபட மாட்டார்கள்.

இது போன்ற வெத்து வேட்டுகளூக்கு தவ்ஹீத் ஜமாஅதும் அதன் உறுப்பினர்களும் ஒருக்காலும் அஞ்ச மாட்டார்கள் என்று சொல்லி வைக்கிறோம்.

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு குறித்து நாளை நடக்கவுள்ள பொதுக் கூட்டத்தின் சுவரொட்டியை மறைத்து இதை ஒட்டி இருப்பதில் இருந்தே இவர்களின் கயமைத் தனம் எந்த அளவுக்கு உச்ச கட்டத்தில் இருக்கிறது என்று அறிந்து கொள்க.முஸ்லிம் சமுதாயம்சிதறிக் கிடக்கிறதே என்றுமக்களுக்கு மருந்திடும்விதமாக சமுதாயம் இப்போது

Published on: October 10, 2010, 9:20 AM Views: 1891

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top