லால்பேட்டை மதரசாவின் ஆபாச பத்வா

லால்பேட்டை மதரசாவின் ஆபாச பத்வா 

மதஹபு நூல்களில் ஆபாசங்கள் மலிந்து கிடக்கின்றன என்பதை ஷேக் அப்துல்லா ஜமாலியுடன் நாம் நடத்திய விவாதத்தின் மூலம் நாம் நிரூபித்தோம்.

நாம் எடுத்து வைத்த எந்த ஆபாசத்துக்கும் ஷேக் அப்துல்லா ஜமாலியால் பதில் சொல்ல முடியவில்லை என்பதை அந்த விவாத்தில் நீங்கள் பார்த்தீர்கள். நாம் எழுப்பிய ஒவ்வொரு கேள்விக்கும் ஷேக் அப்துல்லா ஜமாலி அளித்த ஒரே பதில் இது தலைப்புக்கு அப்பாற்பட்டது என்பது தான்.

இந்த விவாதத்துக்குப் பின்னர் மக்கள் உலமாக்களிடம் இது குறித்து கேள்விகள் எழுப்பிய போது ஆபாசம் இருப்பது உண்மை தான்; ஆபாசத்தை விட்டு விட்டு நல்ல விஷயத்தை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டியது தானே? நாங்கள் அந்த ஆபாசத்தில் அடிப்படியிலா பத்வா கொடுகிறோம்’’ என்பது தான் அவர்களின் பதிலாக இருந்தது.

ஆனால் அந்த ஆபாசத்தை ஆதாரமாக் கொண்டு தான் இவர்கள் பத்வாவும் அளிக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாக நமக்குக் கிடைத்த ஒரு பத்வாவை நாம் இங்கே வெளியிடுகிறோம்.

இந்த பத்வாவை வழங்கியவர்கள் லால்பேட்டை மன்பவுல் அன்வார் மதராஸா உலமாக்களாவர். தமிழகத்தில் உள்ள ஆலிம்களை உருவாக்கும் கல்லூரிகளில் வேலூர் பாக்கியாத் மதரஸா முதல் இடத்தையும், லால்பேட்டை மன்பவுல் அன்வார் இரண்டாம் இடத்தையும் வகிக்கின்றது. அதிகமான உலமாக்கள் இங்கே படித்து மன்பயீ பட்டம் பெற்றவர்களாவர்.

இந்த மதரஸாவுக்காக லால்பேட்டை மக்கள் வாரி வாரி வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு வீட்டாரும் ஒரு மாணவருக்கான உணவை தங்கள் வீடுகளில் இருந்து சமைத்துக் கொடுக்கின்றனர். ஆனால் மதரஸாவோ ஆபாசக் களஞ்சியத்தைப் படித்துக் கொடுப்பதுடன் அதன் படி பத்வாவும் அளிப்பது மார்க்கத்துக்கு எதிரானது மட்டும் அல்ல. மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகமுமாகும்.

கன்னிப் பெண்ணை எப்படிக் கண்டு பிடிப்பது என்பதை விளக்கும் ஆந்த ஆபாச பத்வா இது தான்.

தமிழக உலமாக்களால் மிகவும் உயர்வாக மதிக்கப்படுவோரில் லால் பேட்டை அமானி ஹஸ்ரத் அவர்கள் முதலிடத்தில் வைத்து மதிக்கப்படுகிறார்கள். இப்படி முதல் இட்த்தில் வைத்து மதிக்கப்படும் அமானி ஹஸ்ரத் அவர்களே இந்த ஃபத்வாவை வழங்கியுள்ளார்கள் என்றால் மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது? நல்ல சிந்தனையாளர் என்று போற்றப்படும் அமானி ஹஸ்ரத் அவர்களே மத்ஹப் நூல்கள் விஷயத்தில் மட்டும் சிந்தனயைச் செலுத்த தவறி விட்டார்கள் என்றால் இந்த மதஹப் எவ்வளவு ஆபத்தானது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

இந்தபத்வாவில் அமானி ஹஸ்ரத்துடன் கைஎழுத்திட்ட மற்ற மூத்த உலமாக்கள் வருமாறு: 

அமானி ஹஸ்ரத்   

முஹம்மது இப்ராஹீம் ஹஸ்ரத்   

அப்துல்லாஹ் ஹஸ்ரத்   

முஹம்மத் ஆதம் ஹஸ்ரத்   

ஸகரியா ஹஸ்ரத்

முஹம்மத் இஸ்மாயீல் ஹஸ்ரத்

இது பழங்கால தமிழ் நடையில் வழங்கப்பட்ட பதவாவாக உள்ளதால் புரியாத சொற்களுக்கு கீழ்க்கண்ட அருஞ்சொற்பொருள் பகுதியை பார்த்துக் கொள்க 

பாக்கிரா = கன்னிப்பெண்   

ஜிமாவு = உடலுறவு   

ஓதம் = விரைப்பை வீக்கம்   

துகூல் = முழுமையான உடலுறவு   

இன்ஸால் = விந்து வெளிப்படுதல்   

ஹத்தடி = விபச்சாரத்துக்கு வழங்கப்படும் கசையடி தண்டனை   

காலி = நீதிபதி   

பாயின் தலாக் = மீண்டும் சேர முடியாத தலாக   

தாவா = வழக்கு வாதம்   

கல்வத் சஹீஹா = உடலுறவு கொள்வதற்கு குறிக்கீடு தடை இல்லாமல் இருவரும் தனித்திருத்தல்   

தஃப்ரீக் = பிரித்து வைத்தல்   

ஷர்த்து = விதிமுறை   

தய்யிபா = கன்னி கழிந்தவள்   

ஜினா = விபச்சாரம்

ஆதில் = நேர்மையானவர்

இந்த ஃபத்வா முற்றிலும் ஆபாசமாக இருந்தாலும் நான்காம் பக்கத்தில் கடைசி பாரா மிக மிக ஆபாசமானது. அசிங்கமானது. சாதாரண அறிவு உள்ளவனுக்கும் கூட இது தவறு என்று பளிச்சென்று தெரியக் கூடியது. ஆனால் மத்ஹப் வெறி காரணமாக பெரும் உலமாக்களுக்கு இது தெரியாமல் போய் விட்டது.


 லால்பேட்டைமதஹபுஆபாசங்கள்பத்வா

Published on: June 2, 2011, 10:06 AM Views: 7344

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top