அபூ ஹனீபா பற்றி பீஜே கூறியது சரியா

அபூ ஹனீபா பற்றி பீஜே கூறியது சரியா

இரண்டு வருடங்களுக்கு முன்பு ரமலான் சொற்பொழிவின் போது, தாங்கள் ஆற்றிய சொற்பொழிவில், இமாம் அபூஹனிபா அவரகளைப் பற்றி கூறிய ஒரு செய்தி. ஷாபி இமாம் அவர்களிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி. "அபூஹனிபா இமாம் ஏன் மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்கு ஏன் செல்லவில்லை" என்று. இதற்கு ஷாபி இமாம் அவர்கள், "ஷைத்தான் இந்த இரண்டு இடங்களுக்கும் வர மாட்டான்" என்று கூறியதாகக் கூறினீர்கள்.

நான் இது பற்றி ஒரு இமாம் (எங்கள் ஊர்) அவர்களிடம் கேட்ட பொது, அபூஹனிபா இமாம் அவர்கள் பலமுறை மக்கா சென்றுள்ளதாகவும், மேற்கண்ட தகவல் பொய்யானது என்றும் கூறினார். எங்கள் ஊரில் உள்ளவர்களும் என்னுடன் சண்டைக்கு வந்து விட்டனர். தயவு செய்து விளக்கம் தரவும்

நிஸார் அஹ்மத்

தாங்கள் கூறிய செய்தியில் சில தவறுகள் உள்ளன. ஷாபி இமாம் அப்படி கூறியதாக நான் கூறவில்லை. ஷாபி இமாமை விட சீனியரான முஹம்மத் பின் மஸ்லமா அவர்கள் கூறியதாகத் தான் நான் குறிப்பிட்டேன். ஷைத்தான் வரமாட்டான் என்று கூறியதாக நான் குறிப்பிடவில்லை. தஜ்ஜால் வரமாட்டான் என்று அவர் கூறியதாகத் தான் குறிப்பிட்டேன்.

மேலும் அந்தச் செய்தியில் அபூஹனீபாவின் போதனை மதீனாவுக்குள் நுழைய முடியவில்லை என்று கூறுவதற்கு பதிலாக அபூ ஹனீபா என்று நான் தவறுதலாகக் குறிப்பிட்டுள்ளேன்.

அபூ ஹனீபாவின் தவறான கொள்கை மதீனாவுக்குள் நுழைய முடியவில்லை என்பது தான் சரியானதாகும்.

72 கூட்டத்தினர் யார் என்ற தலைப்பில் கடைசி பாகத்தில் தான் அந்த விஷயத்தை நான் குறிப்பிட்டுள்ளேன். அதில் அந்தப் பகுதியை மட்டும் பார்க்க விரும்பினால் பார்க்கவும்.

Play Without Downloading Download To your computer

முஹம்மத் பின் மஸ்லமா அவர்கள் கூறியதற்கான ஆதாரம் இது தான். 

أخبرني محمد بن الحسين الأزرق أخبرنا محمد بن الحسن بن زياد المقرئ أن أبا رجاء المروزي أخبرهم قال قال حمدويه بن مخلد قال محمد بن مسلمة المديني وقيل له ما بال رأي أبي حنيفة دخل هذه الأمصار كلها ولم يدخل المدينة قال لأن رسول الله صلى الله عليه و سلم قال على كل نقب من أنقابها ملك يمنع الدجال من دخولها وهذا من كلام الدجالين فمن ثم لم يدخلها والله أعلم

تاريخ بغداد [13 /415]

அபூஹனீபாவின் கருத்துக்கள் பல நகரங்களுக்குள் நுழைந்துள்ள நிலையில் மதீனாவில் மட்டும் நுழையவில்லையே என்று முஹம்மத் பின் மஸ்லமா அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் மதீனாவின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் ஒரு வானவர் நின்று கொண்டு தஜ்ஜால் நுழைவதை விட்டும் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அபூஹனீபாவின் கருத்துக்கள் தஜ்ஜாலின் கருத்துக்களாகும். இதனால் தான் அந்தக் கருத்து மதீனாவுக்குள் நுழைய முடியவில்லை என்று விடயளித்தார்.

நூல்: தாரீக் பக்தாத்

மேற்கண்ட கருத்தை இப்னில் ஜவ்ஸீ அவர்களும் பதிவு செய்துள்ளனர்.

103 - قال محمد بن مسلمة المديني وقيل له إن رأي أبي حنيفة دخل هذه الأمصار كلّها ولم يدخل المدينة قال لأنّ رسول الله {صلى الله عليه وسلم} قال على كل نقبٍ من أنقابها ملكٌ يمنع الدّجّال من دخولها وكلام هذا من كلام الدّجّالين فمن ثم لم يدخلها

أخبارالظراف والمتماجنين ـ لابن الجوزى [ص 73

அபூஹனீபாவின் கருத்து என்று சொல்வதற்கு பதிலாக அபூஹனீபா என்று நான் தவறுதலாகக் குறிப்பிட்டுள்ளேன்.அபூ ஹனீபாபற்றி பீஜேகூறியதுதவறுதலாகக் குறிப்பிட்டுள்ளேன்

Published on: December 9, 2010, 5:34 PM Views: 2927

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top