சைபுல்லாஹ் ஹாஜாவின் திருகு தாளங்கள்
சைபுல்லாஹ் ஹாஜாவின் திருகு தாளங்கள் முழுமையான வீடியோ:
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோமேலும் விவரங்கள் அறிய
* சைபுல்லாஹ் ஹாஜா பல அமைப்புகளின் பெயரில் இயங்கினாரா?
* சைபுல்லாஹ் ஹாஜாவின் புரொஃபைல் மோசடி
* சைபுல்லாஹ் ஹாஜாவின் துபை வசூல் மோசடி
* கொள்கை வீரர்களை கொச்சைப் படுத்திய சைபுல்லாஹ்
* ஆடம்பரத் திருமணமும் ஆம்புலன்ஸ் கணக்கும்
* சுயநலத்திற்காக ஜமாஅத்தைப் பயன்படுத்திய சைபுல்லாஹ்
06.08.2011. 16:20
சுயநலத்திற்காக ஜமாஅத்தைப் பயன்படுத
சைபுல்லா ஹாஜாவின் திருகு தாளங்கள் – 6
சுயநலத்திற்காக ஜமாஅத்தைப் பயன்படுத்திய சைபுல்லா
சைபுல்லாஹ் ஹாஜாவின் திருகுதாளங்கள் தொடரில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னால் மாநில நிர்வாகிய இருந்த சைபுல்லாஹ் ஹாஜா அவரின் சில சுயநல நடவடிக்கைகளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து தன் செயல்களை நியாயப்படுத்திக் கொள்வதறகாக வேண்டி சைபுல்லாஹ் ஹாஜா தர்பியா என்ற பெயரில் நடத்திய நிகழ்ச்சியில் அவர் எடுத்து வைத்த சொத்தை வாதங்கள் அனைத்தையும் தவிடு பொடியாக்கியது அப்துந்நாசர் மற்றும் அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸியின் விளக்கங்கள்.
அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பயன்படுத்தி அரசியல்வாதிகளிடம் சுயலாபங்கள் அடைந்தது சம்பந்தமாகவும் அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது. அதற்கு விளக்கம் தருகிறேன் பேர்வழி என்று நினைத்துக் கொண்டு அவர் செய்த சில விசயங்களை நியாயப்படுத்தி, மற்றைய சில விசயங்களை இருட்டடிப்பு செய்து விட்டார் சைபுல்லாஹ்.
முபாரக் பள்ளியைத் தவிர நான் வேறு எங்கும் ஜூமுஆவிற்கு போக மாட்டேன்,அதுபோல வேறு யாரும் இந்தப் பள்ளிக்கு ஜூமுஆவிற்கு வரக்கூடாது என்ற கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டு சுயாட்சி நடத்தி வந்தார் சைபுல்லா. இது சம்பந்தமாக அவரிடம் மக்கள் கேட்ட போது, “ஏன் மேலப்பாளையத்தில் மஸ்ஜித் ரஹ்மான் பள்ளியில் லுஹாவைத் தவிர வேறு யாரும் ஜூமுஆ செய்ய முடியுமா?” அல்தாபி மேலப்பாளையத்திற்குள் நுழைய முடியுமா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
சம்சுல்லுஹாவைப் பொருத்தவரை அவர் மேலப்பாளையம் மஸ்ஜித் ரஹ்மான் பள்ளியில் இமாமாக இருக்கிறார். அதற்காக அவர் சம்பளமும் பெற்றுக்கொள்கிறார். ஆக லுஹா அவர்கள் மேலப்பாளையம் பள்ளியில் இமாமாக இருப்பதால் அவர் வெளியிடங்களுக்கு ஜூமுஆ செல்வது குறைவு. ஆனாலும் மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை வெளியிடங்களுக்கு ஜூமுஆவிற்கு சென்று வருகிறார். ஆனால் சைபுல்லா முபாரக் பள்ளிக்கு இமாம் அல்ல. ஆனால் நான் வேறு எங்கேயும் ஜூமுஆவிற்கு செல்ல மாட்டேன் என்று மறுக்கிறார்.
அடுத்து அல்தாபி மேலப்பாளையத்திற்குள் நுழைய முடியுமா? என்று ஒரு சிறுபிள்ளைத் தனமான கேள்வியைக் கேட்டிருக்கிறார். பாவம் சைபுல்லா வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்.
மேலும் நான் மட்டுமா கட்டுப்பட மறுக்கிறேன், அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி மறுக்கவில்லையா? அவரை நம்பி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தால் அவர் கடைசி நேரத்தில் வயிற்று வலி என்று சொல்லி செல்ல மறுத்துவிடுவார் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கும் விளக்கங்களுக்கும் வீடியோவைக் காண்க.
மொபைல் வீடியோ
ஆடியோஆக அல்லாஹ்வின் கிருபையால் இந்த சைபுல்லா தன் உள்ளத்தில் மறைத்து வைத்திருந்த பல கசடுகளை மக்கள் மத்தியிலே வெளிப்படுத்த அவரே ஒரு களம் அமைத்துத் தந்தார் என்று தான் சொல்ல வேண்டும். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகளைச் சொல்லி ஊர் ஊராக வசூல் செய்து அதிலே ஒரு சொத்து வாங்கி அதைத் தனக்கு வேண்டியப்பட்ட ஒரு தனி நபரின் பெயரிலே பதிவு செய்து ஒரு மிகப்பெரிய மோசடியை சைபுல்லா செய்திருக்கிறார். ஆனால் தவறு செய்பவர்கள் வழக்கமாகத் தங்களின் செயல்பாடுகளை நியாயப்படுத்திக் கொள்வதற்காக ஏதையாவது சொல்லி அவர்களே அவர்கள் செய்த நிறைய தவறுகளை உறுதிப்படுத்திக் கொள்வது போலத் தான் சைபுல்லாவும் செய்தார். இதுபோன்ற நபர்கள் இங்கே மக்களை எளிதாக ஏமாற்றிவிட்டாலும் நாளை ஒரு விசாரனை இருக்கிறது என்பதை மறந்து விடவேண்டாம் என்பதே நமது அறிவுரை.
29.07.2011. 02:32
ஆடம்பரத் திருமணமும் ஆம்புலன்ஸ் கணக்
சைபுல்லாஹ் ஹாஜாவின் திருகுதாளங்கள் - 5
ஆடம்பரத் திருமணமும் ஆம்புலன்ஸ் கணக்கும்:
சைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் நீக்கப்பட்டதற்கு 15 காரணங்கள் உணர்வு பத்திரிகையில் வெளியாகி இருந்தன. ஆனால் இதெல்லாம் என் மீது சுமத்தப்பட்ட அவதூறு என்று சொல்லிக் கொண்டு தர்பியா என்ற பெயரில் ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்து தன் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை மேலும் வலுப்படுத்திக் கொண்டார் சைபுல்லாஹ்.
இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இவர் ஆடம்பரத்திருமணத்தை நடத்தி வைத்தார் என்பதும் முக்கியமானதாகும். ஆனால் ஒரே ஒரு ஆடம்பரத் திருமணத்தைத் தவிர நான் வேறு எதிலாவது கலந்து கொண்டேனா? அதுவும் அந்த ஆடம்பரங்கள் என் கண் முன்னால் நடந்ததா? என் பார்வையில் பட்டதா என ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பி தன்னுடைய செயலை நியாயப்படுத்த முனைந்து தோற்றுப்போனார் சைபுல்லாஹ்.
அத்தோடு நிற்காமல் அப்துந்நாசரின் சகோதரிக்கு நடந்த திருமணத்திலே பெண் வீட்டு விருந்து வைக்கப்பட்டது என்றும் அதிலே நான் கலந்து கொள்ளவில்லை என்று சொல்லியிருந்தார். ஆனால் அந்தத் திருமணத்தை நடத்தி வைத்தது சைபுல்லாஹ் தான். பெண் வீட்டு விருந்தில் கலந்து கொள்ளக்கூடாது என்பது சரி என்றால் அந்தத் திருமணத்திலும் கலந்து கொள்ளக்கூடாது என்பது தானே சரி! ஆனால் இவர் அதை நியாயப்படுத்தப் போய் இப்போது கூணிக்குறுகி நிற்கிறார். அதேநேரம் நாசர் வீட்டில் நடந்த பெண்வீட்டு விருந்து நியாயமா என்றால் அது தவறு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால் நாசர் அன்றைக்கு இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த மாணவர். அவரால் தடுத்திருக்க முடியாது. ஆனால் சைபுல்லாஹ் ஹாஜா தான் அந்தத் திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தார். அவர் நினைத்திருந்தால் அந்த விருந்தே நடக்காமல் தடுத்திருக்க முடியும்.
அடுத்து இவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடையநல்லூரில் இயங்கும் ஆம்புலன்ஸ் சம்பந்தமான கணக்கு வழக்குகளை யாரிடமும் சமர்ப்பிக்கவில்லை என்பது குற்றச்சாட்டு. ஆனால் பொதுச் சொத்துக்களில் யார் கணக்கு கேட்டாலும் அதை வெளியிடுவது தான் சிறந்த நிர்வாகத்திற்கு அழகு. ஆனால் இவரோ, காசு கொடுத்தவர்கள் கணக்குக் கேட்டால் தான் அதைச் சொல்வேன் என சம்பந்தமில்லாமல் சப்பை கட்டு கட்டுகிறார். அத்தோடு நிற்காமல் முஸ்லிம் மீடியா டிரஸ்டிற்கு தலைவராக இருக்கும் பீஜே 2004 முதல் கணக்கு காட்டினாரா? என்று கேட்கிறார்.
முஸ்லிம் மீடியா டிரஸ்டுக்கு லுஹா உறுப்பினர் இல்லை, அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி உறுப்பினர் இல்லை.. நான் உறுப்பினர், ஆனால் எனக்கு கணக்கு காட்டவில்லை என்று சொல்கிறார். ஆனால் லுஹாவும், அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸியும் முஸ்லிம் மீடியா டிரஸ்டின் உறுப்பினர்கள் என்பது அவருக்கே தெரியும். அதுமட்டுமல்ல, சைபுல்லா அவர்கள் முஸ்லிம் மீடியா டிரஸ்டுக்கு உறுப்பினர் இல்லை என்பது அவருக்கு தெரியாமல் போய் விட்டது தான் பரிதாபம்.
அதற்காக, அவர் டிரஸ்டி உறுப்பினர் இல்லை என்பதற்காக முஸ்லிம் மீடியா டிரஸ்டின் கணக்குகளை காட்ட பீஜே மறுப்பாரா? முதலில் முஸ்லிம் மீடியா டிரஸ்டுக்கு என்னென்ன சொத்துக்கள் உள்ளன? நீலகிரியில் இரண்டு ஏலக்காய் எஸ்டேட்டும், சென்னை அண்ணாசாலையில் 15 மாடி கட்டிடமும் இருக்கிறதா? முஸ்லிம் மீடியா டிரஸ்டுக்கு உள்ள சொத்து என்றால் அது உணர்வு பத்திரிகை மட்டும் தான்.
அந்த உணர்வு பத்திரிகையை முடக்க எதிரிகளின் சூழ்ச்சி செய்த போது, அதன் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்ட போது அதைத் தூக்கி நிறுத்தியவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உலகளாவிய உறுப்பினர்கள் தான். அன்று முதலே உணர்வு பத்திரிகை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஒரு அங்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்படியே இவர் கணக்கு கேட்பதாக இருந்தால் இவர் தானே மாநிலப் பொறுப்புகளில் பலமுறை இருந்தார்., அப்போதெல்லாம் ஏன் கேட்கவில்லை? அவருக்கே தெரியும் முஸ்லிம் மீடியா டிரஸ்டின் கணக்கு வழக்கு எப்படி இருக்கிறது என்று. ஆனால் இன்றைக்கு அதை ஒரு குற்றச்சாட்டாக வைத்து களங்கம் கற்பிக்கப் பார்க்கிறார். இதுசம்பந்தமான முழுமையான விவரங்களுக்கு வீடியோவைக் காண்க.
மொபைல் வீடியோ
ஆடியோதிருகுதாளங்கள் தொடரும்.., இன்ஷா அல்லாஹ்..,
23.07.2011. 03:22
கொள்கை வீரர்களை கொச்சைப்படுத்திய சை
சைபுல்லாஹ் ஹாஜாவின் திருகுதாளங்கள் – 4:
கொள்கை வீரர்களை கொச்சைப்படுத்திய சைபுல்லா:
ஆனால் மஸ்ஜித் முபாரக் அருகே இருக்கும் நிலம் அதற்கு முன்பதாக (கிட்டத்தட்ட கோவை ரஹ்மத்துல்லாஹ் அறிவித்த தினத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்னால்) தனி நபர் பெயரில் பதிவு செய்யப்பட்டது எனவும் சைபுல்லா தெரிவித்து, சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பே அந்த விசயம் முடிந்து விட்டது., அந்தச் சட்டத்திற்கு நானும் கட்டுப்பட்டவன் எனவும், தன்னை வேண்டுமென்றே பழி சுமத்தி நீக்கிவிட்டதாக ஒரு அப்பட்டமான பொய்யை மக்களிடம் தெரிவித்திருக்கிறார்.
மேற்படி சட்டம் பதிவுக் குறிப்பேட்டில் ஏற்றப்பட்டது 2009 ஆம் ஆண்டின் இறுதியில் என்பது உண்மை தான். ஆனால் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது 2005 ஆம் ஆண்டில். இதன் காரணமாகத் தான் அன்றைக்கு மாநிலப் பொறுப்பில் இருந்த சைபுல்லாஹ் ஹாஜா அவர்களே பல ஊர்களின் கிளைகளுக்குச் சென்று டிரஸ்டி பெயரில் இருந்த சொத்துக்களை எல்லாம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை பெயரில் பதிவு செய்தார்.
ஆனால் மற்ற ஊர்களுக்கு இதை அமுல்படுத்திய சைபுல்லாஹ் தன்னுடைய சொந்த ஊரில் மட்டும் பள்ளியை தன்னுடைய முழுக்கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் அந்த நிலத்தை ஒரு தனி நபர் பெயரில் பதிவு செய்திருக்கிறார். அதை டிரஸ்டாகக் கூட பதிவு செய்ய எண்ணம் வராமல், தான் வைத்தது தான் அங்கே சட்டமாக இருக்க வேண்டும், கணக்கு வழக்குகளைக் கேட்டு யாரும் வந்துவிடக் கூடாது என்ற ரீதியில் முற்றுரிமை (monopoly) அடிப்படையில் இவ்வாறு செய்து மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்திருக்கிறார் என்பது உறுதியாகிறது.
அடுத்து ஒரு முக்கியமான விசயம் இங்கே நாம் பதிவு செய்தாக வேண்டும்.
ஜாக் மற்றும் தவ்ஹீத் ஜமாத்திற்கு முபாரக் பள்ளி விஷயமாக பிரச்சனை வரும் போது, நான் பீஜேவிடம் இதைக் கொண்டு சென்றேன். அவர் செத்த பாம்பை என்னிடம் கொண்டு வராதீர்கள் என்று சொன்னார். பிறகு நானே என் சொந்த முயற்சியில் போராடி வெற்றி பெற்றேன் என ஒரு பச்சைப் பொய்யை இட்டுக்கட்டியிருக்கிறார்.
சைபுல்லாஹ் ஹாஜா அல்லாஹ்விற்குப் பயந்து கொள்ள வேண்டும்.
முபாரக் பள்ளி சம்மந்தமாக சைபுல்லாஹ் ஹாஜாவிடம் பீஜே பல ஆலோசனைகளைச் சொல்லி அவர் அதைக் கேட்காமல் தான்தோன்றித் தனமாக நடந்து பள்ளியை பூட்ட வைத்தார். பூட்டிய பிறகு சைபுல்லா ஹாஜா, பீஜேயிடம் மீண்டும் ஆலோசனை கேட்கிறார். நான் சொன்ன எல்லா யோசனைகளையும் புறந்தள்ளி செத்த பினமாக ஆக்கிவிட்டு வைத்தியம் பார்க்கச் சொல்கிறீர்களே! இது நியாயமா என சைபுல்லாஹ்வைக் கண்டித்தார் பீஜே.
ஆனாலும் கூட RTO அந்தப் பள்ளியைப் பூட்ட உத்தரவிட்ட போது தவ்ஹீத் ஜமாத் உடனடியாக அதிமுக பன்னீர் செல்வம் வழியாக அந்த ஆர்டரை கேன்சல் செய்யச் சொல்லியது. இந்தச் சம்பவங்கள் நடந்த போது சைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் கடையநல்லூரை விட்டு தலைமறைவாகி ராஜபாளையத்தில் தஞ்சம் புகுந்திருந்தார்.
நடந்த உண்மை இவ்வாறு இருக்க இன்றைக்கு சைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் அப்படியே வரலாற்றைத் திரிக்கப் பார்க்கிறார்.
இதையெல்லாம் விடக்கொடுமை, அன்றைக்கு பள்ளியைக் காப்பதற்காக வெளியூர்களில் இருந்து வந்திருந்த மக்களைக் கொச்சைப்படுத்திகிறார் சைபுல்லாஹ்.
அதாவது ஜாக் அமைப்பினர் ஒரு இஸ்திமா நடத்தி முபாரக் பள்ளியை அபகரிக்கப் போகிறார்கள், நாமும் அதற்குப் போட்டியாக இஸ்திமா நடத்தினால் தான் முபாரக் பள்ளியைக் காப்பாற்ற முடியும் என மேலப்பாளையம் சென்று சம்சுல்லுஹாவிடம் ஆட்கள் அனுப்புங்கள் என்று கேட்டார் சைபுல்லாஹ். அத்தோடு பீஜேவுக்கும் போன் செய்து இந்த விசயத்தைச் சொல்ல, உடனடியாக பீஜே, மதுரையில் இருந்து ஒரு இளைஞர் படையை கடையநல்லூருக்கு அனுப்பி வைக்கிறார்.
முபாரக் பள்ளியைப் பாதுகாப்பதற்காக களமிறங்கிய அந்தக் கொள்கைச் சகோதரர்களிடம் பீஜே தரப்பு முன்வைத்த ஒரு நிபந்தனை என்ன தெரியுமா? ”நீங்கள் பள்ளிவாசலைப் பாதுகாக்கச் செல்கிறீர்கள்., அங்கே உங்களின் உயிரைக் கூட தியாகம் செய்யும் நிலை ஏற்படலாம் எனவே அதற்கெல்லாம் தயாரானவர்கள் மட்டும் செல்லுங்கள்” என அந்த கொள்கைச் சகோதரர்களிடம் சொல்லப்படுகிறது. ஆனால் கொள்கைக்காக உயிரைத் தியாகம் செய்யவும் தயாராக இருந்த அந்த இளைஞர்களில் ஒருவர் கூட பின்வாங்காமல் கடையநல்லூருக்குப் படையெடுத்தனர்.
ஆனால் அந்த சகோதரர்களின் தியாகத்தை இன்று சைபுல்லாஹ் கொச்சைப் படுத்துகிறார், எப்படி தெரியுமா? அது தான் அவர்கள் வந்த வாகனத்துக்கு நான் வாடகை கொடுத்து விட்டேனே! அதன் பிறகு அவர்களுக்கும் இந்தப் பள்ளிக்கும் என்ன உறவு இருக்கிறது? அவர்கள் என்ன பள்ளியைப் பாதுகாக்கவா வந்தார்கள்? இஸ்திமாவுக்குத் தானே வந்தார்கள் என இன்றைக்குச் சொல்கிறார் சைபுல்லாஹ்.
தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக, தவ்ஹீத் பள்ளியைப் பாதுகாப்பதற்காக தலைமையின் உத்தரவை ஏற்று உயிரைக் கூட துச்சமென நினைத்து வந்த கூட்டத்தை, இன்றைக்கு கூலிப்படையின் அந்தஸ்தில் வைத்துப் பேசுகிறார் சைபுல்லா. கேவலம் 39 லட்ச ரூபாய் பணம் அவரை தடம்புரட்டி விட்டது. இவர் தவ்ஹீத் ஜமாஅத்தை நோக்கி வைத்திருந்த இன்னும் பல வாதங்களுக்கு தெளிவான சரியான பதிலடிக்கு வீடியோவைப் பாருங்கள்.
மொபைல் வீடியோ
ஆடியோதிருகுதாளங்கள் தொடரும்...., இன்ஷா அல்லாஹ்...
21.07.2011. 02:55
சைபுல்லாஹ் ஹாஜாவின் துபை வசூல் மோசடி
சைபுல்லா ஹாஜாவின் திருகுதாளங்கள் - 3:
சைபுல்லா ஹாஜா அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகளை காட்டி மக்களிடம் வசூல் செய்து விட்டு, இன்றைக்கு அதை தனிநபர் பெயரில் பதிவு செய்து விட்டு, நான் மஸ்ஜித் முபாரக் பணிகளைக் காட்டித் தான் வசூலித்தேன் என்று சொல்கிறார்.
அல்தாபி தலைவராக இருக்கும் போது என்னை எச்சரித்தீர்கள் என்றால், பின்னர் எதற்காக என்னை ஜூலை 4 மாநாட்டுக்கு தலைவராக நியமித்தீர்கள் என்று கேட்கிறார். அத்தோடு அடுத்த மாநிலத் தலைவராக இருக்குமாறு என்னை ஏன் கேட்டுக்கொண்டீர்கள் என்று கேட்கிறார். அதாவது 2008 ல் என்னை எச்சரித்தீர்களானால், பின்னர் எதற்காக 2010 ஜூலை 4 மாநாட்டிற்கும், ஜனவரி 27, 2011ல் மதுரையிலும் சென்னையிலும் நடந்த உயர்நீதிமன்ற கண்டன ஆர்ப்பாட்டத்திலும் என்னை ஏன் தலைவராக நியமித்தீர்கள்? அதுமட்டுமல்லாமல் 2011 ல் நடந்த மாநில நிர்வாகக்குழுத் தேர்தலில் அடுத்த தலைவராக பதவியேற்றுக் கொள்ளுமாறு ஏன் கேட்டீர்கள்? நான் முன்பே மோசடிக்காரன் எனத் தெரிந்தும் என்னை இதுபோல ஏன் கேட்டுக்கொண்டீர்கள் என நம்மை நோக்கி கேள்வி எழுப்புகிறார்.
இதிலே இவர் இரண்டு விசயங்களை உண்மையாக்கப் பார்க்கிறார். ஒன்று, நாம் இவரை 2008 ல் எச்சரிக்கை செய்தோம் என்ற சம்பவமே நடக்கவில்லை என்ற மாயையை உண்டாக்கப்பார்க்கிறார். அப்படி எச்சரித்திருந்திருந்தால் பிறகு ஏன்
மேற்கண்ட பதவிகளுக்கு தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் கேட்கிறார். இரண்டாவது நாம் எச்சரிக்கை செய்வதற்கு முன்பே நான் பதிவு செய்து விட்டேன். அதாவது அவரை எச்சரிக்கை செய்தது 2011ல் தான். ஆனால் அதற்கு முன்பே 2009லேயே இந்தப் பதிவு விசயம் முடிந்து விட்டது என ஒரு முழுப் பொய்யை மக்களிடம் வைத்து அவர் செய்த பெரிய மோசடியை மறைக்கப் பார்க்கிறார்.
ஆனால் இவரை 2008 ல் எச்சரித்ததும் உண்மை. அப்போது அவர் அந்த நிலத்தை தனி நபர் பெயரில் பதிவு செய்திடவில்லை. மாறாக பதிவு செய்வதற்கு ஆலோசனை தான் நடத்திக் கொண்டு இருந்தார். மூன் பப்ளிகேசனில் நடந்த கூட்டத்தில் பீஜே அவர்கள் எடுத்து வைத்த கருத்துக்களின் நியாயத்தை உணர்ந்து, அவ்வாறு அவர்கள் தனிநபர் பெயரில் பதிவு செய்தால், அவர்களைத் தூக்கி எறிந்து விட்டு நான் தவ்ஹீத் ஜமாஅத்தின் பக்கம் நிற்கத் தயார் என்று சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால் அவர் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை.
2009 ல் தனிநபரில் பெயரில் அந்த இடத்தைப் பதிவு செய்கிறார்.
ஆனால் இந்த விசயம் யாருக்குமே தெரியாமல் மறைத்து வைக்கப்படுகின்றது. பதிவு விவகாரம் இன்னும் முடியவில்லை என பொய் சொல்லிச் சொல்லியே எல்லோரையும் நம்பவைக்கிறார். அதற்குப் பிறகு நடந்த ஜூலை 4 மாநாட்டுக் குழுவிற்கு இவர் தலைவராக நியமிக்கப்படுகிறார். ஜனவரி 27 ஆர்ப்பாட்டத்திற்கு 3 மாதங்களுக்கு முன்பாகவே மதுரைக்கு இவரே தலைவராக நியமிக்கப்படுகிறார். அதற்குப் பிறகு தான் இவர் ரகசியமாக தனிநபர் பெயரில் பதிவு செய்த விவகாரம் வெளியாகிறது. அந்த நேரம் பழைஅய் நிர்வாகத்தின் பத்விக்காலம் முடியும் நேரமாக இருந்ததால், இதை புதிய நிர்வாகம் விசாரிக்கும் என ஒத்திவைக்கப்படுகிறது.
இதுதான் நடந்தது. ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட அவகாசங்களைத் தனக்கு சாதகாமாகப் பயன்படுத்திக் கொண்டு தன்னை நல்லவர் என மக்களிடம் காட்டிக்கொள்ள முயன்று இன்றைக்கு தோற்று நிற்கிறார்.
அடுத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலத்தின் சார்பில் ரமலான் மாத பிரச்சாரத்திற்குச் சென்ற சைபுல்லாஹ் ஹாஜா அங்கே சென்று பயான் செய்தது போக மற்ற நேரங்களில் அங்கிருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளிடம் மஸ்ஜித் ரஹ்மான் பக்கத்தில் இருக்கும் நிலம் தேவை எனவும் அதற்காக வசூல் செய்ய தனக்கு உதவி செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறார். அதுபோலவே அங்கிருக்கும் நிர்வாகிகளும் பொதுவான ஒரு இடத்தில் அனைத்து
ஊர் மக்களையும் ஒன்று திரட்டுகின்றனர். அவர்கள் மத்தியில் தவ்ஹீத் ஜமாஅத்தின் கடந்து வந்த பாதைகளையும், ஏகத்துவத்தின் எழுச்சியையும் பேசி சைபுல்லா அவர்கள் வசூல் மேற்கொள்கிறார்.
ஆனால் இன்றைக்கு நான் மஸ்ஜித் முபாரக் பணிகளைச் சொல்லித்தான் கேட்டேன்., அதற்குத் தான் மக்கள் உதவி செய்தார்கள் என்று கபட நாடகம் ஆடுகிறார்.
நான் என்ன முஸ்லிம் மக்களிடம் மட்டுமா வாங்கினேன்? முஸ்லிம் அல்லாத பலரும் தான் உதவி செய்துள்ளார்கள். கடையநல்லூரில் இருக்கும் அருணாச்சலம் செட்டியார் என்பவர் 50 ஆயிரம் நன்கொடையாகத் தந்தார். அதற்காக அவர் வந்து, நான் அருணாச்சலம் செட்டியாராக 50ஆயிரம் கொடுத்திருக்கிறேன். அதனால் அந்தப் பள்ளியை திருமலைக்கோவில் அரங்காவலர் குழுவிற்கு எழுதி வையுங்கள் என்று கேட்டால் அது முட்டாள் தனமில்லையா என்று கேட்கிறார்.
அவ்வாறு கேட்பது முட்டாள்தனம் தான். அதேநேரத்தில் திருமலைக் கோவிலுக்கு நன்கொடை தாருங்கள் என்று அருணாச்சலம் செட்டியாரிடம் காசு வாங்கி விட்டு அதில் நிலம் வாங்கி மஸ்ஜித் முபாரக் பெயரில் பதிவு செய்து மோசடி செய்தால், அதே அருணாச்சலம் செட்டியார் அந்த இடத்தை திருமலைக் கோவில் அரங்காவல் குழுவிற்கு எழுதிக் கொடுங்கள் என்று கேட்டால் அது தவறு இல்லை.
அதேபோலத் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பணிகளைக் காட்டி அருணாச்சல் செட்டியாரிடம் வசூல் செய்து விட்டு இன்றைக்கு எனக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லும் சைபுல்லாவிடம் அந்த அருணாச்சலம் செட்டியார் அவர் கொடுத்த பணத்தை திருமலை அரங்காவல் குழுவிற்கு திரும்பத் தரும்படி கேட்டாலும் அதில் தவறேதும் இல்லை. காரணம் சைபுல்லா சொன்னது ஒன்று, செய்தது ஒன்று.
கேடுவரும் பின்னே மதி கெட்டு விடும் முன்னே என்று சைபுல்லா சொல்கிறார். அது அவருக்கே இங்கே தெளிவாகப் பொருந்துகிறது. சைபுல்லா ஹாஜாவின் துபையில் வசூல் செய்வதற்காக செய்த புரொஃபைல் மோசடிகள் குறித்தும், இவரை ஏன் மாநாட்டுக்கு தலைவராக நியமித்தார்கள் என்பது குறித்தும் விரிவாக அறிய வீடியோவைப் பாருங்கள்.
திருகுதாளங்கள் தொடரும்.. இன்ஷா அல்லாஹ்...,
19.07.2011. 03:43
சைபுல்லாஹ் ஹாஜாவின் புரொபைல் மோசடி
சைபுல்லாஹ்வின் திருகுதாளங்கள் -2:
சைபுல்லாஹ் ஹாஜா அவர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டதற்கு இரண்டாவது காரணமாக, அவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகளான இரத்ததான முகாம், கத்னா முகாம், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் போன்றவைகளை அரபியிலும் ஆங்கிலத்திலும் புரொஃபைல் (சேவைகளின் தொகுப்புப் புத்தகம்) தயாரித்து அதைக் காட்டி வெளிநாட்டு மக்களிடம் வசூல் செய்துவிட்டு, இப்போது நான் மஸ்ஜித் முபாரக் பெயரில் தான் புரொஃபைல் தயாரித்தேன் என்கிறார் என்ற குற்றச்சாட்டு உணர்வு இதழில் வெளியானது.
அதை மறுத்து தன் சொந்த பந்தங்களை கூட்டி வைத்து சைபுல்லாஹ் அவர்கள் நடத்திய தர்பியாவில் , நான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பயன்படுத்தி 40 லட்சம் அல்ல, 40 ரூபாய் வாங்கியதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெயர் கொண்ட ரசீதைக் காட்ட முடியுமா எனக்கேட்கிறார். அதுமட்டுமின்றி யார் வேண்டுமானாலும் யார் மீது வேண்டுமானலும் குற்றச்சாட்டு வைக்கலாம்.இப்படி குற்றச்சாட்டு வைப்பதாக இருந்தால் நான் கூட வைப்பேன். ஜூலை 4 மாநாட்டிற்கு நான் பல கோடி ரூபாய் வசூல் செய்து கொடுத்தேன். அதற்கு இன்றுவரை கணக்கு வரவில்லை என்று சொல்லியிருக்கிறார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தைப் பொருத்தவரை இறைவனின் அருளால் இன்று வரை கணக்கு விசயத்தில் பிசகியது இல்லை. காரணம் ஒரு கிளை வசூல் செய்து கொடுக்கும் பணத்திற்கு அவர்கள் சார்ந்த அந்த மாவட்ட நிர்வாகத்திடம் கிளை நிர்வாகம் கணக்கு கேட்கும். அதேபோல மாவட்ட நிர்வாகம் கிளை நிர்வாகத்திடம் கணக்கு கேட்கும். மாவட்டம் மூலம் மாநிலத்திற்கு வரும் வகைகளுக்கு மாநில நிர்வாகத்திடம் மாவட்ட நிர்வாகம் கணக்குக் கேட்கும். அதே போல கிளை மாவட்ட கணக்கு வழக்குகளை மாநில நிர்வாகம் கணக்குக் கேட்கும். இது எல்லாவற்றையும் சேர்த்து வைத்து தணிக்கைக் குழு கணக்குக் கேட்கும்.
கொடுக்கப்படும், வாங்கப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் ஒவ்வொரு பைசாவிற்கும் ரசீது கொடுக்கப்பட வேண்டும். மாநில நிர்வாகம் கணக்கில் தவறு செய்திருந்தால் தணிக்கைக் குழுவிற்கு பதில் சொல்லியாக வேண்டும். மாநில நிர்வாகத்தின் மீது ஏதேனும் ஒரு குற்றச்சாட்டு வந்தால் மேலாண்மைக் குழு அதைக் கேட்கும். மாநில நிர்வாகத்திற்கு எதிராக பொதுக்குழுவைக் கூட்டும் உரிமை மேலாண்மைக் குழுவிற்கு இருக்கின்றது.
இது தான் ஒரு நிர்வாகத்தின் செட்டப். இந்த செட்டப் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தவிர வேறு எந்த அமைப்புகளிலும் கிடையாது.
ஆக யார் நினைத்தாலும் இங்கே ஊழல் செய்து விடமுடியாது. அப்படியே செய்தாலும் அவர் மிக விரைவில் மாட்டிக் கொள்வார்கள். ஆனால் சைபுல்லா ஹாஜா அவர்கள் மிகத்தந்திரமாகச் செயல்பட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தைப் பயன்படுத்தி ஒரு மாபெரும் ஊழலைச் செய்து விட்டு அது சம்பந்தமாக கணக்குக் கேட்டால் அது முபாரக் கமிட்டி என்றும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு கணக்கு கேட்க உரிமை இல்லை என்றும் சொல்கிறார்.
அவர் மீது வைக்கப்பட்ட இரண்டாவது குற்றச்சாட்டுகளுக்கு முழுமையான தெளிவான பதிலுக்கு வீடியோவைப் பார்க்கவும்.
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோதிருகு தாளங்கள் தொடரும் இன்ஷா அல்லாஹ்...,
18.07.2011. 03:10
சைபுல்லாஹ் ஹாஜா பல அமைப்புகளின் பெயர
சைபுல்லாஹ் ஹாஜா பல அமைப்புகளின் பெயரில் இயங்கினாரா?
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அமைப்பு விதிகளை மீறி செயல்பட்ட காரணத்தினாலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரைப் பயன்படுத்தி பணம் வசூல் செய்து, மஸ்ஜித் முபாரக் அருகே இருக்கும் இடத்தை வாங்கி அதை தனி நபர் பெயரில் பதிவு செய்ததற்காகவும், கடந்த 19/06/2011 அன்று கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் அனைத்துக் கிளைகளின் பொதுக்குழுவில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டு ஜமாஅத்தின் அடிப்படி உறுப்பினரில் இருந்தும் சைபுல்லாஹ் ஹாஜா நீக்கப்பட்டார்.
அவரது நீக்கம் தொடர்பாக 15 காரணங்கள் உணர்வு வார இதழில் பட்டியலிடப்பட்டன. ஆனால் அதெல்லாம் பொய் என்றும் தன்னை வேண்டுமென்றே நீக்கிவிட்டார்கள் என்பன போன்ற பல குற்றச்சாட்டுகளை சுமத்தியும் சைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் தன்னுடைய சொந்த பந்தங்கள், ஆதரவாளர்கள் மற்றும் மதரஸா மாணவர்களைக்கூட்டி வைத்து தர்பியா என்ற பெயரில் சமீபத்தில் ஒரு நீண்ட வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதிலே அவர் கேட்கும் கேள்விகள் நியாமானதாக இருப்பது போலத் தெரிந்தாலும், அவரின் சொற்களில் இருக்கும் பொய்களையும் அபத்தங்களையும் அவரே பல இடங்களில் வெளிப்படுத்துகிறார். இருந்தாலும் அவர் தன்னை நியாயப்படுத்திக் கொள்ள எடுத்து வைக்கும் அத்தனை வாதங்களும் எவ்வளவு தவறானது என்பதை உலகத் தமிழ்மக்கள் அனைவருக்கும் தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காக அப்துந்நாசிர் அவர்களும், அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி அவர்களும் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து சைபுல்லா ஹாஜா தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேல் சுமத்தியிருக்கும் அத்தனை குற்றச்சாட்டுகளும் எவ்வளவு போலியானவை என்பதை வெளிப்படுத்துகின்றனர். ஒவ்வொரு குற்றச்சாட்டுகளுக்கும் எண் வாரியாக பதில் அளித்திருக்கிறார்கள். இன்று முதல் ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு கேள்வி வீதம் அவர் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் நமது தளத்தில் இடம்பெற இருக்கிறது.
* சைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போதே முபாரக் ஜமாஅத், முபாரக் நலச்சங்கம், தக்வா ஜமாஅத், கடையநல்லூர் இஸ்லாமிய தாவா குழு, அக்ஸா மாணவர் அமைப்பு என்ற பெயர்களில் செயல்பட்டது உண்மையா இல்லையா?
* மேலப்பாளையத்தில் செயல்படும் M ஜாக் மற்றும் INTJ ஆகிய அமைப்புகளின் நிலை என்ன?
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோதொடரும் இன்ஷா அல்லாஹ்
16.07.2011. 03:36
லால்பேட்டை மதரசாவின் ஆபாச பத்வா
லால்பேட்டை மதரசாவின் ஆபாச பத்வா
மதஹபு நூல்களில் ஆபாசங்கள் மலிந்து கிடக்கின்றன என்பதை ஷேக் அப்துல்லா ஜமாலியுடன் நாம் நடத்திய விவாதத்தின் மூலம் நாம் நிரூபித்தோம்.
நாம் எடுத்து வைத்த எந்த ஆபாசத்துக்கும் ஷேக் அப்துல்லா ஜமாலியால் பதில் சொல்ல முடியவில்லை என்பதை அந்த விவாத்தில் நீங்கள் பார்த்தீர்கள். நாம் எழுப்பிய ஒவ்வொரு கேள்விக்கும் ஷேக் அப்துல்லா ஜமாலி அளித்த ஒரே பதில் ”இது தலைப்புக்கு அப்பாற்பட்டது” என்பது தான். தொடர்ந்து படிக்க 01.06.2011. 23:36 ஜெர்ரி தாமஸ் விவாதத்தில் இருந்து ஓட்டம் கிறித்தவ மத போதகரான ஜெர்ரி தாமஸ் வித்தியாசமான மத போதகராவார். இவர் முஸ்லிம்களை விவாதத்துக்கு அழைப்பதையும் அவர்களில் யாராவது விவாதம் செய்ய மறுத்தால் அதை அம்பலப்படுத்தி இஸ்லாம் பொய்யான மார்க்கம் என்று பிரச்சாரம் செய்வதற்குப் பயன்படுத்திக் கொள்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். இஸ்லாத்தையும் கிறித்தவத்தையும் கரைத்துக் குடித்த மாமேதை என்ற தோற்றத்தை அவர் அப்பாவி கிறித்தவ மக்களிடம் ஏற்படுத்தி இருக்கிறார். தொடர்ந்து படிக்க 03.05.2011. 06:43 இது தான் நீடூர் மருத்துவமனை வக்பு வாரியத்தின் சார்பில் மருத்துவக் கல்லூரி துவங்குவதற்கு முன்னோட்டமாக நீடூரில் வக்பு வாரியத்த்ன் சார்பில் மருத்துவமனை கட்டப்பட்டு வருவதாக வக்பு வாரியத்தலைவர் சொல்லி இருக்கிறார். தொடர்ந்து படிக்க 06.02.2011. 02:05 தவ்ஹீத் ஜமாஅத்தும் தேர்தல் நிலைபாடும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேர்தலில் போட்டியிடாத இயக்கம் என்றாலும் சமுதாயத்துக்கு பயன் தரும் கோரிக்கைகளை வைத்து அதற்கேற்ப ஆதரவு நிலைபாட்டை எடுத்து வந்துள்ளது. எங்களுக்கு என்ன தருவாய் என்று பேரம் பேசாத இயக்கமாக தவ்ஹீத் ஜமாஅத் திகழ்கிறது. இப்படி மற்றவர்களும் மாறி மாறி ஆதரித்துள்ளனர். தொடர்ந்து படிக்க 05.02.2011. 13:23 வக்பு வாரிய மருத்துவக் கல்லூரி குழப்புவது யார் வக்பு வாரிய மருத்துவக் கல்லூரி குறித்து நாம் கேள்விகளை எழுப்பியவுடன் கதி கலங்கிப் போன வாரியத் தலைவர் அப்துல் ரஹ்மானும், அதற்காக அமைக்கப்பட்ட குழுவினரும் மக்களுக்கு விளக்கம் அளிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்கள் அளிக்கும் விளக்கமே அவர்களிடம் உண்மையும் நேர்மையும் இல்லை என்பதைச் சந்தேகமற நிரூபிக்கின்றது. தொடர்ந்து படிக்க 19.01.2011. 09:05 பாப்புலர் ஃப்ரண்ட் பற்றி பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தினரைப் பற்றி உங்கள் கருத்து என்ன? தொடர்ந்து படிக்க 18.01.2011. 01:13 தப்லீஃக் ஜமாஅத்தைப் பற்றி? சல்மான் பார்சி. பதில் : தொடர்ந்து படிக்க 17.01.2011. 13:30 மனம் திருந்திய காதியானி மிர்ஸா குலாம் என்பவன் தன்னை நபி எனக் கூறி புதிய மதத்தை உருவாக்கினான். இதற்காக அவன் புளுகிய புளுகு மூட்டைகள் கணக்கில் அடங்காதவை. தொடர்ந்து படிக்க 15.01.2011. 00:53 வக்பு வாரிய மருத்துவக் கல்லூரி? வக்பு வாரியத்தின் சார்பில் மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப் போவதாக சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், பணம் படைத்தவர்களுடன் கலந்துரையாடல்கள், தனியார் தொலைக் காட்சி நிகழ்சிகள் மூலம் வக்பு வாரியம் மூலம் மருத்துவக் கல்லூரி துவங்க இருப்பதாகவும் தனவந்தர்கள் பத்து லட்சம் ரூபாய் ஷேர் கொடுத்து உறுப்பினராகலாம் என்றும் மக்களுக்குச் சொல்லப்படுகிறது. தொடர்ந்து படிக்க 12.01.2011. 12:56 அபூ ஹனீபா பற்றி பீஜே கூறியது சரியா இரண்டு வருடங்களுக்கு முன்பு ரமலான் சொற்பொழிவின் போது, தாங்கள் ஆற்றிய சொற்பொழிவில், இமாம் அபூஹனிபா அவரகளைப் பற்றி கூறிய ஒரு செய்தி. ஷாபி இமாம் அவர்களிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி. "அபூஹனிபா இமாம் ஏன் மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்கு ஏன் செல்லவில்லை" என்று. இதற்கு ஷாபி இமாம் அவர்கள், "ஷைத்தான் இந்த இரண்டு இடங்களுக்கும் வர மாட்டான்" என்று கூறியதாகக் கூறினீர்கள். தொடர்ந்து படிக்க 09.12.2010. 07:04 ஹஜ்ஜின் பெயரால் கொள்ளையோ கொள்ளை இந்தியாவில் அதிகம் கொள்ளை லாபம் அடிக்கும் தொழில்களில் ஹஜ் தொழில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. தனியார்கள் நடத்தும் ஹஜ் சர்வீஸ்கள் முஸ்லிம்களின் மார்க்கப் பற்றை மூலதனமாகக் கொண்டு கொள்ளை அடிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து படிக்க 08.11.2010. 18:31 ஹாமித் பக்ரி கைதும் கைவிட்ட தமுமுகவும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் மாநிலப் பேச்சாளரும் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பின் (இது தான் பின்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.) முன்னாள் மாநிலத் தலைவருமான மவ்லவி ஹாமித் பக்ரி 2002 ஆம் ஆண்டு புனித ரமலான் மாதம் பிறை 27 ல் (2/12/2002) கைது செய்யப்பட்டார். பொதுவாக அநியாயமாக யார் கைது செய்யப்பட்டாலும் குரல் கொடுப்பதற்காகவும் களம் இறங்கி போராடுவதற்காகவும் இருந்த ஒரே அமைப்பாக அன்று தமுமுக மட்டுமே இருந்தது. இந்த இயக்கத்துடன் தொடர்பு இல்லாதவர்கள் பாதிக்கப்படும் போது கூட இந்த இயக்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருந்தது. தொடர்ந்து படிக்க 19.10.2010. 00:26 சமுதாயம் ஒன்றுபட்டது! முஸ்லிம் சமுதாயம் பிளவு பட்டு சிதறிக் கிடக்கிறதே என்று கவலைப்பட்ட மக்களுக்கு மருந்திடும் விதமாக சமுதாயம் இப்போது ஒன்றுபட்டுள்ளது. தொடர்ந்து படிக்க 09.10.2010. 22:50விவாதத்தில் இருந்து ஜெரி தாமஸ் ஓட்டம
இது தான் நீடூர் மருத்துவமனை
தவ்ஹீத் ஜமாஅத்தும் தேர்தல் நிலைபாடு
மருத்துவக் கல்லூரி குழப்புவது யார்
பாப்புலர் ஃப்ரண்ட் இயக்கம் பற்றி
தப்லீஃக் ஜமாஅத்தைப் பற்றி?
மனம் திருந்திய காதியானி
வக்பு வாரிய மருத்துவக் கல்லூரி?
அபூ ஹனீபா பற்றி பீஜே கூறியது சரியா
ஹஜ்ஜின் பெயரால் கொள்ளையோ கொள்ளை
ஹாமித் பக்ரி கைதும் கைவிட்ட தமுமுகவு
சமுதாயம் ஒன்றுபட்டது!
