ஸலஃபியின் மறுப்புக்கு மறுப்பு

ஃஸலஃபியின் மறுப்புக்கு மறுப்பு

நேயர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். இஸ்மாயீல் ஸலஃபி அவர்களின் தொடர் கட்டுரை தவறானது என்பதை விளக்கும் வகையில் தொடராக வாரந்தோறும் மறுப்புக் கட்டுரை வெளியிடுவதாக அறிவித்து முதல் தொடரை வெளியிட்டோம். அந்தத் தொடருக்கு இஸ்மாயீல் ஸலஃபி மறுப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளார்.

மொத்தமாக மறுப்பு வெளியிடாமல் உடனுக்குடன் அவர் மறுப்பு வெளியிடுவது வரவேற்கத்தக்கது தான். அவர் எழுதிய மறுப்புக்கு மறுப்பு என்ற முதல் தொடரை தேடி அலையும் சிரமம் வைக்கக் கூடாது என்பதால் நமது இனைய தளத்திலேயே அதை வெளியிட்டுள்ளோம். அதை வாசிக்க விரும்புவோர் இங்கே கிளிக் செய்யவும்.

அவரது மறுப்புக் கட்டுரை என்னை நேரடியாக அழைத்துப் பேசும் வகையில் உள்ளதால் நானும் அவரை நேரடியாக அழைத்துப் பேசும் வகையில் பதிலளித்துள்ளேன். அவரது எந்த வாதத்துக்கும் பதில் அளிக்காமல் விடுபடவில்லை என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம். மேலும் நாம் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் தக்க பதில் சொல்லவில்லை என்பதையும் அறியலாம்.

மறுப்புக்கு மறுப்பும் அதற்கு மறுப்பும்

இஸ்மாயீல் சலஃபி அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். எனது முதல் கட்டுரைக்கு உடனே மறுப்பு எழுதி உள்ளீர்கள். வரவேற்கிறேன். ஆனால் வேகமாகத் துவங்கி விட்டு கடைசியில் பின்வருமாறு எழுதி சுருதி இறங்கியிருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 

இனி வரும் தொடர்களில் அவரது அவதூறுகள் குறித்து விரிவான விளக்கமளிக்கப்பட மாட்டாது. நாளை மறுமையில் அதன் பெறுபேற்றை அல்லாஹ்வின் நீதி மன்றத்தில் வைத்துப் பெற்றுக் கொள்வோம். அவரது மார்க்க ரீதியான கருத்துக்களுக்கு மட்டும் இத்தொடரில் பதிலளிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்! என்று மறுப்பை முடித்துள்ளீர்கள்.

இது சரியான முடிவு அல்ல. அனைத்துக்குமே நீங்கள் பதிலளிப்பது தான் முறையானது. பதில் சொல்ல முடியாத போது அல்லாஹ்விடம் பொறுப்பு சாட்டுவதாகக் கூறுவதை முஜீப் போலவே நீங்களும் பின்வருமாறு எழுதி கேடயமாகப் பயன்படுத்துகிறீர்கள்.

 

அவர் வேண்டுமானால் முஜீபுர் ரஹ்மான் உமரியுடன் நடந்த தெருச் சண்டையின் போது,அல்லாஹ்வைப் பற்றிப் பேசாதீங்க என்று கூறியதற்குத் தவ்பாச் செய்து கலிமாச் சொல்லி இஸ்லாத்தில் இணையட்டும்

என்று முஜீபுடன் நடந்த வாக்கு வாதத்தை ஆதாரமாகக் காட்டும் அளவுக்கு உங்கள் மார்க்க அறிவு அமைந்துள்ளது. அதனால் தான் முஜீப் கூறுவதையே ஆதாரமாகக் காட்டத் துணிந்து விட்டீர்கள். முஜீப் கூறிய கிளிப்பையும் எடுத்துக் காட்டியுள்ளீர்கள்.

ஒரு விவாதம் நடக்கிறது. அதில் ஆதாரங்களைக் காட்டி வாதிடுவது தான் முறை. அதை விடுத்து நான் சொல்வது தான் சரி. மறுமையில் பார்த்துக் கொள்வோம் என்பது இயலாமை. இதற்கு அல்லாஹ்வைக் கருவியாக்குவது கண்டிக்கத்தக்கது. விவாதத்தின் போது முஜீப் அழுது ஒப்பாரி வைத்தது வெளிப்படையானது. இவ்வளவு கேவலப்பட்டு விட்டோமே என்ற எண்ணத்தில் அவரையும் மீறி வந்த அழுகை என்பது விவாதத்தைப் பார்க்கும் அனைவருக்கும் தெரியும். நான் ஏன் அழுதேன் என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும் என்று ஒருவர் அல்லாஹ்வைக் கேடயமாக்குகிறார். அது உங்களுக்குச் சரி என்று படுகிறது என்றால் இதை என்னவென்பது?

நீங்கள் பாரதூரமான ஒரு குற்றம் செய்து விட்டதாக நான் குற்றம் சாட்டுகிறேன் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் அது பற்றி கேள்வி கேட்கிறீர்கள். நான் சொன்னது உண்மை என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும் என்று அப்போது நான் கூறுகிறேன் என்றால் நான் சொல்வது உண்மை என்று ஆகிவிடுமா? அல்லது அல்லாஹ்வின் கன்னியத்தை நான் குலைத்ததாகக் கருதுவீர்களா? எவர் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசி விட்டு, எழுதி விட்டு நான் எழுதியது சரி என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும் என்று கூற முடியுமே? இது தான் அல்லாஹ்வை மதிக்கும் முறையா? இப்போது நீங்கள் எழுதிய மறுப்புக்குக் கூட நான் இதே பதிலைக் கூறி ஒற்றை வரியில் உங்களைப் பொய்யாக்கி விட முடியுமே?

நான் எழுதியது தான் சரி. இது அல்லாஹ்வுக்குத் தெரியும் என்று நான் கூறினால் அது அயோக்கியத்தனமாகத் தான் கருதப்படும். அல்லாஹ்வுக்கு எல்லாம் தெரியும் என்பது தனி. இது இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கை. இதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. யார் சொல்வது சரி என்ற பிரச்சனை வரும் போது அல்லாஹ்வைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. ஒரு விஷயத்தை இவ்வுலகில் நிரூபிப்பதற்கு எந்த முறையைக் கையாள வேண்டுமோ அந்த முறையைத் தான் கையாள வேண்டும்.

எனவே முஜீப் போன்றவர்கள் இது போன்று உளறுவதை நீங்கள் கண்டிக்க வேண்டுமே தவிர அதை ஆதாரமாகக் காட்டி அதே வழியில் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அல்லாஹ்வைப் பற்றிப் பேசாதீர்கள் என்று நான் முஜீபிடம் சொன்னது கலிமாச் சொல்லும் அளவுக்குக் குற்றம் என்று கூறும் அளவுக்கு அறிவீனராக நீங்கள் இருப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை. அல்லாஹ்வைக் கண்ணியப்படுத்தக் கடமைப்பட்ட ஒருவன் தனது பலவீனத்தை மறைப்பதற்கு அல்லாஹ்வின் பெயரைத் தவறாகப் பயன்படுத்துகிறான். அவ்வாறு பயன்படுத்துபவனைக் கண்டிக்கக் கடமைப்பட்ட நீங்கள் என்னை தவ்பாச் செய்யச் சொன்னால் அல்லாஹ்வைப் பற்றிய அகீதாவே உங்களுக்குத் தெரியவில்லை.

حدثنا عبد الوهاب بن نجدة وموسى بن مروان الرقي قالا حدثنا بقية بن الوليد عن بحير بن سعد عن خالد بن معدان عن سيف عن عوف بن مالك أنه حدثهم أن النبي صلى الله عليه وسلم قضى بين رجلين فقال المقضي عليه لما أدبر حسبي الله ونعم الوكيل فقال النبي صلى الله عليه وسلم إن الله يلوم على العجز ولكن عليك بالكيس فإذا غلبك أمر فقل حسبي الله ونعم الوكيل ابوداود 3143 واحمد 22858

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இரண்டு பேருக்கு மத்தியில் நடந்த வழக்கில் ஒருவரிடம் தக்க சான்று இருந்ததன் அடிப்படையில் அவருக்குச் சாதகமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். அப்போது அந்த மனிதர் 'எனக்கு அல்லாஹ் போதுமானவன்' என்று கூறினார். அந்த வார்த்தை சரியானது தான் என்றாலும் பயன்படுத்திய நோக்கம் தவறானதாக இருந்தது. எனக்குத் தான் சொந்தம் என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும் எனபது அவரது நோக்கம். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ் இயலாமையைப் பழிக்கிறான். நீ அறிவுபூர்வமாகச் செயல் பட வேண்டும். அதை மீறி ஏதும் நடந்து விட்டால் அல்லாஹ் போதுமானவன் எனக் கூறு என்றார்கள். தனது பலவீனத்தை மறைக்க அல்லாஹ்வைப் பயன்படுத்தக் கூடாது என்ற சாதாரண அறிவு கூடவா உங்ளுக்கு இல்லாமல் போய்விட்டது? நபிகள் நாயகம் (ஸல்) கலிமாச் சொல்ல வேண்டும் என்பீர்களா? ஒரு மனிதன் மீது உள்ள வெறுப்பு உங்களை எந்த அளவுக்கும் கொண்டு செல்லுமா?

இஸ்மாயீல் சலஃபி மகா கெட்டவர்; இது அல்லாஹ்வுக்குத் தெரியும் என்று ஒருவர் கூறினால் அது பற்றி உங்கள் தீர்ப்பு என்ன? 'அல்லாஹ்வுக்குத் தெரியும் என்று அவர் கூறி விட்டதால் நான் அயோக்கியன் தான்' என்று ஒப்புக் கொள்வீர்களா? அல்லது அல்லாஹ்வை இப்படிப் பயன்படுத்தாதே என்பீர்களா? இப்படிச் சொல்லி விட்டு தினமும் கலிமாச் சொல்லி இஸ்லாத்தில் சேருவீர்களா? இதற்கு நேரடியாக எனக்குப் பதில் தர வேண்டும்.

இனி மேல் நான் எழுதும் விமர்சனங்களுக்கும் நீங்கள் பதில் எழுத வேண்டும் என்பதே என் விருப்பம்.

அடுத்ததாக ஒருவர் குறையை ஒருவர் அம்பலப்படுத்தாலாமா? தனி நபரைத் தாக்கலாமா என்றெல்லாம் அறிவுரை கூறியுள்ளீர்கள்

எனது கட்டுரையை வெளியிட்ட இணையத் தளத்தைச் சாடியவாறே அவரது விமர்சனம் ஆரம்பமாகின்றது. அனைத்து குப்பைகளின் குப்பைத் தொட்டியாக பயன்பட்டு வரும் எந்தக் கொள்கையும் இல்லாத பலவேசம் டாட்காம் குப்பைத் தொட்டி, கொள்கை இல்லாதது பலவேசம் டாட்காம் இவைகளெல்லாம் ஒரு பண்பட்ட அழைப்பாளரின் பதப் பிரயோகமா? என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளீர்கள்.

முதலில் துவக்கி வைப்பவர் தான் மார்க்கத்தில் குற்றவாளி. இரண்டாவதாக அதற்குப் பதிலடி கொடுப்பவர் குற்றவாளியாக மாட்டார்.

அநீதமிழைக்கப்பட்டவரைத் தவிர வார்த்தையில் தீயதை பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். திருக்குர்ஆன் 4:148

உங்கள் மதனிகள் வெளியிட்ட மொழிபெயர்ப்பைத் தான் மேலே பயன்படுத்தியுள்ளேன். ஒருவனுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அவன் தீய சொற்களைப் பேசுவது கூட தவறல்ல என்று என்னைப் படைத்த இறைவன் அணுமத்தித்துள்ளான் என்பதால் நான் பொய் கலக்காமல் எவ்வளவு கடுமையாக சொற்களைப் பயன்படுத்தினாலும் நான் குற்றவாளியாக மாட்டேன். கருத்துக்களை விமர்சிப்பதோடு நிற்காமல் தனி நபர் விமர்சனத்தை ஆரம்பித்தது நானா? நீங்களா? தரக் குறைவாக எழுதுவதைத் துவக்கி வைத்தது நானா? நீங்களா? இதற்கான தீர்ப்பை நான் வழங்குவதை விட உங்கள் சகாக்கள் வழங்கி விட்டனர்.

26ஆலிம்களை அழைத்து நீங்கள் அலோசனைக் கூட்டம் நடத்திய போது நீங்கள் தரக் குறைவாக விமர்சிப்பதாக அவர்களே சுட்டிக் காட்டி அதை உங்கள் பத்திரிகையிலும் வெளியிட்டீர்கள்.


2009 ஜூன் இதழ் பக்கம் 15, 16


தரக்குறைவாக விமர்சனம் செய்வதை நீங்கள் ஆரம்பித்து வைத்து விட்டு, உங்கள் சகாக்களே அருவருப்படையும் வகையில் தரக்குறைவாக விமர்சனம் செய்து விட்டு நான் மறுப்பு எழுதும் போது மட்டும் அறிவுரை கூறுவது உங்களுக்கே கேலிக் கூத்தாகத் தெரியவில்லையா? தீய பண்புகளுக்கு எதிராகக் கடும் சொல்லைப் பயன்படுத்துவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது தான். அது சரியானதாக இருக்க வேண்டும். அவ்வளவு தான்.

அன்பளிப்பு கொடுத்து விட்டு திரும்பக் கேட்பவன் வாந்தி எடுத்து விட்டு திரும்பச் சாப்பிடும் நாயைப் போன்றவன் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியது கடுமை தான். ஆனால் அது உண்மையை உரத்துக் கூறுவதற்காக இழி செயலை அதன் முழு அர்த்தத்துடன் மக்கள் விளங்குவதற்காக சொல்லப்பட்டதால் இது தரக் குறைவானதல்ல.

திருக்குர்ஆனில் கூட இதற்கு ஏராளமான சான்றுகளைக் காட்டலாம்

நாம் நாடியிருந்தால் அதன் மூலம் அவனை உயர்த்தியிருப்போம். மாறாக அவன் இவ்வுலக வாழ்வை நோக்கிச் சாய்ந்து விட்டான். தனது மனோ இச்சையைப் பின்பற்றினான். அவனுக்குரிய உதாரணம் நாய். அதை நீ தாக்கினாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது. அதை விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது. நமது வசனங்களைப் பொய்யெனக் கருதிய கூட்டத்தின் உதாரணம் இதுவே. அவர்கள் சிந்திப்பதற்காக இவ்வரலாறுகளைக் கூறுவீராக! திருக்குர் ஆன் 7:176

தவ்ராத் சுமத்தப்பட்டு பின்னர் அதைச் சுமக்காமல் (அதன் படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடு களைச் சுமக்கும் கழுதையைப் போன்றது. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கருதுவோருக்குரிய உதாரணம் மிகவும் கெட்டது. அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்டமாட்டான். திருக்குர் ஆன் 62:5

அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர். திருக்குர் ஆன் 74:50,51

நான் சுட்டிக் காட்டும் அந்த இணைய தளம் ஏதாவது ஒரு கொள்கையில் இருந்தால் இவ்வாறு நான் கூறக் கூடாது. ஆனால் அவர்கள் உங்கள் கருத்தையும் வெளியிடுகிறார்கள். அதற்கு முரணான விடியல், ஜமாதே இஸ்லாமி, ஜாக், தமுமுக என யாருடைய கருத்தையும் சிந்தித்துப் பார்க்காமல் சீர் தூக்கிப் பார்க்காமல் வெளியிடுகின்றனர். அவை ஒன்றுக்கு ஒன்று முரணாக இருப்பது பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. முனாஃபிக்குகளின் செயலுக்கும் இரட்டை வேடத்துக்கும் சரியான உதாரணமாகத் திகழ்கிறார்கள். அதை வெளியிட வேண்டுமானால் என்னைத் தாக்கி எழுதியிருக்க வேண்டும் என்பது தான் ஒரே நிபந்தனை. இப்படி நடக்கிறார்களா? இல்லையா?

சரி மார்க்க விஷயத்தில் தான் இப்படி மட்டும் தான் இப்படி நடக்கிறார்கள் என்பதில்லை. மாறாக இவர்களுக்கு அறிவில்லாத, இவர்களுக்குத் தெரியாத, இவர்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களையும் வெளியிடுகிறார்கள். பிற இயக்கங்களுடன் எங்களுக்கு உள்ள விவகாரங்களை அவை புளுகு மூட்டை என்ற போதும் வெளியிட்டு வருகிறார்களா? இல்லையா? யார் வேண்டுமானாலும் குப்பைகளைக் கொட்டலாம் என்ற அடிப்படையில் இயங்கும் இணைய தளத்தை அதற்கேற்ற வார்த்தைகளால் விமர்சிப்பது பட்டப்பெயர் ஆகுமா? அதுவும் அவர்களே முதலில் ஆரம்பித்து வைத்திருக்கும் போது அதற்கேற்ப நான் பதில் சொல்வது எப்படி தவறாகும்?

பொய், அவதூறு அனைத்தும் வாந்தி எடுத்ததை விட அசிங்கமானவை. அதை அப்படியே வெளியிடுவோரைப் பற்றி அதற்குரிய வார்த்தைகளால் விமர்சிப்பதற்கு வக்காலத்து வாங்குவது பலவேசத்தில் அவர்களுடன் நீங்களும் ஒன்றுபடுவதாலா? என்று கேட்க விரும்புகிறேன். பத்து வருடங்களாக ஒரு தனி மனிதனைப் பற்றி எவன் எழுதினாலும் அவர்கள் வெளியிட்டு வருவது உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. அநீதி இழைக்கப்பட்ட நான் அல்லாஹ் அனுமதித்துள்ளான் என்ற அடிப்படையில் முகமூடி அணியாமல் மற்றவர்களின் பெயரைப் பயன்படுத்தாமல் உண்மையை சில நாட்கள் எழுதியது மட்டும் பாதிக்கிறது என்றால் உங்கள் பார்வைக் கோளாறு உங்களுக்கே புரியவில்லையா? ஏன் தரங்கெட்ட முறையில் இப்படி எல்லாம் எழுதுகிறீர்கள் என்று தரங்கெட்ட அவர்களிடம் சொல்லிக் கண்டித்து இருப்பீர்களா? சம்மந்தமில்லாத வகையில் நீங்கள் சுட்டிக்காட்டிய அந்த வசனங்கள் இன்று தான் இறங்கியதா?

என்னைப் பார்த்து இந்த அறிவுரை சொல்ல உங்களுக்கு வெட்கம் வர வேண்டாமா? நாம் தானே தரங்கெட்ட விமர்சனத்தை ஆரம்பித்து வைத்தோம். பத்து வருடமாக இவன் பொறுமையாக இருந்தும் அதே கேவலமான வேலையைச் செய்தோமே என்று கூச்சமாவது உங்களுக்கு வர வேண்டாமா?

அடுத்து வழக்கம் போல் பீஜேயைத் தக்லீது செய்கிறார்கள் என்ற வார்த்தையையும் மறவாமல் பயன்படுத்தி உள்ளீர்கள். வாதத்தில் சரக்கு இல்லாத போது பலவேசக் கூட்டம் இதைத் தான் தனது தோல்வியை மறைக்க திரையாகப் பயன்படுத்துகிறது.

சகோதரர் பீஜே அவர்களே! உங்களை ஒரு கூட்டம் சாணுக்கு சாண் பின்பற்றிக் கொண்டிருக்கின்றது. (பலவேச) இணையத் தளத்திற்கு நீங்கள் சூட்டியுள்ள பட்டப் பெயரையே உங்களது சகோதரர்களும் பயன்படுத்தி வருவதிலிருந்து இதை அறியலாம். எனவே, உங்களை ஒரு கூட்டம் பின்பற்றுகின்றது என்ற பொறுப்புணர்வுடனும், அவர்களைத் தவறான வழிக்கு அழைத்துச் சென்று அவர்களது பாவத்தையும் சுமக்கும் துர்ப்பாக்கிய நிலை உங்களுக்கு வந்து விடக் கூடாது என்ற அச்சத்துடனும் நீங்கள் செயல்பட வேண்டும் என அன்புடன் நஸீகத்துச் செய்கின்றேன்.

நான் சொல்வது சரியாக இருக்கிறது என்பதற்காகத் தான் என்னைப் போலவே அவர்களும் பலவேசம் டாட் காம் என்று பயன்படுத்துகிறார்கள். ஒரு மனிதன் சொல்வது சரியாக இருக்கும் போது அது சரியாக இருக்கிறது என்பதற்காக அதைப் பின்பற்றுவது தக்லீத் அல்ல. ஒரு மனிதன் சொல்வது சரியாக இருந்தாலும், தவறாக இருந்தாலும் அவர் கூறுவதைப் பின்பற்றுவேன் எனக் கூறுவது தான் தக்லீத். உங்களையும் உங்கள் அன்சாருஸ்ஸுன்னவையும் அந்த வகையில் சேர்க்கலாம்.

ஜும்மாவுக்கு இரண்டு பாங்கு சொல்லி வந்த நீங்கள் நான் வந்து விளக்கிய பின் மக்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள். அப்போது உங்கள் தலைவர் சித்தீக் மதனீ கூறியது என்ன? என் கருத்து இரண்டு பாங்கு தான், பீஜே சொலவதால் மாற்றுகிறேன் என்று சொன்னாரே? நீங்களும் உடன் இருந்தீர்களே அது தான் தக்லீத்.

என்னை தக்லீத் செய்த நீங்கள் எல்லாம் என்னைப் பிடிக்கவில்லை என்றவுடன் நான் சொன்ன சரியான விஷயங்களையும் எதிர்க்கிறீர்களே இது தான் தக்லீத் என்று சுட்டிக் காட்டுகிறேன். என்னை தக்லீத் செய்தவர்கள் என்னுடன் தொடர்ந்து இருக்க மாட்டார்கள். என்னை தக்லீத் செய்யாமல் சிந்தித்து சரியானதை ஏற்றுக் கொள்பவர்கள் தான் என்னுடன் இருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக் காட்டுகிறேன்.

'ஒரு மனிதருடன் இருந்தேன். அவர் கறுப்பை வெள்ளை என்றார். நானும் வெள்ளை என்றேன். வெள்ளையைக் கறுப்பு என்றார். நானும் அப்படியே கூறினேன்' என்று நாகூர் பொதுக் கூட்டத்தில் பகிரங்கமாக ஒருவர் (ஹாமித் பக்ரி) முழங்கினார். அவர் இப்போது எங்களோடு இல்லை. உங்கள் பல வேசத்தில் இருக்கிறார்.

பீஜே என்பவர் சொன்னதால் தான் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று சொன்னோம். தமுமுவில் நடந்த அனைத்து தவறான முடிவுகளுக்கும் பீஜே தான் காரணம் என்று தமுமுக கூறியது. என்னை தக்லீத் செய்த அவர்கள் இப்போது உங்கள் பலவேசத்தில் இருக்கிறார்கள்.

முஸ்லிமல்லாதவர்களுக்கு உங்கள் தர்ஜுமா போல் வேறு இல்லை எனக் கூறி சில பிரதிகளை சொந்தச் செலவில் ஒருவர் வாங்கிச் சென்றார். முஸ்லிமல்லாதவர்களுக்கு இலவசமாக வழங்கும் வகையில் நான் ஸ்பான்சர் பிடித்து தருவேன் என்றும் கூறிச் சென்றார். அவரது ஒரு செயலை நான் கண்டித்த போது பீஜேயின் தமிழாக்கத்தில் தவறு எனக் கூறினார். (இது தனிக் கட்டுரையாக விளக்கப்படும்) அவர் தான் முஜீப். அவர் எனது தர்ஜுமாவை வாங்கிச் சென்றதற்கும் அது முற்றிலும் தவறு என்று கூறியதற்கும் உள்ள இடை வெளி மூன்றே மாதங்கள். என்னை தக்லீது செய்த அவரும் உங்கள் பலவேசத்தில் தான் உள்ளனர்.

தொண்டி விவாதத்துக்காக இலங்கை வந்து உங்களைப் போன்றவர்களிடம் பாயின்ட் வாங்கிக் கொண்டு வந்து மூக்குடை பட்டார். அந்த அளவுக்கு அவருக்கு பலவேசத்தில் தொடர்பு உண்டு.

குர்ஆன் ஹதீஸை சரியாகப் பின்பற்றும் மக்கள் தான் எம்மோடு உள்ளனர். தற்போது எங்களுக்குத் தெரியாமல் யாரேனும் தக்லீத் செய்பவர்கள் இருந்தால் எனக்கும் அவர்களுக்கும் பிரச்சனை ஏற்படும் போது உங்கள் பலவேசத்தில் சங்கமமாகி விடுவார்கள். தனி மனிதர்களை இமாம்களை மட்டுமல்ல ஏன் ஸஹாபாக்களைக் கூடப் பின்பற்றுவது கூடாது என்ற கொள்கையில் உள்ள நான் என்னைப் பின்பற்றுவதை அனுமதிப்பேனா என்ன?

எத்தனை மேடைகளில் என்னையோ எமது இயக்க உலமாக்களையோ பின்பற்றாதீர்கள் என்று நான் கூறியிருக்கிறேன். நான் இலங்கை வந்திருந்த போது உங்கள் அன்சாருஸ் ஸுன்னா வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த மேடையில் வைத்து எனக்குக் கைகொடுப்பதற்கு மக்கள் முண்டியடித்தார்கள். அதைக் கண்டித்து அந்த மேடையிலேயே நான் பேசியது எனது கொள்கையை எனது பேச்சுக்களை ஆதாரங்களுடன் உரசிப் பார்த்து ஏற்றுக் கொள்ளும் மக்களுக்கு நினைவிருக்கும். அந்த நேரம் நீங்கள் என்னைத் தக்லீது செய்யும் ஒருவராக இருந்ததாலோ என்னவோ அதை மறந்துவிட்டு இப்படிக் கதையளக்குகிறீர்கள்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் என்னைத் திருத்துபவர்களாகத் தான் என்னைச் சார்ந்தவர்கள் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் எனது தவறுகளைத் திருத்தும் சகோதரர்களில் அதிகமான மக்கள் ஆலிம்களாக இல்லை. உங்கள் நாட்டைச் சேர்ந்த ஆலிம்கள் அல்லாத வயதில் குறைந்த எத்தனையோ பேர் எனது தவறைச் சுட்டிக்காட்டி அதை நான் திருத்தியும் உள்ளேன். எனது இணையத் தளத்தில் உங்கள் கருத்துப் பகுதியே இதற்குத் தகுந்த எடுத்துக்காட்டு.

நீங்கள் காட்டிய உதாரணத்தையே இதற்கு உதாரணமாகக் கூறலாம். பலவேசம் என்று எழுதுவதற்கு முன்னர் நான் அந்த இணையத் தளத்தை பலபட்டறை என்று எழுதியிருந்தேன். இணையத்தளத்தை வாசிக்கும் நேயர்கள் பலபட்டறை என்பதற்குத் தவறான அர்த்தம் உள்ளது என்று சுட்டிக் காட்டிய பின்னர் அதை பலவேசம் என்று திருத்திக் கொண்டேன்.

என்னைச் சார்ந்த மக்கள் பலவேசம் என்று கூறுவது என்னைப் பின்பற்றியதால் அல்ல. அது தான் பொருத்தமான பெயர் என்பதற்காகத் தான். காரண காரியங்ளோடு சிந்திப்பதில் உங்களை விட அவர்கள் எவ்வளவு மேலானவர்கள் என்று புரிகிறதா?

உதாரணம் காட்டும் அறிவு கூட உங்களுக்கு இல்லை என்பதற்கு உங்கள் பின்வரும் உதாரணத்தைப் பாருங்கள்.

 

பட்டப் பெயர் சூட்டாதீர்கள் என்ற குர்ஆனின் கட்டளைக்கு முரணாக ஆரம்பிக்கப்பட்ட உங்கள் மறுப்பு முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது

என்று எழுதியுள்ளீர்கள். முதலில் பொருத்தமான உதாரணங்களைக் காட்டுவது எப்படி என்று படித்துக் கொள்ளுங்கள். சில உதாரணங்கள் எல்லாவற்றுக்கும் பொருந்தாது. உங்கள் வாதப்படி நான் முதலில் கூறியது தவறு கோணல் என்றே வைத்துக் கொள்ளுங்கள். அதனால் நான் பின்னால் கூறியது அனைத்தும் பொய் என்று ஆகிவிடுமா? இன்னும் சொல்லப் போனால் அனேகமான விடயங்கள் முதலில் கோணலாகத் தான் ஆரம்பிக்கும். கோணலான அனுபவம் தான் அதைச் சரி செய்யும்.

பிறந்த குழந்தை முதலில் பேசுவது இல்லை. நடப்பது இல்லை. சிந்தித்து செயல்படுவது இல்லை. முதல் கோணல் முற்றும் கோணல் என்ற உங்கள் உதாரணப்படி அந்தக் குழந்தை இனி மேல் ஊமையாகத் தான் இருக்கும். முடமாகத் தான் இருக்கும். மடையனாகத் தான் இருக்கும் என்று முடிவெடுக்கலாமா?

சகோதரர் பீஜே அவர்கள் கருத்தை விமர்சிக்கும் முன்னர் கருத்துடையவரது மதிப்பையும் மரியாதையையும் குறைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கின்றார். இதுவே அவரது கொள்கைப் பலவீனத்தைக் காட்டுகின்றது. அவர் எனது கண்ணியத்தைக் குறைத்து அதன் மூலம் எனது கருத்தைக் குறைத்து மதிப்பிடுவதற்காக இஸ்மாயில் ஸலபியும் அவருக்கு படியளக்கும் ஜம்யிய்யது அன்ஸாருஸ் ஸ{ன்னாவும் மார்க்கத்துக்கு ஒரு தீங்கு என்றால் கொந்தளித்து எழுக் கூடியவர்கள் அல்ல. தவ்ஹீதுக்கு எதிராகவும் இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிராகவும் செயல்படுபவர்களுக்கு எட்டுத் தொடர் என்ன எட்டு வரியிலும் பதிலளிக்காதவர்கள்
என்று குறிப்பிடுகின்றார்.
இது இவருடைய ஆழ்மனதுப் புலம்பல். நான் உங்கள் மதிப்பையும் மரியாதையையும் குறைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறதாகக் குற்றம் சாட்டியுள்ளீர்கள். நீங்கள் குறிப்பிடும் மதிப்பு மரியாதை என்பது உங்களுக்கு உங்கள் நாட்டில் இருக்கும் மதிப்பு மரியாதையையா? ஊரில் உங்களுக்குள்ள கண்ணியத்தையா? நான் என்ன சொல்கிறேன் என்பதையும் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதையும் அறிந்து தான் எழுதுகிறீர்களா?

தவ்ஹீதுக்கு எதிராகவும் இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிராகவும் செயல்படுபவர்களுக்கு எட்டுத் தொடர் என்ன எட்டு வரியிலும் பதிலளிக்காதவர்கள் என்று நான் குறிப்பிட்டது நீங்கள் தவ்ஹீதையும் இஸ்லாத்தையும் மதிக்காதவர்கள் என்ற அர்த்தத்திலா அல்லது உங்கள் கண்ணியத்தை கெடுக்கும் அர்த்தத்திலா? தவ்ஹீதுக்கும் இஸ்லாத்துக்கும் மதிப்பளிக்காத மரியாதை செய்யாத கண்ணியப்படுத்தாத உங்களை நான் கண்ணியக் குறைவாக நடத்தி உங்கள் கருத்துக்களை குறைத்து மதிப்பிட முனைகிறேன் என்ற போலி அனுதாப அலை இனியும் வேண்டாம். கொள்கையில் உறுதியாக நின்று காசுக்கு மாறடிக்காமல் சுயகவுரவத்துடன் அழைப்புப் பணி செய்து பாருங்கள். மதிப்பு மரியாதை கண்ணியத்தின் சுவையை அனுபவிப்பீர்கள்.

அடுத்து உங்கள் மறுப்புக்கு வருகிறேன்.

அதன் ஆரம்பமே தற்புகழ்ச்சியுடன் துவங்குகிறது.

 

கலந்துரையாடல் எனும் சீடியில் எனது கட்டுரை குறித்து, இதற்குப் பதிலளிக்கத் தேவையில்லை. இதற்குச் சாதாரண மக்களே பதிலளித்து விடுவர். அடுத்து, இந்தக் கட்டுரை எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. வெறும் உளறல்தான் இதிலுள்ளது என்ற அடிப்படையில் கருத்துத் தெரிவித்தவர், வெளியில் நிகழ்ச்சிகளுக்கே செல்லாமல் அறையில் இருந்து கொண்டு மறுப்பு எழுதும் அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்றால், ஏற்கனவே அவர் கூறிய உளறல் குப்பை என்ற விமர்சனத்தை அவரே வாபஸ் வாங்கிக் கொண்டார் என்றே அர்த்தமாகும்

என்று ஆரம்பித்துள்ளீர்கள்.

உங்களைப் பற்றி நீங்களே தற்புகழ்ச்சி செய்பவர் என்பதை இதன் மூலமும் நிரூபித்துள்ளீர்கள். உள்றல்கள் அவதூறுகள் ஆதாரமற்ற பொய்கள் ஆகியவற்றை அலட்சியப்படுத்துவது என்ற கொள்கையை இது வரை நான் கடைப்பிடித்தேன். சாக்கடைப் பன்றிகள் என்று ஒதுங்கி வந்தேன். இனி அவ்வாறு நடக்க மாட்டேன் என்று எனது நிலையை நான் மாற்றிக் கொண்டதால் தான் உங்கள் உளறலுக்கும் பதில் எழுதப்படுகிறது. பயங்கரமான தத்துவத்தைச் சொல்லி விட்டீர்கள் என்பதற்காக அல்ல. இது வரை உளறல்களையும், அவதூறுகளையும் கண்டு கொள்ளாமல் இருந்தேன்; இனி மேல் அவ்வாறு இருக்க மாட்டேன் என்று இதே இணைய தளத்தில் பல இடங்களில் பதிவு செய்துள்ளேன். அதனால் தான் உங்கள் உளறலும் எடுத்துக் கொள்ளப்பட்டது என்பதை அடக்கத்துடன் கூறிக் கொள்கிறேன்.

நான் இறங்கி சாக்கடையை சுத்தம் செய்ய மாட்டேன் என்று நீங்கள் கூறி வந்ததாக வைத்துக் கொள்வோம். பின்னர் நாமே சுத்தம் செய்து விடுவோமே என்று இறங்கி விடுகிறீர்கள் என்றால் சாக்கடையை சந்தனம் என்று நீங்கள் ஒப்புக் கொண்டு விட்டதாக அர்த்தம் ஆகுமா? அறிவுடைய எவரேனும் இப்படி வாதிட மாட்டார்கள். தற்பெருமை தலை தூக்கியுள்ளதால் தான் இப்படி எல்லாம் உங்களால் எழுத முடிகிறது.

 

எனினும் அவரைப் போல் உள்ள பணிகளை எல்லாம் ஒதுக்கி விட்டு அறைக்குள் இருந்து கொண்டு எம்மால் பணியாற்ற முடியாது. சமூகப் பணிகள், பயான், நிகழ்ச்சிகள்,உண்மை உதயம் என்பவற்றுடன் சேர்த்து இந்தப் பணியையும் செய்வோம்

முடிவிலும் அதே ஆணவம் தான். நீங்கள் சுட்டிக்காட்டும் பணிகள் தவிர சுட்டிக்காட்ட முடியாத இன்னும் பல பணிகளும்(?) உங்களுக்கு இருக்கலாம். மாதம் நாலு பக்க கட்டுரையும், அரைத்த மாவை அரைக்கும் உங்களை விட இங்குள்ள தாயிகள் நூறு மடங்கு பணியாற்றுகிறார்கள். அவர்களிடம் இந்த ஆணவத்தை நாங்கள் கண்டதில்லை.

அடுத்து இஸ்மாயீல் சலஃபி எந்த நூலும் எழுதவில்லை என்று நான் குறிப்பிடவில்லை. அவர் மேடைகளில் பேசவும் இல்லை என்று நான் கூறியதாக அவரே எழுதிக் கொண்டு பதில் சொல்கிறார். ஒருவர் சத்தியத்தைச் சொல்வதில்லை என்று கூறப்பட்டால் அதன் பொருள் என்னவென்பதைக் கூட விளங்காமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. குராபிகள், கப்ரு வணங்கிகள் சத்தியத்தைக் கூறுவதில்லை என்று நாம் கூறுகிறோம், நீங்களும் கூறுகிறீர்கள்.

உடனே குராபிகள் பின் வருமாறு பதில் கூறுகிறார்கள். நாங்கள் தொழுகையைப் பற்றி பேசவில்லையா? நோன்பு வைக்குமாறு பேசவில்லையா? என்று சில விபரங்களைப் பட்டியலிடுகிறார்கள். உடனே நீங்கள் சத்தியத்தைச் சொல்லவில்லை என்று தவறாகச் சொல்லி விட்டேன் என்று வாபஸ் வாங்கிக் கொள்வீர்களா? எந்தக் கேடு கெட்ட கொள்கை உடையவனும் சில சத்தியங்களைச் சொல்லித் தான் இருப்பான். ஆனால் நாம் எந்த அர்த்தத்தில் சொல்கிறோம் என்றால் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்ல வேண்டியதைச் சொல்லவில்லை என்பதைத் தான் அவ்வாறு கூறுகிறோம்.

நீங்கள் கூறும் இந்தத் தத்துவத்துக்கும் அந்தக் குராபிகள் கூறுவதற்கும் ஒரு வேறுபாடும் இல்லை. எங்கே சத்தியத்தைச் சொன்னால் உங்களுக்கு ஆதாய பாதிப்பு ஏற்படுமோ அங்கே சொல்லவில்லை என்பது தான் இதன் கருத்து. சாதாரண மனிதனுக்குப் புரியும் இந்த உண்மை கூட உங்களுக்குப் புரியவில்லை.

இப்போதும் நீங்கள் எழுத்தாளர் என்று காட்டுவதற்காக சம்மந்தமில்லாத விடையைக் கூறி இருக்கிறீர்கள். சிலர் சம்மந்தமில்லாமல் 'நான் அமெரிக்கா போயிருக்கும் போது......' என்று கூறுவார்கள். இதன் நோக்கம் எந்த செய்தியும் சொல்வது அல்ல. அவர் அமெரிக்கா போனார் என்பதைத் தெரிவிப்பது மட்டும் தான் அதன் நோக்கம். அது போல் தான் நீங்கள் இந்த மறுப்பு முழுவதும் நீங்கள் ரொம்ப பிஸி என்பது போலவும், நான் பெரிய எழுத்தாளராக்கும் என்பது போலவும் தான் கட்டுரை முழுவதும் பதிவு செய்ய விரும்புகிறீர்கள். கேட்ட கேள்விக்கு உருப்படியாக பதிலைக் காணோம்.

சத்தியத்தைச் சொல்வதில்லை என்று நீங்கள் செய்யும் விமர்சனமானாலும், நாங்கள் செய்யும் விமர்சனமானாலும் அதன் பொருள் தவறு எனப்படும் அனைத்தையும் கண்டிப்பதில்லை என்பது தான். பாதகம் வராத போது கெட்ட கொள்கை உடையவர்களும் சில தீமைகளைக் கண்டிக்கத் தான் செய்வார்கள். எனவே இது போல் திசை திருப்பாமல் உங்கள் கண்முன்னே நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற அனைத்து தீமைகளையும் கண்டித்தீர்களா என்பதற்குப் பதில் சொல்லுங்கள்.

நான் கூறுவது என்னவென்றால் நீங்கள் பணியாற்றும் ஜம்மியத்து அன்ஸாரிஸ்ஸுன்னா செய்யும் எந்தத் தவறையும் சுட்டிக்காட்ட மாட்டீர்கள் என்பது தான். அது போன்ற பல விஷயங்களை நான் சுட்டிக் காட்டவுள்ளேன். அவற்றை நீங்கள் எதிர்த்தீர்களா என்பதற்குத் தான் நீங்கள் பதில் சொல்ல வேண்டும். நீங்கள் சுட்டிக் காட்டிய கட்டுரைகள் நூல்கள் எதுவும் ஜம்மியது அன்ஸாரிஸ்ஸுன்னாவின் தவறுகளைக் கண்டித்து எழுதப்பட்டவை அல்ல என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தனது புத்தகப் பெருமையுடன் சேர்த்து இவர் என் மீது கூறிய அவதூறைப் பாருங்கள்.

 

அண்மைக் காலமாக அனைத்தையும் நான்தான் செய்தேன் என்று இவர் எழுதுவதையும் பேசுவதையும் கூட ஜீரணித்துக் கொள்ளலாம். ஆனால் வேறு எவரும் எதையும் செய்யவில்லை என இவர் குறை கூறுவது தான் வேதனையானதும் வேடிக்கையானதுமாகும் அண்மைக் காலமாக என்பது எந்தப் புள்ளியில் இருந்து ஆரம்பித்தது? அனைத்தையும் என்பது எவை எவை? எங்கே இவ்வாறு பேசினேன்? எங்கே எழுதினேன்? பொத்தாம் பொதுவாக இவர் கூறிய அனைத்துக்கும் ஆதாரத்தைச் சமர்ப்பிக்க முடியுமா? உங்கள் மூன்று வரித் தகவலே முன்னுக்குப்பின் முரணாக இருப்பது தான் வேதனையானதும் வேடிக்கையானதுமாகும்.

அடி மடியில் கைவைக்கிறானே என்பதற்காகத் தான் கோபம் வந்து எழுதுவதாக நான் கூறியதற்கும் பதில் அளித்துள்ளீர்கள். அடி மடியில் கை வைக்கின்றானே என்ற ஆதங்கம் தான் இந்த மறுப்புக்குக் காரணம் என்கின்றார். இவர் அறபு நாட்டுப் பணத்துக்கு எதிராகப் பேசினால் இவரது பேச்சைக் கேட்டு அவர்கள் தமது பொதுப் பணியை நிறுத்தி விடுவார்களா? பீஜே இப்படிப் பேசியதற்குப் பின்னர் தான் ஓட்டமாவடி பள்ளி, சம்மாந்துறை அனாதை இல்லம், ஓட்டமாவடி அனாதை இல்லம் போன்ற பெரிய பெரிய திட்டங்கள் எல்லாம் துவங்கின. எனவே, இவர் அறபு நாட்டுப் பணத்துக்கு எதிராகப் பேசினால் அடி மடியில் கை வைக்கின்றானே! என நாம் பயந்ததாகக் கூறுவது இவரது சிறு பிள்ளைத்தனமான கற்பனையாகும்.

அந்தத் தலைப்புக்குள் நான் செல்லவில்லை. பீடிகையில் குறிப்பிட்ட இரண்டு விஷயங்களில் ஒரு விஷயத்துக்குத் தான் விளக்கம் எழுதியுள்ளேன். அந்த விஷயம் இனி தான் வரப் போகிறது. அதற்குள் பயங்கரமான கேள்வியை எழுப்பியுள்ளீர்கள். நான் விமர்சித்த பிறகு தான் அதிகமாக அரபு நாட்டுப் பணம் பெற்று பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக எழுதியுள்ளீர்கள். நாங்கள் விமர்சிப்பதால் அரபுகள் உங்களுக்குத் தருவதை உடனடியாக நிறுத்த மாட்டார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ருசி கண்ட நீங்களும் அதை விட்டு விட மாட்டீர்கள் என்பதும் எங்களுக்கும், அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது அடிமடியில் கை வைப்பது பற்றி கூறினால் அதன் பொருள் என்ன என்று சிந்திக்க வேண்டாமா? இவர்கள் பணத்துக்காகத் தான் தவ்ஹீத் சொல்கிறார்கள் என்ற உண்மை எனது விமர்சனத்தின் மூலம் மக்களுக்குத் தெரியும். இதனால் நீங்கள் மக்கள் மத்தியில் நம்பிக்கை இழப்பீர்கள். அரபுகளுக்குக் காட்டுவதற்காக நீங்கள் நடத்தும் மாநாடுகளூக்கு மக்கள் வருவது குறையும். படிப்படியாக உதவி குறையும் என்ற அச்சம் தான் காரணம். என்னை வழிகெட்டவனாகக் காட்டிவிட்டால் அப்புறம் நான் சொல்வது எடுபடாது என்பதால் தான் இந்த தற்காப்பு என்பது தான் எனது குற்றச்சாட்டு.

அடுத்ததாகப் பின்வரும் தத்துவத்தைக் கூறுகிறார்.

 

உள்நாட்டில் மக்களிடம் நிதி திரட்டி தஃவா செய்யும் போது தாறுமாறாக பணம் குவியாது. பணம் கொடுத்த மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால் பெருமளவுக்கு ஊழல் நடக்காமல் காத்துக் கொள்ள முடியும் பெருமளவுக்கு ஊழல் நடக்காமல் காத்துக்கொள்ள முடியும் என்று கூறியதன் மூலம் சின்ன அளவில் (சின்ன அளவு என்பது அவரவர் தகுதிக்கு ஏற்ப கூடுதலாகவும், குறைவாகவும் இருக்கலாம்) ஊழல் நடக்கிறது. பெருமளவில் ஊழல் நடக்காததற்கு இறையச்சம் காரணமல்ல. மக்கள் கேட்பார்கள் என்ற பயம். எவ்வளவு கொடுத்தோம் என்பது மக்களுக்குத் தெரியாவிட்டால் அந்தப் பயமும் அற்றுப் போய் விடும். இதுதான் உண்மை

என்று தத்துவத்தை எடுத்து வீசுகிறீர்கள்.

நான் மனிதன் என்பதால் இப்படித் தான் கூற முடியும். அறவே ஊழல் நடக்காது என்றோ ஊழல் தான் நடக்கும் என்றோ அல்லாஹ் ஒருவன் தான் கூற முடியும். மனிதன் என்ற முறையில் எதைப் பேச முடியுமோ அதைத் தான் பேச முடியும். இந்தச் சாதாரண உண்மையைக் கூட விளங்கிக் கொள்ளும் திறன் உங்களுக்கு இல்லை.. ஏதோ ஒப்புக் கொள்ளாமல் இருந்த ஒரு விஷயத்தை இப்போது ஒப்புக் கொண்டு விட்டது போல் எழுதுகிறீர்கள். முன்பு சொன்னதைத் தான் இப்போதும் சொல்வேன். மக்களிடம் நிதி திரட்டும் போதும் ஊழல் நடக்கலாம். எங்கள் ஜமாஅத்திலும் சிலர் இப்படி செய்யலாம். ஆனால் பொது மக்களிடம் நிதி திரட்டும் போது, சம்பந்தப்பட்டவர்கள் வழியாக விசாரணை வரும் போது பல ஊழல்கள் வெளிச்சத்துக்கு வரும். வஹீ மூலம் வராது. அதனால் தான் எங்கள் ஜமாஅத்தில் சிலர் ஊழல் செய்தது மக்கள் வழியாக எங்களுக்குத் தெரிய வந்தது.

ஆனால் இத்தனை வருடங்களாக நீங்கள் பல்லாயிரம் கோடி திரட்டியுள்ளீர்கள். ஆனால் எந்த ஊழலும் வெளி வரவில்லை. காரணம் மக்களுக்கு இது தெரியாது. நீங்கள் காட்டும் கணக்கில் எத்தனை ஊழல் செய்தாலும் அரபிகளால் கண்டு பிடிக்க முடியாது. ஒரு கோடிக்கு பள்ளி கட்டி விட்டு இரண்டு கோடி என்று கணக்கு காட்டினால் அது அவர்களுக்குத் தெரியுமா என்ன? அனாதைகளுக்கு வாங்கிய பணத்தை அனாதைகளிடம் வழங்காமல் உண்மை உதயத்துக்கும் உங்கள் நூல்களுக்கும் சந்தா பதிவு செய்து அனாதையின் விருப்பமில்லாமல் அவனது பணத்தில் அவனுக்கு உங்கள் பத்திரிகையை அனுப்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இது அரபிகளுக்குத் தெரியவா போகிறது.

வேண்டுமானால் உங்கள் 25 வருட வரவு செலவு கணக்குகளை நாங்கள் பரிந்துரை செய்யும் நபர்களும் அடங்கிய தணிக்கைக் குழு விசாரணைக்கு உட்படுத்தினால் பல கோடி ஊழல் வெளிச்சத்துக்கு வரும். இதற்கு நீங்கள் தயாரா? தவ்ஹீதுக்கு சம்மந்தமில்லாத பள்ளிகள் கட்டிக்கொடுப்பதில் மறுமை நன்மை கிடையாது என்பது உறுதி. இம்மை நன்மையும் இல்லாமல் தான் வேலைமெனக் கெடுகிறீர்களா? இதற்கெல்லாம் பதில் எங்கே?

அடுத்து இன்னொரு பயங்கரமான குண்டை எடுத்துப் போடுகிறார்.

 

ஆனால், பீஜே தனது தோழர்களை இலங்கை, குவைட், கடார் (Sri lanka, Kuwait, Qatar) என நிதி திரட்ட அனுப்புகின்றார். அவர்கள் நிதியைத் திரட்டுகின்றார்கள். திரட்டுகின்ற அந்தத் தனி மனிதருக்கு மட்டும்தான் எவ்வளவு திரட்டப்பட்டது என்பது தெரியும். கொடுத்தவர்களுக்கோ, அமைப்புக்கோ எவ்வளவு என்ற விபரம் தெரியாது! அங்குதான் ஊழல் நடைபெறும் சாத்தியம் உள்ளது. அதைத்தான் பீஜே பெருமளவு ஊழல் நடக்காது என்பதன் மூலம் ஒத்துக் கொண்டுள்ளார். இவர்களால் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மீது இவர் சுமத்தும் இலட்சக் கணக்கான ரூபாய்களுக்கான ஊழல் குற்றச் சாட்டுக்கள் இதை இன்னும் உறுதி செய்கின்றன

என்பது தான் அந்தக் குண்டு. நான் யாரையும் வசூலுக்கு அனுப்பவில்லை. ஜமாஅத் தலைமை தான் அனுப்புகிறது. அங்கே எங்களுக்குக் கிளைகள் உள்ளன. அவர்கள் முன்நின்று வசூலித்துக் கொடுப்பார்கள். எவ்வளவு வசூலித்துக் கொடுத்தார்களோ அந்தத் தகவலை தலைமைக்கும் சொல்வார்கள். தலமை பெற்றுக் கொண்டதற்கு ரசீதும் கேட்டுப் பெற்றுக் கொள்வார்கள். எனவே ஊழல் நடப்பதற்கான வாசலை மனித சக்திக்கு உட்பட்டு நாங்கள் அடைக்கிறோம். அதே நேரம் எங்களை மீறி தவறு நடக்கலாம் என்று நம்புவது ஈமானின் ஒரு பகுதி என்பதால் அவ்வாறு நம்புகிறோம். இதில் என்ன தவறு கண்டு விட்டீர்கள்?

அடுத்ததாக இரண்டு நபர்களைப் பற்றி குறிப்பிடுகிறீர்கள்.

 

அடுத்து, அனைத்துத் தவ்ஹீத் கூட்டமைப்பு என்ற பெயரில் இவர்கள் இயங்கிய போது, இவர்களது அப்போதைய தலைவரும், அதற்கடுத்த தலைவராகச் செயல்பட்ட, தற்போதும் இவரது அமைப்பில் உள்ள ஒரு ஆலிமும் 1999 களில் குவைட்டிலுள்ள லுஜினதுல் காரதில் ஹிந்திய்யா என்ற அமைப்பிடம் நிதி உதவி பெற முயற்சி செய்து முடியாமல் போனது. இது குறித்து நான் தங்கியிருந்த அறையில் இருந்துதான் அவர்கள் பேசித் திட்டங்கள் பலவும் தீட்டினார்கள். அறபுப் பணம் கிடைக்காதவர்கள் உள் நாட்டு வசூலை இலக்காக் கொண்டு,சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என்று நரி நாடகமாடுகின்றனர். இதுதான் உண்மையாகும்.

சொல்வதைத் தெளிவாகச் சொல்ல உங்களுக்குத் திராணி இல்லை. ஏனெனில் அவர்களில் ஒருவர் பலவேசத்தில் இருக்கிறார். இன்னொருவர் நமது ஜமாஅத்தில் இருக்கிறார் என்கிறார். எங்களிடம் எந்த ஒளிவு மறைவும் இல்லை. எனவே அவர்கள் யார் என்பதையும் அது பற்றிய விபரங்களையும் நாமே உடைத்துச் சொல்வோம். நமது ஜமாஅத் சார்பில் வெளிநாட்டு உதவி வாங்குவதில்லை என்ற நிலைபாட்டில் எங்களிடம் எந்த மாற்றமும் இல்லை. எங்கள் ஜமாஅத் சார்பில் அரபு நாட்டுப் பனத்துக்கு முயற்சித்து அது கிடைக்கவில்லை என்பதற்காக நிலைபாட்டை மாற்றிக் கொள்ளவும் இல்லை.

ஹாமித் பக்ரி அவர்கள் காயல்பட்டிணத்தில் இஸ்லாமியக் கல்விச் சங்கம் என்ற பெயரில் ஒரு நிறுவனம் நடத்தினார். அது தவ்ஹீத் ஜமாஅத்தின் கீழுள்ள நிறுவனம் அல்ல. அதில் சைஃபுல்லாஹ் ஹாஜாவும் அங்கமாக இருந்தார். அதில் நான் அங்கம் வகிக்கவில்லை. இந்த நிலையில் அந்தக் கல்விச் சங்கத்தினர் ஆலோசனை செய்து தவ்ஹீத் ஜமாஅத் தான் வெளிநாடுகளில் உதவி வாங்காது. நாம் சுயேட்சையான நிறுவனம் தானே? நாம் உதவி வாங்கினால் என்ன என்று ஆலோசித்து அதற்கான முயற்சியில் இறங்கினர். அதனடிப்படையில் வெளிநாடுகளுக்குக் கடிதங்கள் அனுப்பினார்கள். இலங்கை சென்ற போது ஜம்மியது அன்ஸாரிஸ்ஸுன்னா, ஷபாப் ஆகிய நிறுவனங்களிடம் பரிந்துரைக் கடிதம் கேட்டனர். இதில் எனக்கும் சம்மந்தமில்லை. தவ்ஹீத் ஜமாஅதுக்கும் சம்மந்தம் இல்லை.

இந்த விபரங்கள் சில நிர்வாகிகளுக்குத் தெரிந்த போது தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகக் குழுவில் விவாதித்தோம். அப்போது அனைவரும் இது சரியான நடைமுறை அல்ல என்று சுட்டிக் காட்டினர்கள். தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளாக உள்ளவர்கள் வேறு பெயரிலும் இது போன்ற் உதவிகளைப் பெறக் கூடாது என்று முடிவு செய்தோம். இதன் பின் அம்முயற்சியைக் கைவிட்டு விட்டனர். இதைத் தான் பயங்கரமான விஷயம் போல் காட்டி எட்டாத பழம் புளிக்கும் என்பதால் அரபு நாட்டுப் பணத்தை வெறுத்ததாகக் கூறுகிறார். எட்டிய பழத்தையே நாங்கள் வேண்டாம் என்று சொன்னவர்கள்.

இதற்கு ஏராளமான நிகழ்வுகள் ஆதாரமாக உள்ளன. உங்களின் இந்த வாதமும் உருப்படியானதில்லை.

அடுத்து பயங்கரமான ஒரு தத்துவத்தை எடுத்து வைக்கிறார்.

இன்னொன்றையும் இந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். வெளிநாட்டில் உதவி வாங்கக் கூடாது என்பது ஆரம்பம் முதலே நான் கடைப்பிடித்த கொள்கை அல்ல. ஆரம்பத்தில் ஜாக் இயக்கத்தில் இருந்த போது அந்த இயக்கம் வெளிநாடுகளில் உதவி பெற்ற நிலையிலும் அதில் இருந்தேன். நான் அத்தகைய உதவிகளை மறுத்தேனே தவிர அந்த இயக்கம் உதவி பெற்றதை துவக்கத்தில் எதிர்க்கவில்லை. அதன் அடிப்படையில் தான் சலபி கூட்டத்தினரின் நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டேன். நாளடைவில் பணமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதைக் கண்டு வெறுத்த நான் அதன் பிறகு தான் இதை வெறுக்கலானேன். கஷ்டப்படும் சிலருக்காக நானே அந்தக் காலகட்டத்தில் ஏதாவது உதவி வாங்கிக் கொடுங்கள் என்று பலமுறை சொல்லி இருக்கிறேன், எழுதியும் இருக்கிறேன். பீஜே எழுதிய கடிதம் இருக்கிறது என்றெல்லாம் பயம் காட்ட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மற்றவர்களுக்காக நான் உதவி கேட்டு எழுதிய கடிதங்கள் நிறையவே உள்ளன. கமாலுத்தீன் மதனியிடம் கேட்டால் தருவார்.

அடுத்து இன்னொரு தத்துவத்தை எடுத்துப் போடுகிறார்.

 

1996 இல் இருந்தே விமர்சித்து எதிர்த்தது அல்லது 2002 க்குப் பின்னரும் ஆதரித்து எதிர்க்கவில்லை என்ற இரண்டில் ஏதோ ஒன்று பொய் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இரண்டையும் பீஜேதான் கூறியுள்ளார்

இது தான் அந்த மகா தத்துவம். இரண்டையும் நான் தான் கூறுகிறேன். நீங்கள் முரண்பாடுகளின் மொத்த உருவமாக உள்ளதால் முரண்பட்ட இரண்டு நிலையை நீங்கள் எடுத்ததைச் சுட்டிக் காட்டினால் நான் முரண்பட்டு விட்டதாகக் கூறூம் அளவுக்கு சிந்தனைத் திறன் மாறி விட்டதா? பீடிகையின் இரண்டாவது பகுதியை விளக்கும் போது அதையும் தெளிவுபடுத்துவோம்.

அடுத்ததாக விஷயத்துக்கு வருகிறார்.

அதாவது காரல் மார்க்ஸ் குறித்து எழுதிய விஷயத்துக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என்கிறார். இக்பால் அலி வெளியிட்டதாக அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டது யாருக்கும் தெரியாதது அல்ல. அதில் குறிப்பிடப்பட்டதற்கு மேல் அதில் விஷயம் உள்ளது. அல்லாஹ்வுக்குப் பயந்து தவறை ஒப்புக் கொள்கிறாரா என்று அறியவே மேலோட்டமாகக் குறிப்பிட்டோம். நாம் எதிர்பார்த்தது போலவே உங்கள் கெட்ட குணத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

அன்ஸார் ஸுன்னாவைப் பொருத்தவரை அதன் தலைவர் அபூபக்கர் சித்தீக் மதனி என்ற போதும் அதன் பிடிகள் அனைத்தும் அதன் பொதுச் செயலாளர் கலீலுர்ரஹ்மான் கையில் தான் உள்ளது. சித்தீக் மதனி கூட அவருக்குப் பயப்படுவதை நாங்கள் கண்ணாரக் கண்டவர்கள். அதன் முழு அதிகாரமும் படைத்த சர்வதிகாரி அதன் பொதுச் செயலாளர் கலீலுர்ரஹ்மான். இவருக்கு எதிராக வாய் திறந்தால் இஸ்மாயீல் சலஃபியானாலும் மற்ற எவராக இருந்தாலும் தூக்கி வீசப்படுவார்கள். இந்த கலீல் ரஹ்மான் தான் இந்த நூலின் சூத்திரதாரி.

இந்நூலை வெளியிட்டவர்கள் அன்சாருஸ்ஸுன்னாவின் பொதுச் செயலாளருக்கு நன்றி தெரிவித்தது ஏன்? நன்றி தெரிவித்தது அந்த நூலிலேயே இடம் பெற்றுள்ளதே? நன்றி தெரிவிக்கும் அளவுக்கு காரல் மார்க்ஸுக்கு அவர் செய்த உதவி என்ன? பண உதவி இல்லையானால் வேறு என்ன தான் உதவி செய்யப்பட்டது என்பதை சலஃபி அவர்களே இருட்டடிப்பு செய்யலாமா?

இன்றும் கனினி பிரிவில் பணியாற்றும் ரிழ்வானுக்கு நன்றி தெரிவிக்க அவர் செய்த உதவி என்ன? அதையும் வெளியிட்டு விளக்க வேண்டியது தானே?

இது குறித்து நான் இலங்கை சென்ற போது என்னிடமே இவர்களின் மாணவர்கள் புகார் செய்தனர். இவர்களின் ஆபீசில் உள்ள கனினியில் தான் அது கம்போஸ் செய்யப்பட்டது. கலீல் ரஹ்மான் தான் எல்லா ஏற்பாடும் செய்தார். எல்லாம் இஸ்மாயீல் சலஃபிக்கும் தெரியும். ஆனால் கண்டு கொள்ளாமல் பூசி மொளுகுகிறார்கள் என்று அப்போதே சொன்னார்கள். நான் விசாரித்த போது அங்குள்ள ஆசிரியர்களும் உறுதிப்படுத்தினார்கள். அதை இப்போது ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆனால் அந்தப் புத்தகம் சாட்சி சொல்கிறதே? அன்சார் சுன்னாவின் பொதுச் செயலாளர் அந்த நூலுக்கு என்ன உதவி அளித்தார்? எதற்காக நன்றி தெரிவிக்கிறார்கள்? காரல் மார்கஸ் கொள்கைக்கு பன உதவி செய்யவில்லை என்றால் வேறு வகையில் செய்த உதவி என்ன? அவ்வாறு உதவுவது தான் தவ்ஹீத் அமைப்பின் பொதுச் செயலார் வேலையா? அதை மறைப்பது தான் சலபியின் வேலையா? பதில் சொல்லும் போது இதற்கும் பதில் சொல்ல வேண்டும் அல்லவா?

பண உதவி செய்தது தான் காரணம் என்பதால் உங்கள் வெளியீடு என்று நான் கூறினேன்.அது இல்லை என்றால் வேறு என்ன உதவி செய்ததற்காக இந்த நன்றி என்பதை விளக்குங்கள்.

நூல் உருப்பெறுவதற்கு ரிழ்வான் பக்க துணையாக இருந்தார் என்று அதே நூலில் கூறப்பட்டுள்ளதே? அப்படி அவர் செய்த உதவி என்ன? தாவாவுக்காக பயன்பட வேண்டிய கணிணியை காரல் மார்க்ஸைக் கடவுளாக்கும் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தியதைத் தவிர வேறு எந்த வகையில் நூலுருப்பெற உதவினார் என்பதை சலபி அவர்களே விளக்காமல் விட்ட மர்மம் என்ன?

கலீல் ரஹ்மான் இவர்களுக்குத் துணை போனது தவறு என்று ஏன் சொல்லவில்லை? இவரது இயக்கத்தின் முதன்மைப் பொறுப்பில் உள்ளவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் காரியத்துக்கு துணை போயிருக்கிறர். அதை இப்போதாவது கண்டித்து விட்டு எனக்கு மறுப்பு எழுதலாம் அல்லவா?

அடுத்து அவர் எடுத்து வைக்கும் குற்றசாட்டு இது தான்

 

அதற்கு மறுப்பாக அமையும் விதத்தில் நாம் சுட்டிக் காட்டிய தவறைத் திருத்தாமல் முபாறக் (ஸலபி) மொழி பெயர்த்த ஒரு நூலில் இடம் பெற்ற ஒரு ஹதீஸின் சில பகுதிகள் மொழி பெயர்க்காமல் விடப்பட்டதை எடுத்துக் காட்டுகின்றார். நீங்கள் தவறு செய்துள்ளீர்கள் என்று கூறினால், இன்னொருவரைக் காட்டி அவரும் தவறு செய்துள்ளாரே! என்று கூறுவதுதான் சுய கௌரவம் பாராது தவறை ஒப்புக்கொள்ளும் இலட்சணமா? ஒரு விவாதத்தில் இவரது தர்ஜமாவில் குறை இருப்பதாகக் கூறப்படுகின்றது. என்ன குறை என்று கேட்காமல்,நீங்கள் சரி காண்கிற தர்ஜமாவை எடுத்துட்டு வாரீங்களா? இரண்டுல எதில தவறு அதிகமாக இருக்கின்றது என்று புட்டு புட்டு வைப்பமா? என எதிர்க் கேள்வி கேட்கிறார். அது சரி. அடுத்தவர் தவறு செய்திருந்தால், நீங்கள் செய்தது சரி என்று ஆகி விடுமா?

முஜீபும் இவரும் இவரைப் போன்றவர்களும் இந்தக் கேள்வியை அடிக்கடி கேட்டு வருகின்றனர். இதில் இவர்களின் திருகுதாளத்தை மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று நம்புகிறார்கள். என் மீது யாராவது குற்றம் சாட்டினால் இது போல் கேட்டிருக்கிறேன். இனியும் கேட்பேன். அவர் சுமத்திய குற்றச்சாட்டுக்கள் அனைத்துக்கும் பதில் அளித்து விட்டு என் மீது தவறு இல்லை என்பதை ஆதாரத்துடன் நிரூபித்து விட்டு இப்படிக் கேட்பேன். இதில் எந்தத் தவறும் இல்லை. கெட்ட எண்ணத்துடன் அவதூறு பரப்புவோரைக் கன்னியவான்களாக நடமாட விடக் கூடாது என்பதற்காக இதைச் செய்வது அவசியம். இவர்கள் என்ன வேண்டுமானாலும் அவதூறு கூறிவிட்டு நல்லவர் வேடம் போட்டு விடக் கூடாது என்பது தான் இதன் நோக்கம்.

நீயும் இந்தத் தவறை செய்ததால் நான் செய்தது சரி என்று வாதிடுவது தான் அயோக்கியத்தனம். இந்தச் சிறிய விஷயம் கூட விளங்காமல் பெரிய ஆதாரம் போல் இதையும் பலவேசக் கூட்டம் எடுத்து வைக்கின்றது.

என்னைப் பொருத்த வரை இதைத் தவறு என்று கூற மாட்டேன். இது அனைவரும் செய்யக் கூடியது தான். ஆனால் இது தவறு என்று வாதிடக் கூடியவர்கள் தமது கூற்றில் உண்மையாளராக இருக்க வேண்டும் அல்லவா? அத்வைதம் பற்றி நான் கேள்வி கேட்டால் உங்கள் சகோதரர் பீ எஸ் அலாவுதீன் என்பவர் அத்வைதத்துக்கு ஆதரவாக எழுதவில்லையா? என்று கேட்கிறார்.

 

பீஜே அவர்களின் சகோதரர் எழுதிய திருக்குர்ஆனின் நிழலில் என்ற நூலில் sosalism பக்கம் XI எனத் தெளிவாக இஸ்லாமிய சோசலிஸம் எனும் கமியூனிஸவாதம் முன்வைக்கப்பட்டுள்ளதே. உங்கள் அண்ணன் இஸ்லாமிய பொருளாதாரத்தையே மாற்ற முயற்சித்த இந்தக் குற்றத்தை எப்போதாவது போட்டு உடைத்துள்ளீர்களா? எம்மீது நீங்கள் சுமத்திய கம்யூனிஸ வாதி என்ற குற்றச்சாட்டு உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நோக்கி வந்துள்ளது இதற்கு நீங்கள் கூறும் நியாயமான பதில் என்ன?

இவருடைய சிந்தனைத் தெளிவுக்கு இது தக்க ஆதாரம். என்னைப் பற்றிப் பேசும் போது காலம் சென்ற என் சகோதரர் பற்றி பேசுவது என்ன லாஜிக்கோ தெரியவில்லை. இவர்களிடம் இஸ்லாத்தின் அடிப்படை அறிவு கூட இல்லை என்பதை இக்கேள்வியின் மூலம் நிரூபிக்கின்றனர். என் சகோதரர் விஷயமாக பிறகு விளக்குகிறேன். ஒரு மனிதரின் செயலுக்கு இன்னொரு மனிதன் பொறுப்பாளியாக முடியாது என்ற இஸ்லாத்தின் முக்கிய வேறுபாடு இவருக்குப் புரியவில்லை. எத்தனையோ நபிமார்களின் பெற்றோர் பிள்ளைகளுக்கும் அவர்களுக்கும் தொடர்பு இல்லை என்று இஸ்லாம் திட்டவட்டமாக அறிவிக்கிறது. இஸ்லாத்துக்கு விரோதமான் கேள்வியை இவர் கேட்டுள்ளதில் இருந்து இவரது நோக்கம் தனி மனித தாக்குதல் தானே தவிர மார்க்கம் அல்ல என்பது தெளிவாகிறது.

இருந்தாலும் இவர்களின் உள்ளத்தில் மறைத்து வைத்தவை என் கவனத்துக்கு வராமல் இருந்தவை, இவர்கள் மக்களிடம் பரப்பியவை இதனால் என் கவனத்துக்கு வருகிறது. அதற்காகன விளக்கமும மக்களைச் சென்றடைகிறது என்பதால் சலபிக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

என்னைப் பற்றியும் என் சகோதரர் பற்றியும் சில விஷயங்களை நான் குறிப்பிட வேண்டும். நானும் என் சகோதரர் பீ ஷைக் அலாவுதீன் என்ற பி.எஸ்.அலாவுதீனும் மதீனாவில் படிக்கவில்லை. உம்ராபாத்திலும் படிக்கவில்லை. மத்ஹப், ஷிர்க், தரீக்கா மற்றும் எல்லா பித்அத்களையும் ஆதரிக்கும் கல்விக் கூடங்களில் தான் பயின்றோம். அது தான் மார்க்கம் என்று போதிக்கப்பட்டோம். படித்து முடித்து வெளி வந்தவுடன் நாங்கள் நண்பர்களாக விவாதித்துக் கொண்டே இருப்போம். அப்போது தான் தர்கா வழிபாடு தவறு என்று எங்களுக்குத் தோன்றியது. இது குறித்து நாங்களே ஆய்வு செய்த ஆதாரங்களைத் திரட்டி ஷிர்க்கை மட்டும் எதிர்த்தோம். மத்ஹப் தரீக்கா இன்ன பிற பித்அத்களை அந்தக் கால கட்டத்தில் நாங்கள் எதிர்க்கவில்லை. அவற்றைத் தவறு என்று கூட அறியவில்லை. தர்காவை எதிர்க்கின்ற அனைவரும் தவ்ஹீத் வாதிகள் என்று கருதியதால் அது போன்ற எல்லா இயக்கங்களிலும் தொடர்பு வைத்தோம்.

இதனால் தான் 280 நாட்கள் நான் தப்லீக் ஜமாஅத்தில் இந்தியா முழுதும் சென்றேன். அது போல் என் சகோதரர் ஜமாஅதே இஸ்லாமி, சிம், போன்ற இயக்கங்களில் ஈடுபாடு காட்டினார். அந்தக் கால கட்டத்தில் நாங்கள் தப்லீகையும் விரும்பினோம். ஜமாஅதே இஸ்லாமியையும் விரும்பினோம். தர்கா வழிபாட்டை அவர்கள் எதிர்க்கிறார்கள் என்ற ஒரே காரணத்தால். இந்தக் கால கட்டத்தில் தான் ஃபீ லிலாலில் குர்ஆன் என்ற சையித் குதுப் எழுதிய நூலை ஒரு நிறுவனத்துக்காக என் சகோதரர் மொழி பெயர்த்துக் கொடுத்தார்கள். தர்கா வழிபாட்டை சையித் குதுபும் எதிர்த்ததால் அந்த நூலிலும் தர்கா வழிபாட்டுக்கு ஆதரவான கருத்து இல்லாததால் நாங்கள் சரி என்று நம்பிய போது அது மொழி பெயர்க்கப்பட்டது. குர்ஆன் ஹதீஸில் உள்ள பல விஷயங்களை தப்லீக் ஜமாஅத், ஜமாஅதே இஸ்லாமீ ஆகியவை நிராகரிப்பதையும் மத்ஹபுக்கு வக்காலத்து வாங்கியதையும் படிப்படியாக கண்டு வெறுத்து ஒதுங்கிய சில மாதங்களில் என் சகோதரர் இளம் வயதில் மரணித்த்து விட்டார். இதன் பின் என் சகோதரர் மொழி பெயர்த்த அந்த நூலை சம்பந்தப்பட்டவர்களிடம் அனுமதி பெற்று பாக்கர் வெளியிட்டார். அது எனக்குத் தெரிய வந்த போது அது குறித்த விளம்பரத்தை உணர்விலும் வெளியிட மறுத்தேன். அவர் நடத்திய தொலைக் காட்சி நிகழ்ச்சிகளிலும் அந்த விளம்பரத்தைப் போடக் கூடாது என்றேன். எனது மூன் பப்ளிகேசனில் மட்டுமின்றி அவரது மீடியா வேல்டிலும் விற்கக் கூடாது என்று கண்டிப்புடன் தடுத்து விட்டேன். தவறான கருத்து அதில் இருக்கும் போது அதை விற்பது எப்படி ஹலாலாகும்? என்பதே இதன் காரணம். ஆயிரக்கணக்கில் அந்த புத்தகம் பாக்கரிடம் தேங்கி இருந்தது.

இந்த உண்மைகள் இஸ்மாயீல் சல்பிக்கு தெரியும். ஏனெனில் நான் இலங்கை சென்ற ஒரு சந்தர்ப்பத்தில் சையித் குதுபின் அந்த தஃப்ஸீர் சரியானது அல்ல என்று பேசியிருக்கிறேன். இலங்கையில் உஸ்தாத் மன்சூர் என்பவருடன் நடந்த கலந்துரையாடலின் போது அந்தத் தஃப்ஸீரில் அத்வைதம் உண்டு என்பதை உஸ்தாத் மன்சூருக்குச் சுட்டிக் காட்டினேன். அந்த நேரத்தில் இலங்கையில் இருந்த ஏராளமான தவ்ஹீத் சகோதரர்களால் அவ்விவாதம் பார்க்கப்பட்டது. உலமாக்கள் வட்டத்தில் உங்கள் சகோதரர் தானே அதை மொழி பெயர்த்துள்ளார் என்று கேட்டனர். நான் அப்போதே இதை விளக்கினேன். அவர்களில் இஸ்மாயீல் சலபி இருந்தாரா எனபது எனக்கு நினைவில்லை. ஆனால் பரவவலாக இது அன்றைக்கு இலங்கையில் விவாதிக்கப்பட்ட விஷயம் என்பதால் அவருக்குத் தெரியாமல் இருக்க முடியாது. (சலபி அவர்களே நீங்கள் சுட்டிக் காட்டியது ஒன்று தான். அதில் ஏராளமான த்வறுகள் உள்ளன. பட்டியல் அனுப்பட்டடுமா?)

அல்லது அந்த நூல் மீண்டும் மீண்டும் அச்சாகுவதையாவது தடுத்தீர்களா? மூன் பப்ளிகேஷன், நபீலா பதிப்பகம் என புத்தக வியாபாரம் புரியும் உங்களுக்கு இதன் பதிப்பக உரிமையை வாங்கி, உடன் பிறந்த அண்ணன் மூலம் அத்வைதக் கருத்துப் பரவுவதைக் கொஞ்சமாவது கொள்கைப் பற்று இருந்திருந்தால் தடுத்திருக்கலாமல்லவா?

அடுத்து அவர் உளறுவதைப் பாருங்கள்! அந்த நூலின் உரிமையை வாங்கி அதை வெளியிடாமல் தடுத்திருக்க வேண்டும் என்கிறார். பரகஹதனியவில் ஒரு சாராயக் கடை உள்ளது. இதற்குத் தீர்வு என்ன? அங்குள்ள சாராயத்தை எல்லாம் வாங்கி கீழே கொட்டி விட வேண்டும் என்கிறார். வாங்கி கீழே கொட்டினால் நாளைக்கு வேறு சரக்கு வாங்கி வைத்துக் கொண்டு விற்க மாட்டானா? அவனுக்கு இரட்டை லாபம் ஆகிவிடும். அது போல் அந்த நூலின் உரிமையை நான் விலை கொடுத்து வாங்கி நான் வெளியிடாமல் வைத்துக் கொண்டால் இன்னொருவர் மூலம் அதை மொழி பெயர்த்து வெளியிடாமல் இருக்க மாட்டார்களா? அது கூடவா உங்கள் அறிவுக்கு எட்டவில்லை.

மேலும் எனக்கு அரபு நாட்டுப் பணம் வரவில்லையே? என் தேவைக்கு நானே உழைத்துச் சம்பாதிப்பதில் இதற்கெல்லாம் ஆயிரக்கணக்கில் செலவிட இயலாது.நீங்கள் சொல்லும் யோசனையை அரபு நாட்டுப் பணத்தில் நீங்களே செயல்படுத்தலாமே? இதெல்லாம் ஒரு கேள்வி என்று கேட்கிறீர்கள்.

அடுத்து பிஹிக்கு அர்த்தம் செய்யவில்லை என்பது பற்றி பிறகு விளக்கப்படும் என்று குறிப்பிட்டும் மீண்டும் சுட்டிக்கட்டியுள்ளார். இதற்கு மறுப்புக்கட்டுரை தொடரில் விளக்கம் தரப்படும்.

அடுத்ததாக இக்பால் மதனி மொழிபெயர்த்து அபூபக்கர் சித்தீக் மதனி உட்பட் ஐந்து அறிஞர்களால் சரி பார்க்கப்பட்ட தமிழாக்கம் குறித்து நாம் கேட்ட கேள்விகளுக்கு தக்க பதில் இல்லை. இதில் எந்தத் தவறும் இல்லை என்று ஐந்து அறிஞர்களும் ஏகமனதாகக் கூறியதாக அந்தத் தமிழாக்கத்தில் கூறப்பட்டுள்ளதே இப்படி கூறுவது எவ்வளவு பெரிய தவறு என்பது பற்றி உண்மை உதயத்தில் எழுதி இந்த் ஆணவப் போக்கைக் கண்டிக்காதது ஏன்? படியளப்பது தவிர வேறு காரனம் என்ன?

அல்லாஹ்வின் பண்புக்கு ஒருவர் சொந்தம் கொண்டடுகிறார்.அதற்கு ஐந்து பேர் அங்கீகாரம அளிக்கின்றனர். இது பற்றி நீங்கள் எழுதி இருந்தால அதை எடுத்துக் காட்டுங்கள்!

 

அடுத்து, சகோதரர் பீஜே போன்று இக்பால் மதனியோ அல்லது அபூபக்கர் ஸித்தீக் மதனியோ அந்த மொழி பெயர்ப்பில் தவறு இல்லை என்று வாதிக்கவோ, தவறு இருப்பதாகக் கூறுபவர்களை விவாதத்திற்கு அழைக்கவோ இல்லை என்பதைக் கவனத்திற்கொள்ளட்டும்.

இது தான் முழுப்பூசனிக்காயைச் சோற்றில் மறைப்பது என்பது. மேலே காட்டிய ஆதாரத்தில் எந்தத் தவறும் இல்லை என்று எழுதப்பட்டுள்ளதா இல்லையா? இதையே மறுக்கிறார் என்றால் இவரைப் புரிந்து கொள்ள வேறு ஆதாரம் தேவை இல்லை. அடுத்து சுட்டிக்காட்டிய தவறு திருத்தப்பட்டதாக அவர் ஒரு இதழின் பக்கத்தை ஆதாரமாகக் காட்டியுள்ளார்.

குர்ஆன் தமிழாக்கத்தில் உள்ள தவறை குர்ஆனில் தான் திருத்த வேண்டும். திருத்தம் என்று வெளியிட்ட பின்பும் இவர் கூறுவதை ஏற்று அவர்கள் தமிழாக்கத்தில் திருத்தம் செய்யவில்லை. அடுத்து வெளியிட்ட தமிழாக்கத்திலும் அப்படியே அந்தத் தவறு நீடிக்கிறதே? இது தான் திருத்தும் லட்சணமா? குர்ஆனில் திருத்தாமல் நோட்டீஸில் திருத்துவது தான் திருத்துவதா? இவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை விட தங்களின் சுயநலனை முன்னிலைப்படுத்துபவர்கள் என்பது இதன் மூலம் உறுதியாகின்றது.

அதாவது இந்தத் தவறைத் திருத்துவது என்றால் சவூதி அரசுக்குச் சொல்லி அவர்கள் தான் திருத்த வேண்டும். ஏனெனில் இவர்கள் காசு வாங்கிக் கொண்டு மொழி பெயர்த்ததுடன் இவர்கள் வேலை முடிந்து விட்டது. அவ்வாறு சவூதிக்குத் தெரிவித்தால் இவர்கள் தவறாக மொழி பெயர்த்தது தெரிந்து விடும். அடுத்தடுத்து ஆர்டர்கள் வராது. எனவே பத்திரிகையில் மட்டும் திருத்தம் என்று போட்டு கதையை முடித்து விடுவோம் என்று நினைக்கிறார்கள் என்று நான் சந்தேகிக்கிறேன். அப்படியானால் குர்ஆனை விட உங்கள் சுயநலம் தான் முன்னால் நிற்கிறது என்பது உறுதியாகி விட்டதே?. உங்கள் பத்திரிகையில் வெளியிட்டதை ஆதாரமாகக் காட்டி மக்களை ஏமாற்ற வேண்டாம்.

அடுத்ததாக ஹதீஸ் இருட்டடிப்பு முபாரக் மதனியின் வேலை என்று நழுவுகிறார்.

 

நாம் சுட்டிக் காட்டிய தவறைத் திருத்தாமல் முபாறக் (ஸலபி) மொழி பெயர்த்த ஒரு நூலில் இடம் பெற்ற ஒரு ஹதீஸின் சில பகுதிகள் மொழி பெயர்க்காமல் விடப்பட்டதை எடுத்துக் காட்டுகின்றார். பலவேசக்காரர்கள் அனைவரின் வழி முறை இது தான். யார் எழுதினாலும் ஆதாரமாகக் காட்டுவார்கள். மாட்டிக் கொண்டு விட்டால் எழுதியவர் தலையில் போட்டு தப்பித்துக் கொள்வார்கள். அந்தப் பலவேச வழிமுறையைத் தான் நீங்களும் கடைப்பிடித்துள்ளீர்கள். அதை உங்கள் ஜமாஅத் தான் வெளியிட்டது. உங்கள் தலைவர் முன்னுரை வழங்குகிறார். நீங்களும் உதவியதாக அதில் கூறப்பட்டுள்ளது எல்லாவற்றுக்கும் மேலாக நீங்களே மறுப்பு எழுதும் போது பின்வருமாறு குறிப்பிட்டுளீர்கள்



முபாறக் (ஸலபி) மொழி பெயர்த்த அந்த நூலை மீண்டும் அச்சிட்டால் நீங்கள் குறிப்பிட்ட ஹதீஸை முழுமையாக இடம் பெறச் செய்கின்றோம் இன்ஷா அல்லாஹ். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. நாங்கள் சரி செய்வோம்

எனக் கூறி இப்போது ஒப்புக் கொண்டு விட்டீர்கள். மொத்தத்தில் நான் எழுதிய அனைத்தும் மெய் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபணமாகி விட்டது. நான் கேட்டதற்கு நீங்கள் அளித்த பதிலில் ஒன்று கூட உண்மை இல்லை என்பதும் உறுதியாகி விட்டது. அல்லாஹ் மிகப் பெரியவன்

இரண்டாவது மறுப்புக்கு மறுப்பு

(இந்த மறுப்புத் தொடரில் என்னப் பற்றிய சில விஷயங்களைச் சொல்லும் நிலையை இஸ்மாயீல் சல்ஃபி ஏற்படுத்தி விட்டார். சுய புராணம் பாடுவதற்காக அல்ல. குற்றச்சாட்டுக்கு பதில் அளிப்பதற்காக என்பதைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.)

இஸ்மாயீல் ஸலஃபி அவர்கள் தனது இரண்டாவது மறுப்புக் கட்டுரையை வெளியிட்டுள்ளார். இது வரை நாம் கேட்ட கேள்விகளில் எதற்கு முக்கியமாக பதில் அளிக்க வேண்டுமோ அதற்கு இஸ்மாயீல் ஸலஃபி பதில் அளிக்கவில்லை.

சில கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார். அது தக்க பதிலாக இருக்கவில்லை.

இரண்டாம் மறுப்புக் கட்டுரையில் அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு வாதத்துக்கும் நான் பதிலளிக்கும் கடமை உள்ளது என்பதால் வழக்கமாக வெளிவரும் நான்காவது தொடரை வெளியிடாமல் இந்த மறுப்புக்கு எனது பதிலை அளிக்கிறேன்.

அவரது ஒரு வாதத்துக்கும் பதில் அளிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.

அதற்கு முன் நாம் கேட்ட கேள்விகளில் இஸ்மாயீல் ஸலஃபி பதில் சொல்லாமல் மவுனம் சாதிப்பதன் மூலம் ஒப்புக் கொண்ட விஷயங்களை நினைவுபடுத்துகிறேன்.

  • ஆதாரப்பூர்வமான சீல ஹதீஸ்களை பீஜே மட்டும் மறுக்கவில்லை. இன்னும் பலரும் மறுத்துள்ளார்கள் என்று பட்டியலிட்ட இஸ்மாயீல் ஸலஃபி அந்த அறிஞர்களின் கொள்கை பரப்பும் ஏடுகளை வாங்கி ஆதரிக்குமாறு கூறியது ஏன்?

  • தவறான கொள்கை பரப்பும் இணைய தளத்துக்கு இஸ்மாயீல் ஸலஃபி வாழ்த்து சொன்னது ஏன்? இது மார்க்கத்தில் கூடுமா?

  • சின்ன விஷயங்களுக்காக சர்ச்சை செய்யக் கூடாது என்று இஸ்மாயீல் ஸலஃபி சொன்னது ஏன்? இது மார்க்க அடிப்படையில் சரியா?

  • இலங்கை உலமாக்கள் சரிபார்த்த தமிழாக்கத்தில் பாரதூரமான பிழை உள்ளதை ஒப்புக் கொண்ட இஸ்மாயீல் ஸலஃபி அதைத் திருத்துமாறு சவூதி அரசுக்குத் எழுத்து மூலம் தெரிவித்தாரா?

  • தவ்ஹீதுக்கு எதிராக தமுமுக செயல்படுவது தெரிந்தும் அதற்கு ஆதரவாக இஸ்மாயீல் ஸலஃபி செயல்பட்டது ஏன்?

  • சாமியாரிடம் தமுமுக தலைவர் ஆசி வங்கிய பின்பும் அதை இஸ்மாயீல் ஸலஃபி கண்டித்தாரா?

  • அதன் பிறகு அவர்களுக்குக் கேடயமாகப் பயன்பட்டாரா? இல்லையா?

  • தவ்ஹீதுக்கு எதிரான கொள்கையைப் பரப்பும் இயக்கங்கள் பற்றி தவ்ஹீத் இயக்கம் என்று பொய் சான்று கொடுத்து அரபுகளை ஏமாற்றி பள்ளிவாசல் இஸ்மாயீல் ஸல்ஃபியின் ஜமாஅத் கட்டிக் கொடுத்ததா? இல்லையா? இன்றும் கட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கிகிறதா? இல்லையா? இதற்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கிறதா?

  • இஸ்மாயீல் ஸல்ஃபியின் ஜமாஅத் கட்டிக் கொடுத்த பள்ளிவாசலில் ஜும்மா முடிந்ததும் கூட்டு துஆ ஓதப்பட்டதா? இல்லையா? இஸ்மாயீல் ஸல்ஃபியின் ஜமாஅத் அந்தப் பள்ளிவாசலைக் கட்டிக் கொடுத்திருந்தும் அதைத் தடுக்காத காரணம் என்ன?

  • ஜும்மாவுக்கு இரண்டு பாங்கு என்பது தான் சரி. பீஜே ஒரு பாங்காக ஆக்கிவிட்டுச் சென்று விட்டார் என்று இஸ்மாயீல் ஸல்ஃபியின் தலைவர் கூறினாரா? இல்லையா?

  • பரேலவிகளின் தலைவரான போலி ஆலிமுக்கு இஸ்மாயீல் ஸல்ஃபியின் ஜமாஅத் சேர்ந்தவர் பொன்னாடை போர்த்தினாரா? இல்லையா?

  • தவ்ஹீத் கொள்கைக்கு சம்மந்தமில்லாத இலங்கை உலமா சபையில் இஸ்மாயீல் ஸல்ஃபியின் தலைவர் அங்கம் வகிக்கிறாரா? இல்லையா?

  • பீ.ஜே.யின் சி.டி.க்களையும் புத்தகங்களையும் விற்பனை செய்ததற்காக அஸ்ஸலபிய்யா புக் சென்டரின் மேனேஜரை இஸ்மாயீல் ஸல்ஃபியின் தலைவர் உத்தரவுப்படி ரவுடிகளை வைத்து தாக்கினீர்களா இல்லையா?அவர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டாரா இல்லையா? இது குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதா? இல்லையா?

  • எந்தத் தமிழாக்கத்தில் ஹதீஸ்களை நான் மறுப்பதாக எடுத்துக் காட்டுகிறீர்களோ, அந்தத் தமிழாக்கத்திற்கு 2003 ஜனவரி உண்மை உதயம் இதழில் முழுப் பக்க விளம்பரம் இலவசமாக இஸ்மாயீல் ஸல்ஃபி தானாக முன்வந்து வெளியிட்டாரா? இல்லையா? தவறான் கொள்கை உள்ள ஒரு நூலுக்கு அட்டைப் படத்தில் முழுப்பக்க விளம்பரம் தருவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா?

  • விளம்பரம் மட்டுமின்றி ஒற்றுமையில் வெளிவந்த எனது தமிழாக்கம் குறித்த பேட்டியை ஆறு பக்கங்களில் தன்னார்வத்துடன் பிரசுரம் செய்து, கெட்ட கொள்கையுடைய எனது தமிழாக்கத்தை வாங்கிப் படிக்கச் சொன்னது எப்படி?

  • கடைசியாக இஸ்மாயீல் ஸல்ஃபியின் ஜமாஅத் தவறுகளை விமர்சனம் செய்து பிரசுரம் போட்ட சகோதரர்களுக்கு எதிராகக் காவல் நிலையம் சென்று மக்கா காஃபிர்களின் வேலையைச் செய்தீர்களா? இல்லையா? அடக்கம் செய்யமாட்டோம் என்று அச்சுறுத்தினீர்களா இல்லையா?

  • இஸ்மாயீல் ஸல்ஃபியின் ஜமாஅத் பொதுச் செயலாளருக்கு காரல் மார்க்ஸ் கவிதைக்காரர் நன்றி தெரிவித்துள்ளாரே? அந்த நன்றி எதற்காக?

  • உங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ரிழ்வான் என்பவருக்கு ந்ன்றி தெரிவித்து அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளதே? அந்த நன்றி எதற்காக?

இந்தக் கேள்விகளில் பெரும்பாலானவை இஸ்மாயீல் சலஃபி சம்மந்தப்பட்டவை. சில கேள்விகள் ஜம்மியது அன்ஸாருஸ்ஸுன்னாவின் நிர்வாகம் தொடர்புடைவை.

மேற்கணட கேள்விகளில் இஸ்மாயீல் சலஃபி தொடர்புடையதற்குக் கூட அவர் பதில் அளிக்கவில்ல.

PJ அவர்களின் மறுப்பு 3-ல் வெளிவந்த பல கேள்விகளுக்கு இதிலேயே மறுப்பும் பதிலும் உள்ளது. அதில் அவர் கேட்டுள்ள கேள்விகளில் பெரும்பாலானது என்னுடன் சம்பந்தமற்றது. மற்றும் சில ஜம்இய்யாவுடன் கூட சம்பந்தமற்றது.

எனக்கும், வெளிநாட்டுப் பணத்திற்கும் எந்த நேரடித் தொடர்பும் இல்லை. நிர்வாகம் தான் தொடர்பு கொள்கிறது. நான் இது வரை பள்ளி கட்டியதோ, கிணறு வெட்டியதோ கிடையாது. IIRO நிறுவனத்திடம் உதவி பெற்று 5 பெண் பிள்ளைகள் உள்ள ஒரு குடும்பத்திற்கு மலசல கூடம் ஒன்று கட்டிக் கொடுத்துள்ளேன். இது தவிர எந்த நிர்மானமும் என்னால் நடந்ததில்லை.

தனது நிறுவனம் தொடர்பான குறச்சாட்டுக்களுக்கு தான் பொறுப்பு அல்ல என்று போகிற போக்கில் போக்கில் நைஸாக நழுவி இருக்கிறார்.

உண்மை உதயம் என்ற பத்திரிகை இஸ்மாயீல் சலஃபியின் சொந்தப் பணத்தில் நடத்தப்படும் சொந்தப் பத்திரிகையாக இருந்து அதில் அவர் நம்மைப் பற்றி தாறுமாறாக விமர்சித்திருந்தால் நிச்சயம் அவர் சம்மந்தப்படாத விஷயங்கள் குறித்து அவரிடம் நாம் கேட்க மாட்டோம்.

ஆனால் உண்மை உதயம் பத்திரிகை ஒரு நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. அதில் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு கருத்தும் அந்த நிறுவனத்தின் கருத்து தான். அந்த நிறுவனத்தில் இஸ்மாயீல் ஸலஃபி ஒரு ஊழியர் தான். உரிமையாளர் அல்ல.

உணர்வு ஏட்டில் இஸ்மாயீல் ஸலஃபி பற்றி விமர்சித்து கட்டுரை எழுதி, அதற்கும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் சம்மந்தம் இல்லை என்று தவ்ஹீத் ஜமாஅத் கூறினால் அதை இஸ்மாயீல் ஸலஃபி ஒப்புக் கொள்வாரா?

இஸ்மாயீல் ஸலஃபி அவர்களே நீங்கள் ஏவிவிடப்பட்ட அம்பு தான். எய்தவரை விட்டு விட்டு அம்பை மட்டும் விமர்சிக்க முடியாது.

இஸ்மாயீல் ஸலஃபி அவர்களே நீங்களும் அந்த இயக்கத்தின் தூணாக இருக்கிறீர்கள். நீங்கள் பொறுப்பு வகிக்கும் ஒரு இயக்கத்தின் பெயரால் நடக்கும் தீமைகளில் உங்களுக்குப் பொறுப்பு இல்லை என்று கூறுவதை சிந்தனை உடைய யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

மேலும் அந்த இயக்கத்தில் நீங்களும் தூணாக இருக்கிறீர்கள் என்பதால் அந்த இயக்கத்தின் செயல்களுக்கு நீங்கள் பதில் சொல்லித் தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் அந்த இயக்கம் சரி இல்லாத இயக்கம் தான். சம்பளத்துக்காக நான் வேலை செய்கிறேன். அவ்வளவு தான் என்று பகிரங்கமாக அறிவித்து விடுங்கள்! உண்மை உதயம் எனது சொந்தப் பத்திரிகை தான் என்றும் அறிவித்து விடுங்கள். அதன் பிறகு உங்களை மட்டும் விமர்சிக்கிறோம்.

எனவே மேற்கண்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் மக்கள் மன்றத்தில் நீங்கள் தப்பிக்க முடியாது.

எனவே நான் சுட்டிக்காட்டிய குற்றச்சாட்டுக்களுக்கு உங்களிடம் பதில் இல்லை என்பதால் பல விஷயங்கள் தெளிவாகி விட்டன.

உங்கள் பத்திரிகையை நடத்தும் நிறுவனம், நீங்கள் பணியாற்றும் நிறுவனம் தவ்ஹீதுக்கு எதிரான பள்ளிவாசலைக் கட்டிக் கொடுத்து பாவத்துக்கு உதவி இருக்கிறது. பாவத்துக்கு துணை செய்திருப்பது திட்டவட்டமாக நிரூபணமாகி விட்டது.

ச்வூதி ஏமாளிகளிடம் தவ்ஹீத் பள்ளி என்று பொய்த் தகவல் கொடுத்து ஏமாற்றியுள்ளீர்கள் என்பதும் நிரூபனமாகி விட்டது.

பணத்துக்காக கொள்கையை அடகு வைக்கும் கூட்டம் என்பதும் உறுதியாகி விட்டது.

தவறான கொளகை உடையவர்களிடம் உங்களுக்கு கொள்கை ரீதியான உறவு உள்ளது என்பதும் நிரூபனமாகி விட்டது.

எனது தமிழாக்கத்தில் தவறுகள் உள்ளன என்று ஒருபுறம் நம்பிக் கொண்டு மறுபுறம் அதற்கு விளம்பரமும் கொடுத்துள்ளீர்கள் என்பதால் உங்கள் இரட்டை வேடமும் நிரூபணமாகி விட்டது.

நான் சுட்டிக்காட்டிய குற்றச்சாட்டுக்களில் முக்கியமான அனைத்துமே உங்கள் மவுனத்தின் மூலம் நிரூபணமாகி விட்டது. அல்ஹம்து லில்லாஹ்

இனி உங்கள் குற்றச்சாட்டுக்களுக்கு எனது மறுப்பைத் தருகிறேன்.

இந்த மறுப்பு நீங்கள் குறிப்பட்ட வரிசைப்படி இல்லாமல் எப்படி வரிசைப்படுத்தினால் எளிதில் விளங்கும் என்று நான் கருதினேனோ அந்த வரிசைப்படி அமைத்துள்ளேன். வரிசை தான் மாறி இருக்குமே தவிர குற்றச்சாட்டுக்கள் எதுவும் விடுபடாது.

உங்கள் வாதம்

அவதூறுகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்; அல்லாஹ்வின் பொறுப்பில் விட முடியாது என்று எனக்குக் கூறும் நீங்கள் இது விடயத்தில் தனக்கொரு நீதி, பிறருக்கொரு நீதி என்று செயல்படலாமா?

நீங்கள் தமுமுக அமைப்பாளர் பொறுப்பிலிருந்து நீங்கும் போது மனம் திறந்த மடல் என்ற பெயரில் ஒரு கடிதத்தை (உணர்வு 5:06) உணர்வு வார இதழின் பின் பக்கத்தில் வெளியிட்டீர்கள். அதில்,

.. .. .. இவற்றையெல்லாம் குறிப்பிடக் காரணம் இதன் பிறகும் யாரேனும் அவதூறு பரப்பினால் மறுமையில் அல்லாஹ்விடம் அவர்களுக்கு எதிராக நான் வழக்குத் தொடர்வேன் என்று எச்சரிப்பதற்குத் தான்.

அதே மடலில் இன்னொரு இடத்தில்

என்னைப் பற்றி யார் எந்த அவதூறுகளைப் பரப்பினாலும் அதை என் கவனத்துக்கு யாரும் கொண்டு வரத் தேவையில்லை. இதற்கு முன்னரும், இனியும் அவதூறுப் பிரச்சாரம் செய்யும் எவரையும் நான் மன்னிக்க மாட்டேன். அவற்றை மறுமை நாளுக்கான தயாரிப்பாக நான் படுத்துவேன்.

நீங்கள் கூறிய அதே செய்தியைத் தான் நானும் கூறியுள்ளேன். நான் கூறினால் தவறு, நீங்கள் கூறினால் சரியா? ஏன் இந்த முரண்பாடு? நான் சொன்னால், பதில் சொல்ல முடியாது என்பதற்காகச் சொன்னது; நீங்கள் சொன்னால், பதில் உண்டு; மறுமைக்காகச் சொன்னது என்று ஏன் வித்தியாசமான நீதி? இது ஒன்றே நீங்கள் தவறான நிலைப்பாட்டில் இருக்கிறீர்கள் என்பதற்குத் தக்க சான்றாகும்.

எனது பதில்

சரியான வார்த்தையைத் தவறான இடத்தில் பயன்படுத்தியதன் மூலம் எப்படி சிந்திப்பது என்பது கூட தெரியாமல் இருக்கிறீர்கள் என்பதை அம்பலப்படுத்திக் கொண்டீர்கள்.

திருமணம் ஆனவரும், திருமணம் ஆகாதவரும் விபச்சாரம் செய்தால் இருவருக்கும் ஒரே தண்டனை வழங்குவது சமநீதி என்பீர்களா? இருவரது நிலையில் உள்ள வேறுப்பாட்டைக் கவனித்து தீர்ப்பு அளிப்பீர்களா? உங்கள் சமநீதி சிந்தனையை நினைத்தால் பயமாக உள்ளது.

நான் எந்த நிலையில் அந்த அறிவிப்பை (இதன் பிறகும் யாரேனும் அவதூறு பரப்பினால் மறுமையில் அல்லாஹ்விடம் அவர்களுக்கு எதிராக நான் வழக்குத் தொடர்வேன் என்று எச்சரிப்பதற்குத் தான்) வெளியிட்டேனோ அந்த நிலையில் நீங்கள் இருந்தால் தான் எனக்கு உள்ள நீதியை உங்களுக்கு வழங்க முடியும். ஆனால் அப்படித் தான் உள்ளதா?

வித்தியாசம் உங்களுக்குத் தெரியும். ஆனால் நீங்கள் எனது மனம் திறந்த மடலில் இரண்டு பாராவை மட்டும் வெளியிட்டுள்ளதால் பொது மக்களுக்கு இந்த வித்தியாசம் விளங்காது. எனவே பொது மக்களுக்காக அதை விளக்குகிறேன்.

நான் தமுமுகவில் அமைப்பாளர் பொறுப்பில் இருந்தேன். அந்தப் பொறுப்பு தான் அப்போது தமுமுகவில் முதன்மைப் பொறுப்பாக இருந்தது. அந்த இயக்கத்தை வளர்ப்பதற்காக ஊர் ஊறாக நான் பிரச்சாரம் செய்தேன். 1995 வரை மதுரையில் சொந்த அச்சகம் நடத்திய நான் தமுமுக பணியை மதுரையில் இருந்து செய்ய முடியாது என்பதற்காக தொழிலை மூடி விட்டு சென்னை வந்து சிரமப்பட்டேன். (எனது வருமானம் பற்றி நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு விடை அளிக்கும் போது விரிவாக விளக்குகிறேன்.) அப்போது அரசின் கெடுபிடியும், அடக்குமுறையும் கொஞ்ச நஞ்சமல்ல. பல முறை நாங்கள் சிறை வாசம் அனுபவித்தோம்.

சகோதரர்களின் நிலைகுலையாத உறுதியை அசைக்க முடியாது என்பதை அறிந்து கொண்ட மத்திய மாநில அரசுகள் நம்மை மதிக்க ஆரம்பித்தன. இயக்கத்தை நடத்துவதற்கு தேவையாக இருந்த நிதித் தேவை கூட பூர்த்தியாகும் அளவுக்கு தன்னிறைவு பெற்றது. அப்போது தான் நான் பொறுப்பில் இருந்து விலகினேன்.

சமுதாயத்துக்குப் பாடுபடும் இயக்கம் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் இயக்கம் வளர்க்க நான் பாடுபட்டேன். நான் தலைவனாக வலம் வருவதற்கு அல்ல.

இயக்கம் நிலை பெற்று விட்டது இனி எந்த இடையூறும் இல்லை. நல்ல சக நிர்வாகிகள் இருக்கிறார்கள் (அப்போது அப்படித் தான் இருந்தார்கள்) அவர்கள் இயக்கத்தை நல்ல முறையில் நடத்தட்டும் என்று முழு மனநிறைவோடு பொறுப்பை ஒப்படைத்து ஒதுங்கினேன்.

ஒரு மனிதனை விமர்சிப்பது என்றால் அவன் பொது வாழ்வில் இருக்கும் போது தான் விமர்சிக்க வேண்டும். பொறுப்பைச் சுமந்து கொண்டிருக்கும் போது தான் விமர்சிக்க வேண்டும். ஏனெனில் அவன் பொறுப்பைச் சுமந்திருப்பதால் அவனது நடவடிக்கை அவனது இயக்கத்தைப் பாதிக்கும். எந்தப் பொறுப்பிலும் இல்லாத ஒருவரின் நடவடிக்கைகள் இயக்கத்தைப் பாதிக்காது என்பதே இதற்குக் காரணம்.

எத்தனையோ தனி மனிதர்கள் எத்தனையோ தவறுகளைச் செய்கிறார்கள். அவர்களின் நடத்தைகளை பகிரங்கமாக நாம் விமர்சிப்பது இல்லை.

நான் பொது வாழ்வில் இருந்து விலகி என் சொந்த வேலையைப் பார்க்கப் போகும் போது என்னை விமர்சிப்பது தர்மம் இல்லை.

என்பதால் தான் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டேன். நான் பொறுப்பைச் சுமந்திருந்த காலம் வரை எந்தக் கேள்வியையும் எதிர் கொள்ளத் தயங்கியது இல்லை.

(சில வருடங்கள் நான் உண்டு என் வேலை உண்டு என்று இருந்தேன். அப்போது தான் திருக்குஆனைத் தமிழாக்கம் செய்யும் பணியையும் நிறைவு செய்தேன். இதன் பிறகு தமுமுகவில் உள்ள தவ்ஹீத் சகோதரர்களை அழைத்து இனி மேல் விரலசைத்தல் போன்ற சர்ச்சைக்குரிய செயல்களைச் செய்யக் கூடாது என்று கூறும் அளவுக்கு த்முமுக தலைமை தடம் புரண்டதைக் கண்ட பிறகு, இன்னும் பல சமரசங்களைச் செய்து கொண்டதைக் கண்ட பிறகு நான் மறு பிரவேசம் செய்யும் நிலை ஏற்பட்டது.)

இஸ்மாயீல் ஸலஃபி அவர்களே! இப்போது சொல்லுங்கள்! உங்கள் நிலையும் எனது நிலையும் ஒரே மாதிரியானதா? அனைத்திலிருந்தும் ஒதுங்கி விட்டதாக நீங்கள் அறிவித்த பிறகு நான் உங்களை வம்புக்கு இழுத்தேனா?

நம் இருவரது நிலையும் வெவ்வேறாக இருந்த நிலையில் இருவருக்கும் எப்படி ஒரே நீதியை வழங்க முடியும். எனது அறிவிப்பில் யாரும் என்னை விமர்சிக்கக் கூடாது என்பது மட்டும் கூறப்படவில்லை. நானும் யாரையும் விமர்சிக்க மாட்டேன் என்பதும் அடங்கி இருந்ததே?

அப்படி தான் உங்கள் நிலைமை இருக்கிறதா? நீங்கள் என்னைப் பற்றி எதுவும் எழுதாமல் ஒதுங்கி வாழ்ந்த போது உங்கள் பெயரில் நான் கட்டுரை எழுதி உங்களை வம்புக்கு இழுத்தேனா?

யாரையும் விமர்சிக்காமல் ஒதுங்கிக் கொண்டவனை விமர்சிக்கக் கூடாது என்றால் வலிய வந்து விமர்சிப்பவர் எப்படி அதே நீதியைக் கேட்க முடியும்?

நீங்கள் கூறிய அதே செய்தியைத் தான் நானும் கூறியுள்ளேன். நான் கூறினால் தவறு, நீங்கள் கூறினால் சரியா? ஏன் இந்த முரண்பாடு? நான் சொன்னால், பதில் சொல்ல முடியாதுஎன்பதற்காகச் சொன்னது; நீங்கள் சொன்னால், பதில் உண்டு; மறுமைக்காகச் சொன்னது என்று ஏன் வித்தியாசமான நீதி? இது ஒன்றே நீங்கள் தவறான நிலைப்பாட்டில் இருக்கிறீர்கள் என்பதற்குத் தக்க சான்றாகும்.

என்று கேட்பது எவ்வளவு பெரிய அறியாமை என்பது இப்போதாவது உங்களுக்குப் புரிகிறதா?

இஸ்மாயீ ஸல்ஃபியின் வாதம்

உங்களுக்கு கணக்குவழக்கு சமர்ப்பிக்கவேண்டிய கடமைப்பாடு ஜம்இய்யாவுக்குக் கிடையாது. யாருக்கு ஜம்இய்யா கணக்குக் காட்ட வேண்டுமோ அவர்களுக்கு முறையாகக் காட்டிக்கொண்டுதான் இருக்கின்றது. உங்களை நம்பிக் கணக்கு-வழக்கைத் தரும் அளவுக்கு நீங்கள் நாணயமானவரா? உங்கள் மீதிருக்கும் ஊழல் குற்றச் சாட்டுக்களில் நீங்கள் நீதமானவர் என்பதை நிரூபியுங்கள்! அல் ஜன்னத் ஆசிரியர் பொறுப்புக்கு 2000 ரூபாச் சம்பளத்துடன் ஆரம்பித்த உங்கள் சமூக வாழ்வில் இப்போதைய உங்கள் பொருளாதார நிலை என்ன?

அன்பளிப்புக்களைப் பெறாத உங்கள் சொத்து வளர்ச்சியின் அடிப்படை என்ன என்பதை விளக்குவீர்களா?

எனது பதில்

இஸ்மாயீல் ஸலஃபி கடைந்தெடுத்த பெரும் போய்யர் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரமே தேவை இலல்லை.

என் மீது உள்ள ஊழல் குற்றசாட்டுக்கு என்ன பதில் என்று கேட்கிறார். சொத்து சேர்ந்த சரித்திரம் என்ன என்று கேட்கிறார்.

இப்படி பொத்தாம் பொதுவாகச் சொன்னால் எப்படி?

இஸ்மயீல் ஸல்ஃபியின் பாலியல் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் என்று பொத்தாம் பொதுவாகத் தான் நான் கேட்டேனா? தேவைப்பட்டால் ஆதாரத்துடன் தான் அதைக் கேட்பேன்.

உங்களுக்கு நாணயம் நேர்மை இருந்தால் அந்தக் குற்றச்சாட்டுக்கள் என்ன என்பதைப் பட்டியல் போட்டு அதை நிரூபிக்க முன் வர வேண்டும்.

என் சொத்து வளர்ச்சி பற்றிய பட்டியலையும் எனக்குக் கொடுக்க வேண்டும்?

மானம் சூடு சொரனை இவை கடுகளவாவது உங்களுக்கு இருந்தால் நீங்கள் எதற்குப் பதில் சொல்லா விட்டாலும் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

எனது சொத்து, எனது பொருளாதார நிலை குறித்து பொதுவாக நான் அதிகம் பேசுவதில்லை இது போல் சீண்டும் போது மட்டுமே நான் பேசி இருக்கிறேன். இது குறித்து. போது நான் எதையோ எதிர்பார்ப்பதாக நினைத்து விடுவார்களோ என்று நினைத்து பேசுவோர் பேசிக் கொள்ளட்டும் என்று இருந்து வருகிறேன். இப்போது நாம் யுத்த களத்தில் நிற்கும் போது நீங்கள் கேட்பதால் நான் பதில் சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.

முதலில் எனது சொத்து விபரத்தைத் தந்து விடுகிறேன்.

நான் 25 ஆண்டுகளில் சம்பாதித்த எனது மொத்த சொத்தின் மதிப்பு நீங்கள் ஒரு பள்ளிவாச்ல் கட்டுவதற்குக் கமிஷன் அடிக்கிறீர்களே அதை விடக் குறைவு தான். மிகைப்படுத்திச் சொல்லவில்லை. நிஜமாகத் தான் சொல்கிறேன். உள்ளது. இரண்டு கிரவுன்ட் அ

நான் தற்போது வசித்து வரும் சென்னையில் சிறிய வாடகை வீட்டில் தான் இருந்து வருகிறேன்.

எனது சொந்த ஊரில் எனது தந்தையிடமிருந்து வாரிசாகக் கிடைத்த ஒரு வீட்டு மனை உள்ளது. இரண்டு சென்டுக்கும் குறைவான சுமார் 800 சதுர அடி அளவுடையது. இது எனது சம்பாத்தியம் அல்ல.

எனது குடும்ப நகைகளை விற்று மதுரையில் நான் ஒரு அச்சகம் நடத்தினேன். மிஷினை நானே இயக்குவேன். பைன்டின் செய்வேன். இன்னும் அச்சு சம்மந்தமான அனைத்து வேலைகளையும் நானே செய்து வந்தேன். இதனிடையே தான் தாவா பணியையும் செய்து வந்தேன்.

தமுமுக ஆரம்பித்த பின் அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு நான் சென்னையில் இருக்க வேண்டும் என்று நண்பர்கள் வற்புறுத்தியதால் நான் சென்னைக்கு வருவதற்காக அச்சகத்தை விற்றேன். எனது ஊரைச் சேர்ந்த தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்கள் தம்முடைய ஒரு வீட்டை விற்க இருப்பது தெரிந்ததால் அச்சகத்தை விற்ற பணத்தில் அந்த வீட்டை வாங்கினேன்.

எனது பூர்வீக இடத்தில் சொந்த வீடு ஒன்று கட்டினால் நல்லது என்று நான் நினைத்த போது அதற்கான நிதி என்னிடம் இல்லை. அப்போது நான் வாங்கிய வீடு நல்ல விலைக்குப் போகிறது என்பது தெரிந்ததால் அதை விற்று விட்டு உங்கள் பூர்வீக இடத்தில் வீடு கட்டலாமே என்று ஹைதர் அலி ஆலோசனை கூறினார். அதை விற்று (அப்போது ஐந்து லட்சம் என்று நினைவு) அதில் தான் எனது பூர்வீக இடத்தில் நான்கு லட்சம் ரூபாயில் ஒரு பெட்ரூம் உள்ள் சிறு வீடு கட்டினேன். அந்த வெள்ளை மாளிகையைப் பற்றி உங்கள் இலங்கையைச் சேர்ந்த ரஸ்மி (முஜீப் விவாதத்துக்காக தொண்டி வந்திருந்தார்) அவர்களிடம் கேட்டுக் கொள்ளலாம்.

(இவரும் இவரது நண்பர்கள் சிலரும் தவ்ஹீதை ஏற்றுக் கொண்டாலும் எனது பொருளாதார நிலையை அறிந்து கொள்வதற்காக இரகசிய வருகை தந்தனர். இஸ்மாயீல் ஸலஃபி வகையறாக்கள் பணம் பண்ணுவதற்காக தவ்ஹீத் பேசுவது போல் பீஜேயும் பேசுகிறாரா என்று ஆரய்வதற்காகவே ஒரு குழுவாக வந்தார்கள். எனக்குத் தெரியாமல் நான் வாடகைக்கு குடியிருக்கும் சிறிய வீட்டையும் எனக்கு என்று சொந்தமாக் எந்தச் சொத்தும் இல்லை என்பதையும் விசாரித்து அதன் பிறகு தான் தவ்ஹீத் ஜமாஅத்தில் தீவிர ஈடுபாட்டுடன் உள்ளனர். பிற்காலத்தில் இதை என்னிடம் அவர்களே சொல்லிக் காட்டினர்.)

வீடு கட்டுவதற்குப் போக மீதமுள்ள தொகை ஒரு லட்சத்துடன் முப்பதாயிரம் சேர்த்து ஒரு லட்சத்தி முப்பதாயிரம் ரூபாய்க்கு ஹைதர் அலி ஆலோசனையின் பேரில் எனது ஊருக்கு அருகில் ஒரு வயல் வாங்கினேன்.

எனது பூர்வீக வீடும் அந்த வயலும் தான் என்னிடம் உள்ள அசையாச் சொத்துக்கள்.

மதுரையில் இருந்த போது நல்லூர் என்ற கிராமத்தின் அருகில் மிகக் குறைந்த விலைக்கு மணை கிடைக்கிறது என்று சிலர் கூறியதை நம்பி (1990 இருக்கும் என்று நினைக்கிறேன்.) 3000 ரூபாய்க்கு ஒரு மனை வாங்கினேன். மக்கள் குடியேறாத பகுதியில் உள்ள அந்த இடம் இருக்கிறதா? யாரும் ஆக்ரமித்துக் கொண்டார்களா என்பது தெரியவில்லை.

என் பெயரிலோ என் மனைவியின் பெயரிலோ எந்த வங்கிக் கணக்கும் இல்லை. வங்கியில் கணக்கு வைத்துக் கொள்ளாதவன் இந்தக் காலத்தில் நானாகத் தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். எனது மூன் பப்ளிகேஷன் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு உள்ளது. அதில் புத்தகங்கள் விற்பது தொடர்பான வரவு செலவு தவிர வேறு எந்த வரவு செலவும் இல்லை. அதை நான் இயக்குகிறேன்.

என் மகன் பத்துக்கு பத்து அளவில் சிறிய கடை வைத்துள்ளார். இரண்டாம் மகன் இந்து சகோதரருக்குச் சொந்தமான தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார்.

நாங்கள் மூவரும் உழைத்துத் தான் எங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறோம். நாங்கள் மூவரும் உழைப்பது சொத்துக்கள் வாங்குவதற்குப் போதுமானது அல்ல.

இதைத் தவிர வேறு ஏதாவது சொத்துக்கள் என் பெயரிலோ என் மனைவி பெயரிலோ என் பிள்ளைகள் பெயரிலோ இருந்தால் இஸ்மாயீல் சலஃபிக்கு நான் இலவசமாக அளிக்கத் தயாராக இருக்கிறேன்.

அல்லது யாரெல்லாம் இது பற்றி பேசித் திரிகிறாரோ அவர்கள் அனைவருக்குமே இதைக் கூறிக் கொள்கிறேன். அவர்கள் இது தவிர என் பெயரிலோ என் மனைவி மக்கள் பெயரிலோ சொத்துக்கள் இருந்தால் இலவசமாகவே அவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.

எனக்கு இருக்கும்(?) சொகுசு பங்களாக்கள், கார்கள் பண்ணை வீடுகள் அனைத்தையும் இஸ்மாயீல் ஸல்ஃபிக்குத் தந்து விடுகிறேன்.

இது போன்ற கிறுக்குத் தனங்களுக்கு ஒரு மனிதன் பதில் சொல்லாமல் இருந்தால் எதை வேண்டுமானாலும் சொல்வீர்களா?

நான் மதுரையில் அச்சகம் நடத்திக் கொண்டிருந்த போது சில இளைஞர்கல் வந்தனர். பத்துப் பேர் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

அவர்கள் வந்த போது கையால் இயக்கப்படும் கட்டிங் மிஷினில் நான் பேப்பர்கட்டிங் செய்து கொண்டிருந்தேன். வந்தவர்கள் என் காலையே பார்த்தார்கள். என்ன விபரம் என்று கேட்ட போது நீங்கள் இரண்டாயிரம் ரூபாய் செருப்பு போட்டிருப்பதாகச் சொன்னார்கள். அதைத் தான் பார்க்க வந்தோம் என்று கூறினார்கள். நான் ஹவாய் செருப்பு அணிதிருந்ததையும், உடலுழைப்பு செய்ததையும் பார்த்து விட்டு அதன் காரணமாக தவ்ஹீதுக்கு வந்தார்கள்.

இது போல் நீங்கள் பரப்பியதால் தால் சத்தியம் வளர்ந்து கொண்டிருக்கிறது.

இப்படி எல்லாம் சிலர் நினைப்பதற்குக் காரணம் உள்ளது.

(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியன. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.

திருக்குர்ஆன் 2:273

மூடர்கள் பார்த்தால் செல்வந்தர்கள் என்று நினைக்கும் அளவுக்கு நபித்தோழர்கள் சுயமரியாதையுடன் நடந்ததை அல்லாஹ் புகழ்ந்துரைக்கிறான். அதை இஸ்மாயீல் ஸலஃபி மூலம் அல்லாஹ் என் விஷயத்திலும் மெய்யாக்கி விட்டான்.

அல்ஜன்னத்தில் 2000 சம்பளம் வாங்கிக் கொண்டைருந்தவன் தானே என்று அவர் கூறுவதன் உள் நோக்கம் அனைவருக்கும் தெரிந்ததே, அதாவது மார்க்கப் பணியின் மூலம் நான் பணம் திரட்டினேன் என்று சொல்லாமல் சொல்கிறாராம்.

எனவே இது குறித்தும் நான் விரிவாகச் சொல்லும் நிலையை ஏற்படுத்தி விட்டார்.

நான் மதரஸாவில் ஓதிக் கொண்டிருந்த காலத்தில் எனது ஆசிரியர்கள் செல்வந்தர்கள் வீடுகளுக்குச் சென்று வாசலில் காத்துக் கிடப்பதையும், செல்வந்தர்களைக் கண்டதும் எழுந்து நிற்பதையும், மலேசியா சென்று கவுரவப் பிச்சை எடுத்ததையும் கணட போது நானும் சுய மரியாதை உள்ள என் சக மாணவர்களும் கூனிக் குறுகி விடுவோம். இந்தப் பணத்தாசை தானே உண்மையைச் சொல்வதை விட்டும் இவர்களைத் தடுக்கிறது என்று பேசிக் கொள்வோம். இவ்வாறு பேசிக் கொண்டவர்களில் முஹம்மது கான் பாக்கவி மட்டும் என் நினைவில் இருக்கிறார். மற்றவர்கள் நினைவில் இல்லை. சின்ன வயசில் நான் அப்போதே சபதம் எடுத்தேன். எந்த நிலையிலும் செல்வந்தர்களிடம் போய் நிற்கக் கூடாது. கூனிக் குறுகக் கூடாது. நமக்காக் எதையும் கேட்கக் கூடாது என்றெல்லாம் தீர்மானம் செய்து கொண்டேன். அல்லாஹ்வின் அருளால் 29 ஆண்டுகள் இந்த சபதத்தில் உறுதியாக இருந்து வருகிறேன்.

மிக மிக நெருக்கமான சில நண்பர்களிடம் கடன் வாங்கியதுண்டு. அல்லாஹ்வின் அருளால் இன்று என் உறவினர் தவிர வேறு எவருக்கும் நான் பத்துப் பைஸா கூட கடனாளி அல்ல.

எத்தனையோ தடவை வெளி நாடுகளுக்கு நான் பிரச்சாரத்துக்குச் சென்றுள்ளேன். எனக்கு எந்த அன்பளிப்பும் தரக் கூடாது என்று நிபந்தனையுடன் தான் சென்று வந்தேன். சில பொருட்களை நான் வாங்கி வந்தேன் என்றால் எனது சொந்தப் பணத்தில் வாங்கியது தான்.

அதனால் பணத்துக்காக சத்தியத்தை மறைக்கும் இஸ்மாயீல் ஸலஃபீ போன்றவர்களின் செயல் எனக்கு வெறுப்பாகத் தெரிகிறது.

அத்னால் தான் நீங்கள் கற்பனை செய்வது போல் நான் சொத்து சேர்க்கவில்லை.

அனைத்துச் செல்வத்தையும் விட தன்மானத்தையே நான் பெரிய செல்வமாகக் கருதுகிறேன்.

நான் செய்யும் மார்க்கப் பணிக்காகவோ சமுதாயப் பணிக்காகவோ எந்த ஊதியமோ வேறு ஆதாயமோ அடையக் கூடாது என்பதிலும் நான் உறுதியாக இருந்தேன். மார்க்கத்துக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணிப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பொருளாதாரத்தை வழங்கலாம் என்பதில் எனக்கு மறுப்பு இல்லை. மேற்கண்ட வசனத்திலேயே அதற்கு அனுமதி உள்ளது. இல்லாவிட்டால் தாவா ப்ஃணிகள் அறவே நடைபெறாத நிலை ஏற்படும் என்பதையும் நான் அறிவேன். ஆனாலும் நான் அந்த நிலையை என் விஷயத்தில் தவிர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

ஆனாலும் துவக்க காலத்தில் எனக்கு வேறு வழி தெரியாத நிலையில் நஜாத் பத்திரிகையில் ஐஏசி அமைப்பின் மூலம் மாத ஊதியம் (சுமார் ஒருடம் இருக்கலாம்) வாங்கினேன். அப்போது கூட அந்த ஊதியம் எனது மார்க்கப் பணிக்காக இருக்கக் கூடாது என்பதற்காக பத்திரிகைகளை சநதாதாரர்களுக்கு அனுப்புதல், ஸ்டாம்ப் ஒட்டுதல், பார்சல் கட்டுதல், ப்ரூஃப் திருத்துதல் உள்ளிட்ட பணிகளையும் செய்து வாங்கிய ஊதியத்துக்காக உடல் உழைப்பு செய்தேன்.

அடுத்து அல்ஜன்னத் பத்திரிகையை நான் தான் நடத்தினேன், அதில் நட்டம் ஏற்பட்டதால் நடத்த முடியவில்லை. எனது அச்சகத்தின் வருமானத்தையும் அது சாப்பிடக் கூடிய நிலை ஏற்பட்ட போது மக்களிடம் நன்கொடை கேட்டால் தருவார்கள் என்று நண்பர்கள் கூறினார்கள்.

ஒரு இயக்கம் நன்கொடை கேட்கலாம். தனி நபர் நன்கொடை கேட்பதில் எனக்கு உடன்பாடு இல்லை எனவே ஜாக் இயக்கமே எடுத்துக் கொண்டு மக்களிடம் நன்கொடை பெற்று நடத்திக் கொள்ளுங்கள் என்று கூறி ஒப்படைத்து விட்டேன். அது வரை எனது அல்ஜன்னத் அச்சகத்தில் அச்சிட்டு நான் தான் நடத்தி வந்தேன்.

இதன் பிறகு தான் அல்ஜன்னத் பத்திரிகை சென்னைக்கு மாறியது. அப்போது தான் 2000 ரூபாய் சம்பளம் வாங்கினேன். அதைத் தான் ஸலஃபி குறிப்பிடுகிறார்.

அந்த உறுத்தலைத் தவிர்பபதற்காக எழுத்துப் பணி அல்லாத வேறு பணிகளையும் நான் செய்தேன். (அது ஒரு தனிக் கதை)

சில காலம் (எவ்வளவு காலம் என்பது நினைவில் இல்லை.) இந்த ஊதியத்தைப் பெற்றாலும் சமுதாயப் பணிகள் செய்ய ஜாக் இயக்கம் முட்டுக்கட்டை போட்டதாலும் ஆசிரியரான எனது எழுத்துச் சுதந்திரத்தைப் பறித்ததாலும் நான் விலகிக் கொண்டேன். சென்னையில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த எனக்கு அந்தச் சம்பளம் வாடகைக்குக் கூட போதுமானதாக் இல்லை என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.சென்னை வந்ததும் நூல்கள் எழுதி தனியார் புத்தக் வெளியீட்டாளர்களிடம் கொடுத்து வெளியிட்டு அதன் மூலம் கிடைக்கும் இலாபம் தான் எனது வருமானமாக இருந்தது. அதன் பின் நானே புத்தகம் வெளியிடலானேன்.

எனக்கு இதயத்தில் பிரச்சனை ஏற்பட்டு சீரியஸான நிலையில் தமுமுக நிர்வாகிகள் என்னை தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அப்போது அதற்கு ஐம்பதாயிரம் ரூபாய் செலவானது. அதை உணர்வு இதழில் இருந்து செலுத்தினார்கள். நான் எவ்வளவோ மறுத்தும் கடனாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியும் அவர்கள் மறுத்து விட்டனர். இவ்வளவு காலம் உணர்வு பணியைச் சம்பளம் இல்லாமல் செய்தீர்கள். அதற்கான ஊதியமாக இருக்கட்டும் என்று கூறியதை அப்போது நான் ஏற்று கொண்டேன். தர்மமாக வாங்காமல் உழைப்புக்காக வாங்கினோம் என்ற மன திருப்தி ஏற்பட்டது.

ஆனால் நூல்கள் வெளியிட ஆரம்பித்த பின் கிட்டத் தட்ட பத்து ஆண்டுகளாக நான் எந்தப் பணிக்கும் எந்த ஊதியத்தையும் பெற்றதில்லை. உணர்வில் கட்டுரை எழுதுதல், கேள்வி பதில் எழுதுதல், பிழை திருத்தல், மற்றவர்களின் கட்டுரைகளைத் தணிக்கை செய்தல் ஆகிய அனைத்து வேலைகளையும் நான் செய்து வந்த போதும் இந்தப் பத்து ஆண்டுகளில் எந்த ஊதியமும் பெற்ற்தில்லை. த்ஃவா சென்டரில் பாடம் நடத்திய போதும் அதற்காக நான் எந்த ஊதியமும் பெற்றதில்லை.

தவ்ஹீத் ஜமாஅத் தலைமைப் பொறுப்பில் எனது முழு நேரத்தையும் செலவிட்ட போதும் அதற்காக ஊதியமோ ஊக்கத் தொகையோ நான் பெற்றதில்லை.

நான் பொறுப்பு வகித்த எந்த இயக்கத்திலும் பண வரவு செலவை நான் கையாள்வதில்லை. சில நெருக்கடியான் நேரத்தில், கையாள வேண்டிய நிலை ஏற்பட்டால் இன்னொரு நிர்வாகி அல்லது சில நிர்வாகிகள் துணயுடன் தான் கையாண்டிருக்கிறேன். எந்தக் கடனும் ஜமாஅத்தில் பெற்றதில்லை.

தலைமைப் பொறுப்பின் மூலம் நான் ஆதாயம் அடைந்தவனாக இருந்தால் நான் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகாமல் தொடர முடியும். நான் பொறுப்பில் தொடர்வதைத் தான் மக்களும் விரும்பினார்கள். ஆதாயத்துக்காக பொறுப்பில் உள்ளவன் என்றால் இதை விட்டு விலகிக் கொள்ள மாட்டார்.

ஜாக் தலைமைப் பொறுப்பில் இருந்தும் நானாகத் தான் விலகினேன்.

தமுமுக பொறுப்பில் இருந்தும் நானாகத் தான் விலகினேன்.

தவ்ஃஹீத் ஜ்மாஅத் பொறுப்பில் இருந்தும் நானாகத் தான் விலகினேன்.

இப்போது அனைத்துப் பொறுப்புக்களிலும் இருந்து விலகியதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் எனது தேவைகளுக்கு ஏற்ப சம்பாதிக்க இந்தப் பொறுப்புக்கள் தடையாக இருப்பதும் முக்கியக் காரணமாகும்.

தேர்தல் திருவிழாக்கள் வரும் போது இயக்கத் தலைவர்களுக்கு நல்ல அறுவடை கிடைக்கும். ஆனால் எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் தனியாக எந்த அரசியல் தலைவரையும் சந்தித்தது இல்லை. பல நிர்வாகிகள் அல்லது பல இயக்கத்தினருடன் தான் சந்தித்துள்ளேன். கடந்த தேர்தலில் திமுகவை ஆதரித்தோம் இட ஒதுக்கிட்டுக்காக. தேர்தல் முடிந்த சில மாதங்களில் முதல்வர் வீடு முற்றுகைப் போராட்டம் அறிவிக்க முடிந்ததற்குக் காரணம் எனக்கோ நான் சார்ந்துள்ள் இயக்கத்துக்கோ எந்த ஆதாய எதிர்பார்ப்பு இல்லாததே காரணம்.

ரமலான் தொலை காட்சி நிகழ்ச்சிகள் விளம்பரம் மூலம் நடத்தப்பட்ட போது பல லட்சங்கள் லாபம் கிடைத்தது. உங்கள் உரை தானே ஒளிபரப்பாகிறது. இதை நீங்களே விளம்பரம் பிடித்து நடத்தலாமே என்று பல நண்பர்கள் என் நிலைமை அறிந்து என்னிடம் கூறினார்கள். நான் மறுத்து விட்டேன். அந்த வருவாய் அப்போது தமுமுகவுக்கு பயன்பட்டது. இப்பொது தவ்ஹீத் பணிக்கு பயன்படுகிறது. இதை நான் நடத்தினால் யாரும் என்னைக் கேள்வி கேட்க முடியாது. ஆனால் இவன் ஆதாயத்துக்குத் தான் பேசிக் கொண்டிருக்கிறான் என்று ஒருவன் நினைத்து சத்தியத்தை மறுத்து விடக் கூடாது என்பதற்காக இந்த நிலைபாட்டை எடுத்தேன்.

மீடியா வேல்டு மூலம் தொலைக் காட்சி மூலமும் குறுந்தகடுகள் விற்பனை மூலமும் தனி நபர் சம்பாதிக்கிறார். நீங்களே நடத்தலாமே என்று கூறிய போது அதையும் நான் மறுத்து விட்டேன்.

என்னால் ஜமாஅத் ஆதாயம் அடையும் வகையில் தான் அன்றும் இன்றும் நடந்து வருகிறேன். இனியும் நடக்க துஆ செய்யுங்கள்.

ரமலானுக்கு முன் ஒரு சிறு கடையை வாடகைகுப் பேசி வைத்திருந்தேன். எனக்கு என்று தெரிந்தவுடன் தர மறுத்து விட்டனர். வாடகைக்கும் வீடு பேசிவிட்டு வந்தால் மறு நாள் இல்லை என்று கூறி விடுவார்கள். இதற்கெல்லாம் கூட இடையூறு செய்பவர்கள் உள்ளனர். இப்படி பல விதமான இழப்புகள் தான் எனக்குக் கிடைத்துள்ளது.

மார்க்கத்தை தொடர்புபடுத்தி நான் சம்பாதிப்பதாக யாரேனும் கூறுவதாக இருந்தால் நான் புத்தகம் எழுதி விற்பனை செய்வதைத் தான் கூற முடியும். புத்தகத்தின் எழுத்துக்காக நான் எந்த விலையும் வைப்பதில்லை. பிரபலமான எழுத்தாளர்கள் எழுதும் 40 பக்க புத்தகம் 100 ரூபாய் விலை போடப்படும். அப்படி எல்லாம் நான் போடவில்லை.

புத்தகம் தயாரிக்கும் செலவு, அதை விற்பனை செய்யும் இடத்துக்கான வாடகை, அட்வான்ஸ், மின் கட்டணம், ஊழியர் சம்பளம் ஆகிவற்றுக்கு நான் முதலீடு செய்த அடிப்படையில் தான் அதில் லாபம் கிடைக்கிறது. மாதம் பத்தாயிரம் ரூபாய் அளவுக்கு அதில் எனக்கு வருமானம் வருகிறது. அதில் உள்ள முதலீட்டை எடுத்து வேறு ஏதாவது வழியில் பயன்படுத்தினால் எனக்கு இன்னும் அதிக லாபம் கிடைக்கும். அது பற்றியும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

என்னுடைய நூல்கள் பலவற்றை சவூதி ஜாலியாத்கள் இலவசமாக வெளியிட்டுள்ளன. அதனால் எனக்குப் பாதிப்பு என்று நான் சிந்திக்காமல் அனுமதித்தேன். பீஜேக்கு தடையா என்ற கட்டுரையில் இதை விளக்கியுள்ளேன்.

என் பொருளாதாரம் தொடர்பாக இஸ்மாயீல் சலஃபிக்கோ வேறு எவருக்குமோ நான் பதில் சொல்ல வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அதுவும் இப்போது நான் தனி மனிதன். எந்தப் பொறுப்பிலும் இல்லாதவன் என்பதால் மார்க்க அடிப்படையிலான கேள்விகள் தவிர வேறு எதற்கும் நான் பதில் சொல்லும் அவசியம் இல்லை. ஆனால் இஸ்மாயில் சலஃபி பொது வாழ்வில் இருந்து கொண்டு ஆதாயம் அடைகிறார். அவர் தான் பதில் சொல்லக் கடமைப்பட்டவராக இருக்கிறார்.

ஆனாலும் என் நிகழ் காலம் பற்றியதாக இல்லாமல் கடந்த கால பொது வாழ்வுடன் தொடர்பு உள்ளதாலும் இதைத் தெரிவிக்கிறேன்.

நான் பிரச்சாரங்களுக்குச் செல்லாமலும் தலைமை அலுவலகத்துக்குச் சென்று ஜமாஅத் தொழுகைக்குச் செல்லாதது பற்றியும் அவர் கேட்டுள்ளார்.

நான் பிரச்சாரத்துக்குச் செல்லாததால் பிரச்சாரம் நின்று விடும் நிலை இருந்தால் எனது தனிப்பட்ட தேவைகளை இரண்டாம் பட்சமாக்கி விட்டு நான் பிரச்சாரத்துக்குச் சென்றிருப்பேன். இன்று மாதம் நூறு நிகழ்ச்சிகள் தமிழகம் முழுதும் நடக்கும் அளவுக்கு இங்கே தாயிகள் உள்ளனர். எனவே நான் செல்லாததால் எந்தப் பணியும் முடங்கி விடாது. நான் பிரச்சாரப் பணியில் இறங்கினால் பாரபடசம் இல்லாமல் பரவலாக நான் சென்றாக வேண்டும். அவ்வாறு சென்றால் எனது சொந்த சிரமங்களைக் குறைக்கும் பணியைச் செய்ய முடியாது என்பதும் இன்னொரு காரணம்.

அதே நேரத்தில் என் பங்களிப்பு அவசியம் தேவை எனும் போது நாத்திகர்களுடனான விவாதம் முஜீப் விவாதம் ஆகியவற்றில் நான் பங்களிப்பு அளிக்காமல் இருக்கவில்லை.

நமது தமைமையகமே பள்ளிவாசலாகவும் செயல்படுவதால் அங்கே நான் ஜமாஅதுக்கோ வேறு எதற்குமோ செல்லவில்லை. இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. நானே வெளிப்படையாக அறிவித்தது தான்.

பொதுக்குழு முடிந்து அனைத்து ஆவ்ணங்களையும் புதிய நிர்வாகிகளீடம் ஒப்படைத்து கீழே இறங்கிய பின் இன்று வரை படியேறவில்லை.

கீழ்த்தளத்தில் உள்ள பள்ளிவாசல் பகுதிக்கு மட்டும் சென்று வந்தேன். ஆனால் லுஹருக்குப் போனால் அஸர் வரை அஸருக்குப் போனால் மக்ரிப் வரை என்று என்னிடம் பல பிரச்சனைகளை மக்கள் கொண்டு வர ஆரம்பித்தார்கள். நிகழ்ச்சிகளுக்கு தேதி கேட்டும் வர ஆரம்பித்தார்கள். தொழுதோம் வந்தோம் என்ற நிலை இல்லை.

பொருளாதார ரீதியாகச் சில காரியங்களை நான் செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அதை அறவே செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

எனது பகுதியில் வேறு தவ்ஹீத் பள்ளியும் இல்லை. எனவே தான் வீட்டிலேயே நான் தொழும் நிலையில் இருக்கிறேன். இது மாறிக் கொண்டு உள்ளது. மக்கள் அனைவருக்கும் இது நன்கு தெரிந்த விஷயமாகி விட்டது. நவம்பர் முதல் இனஷா அல்லாஹ் நான் தலைமைக்குச் செல்லாமல் கீழ்த்தளம் மட்டும் சென்று ஜமாஅத்தில் கலந்து கொள்வேன். இது நிரந்தரமானது அல்ல என்பதை நான் நிர்வாகிகளிடமும் சொல்லி இருக்கிறேன்.

உங்களுக்கு மட்டும் தனிச் சட்டமா என்று சிலர் கேட்கிறார்கள். இஸ்லாத்தில் யாருக்கும் தனிச் சட்டம் கிடையாது.

ஒரு மனிதன் சதா நேரமும் மக்களால் சுற்றி வளைக்கப்பட்டு அவனால் வேறு வேலை செய்ய முடியா விட்டால் அதன் காரணமாக் அவன் வாழ்க்கைத் தேவைகளையே நிறைவேற்றிக் கொள்ள முடியா விட்டால் அவன் அந்த நிலை மாறுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு அது வரை அவன் ஜமாஅத்தில் பங்கெடுக்காமல் இருந்தால் அவன் மீது குற்றம் இல்லை என்பது தான் எனது நிலை. இந்த நிலை மிக மிக அரிதாகச் சிலருக்கு மட்டும் தான் ஏற்படும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட இது போன்ற நிலையைச் சந்தித்தார்கள். எபோது பார்த்தாலும் அவர்களைச் சுற்றி வளைத்து கேள்வி கேட்பவர்கள், நபிகள் நாயகத்துடன் நெருக்கம் இருப்பதாகக் காட்டிக் கொள்வோர், நபிகள் நாயகத்துடன் அமர்ந்திருப்பதே நல்லது தானே என்று ஆர்வம் காட்டியோர் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முழு நேரத்தையும் சாப்பிட ஆரம்பித்தது.

இந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திக்க வருவோர் குறிப்பிட்ட தொகையை வழங்கிய பிறகே சந்திக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டான். இப்போது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் பிரைவஸி தேவை என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள். அவசியமில்லாமல் அவர்களுக்கு இடையூறு செய்வது குறைந்தவுடன் இச்சட்டத்தை அல்லாஹ் மாற்றி விட்டான்.

12. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் இத்தூதரிடம் (முஹம்மதிடம்) இரகசியமாகப் பேசினால் உங்கள் இரகசியத்துக்கு முன் தர்மத்தை முற்படுத்துங்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. தூய்மையானது. உங்களுக்கு (எதுவும்) கிடைக்காவிட்டால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

13. உங்கள் இரகசியமான பேச்சுக்களுக்கு முன் தர்மங்களை முற்படுத்துவதற்கு அஞ்சுகிறீர்களா? அவ்வாறு நீங்கள் செய்யாத போது அல்லாஹ் உங்கள் மன்னிப்புக் கோருதலை ஏற்றான். எனவே தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தும் கொடுங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

திருகுர்ஆன் 58:12,13

நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு மட்டும் உரிய இந்தச் சட்டத்தை நாம் வேறு யாருக்கும் பயன்படுத்த முடியாது.

அதற்காக இதை நான் குறிப்பிடவில்லை. இது போன்ற பிரச்சனைகள் யாருக்கும் வரக் கூடாது என்பதற்காக சொல்கிறேன்.

இஸ்மாயீல் ஸலஃபியின் இரண்டாவது மறுப்பில் உள்ள சில விஷயஙகளுக்கு இதில் பதிலளித்துள்ளேன். இதன் தொடர்ச்சி நாளை வெளிவரும்.இன்ஷா அல்லாஹ்

இரண்டாம் மறுப்புக்கு மறுப்பு தொடர் 2

நேற்று வெளியிடப்பட்ட கட்டுரையின் தொடர்ச்சி

நான் கேட்டுள்ள முக்கியமான கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாத இஸ்மாயீல் ஸலஃபி முக்கியமற்றவைகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதுவும் அறிவுபூர்வமானதாக இல்லை.

இஸ்மாயீல் ஸலஃபி வாதம்

தொண்டியில் முஜீபை நேரில் சந்தித்து விவாதத்துக்கு நான் தேதி கேட்ட போது அல்லாஹ்வுக்குத் தெரியும் என்று அவர் கூறினார். அல்லாஹ்வைப் பற்றிப் பேசாதீங்க என்று நான் கூறினேன்.

இதை மறுக்கப் புகுந்த இஸ்மாயீல் இரண்டாவது மறுப்பில் பின் வருமாறு கூறுகிறார்.

முஜீப் கூறுவதையே ஆதாரமாகக் காட்டத் துணிந்து விட்டீர்கள் என்று ஒரு அவதூற்றைக் கூறியுள்ளீர்கள். முஜீபுர் ரஹ்மான் உமரி கூறியதை ஆதாரமாகக் காட்டும் விதத்தில் நான் ஏதாவது வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளேனா? என்று மீண்டும் எனது மறுப்பை வாசித்து நீங்களே உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்!

எனது பதில்

இஸ்மாயீல் ஸலஃபி முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயற்சிப்பவர் என்பது இதன் மூலம் நிரூபணமாகி விட்டது.

அவரது முதல் மறுப்புக் கட்டுரையில் அவர் கூறியதைப் பாருங்கள்

அவர் வேண்டுமானால் முஜீபுர் ரஹ்மான் உமரியுடன் நடந்த தெருச் சண்டையின் போது, அல்லாஹ்வைப் பற்றிப் பேசாதீங்க என்று கூறியதற்குத் தவ்பாச் செய்து கலிமாச் சொல்லி இஸ்லாத்தில் இணையட்டும்.

முஜீப் கூறிய கிளிப்பை எடுத்து காட்டி பீஜே தவ்பாச் செய்து கலிமாச் சொல்லி இஸ்லாத்தில் இணையட்டும் என்று அவர் எழுதிப் இருக்கிறார். ஆனால் இப்போது முஜீபுர்ரஹ்மான் கூறியதை ஆதாரமாகக் காட்டும் விதத்தில் ஏதாவது வார்த்தைகளைப் ப்யன்படுத்தியுள்ளேனா என்று கேட்கிறார்.

தடுமாற்றத்தில் அவர் இருப்பதால் என்ன் பேசுகிறோம் என்பது புரியாமல் பேசுகிறார்.

அடுத்ததாக முஜீப் அல்லாஹ்வுக்க்குத் தெரியும் என்று கூறியது தவற் என்பதை நான் விளக்கி இருந்தேன். ஹதீஸ் ஆதாரத்தயும் காட்டி இருந்தேன்.

அதைப்பின் வருமாறு மறுக்கிறார்.

சலபி வாதம்

இஸ்மாயீல் ஸலஃபி வாதம்

அடுத்து, நீங்கள் முஜீபுர் ரஹ்மான் உமரியுடன்; நடத்திய தெருச் சண்டை பற்றி அதிகம் பேசுவது நமது தலைப்புக்கு அப்பாற்பட்டதாகும். இருப்பினும் நீங்கள் குறிப்பிட்டுள்ள அபூதாவூத், அஹ்மத் ஹதீஸின் படி அவர் கூறியது சரி என்றுதான் கூற வேண்டும். அந்த ஹதீஸ் உங்களுக்குத்தான் மறுப்பாக உள்ளது.

முஜீபுர் ரஹ்மான் உமரி விவாதத்தின் ஆரம்பத்திலோ இடை நடுவிலோ அழுதிருந்தால், அச்சத்தாலோ கேவலத்தாலோ அழுதார் என்று கூற முடியும். ஆனால், விவாதம் முடிந்து நஸீஹத்து செய்யும் போது அழுகிறார். இது உள்ளம் உயிருடன் இருக்கும் எவருக்கும் ஏற்படலாம். அவர், தனது நிலையை அறிவுபூர்வமாக விளக்க விடாமல் நாகரிகமும், பண்பாடும் மிக்க உங்கள் தோழர்கள் அவரை மிகைத்து விடுகின்றனர். இந்நிலையில் அவர் அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுவதைத்தான் அந்த ஹதீஸ் ஆகுமாக்கியுள்ளதே!

நீ அறிவுபூர்வமாகச் செயல்பட வேண்டும்; காரியம் உன்னை மிகைத்துவிட்டால், அல்லாஹ் போதுமானவன் எனக் கூறுமாறு அந்த ஹதீஸ் கூறுகிறது. (அஹ்மத், அபூதாவூத்)

எனவே, நீங்கள் காட்டிய ஹதீஸ் அவருக்குத்தான் சாதகமாக இருக்கின்றது என்பதை நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தால் எவரும் உணர்ந்து கொள்ளலாம்.

எனது பதில்

இவர் மீது நான் பாரதூரமான குற்றச்சாட்டுக்களை வைக்கிறேன். குறிப்பாக பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யக் கூடியவர்கள் என்று கூறுகிறேன்.

அதற்கு எந்தப் பதிலும் கூறாமல் முஜீபுக்கு வக்காலத்து வாங்கி முஜீபை மாட்டி விடுகிறார்.

எனக்கும் முஜீபுக்கும் விவாதம் தான் நடந்தது. அப்படித் தான் ஒப்பந்தமும் செய்யப்பட்டது. விவாதத்தில் நஸீஹத்து (உபதேசம்) என்ற அம்சத்துக்கே இடம் இல்லை. பொய்களையும் புளுகு மூட்டைகளையும் அவிழ்த்து விடுபவரின் போதனையக் கேட்பதற்காக அந்த விவாதம் ஏற்பாடு செய்யப்படவில்லை. விவாதத்தில் நஸீஹத்து (உபதேசம்) என்ற அம்சமே இருக்கவில்லை.

இரு தரப்பும் விவாதித்து இறுதியாக வழங்கப்படும் வாய்ப்பில் தான் அனைத்து வாதங்களையும் தொகுத்து அழுத்தம் திருத்தமாக தனது கருத்தை நிறுவ வேண்டும். அந்த இடத்தில் விவாதம் செய்யாமல் முஜீப் நஸீஹத்து செய்து கொண்டிருந்தார் என்று கூறி முஜீப் தோற்று விட்டார் என்று இஸ்மாயீல் ஸலஃபி தெளிவுபடுத்தி விட்டார்.

விவாதத்தின் போது விவாதிக்க முடியாமல், விவாதிக்க பாய்ன்ட் இல்லாமல் நஸீஹத் செய்யும் நிலைக்கு வந்து கேவலப்பட்டு விட்டோமே என்று முஜீப் நினைத்ததால் வந்த அழுகை என்பதும் நிரூபணமாகி விட்டது.

இதை இஸ்மாயில் ஸலஃபி இன்னும் உறுதிப்படுத்துகிறார்.

விவாதத்தின் நடுவிலோ இடைநடுவிலோ அழுதிருந்தால் அச்சத்தாலோ கேவலத்தாலோ அழுதார் என்று கூற முடியும் என்று இஸ்மாயீல் ஸலஃபி கூறுகிறார்.

ஒருவர் விவாதத்தின் நடுவில் அழக் கூடாது. அவ்வாறு அழுதால் அது தோலவிக்கு அடையாளம் என்கிறார். நான் சொல்கிறேன் நடந்தது விவாதம் மட்டுமே. அதில் எந்த இடத்தில் அழுதாலும் விவாதத்தின் இடையில் அழுதார் என்பது தான் பொருள்

அடுத்து இது உள்ளம் உயிருடன் இருக்கும் எவருக்கும் ஏற்படலாம். என்கிறார். அப்படியானால் விவாதத்தின் இடையில் அழுதால் கேவலப்பட்டு அழுதிருக்கலாம் என்கிறாரே அப்போது உள்ள்ம் செத்து விடுமா?

அடுத்து நான் எடுத்துக் காட்டிய ஹதீஸ் படி முஜீப் செய்தது சரி தான் என்றும் வாதிடுகிறார்.

நான்கு தலைப்புக்களில் விவாதிக்க வேண்டும் என்று தான் ஒப்பந்தம் செய்யப்பட்டது. முதல் தலைப்பில் விவாதம் முடிந்து சபை கலைவதற்குள் மற்ற மூன்று தலைப்புகளுக்கான நாளை முஜீப் அறிவிக்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் முஜீப் அழுததால் விவாதமாக இல்லாமல் கலந்துரையாடலாக வைக்க நான் ஒப்புக் கொண்டேன். (அல்லது முஜீப் கூறுகிற படி ஒரே நாளில் மூன்று தலைப்புகளில் விவாதிக்க முஜீப் மறுத்தால் கல்ந்துரையாடலுக்கு நான் ஒப்பு கொண்டேன்.) எப்படி இருந்தாலும் விவாதத்துக்கான தேதியை ஜூன் முதல் வாரத்துக்குள் தருவதாக முஜீப் ஒப்புக் கொண்டது உண்மை. அவர் ஒப்புக் கொண்டபடி தேதியைச் சொல்வது தான் அறிவுப்பூர்வமாக அவர் கூற வேண்டிய ஒரே பதில். பல மாதங்கள் ஓடி ஒளிந்த அவர் என் கண்ணில் தென்பட்டதால் அது பற்றி நான் கேட்டேன். தொண்டி சகோதரர்களும் கேட்டார்கள். ஹதீஸ் படி அறிவுப்பூர்வமாக இதற்கு அளிக்க வேண்டிய பதில் என்ன? தாமதமாகி விட்டது; இன்ன தேதியில் வைத்துக் கொள்வோம் என்பது தானே இதற்குரிய நாணயமான பதில். நான் ஏன் தேதி தரவில்லை தெரியுமா என்று கூறுவது அறிவுப்பூர்வமானதாக இருக்குமா?

எனவே ஹதீஸ் படி அவர் அறிவுப்பூர்வமாக நடக்காமல் அல்லாஹ்வுக்குத் தெரியும் என்று தவ்றாகப் பயன்படுத்தியது அறிவுப்பூர்வமான செயலா?

இஸ்மாயீல் ஸலஃபி வாதம்

வெளி நாட்டில் நிதி உதவி பெறுவது குறித்து நான் கேள்வி கேட்டது எந்த அடிப்படையில் என்பது எனது கட்டுரையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதாவது அரபுகளை தவ்ஹீத் பள்ளிவாசல் என்று பொய்யான தகவல் கூறி தவ்ஹீதுக்கு எதிரான பள்ளிவாசல் கட்டிக் கொடுத்ததும், தஃவாவை மறந்து விட்டு கமிஷன் கிடைக்கிறது என்பதற்காக அலைவதும் தான் காரணம்.

இதை மறுக்க முடியாத இஸ்மாயீல் ஸலஃபி அது போன்ற குற்றச்சாட்டை என் மீது சுமத்துவதற்காக பயங்கரமான ஆதாரங்களை எடுத்துக் காட்டுகிறார்.

நாம் தமுமுக அமைப்பாளராக இருந்த போது இந்தியன் இஸ்லாமிக் மிஷன் என்ற் அமைப்புக்கு நிதி உதவி கேட்டு எழுதிய கடிதத்தை எடுத்துக் காட்டுகிறார்.

எனது பதில்

இந்தக் கடிதம் அரபு நாட்டுக்கோ அரபு நாட்டு நிறுவனங்களுக்கோ நான் எழுதிய கடிதம் அல்ல. அல்லது அரபு நாட்டு நிறுவனங்களிடம் உதவி பெற்றுத் தாருங்கள் என்று நான் இவர்களுக்குப் பரிந்துரை செய்து எழுதிய கடிதமும் அல்ல.

இன்னும் சொல்லப் போனால் இவர்களுக்கு எழுதிய கடிதமும் அல்ல.

இந்தியன் இஸ்லாமிக் மிஷன் என்ற நிறுவனம் சரியான கொள்கையின் அடிப்படையில் பாடத்திட்டங்களை வகுத்து நடந்து வந்த போது தவ்ஹீத் சகோதரர்கள் அனைவருக்கும் பொதுவாக எழுதிய வேண்டுகோள்.

(சில ஆண்டுகளாக அந்த நிறுவனம் அடிப்படைக் கொள்கையில் இருந்து விலகி விட்டதால் நான் பரிந்துரை செய்வது இல்லை.)

அந்த நிறுவனத்தார் அதை அச்சிட்டோ ஜெராக்ஸ் எடுத்தோ இவர்களுக்கும் அனுப்பியுள்ளனர். அன்புள்ள கொள்கைச் ச்கோதரர்களுக்கு என்று தான் அக்கடிதம் துவங்குகிறது.

அரபு நாட்டு பணத்துக்கு நான் பரிந்துரை செய்தேன் என்பதற்கு இதை ஆதாரமாகக் காட்டுகிறார்.

இஸ்மாயீல் ஸலஃபி வாதம்

அடுத்ததாக ஸைஃபுல்லாஹ் ஹாஜா அவர்கள் கடையநல்லூர் மதரஸாவுக்கு நிதி திரட்டுவதற்காக தஸ்கியா (நற்சான்றுக் கடிதம்) கேட்டு இவர்களுக்குக் கடிதம் எழுதியதை எடுத்துக் காட்டுகிறார்.


எனது பதில்

இஸ்லாமியக் கல்லூரி தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகத்தில் உள்ள நிறுவனம் அல்ல. தவ்ஹீத் ஜமாஅத் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே நடந்து வரும் நிறுவனம். ஒரு ட்ரஸ்ட் மூலம் அது நடத்தப்படுகிறது. அந்த ட்ரஸ்டில் நான் உறுப்பினர் அல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொள்கை அளவில் அது நம்முடைய ஜமாஅத்தின் சார்பு இயக்கமாக உள்ளது. ஆனால் அந்த நிறுவனமும் கடந்த காலங்களில் வெளிநாட்டு உதவிகள் பெறலாம் என்பதைக் கொள்கையாகக் கொண்டு சில முயற்சிகளைச் செய்தது. பின்னர் அதன் விபரீதம் சுட்டிக் காட்டப்பட்ட பின் அது போன்ற முயற்சிகளைக் கைவிட்டு விட்டனர்.

இஸ்மாயீல் ஸலஃபி வஞ்சகம் செய்வதில் கைதேர்ந்தவர் என்பது இக்கடித்ததை அவர் வெளியிட்ட விதத்தில் இருந்து தெரிய வருகிறது.

எந்த ஒரு கடிதமானாலும் அது எழுதப்பட்ட தேதியுடன் தான் வெளியிட வேண்டும். லட்டர் பேடுடன் தான் வெளியிட வேண்டும். தலையைக் கட் பண்ணி வெளியிட்டு இது நேற்று எழுதிய கடிதம் போல் காட்டுகிறார் என்றால் அரபுகளை எப்படி எல்லாம் ஏமாற்றி இருப்பார்கள் என்பது தெரிகிறது.

தேதியுடன் அக்கடிதத்தை வெளியிட்டு இஸ்மாயீல் ஸலஃபி நிரூபிக்க வேண்டும்.

தமிழ் நாடு த்வ்ஹீத் ஜமாஅத் ஆரம்பிப்பதற்கு முன்னர் நாம் ஜாக் இயக்கத்தில் இருந்தோம். அப்போது வெளிநாட்டில் இருந்து அந்த இயக்கம் உதவிகளைப் பெற்று வந்த்து. அப்போது நாம் அதை எதிர்க்கவில்லை. வெளிநாட்டுப் பண மோகம் எல்லை மீறிப் போய் தஃவா பின்னுக்குத் தள்ளப்பட்ட போது தான் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. அது பின்னர் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்று பெயர் மாற்றப்பட்டது. அப்போது தான் வெளி நாட்டு நிதியை வாங்கக் கூடாது என்று கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. இதை முந்தைய மறுப்பிலும் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளேன்.

அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் ஆரம்பிக்கப்பட்டது 2003 இறுதியில் தான்.

நமது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பதிவு எண், அனைத்து தவ்ஹீத் ஜமாஅத்தின் பதிவு எண் 333/2003 என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புது அமைப்பாக இல்லாமல் பெய்ர் மாற்ற்ம் செய்ய்ப்பட்ட அமைப்பாக உள்ளதால் அதே எண் வழங்கப்பட்டது.

2003 என்பது பதிவு செய்யப்பட்ட ஆண்டைக் குறிக்கும்.

333 என்பது அந்த ஆண்டில் நமக்கு முன் 332 இயக்கங்கள் பதிவு செய்யப்பட்டதைக் குறிக்கும்.

2003 க்கு முன் ஸைஃபுல்லாஹ் ஹாஜா கடிதம் எழுதியதை நிரூபிக்க அந்தக் கடிதத்தை தேதியுடன் த்லையை வெட்டாமல் வெளியிட்டு நிரூபிக்கும் கடமை உங்களுக்கு உண்டு.

இஸ்மாயீல் ஸலஃபி வாதம்

அடுத்து ஷம்ஸுள்ளூஹா தொடர்பாக நான் எழுதிய ஒரு கடிதத்தை ஆதாரமாக் வெளியிட்டுள்ளார்.



ஷம்ஸுள்ளுஹா வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனத்திடம் சம்பளம் பெற்றுள்ளார் என்று கேட்கிறார்.

எனது பதில்

இங்கேயும் அவரது அறியாமை தான் வெளிப்படுகிறது.

நான் ஒரு கட்டிடத் தொழிலாளி என்று வைத்துக் கொள்வோம். அரபு நாட்டுப் பணத்தில் கட்டப்படும் பள்ளிவாசலுக்கு கட்டுமானப் பணிக்கு அழைத்தால் அதை ஏற்றுக் கொள்வேன்.

என் உடல் உழைப்புக்கு சம்பளம் பெறுவது அரபு நாட்டு உதவி பெற்றதாக ஆகாது.

அரபு நாடுகளுக்குச் சென்றுள்ள பலர் அரபு நாட்டு நிறுவனங்களிடம் பணி புரிந்து சம்பளம் வாங்குகிறார்கள்.அவர்கள் அரபு நாட்டில் பணம் வாங்கி விட்டார்கள் என்று நான் கூற மாட்டேன்.

தஃவா பணியைக் காரணம் காட்டி அரபுகளை ஏமாற்றுவதைத் தான் கண்டிக்கிறேன்.

ஷம்ஸுள்ளுஹா அவர்கள் வரவு செலவு கணக்குகள் பார்ப்பதற்காக நியமிக்கப்பட்டால் அதற்கான சம்பளம் அவருக்குக் கிடைக்க வேண்டும் என்று நான் கடிதம் எழுதினால் அரபு நாட்டு நிறுவனங்களிடம் பணம் வாங்கினார் என்று ஆகுமா?

த்ஃவா பபணிக்காகவா சம்பளம் வாங்கினார்?

இந்த வேறுபாடு தெரியாமல் இதை ஆதாரமாகக் காட்டி தன் மீதுள்ள குற்றச்சட்டுடன் இதை ஒப்பிடுகிறார்.

இஸ்மாயீல் ஸலஃபி வாதம்

அடுத்ததாக, நீங்கள் திர்மிதி நூலை மொழி பெயர்த்தீர்கள். அதை இஸ்லாமியக் கல்விச் சங்கம் வெளியிட்டது. அதன் பதிப்புரிமை உங்களுடையது. அதில் அன்ஸாரிஸ் சுன்னா, ஷபாப், IIRO நிறுவனங்களின் அறபு அணிந்துரைகள் பெறப்பட்டுள்ளன. எதற்காக அறபு அணிந்துரைகள்? உங்கள் பாஷையில் சொல்வதானால், அறபியிடம் காட்டிச் சல்லி அடிப்பதைத் தவிர வேறு காரணம் கூற முடியுமா?

எனது பதில்

திர்மிதி நூலை ஹாமித் பக்ரியின் கல்விச் சங்கம் தான் வெளியிட்டது; அதில் எனக்குச் சம்மந்தம் இல்லை என்று உங்களைப் போல் நான் கூற மாட்டேன். எனது மொழி பெயர்ப்பு என்பதாலும், என் பெயர் பயன்படுத்தப்பட்டதாலும் அதில் எனக்கும் சம்மந்தம் உண்டு.

அரபு மொழியில் அணிந்துரை சம்மந்தமாக நாங்கள் ஆலோசித்துத் தான் முடிவு செய்தோம். இந்த நூலை பெரும்பாலும் அரபு நாடுகளில் உள்ள தமிழ் கூறும் முஸ்லிம்கள் தான் அதிகம் வாங்குவார்கள். அந்த நூல் அரபு நாடுகளுக்கு தணிக்கை பிரச்சனை இல்லாமல் அனுமதிக்கப்படுவதற்கு அரபு மொழியில் அணிந்துரைகள் இருந்தால் நல்லது என்று ஹாமித் பக்ரி சொன்ன யோசனை எங்களுக்கு சரியாகப்பட்டது. அதனால் அதற்கு அனுமதி அளித்தோம். அதைக் காட்டி ஹாமித் பக்ரி அரபுகளிடம் பணம் பெற்றதாகவோ பணம் பெற முயற்சித்ததாகவோ தெரியவில்லை. அப்படி ஏதும் ஆதாரம் இருந்தால் எடுத்துக் காட்டலாம்.

இஸ்மாயீல் ஸலஃபி வாதம்

தரக் குறைவான வார்த்தைகளை இஸ்மாயீல் ஸலஃபி தான் முதலில் பயன்படுத்தினார் என்பதற்கு அவரது பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒப்புதல் வாக்கு மூலத்தை நான் ஆதாரமாக காட்டி இருந்தேன்.

அதையும் பின் வருமாறு மறுக்கிறார்.

அடுத்து, தஃவா கலந்துரையாடலும், சூனியக் கட்டுரையும் என்ற உண்மை உதயம் 2009 ஜூன் இதழ் 15, 16 பக்தைப் காட்டி 26 உலமாக்கள் நான் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகத் தீர்ப்பு வழங்கி விட்டனர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அதில் உள்ளதை மீண்டும் வாசித்துப் பாருங்கள்!

அத்துடன் கட்டுரையாளர் கையாளும் கடின வார்த்தைகள் தவிர்க்கப்படவேண்டும். அவர் அடுத்தவர்களைத் தரக் குறையாக விமர்சித்தாலும், கடின வார்த்தைகளை அவர் பயன்படுத்தினாலும் நாம் நாகரிகம் கருதி, நடுநிலையோடு கடுமையான வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்க்க வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. (உண்மை உதயம் 2009 ஜூன்)

நீங்கள் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும், நான் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் அவர்களின் கூற்றாக இருந்தது. இதை எப்படி உங்களுக்குச் சாதகமான சான்றாக எடுப்பீர்கள்?

எனது பதில்

அவர் எழுதியதற்கு நாம் விளக்கம் கொடுக்கும் அளவுக்கு அவருக்கு கவனச் சிதறல் நோய் ஏற்பட்டுள்ளது.

அவர் எழுதிய அந்தப் பாராவில் இரண்டு செய்திகள் உள்ளன.

இப்போது இஸ்மாயீல் ஸலஃபி தரக்குறைவாக எழுதியுள்ளார்; அதை அவர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பது ஒரு செய்தி. (அத்துடன் கட்டுரையாளர் கையாளும் கடின வார்த்தைகள் தவிர்க்கப்படவேண்டும்)

இனிமேல் பீஜே தரக்குறைவாக எழுதினாலும் இஸ்மாயீல் ஸலஃபி தரக்குறைவாக எழுதக் கூடாது என்பது இன்னொரு செய்தி. (அவர் அடுத்தவர்களைத் தரக் குறையாக விமர்சித்தாலும், கடின வார்த்தைகளை அவர் பயன்படுத்தினாலும் நாம் நாகரிகம் கருதி, நடுநிலையோடு கடுமையான வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்க்க வேண்டும்)

அவருக்கு இரண்டாவது செய்தி மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது.

அவர் என்னைப் பற்றி உண்மை உதயத்தில் விமர்சனம் செய்து கொண்டிருந்த் நேரத்தில் அவரைப் பற்றி எந்த விமர்சனமும் நான் செய்யவில்லை. நான் இவர்களின் விமர்சனத்துக்கு பதில் சொல்வேனா என்பதும் இவர்களுக்குத் தெரியாது. இந்த நிலையில் தான் உலமாக்கள் அவருக்கு ஆலோசனை சொல்கிறார்கள். அந்த ஆலோசனை தான் உண்மை உதயத்தில் வெளியிடப்படுகிறது.

அத்துடன் கட்டுரையாளர் கையாளும் கடின வார்த்தைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பது முதல் வாக்கியம்.

கையாளும் வார்த்தைகள் என்பது இப்போது அவர் கையாள்கிறார் என்ற கருத்தை மட்டுமே தரும்.

தவிர்க்க வேண்டும் என்பதும் அவர் கடின வார்த்தைகளைக் கையாண்டு வருவதை விட்டு விட வேண்டும் என்பதை மிகத் தெளிவாகச் சொல்கிறது.

அடுத்தவர் கடின வார்த்தைகளைக் கையாண்டால் கூட கடுமையான வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்க்க வேண்டும் இஸ்மாயீல் ஸலஃபிக்குச் சொல்லப்பட்ட இரண்டாவது அறிவுரை. இவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எந்த நிலைக்கும் செல்வார் என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

இஸ்மாயீல் ஸலஃபி வாதம்

அடுத்து தாக்குதலை முதலில் ஆரம்பித்தவர் யார் என்பத்ற்கு பதில் சொல்கிறார்.

மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் தொடர் தான் விமர்சனத்தின் ஆரம்பமா? இந்தக் கட்டுரை சுமார் 10 மாதங்களுக்கு முன்பிருந்துதான் எழுத ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முன்னர் நீங்கள் இலங்கை வரும் முன்னரே நியாஸ் ஹாஜியாருக்கு (2003) எழுதிய கடிதத்தில் வெளி நாட்டு நிதி உதவி பெறும் அமைப்புக்களை விமர்சிக்கவில்லையா? இந்தக் கடிதம் மூலம்தானே இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்தினீர்கள்.

 

எனது பதில

இதை விட முக்கியமான குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்காமல் இதற்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அதைக் கூட சரியாகச் சொல்லவில்லை.

நான் தனி நபர்களுக்கு கடிதம் எழுதியதால் நான் தான் ஆரம்பித்து வைத்ததாகக் கூறுகிறார்

தனி நபர்களிடம் நான் சொல்வது போல் இவர்களும் சொல்லி இருக்கிறார்கள். அது பிரச்சனை இல்லை. பகிரங்கமாக பத்திரிகையில் எழுதுவது தான் பிரச்சனை. எந்த ஒரு மனிதரும் எந்த ஒரு மனிதரைப் பற்றியாவது எந்த தனி நபரிடமாவது ஏதாவது சொல்லித் தான் இருப்பார்.

எனவே பகிரங்கமாக பத்திரிகை வழியாக தனி நபர் தாக்குதலை ஆரம்பித்தது இவர் தான் என்பதில் சந்தேகமில்லை.

இஸ்மாயீல் ஸலஃபி வாதம்

- மார்க்க விடயங்களில் மட்டுமன்றி உலக விடயங்களிலும் இவர் அடிக்கடி முடிவுகளை மாற்றித் தனக்குத் தானே முரண்படுபவர் என்பதையும்-

எனது பதில்

அடிக்கடி முடிவுகளை மாற்றிக் கொள்பவன் என்ற பட்டத்தையும் எனக்கு வழங்குகிறார்.

முடிவுகளை மாற்றுவது கேவலமானது அல்ல.

நான் கூறும் மார்க்க விஷயங்களில் நான் தவறாகக் கூறியது தெரிய வந்தால் முடிவுகளை மாற்றிக் கொள்ளத் தான் செய்வேன்.

அது போல் மார்க்கம் சம்மந்தமில்லாத விஷயங்களிலும் ஒரு செயல்பாட்டை விட இன்னொரு செயல்பாடு சரி என்றால் அப்போதும் மாற்றிக் கொள்ளத் தான் செய்வேன்.

இது நல்ல பண்பு தான்.

எனக்கு கர்வம் இல்லை. பெருமை இல்லை, மக்களுக்கு நான் பயப்படவில்லை என்பதற்கு இது ஆதாரமாக உள்ளது.

ஆனால் காரணம் இல்லாமல் நியாயம் இல்லாமல் முடிவுகளை மாற்றிக் கொள்வது தான் கண்டிக்கத்தக்கது.

உதாரணமாக என்னைப் பற்றி பல வருடங்களாக பலவித தாக்குதல்களும் அவதூறுகளும் வலம் வந்து கொண்டிருந்தன. பல வருடங்கள் பொறுத்துப் பார்த்து பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு எனபதால் அதற்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்று எனது நிலையை மாற்றிக் கொண்டேன்.

இவ்வாறு நான் என் முடிவை மாற்றிக் கொள்ள பல வருடங்களை எடுத்துள்ளதால் அடிக்கடி மாறுவது என்பது இதில் இல்லை

ஆனால் இஸ்மாயீல் ஸலஃபி எனது முதல் கட்டுரைக்கு மறுபு எழுதும் போது என்ன சொன்னார்.

இனி வரும் தொடர்களில் அவரது அவதூறுகள் குறித்து விரிவான விளக்கமளிக்கப்பட மாட்டாது. நாளை மறுமையில் அதன் பெறுபேற்றை அல்லாஹ்வின் நீதி மன்றத்தில் வைத்துப் பெற்றுக்கொள்வோம். அவரது மார்க்க ரீதியான கருத்துக்களுக்கு மட்டும் இத்தொடரில் பதிலளிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்!

மார்க்கம் சம்மந்தமான விஷயங்கள் தவிர மற்றவற்றுக்கு பதில் சொல்ல மாட்டேன் என்று எழுதினார்.

எழுதிய மை காய்வதற்குள் உடனே மாற்றிக் கொண்டார். இது தான் அடிக்கடி மாறுதல்

மேலும் ஒரு விஷயத்தை அல்லாஹ்விடம் விட்டு விட்டதாகச் சொல்லி விட்டு அதன் பிறகு மாறினால் முஜீப் போலவே இவரும் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய விதத்தில் மதிக்கவில்லை.

அதுவும் அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்று சொன்ன பிறகு இறை அச்சம் உடையவர் இப்படி மாறுவாரா?

நான் எதிலெல்லாம் மாறினேன் என்பதைப் பட்டியல் போட்டால் அது ஏன் என்பதற்கான தக்க காரணம் இருக்கும்.

ஆனால் இஸ்மாயீல் ஸலஃஃபி மாறிய பல விஷயங்களில் எந்தக் காரணமுமிருக்காது. ஆத்திரத்தில் செய்யப்பட்ட மாற்றமாகவே இருக்கும்.

இஸ்மாயீல் ஸலஃபி வாதம்

இந்த மூன்று பொய்களையும் எதற்காகக் கூறினீர்கள்? நீங்கள் தெரிந்து கொண்டே, வேண்டுமென்றே என் மீது அவதூறு கூறியதை நிரூபித்து விட்டதால், தெரிந்து கொண்டே நானும் விமர்சித்திருப்பதாக சித்தரிக்க வேண்டும் என்ற உளவியல் பலவீனத்தால் உதித்த பொய்கள்தானே இவைகள்? ஏன் இந்தத் திருகு தாளங்கள்?

எனது பதில்

இஸ்மாயில் ஸலஃபிக்குத் தெரியும் என்று நான் கூறிய மூன்று விஷயங்கள் பொய் என்கிறார். இவ்வாறு சொல்வதில் அவர் உண்மையாளராக இருந்தால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து ஒவ்வொரு விஷயமாகக் குறிப்பிட்டு அல்லாஹ்வின் மீது ஆணையாக இது பொய். எனக்கு அறவே தெரியாது என்று கூறட்டும்.

அவ்வாறு கூறிவிட்டால் அதை அல்லாஹ்வின் பொறுப்பில் விட்டு விட்டு அம்மூன்று விஷயங்களை மட்டும் வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்.

இஸ்மாயீல் ஸலஃபி வாதம்

நீங்கள் இலங்கையில் வெளிநாட்டு நிதிக்கு எதிராகப் பேசும் போது அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி குறித்துத்தான் கேள்வி கேட்கப்பட்டது. அவர் இங்கே வசூல் செய்யும் போது இலங்கையில் உங்களுக்கு கிளையும் இருக்கவில்லை; ரசீதும் கொடுக்கப்படவில்லை.

இலங்கையிலிருந்து உங்களுக்கு நிதி தந்தவர்கள் யாராவது கணக்கு-வழக்குக் கேட்ட சரித்திரம் உண்டா? அப்படிக் கேட்டாலும் பொய்க் கணக்குக் காட்டும் வாய்ப்பு இல்லையா? என்று கேட்டு நாம் உங்களைப் பற்றி அவதூறு கூற மாட்டோம்.

எனது பதில்

இலங்கையில் உங்கள் இயக்கத்துக்கு நிதி தந்த யாராவது உங்களிடம் கனக்கு கேட்டதுண்டா? என்றும் கேட்கிறார்.

எங்கள் மீது நம்பிக்கை உள்ளதால் கேட்கவில்லை. ஆனால் எங்கள் மீது சந்தேகம் வந்தால் கணக்கு கேட்க முடியும். அவ்வாறு கேட்டால் நாங்கள் பதில் சொல்லவும் கடமைப்பட்டுள்ளோம்.

மக்கள் கணக்கு கேட்பார்கள் எனற அச்சம் நாங்கள் சரியாக நடந்து கொள்ள உதவும்.

ஆனால் மக்கள் உங்களிடம் கணக்கு கேட்க முடியுமா?

அவ்வாறு கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள் என்பது உங்கள் இந்த மறுப்பிலேயே உள்ளதே

உங்களுக்கு கணக்குவழக்கு சமர்ப்பிக்கவேண்டிய கடமைப்பாடு ஜம்இய்யாவுக்குக் கிடையாது. யாருக்கு ஜம்இய்யா கணக்குக் காட்ட வேண்டுமோ அவர்களுக்கு முறையாகக் காட்டிக்கொண்டுதான் இருக்கின்றது.

இது தான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்

அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸியோ பீஜேயோ யாராக இருந்தாலும் அவர்களின் தவறான செயல்களை நாம் நியாயப்படுத்த மாட்டோம்.

அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸீ கடையநல்லூர் மதரஸாவுக்காக வசூல் செய்த போது சிலர் ரசீது வாங்காமல் இருக்கலாம். ஆனால் மதரஸா கணக்கில் ரசீது போடப்பட்டு வரவு வைக்கப்பட்டு விடும். அவ்வாறு செய்யாமல் அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸீ மோசடி செய்திருந்தால் தவ்ஹித் ஜமாஅத் கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

இஸ்மாயீ ஸலஃபி அவர்களே அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸீயிடம் பணம் கொடுத்து ரஸீது வாங்காதவர்களின் பட்டியலை எனக்கோ தலைமைக்கோ அனுப்பித் தாருங்கள். அல்லது பலவேசத்தில் கூட வெளியிடுங்கள். அதற்கு ரஸீது போடப்பட்டிருந்தால் அதை எடுத்துக் காட்டுகிறேன். ரஸீது போடாவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்க நானே வற்புறுத்துவேன். அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸீ நான் அறிந்த வரை வசூலிக்கும் பணத்தை உரிய நிறுவனத்திடம் சரியாக சேர்த்து வருவதாக அறிகிறேன்.

நீங்கள் கொடுக்காத மற்றவர்கள் கொடுத்த பணத்தைப் பற்றி நீங்கள் கேட்டாலும் நாம் பதில் தருவோம். பணம் கொடுத்தவர் கேட்கட்டும் நீ யார் கேட்க என்று கூற மாட்டோம்.

அவர் எடுத்து வைத்த பதில் சொல்லத்தக்க அனைத்துக்கும் பதில் சொல்லி விட்டேன்.

இஸ்மாயீல் ஸலஃபி அவர்களே உங்கள் அடுத்த மறுப்பைத் தாராளமாக வெளியிடுங்கள். வரவேற்கக் காத்திருக்கிறேன்.

 

உங்களுக்கு தகுந்த அவகாச்ம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நான்காவது தொடரை ஒரு வாரம் தள்ளிவைத்துள்ளேன

 

 

இதற்கும் பதில் சொல்லுங்கள்

இஸ்மாயீல் ஸலஃபி அவர்களும் அவரைச் சேர்ந்தவர்களும் கடந்த பல மாதங்களாக தவ்ஹீத் ஜமாஅத் கொள்கை பற்றியும் அதன் பிரமுகர்கள் பற்றியும் பலவிதமான எதிர்ப்புப் பிரச்சாரம் செய்து வந்தனர். அவர்கள் விமர்சித்த காரணத்தால் நாம் நமது தரப்பை எடுத்துச் சொல்லி வருகிறோம். அது போல் அவர்களும் தமது தரப்பைச் சொல்லி வருகின்றனர். கருத்தை கருத்தால் சந்திக்கும் ஆரோக்கியமான வழிமுறையைத் தான் கடந்த காலங்களில் இந்தியாவிலும் இலங்கையிலும் தவ்ஹீத் வாதிகள் கடைப்பிடித்து வருகிறோம். கருத்தை கருத்தால் வெல்ல முடியாதவர்கள் தான் வன்முறை வழியைக் கடைபிடிப்பதையும்.

நாம் பார்த்து வருகிறோம்.

ஆனால் இலங்கையில் செயல்பட்டு வரும் அபூபக்கர் சித்தீக் மதனி இஸ்மாயீல் ஸலஃபி ஆகியோரின் இயக்க்மாகிய ஜம்மியத்து அன்ஸாரிஸ்ஸுன்னதில் முஹம்மதிய்யா இயக்கம் கருத்தை கருத்தால் வெல்வதற்குப் பதிலாக வன்முறையில் இறங்கி குராபிகளின் வழிமுறைகளைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

இவர்களளின் இலட்சணத்தை இலங்கையைச் சேர்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் அறிந்து கொள்வதற்காக ந்மது செய்தியாளரின் நேரடி ரிப்போர்டை வெளியிடுகிறோம்.

இஸ்மாயீல் ஸலஃபி அவர்கள் இதற்கும் சேர்த்து பதில் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கருத்தைக் கருத்தால் வெல்ல முடியாத jasm காவல் நிலையத்தில் தஞ்சம்

மறுக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்ற தலைப்பில் இஸ்மாயில் ஸலபி என்பவர் உண்மை உதயத்தில் எட்டு மாதங்களாக எட்டுத் தொடர எழுதி வந்தார். அது பலவேச இணையத்திலும் வௌயிடப்பட்டது. எனவே இவர்களின் மலட்டு வாதங்களுக்கும் குருட்டு நிலைப்பாட்டிற்கும் எதிராக onlinepj.com என்ற இணைய தளத்தில் pj அவர்கள் தௌவாகப் பதில் அளித்து வருகிறார.

தற்போது அந்த மலட்டு வாதங்களுக்கு pj அவர்கள் மறுப்பளிக்க ஆரம்பித்து மூன்று தொடர்கள் வெளிவந்துள்ளன. அதன் முதல் பகுதியை அதிலுள்ள வாதங்கள் உண்மையானவை என்பதால் tntj இலங்கைக் கிளை பிரசுரமாக வௌயிட்டு வினியோகித்தது. அதிலுள்ளவற்றிற்கு நேரமையாகப் பதில் அளிக்க முடியாத இஸ்மாயீல் ஸலபியும் ஸித்தீக் மதனியும் சென்ற வௌளிக்கிழமை பரகஹதெனியவில் ஜூம்ஆவின் பின்னர உளறிக் கொட்டிவிட்டு ஒரு துண்டுப் பிரசுரத்தை வௌயிட்டனர். அது மக்களிடத்தில் எடுபடாமல் போனதால் பறகஹதெனியவுக்கு அண்மையில் உள்ள மாவத்தகம காவல் நிலையத்தில் சகோதரர் நிஸ்தார் துண்டுப் பிரசுரம் வௌயிட்டதாக அவர் மீது புகார் செய்தனர். இந்நிகழ்வு pj வுடைய மறுப்பாய்வு இவரகளை எந்தளவு கதிகலக்கியுள்ளது என்பதை உணர்த்துகிறது.

13.10.2009 அன்று காலை மாவத்தகம பொலிஸ் அதிகாரிகள் மூவர் சகோதரர் நிஸ்தார் அவர்களின் அத்தக்பீர் புத்தகக் கடைக்கு வருகை தந்து துண்டுப் பிரசுரம் வௌயிட்டது தொடர்பாக விசாரித்துவிட்டு நாளை 14.10.2009 காலை 9 மணிக்கு காவல் நிலையம் வருமாறு கூறிச் சென்றனர். எனவே நானும் அவரும் காலை சரியாக 9 மணிக்கு அங்கு ஆஜராகி இருந்தோம். சற்று நேரத்தில் இத்ரீஸ் மாஸ்ட்டர் எங்களுடன் வந்து இணைந்து கொண்டார்.

நேற்று (14.10.2009). (jasm) சார்பாக கலந்து கொண்டோர்

அபுபக்கர் ஸித்தீக் மதனி

கலீல் ரஹ்மான்

இஸ்மாயில் ஸலபி

அன்வர் மாஸ்ட்டர்

சகீன் ஹாஜியார்

ஸாதிக்

நாளிம் மாஸ்ட்டர்

ஜீவதுல்லாஹ்

பாலிஹ்

அப்துல் ஹக்

அவர்கள் சார்பாக பத்து நபர்கள் வந்தனர்.

தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கலந்து கொண்டோர்:

ஆர். அப்துர் ராஸிக்

எம்.எம். நிஸ்தார்

இத்ரீஸ் மாஸ்ட்டர்

அத்துண்டுப் பிரசுரம் தனக்கும் தனது ஜமாஅத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது என்று இஸ்மாயீல் ஸலபி என்பவர் புகார் செய்துள்ளமை தொடர்பாக எங்களை கீழ் நிலையிலுள்ள காவல் அதிகாரி விசாரிக்கத் தொடங்கினார். அப்போது tntj கிளை நிர்வாகி என்ற வகையில் அதை சகோதரர் நிஸ்தார் வௌயிடவில்லை. அது கொழும்பில் உள்ள எங்கள் தலைமையிலிருந்து தான் வௌயிடப்பட்டது. அப்பிரசுரத்திலேயே வௌயிட்டோர் விபரமும் உள்ளது. இது இஸ்மாயில் ஸலபிக்கு நன்கு தெரிந்தும் ஆள்மாறாட்டம் செய்துள்ளார. எனவே அதற்கு நாம் தான் முழுப் பொறுப்புதாரிகள் என்று நான் பேச ஆரம்பித்த போது இஸ்மாயீல் ஸலபி இயக்கம் சார்ந்தவர்கள் இவன் வெளியூர்க்காரன். இவனைப் பேச விட வேண்டாம் என்று என்னை வெளியே அனுப்பக் கோரினர். அதனால் நான் வெளியே அனுப்பப்பட்ட பின்னர் சகோதரர் நிஸ்தார் அவர்களை விசாரிக்க ஆரம்பித்த போது இவர் மார்க்கம் மார்க்கம் அல்லாத அனைத்து உலக விடயங்களிலும் எங்கள் இயக்கத்திற்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும் என்று அவரகள் அனைவரும் இணைந்து கூச்சலிட்டு அவரைப் பேச விடாமல் குழப்பம் விளைவிக்கத் தொடங்கினர்.

அதனால் மேலதிகாரியிடம் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டோம். அங்கும் நான் உண்மையை பேச முனைந்த போது பிரதேசவாதம் பேசி என்னை மீண்டும் வௌயே அனுப்பச் செய்தனர். வெளியூர்க்காரன் என்ற மடமை (ஜாஹிலிய்யத்) வாதத்தை வைத்து இவரகள் உண்மையைப் பேசவிடாமல் என்னைத் தடுத்தனர். அப்போது சகோ. நிஸ்தார் அவர்களை விசாரிக்க ஆரம்பித்த போது ஸித்தீக் மதனி குறிக்கிட்டு முன்னர் pj எங்களுடன் இருந்தார். சில வருடங்களாக அவர் தலை குழம்பிவிட்டது ஊரைப் பிரிக்கின்றனா என்று காவல் துறையினரிடம் கூறினர்.

அப்போது நிஸ்தார் அவர்கள் pj அவர்கள் பல இலட்சம் மக்களால் மதிக்கப்படுகின்ற ஒரு சிறந்த அறிஞர். இலங்கைப் பிரச்சினையில் கூட பிரபாகரனுக்கு எதிராகவும் அரசாங்கத்துக்கு ஆதரவாகவும் பகிரங்கமாகக் குரல் கொடுத்துள்ளார். இவ்விடயம் இலங்கைப் பாராளுமன்றத்தில் ஓர அமைச்சரால் சிலாகித்துப் பேசப்பட்டது என்று கூறினார்.

இதை வௌயே இருந்து அவதானித்துக் கொண்டிருந்த போது என்னை காவல்துறை அதிகாரி உள்ளே அழைத்தார்.

நான் சென்று இது எங்கள் மார்க்கப் பிரச்சினை. தவறான கருத்துக்களை விமர்சிப்பது என்பது வரலாற்றில் புதிய விடயம் இல்லை. இவர்களே முதலில் எங்களை மிகத் தரக்குறைவாக விமர்சித்து இவர்களின் ஏட்டில் எழுதினர். அப்போது நாங்கள் விவாதிக்க அழைத்தோம். மறுத்தனர். கலந்துரையாட அழைத்தோம். அப்போதும் மறுத்துவிட்டு தொடர்ந்து 8 மாதங்களாக எழுதி வந்தனர். அதனால் நாங்கள் உண்மைமையைத் தௌவுபடுத்த துண்டுப் பிரசுரம் வௌயிட்டோம் என்று நடந்தவற்றை அமைதியாகவும் ஆணித்தரமாகவும் தௌவுபடுத்தினேன்.

அப்போது ஸித்தீக் மதனி விவாதம் என்பது நமது நிலைபாட்டில் இல்லை என்பதை இஸ்லாத்தில் இல்லாத ஒன்று போன்ற தோரணையில் காவலதிகாரியிடம் கூறினார். இவர் பின்னே இருந்த ஒருவர் pj இலங்கையிலிருந்து வௌயேற்றப்பட்டவர். அவருக்குத் திரும்ப வர முடியாது என்றார். அதற்கு நான் வரமுடியாது என்பதற்கு ஆதாரம் காட்ட முடியுமா என்ற போது pj யை இலங்கைக்கு வந்து பார்க்கச் சொல்லுங்கள் என்று பறகஹதெனியப் பள்ளி செயலாளர் நாளிம் சிறுபிள்ளைத் தனமாகப் பேசினார்.

(2005ல் து வுடைய விசாவை ரத்து செய்ததை இலங்கை அரசு வாபஸ் வாங்கி இப்போது அவருக்கு இலங்கை வருவதற்கான விசாவை வழங்கிவிட்டது. அல்ஹம்து லில்லாஹ்)

சாதிக் என்பவர் நாங்கள் தாடி வைக்கின்றோம். pj தாடி வைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார் என்று அவதூறு கூறி நாங்கள் மார்க்கத்திற்கு எதிரானவர் போன்ற ஒரு தோரணையில் பேசும் போது (tntj சார்பாக கலந்து கொண்ட நாங்கள் மூவரும் தாடியுடன் தான் இருந்தோம். கண் முன்னாலேயே இவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பதை காவல்துறை அதிகாரி புரிந்து கொண்டார்.).! இவர்களின் கூட்டத்தில் உள்ள ஒருவர் pj யின் உருவத்தை இவர்கள் விரைவில் வணங்குவார்கள் என்றெல்லாம் மனோ இச்சைப்படி ரவுடித் தோரணையில் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். ஸித்தீக் மதனியின் மருமகன் சாதிக் என்பவர் வௌயே வா! உன்னைக் கவனித்துக் கொள்கின்றேன்! என்று என்னை காவல் அதிகாரி முன்னாலேயே அச்சுறுத்தினார்.

காவல் துறை அதிகாரி நீஙகள் இதன் மூலம் எதை எதிர்பார்க்கின்றீர்கள் என்று அவர்களிடம் கேட்ட போது கருத்து வேறுபாடு உள்ள விடயங்களில் இதற்குப் பின் பிரச்சாரம் செய்யக் கூடாது. pj முன்னர் சூனியம் உண்டு என்று கூறினார். இப்போது இல்லை என்கிறார். ஆனால் நாங்கள் பழைய கருத்தில் இருக்கின்றோம். இது பற்றி இவர்கள் பேசக் கூடாது என்று 17ம் நூற்றாண்டில் ரோமில் சொயல்பட்ட கிறிஸ்தவ திருச்சபை அறிவியலுக்கு எதிராகப் பேசிய விஞ்ஞானிகளின் குரல் வளையை நெரித்தது போன்று இவர்களும் பேசினர.

அதற்கு நான் இது தவறு. இஸ்லாம் கிறிஸ்தவம் போன்ற மாரக்கம் அல்ல. இமாம்கள் எத்தனையோ தங்களது பழைய கருத்துக்களை மாற்றியுள்ளனர். அதற்கு ஆதாரமாக இமாம் ஷாபியின் 500க்கும் மேற்பட்டதை எனக்கு ஆதாரமாகக் காட்ட முடியும் என்று நான் பதில் அளித்த போது ஸித்தீக் மதனி இமாம்கள் புத்தகத்தில் தான் எழுதினார்கள். மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யவில்லை என்று கூறினார். அதற்கு நான் இமாம்கள் தனது மாணவர்களுக்குப் பாடம் நடத்திப் பிரச்சாரம் செய்ததைத் தான் நூலாகத் தொகுக்கப்பட்டது. இதுவும் பிரச்சாரத்தின் வகை தான் என்றேன். அதற்கு அவரால் பதில் அளிக்க முடியவில்லை. அப்போது எனக்கு ஒரு நியாயமான சந்தேகம் வந்தது. இவர் மதீனாப் பல்கலைக் கழகத்தில் படித்தாரா? அல்லது அங்கும் வசூல் வேட்டை தான் நடத்தினாரா என்று. இந்த அற்பமான விடயம் கூடத் தெரியாமல் இருக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டேன்.

இறுதியாக அவர்களின் இயக்க சட்டதிட்டங்களுக்கு முழுமையாகக் கட்டுப்பட வேண்டி வலியுறுத்தினர். அப்போது சகோ. நிஸ்தார் அவர்கள் மார்க்க விரோதக் கருத்தை என் மீது இவரகள் திணிப்பதால் நான் இவர்களின் ஜமாஅத்திலிருந்து அல்லாஹ்வுக்காக இன்றிலிருந்து விலகிக் கொள்கின்றேன் என்று அழுத்தமாகக் கூறிவிட்டார்.

அப்போது கல்யாணப் பதிவு, மையவாடிப் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி வரும் என்று அவரை சுன்னதுல் ஜமாஅத் தரீக்க வாதிகளின் பாணியில் அச்சுறுத்தினார்கள். அதற்கு நிஸ்தார் இவற்றை நான் அல்லாஹ்வுக்காப் பொறுத்துக் கொள்வேன் என்று உறுதியாகக் குறிப்பிட்டார்.

பிறகு நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று எங்களிடம் போலீஸ் அதிகாரி கேட்ட போது அல்குர்ஆன் சுன்னா ஆகிவற்றை மட்டும் தான் நாங்கள் பிரச்சாரம் செய்வோம். கருத்துச் சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. இதுவே எங்களின் உறுதியான நிலைப்பாடு. நாங்கள் சமாதனத்திற்கு எதிரானவர்கள் அல்லர் என்பதையும் அவ்விடத்தில் பதிவு செய்தோம். அப்போது அவர்கள் எங்கள் நிர்வாகப் பள்ளிகளில் இவர்கள் பிரச்சாரம் செய்ய வரக் கூடாது என்றனர். அதற்கு நான் கொள்கைச் சகோதரர்களின் வீடுகளிலாவது நாங்கள் சத்தியப் பிரச்சாரத்தை மேற்கொள்வோம் என்று கூறினேன். அப்போது அவர்கள் மவ்லவி இல்லாத இவர் பிரச்சாரம் செய்ய மார்க்கத்தில் அனுமதியில்லை என்று கூறினர். (இக்கூட்டம் மவ்லவி இல்லாத குர்ஆனை சரியாக உச்சரிக்கத் தெரியாத கோவை ஐயூபை வைத்து ரமழானுக்கு முன்னர் மார்க்க வியாபாரம் செய்தனர் என்பது தனி விசயம்.)

இவ்வாறு இவர்களின் செயல்களுக்கு எதிராக இவர்களின் பேச்சு இருப்பதைப் பார்த்து நான் பெரிதும் ஆச்சரியப்பட்டேன். இந்நிகழ்வுக்கு முன்னர் இவர்கள் பற்றி ஓரளவு மரியாதை இருந்தது. இந்நிகழ்வின் பின்னர் இவர்கள் மார்க்கத்திற்கு மட்டுமல்ல மனித நேயத்திற்கும் எதிரானவர்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். கருத்தை கருத்தால் வெல்ல முடியாத கோழைகள் என்பதும் புலப்பட்டது. (ஏனெனில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இதே சகோதரர் நிஸ்தார் அவர்களை தவ்ஹீத் பயான் cd விற்பனை செய்கிறார என்ற ஒரே காரணத்துக்காக உங்கள் தலைவருக்கு எதிரானவர்களை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அரசியல்வாதிகளின் ளுவலடநலில் ரவுடிகளைத் தூண்டிவிட்டார ஸித்தீக் மதனி. ஆதனால் சகோதரர நிஸ்தாரின் கடையை சேதமாக்கி அவரும் மகனும் இரண்டு நாட்கள் மாவத்தகம அரசாங்க வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் அளவுக்குத் தாக்கப்பட்டார்கள். இது இலங்கை தவ்ஹீத் வரலாற்றில் கறைபடிந்த ஒரு நிகழ்வாகும்.)

அதன் பின்னர் காவல்துறை அதிகாரி இருசாராரும் சமாதகத்திற்குக் குந்தகம் வராத வகையில் தமது பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

எங்கள் புகாரை சமரப்பித்துவிட்ட நாங்கள் அங்கிருந்து வௌயேறிவிட்டோம்.

கொழும்பிலிருந்து

அப்துர்ராஸிக்

மொபைல் - 0094771524524

 

05.10.2009. 03:59




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
78 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி