ஹதீஸ்களை மறுப்போர் யார்_1

ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களை மறுப்பவர்கள் யார்?
ஐந்து தொடர்களும் இணைக்கப்பட்டுள்ளன.

தொடர்-1

அனைத்து குப்பைகளின் குப்பைத் தொட்டியாக பயன்பட்டு வரும் எந்தக் கொள்கையும் இல்லாத பலவேசம்டாட்காம் இஸ்மாயீல் ஸலபீ என்பவரின் மறுக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்ற தொடர் கட்டுரையை வெளியிட்டுள்ளது.
(இன்னும் பலரது கட்டுரைகளும் உள்ளன, அவை ஒவ்வொன்றாக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்)

இக்கட்டுரை இலங்கை ஜம்மிய்யது அன்ஸாரிஸ் ஸுன்னதில் முஹம்மதியா என்ற அமைப்பின் சார்பில் வெளியிடப்படும் உண்மை உதயம் என்ற ஏட்டிலும் தொடராக வெளிவந்தது. குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஆய்வு செய்து நமது ஆய்வில் ஏற்பட்ட தவறுகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் சுய கௌரவம் பாராமல் அதை ஏற்றுக் கொள்வதை நானும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும் கடைப்பிடித்து வருகிறோம். ஆனால் நமக்கு எதிரான விமர்சனத்தில் தவறு இருக்குமானால் தாட்சண்யமின்றி மறுப்பு அளிப்பதையும் நாம் நடைமுறையாகக் கொண்டுள்ளோம்.

அந்த வகையில் தான் மறுக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்ற விமர்சனக் கட்டுரையையும் நாம் அணுகுகிறோம்.
இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை பற்றி விரிவாக மக்களுக்கு விளக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவே கருதுகிறோம்.
ஏராளமான பக்கங்களில் எழுதப்பட்ட இந்த ஆய்வுக் கட்டுரையை ஒரே தடவையில் வெளியிட்டால் முழுமையாக நேரம் ஒதுக்க முடியாதவர்கள் வாசிக்க மாட்டார்கள். விஷயங்களைக் கிரகிக்கவும் முடியாத நிலை ஏற்படும்.

எனவே ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை இரவு தோறும் நமது மறுப்பு வெளியாகும். இதில் நாம் எடுத்து வைக்கும் வாதமும் கேள்விகளும் சரியானவை என்று கருதும் நண்பர்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் இதற்கான பதிலைப் பெறுவதற்கு இந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பலவேசத்தாருக்கு எந்தக் கொள்கையும் இல்லை என்பதை அவர்களே பகிரங்கமாக அறிமுகப்படுத்தி விட்டதால் கட்டுரையாளரிடமும் அவர் ஆசிரியராக இருக்கும் பத்திரிகைக்கும் அதை வெளியிடும் ஜம்யிய்யது அன்ஸாரிஸ் ஸுன்னதில் முஹம்மதியாவுக்கும் தக்க பதில் தர வேண்டும் என்று நிர்பந்திக்க வேண்டும் என்பதற்காகவே இந்த மறுப்பு. ஒரே தடவையில் மொத்தமாக வெளியிடாமல் தொடராக வெளியிடப்படுகிறது.
இத்தொடரில் அவர் வாதத்தை எடுத்து வைப்பதற்கு முன் சில செய்திகளைப் பீடிகையாகச் சொல்கிறார். அந்தப் பீடிகையில் இருந்தே நமது மறுப்பைத் தொடர்கிறோம்.

இஸ்மாயீல் சலபி என்ன எழுதினார் என்பதைத் தேடியலையும் சிரமத்தை வைக்கக் கூடாது என்பதற்காக அவரது மறுப்புக் கட்டுரைத் தொடரை அப்படியே முழுமையாக வெளியிட்டுள்ளோம். அவர்கள் செய்தது போல் ஒன்றிரண்டு பாராக்களை மட்டும் வசதிக்கேற்ப மேற்கோளாகக் காட்ட மாட்டோம்.

 
  • * ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை ஏற்க மறுப்பது நபித்துவத்தின் ஒரு பகுதியை மறுப்பதாகும்.
  • * தனி நபர் (பி.ஜே) மீது உள்ள பாசத்தால் நபித்துவத்தின் கண்ணியம் மறுக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
  • * பி.ஜே.யை இப்போது எதிர்க்கிறோம் என்றால் ஏற்கனவே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை ஏற்றுக் கொண்டிருந்த அவர் இப்போது 2002ல் இருந்து மாறிவிட்டார் என்பது தான். தனிப்பட்ட கோபத்தில் அல்ல.

முதல் தொடரில் இக்கட்டுரை எழுதப்படுவதற்கான நோக்கத்தை தெளிவுபடுத்துகிறார்.

ஆதாரப்பூர்வமான ஹதீஸை மறுப்பது நுபுவ்வத்தை மறுப்பது எனும் போது அதை எவ்வாறு பொறுத்துக் கொள்ள முடியும் என்ற தோரணையில் தனது கட்டுரைக்கு நல் நோக்கம் கற்பிக்கிறார்.

இஸ்மாயில் சலபியும் அவருக்கு படியளக்கும் ஜம்யிய்யது அன்ஸாருஸ் ஸுன்னாவும் மார்க்கத்துக்கு ஒரு தீங்கு என்றால் கொந்தளித்து எழுக் கூடியவர்கள் அல்ல. தவ்ஹீதுக்கு எதிராகவும் இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிராகவும் செயல்படுபவர்களுக்கு எடுத்து தொடர் என்ன எட்டு வரியிலும் பதிலளிக்காதவர்கள்.

2002க்குப் பின் பீ.ஜேயிடம் மாற்றம் ஏற்பட்டதால் எதிர்க்கிறோம் என்று கூறுவதிலும் எள் முனையளவும் உண்மை இல்லை. ஏனெனில் 2002க்குப் பின் அதாவது நான் கொள்கை கெட்டவனாக ஆன பின்பும் என்னை ஆதரித்தனர். எதிர்க்கவில்லை என்பதே உண்மை.

பலமுறை இலங்கை சென்ற வகையில் தவ்ஹீத் பெயரால் செயல்படும் அதிகமான அமைப்புக்கள் சவூதி அரேபியாவிலிருந்து பணம் கறக்கும் வழிமுறையாகவே தவ்ஹீதைக் கையாண்டு வருவதாக சந்தேகம் கொண்டு ஒவ்வொரு தடவையும் நான் சந்தித்த பல நிகழ்வுகளால் இந்தச் சந்தேகம் உறுதிப்பட்டது.

இதன் பின்னரும், அதாவது நான் வழிகெட்ட பின்னரும் என்னை அவர்கள் அழைத்த போது மறுத்து விட்டேன். அரபு நாட்டில் உதவி பெறாத கொள்கைச் சகோதரர்கள் அழைப்பின் பேரில் கடைசியாக இலங்கை சென்றேன். எனது பிரச்சாரத்தின் இறுதிக் கட்டத்தில் எனது விசா ரத்துச் செய்யப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டேன்.


எனது கடைசிப் பயணத்தின் போது கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்று தாவா செய்யும் இயக்கங்கள் பற்றி கேள்வி வந்த போது சில விஷயங்களை நான் சுட்டிக் காட்டினேன்.

உள்நாட்டில் மக்களிடம் நிதி திரட்டி தஃவா செய்யும் போது தாறுமாறாக பணம் குவியாது. பணம் கொடுத்த மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால் பெருமளவுக்கு ஊழல் நடக்காமல் காத்துக் கொள்ள முடியும். கேள்வி கேட்பாரின்றி தாறுமாறாகப் பணம் குவிந்தால் பணம் திரட்டுவது மட்டுமே ஒரே குறிக்கோளாகி தஃவா பின்னுக்குத் தள்ளப்படும். எனவே நாங்கள் எந்த அயல் நாட்டு நிறுவனத்திடமும் நிதி பெறுவதில்லை என்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ளோம் என்று அப்போது குறிப்பிட்டேன். மார்க்கத்தில் தடை என்பதற்காக நாங்கள் தவிர்க்கவில்லை. மாறாக எங்களைக் காத்துக் கொள்ளவும் எங்கள் பிரச்சாரம் தொய்வு அடையக் கூடாது என்பதற்காக இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளோம் எனவும் கூறினேன். (இதே வார்த்தைகள் அல்ல. இந்தக் கருத்தைக் கூறினேன்)

அரபு நாட்டு சல்லிக்காக (பணத்தை இலங்கைத் தமிழர்கள் சல்லி என்று குறிப்பிடுவார்கள்) தஃவா என்று சீன் காட்டுவோரின் கோபம் அப்போது ஏற்பட்டது தான். அடிமடியில் கை வைக்கிறானே என்பதற்காகத் தான் அதுவரை சிதறிக் கிடந்த அரபு நாட்டு ஏஜெண்டு அமைப்புகள் ஒன்று பட்டார்கள். ஒரே கூட்டமைப்பை உருவாக்கினார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத்தினர் நம்மை டேமேஜ் பண்ணி விடுவார்கள் என்று கங்கணம் கட்டியதன் விளைவாகவே இந்த அதர்ம யுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.

இவர்கள் தவறான கொள்கையை நான் சொல்கிறேன் என்பதற்காக எதிர்க்கவில்லை. அத்தகைய கொள்கை உறுதி அவர்களிடம் இருக்கவில்லை என்பதையும் 2002க்குப் பின் நான் நிலை மாறியதாலேயே எதிர்க்கிறோம் என்று அவர்கள் கூறுவது தவறு என்பதையும் குருட்டாம் போக்கில் நான் சொல்லவில்லை. தக்க ஆதாரத்துடன் தான் சொல்கிறேன்.

கொள்கையற்ற கும்பல்

ஜம்யிய்யது அன்ஸாருல் ஸுன்னா மூலம் ஒரு கவிதை நூல் வெளியிடப்பட்டது. அந்த நூலின் பக்கம் 89ல்,

இங்கே வறுமைகள் தாண்டவமாடும்
தெருவில் மனிதர்கள்

காரல் மார்க்ஸே எழுந்து வா

என்ற கவிதையும் இடம் பெற்றது.


தவ்ஹீதை சொல்வதற்காக பாடுபடும் அமைப்பு என்ற போர்வை போர்த்திக் கொண்டிருக்கும் அமைப்பில் இதே இஸ்மாயில் சலபியின் மேற்பார்வையில் வெளியிடப்பட்ட நூலில் இப்படி ஒரு கவிதை இடம் பெற்றுள்ளதே இவர்கள் யார் என்பதைக் காட்டவில்லையா?

கடவுளே இல்லை என்று மறுத்த ஒருவன் வந்து தான் வறுமையை விரட்ட முடியும் என்பதும், இஸ்லாமியப் பொருளாதாரத்தை விட காரல் மார்க்ஸ் தத்துவமான மார்க்ஸியத்தில் தான் வறுமையை ஒழிக்கும் தீர்வு உள்ளது என்பதும் அல்லாஹ்வின் தூதரே எழுந்து வர மாட்டார்கள் என்ற கொள்கையில் இருப்பதாக வேஷம் போடும் இவர்கள் கார்ல் மார்க்ஸுக்கு மட்டும் விதி விலக்கு அளித்ததும் இவர்களின் தூய கொள்கைக்கு போதுமான எடுத்துக்காட்டு.

தக்க ஆதாரங்களுடனும் தக்க காரணங்களுடனும் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்று நாங்கள் சொன்னது தான் இவர்கள் கொதித்து எழக் காரணம் என்பது உண்மையானால் இஸ்லாத்தை விட கம்யூனிஸமும் நபிகள் நாயகத்தை விட காரல் மார்க்ஸும் மேலானவர்கள் என்று எழுதத் துணிவார்களா?

பேச்சு வழக்கில் வாய் தவறி வந்த வார்த்தைகள் அல்ல. ஆய்வு செய்து பரிசீலித்து அரபு நாட்டு சல்லியில் வெளியிட்ட நூலில் இடம் பெற்ற வாசகங்கள். இவர்களின் இந்த சூப்பர் தவ்ஹீத் கொள்கைக்கு முதலில் பதில் சொல்லட்டும். இவ்வாறு கூறியதன் மூலம் மதம் மாறி முர்தத் ஆகியதற்கு மன்னிப்பு கேட்டு தவ்பாச் செய்தார்களா? தவ்பாச் செய்து மீண்டும் கலிமாச் சொல்லி இஸ்லாத்தில் இவர்கள் இணைந்தார்களா? என்பதற்கும் இவர்கள் பதில் சொல்லட்டும்.

இவர்களின் ஹதீஸ் அபிமானத்தை அறிந்து கொள்ள மற்றொரு சான்றைப் பாருங்கள்.
ஸாலிஹ் பின் பவ்ஸான் என்பவர் அரபு மொழியில் எழுதிய ஒரு நூலை இது தான் தவ்ஹீத் என்ற பெயரில் சவூதி சல்லிக்காக இஸ்மாயில் சலபி கும்பல் வெளியிட்டது.

 

20.05.2000ல் வெளியிட்ட அந்த நூலில் 129ம் பக்கத்தில் ஒரு ஹதீஸை வெளியிட்டு குறிப்பிட்ட சில வார்த்தைகளுக்கு தமிழாக்கம் செய்யாமல் இருட்டடிப்பு செய்தனர். (பிஹி) என்ற ஒரு சொல்லுக்கு நான் மொழிபெயர்க்காமல் விட்டதைப் பற்றிப் பேசும் போது அவர் எப்படி இதைக் கவனிக்காமல் இருக்க முடியும்? மற்ற அறிஞர்களும் இதை கவனிக்காமல் இருந்திருப்பார்களா? வேண்டுமென்றே திட்டமிட்டே தான் பீ.ஜே இப்படிச் செய்தார் என்று இக்கட்டுரைத் தொடரில் இஸ்மாயில் சலபி குதிக்கிறார். (இது குறித்து எனது விளக்கம் பின்னர் வரும். இன்ஷா அல்லாஹ்)

எனினும் சுனியம் குறித்த சரியான நிலைப்பாட்டில் இருக்கும் போது வசனத்தை முழுமையாக மொழியாக்கம் செய்த பி.ஜெய்னுலாப்தீன் அவரகள் தமது அல்குரஆன் மொழிபெயரப்பில் பிஹி (அதன் மூலம் அதாவது சுனியத்தின் மூலம்) என்ற வாரத்தையையே மொழியாக்கம் செய்யாது விட்டு விட்டார.

அல்லாஹ்வின் விருப்பமின்றி யாருக்கும் எந்தத் தீங்கும் அவரகளால் செய்யமுடியாது (2:102) பி.ஜெய்னுலாப்தீன் தரஜுமா

இது தெரியாமல் நடந்தது என்று கூறலாமா? (அப்படி நடந்திருந்தால் அல்லாஹ் மன்னிக்கட்டும்) ஆரம்பத்தில் பல தடவை இந்த இடத்தைச் சரியாக மொழியாக்கம் செய்தவர கருத்து மாறிய பின் ஒரு பதத்தையே தவற விடுகின்றார என்றால்(?) வேண்டுமென்று விட்டிருக்கவே அதிக வாய்ப்புள்ளது.

தனது கருத்துக்கு மாற்றமாக இருக்கின்றது என்பதற்காக ஒரு சொல்லை விட்டு மொழிபெயரக்கும் அளவுக்குப் பகுத்தறிவுவாதம் எல்லை தாண்டி விட்டதா? என்று சிந்தித்த போதுதான் மாற்றுக் கருத்தை மக்களிடம் வைக்க வேண்டியதன் அவசியத்தை உணரந்தோம்.

இது தெரியாமல் நடந்த மொழி பெயரப்புத் தவறு என்றால் இத்தனை பதிப்புக்களிலும் எப்படித் திருத்தப்படாமல் விடப்பட்டது? எதையும் நுணுக்கமாக ஆய்வு செய்யும் பி.ஜெய்னுலாப்தீன் அவரகளின் ஆய்வுக் கண்ணுக்கு எப்படி அது தென்படாமல் போனது!? தரஜுமா குறித்த விமரசனங்கள் எழுவதால் பி.ஜெய்னுலாப்தீன் தரஜுமாவை நுணுக்கமாக மீண்டும் மீண்டும் பாரத்திருக்க வேண்டும்!! அவருக்கோ அவரது குழு ஆலிம்களுக்கோ இது எப்படித் தென்படாமல் போனது?

இமாம்களினதும் வழிகெட்ட பல பிரிவினரகளினதும் நூற்களை நுணுக்கமாக ஆராய்ந்து அவற்றில் உள்ள தவறுகளை அக்குவேறு-ஆணிவேறாக விபரிக்கும் பி.ஜெய்னுலாப்தீன் அவரகள் தனது தரஜுமாவின் தவறு குறித்து கண்டுகொள்ளாதிருப்பது நியாயமா?


பிஹி என்ற ஒரு சொல்லுக்கு மொழிபெயர்க்காமல் விட்டதற்கு வானத்துக்கும் பூமிக்கும் குதித்த இந்தக் கும்பல் வேண்டுமென்றே நீண்ட வாக்கியத்தையே வேண்டுமென்றே விட்டு விட்டு மொழிபெயர்த்துள்ளது.
பிஹி என்ற சிறிய சொல் கவனத்திற்கு படாமல் இருப்பதற்கு வாய்ப்பு அதிகம். ஒரு வாக்கியமே நடுவில் உருவி எடுக்கப்படுவது தற்செயலாக நடந்திருக்குமா?

அரபியையும் இவர்களது தமிழாக்கத்தையும் பாருங்கள்.


நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காரி உமிழ்ந்தால் அது கீழே விழாது. யாருடைய கையிலாவது தான் விழும். (அதாவது அந்தச் சளி கீழே விழாமல் ஒவ்வொருவரும் கையை நீட்டி அதைப் பெற முயல்வார்களாம்) யார் கையில் அது விழுந்ததோ அதன் மூலம் தமது முகத்திலும் நெஞ்சிலும் அதைத் தடவிக் கொள்வார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளுச் செய்தால் அந்தத் தண்ணீருக்காக சண்டையிட்டுக் கொள்வார்கள்.

இவ்வளவு பெரிய வாக்கியம் கவனக் குறைவால் விடுபட்டிருக்க முடியுமா?

இது புகாரியில் இருந்தாலும் இது சரியானதாக இருக்க முடியாது என்று அவர்களின் ஆழ் மனது இவர்களுக்குக் கூறியதால் இவர்கள் இந்த இருட்டடிப்புச் செய்திருந்தால் இவர்களின் உள் மனதும் குர் ஆனுக்கு முரணான ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்பதைத் தானே சொல்கிறது

குர்ஆனுக்கு மாற்றமான இது போன்ற செய்திகள் புகாரியில் இருந்தாலும் இதை நம்பக் கூடாது என்று இவர்களின் மனசாட்சி கூறியிருக்கிறது.

நாங்கள் வெளிப்படையாக இதை எடுத்துக் காட்டி இச் செய்தி தவறு என்று கூறுவோம்.

இவர்கள் அதை மக்கள் காதுகளுக்குப் போகாமல் மறைக்க எண்ணுகின்றனர். ஆதாரப்பூர்வமான செய்தியில் அந்தச் செய்தியின் ஹைலைட்டாக இருக்கும் வாக்கியத்தை மறைத்து மோசடி செய்கின்றனர்.

இவர்கள் மறைத்தாலும் ரஹ்மத் டிரஸ்ட் வெளியிட்ட தமிழாக்கத்தின் மூலம் இது மக்களை அடையுமே, அப்போது எதைப் போட்டு மூடுவார்கள்?

ஒரு வேளை காபிர்கள் கேள்வி கேட்பார்கள், பதில் சொல்ல முடியாது என்று இந்த இருட்டடிப்பு நடந்திருந்தால் இதுவும் இவர்களின் பார்வையில் தவறானதே.

காபிர்கள் கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வார்கள் என்று நான் குறிப்பிட்ட ஒரு செய்திக்காக வானத்துக்கும் பூமிக்கும் குதித்த இஸ்மாயில் சலபி. காபிருக்கு பதில் சொல்ல முடியாதே என்று இருட்டடிப்பு செய்தல் எங்ஙனம் சரியாகும்.

அவரது வாதத்தை அப்படியே ஏற்றுக்கொண்டால் கூட நபி(ஸல்) அவரகள் வஹீ வராமலேயே வஹீ வந்ததாகக் கூறியிருந்தால் ஜிப்ரல்(அலை) அவரகள் வந்து மீட்டிப் பாரக்கும் போது இன்னின்ன வசனங்கள் நான் கொண்டு வராமல் நீங்களாகவே சேரத்துள்ளீரகள் என்று கூறி வஹீயைப் பாதுகாத்திருக்க மாட்டாரகளா? அல்லது வஹியில் நபிக்கு தவறு எற்பட்டிருந்தால் அல்லாஹ் சுட்டிக் காட்டியிருக்கமாட்டானா?

குரஆன் இறைவேதம்தான் என்பதை முழுமையாக நம்புகின்ற இன்றைய மக்களின் நிலையிலிருந்துகொண்டு இவரகள் இந்த விளக்கத்தைக் கூறுகின்றாரகள். (பக் 1298)

மாரக்கத்தைக் காஃபிரகள் இப்படிக் கேட்பாரகள் என்ற மனநிலையிலிருந்து ஆய்வு செய்வதுதான் அவரது அண்மைக்கால புதிய நிலைப்பாடுகளுக்கு அடிப்படைக் காரணமாகும். எதைக் கூறினாலும் அது காஃபிரகளைத் திருப்திப்படுத்துமா? என்றுதான் சிந்திக்கின்றார.
எனவே காஃபிரகள் திருப்திப்படுவாரகளா? என்பதை வைத்து நாம் குரஆன்-ஹதீஸை ஆராய முடியாது! சகோதரர பிஜே அவரகளும் காஃபிரகளைத் திருப்திப்படுத்தும் விதத்தில் இஸ்லாத்தின் கருத்துக்களை திசைதிருப்பவோ அதன் கருத்துக்களுக்கு வலிந்து பொருளுரை செய்யவோ முடியாது என்பதை ஆணித்தரமாகக் கூறிக்கொள்கின்றோம்.

இப்படி எல்லாம் துள்ளிக் குதித்த சலபி, காஃபிர்கள் கேள்வி கேட்பார்கள் என்பதற்காக இருட்டடிப்புச் செய்வது எங்ஙனம் சரியாகும்?

அதாவது இது சரியான செய்தி இல்லை என்பதற்காக இருட்டடிப்பு செய்திருக்க வேண்டும் அப்படி இருந்தால் நம் கொள்கைக்கு அவர் வந்து விடுகிறார். அல்லது காஃபிர்கள் கண்ணில் பட்டால் என்னாவது என்பதற்காக் இதை ஒளித்திருக்க வேண்டும். கண்டிப்பாக மறதியாக இது ஏற்பட்டிருக்க முடியாது. பிஹி என்பதே மறதியில் விடுபட முடியாது என்றால் இதில் மிக முக்கியமான ஒரு பெரிய வாக்கியம் எப்படி விடுபடும்.

சில சமயங்களில் ஒரு வரி தப்பிவிடுவதுண்டு. ஆனால் அரபு முலத்தை பாருங்கள். இந்தக் கருத்து இரண்டரை வரிகளில் உள்ளது. இது எப்படி தப்பிவிடும்?

ஆதாரப்பூர்வமானது என்று இவர்களே நம்பும் ஒரு ஹதீஸில் முக்கியமான கருத்துக்களை இருட்டடிப்புச் செய்தவர்களா ஹதீஸைக் காப்பாற்ற இந்த வேஷத்தைப் போட்டுள்ளார்கள். இதற்கும் சல்லிக்காக மார்க்கத்தை வளைக்கும் இந்தக் கும்பல் பதில் சொல்லி தனக்குத் தானே வழங்கிக் கொண்ட நற்சான்றை நிரூபிக்கட்டும்.

இவர்களின் மற்றொரு சூப்பர் தவ்ஹீத் கொள்கையைப் பாருங்கள்

ஹிஜ்ரி 1414ல் சவூதியில் சல்லி அடிப்பதற்காக திருக்குர்ஆன் தமிழாக்கம் ஒன்று வெளியிடப்பட்டது. அதைச் சரி பார்த்தவர்கள் என்ற பட்டியலில் முதல் பெயராக அஷ்ஷைக் நாகூர் பிச்சை முகம்மது அபூபக்கர் சித்தீக் என்று உள்ளது.
அந்த தமிழாக்கத்தில் இவர் அளித்த நற்சான்றைப் பாருங்கள்.

இம்மொழி பெயர்ப்பு சரியான கொள்கையைச் சார்ந்துள்ளதாகவும் வார்த்தைப் பிரயோகத் தவறுகளில் இருந்தும் நீக்கம் பெற்றதாகவும் அமைந்துள்ளது என்று கூறுகிறார்.

வார்த்தைப் பிரயோகத்தில் உள்ள தவறுகளில் இருந்தும் நீக்கம் பெற்றுள்ளது என்று எந்த மனிதனுடைய எழுத்துக்காவது நற்சான்று தர முடியுமா? அப்படியானால் இவர்கள் அல்லாஹ்வா? மனிதன் எழுதிய இப்படி ஒரு நூல் உலகில் இருக்க முடியுமா? இறைத் தன்மைக்குச் சொந்தம் கொண்டாடும் இந்த ஆணவப் போக்குக்கு எட்டுத் தொடர் என்ன எண்பது தொடர் எழுத முடியுமே?

இன்னும் சொல்லப் போனால் தமிழில் வெளியான அனைத்து தமிழாக்கத்திலும் கடைசித் தரத்தில் உள்ளது தான் இவர் நற்சான்று அளிக்கும் தர்ஜூமா. குர்ஆனை ஒருவரும் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக கடும் உழைப்பு செய்து மொழி பெயர்த்தால் எந்தத் தரத்தில் இருக்குமோ அந்தத் தரத்தில் உள்ள நூலுக்குத் தான் இந்த பில்டப். இவர் குறிப்பிடும் தமிழாக்கம் எது என்கிறீர்களா? இக்பால் மதனி அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு சவுதி அரசால் வெளியிடப்பட்ட அந்த தர்ஜூமாவைத் தான் இவ்வாறு கூறுகிறார்.

மனிதனுக்கு அல்லாஹ்வுடைய தன்மை அளிப்பது இவர்களுக்குச் சர்வ சாதாரணமானது. அதற்கேற்பவும் நிறைய கை வரிசையைக் காட்டியுள்ளனர்.

அஷ்ஷூரா அத்தியாயத்தின் 16வது வசனத்தைப் பாருங்கள். (பக்கம் 368)

ஆகவே நீங்களிருவரும் ஃபிர்அவ்னிடம் சென்று நிச்சயமாக நாங்கள் அகிலத்தாரின் இரட்சகனாகிய தூதராவோம் என்று நீங்களிருவரும் கூறுங்கள்.

இரட்சகனின் தூதர் என்றால் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் என்று பொருள். இது தான் சரியான மொழி பெயர்ப்பு.
இரட்சகனாகிய தூதர்கள் என்றால் தூதர்களே இரட்சகனாகவும் உள்ளனர் என்று பொருள்.

மூஸா நபியையும் ஹாரூன் நபியையும் இறைவன் என்று சித்தரிக்கும் வகையில் மொழி பெயர்த்துள்ளனரே, பிஹி என்பதற்கு வரிந்து கட்டி வாதாடிய சலபியின் கண்ணுக்கு படியளப்பவரின் அத்வைதம் மட்டும் மறைந்து விட்டதா?

இதைக் கண்டித்து எத்தனை கட்டுரை எழுதினீர்கள் என்றும் இவர்களிடம் கேளுங்கள்.

இவர்கள் ஷிர்க், குஃப்ர், பித்அத், தர்கா, தரீக்கா என்று அனைவருடனும் கள்ளக் கூட்டோ சமரசமோ செய்து கொண்ட சந்தர்ப்பவாதிகள் என்பதற்கு பல ஆதாரங்கள் இன்னும் வரும்.

(இவர்களால் இலங்கைச் தவ்ஹீத் என்பது மத்ஹபு போல் ஆக்கப்பட்டு நீர்த்துப் போய் விட்டது என்பதால் இவர்களை அடையாளம் காட்டி விட்டு மற்ற விமர்சனங்களை எடுத்துக் கொள்வோம்.இவரது விமர்சனத்தில் எந்த ஒன்றும் பதிலளிக்கப்படாமல் விடப்படாது இன்ஷா அல்லாஹ்)

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்-2

தொடர் -2

மறுக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்ற தலைப்பில் இஸ்மாயீல் சலஃபி என்பவர் பெயரில் உண்மை உதயம் என்ற இதழில் வெளியிடப்பட்ட கட்டுரை முற்றிலும் தவறானது என்பதை நிரூபிக்கும் வகையில் இத்தொடர் எழுதப்படுகிறது.

நாம் தவறான கருத்தை முன் வைத்து விட்டோம் என்ற மார்க்க உணர்வு மேலோங்கியதால் தான் இத்தொட்ரை எழுதுவதாகக் கூறுவது அப்பட்டமான பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் சில ஆதாரங்களை சென்ற இதழில் நாம் வெளியிட்டோம்.

அதை மேலும் உறுதிப்படுத்தும் சான்றுகளை இப்போது காண்போம்.

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்று இவர்கள் கூறும் சில ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரணாக உள்ளதால் அவற்றை நாம் மறுக்கிறோம். அவை ஆதாரப்பூர்வமானவை அல்ல என்கிறோம்..

ஆனால் நம்முடைய இந்த நிலைபாடு நுபுவ்வத்தையே மறுப்பதாக உள்ளதால் எதிர்க்கத் துணிந்ததாக இஸ்மாயீல் சலஃபி கூறுகிறார்

இது உண்மை என்றால் இது போல் சில ஹதீஸ்களை மறுக்கும் அனைவர் மீதும் அதே கடுமை காட்ட வேண்டுமல்லவா?

ஆனால் இவர் இக்கொள்கை உடைய அனைவர் மீதும் கடுமை காட்டவில்லை.

இதை அவரே பின்வருமாறு ஒப்புக் கொள்கிறார்.

நவீனகால அறிஞர்கள் பலரும் இந்தத் தவறில் வீழ்ந்துள்ளனர். முஹம்மத் அல் கஸ்ஸாலி எனும் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பைச் சேர்ந்த அறிஞர் இவ்வகையில் பல ஹதீஸ்களைப் பகுத்தறிவு ரீதியில் ஆய்வு செய்து மறுத்துள்ளார். பாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமியின் ஸ்தாபகர் அபுல் அஃலா மவ்தூதி (ரஹ்) அவர்கள் குறித்தும் இத்தகைய விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவ்வாறே முஹம்மத் அப்து{ஹ போன்ற அறிஞர்களும் பல அறிவிப்புக்களை மறுத்துள்ளனர்.

இவர்களது ஹதீஸ் துறை சார்ந்த இத்தகைய விமர்சனங்கள் பாமர மக்களிடம் எந்தத்தாக்கத்தையும் எற்படுத்தவில்லை. இவர்களை நேசிக்கும் சகோதரர்களும் இவர்களது இத்தகைய கருத்துக்களை மக்கள் மன்றத்திற்குக் கொண்டுவரவில்லை. இவர்கள் சார்ந்த அமைப்பைச் சேர்ந்த பலரும் இவர்களின் இத்தகைய கருத்துக்களின் தாக்கத்திற்குக் கூட உட்படவில்லை. ஆயினும், தமிழ் உலகில் இத்தகைய கருத்துக்கள் பரவலாக பாமரர்கள் மத்தியிலும் கூட இடம் பிடித்ததற்கு இந்தக் கருத்தை முன்வைத்த அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் உலவி அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கே காரணமாகும்.

இவர் கூறுகின்ற காரணம் ஏற்புடையதல்ல.
.

பீஜே அளவுக்கு அவர்கள் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதால் அவர்களைப் பற்றி பேசாமல் பீஜேயை மட்டும் பேசுகிறேன் என்று இவர் கூறுவது அறிவுடையோரால் ஏற்றுக் கொள்ள முடியாதது. ஆனாலும் இவர் கூறுவது சரி என்று வைத்துக் கொண்டால் அவர்களைக் கண்டிக்காமல் இருந்து விட்டுப் போகட்டும். அவர்களை ஆதரிப்பதும் ஆதரவாகப் பிரச்சாரம் செய்வதும் ஏன்? தாக்கத்தை ஏற்படுத்தாதவர்கள் இனிமேலாவது தாக்கத்தை ஏற்படுத்தட்டும் என்பதற்காகவா?

யார் சில ஹதீஸ்களை மறுக்கிறார்கள் என்று இவரே ஒப்புக் கொள்கிறாரோ அவர்களின் பத்திகைகளை மக்கள் வாங்கி ஆதரிக்க வேண்டும் கூறினால் அதன் பொருள் என்ன?

 

இதோ சலபி தனது தலையங்கத்தில் எழுதியதைக் காணுங்கள்.

 


உண்மை உதயம் மே 2005 பக்கம்3
முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் உண்மை உதயம் அல்ஹஸனாத் போன்ற சமயம் சார்ந்த சஞ்சிகைகள் இருக்கின்றன. எங்கள் தேசம் மீள்பார்வை முஸ்லிம் குரல் நவமணி சத்தியக்குரல் என்பன போன்ற பத்திரிகைகள் இருக்கின்றன. இவற்றை இல்ங்கை முஸ்லிம்கள் ஊக்குவித்து வளர்க்க முயல வேண்டும்

ஆனால் அழைப்பு என்று ஒரு இதழ் தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாட்டில் நடந்தது. இது இந்தத் தலையங்கம் எழுதும் போது இருந்ததா என்று தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் அதை மட்டும் விட்டது தனி விஷயம்
சில ஹதீஸ்களை மறுத்தவர் என்று இவர் விமர்சனம் செய்த அபுல் அஃலா மவ்தூதியின் கொள்கையையும் ஜமாஅதே இஸ்லாமி கொள்கைகளையும் பரப்பும் அல்ஹஸனாத் பத்திரிகையை வாங்கி ஊக்குவிக்க வேண்டும் என்று இவர் பரிந்துரை செய்கிறார்
தீய கொள்கையை வெறுப்பவர் தீய கொள்கையைக் கொண்ட பத்திரிகையை வாங்கி ஆதரியுங்கள் என்று கூறுகிறார் என்றால் இவர் எதிர்ப்பது கொள்கைக்காக அல்ல என்பதைக் காட்டுகிறது. அடிமடியில் கைவைத்தது தான் காரணம் என்பதை நிரூபிக்கவில்லையா?

முஹம்மத் அல் கஸ்ஸாலி முஹம்மத் அப்துஹு ஆகியோரும் சில ஆதாரப்பூர்வமான சில ஹதீஸ்களை மறுத்துள்ளனர் என்று இவர் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். ஆனால் இவர்களின் கொள்கைகளைத் தாங்கி வரும் மீள்பார்வை இதழை வாங்கி ஆதரவு கொடுக்குமாறு எழுதுகிறார்.

அரபு நாட்டுப் பணத்துக்கு அலைவதை பீஜே அம்பலப்படுத்தி விட்டார் என்ற கோபம் இந்தக் கட்டுரைக்குக் காரணமா? கொள்கை காரணமா என்பதை இப்போது விளங்கிக் கொள்ளுங்கள்!

அது மாத்திரம் இல்லை. இவர்கள் உண்மையாகவே தவ்ஹீத் பேசுவோராக இருந்தால், அல்லாஹ்வுக்காகவே தவ்ஹீத் பேசுவோராக இருந்தால், மேற்கண்ட பத்திரிகைகளை வாங்குங்கள் என்று கூற முடியாது. ஏனெனில் 20 ரகஅத் தராவீஹ், கூட்டு துஆ, இன்ன பிற பித்அத்களை நாம் எதிர்ப்பது போலவே சலபி கூட்டமும் எதிர்ப்பதாகக் காட்டிக் கொள்கிறது. ஆனால் இஸ்மாயீல் சலபி ஆதரிக்கும் மேற்கண்ட பத்திரிகைகள் இந்த விஷயத்தில் இவர்களுக்கு எதிரான நிலையில் உள்ளன.

இவற்றைத் தான் வாங்கி ஆதரிக்க வேண்டும் என்கிறார். யாருக்கும் புரியாமல் பேசுவதில் வல்லவரான அகார் முஹ்ம்மத் என்பார் தராவீஹ் குறித்து அல்ஹஸ்னாத் பத்திரிகையில் எழுதியதைப் பார்த்த பிறகும், தரீக்காக்களை ஆதரித்து எழுதிய பிறகும், ஈரானில் நடந்த ஆட்சி மாற்றத்தை இஸ்லாமியப் புரட்சி எனக் கூறி ஷியாயிஸத்தை இலங்கையில் புகுத்திய ஒர் இயக்கத்தின் பத்திரிகையான அல்ஹஸனாத் பத்திரிகையை வாங்கிப் படியுங்கள் என்று இவரால் எப்படி எழுத முடிந்தது?

அது போல் மீள்பார்வை எனும் பத்திரிகையின் நிலை என்ன?

அவர்கள் எழுதியவற்றை சாம்பிளாகத் தருகிறோம்.

 

 

'.உதவி கேட்டு சமூக சேவை நிறுவனங்களிடம் போனால் அவர்கள் நாங்கள் மாடு தருவோம், பள்ளி கட்டுவோம், கிணறு தோண்டுவோம் என்ற பாலை வனப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், வட்டி முறை வங்கிகளிடம் வீட்டுக் கடன் திட்டங்கள் காணப்படுகின்றன. அவற்றின் வட்டி வீதமும் குறைவானது தான்.'

(மீள்பார்வை பெப்ரவரி 2006-இதழ்-114 ப-16)

அதாவது இவர்களின் திட்டங்களை விமர்சிப்பதுடன் வட்டிக்கு கடன் வாங்கி வீடு கட்ட மக்களைத் தூண்டும் இந்தக் கருதுக்களைத் தாங்கிய மீள்பார்வைய அனைவரும் வாசிக்க வேண்டுமாம்.

இதே போல் மத்ஹபை மீள்பார்வை அதரிக்கிறது. அதை இஸ்மாயில் ஸலபி ஆதரிக்கச் சொல்கிறார்.

 

இனி இன்னுமொரு கருத்திற்கு வருவோம். அது இஸ்லாத்தின் மத்ஹபுகளுக்கு எதிரான போர்ப் பிரகடனம். மத்ஹப் என்றால் கக்கூஸ் (மலசலகூடம்) என்று கூறி, மக்கள் மனதுகளில் மத்ஹப் பற்றிய மரியாதையை மலினப்படுத்தி விடுகிறார்கள். அதை விட ஒருபடி மேலே சென்று மத்ஹபுகள் யூத கிறிஸ்தவ சதி என்று கூறி இஸ்லாத்தின் சட்டப் பாரம்பரியத்தை அழித்தொழிக்கும் முயற்சி நடக்கிறது. இதன் தொடராய் அந்த மத்ஹபின் இமாம்கள் தூற்றப்படுகிறார்கள். அவர்கள் பற்றிய மதிப்புணர்வு மக்கள் மனங்களில் இருந்து அப்புறப்படுத்துகிறது. தொடராய் மற்றொரு வேலையும் நடக்கிறது. அந்த மத்ஹபுகளைச் சார்ந்து நிற்கும் கிராமங்களின் இன்றைய மௌலவிமார்களும் கொச்சைப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் மீது மக்கள் வைத்திருந்த கண்ணியம் அழிக்கப்படுகிறது. இளைஞர்கள் அவர்களுக்கு எதிராக தூண்டப்படுகிறார்கள். அவர்களது பேச்சை கேட்கவோ கட்டுப்படவோ கிராம மக்கள் தயாராக இல்லை. மௌலவி என்ற ஒரு தலைமையின் கீழ் ஒன்று திரண்டிருந்த கிராம மக்கள் சிதரடிக்கப்படுகிறார்கள்.

மத்ஹபுகள் அவசியமற்றதாக காண்பது என்பது முஸ்லிம் சமூகம் தனது வரலாற்றை வேண்டாம் என்பதாகும். இன்றைய உலகின் கலாச்சார அறிவியல் போட்டியில் வெற்றி பெறுவதற்கு அந்தப் பழைய பாரம்பரியங்கள் துணை நிற்கப் போகின்றன. வரலாறு இல்லாதஇ பாரம்பரியங்கள் இல்லாத ஒரு சமூகம் எதிர்காலத்தில் எழுந்து நிற்கப் போவதில்லை. மத்ஹபுகள் எனும் இஸ்லாத்தின் இந்த சட்டப் பாரம்பரியம்இ வெறெந்த சமூகத்திற்கும் வாய்த்திராத ஒரு பொக்கஷம். அதனை முஸ்லிமல்லாதோரே ஏற்றுக் கொள்கின்றனர். சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாய் இருந்த இலங்கையைச் சேர்ந்த வீரமந்திரி என்பவர்இ இஸ்லாமிய சட்டப் பாரம்பரியத்தை மறந்து விட்டு, நவீன உலக சட்டம் செல்ல முடியாது. ஏனெனில் அப்போது ஒரு சிறகிழந்த பறவை போல் தான் சட்டம் காணப்படும் என்பதாகக் குறிப்பட்டார்.

நிகழ்கால எதிர்கால சட்ட உருவாக்கத்திற்கு மத்ஹபுகள் எனும் அந்த சட்டப் பாரம்பரியம் தான் அத்திவாரமாய் அமைகிறது. இஸ்லாம் ஒரு சட்டமாக சமூகமாக அரசியலாக வளர்வதை இஸ்லாத்தின் எதிரிகள் ஒரு போதும் விரும்ப மாட்டார்கள். எனவே, இஸ்லாத்தின் அனைத்துப் பாரம்பரியங்களும் அழித்தொழிக்கப்பட்டால் அதற்கு நிச்சியமாய் எதிர்காலம் இல்லாது போய்விடும். எதிரிகளின் இந்த அபிலாஷையை நிறைவு செய்வது போல் தான் மத்ஹபுகளுக்கு எதிரான பிரசாரம் காணப்படுகிறது.

'...சமூகக் கட்டுக் கோப்பை கவனமாய் சீர்குலைக்கும் ஒரு செயல் வடிவம். அண்மைக்காலமாய் அதிகரித்து வரும் ஒரு செயல் வடிவம். அது தான் கிராமங்களில் சில இளைஞர்கள் தூண்டப்பட்டுஇ அவர்கள் தமக்கென தனியான பள்ளி வாயல்கள் அமைத்துக் கொண்டு செல்வது. ஆரம்ப நாட்களில் வெறும் ஐந்து நேரத் தொழுகைக்காக மட்டுமே அந்தப் பள்ளி வாயல்கள் பயன்பட்டன. ஆனால் தற்போதுஇ ஜும்ஆத் தொழுகைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. கிராமங்களில் கட்டுக் கோப்பை மீறி விளைவுகள் பற்றி சிறிதும் கவலைப்படாமல்இ பேச வந்த சமாதானப் பேச்சுக்களையும் எட்டிக் காலால் உதைத்து விட்டு ஆரம்பிக்கப்பட்டன அந்த ஜும்ஆத் தொழுகைகள். பித்அத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இவ்வாறு செய்வது இஸ்லாத்தில் கூடுமா கூடாதா என்ற வாத விவாதத்திற்கப்பால்இ இதில் இருக்கிற ஒரு அபாயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இன்று முஸ்லிம்களின் பிரதான தேவை ஒன்றுபடுவது தான்; பிரிவது அல்ல. உலகெங்கும் முஸ்லிம்களைப் பீடித்துள்ள பெரிய நோய் பிரிவினை தான். உண்மையில் இது திட்டமிட்டு நுழைவிக்கப்பட்ட நோய். எதிரிகளின் முன்னால் முஸ்லிம்களது பலத்தைக் குறைப்பதற்கான ஒரு முயற்சி இது. அந்த எதிரிகளின் முயற்சிக்குப் பலம் சேர்க்கக் கூடாது. கிராமங்களில் நடைபெறும் இத்தகைய பிரிவினைகள் முஸ்லிம்களின் கட்டுக்கோப்பை குலைத்துஇ எதிர்கால இருப்பைப் பலவீனப்படுத்துகிறது. அதுதான் எதிரிகளின் நோக்கம், அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள இடமளிக்கக் கூடாது...'

(மீள்பார்வை செப்டம்பர் 2004-இதழ் 97 ப: 17)

தவறான கொள்கையை பீஜே கூறுகிறார். அதைப் பொறுக்க முடியாமல் தான் பொங்கி எழுந்தேன் என நாடகமாடும் JASM கூட்டம், மத்ஹபில் தான் மோட்சம் உண்டு எனக் கூறி குர்ஆன் ஹதீஸிலிருந்து மக்களை அப்புறப்படுத்த முயலும் பத்திரிகையை வாங்கி ஊக்குவிக்க வேண்டும் என்கிறார். அதை வாங்கிப் படியுங்கள் என்று சலபியால் சொல்ல முடிந்தது எப்படி?

நவமணி ஒரு கொள்கையற்ற செய்திப் பத்திரிகை, சத்தியக்குரலும் ஒரு தரமற்ற சில போது, மத்ஹபை ஆதரித்து தவ்ஹீத் முகவரியில் உலாவும் இக்வான்களின் கட்டுரைகளையும் தாங்கி வரும் ஒரு பத்திரிகை.

 

இந்த இடத்தில் தான் இலங்கை தவ்ஹீத் சகோதரர்கள் விழித்துக் கொள்ள வேண்டும். தமிழகத்திலும் இவர்களைப் போல் அரபு நாட்டுப் பணத்துக்காக தவ்ஹீத் சொல்பவர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் ஜமாஅதே இஸ்லாமி, விடியல் ஆகிய கொள்கைகளின் பிரச்சாரகர்களாக இல்லை. சவூதிக்கு விசுவாசமாக உள்ளனர். அவர்களின் பத்திரிகைகளில் ஜமாஅத்தே இஸ்லாமி பத்திரிகை, புத்தகம், இக்வானுல் முஸ்லிமீன் கொள்கையின் விளம்பரம் இடம் பெறுவதில்ல. அவற்றை வாசியுங்கள் என்று இவர்கள் பரிந்துரைப்பதில்லை. ஆனால், இலங்கையில் மட்டும் இவர்கள் இப்படி ஆதரித்து வாங்கும் பணத்துக்கும் துரோகம் செய்கிறார்கள் என்றால் இவர்களின் திட்டம் என்ன? தவ்ஹீதைச் சொல்வது போல் காட்டி தவ்ஹீதிலிருந்து மக்களை அப்புறப்படுத்த வேண்டும் என்பது தான்.

அழகிய பரிந்துரை செய்பவருக்கு அதில் பங்கு உள்ளது. தீய பரிந்துரை செய்பவருக்கு அதில் பங்கு உள்ளது. அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்.

திருக்குர்ஆன் 3:85

இவர்கள் உள்ளூர ஜமாஅதே இஸ்லாமியாகவும், இக்வானுல் முஸ்லிமீனாகவும் உள்ளதால் அதை வெளிப்படையாகச் சொன்னால் சவூதியிலிருந்து சல்லி அடிக்க முடியாது என்பதற்காக ஒன்றிரண்டு தவ்ஹீத் எனத் தோன்றும் கட்டுரைகளை வெளியிட்டு சவூதியை ஏமாற்றிக் கொண்டு ஜமாஅதே இஸ்லாமி சிந்தனையை விதைக்கிறார்கள்.

இதற்கு ஆதாரமாக 2003 ஜனவரி பிப்ரவரி இதழை எடுத்துக் கொள்வோம். அதில் எப்படி நச்சுக்கருத்துக்களைப் பக்குவமாகப் புகுத்துகிறார்கள் என்பதைப் பாருங்கள்!

அதன் தலையங்கத்தில்

இரண்டாம் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த போது, அல்அஸ்ஹர் பலகலைக் கழக மாணவர்கள் மத்தியில் காகத்தின் மாமிசம் ஹலாலா ஹராமா என்ற கருத்து வேறுபாட்டில் கலகம் நடந்து கொன்டிருந்ததாகக் கூறுவர். இது உண்மையோ பொய்யோ தெரியாது. எனினும் முக்கியமான பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் போது வேறு எதற்காவது முக்கியத்துவம் கொடுத்து சிந்தனையைத் திசை திருப்பி தர்க்கித்துக் கொண்டிருப்பது என்பது நமது சமூகத்தின் சாபக்கேடாகத் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

இப்படி JASM கூட்டம் பொய்மை உதயத்தில் எழுதியுள்ளது

இது எங்கேயோ கேட்ட குரலாகத் தெரிகிறதா?

விரல் அசைத்தல் நெஞ்சில் கைகட்டுதல், கூட்டு துஆ மறுத்தல், பித் அத்தைக் கண்டித்தல் என்று நம் பயணத்தைத் தொடர்ந்த போது இக்வான்களும், ஜமாஅதே இஸ்லாமியும் ஒலித்த அதே குரல் தான்.

அதாவது ஒற்றுமை அவசியப்படும் நேரத்தில் இது போன்ற சர்ச்சை கூடாதாம். இதனால் பிளவு ஏற்படுமாம். இப்படி வாதிடுபவர் தவ்ஹீத்வாதியா?

இரண்டாம் உலகப் போர் நடந்தால் காகம் ஹலாலா ஹராமா என்று ஆய்வு செய்யக் கூடாதாம். ஹலால் ஹராம் பிரச்சனை சின்ன விஷயமாம்.

இவர்களின் கொள்கையே அல்ஹஸனாத் கொள்கையாக இருக்கும் போது அதை வாசிக்கும் படி பரிந்துரை செய்வதில் என்ன ஆச்சரியம்?

அதே தலையங்கத்தில் மீள்பார்வைக் கொள்கையை மீண்டும் வாந்தி எடுப்பதைப் பாருங்கள்!

முஸ்லிம்கள் தயம்மும் செய்வது எப்படி என்று சர்ச்சை செய்து தீர்மானம் எடுத்தார்களாம். ஆனால் அவர்கள் சர்ச்சைப்பட்டு முடிவதற்குள் அவர்களின் சொந்த பூமி ஆக்ரமிக்கப்பட்டு தயம்மம் செய்ய சொந்த மண்ணில்லாது போனது என்பர் என்று மடமை மிகுந்த இக்கருத்தை தவ்ஹீதுக்கு எதிரான இக்கருத்தை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஏற்றுவது தெரிகிறதா?

யுத்த களத்திலும் தொழச் சொன்ன மார்க்கத்தில் யுத்தம் நடக்கும் போது தயம்மும் பற்றி விவாதிப்பதை ஒரு முஸ்லிம் குறை காண்பானா?

எவ்வளவு முக்கியமான நேரம் என்றாலும் மற்ற காரியங்களைச் செயயக் கூடாது என்று அறிவிலி தான் கூறுவான்.

யுத்தம் நடக்கும் போது சாப்பிட மாட்டார்களா? மலஜலம் கழிக்க மாட்டார்களா? தலை வலித்தால் மாத்திரை போட மாட்டார்களா? அதை விட முக்கியமான வணக்கத்தையும் அதைச் செய்யும் முறை பற்றியும் பேசக் கூடாது என்று நச்சுக் கருத்தை விதைக்கும் இது போன்ற பத்த்திரிகைகளை வாசிப்பதே பாவம் என்று தான் கூற வேண்டும்.

இந்த மடமை வாதத்தைத் தோலுரித்தால் கட்டுரை இன்னும் நீண்டு விடும்..

(இநத வாதம் எவ்வளவு ஆபத்தானது என்பதை அறிந்திட இதைக் கேளுங்கள்)
இதையும் கேளுங்கள்

இவர்களின் சிந்தனை முழுவதும் தவ்ஹீதுக்கு எதிரான போக்கே நிறைந்து காணப்படுகிறது.

தவ்ஹீத் கொள்கைப் பிடிப்பு காரணமாக இவர்கள் விமர்சனம் செய்யவில்லை. சவூதி சல்லி விஷயமாக நான் விமர்சித்த கோபம் தான் காரணம் என்பதற்கு மற்றொரு உதாரணத்தைப் பாருங்கள்!

கமிஷனோ ஆதாயமோ கிடைக்கிறது என்பதற்காக அரபு நாட்டிலிருந்து பணம் வாங்கி பள்ளிவாசல் கட்டிவிட்டு போகட்டும். ஆனால் அவ்வாறு கட்டப்படும் பள்ளிவாசல் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று தான் தவ்ஹீத்வாதி நினைப்பான். தவ்ஹீதுக்கு எதிரான காரியங்கள் நடக்கும் பள்ளிகளுக்கு அரபுகளிடம் பணம் வாங்கிக் கொடுக்க மாட்டான்.

ஏத்தாளை என்ற கிராமத்தில் இவர்கள் முயற்சியில் தவ்ஹீதுக்காக ஒரு பள்ளிவாசல் அரபு நாட்டு சல்லியில் கட்டிக் கொடுக்கப்பட்டது. தவ்ஹீதுக்காக ஒரு பள்ளி இருக்கும் ஏத்தாளையில் அந்தப் பள்ளிக்கு சில மீட்டர் தொலைவில் அதைவிட பெரிய பள்ளிவாசல் கட்டிக் கொடுக்கப்பட்டது. இது தப்லீக் இயக்கத்தவர்களுக்காகக் கட்டிக் கொடுக்கப்பட்ட பள்ளி வாசல்.

இப்பள்ளியில் திறப்பு விழாவின் போது நடந்த முதல் ஜும்மாவில் அபூபக்கர் சித்தீக் மதனி குத்பா நிகழ்த்தினார். ஆனால், தப்லீக் இமாம் தொழுகை நடத்தி கூட்டு துஆ ஓதினாரா இல்லையா?

தவ்ஹீத் கொள்கைக்காக பாடுபடுபவரின் செயல் இதுவா? இது போன்ற பள்ளிக்கு உதவலாமா? என்று இஸ்மாயீல் சலபி தனது எஜமானரிடம் கேட்டாரா? கூட்டு துஆ ஓதும் போது தடுக்காமல் ஏன் பார்த்துக் கொண்டிருந்தீர் என்று இஸ்மாயீல் சலஃபி கேட்டாரா? தவ்ஹீதுக்காக நாமே கட்டிய பள்ளிவாசல் இருக்கும் போது அதற்கு எதிராக அதை விட பெரிய பள்ளியைக் கட்டிக் கொடுப்பது முறையா? என்றாவது உண்மை உதயத்தில் எழுதினாரா?

தவ்ஹீதுக்க்காக முதலில் கட்டிக் கொடுத்த பள்ளிவாசல் இது தான்.


தவ்ஹீதுக்கு எதிராகக் கட்டிக் கொடுத்த அதை விட பெரிய பள்ளிவாசல் இது தான்



இது ஓர் உதாரணம் மட்டுமே. இவர்கள் கட்டிக் கொடுத்துள்ள பல பள்ளிகளில் தவ்ஹீதுக்கு எதிரான அத்தனை அனாச்சாரங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

பரகஹதனிய பள்ளிவாசலில் ஜும்மாவுக்கு இரண்டு பாங்கு சொல்லி வந்தனர். பல வருடங்களுக்கு முன் நான் இலங்கை சென்ற போது இது தவறு என்று நான் அபுபக்கர் சித்தீக மதனியிடம் ஆதாரத்தோடு சுட்டிக் காட்டினேன்

அவர் பிடிவாதமாக மறுத்தார். மக்கள் மத்தியில் பேசும் போது இது பற்றி தக்க ஆதாரத்துடன் மக்களுக்கு விளக்கினேன். இதனால் மக்களின் நிர்பந்தம் அதிகமான போது அவர் தனது நிலைபாட்டை நிரூபிக்க முடியாமல் போன போது வேறு வழியில்லாமல் ஒரு பாங்காக ஆக்கப்பட்டது.

அண்மையில் ஸித்தீக் மதனி குருநாகல் - தல்கஸ்பிடிய பள்ளியில் ஜூம்ஆவுக்கு இரண்டு பாங்கு சொல்வது தான் சட்டம். இந்த நாட்டில் பத்வா வழங்கும் உரிமை எனக்கு மட்டும் தான் உண்டு என்று உரத்து முழங்கியுள்ளார். அத்தோடு, ஜனாஸாத் தொழுகையில் கைகளை அவிழ்த்து உயர்த்தித் தான் கட்ட வேண்டும் என்றார். அப்போது, அங்கு பள்ளியில் இமாமாக கடமையாற்றிய மவ்லவி அன்ஸார் அவர்கள் இதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று இவரிடம் கேட்ட போது, நான் யார் என்று உனக்குத் தெரியுமா? நீ யாரைப் பார்த்து கேள்வி, ஆதாரம் எல்லாம் கேட்கின்றாய் என்று அவரை அச்சுறுத்தும் தோரணையில் மிரட்டியுள்ளார்.

இவருடைய் நிர்வாகத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஜும்மாவுக்கு ஒரு பாங்கு என்ற நபிவழியை ஏற்றுச் செயல் படுத்தி வருவதன் மூலம் இந்த நபிவழி அவருக்குத் தெரிகிறது என்பதை யாரும் அறியலாம். இந்த நபிவழியை நபிவழி என்று தெரிந்து கொண்டே மறுப்பது நுபுவ்வத்தை மறுப்பதாக உங்களுக்குத் தோன்றவில்லையே? அதற்குக் காரணம் என்ன? நுபுவ்வத்தை இவ்வளவு தெளிவாக ஒருவர் மறுக்கிறார். அவருக்கு எதிராக வாய்திறக்காத நீங்கள் இப்போது எனக்கு எதிராக வாய் திறந்திருப்பதற்கு மார்க்க உணர்வைக் காரணம் காட்டலாமா?

 

 

 

 

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுப்பவர்கள் யார்?-3

இஸ்மாயில் சலஃபிக்கு மறுப்பு

 

தொடர் 3

முக்கிய குறிப்பு: குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்க வேண்டுமா? நபிகள் நாயகத்துக்கு சூனியம் செய்யப்பட்டதா என்பது தான் முக்கிய விஷயம். அதைச் சொல்லாமல் இஸ்மாயீல் சலஃபி வகையறாக்களின் முகத்திரையைக் கிழிப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டுமா என்று சில நண்பர்கள் ஆதங்கப்படுவது என் கவனத்துக்கு வருகிறது. இவர்களை சரியாக அடையாளம் காட்டாமலும் விட முடியாது. அதே நேரத்தில் இவர்களை அடையாளம் காட்டுவதற்காக நாட்களைக் கடத்துவதும் சரியானது அல்ல. எனவே அடுத்த வாரம் முதல் இரண்டு கட்டுரைகள் வெளியாகும். திங்கள் கிழமை வெளியாகும் கட்டுரை ஹதீஸ்களை மறுத்தல் என்பது பற்றியும், செவ்வாய்க் கிழமை வெளியாகும் கட்டுரை இவர்களை அடையாளம் காட்டும் வகையிலும் இடம் பெறும். இன்ஷா அல்லாஹ்

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை பீ.ஜே மறுக்கிறார் என்ற உணர்வு மேலோங்கியதால் தான் பீ.ஜே.யை எதிர்த்து கட்டுரை எழுதும் நிலை ஏற்பட்டது என்று இஸ்மாயில் சலஃபி முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல என்பதை கடந்த இரண்டு தொடர்களில் நாம் விளக்கி வருகிறோம்.

நமது மறுப்பின் முதல் தொடர் வெளியான உடன் இஸ்மாயீல் சலஃபி மறுப்புக்கு மறுப்பு என்று கட்டுரை ஒன்றை பல வேசம் இணைய தளத்தில் வெளியிட்டார். அவர் வெளியிட்ட அதற்கான மறுப்பையும் நாம் உடணடியாக வெளியிட்டோம்.

இதுவரை நாம் கேட்ட கேள்விகள் யாவை என்பதையும் இக்கேள்விகளுக்கு இது வரை பதில் அளிக்கவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்.

  • வறுமையை விரட்ட காரல் மார்க்ஸை எழுந்து வரச் சொல்லும் கவிதை நூலுக்கு ஜம்மியது அன்ஸாருஸ் ஸுன்னதில் முஹம்மதிய்யா அமைப்பின் பொதுச் செயலாளர் உதவினாரா? இல்லையா?

  • இல்லை என்றால் உதவியதாக அந்த நூலில் குறிப்பிடப்பட்டது எப்படி?

  • உதவினார் என்றால் இணை வைத்தலுக்கு அறிந்து கொண்டே உதவுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா?

  • அனுமதி இல்லை என்றால் இந்தச் செயலை உங்கள் பத்திரிகையில் கண்டித்தீர்களா?

  • உங்கள் அமைப்பில் இன்று வரை பணியற்றும் ரிள்வான் நாத்திக நூலுக்கு உதவினாரா? இல்லையா?

  • உதவினார் என்றால் இணை வைத்தலுக்கு அறிந்து கொண்டே உதவுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா?

  • அனுமதி இல்லை என்றால் இந்தச் செயலை உங்கள் பத்திரிகையில் கண்டித்தீர்களா?

  • உங்கள் தலைவர் அபூபக்கர் சித்தீக் மதனியும் அவரைச் சேர்ந்த மற்றும் நான்கு அறிஞர்களும் இக்பால் மதனியின் திருக்குர் ஆன் தமிழாக்கம் குறித்து ஏகமனதாக 'இம்மொழி பெயர்ப்பு சரியான கொள்கையைச் சார்ந்துள்ளதாகவும் வார்த்தைப் பிரயோகத் தவறுகளில் இருந்தும் நீக்கம் பெற்றதாகவும் அமைந்துள்ளது' என்று குறிப்பிட்டதாக முன்னுரையில் உள்ளதே? இப்படி கூறுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா?

  •  

    இல்லை என்றால் இதை நீங்கள் கண்டித்தீர்கள

  • 26:16 வசனத்தில் இரட்சகனாகிய தூதர்கள் என்று அத்வைதக் கருத்து வரும் வகையில் பொருள் செய்யப்பட்டுள்ளது. இது தவறு என்று ஒரு பிரசுரம் மூலம் நீங்கள் அறிவித்ததை ஏற்றுக் கொள்கிறோம். பிரசுரத்தில் அறிவித்த பின்னர் வெளியான கடைசி பதிப்பு உட்பட அனைத்திலும் அது திருத்தப்படாமல் தான் அச்சிடப்படுகிறது. இது ஏன்?

  • இதை வெளியிடுவது சவூதி அரசு என்பதால் நீங்கள் திருத்த் முடியவில்லை என்றால் இது குறித்து சவூதி நிறுவனத்துக்கு தெரிவித்தீர்களா?

  • தெரிவித்திருந்தால் அதற்கான ஆதாரத்தைன் காட்டுங்கள். இதுவரை தெரிவிக்காவிட்டால் தவறாக மொழிபெயர்த்து விட்டோம் என்று தெரிவிப்பதால் உங்கள் இமேஜ் குறையும் என்று நினைக்கிறீர்கள் என்று நான் கூறுவது தவறா?

  • ஆதாரப்பூர்வமான சீல ஹதீஸ்களை பீஜே மட்டும் மறுக்கவில்லை. இன்னும் பலரும் மறுத்துள்ளார்கள் என்று பட்டியலிட்ட நீங்கள் அந்த அறிஞர்களின் கொள்கை பரப்பும் ஏடுகளை வாங்கி ஆதரிக்குமாறு கூறியது ஏன்?

  • ஹலால் ஹராம் பற்றி ஆராய்வதும், தொழுகை முறை பற்றி ஆராய்வதையும் விட ஒற்றுமை முக்கியம் என்று கூறியுள்ளீர்களே இது தான் தவ்ஹீதா? இதற்கான ஆதாரம் என்ன?

  • தரக்குறைவாக எழுதக் கூடாது எனக் கூறும் நீங்கள் தரக்குறைவாக எழுதுவதை ஆரம்பித்து வைத்த அந்த இணைய தளத்தை கண்டித்தீர்களா?

  • தரகுறைவாக எழுதுவதை தரக்குறைவாக எழுதும் இணையதளத்தில் நின்று கொண்டு கண்டிப்பதில் உள்ள தத்துவம் என்ன?

  • முஜீபுர்ரஹ்மான் அல்லாஹ்வைக் கேடயமாக்கியதை கண்டிப்பதற்கு பதில் அதை ஆதரித்தீர்களே இதற்கான ஆதாரம் என்ன?

  • உங்கள் மீது ஒருவர் பழி சுமத்திவிட்டு அல்லாஹ்வுக்குத் தெரியும் என்று கூறினால் அதை ஏற்றுக் கொள்வீர்களா?

 

தவ்ஹீதுக்கு எதிரான கொள்கையைப் பரப்பும் இயக்கங்கள் பற்றி தவ்ஹீத் இயக்கம் என்று பொய் சான்று கொடுத்து அரபுகளை ஏமாற்றி பள்ளிவாசல் கட்டிக் கொடுத்தீர்களா? இல்லையா?

  • இன்றும் கட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்களா? இல்லையா?
  • இதற்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கிறதா?

  • பள்ளிவாசல் கட்டிக் கொடுப்பதில் உங்களூக்கு பண ஆதாயம் உண்டா? இல்லையா?

  • பண விஷயத்தில் முறைகேடு நடக்கவில்லை என்றால் உங்கள் கணக்குகளைத் தணிக்கைக்கு உட்படுத்த நீங்கள் தயாரா?

  • என் சகோதரர் மொழி பெயர்த்த ஃபீ ழிளாலில் குர்ஆன் சரியான நூல் அல்ல என்று நான் திட்டவட்டமாக தெரிவித்திருந்தும் நான் அந்த நூலை ஆதரித்தது போல் கேள்வி கேட்க என்ன ஆதாரம்?

  • இவர்கள் கட்டிக் கொடுத்த பள்ளிவாசலில் ஜும்மா முடிந்ததும் கூட்டு துஆ ஓதப்பட்டதா? இல்லையா? இவர்களே அந்தப் பள்ளிவாசலைக் கட்டிக் கொடுத்திருந்தும் அதைத் தடுக்காத காரணம் என்ன?

  • ஜும்மாவுக்கு இரண்டு பாங்கு என்பது தான் சரி. பீஜே ஒரு பாங்காக ஆக்கிவிட்டுச் சென்று விட்டார் என்று உங்கள் தலைவர் கூறினாரா? இல்லையா?

 

நபிவழியில் இல்லாத ஒரு நடைமுறை அவருக்குச் சரி என்று பட்டது எப்படி?

  • எது சரி தவறு என்று படுகிறதோ அதை தனது நிர்வாகத்தில் செயல்படுத்துவது சரியா?

மேற்கண்ட கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்.

தீய கொள்கையுடையவர்களை எதிர்ப்பதற்குப் பதிலாக எப்படியெல்லாம் இவர்கள் ஒட்டி உறவாடி ஆதரித்து வந்தனர் என்பதற்கு மற்றொரு சான்றைப் பாருங்கள்.

அகார் முகம்மது என்பவர் ஜமாஅதே இஸ்லாமியின் பிரச்சாரகர். ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுப்பவர்கள் என்ற பட்டியலில் இஸ்மாயீல் ஸலஃபி இடம் பெறச் செய்த அபுல் அஃலா மவ்தூதியின் கருத்தைப் பரப்பியவர் அகார் முகம்மது. ஜமாஅதே இஸ்லாமியின் கொள்கையை அதாவது ஸலஃபிக் கொள்கைக்கு எதிரான கொள்கையைப் பரப்புவதற்காக அகார் முகம்மது ஓர் இணைய தளத்தை ஆரம்பித்தார்.

தவறான கொள்கைக்காக ஒரு இனைய தளம் துவங்கப்படுகிறது என்றால் இவரது கடமை என்ன? அது பற்றி மக்கள் விழிப்படையும் வகையில் அதன் தீய கொள்கைகளை எச்சரித்து தன்னிடம் உள்ள பத்திரிகையில் தெளிவுபடுத்த வேண்டும். இந்த அளவுக்கு தீவிரம் காட்ட சக்தியில்லை என்றால் கண்டு கொள்ளாமல் மௌனமாகவாவது இருக்க வேண்டும்.

ஆனால் அந்த இணைய தளத்துக்கு இஸ்மாயில் சலஃபி வாழ்த்துச் செய்தி அனுப்புகிறார்.

வாழ்த்துச்செய்திகள் - அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி

Last Updated (Saturday, 01 November 2008 10:43) Thursday, 30 October 2008 11:05

 

 

Article Index

வாழ்த்துச்செய்திகள்

Alhaj Yakooth Naleem

கலாநிதி எம்..எம். சுக்ரி அவர்கள்

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி

அஷ்-ஷெய்க் எம்..எம். ரிஸ்வி (முஃப்தி)

அல்ஹாஜ் என்.எம். அமீன்

நிர்வாகத்தார் - இஸ்லாமிய அழைப்புப் பணி மையம்

Dr. Mareena thaha Reffai

Ash-sheikh H.Abdul Nazar

All Pages

Page 5 of 10

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி

இணையம் அல்லாஹ்வின் மிகப் பெரும் அருளாகும். விரிந்து பறந்த உலகை விஞ்ஞானம் இதன் மூலம் உள்ளங்கைக்குள் கொண்டு வந்துள்ளது. இந்த மாபெரும் அறிவியல் வளம் அழிவிற்கும், ஆபாசத்திற்குமே அதிகம் பயன்படுத்தப்படுகின்றது என்பது கசப்பான உண்மையாகும். இதே வேளை இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சார ஊடகமாக இஸ்லாத்தின் எதிரிகளாலும், காதியானிகள் போன்ற வழிகெட்ட அமைப்புக்களாளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். இதே வேளை பல்வேறு இஸ்லாமிய அமைப்புக்களும், நவீன கால அறிஞர்களும் இணையத்தினூடாக தூய இஸ்லாமியப் பணியை முன்னெடுத்து வருகின்றனர்

தமிழ் மொழி மூலம் பல இஸ்லாமிய இணையங்கள் இயங்கி வந்தாலும் சிங்கள மொழி இஸ்லாமிய இணையங்கள் இல்லாமை மிகப் பெரும் குறையாகும். இவ்வேளையில் தமிழ், சிங்கள இணையப் பிரியர்களின் இஸ்லாமியத் தாகத்தைத் தணிக்க ளாநiமாயபயச.ழசப களம் இறங்கியிருப்பது மகிழ்வளிக்கின்றது.

தமிழ் உலகுக்கு நன்கு பரிச்சயமான தலை சிறந்த எழுத்தாளரும், பேச்சாளருமான அஷ்ஷெய்க் .சி அகார் முஹம்மத் (நளீமி) அவர்களது ஆழமான, இந்த அறிவுப்பணி தமிழ், சிங்கள உலகில் எழுச்சிமிக்க இஸ்லாமிய சிந்தனையை ஏற்படுத்த எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன்.

எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி
ஆசிரியர்
உண்மை உதயம்
இஸ்லாமிய மாத இதழ்

தீமைக்கு எதிராகக் கொந்தளிக்கும் லட்சணம் இதிலிருந்து தெரிகிறதா?

வழிகெட்ட அமைப்புகள் தவறாக இணைய தளத்தைப் பயன்படுத்தி வரும் நிலையில் அகார் முகம்மதுவின் இணைய தளம் வழிகெட்ட இணைய தளம் அல்ல என்று இவரால் எப்படிச் சொல்ல முடிந்தது? இஸ்லாமிய தாகத்தைத் தணிக்க இந்த இணைய தளம் துவங்கப்பட்டிருப்பதாக இவரால் எப்படிச் சொல்ல முடிந்தது? தவறான கொள்கையுடைய இணைய தளம் எழுச்சிமிக்க இஸ்லாமியச் சிந்தனையை எப்படி ஏற்படுத்தும்? தீய கொள்கையைப் பிரச்சாரம் செய்பவர் எப்படி தலை சிறந்தவராக இவரது கண்களுக்குத் தென்படுகிறார்.

தவறான கொள்கை என்பதற்காக இவர் கொதித்து எழக் கூடியவர் அல்ல, அரபு நாட்டுப் பணம் தொடர்பான நமது விமர்சனத்தின் பாதிப்பினால் தான் மறுப்புக் கட்டுரை வரைந்துள்ளார் என்பதற்கு இதுவும் ஆதாரமாக அமைந்துள்ளது.

இவர்களின் ஒரே நோக்கம் தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்க வேண்டும் என்பது மட்டுமே என்பதை பாக்கர் மீது தவ்ஹீத் ஜமாஅத் நடவடிக்கை எடுத்த போது இவர்கள் நடந்து கொண்ட விதம் மேலும் உறுதிப்படுத்தியது.

 

 



பாக்கர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இது குறித்து மக்கள் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ள நேரத்தில் மேற்கண்டவாறு உண்மை உதயம் அறிவுரை கூறியது. பாக்கரின் பெயரையோ, தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரையோ பயன்படுத்தாவிட்டாலும் இவர்கள் யாரைச் சொல்கிறார்கள் என்பதும் எதைச் சொல்கிறார்கள் என்பதும் பாமரனுக்கும் புரியும்.

தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக கேடு கெட்டவர்களையும் ஆதரித்து எழுதும் அளவுக்கு இவர்கள் தரம் தாழ்ந்து போயினர். தீமைக்கும், தீயவர்களுக்கும் எதிராகக் கோபம் ஏற்படுவதற்குப் பதிலாக தீயவர்களை அடையாளம் காட்டியவர்களுக்கு அறிவுரை கூறும் அளவுக்கு இவர்கள் கேவலமான நிலைபாட்டை எடுத்தார்கள்.

பாக்கரின் உண்மை நிலை என்ன என்பது பொது மக்களுக்குத் தெரியாவிட்டாலும் இவர்களுக்குத் தெரியாமல் இருக்குமா?

தவ்ஹீத் ஜமாஅத்துக்கு ஒரு எதிரி அதிகமாகும் போது அவர்கள் மீது அனுதாபம் ஏற்படுத்தத் தான் ஆசைப்பட்டார்கள்.

பாக்கர் நீக்கப்பட்டதும், சி.டி., வெளியிட்டதும் எந்தச் சூழ்நிலையில் ஏற்பட்டது என்பதை இந்த இடத்தில் நான் பதிவு செய்து ஆக வேண்டும்.

ஆரம்பம் முதலே தவ்ஹீத் ஜமாஅத்தில் முக்கியப் பொறுப்பை பாக்கர் வகித்து வந்தார். அவர் மீது பாலியல் தொடர்பான புகார் வந்து தமிழகம் முழுவதும் பரவியது. பிரச்சாரம் செய்பவர்கள் மக்களின் கேள்விகளை எதிர் கொள்ள முடியாமல் திணறினார்கள். இத்தகைய நபரை உயர்ந்த பொறுப்பில் வைத்துக் கொண்டிருக்கும் உங்களையும், உங்கள் பிரச்சாரத்தையும் நாங்கள் எப்படி நம்புவது என்றெல்லாம் பலவிதமான கேள்விகளை ஜமாஅத் எதிர்கொண்டது.

இது குறித்து வந்த புகார்கள் ஆதாரப்பூர்வமாக இருந்ததால் தீர விசாரித்து அவரை தற்காலிகமாக ஜமாஅத் நீக்கி வைத்தது. அவரைக் கேவலப்படுத்தும் வகையில் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

பாக்கர் மீது ஒரு குற்றச்சாட்டு வந்தது. அது பற்றி விசாரித்த போது தன் மீது குற்றச்சாட்டு வந்ததால், தன் பொறுப்பிலிருந்து பாக்கர் விலகிக் கொண்டார் என்று தான் உணர்வில் அறிவிப்புச் செய்தோம்.

மாவட்ட நிர்வாகிகளுக்கு மட்டுமே நடந்த உண்மை தெரிவிக்கப்பட்டது. மூமினின் குறையை மறைப்பது சிறந்தது என்ற அடிப்படையிலேயே ஜமாஅத் நடந்து கொண்டது.

நாற்பத்தி ஐந்து நாட்கள் நீக்கி வைக்கப்பட்டிருந்த பாக்கர் தான் தவறு செய்ததை ஒப்புக் கொண்டு, இனி மேல் அவ்வாறு செய்ய மாட்டேன் என்று நிர்வாகக் குழுவில் மன்னிப்புக் கேட்டதாலும் திருந்தி நடக்க ஒரு வாய்ப்பு வாழங்குமாறு திருச்சி செயற்குழுவில் முறையிட்டதாலும் மன்னித்து சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

(செயற்குழு வீடியோ ஆதாரம் உள்ளது)

ஆனால் இதன் பின்னரும் அதே போன்ற குற்றச்சாட்டுக்கள் வந்து கொண்டே இருந்தன. மறுக்க முடியாத ஆதாரத்துடன் குற்றச்சாட்டு வந்ததால் அவரை நீக்குவது என்று நிர்வாகக் குழு முடிவு செய்தது. சேலத்தில் மாநில செயற்குழுவைக் கூட்டியது. செயற்குழுவின் 400 உறுப்பினர்களும் அவரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நீக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.

இதை பொதுமக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டாம் என்றும் முடிவு செய்யப்பட்டு அவரது கண்ணியம்(?) காக்கப்பட்டது.

ஆனால் குற்றமிழைத்த அவர் தனது கேவலமான செயலால் ஜமாஅத்துக்கு ஏற்பட்ட பின்னடைவைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஜமாஅத் மௌனமாக இருப்பதைச் சாதகமாக்கிக் கொண்டு தனக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டது போல் தொலைக் காட்சியில் பிரச்சாரம் செய்தார். பொதுக் கூட்டத்திலும் பேசினார்

'அந்நியப் பெண்ணோடு இரவு முழுவதும் 16 மணி நேரம் அருகருகே அமர்ந்து பயணம் செய்வது தவறா என்று பகிரங்கமாக உரையாற்றும் அளவுக்கு அவரது போக்கு மாறியதால் தான் கடைசி கடைசியாக அவரை அடையாளம் காட்டும் சி.டி.க்கள் வெளியிடப்பட்டன.

தனி நபரின் கண்ணியத்தை விட ஜமாஅத்தின் கண்ணியம் அதிக முக்கியத்துவம் உடையது.

நல்ல மனிதனை அநியாயமாகப் பழிவாங்கி விட்டார்களே என்ற எண்ணம் நமது மௌனத்தால் ஏற்பட்டு விடுமே! ஜமாஅத்தையும் அதன் பிரச்சாரத்தையும் மக்கள் நம்ப முடியாத நிலை ஏற்படுமே என்று கவலைப்பட்ட ஜமாஅத் தனிமனித கண்ணியத்தின் எல்லை அவ்வளவு தான் என்று முடிவு செய்தது.

அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் ஒழுக்கம் கெட்டவர்களின் ஜமாஅத் என்ற பெயரை அனைவரும் சுமக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் தஃவா பாதிக்கும். இது நடவடிக்கைக்கு காரணம்.

ஜமாஅத்தின் மரியாதையைக் கேள்விக்குறியாக்கியவர் தன் மேல் எந்தத் தவறும் இல்லை என்று அப்பட்டமாக புளுகி ஜமாஅத் மீது பழி சுமத்தும் போது மௌனம் சாதித்தால் ஜமாஅத்தின் மீது உள்ள நம்பிக்கையும் 25 ஆண்டுகளாகக் கட்டிக் காத்த நற்பெயரும் பாதிக்கப்படும். இதனால் ஜமாஅத்தின் பிரச்சாரத்திலும் பொதுமக்கள் நம்பிக்கை இழப்பார்கள் என்ற நிலை ஏற்பட்ட பிறகு தான் நீண்ட மௌனத்துக்குப் பின் அவரைப் பற்றி இனம் காட்டும் முடிவு எடுக்கப்பட்டது..

பாக்கரை அம்பலப்படுத்தியதால் உண்மை உதயம் கூறியது போல் தஃவாவுக்கு எந்தப் பின்னடைவும் ஏற்படவில்லை. மாறாக பாக்கரின் நடவடிக்கையால் ஏற்பட்ட பின்னடைவை இந்த நடவடிக்கை மாற்றியமைத்தது என்பதே உண்மை.

இதன் பின்னர் ஜமாஅத்தின் மரியாதை மக்கள் மத்தியில் குறைவதற்குப் பதிலாக அதிகரித்தது. எவ்வளவு பெரிய பொறுப்பில் உள்ளவர்களானாலும் தவ்ஹீத் ஜமாஅத் தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கும் என்று மக்கள் நம்பியதால் ஜமாஅத்தின் வளர்ச்சி அதிகரித்தது.

இது தான் நடந்த விஷயம்.

  • மக்களால் நன்கு அறியப்பட்ட ஒரு பிரச்சாரகர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி மக்கள் அனைவருக்கும் அது தெரிந்து விட்ட நிலையில் அதை மூடி மறைப்பது தஃவாவைப் பாதிக்குமா? தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுப்பது தஃவாவைப் பாதிக்குமா?

  • தனி மனிதனுக்காக ஒரு இயக்கம் பழிச்சொல்லை ஏற்றுக் கொண்டு மவுனம் சாதிப்பது தஃவாவைப் பாதிக்குமா?

  • தனி மனிதனை விட தஃவா முக்கியம் என்பதற்காக அம்பலப்படுத்துவது தஃவாவைப் பாதிக்குமா?

மூளையைக் கழற்றி காயப்போட்டு விட்டுத் தான் அடுத்தவருக்கு அறிவுரை கூறுவீர்களா?

சத்தியப் பிரச்சாரத்தில் ஈடுபடும் தாயி இப்படித் தான் சிந்திப்பாரா? நல்ல ஒரு இயக்கத்தை தனி நபர் ஒருவர் தனது கெட்ட நடத்தையால் நாசமாக்கி விட்டாரே என்று சிந்திப்பாரா?

என்ன நடந்தது என்பது தெரியாவிட்டால் இது பற்றி மௌனமாவது சாதித்திருக்கலாம்.

முக்கியப் பிரச்சாரகர்கள் மீது அருவருப்பான குற்றச்சாட்டுக்கள் வரும் போது மூடி மறைப்பதும், குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை முன்னிலைப்படுத்துவதும் உங்கள் வழக்கமாக இருந்தால் அதை உங்களோடு வைத்துக் கொண்டிருக்க வேண்டும். உங்களைப் போல் தீமைகளில் சமரசம் செய்யுமாறு எங்களுக்கு அறிவுரை கூறினால் அதன் உள்நோக்கம் என்ன?

த.மு.மு.க இயக்கத்துக்கும் நமக்கும் இடையில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளில் மிக முக்கியமான பிரச்சினை தவ்ஹீத் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று தமுமுகவின் நிர்வாகிகளில் அதிகமானோர் செய்த நிர்பந்தமே ஆகும்.

நானும் என் சக தாயிகளும் தவ்ஹீத் பிரச்சாரம் செய்தால் சுன்னத் ஜமாஅத்தினர் த.மு.மு.க.வுக்கு வர மாட்டார்கள் என்று கூறியதால் தான் நாம் விலகும் நிலை ஏற்பட்டது.

இதை த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லாஹ் எழுதிக் கையெழுத்துப் போட்டுத் தந்தார். இது உணர்விலும் வெளியிடப்பட்டது.


தவ்ஹீத் சகோதரர்கள் த.மு.மு.கவை விட்டு விலகிய நேரத்தில் இவரும் இவரைச் சார்ந்தவர்களும் எந்தப் பக்கம் நின்றிருக்க வேண்டும்? மதனிகள் எந்தப் பக்கம் நின்றிருக்க வேண்டும்?

இவர்கள் த.மு.மு.க நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முகம் காட்டுவதற்காக தவ்ஹீத் எதிரிகளுடன் சேர்ந்தார்களா? இல்லையா? தமுமுக தொலை காட்சி நிகழ்ச்சியில் ஒரு நாள் ஜமாஅதே இஸ்லாமியின் அகார் முஹம்மது பேசினால் அடுத்த நாள் இஸ்மாயீல் சலஃபி, அடுத்த நாள் முபாரக் மதனி என்று கூட்டுச் சேர்ந்தீர்களா இல்லையா? தீமையைக் கண்டு பொங்கி எழக் கூடியவர் என்றால் சந்தனகூடுக்கு வாழ்த்துச் சொல்லி, சாமியாரிடம் ஆசி பெற்று பரேலவி ஷேக் அப்துல்லா ஜமாலியின் கூட்டத்துக்கு சீருடையுடன் தொண்டர்களை அனுப்பிய இயக்கத்துடன் உங்களுக்கு என்ன உறவு? தவ்ஹித் பிரச்சாரம் தடையாக உள்ளது என்று பகிரங்கமாக அறிவித்தவர்களுடன் உங்களுக்கு என்ன உறவு. ஜமாஅதே இஸ்லாமியும் நீங்களூம் ஒரு பிளாட்பாரத்தில் பேசும் அளாவுக்கு என்ன உறவு?

அப்படித்தான் கலந்து கொண்டீர்கள். சாமியாரிடம் ஆசி வாங்கியதைக் கண்டித்தீர்களா? பரேலவிசத்துக்கு ஆதரவான போக்கை கண்டித்தீர்களா? இங்குள்ள பல பள்ளி வாசல்களில் தவ்ஹீத் வாதிகள் தொழக் கூடாது என்று அறிவிப்பு ப்லகை எழுதி வைக்க காரணமாக இருந்த தமுமுகவினருடன் எப்படி கலந்துறவாட முடிந்தது. உங்களைப் போன்றவர்களைக் காட்டி வெளி நாட்டில் உள்ள தவ்ஹீத் வாதைகளை ஏமாற்ற எப்படி உங்களால் துணை நிற்க முடிந்தது? அவர்கள் விரும்பக் கூடிய வகையில் இந்த ரமலான் மாதம் வரை கூட பிரச்சாரம் செய்தார்களா இல்லையா?

அவர்கள் அனைவரும் தவ்ஹீதுக்கும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் எதிரிகள் என்பது தவிர முரண்பட்ட உங்களை எது ஒருங்கிணைத்தது?

கந்தூரிக்கு வாழ்த்துச் சொல்வதும், பரேலவிக் கூட்டத்துக்கு தொண்டர் அணி அனுப்புவதும், சாமியார்களிடம் ஆசி வாங்குவதும் தான் இவர்களின் தவ்ஹீத் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்திருந்தும் அவர்களுடன் சேர்ந்து கொண்டது எப்படி? அவர்களின் அந்தப் படுபாதகச் செயலைக் கண்டிக்காதது எப்படி?

சாமியாரிடம் ஆசி பெறுவது கூட உங்களுக்குச் சாதாரணமாகத் தெரிகிறது என்றால் நீங்கள் எங்களை எதிர்ப்பதன் காரணம் பளிச்சென்று தெரிகிறதே.

கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டார்களே? அதற்கு உங்களால் பதில் சொல்ல முடிந்ததா?

அரபு நாட்டு உதவி இல்லாமல் தஃவா செய்த சகோதரர்கள் அழைப்பு என்ற பெயரில் வெளியிட்ட பிரசுரத்தில் தவ்ஹீதுக்கும் தவ்ஹீத்வாதிகளுக்கும் எதிராகவும் பரேலவிகளுக்கு ஆதரவாகவும் நீங்கள் நடந்து கொண்டதை பட்டியல் போட்டுக் கேட்டார்களே? அதற்கு உங்களால் தக்க பதில் சொல்ல முடிந்ததா?

கடைசியாக பீஜெ இலங்கை வந்த போது பரேலவிகளால் விசா ரத்துச் செய்யப்பட்டது. இதை மனித உரிமை மீறல் என்ற அடிப்படையிலாவது கண்டித்தீர்களா?

பீ.ஜே.யின் வருகைக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை என்று தினகரன் பத்திரிகையில் அறிக்கை வெளியிட்டு வெளியேற்றியது நியாயம் தான் என்று மறைமுகமாக அறிவித்தீர்களா இல்லையா?.

அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி நிகழ்ச்சியை குராபிகளை போல் தடை செய்தீர்களா இல்லையா?.

பரேலவிகளின் தலைவரான போலி ஆலிமுக்கு உங்களைச் சேர்ந்தவர் பொன்னாடை போர்த்தினாரா? இல்லையா?

தவ்ஹீத் கொள்கைக்கு சம்மந்தமில்லாத இலங்கை உலமா சபையில் உங்கள் தலைவர் அங்கம் வகிக்கிறாரா? இல்லையா?

பீ.ஜே.யின் சி.டி.க்களையும் புத்தகங்களையும் விற்பனை செய்ததற்காக அஸ்ஸலபிய்யா புக் சென்டரின் மேனேஜரை உங்கள் தலைவர் உத்தரவுப்படி ரவுடிகளை வைத்து தாக்கினீர்களா இல்லையா?அவர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டாரா இல்லையா? இது குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதா இல்லையா?

அழைப்பு எனும் ஏடு கேட்ட இந்தக் கேள்விகளே உங்களைத் தோலுரித்துக் காட்டுகிறதே.

நான் தவறான கொள்கையைக் கூறுகிறேன் என்பதற்காக பொங்கி எழுந்து மறுப்புக் கட்டுரை எழுதியதாகப் படம் காட்டும் சலபி அவர்களே,

2002க்குப் பின்னர் நான் ஹதீஸ்களை மறுக்க ஆரம்பித்து விட்டதாகக் கூறி அதற்காகவே என்னை எதிர்ப்பதாக நீங்கள் சொல்வது உண்மை என்று நெஞ்சைத் தொட்டு உங்களால் சொல்ல முடியுமா?

 

எந்தத் தமிழாக்கத்தில் ஹதீஸ்களை நான் மறுப்பதாக எடுத்துக் காட்டுகிறீர்களோ, அந்தத் தமிழாக்கத்திற்கு 2003 ஜனவரி உண்மை உதயம் இதழில் முழுப் பக்க விளம்பரம் இலவசமாக நீங்களாக வெளியிட்டுள்ளீர்கள்.

விளம்பரம் மட்டுமின்றி ஒற்றுமையில் வெளிவந்த எனது தமிழாக்கம் குறித்த பேட்டியை ஆறு பக்கங்களில் தன்னார்வத்துடன் பிரசுரம் செய்தீர்களே, கெட்ட கொள்கையுடைய எனது தமிழாக்கத்தை வாங்கிப் படிக்கச் சொன்னது எப்படி?









2002 ல் நான் தவறான கொள்கைக்கு மாறிவிட்டதாக நீங்கள் கூறுவது உண்மையானால் 2003ல் எப்படி விளம்பரம் போட்டீர்கள்? நீங்கள் இப்போது விமர்சிக்கும் அனைத்து விஷயங்களையும் எனது தமிழாக்கத்தில் நான் கூறி இருப்பதாகவும் அதற்கு முன் எழுதிய நூல்களில் நான் சரியாக எழுதி இருப்பதாகவும் நீங்களே ஆதாரம் காட்டியுள்ளீர்கள்.

அந்தத் தமிழாக்கத்துக்கு நான் கேட்டுக் கொள்ளாமலே தானாக முன் வந்து விளம்பரம் போட்டீர்கள். எனது தமிழாக்கம் குறித்து வேறொரு பத்திரிகைக்கு நான் அளித்த பேட்டியை நான் கேட்டுக் கொள்ளாமலே நீங்களாக வெளியிட்டீர்கள். இதற்குக் காரணம் என்ன?

குர்ஆனுக்கு முரணான ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை அல்ல என்ற எனது வாதமும் சூனியம் சம்பந்தமாக நான் எடுத்து வைத்த வாதமும் உங்களுக்குச் சரி என்று பட்டுள்ளது என்பது இதிலிருந்து தெரிகிறது.

அரபு நாட்டு பணம் குறித்து நான் பேசியதால் மக்கள் மத்தியில் உங்கள் இயக்கம் பற்றி சந்தேகம் ஏற்பட்டது. இதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் விமர்சனம் செய்தவனை வழி கெட்டவனாகச் சித்தரித்தால் போதும். பிரச்சனை திசை திரும்பி விடும் என்று திட்டமிட்டீர்கள். அதற்காகத் தான் மறுக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்பதைக் கையில் எடுத்தீர்கள்.

ஹதீஸ்களை மறுக்கிறார்கள் என்று கூறும் போது மக்களிடம் எளிதாக எடுபடும் என்றும் கருதினீர்கள். அதன் விளைவாகத் தான் நீங்கள் விமர்சிக்கிறீர்கள் என்பதை நீங்கள் வெளியிட்ட விளம்பரமும் பேட்டியும் நிரூபிக்கின்றன.

எனது தமிழாக்கம் தவறானது; இக்பால் மதனியால் மொழிபெயர்க்கப்பட்டு இலங்கை உலமாக்களால் சரிபார்க்கப்பட்ட தமிழாக்கம் தான் தவறுக்கு அப்பாற்பட்டது என்ற கூற்றிலும் நீங்கள் உண்மையாளராக இருக்கவில்லை. அதில் நீங்கள் செய்துள்ள தகிடுதத்தங்களையும் அடுத்த தொடரில் பார்ப்போம்.

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுப்போர் யார்_4

தொடர் 4

இஸ்மாயீல் ஸலஃபி அவர்களுக்கும் அவர் எந்த இயக்கத்தில் இருக்கிறாரோ அந்த இயக்கத்துக்கும், அந்த இயக்கத்தின் தவைவர் அபூபக்கர் சித்தீக் மதனி அவர்களுக்கும் தவ்ஹீத் என்பது பணம் பண்ணுவதற்கான வழிமுறையே தவிர வேறு இல்லை என்று நாம் குற்றம் சாட்டி வருகிறோம். அதற்கான ஆதாரங்களையும் எடுத்துக் காட்டி வருகிறோம். அவற்றில் ஒன்றுக்குக் கூட அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.

இவர்களின் ஒரே நோக்கம் ஏமாந்த அரபிகளின் தலையில் மிளகாய் அரைத்து ஏமாற்றுவது தான் என்பதற்கான இன்னொரு ஆதாரத்தை ஒரு சகோதரர் தக்க ஆதாரத்துடன் அனுப்பி வைத்துள்ளார்.

ஜம்மியது அன்சாருஸ்ஸுன்னா என்ற இவர்களின் அமைப்பின் சார்பில் தப்லீக் ஜமாஅதுக்காக குருனாக்கல் மாவட்டத்தில் தும்மலாங்கே என்ற ஊரில் ஒரு பள்ளிவாசல் கட்டிக் கொடுக்கப்பட்டது. அந்தப் பள்ளிவாசலை உண்மை உதயத்தின் அட்டைப்படத்திலும் வெளியிட்டுள்ளனர்.

உன்மை உதயம் படம்

 

குவைத் பைத்துஸ் ஸகாத் மூலம் பணம் பெற்று இவர்கள் ஒரு பள்ளிவாசல் கட்டிக் கொடுத்தார்கள் கல்வெட்டு ஆதாரம் இதோ

பன்னவா என்ற ஊரில் இவர்கள் பள்ளி கட்டிக் கொடுத்துள்ள இடத்தை ஒட்டி ஐ.ஐ.ஆர்.ஓ.என்ற அமைப்பின் சார்பில் அரபுகளிடம் பணம் வாங்கி ஒரு பள்ளிவாசல் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஆனால் பெயிண்ட் அடிக்காமல் சுண்ணாம்புக் கலவை பூசிக் கட்டிக் கொடுக்கப்பட்டது. அந்த ஊரார் பெயிண்ட் அடித்துத் தருமாறு ஐ.ஐ.ஆர்.ஓ அமைப்பிடம் கேட்ட போது அதற்கு நிதி இல்லை என்று மறுத்து விட்டனர்.

இந்த நிலையில் தான் ஜம்மியது அன்ஸாரிஸ்ஸுன்னா என்ற இஸ்மாயீல் ஸலஃபியின் அமைப்பை அணுகினார்கள். முடிந்தால் பெயிண்ட் அடித்துக் கொடுக்கலாம். முடியாவிட்டால் இல்லை என்று கூறி இருக்கலாம். ஆனால் பள்ளிவாசல் கட்டிக் கொடுப்பதால் கொழுத்த கமிஷன் கிடைக்கும் போது இந்த நல்ல வாய்ப்பை நழுவ விடுவார்களா?

ஏன் பெயிண்ட் அடிக்க வேண்டும்? பக்கத்தில் புதிதாகப் பள்ளிவாசல் கட்டித் தருகிறோம் என்று கூறி அந்தப் பள்ளிவாசலை ஒட்டி இன்னொரு ப்ள்ளிவாசல் கட்டிக் கொடுத்துள்ளனர்.

இதோ அந்தப் பழைய பள்ளிவாசல்


இதோ புதியதும் பழையதுமான இரு பள்ளிவாசல்கள்


பக்கத்தில் ஒரு பள்ளிவாசல் இருக்கிறது. பெயிண்ட் அடிக்கப்படாததால் இன்னொரு பள்ளி கட்டப் போகிறோம் என்று கூறினால் அரபுகள் பணம் தந்திருக்க மாட்டார்கள். பொய்யான தகவல்களைக் கூறித் தான் பணம் பறித்திருப்பார்கள் என்பதை யாரும் ஊகிக்கலாம்.

ஏற்கனவே ஒருபள்ளி வாசல் கட்டக் கொடுத்ததும் அரபுகள் தானே? பள்ளிவாசல் பள்ளிவாசலாக இயங்கும் அதனால் நமக்கு நன்மை கிடைக்கும் என்ற நிய்யத்தில் தான் பள்ளிவாசல் கட்டிக் கொடுத்திருப்பார்கள். இவர்களின் செயலால் ஒரு பள்ளிவாசல் செயல் இழந்து கிடப்பதை அந்த அரபி பார்த்தால் அவரது மனம் என்ன பாடுபடும்?

இதைப் பற்றி இவர்களுக்குக் கவலை இல்லை. கமிஷன் மட்டுமே குறிக்கோள் என்பதால் அங்கே ஒரு பள்ளிவாசல் தேவை இல்லாமல் இருந்தும் அநியாயமாக அடுத்தவர் பணத்தைப் பாழாக்கியுள்ளனர்.

இதில் இருந்து பணத்துக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

அரபுகளை மட்டும் இவர்கள் ஏமாற்றவில்லை. அப்பாவி இலங்கை மக்களையும் ஏமாற்றியுள்ளது இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.


வட்டிக்கும் மோசடிக்

கும் விளம்பரம்

வரையறுக்கப்பட்ட சிலின்கோ பொரொஃபிட் ஷெயரிங் இன்வெஸ்ட்மெண்ட் கோப்பரேஷன் என்ற பெயரில் மக்கள் பனத்தை மார்க்கத்தின் பெயரால் சுருட்டும் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இவர்கள் லாபம் என்று கூறிக் கொண்டாலும் வட்டியும், மோசடியின் மறு பெயரான ஷேர் என்பதும் தான் இவர்களின் திட்டம். இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது தான் என்று கள்ள ஃபத்வா ஒன்று கொடுக்கப்பட்டது. ஃபத்வா கொடுத்தவர்கள் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை. இந்த ஃபத்வா குழுவில் அபூபக்கர் சித்தீக் மதனியும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நவ்ஃபர் மவ்லவியும் இந்தச் சபையில் அங்கத்தினர்.

முஸ்லிம்கள் இதில் பணம் போட வேண்டும் என்பதற்காக இஸ்மாயீல் ஸலஃபீ உண்மை உதயம் இதழில் கடைசிப் பக்கத்தில் முழுப் பக்க விளம்பரம் தந்தார்.

மார்க்கத்துக்கு முரணான இந்தச் செயலை ஹலால் என்று ஃப்த்வா கொடுத்ததுமல்லாமல் மக்கள் போட்ட பணத்தைச் சுருட்டியும் உள்ளனர். சுருட்டப்பட்ட பணம் 80 கோடி ரூபாய்.

பணம் போட்ட அப்பாவிகள் கொந்தளித்துப் போய் இம்மாதம் 23 ஆம் தேதி வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுகைக்குப் பின் ஊர்வலமாகத் திரண்டு சென்று ஜம்மியதுல் உலமா சபை செய்துள்ள மோசடியைக் கண்டித்து ஆர்ப்பாட்டட்திலும் ஈடுபட்டுள்ளனர். இது சுடர் ஒளி பத்திரிகையில் 24 ஆம் தேதி வெளியாகியுள்ளது.

இதில் விளம்பரம் செய்த ஸலஃபிக்கு எவ்வளவு பங்கு? ஃப்த்வா கொடுத்த சித்தீக் மதனிக்கு எவ்வளவு பங்கு? என்று மக்கள் கேட்கிறார்கள். இதற்கும் ஸலஃபி வகையறாக்கள் பதில் சொல்ல வேண்டும்.

 

இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்

மறுக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்-5

தொடர்- 5

இஸ்மாயீல் ஸலஃபி எடுத்து வைக்கும் இன்னொரு வாதத்தைப் பாருங்கள்!

 

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுப்பது இப்போது பீஜேயிடம் ஏற்பட்ட புதிய கருத்து என்று கூறி அதனால் கொள்கை மாறி விட்டதாகக் கூறுகிறார்.

புதிய கருத்து

அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் 20 வருடங்களுக்கு மேலாக பிரச்சாரம் செய்து வந்தாலும் குர்ஆனுக்கு முரண்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்ற அவரது நிலையும் அவரது பிரச்சாரமும் அவரிடம் அண்மையில் ஏற்பட்ட மாற்றமாகும் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆரம்ப காலப் பிரச்சாரத்தில் அவரிடம் இந்த நிலை இருக்கவில்லை.

அவரது கருத்துக்கள் மறுக்கப்படும் போது அப்போது எதிர்க்காதவர்கள் இப்போது எதிர்க்கிறார்கள் என்றால் மார்க்கத்திற்காக அல்ல தனிப்பட்ட கோபத்திற்காக எதிர்க்கிறார்கள் என்று தப்புப் பிரச்சாரம் செய்யப்படுவதுண்டு. அது தவறு, இவரது இந்தக் கருத்து அவரது புதிய நிலைப்பாடு என்பதைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

அத்துடன் பல தவ்ஹீத் அழைப்பாளர்கள் கொள்கையில் இருந்து தடம் புரண்டுவிட்டதாகவும் அவர் மட்டுமே அன்றிலிருந்து இன்று வரை கொள்கையில் தடம் புரளாமல் உறுதியாக இருப்பதாகவும் பேசப்படுகின்றது. இது தவறு. ஹதீஸ் துறையில் அவரிடம் தான் தடம் புரள்வு ஏற்பட்டது என்பதையும் உணர்த்தும் கடமையில் இருப்பதால் இது குறித்து சிறிது விளக்க வேண்டிய அவசியமுள்ளது.

அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் காதியானிகளுடன் ஒரு விவாதம் செய்தார்கள். அந்த விவாதத்தின் மூலம் தமிழ் உலகில் காதியானிகளின் கொட்டம் அடக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். இதற்காக அவருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். இந்தக் காதியானிகளுடன் விவாதம் தொடர்பாகக் கடிதப் பரிமாற்றம் நடந்தது. அந்தக் கடிதங்கள். காதியானிகளின் கல்லறைப் பயணம் என்ற தலைப்பில் 1988 அக்டோபர் அல் ஜன்னத் இதழுடன் இணைத்து வெளியிடப்பட்டது.

அப்போது காதியானிகள் இப்போது இவர் இருக்கும் நிலைப்பாட்டில் தான் இருந்தனர். அவர்கள் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்க முடியாது என எழுத அதை மறுத்து பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் பல இடங்களில் எழுதியிருக்கின்றார்கள்.

உதாரணமாக:

ஆதாரபூர்வமான ஸனதுகளுடன் உள்ள ஹதீஸ்கள் என்று ஏற்கப்படும் ஹதீஸ்களை எக்காரணம் கொண்டும் மறுக்கக் கூடாது.

இவ்வாறே 27-05-1988 தேதியிட்ட கடிதத்தில் இரண்டாவது அம்சமாக திருக்குர்ஆனுக்கு ஹதீஸ் முரண்படும் என்ற உங்கள் கூற்று ஏற்க முடியாது. ஆதாரபூர்வமான எந்த ஹதீஸையும் மறுக்கவே கூடாது என்பது எங்களின் நிலை. திருக்குர்ஆனுடன் எந்த ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் முரண்படுகின்றது என்று நீங்கள் கூறினால் முரண்படவில்லை என நாம் நிரூபிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அந்தக் கடிதங்களில் பல இடங்களில் குர்ஆனுக்கு ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் முரண்படாது. சுமார் 50 ஹதீஸ்கள் அளவில் முரண்போல் தோன்றும் ஆனால் முரண் இல்லை என்று தான் அன்று கூறிவந்தார்.

இவ்வாறே 2001 ல் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட சுனன் திர்மதி வெளியிடப்பட்டது. இந்த மொழிபெயர்ப்பில் அல்குர்ஆனும் ஆதாரபூர்வமான நபிமொழிகளும் என்ற தலைப்பில் முழுமையாக ஹதீஸ்களை மறுப்பவர்களுக்கு அழகானதொரு மறுப்பை பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் அளித்துள்ளார்கள்.

அதிலே ஹதீஸை மறுப்பவர்கள் நான்கு பிரதான காரணங்களை முன்வைத்து ஹதீஸ்களை மறுப்பவர்கள் குறிப்பிடுகின்றார்கள். அவையாவன:

1. ஹதீஸ்களில் முரண்பாடுகள் உள்ளன.

2. குர்ஆனுடன் ஹதீஸ்கள் முரண்படுகின்றன.

3. ஹதீஸ்களைப் பின்பற்ற வேண்டுமென்று கூறுவோர் பல கூறுகளாகப் பிரிந்து விட்டனர்.

4. குர்ஆனைப் போல் ஹதீஸ்கள் பாதுகாக்கப்படவில்லை.

என்றெல்லாம் காரணங்கள் கூறியே ஹதீஸ்களை நிராகரிக்கச் சொல்கின்றனர்.

ஹதீஸ்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பதற்கு இவர்கள் கூறும் இந்தக் காரணங்களை குர்ஆன் விசயத்திலும் கூற இயலும். இது பற்றி இங்கு விரிவாக அலசுவோம் என்று தொடர்கிறது அவ்விளக்கம். (சுனன் திர்மிதி நூல் அறிமுகம் யு25)

மொத்தமாக ஹதீஸ்களை மறுப்பதற்குக் கூறப்பட்ட நான்கு காரணங்களில் மூன்றாவது காரணம் தவிர மற்றைய மூன்று காரணங்களையும் கூறி இன்று பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் ஆதாரபூhவமான ஹதீஸ்களை மறுக்கின்றார்.

இதில் அச்சப்பட வேண்டிய மற்றுமொரு அம்சமுண்டு. இந்த குறைகளைக் குர்ஆன் விசயத்திலும் கூற முடியம் என்று வேறு குறிப்பிட்டுள்ளார்கள். இது ஹதீஸுடன் மட்டும் நிற்குமா? குர்ஆனுக்கும் தாவுமா? என்று அச்சப்பட வேண்டியுள்ளது. இவர் இவ்வளவுடன் நின்று கொண்டாலும் இவருக்குப் பின்னால் இதே அடிப்படையில் வருபவர் குர்ஆன் விசயத்திலும் கூட ஐயம் எழுப்ப வாய்ப்புள்ளதையே இது எடுத்துக் காட்டுகின்றது.

இதுவரை நாம் குறிப்பிட்டதிலிருந்து குர்ஆனுக்கு முரண்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்ற அவரது தவறான நிலைப்பாடு 2002க்குப் பின்னர்தான் அவரிடம் எற்பட்ட கொள்கைத் தடம்புரள்வே தவிர இருபது வருட பிரச்சாரத்தில் கிடையாது என்பதைப் புரிந்திருப்பீர்கள்.

அடுத்தாக ஆரம்பத்தில் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மட்டும் குர்ஆனைப் பாதுகாப்பதற்காக மறுக்க வேண்டும் எனக் கூறியவர்கள் பின்னர் விஞ்ஞானத்திற்கு முரண்படுகிறது என்ற காரணத்தினாலும் ஹதீஸ்களை மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இஸ்மாயீல் ஸலஃபியின் இந்த வாதம் சரியானது தானா? ஒருவர் ஒரு வாதத்தை எடுத்து வைக்கிறார் என்றால் அந்த வாதம் சரியானதா என்று தான் பார்க்க வேண்டும். இதற்கு முன் இதே வாதத்தைச் செய்தாரா என்று பார்க்கக் கூடாது.

மதஹபுகள் தேவை என்று ஒரு காலத்தில் நான் கூறி இருக்கிறேன். நானே முன்னின்று மீலாது விழாக்களை ஒரு காலத்தில் நடத்தி இருக்கிறேன். சில பித்அத்களையும் செய்திருக்கிறேன். அல்லது நியாயப்படுத்தி இருக்கிறேன். அவை தவறு என்று தெரியாத காலத்தில் அவற்றைச் செய்துள்ளேன். அதைக் காரணம் காட்டி இது இவரிடம் ஏற்பட்ட புதுக் கொள்கை என்று கூறி நான் கூறும் சரியான கொள்கையை மறுப்பது தான் மார்க்க அறிஞருக்கு அழகா?

மதிக்கப்படும் எந்த அறிஞராக இருந்தாலும் அவர்களிடம் இந்த நிலைமை ஏற்படாமல் இருந்ததில்லை. இவ்வளவு நாட்கள் இதை ஆதரித்து விட்டோமே இப்போது எதிர்த்துப் பேசினால் நமது கொளரவம் பாதிக்கப்படுமே என்று எண்ணுவோர் தான் தங்கள் தவறிலேயே நிலையாக இருப்பார்கள்.

இப்போது பிரச்சனை என்ன? குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்கலாமா? என்பது தான். இது சரியா தவறா என்பது தான் ஆய்வு செய்யப்பட வேண்டும். இதற்குப் பதில் சொல்லாமல் இதற்கு முன் பீஜே இப்படிச் சொல்லவில்லை என்கிறார்.

ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை என்பதையும் ஆரம்பத்தில் நாம் சொல்லவில்லை. நன்கு ஆய்வு செய்த பின் அது சரி என்பது உறுதியாகத் தெரிந்ததால் அதை மக்களுக்குக் கூறினோம்.

நோன்பு துறக்கும் போது ஓதும் தஹபள்ளமவு என்ற துஆ பலவீனமானது என்பதைக் கவனிக்காமல் அதைப் பல வருடங்கள் சொல்லி வந்தோம். அது தவறு என்று தெரிந்த பின் பகிரங்கமாக மக்களிடம் அறிவித்தோம். இது வரை நாம் கூறி வந்த வேறு எந்த விஷயமாவது தவறு என்று நாளைக்குத் தெரிய வந்தால் அதையும் பகிரங்கமாக அறிவிப்போம். இதில் வெட்கப்பட மாட்டோம்.

அதே நேரத்தில் இந்த மாற்றம் சமீபத்தில் ஏற்படவில்லை. காதியானிகளுடன் விவாதம் தொடர்பாக கடிதப் போக்குவரத்து நடத்திய போது அதாவது 1988 களில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது என்பதே எனது நிலையாக இருந்தது. அதன் பின் அன்னியருக்குப் பாலூட்டுதல் உள்ளிட்ட சில ஹதீஸ்கள் குறித்து நமது உள்ளத்தில் பல கேள்விகள் எழுந்தன. அவற்றுக்கு விடை கிடைக்கவில்லை. எனவே இது குறித்து நாம் சரியாக அறியவில்லை என்ற சந்தேகம் ஏற்பட்டு தேட ஆரம்பித்தேன். அப்போது தான் இது குறித்து ஹதீஸ் கலை நூல்களில் தெளிவாகக் கூறப்பட்டதைக் காண முடிந்தது. இதன் பின்னர் நமது நிலையை மாற்றிக் கொண்டோம்.

ஆனால் திர்மிதி வெளியிட்ட் 2001களில் நான் இந்த நிலையில் இருகவில்லை என்றும் அதன் பிறகு தான் நான் மாறிவிட்டேன் என்றும் அவர் கூறியிருப்பது முற்றிலும் தவறாகும். திர்மிதியில் தனக்கு வசதியான ஒரு வரியைப் பிடித்துக் கொண்டு இவ்வாறு வாதிடுகிறார்.

திர்மிதீ வெளியிட்ட காலங்களில் நாம் இப்போது கொண்டுள்ள கருத்துக்கு வந்து விட்டோம். அந்த திர்மிதியின் தமிழாக்க முன்னுறையிலேயே இதைக் குறிப்பிட்டுள்ளோம்.

அதை அப்படியே கீழே தருகிறோம்

ஹதீஸ் கலை - அறிமுகக் குறிப்பு

பி. ஜைனுல் ஆபிதீன்

(அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் இருபதாண்டு காலமாக மக்கள் ஹதீஸ்களுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கின்றனர். புகாரி முஸ்லிம் திர்மிதீ போன்ற ஹதீஸ் நூற்களின் தமிழாக்கங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

ஆலிம்களின் வாய்களிலிருந்து உதிர்ந்தவை எல்லாம் ஹதீஸ் என்ற நிலை மாறி நீங்கள் சொன்னது சரியான ஹதீஸா? பலவீனமான ஹதீஸா? என்று கேட்கும் காலம் வந்திருக்கின்றது. உண்மையில் இது பாராட்டத்தக்க அம்சமாகும். மக்கள் இந்த ஹதீஸ் துறையில் ஓரளவு ஈடுபாடு காட்டி வருகின்றார்கள் என்பதையே இது காட்டுகின்றது.

எனினும் ஹதீஸ் துறையில் ஸஹீஹ் என்றால் என்ன? லயீஃப் என்றால் என்ன? இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் என்றால் என்ன? என்று தெரிந்து வைத்திருப்பவர்கள் மிக சொற்பமே! ஏகத்துவப் பணிகளில் ஈடுபாடு கொள்வோர் ஹதீஸ் துறையில் உள்ள இந்த கலைச் சொற்களை நன்கு தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். இந்த நோக்கத்தை நிறைவு செய்யவே இந்தத் தொடர்!

ஹதீஸ் கலை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொற்கள் செயல்கள் அங்கீகாரங்கள் ஆகிய மூன்றையும் ஹதீஸ்கள் என்பார்கள்.

ஹதீஸ்களை அறிவிக்கக் கூடிய அறிவிப்பாளர்களின் தகுதி எண்ணிக்கை அறிவிப்பாளர்களிடையே தொடர்பு போன்ற தன்மைகளின் அடிப்படையில் ஹதீஸ்களை அறிஞர் பெருமக்கள் தரம் பிரித்துள்ளனர்.

எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் ஹதீஸ்களை நான்கு முக்கிய தலைப்புகளில் அடக்கலாம்.

1. ஸஹீஹ் 2. மவ்ளூவு 3. மத்ரூக் 4. ளயீஃப்

எந்த ஹதீஸாக இருந்தாலும் இந்த நான்கு வகைக்குள் அடங்கிவிடும். இவற்றில் ஸஹீஹ் என்ற தரத்தில் உள்ளதை மட்டுமே நாம் நடைமுறைப் படுத்த வேண்டும். மற்ற மூன்று வகைகளில் அமைந்த ஹதீஸ்களை நடைமுறைப் படுத்தக் கூடாது.

இந்த நான்கு வகைகளையும் பற்றி விரிவாக நாம் அறிந்து கொள்வோம்.

1. ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானவை)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றிய ஒரு செய்தியை அறிவிக்கும் போது இன்று நாம் அறிவிப்பாளர்களின் வரிசையுடன் கூறுவதில்லை. நூல் வடிவில் தொகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளதால் அது தேவையுமில்லை.

ஆனால் நூல் வடிவில் தொகுக்கும் பணி நடந்து கொண்டிருந்த இரண்டாவது மூன்றாவது நூற்றாண்டு கால கட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான ஒரு செய்தியைக் கூறுவதென்றால் தனக்குக் கூறியவர் யார்? என்பதையும் சேர்த்துக் கூறினால் தான் ஹதீஸ் கலை அறிஞர்கள் அந்த ஹதீஸைத் தமது நூற்களில் பதிவு செய்வார்கள்.

தம்ககு அறிவித்தவர் யார்? என்பதை மட்டும் கூறினால் போதாது. மாறாக தமக்கு அறிவித்தவர் யாரிடம் கேட்டார்? அவர் யாரிடம் இச்செய்தியைக் கேட்டார்? என்று சங்கிலித் தொடராகக் கூறிக் கொண்டே சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை செல்ல வேண்டும். அப்படி இருந்தால் தான் அதை ஹதீஸ் என்று ஒப்புக் கொள்வார்கள்.

எல்லா ஹதீஸ்களும் இந்த வகையில் தான் தொகுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக திர்மிதீயில் இடம்பெற்றுள்ள முதல் ஹதீஸை எடுத்துக் கொள்வோம்.

தூய்மையின்றி எந்தத் தொழுகையும், மோசடிப் பொருட்களிலிருந்து எந்தத் தர்மமும் இறைவனால் ஏற்கப்படாது'' என்பது திர்மிதீயின் முதலாவது ஹதீஸ்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த செய்தியைக் கூறியதாக அறிவிக்கும் முதல் அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) என்ற நபித்தோழர் ஆவார். இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து இதை நேரடியாகக் கேட்டு அறிவிக்கின்றார்.

இந்தச் செய்தியை இப்னு உமர் (ரலி) யாரிடத்தில் கூறினார்? அவரிடம் நேரடியாகக் கேட்டவர் யார்? முஸ்அப் பின் ஸஃது என்பார் தான் இதை இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டவர்.

முஸ்அப் பின் ஸஃதிடமிருந்து இதைக் கேட்டவர் ஸிமாக் என்பார்.

ஸிமாக்கிடமிருந்து நேரடியாகக் கேட்டவர்கள் இரண்டு பேர். 1. இஸ்ராயீல், 2. அபூஅவானா ஆகிய இருவரும் ஸிமாக்கிடமிருந்து இதைக் கேட்டுள்ளனர். இவர்களிடமிருந்து இமாம் திர்மிதீ எப்படி அறிந்து கொண்டார் என்பதை கீழ்க்கண்ட வரைபடம் மூலம் விளங்கலாம்.

1- நபிகள் நாயகம் (ஸல்)

இப்னு உமர் (ரலி)

முஸ்அப் பின் ஸஃது

ஸிமாக் பின் ஹர்பு

அபூ அவானா

குதைபா

ஹன்னாத்

திர்மிதீ

2- நபிகள் நாயகம் (ஸல்)

இப்னு உமர் (ரலி)

முஸ்அப் பின் ஸஃது

ஸிமாக் பின் ஹர்பு

இஸ்ராயீல்

வகீவு

ஹன்னாத்

திர்மிதீ

மேற்கண்ட இரு வழிகளில் இந்த ஹதீஸ் திர்மிதீ இமாமுக்குக் கிடைத்துள்ளது. இவ்வளவு விபரங்களையும் இந்த ஹதீஸில் திர்மிதீ இமாம் கூறுகின்றார். இப்படி ஒவ்வொரு ஹதீசுக்கும் அறிவிப்பாளர்களின் சங்கிலித் தொடரை அவர் கூறுகின்றார்.

இந்தச் செய்தி இமாம் திர்மிதீ அவர்களுக்கு எவர்கள் வழியாகக் கிடைத்ததோ அவர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும்.

அவர்கள் அனைவரும் உறுதியான நினைவாற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

அவர்கள் அனைவரது நேர்மையும் சந்தேகிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

அவர்கள் ஒவ்வொருவரும் யார் வழியாக தான் அறிவிக்கின்றாரோ அவரிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்க வேண்டும்.

இந்தத் தன்மைகள் ஒருங்கே அமையப் பெற்றிருந்தால் தான் அதை ஆதாரப்பூர்வமான - ஸஹீஹான ஹதீஸ்கள் என்பர். அத்துடன் ஹதீஸின் கருத்து திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதும் வகையில் இருக்கக் கூடாது.

ஆதாரப்பூர்வமான - ஸஹீஹான ஹதீஸ்கள் என்றால் அதன்படி அமல் செய்வது அவசியம் என்பதில் அறிஞர்களிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.

2. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது)

ஏற்கப்படாத ஹதீஸ்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பது மவ்ளூவு என்ற வகை ஹதீஸ்களாகும். மவ்ளூவு என்றால் இட்டுக்கட்டப்பட்டது என்று பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாத - செய்யாத - அங்கீகரிக்காதவற்றை அவர்கள் பெயரால் கூறுவது இட்டுக்கட்டப்பட்டது எனப்படும்.

திருக்குர்ஆனுக்கும் நிரூபிக்கப்பட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் நேர் முரணாகவும் - எந்த வகையிலும் விளக்கம் கொடுக்க முடியாதவையாக அமைந்தவை.

புத்தியில்லாதவனின் உளறலுக்கு நிகராக அமைந்தவை.

அறிவிப்பாளரில் ஒருவரோ, பலரோ பெரும் பொய்யர் என்று நிரூபிக்கப்பட்டிருப்பது.

இட்டுக்கட்டியவர்கள் பிற்காலத்தில் திருந்தி தாம் இட்டுக்கட்டியதை ஒப்புக் கொள்ளுதல் அல்லது வசமாக மாட்டிக் கொள்ளும் போது ஒப்புக் கொள்ளுதல்.

மேற்கண்ட அம்சங்களில் ஒன்று இருந்தால் கூட அது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். அதை ஏற்கக் கூடாது. அதன் அடிப்படையில் அமல் செய்யக் கூடாது. இதில் அறிஞர்களுக்கிடையே எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை.

(இது குறித்து முன்பே கூறியுள்ளோம் என்பதை நிரூபிக்க் இதுவே போதுமானதாகும். ஆயினும் ஹதீஸ் கலை ப்ற்றி நேயர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அதை முழுமையாக வெளியிடுகிறோம்)

இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைப் பற்றி இந்த விபரம் போதுமென்றாலும் இதில் அதிக விழிப்புணர்வு நமக்கு அவசியம் தேவை என்பதால் இது குறித்து இன்னும் சில விபரங்களைப் பார்ப்போம்.

முதலில் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் ஏன் எப்படி சமுதாயத்தில் நுழைந்தன? ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டதன் நோக்கம் என்ன? என்பதை அறிந்து கொள்வோம்.

1. இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்தல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின் இஸ்லாம் படுவேகமாகப் பரவி வந்தது. இந்த வளர்ச்சி மதங்களின் பெயரால் வயிறு வளர்த்து வந்தவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது. தங்கள் மதம் காணாமல் போய் விடுமோ தங்கள் தலைமை பறி போய் விடுமோ வருமானம் தடைப்பட்டுப் போய் விடுமோ என்றெல்லாம் கவலைப்பட்ட இவர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுக்கத் திட்டமிட்டனர்.

இஸ்லாத்தின் பெருவளர்ச்சிக்கு அதன் அர்த்தமுள்ள கொள்கைகளும், எல்லா வகையிலும் அது தனித்து விளங்கியதும் தான் காரணம் என்பதைக் கண்டுபிடித்தார்கள்.

இஸ்லாத்திலும் அர்த்தமற்ற உளறல்கள் மலிந்து கிடப்பதாகக் காட்டி விட்டால் இஸ்லாத்தின் வளர்ச்சியை பெருமளவு மட்டுப்படுத்தலாம் என்று கணக்கு போட்டார்கள்.

திருக்குர்ஆனில் தங்கள் கைவரிசையைக் காட்ட முடியாது என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

நம்ப முடியாத உளறல்களையெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகப் பரப்பலானார்கள்.

இவற்றையெல்லாம் கேட்பவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் மீதும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க முடியாது. இவர்கள் இட்டுக்கட்டிய பொய்யான ஹதீஸ்களில் சிலவற்றைப் பாருங்கள்.

யாரேனும் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறுவாரானால் அந்த வார்த்தையிலிருந்து அல்லாஹ் ஒரு பறவையைப் படைப்பான். அப்பறவைக்கு எழுபதாயிரம் நாக்குகள் இருக்கும். ஒவ்வொரு நாக்கும் எழுபதாயிரம் பாஷைகளைப் பேசும்.

கத்தரிக்காய் சாப்பிடுவது எல்லா நோய்களுக்கும் மருந்தாகும்.

பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது இதயத்தை மென்மையாக்கும்.

நெல் ஒரு மனிதனாக இருந்தால் இது மிகவும் சகிப்புத் தன்மையுடையதாக இருந்திருக்கும்.

உங்கள் உணவில் கீரைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அது ஷைத்தானை விரட்டியடிக்கும்.

ஆகாயத்தில் உள்ள பால்வெளி, அர்ஷின் கீழ் இருக்கும் பாம்பின் வியர்வையினால் படைக்கப்பட்டது.

சூரிய வெளிச்சத்தால் சூடாக்கப்பட்ட தண்ணீரில் குளிக்காதே! அது வெண் குஷ்டத்தை ஏற்படுத்தும்.

தர்மம் செய்ய ஏதும் கிடைக்காவிட்டால் யூதர்களையும் கிறித்தவர்களையும் சபியுங்கள்! அது தர்மம் செய்ததற்கு நிகராக அமையும்.

பசுமையான பொருட்கள், ஓடுகின்ற தண்ணீர், அழகிய முகம் ஆகியவற்றைப் பார்ப்பது பார்க்கும் திறனை அதிகரிக்கும்.

அழகான முகத்தைப் பார்ப்பது ஒரு வணக்கமாகும்.

கண்கள் நீல நிறமாக இருப்பது ஒரு பாக்கியமாகும்.

மீன் சாப்பிடுவது உடலைப் பலவீனப்படுத்தும்.

சாக்கடையில் விழுந்த ஒரு கவள உணவை யாரேனும் கழுவிச் சாப்பிட்டால் அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.

முட்டையும் பூண்டும் சாப்பிட்டால் அதிகமான சந்ததிகள் பெற முடியும்.

பெண்களிடம் ஆலோசனை கேளுங்கள்! ஆனால் அதற்கு மாற்றமாக நடங்கள்!

160ஆம் ஆண்டுக்குப் பிறகு குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதை விட நாய் வளர்ப்பது மேலாகும்.

ஆஷுரா நாளில் அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்தான்.

இப்படி ஏராளமான பொய்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டினார்கள். நடைமுறையில் இவை யாவும் பொய் என்பது திட்டவட்டமாகத் தெரிகின்றது. கத்தரிக்காய் அனைத்து நோய்களுக்கும் மருந்தாக இல்லை. மீன் சாப்பிடுவது உடலைப் பலவீனப்படுத்தவும் இல்லை. பருப்பு சாப்பிடுவதற்கும் இதயம் இளகுவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. (பருப்பு சாப்பிடும் கூட்டம் தான் பள்ளிவாசலை இடித்தனர்) கீரைக்கும் ஷைத்தானுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அர்ஷுக்குக் கீழே பாம்பும் கிடையாது. அதிலிருந்து பால்வெளி படைக்கப்படவும் இல்லை.

சூரிய வெளிச்சத்தில் சூடாக்கப்பட்ட சிறிய குளம் குட்டைகளில் குளிக்கும் இலட்சக்கணக்கான மக்கள் யாருக்கும் குஷ்டம் வரவில்லை. ஓடுகின்ற தண்ணீருக்குப் பக்கத்தில் வசிப்பவர்கள் ஊட்டியில் பசுமையான இடங்களை அன்றாடம் பார்ப்பவர்களும் அழகான முகம் படைத்த மனைவியைப் பெற்றவர்களும் பார்வைக் குறைவுக்கு ஆளாகின்றனர்.

நீல நிறக் கண்கள் படைத்தவர்கள் தரித்திரம் பிடித்தவர்களாகவும் இருக்கின்றார்கள். வானம் பூமியைப் படைத்து இரவு பகல் ஏற்பட்ட பிறகு தான் ஆஷுரா நாளோ வேறு நாளோ ஏற்படும். அதற்கு முன்னால் ஆஷுரா நாளும் வேறு எந்த நாளும் இருந்திருக்க முடியாது.

இவற்றைப் பார்க்கும் போது இவ்வாறு கூறியவர்கள் சிந்தனைத் தெளிவில்லாதவர்களாக இருந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அவர் கொண்டு வந்த மார்க்கத்தின் மீதும் சந்தேகம் ஏற்படும் என்ற நோக்கத்தில் தான் மேற்கண்ட செய்திகள் புனையப்பட்டுள்ளன.

2. ஆர்வக் கோளாறு

மார்க்கத்தில் ஆர்வமிருந்தும் அறிவு இல்லாத மூடக் கூட்டத்தினர் நல்ல நோக்கத்தில் ஹதீஸ்களை சுயமாகத் தயாரித்தனர்.

மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட தொழுகை நோன்பு போன்ற வணக்கங்களுக்கு குர்ஆனிலும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் எவ்வளவோ சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. அவை இவர்களுக்குப் போதாததால் அந்த வணக்கங்களுக்கு இல்லாத சிறப்புகளை உருவாக்கினார்கள்.

இருக்கின்ற வணக்கங்களுக்கு இல்லாத சிறப்புகளை உருவாக்கியதோடு நின்று விடவில்லை. புதிது புதிதாக வணக்கங்களையும் பொய்யான ஹதீஸ்கள் மூலம் உருவாக்கினார்கள்.

நூஹு பின் அபீ மர்யம் என்பவர் திருக்குர்ஆனின் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தனித்தனி சிறப்புகளைக் கூறும் ஹதீஸ்களைத் தயாரித்ததை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

மோதிரம் அணிந்து தொழுவது மோதிரம் அணியாமல் தொழும் எழுபது தொழுகைகளை விடச் சிறந்தது.

தலைப்பாகை அணிந்து தொழுவது தலைப்பாகை இல்லாமல் தொழும் இருபத்தி ஐந்து தொழுகைகளை விடச் சிறந்தது.

நகங்களை இன்னின்ன நாட்களில் வெட்ட வேண்டும். முதலில் இந்த விரலில் ஆரம்பிக்க வேண்டும் என்றெல்லாம் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன.

முஹம்மத் என்ற பெயரைக் கேட்டவுடன் கட்டை விரல் நகங்களால் கண்களில் தடவுதல்

ரஜப் 27க்கு சிறப்புத் தொழுகை, நோன்பு நோற்பது.

ஷஅபான் 15ம் இரவில் நூறு ரக்அத் தொழுவது மற்றும் அந்த இரவின் சிறப்பு பற்றிய ஹதீஸ்கள்.

ரஜப் மாதத்தின் சிறப்பு பற்றிய ஹதீஸ்கள்.

குறிப்பிட்ட பகல், குறிப்பிட்ட இரவுக்கென்று குறிப்பிட்ட வணக்கங்கள்.

ஆஷுரா நாளைப் பற்றிக் கூறப்படும் சிறப்புகள் அடங்கிய ஹதீஸ். (அந்நாளில் மூஸா நபி காப்பாற்றப்பட்டார்கள். அந்நாளில் நோன்பு நோற்க வேண்டும் எனும் ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை)

சூரத்துல் பாத்திஹா சூரத்து ஆலஇம்ரான் சூரத்துல் பகரா ஆயத்துல் குர்ஸீ பகராவின் கடைசி இரு வசனங்கள் கஹ்பு அத்தியாயம் குல்ஹுவல்லாஹு அத்தியாயம் குல்அவூது பிரப்பில் ஃபலக் குல்அவூது பிரப்பின்னாஸ் அத்தியாயங்கள் இதா ஸுல்ஸிலத் குல்யா அய்யுஹல் காஃபிரூன் தபாரக்கல்லதீ போன்றவை தவிர மற்ற அத்தியாயங்களின் சிறப்புகள் பற்றி கூறப்படும் ஹதீஸ்கள் யாவும் இட்டுக்கட்டப்பட்டவை.

அமல்களில் ஆர்வமூட்டுவதாக எண்ணிக் கொண்டு இட்டுக் கட்டப்பட்டவைகளுக்கு இவை உதாரணங்கள்.

3. தனி மரியாதை பெறுவதற்காக

மார்க்க அறிஞர்களுக்கு மற்ற மதங்களில் உள்ளது போன்ற அந்தஸ்து இஸ்லாத்தில் இல்லை. மற்ற மதங்களில் கடவுளின் ஏஜென்டுகளாக மதகுருமார்கள் மதிக்கப்படுகின்றனர். புரோகிதர்களாகச் செயல்படுகின்றனர். ஆனால் இஸ்லாம் அதை அறவே ஒழித்து விட்டது.

இதைக் கண்ட போலி அறிஞர்கள் மற்ற மதங்களில் உள்ளது போல் தங்களுக்கும் மரியாதை வேண்டும் என்பதற்காக ஹதீஸ்களை உருவாக்கிக் கொண்டார்கள்.

ஆலிமுக்கு முன்னால் மாணவன் அமர்ந்தவுடன் அவனுக்கு அல்லாஹ் தனது அருளின் எழுபது வாசல்களைத் திறந்து விடுகின்றான். அவரை விட்டு எழும் போது அன்று பிறந்த பாலகனைப் போன்று எழுகின்றான். அவன் கற்ற ஒவ்வொரு எழுத்துக்காகவும் ஒரு ஷஹீதுடைய நன்மையைத் தருவான்.

சொர்க்கத்திலும் உலமாக்கள் தேவைப்படுவார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அல்லாஹ்வை சொர்க்கவாசிகள் சந்திப்பார்கள். வேண்டியதைக் கேளுங்கள் என்று அல்லாஹ் கூறுவான். அவர்களுக்கு என்ன கேட்பது என்று தெரியாததால் உலமாக்களிடம் சென்று கேட்பார்கள். இன்னின்னதைக் கேளுங்கள் என்று உலமாக்கள் சொல்லிக் கொடுப்பார்கள்.

ஒரு ஆலிமோ அல்லது ஆலிமுக்குப் படிக்கும் மாணவரோ ஒரு ஊரைக் கடந்து சென்றால் அவ்வூரில் அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு நாற்பது நாட்கள் வேதனையை அல்லாஹ் நிறுத்தி விடுவான்.

ஒரு ஆலிமுடைய சபையில் அமர்வது ஆயிரம் ரக்அத்கள் தொழுவதை விடச் சிறந்தது.

என் சமுதாயத்தில் உலமாக்கள் பனீ இஸ்ரவேலர்களின் நபிமார்களைப் போன்றவர்கள்.

ரகசியமான ஒரு இல்மு (ஞானம்) உள்ளது. அதை எனது நேசர்களுக்கு மட்டும் தான் நான் வழங்குவேன். எந்த மலக்கும் எந்த நபியும் இதை அறிய முடியாது என்று அல்லாஹ் கூறுவதாக அறிவிக்கப்படும் ஹதீஸ்.

ஒரு ஆலிமை யாரேனும் அவமானப்படுத்தினால் கியாமத் நாளில் மக்கள் மத்தியில் வைத்து அல்லாஹ் அவரை அவமானப்படுத்துவான்.

யாரேனும் உலமாக்களைச் சந்தித்தால் அவர் என்னைச் சந்தித்தவர் போலாவார். உலமாக்களிடம் முஸாபஹா செய்தால் அவர் என்னிடம் முஸாபஹா செய்தவர் போன்றவராவார்.

ஆலிமுடைய பேனாவின் மைத்துளி ஆயிரம் ஷஹீதுகளின் இரத்தத்தை விடச் சிறந்தது.

இவையெல்லாம் போலி மார்க்க அறிஞர்கள் தங்களது மதிப்பை உயர்த்திக் கொள்வதற்காக இட்டுக்கட்டியவையாகும்.

4. மன்னர்களை மகிழ்விக்க

மன்னர்களின் தவறுகளை நியாயப்படுத்தவும், அவர்களுக்கு மக்கள் அதிகமான மரியாதை தரவேண்டும் என்பதற்காகவும் போலி அறிஞர்கள் பொய்யான ஹதீஸ்களை இட்டுக்கட்டினார்கள்.

மன்னர் மஹ்தி என்பவரின் ஆட்சியின் போது, அவருக்கேற்ப ஹதீஸ்களை இட்டுக்கட்டிய கியாஸ் பின் இப்ராஹீம் என்பவர் இதற்கு உதாரணமாகக் கூறப்படுகின்றார்.

மன்னர்களுக்குத் தண்டனை இல்லை.

மன்னரின் அனுமதியின்றி ஜும்ஆ இல்லை.

என்பன போன்ற ஹதீஸ்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இது மன்னர்களுக்காகச் சொன்னதால் இவை பிரபலமாகவில்லை. மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இத்தகைய பொய்கள் கிடைக்கின்றன.

5. இயக்க வெறி

மத்ஹபு வெறி இயக்க வெறி இனவெறி ஒரு மனிதன் மீது கொண்ட பக்தி வெறி போன்ற காரணங்களுக்காகவும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டன.

மத்ஹபு இமாம்களைப் புகழ்ந்தும் இகழ்ந்தும் தயாரிக்கப்பட்ட ஹதீஸ்கள்.

அலீ (ரலி)யைப் புகழ்ந்தும் மற்ற நபித்தோழர்களை இகழ்ந்தும் கூறக்கூடிய ஹதீஸ்கள்

துருக்கியர் சூடானியர் அபீசீனியர் பாரசீகர் போன்றவர்களைப் புகழ்ந்தும் இகழ்ந்தும் உருவாக்கப்பட்டவை.

ஒரு மொழியைப் புகழ்ந்தும் இன்னொரு மொழியை இகழ்ந்தும் கூறுகின்ற ஹதீஸ்கள்.

நெசவு விவசாயம் போன்ற தொழில்களின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் ஹதீஸ்களும் இந்த வகையைச் சேர்ந்தவையாகும்.

இந்த வகையில் முதலிடத்தில் இருப்பவர்கள் ஷியாக்கள். அலீ (ரலி)யின் சிறப்பைக் கூறும் வகையில் இவர்கள் இட்டுக்கட்டிய ஹதீஸ்கள் கணக்கிலடங்காது.

இவை அனைத்தும் இயக்க வெறியின் காரணமாக இட்டுக் கட்டப்பட்டவையாகும்.

6. பேச்சைப் பிழைப்பாக்கியவர்கள்

மக்கள் மத்தியில் உருக்கமாகவும் சுவையாகவும் உரை நிகழ்த்தி அதன் மூலம் அன்பளிப்பு பெறும் ஒரு கூட்டத்தினர் மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் நடமாடி வந்தனர்.

நீண்ட நேரம் புதுப்புது விஷயங்களைப் பேசி மக்களைக் கவர வேண்டும் என்பதற்காக இவர்கள் இட்டுக்கட்டிய ஹதீஸ்கள் தான் இந்த வகையில் அதிகம் காணப்படுகின்றன. இவர்கள் எந்த அளவுகோலும் வைத்திருப்பதில்லை. அன்றைய தினம் கைதட்டல் பெறுவதற்காக எதை வேண்டுமானாலும் கூறுவார்கள். இவர்கள் பெரும்பாலும் வரலாறுகளில் தான் கைவரிசை காட்டினார்கள்.

ஸவ்ர் குகையில் சிலந்தி வலை பின்னியது.

புறா முட்டையிட்டது.

இரண்டு உமர்களில் ஒருவர் மூலம் இஸ்லாத்தைப் பலப்படுத்து என்று நபிகள் நாயகம் (ஸல்) துஆ கேட்டது

அபூஜஹ்லுடன் நபிகள் நாயகம் (ஸல்) மல்யுத்தம் செய்தது.

சந்திரன் பிளந்து பூமிக்கு வந்து நபிகள் நாயகத்தின் சட்டைக்குள் நுழைந்து இரு கைகள் வழியாக இரு பாதிகளாக வெளியே வந்தது.

ஹிழ்ர் இஸ்மாயீல் ஆகிய நபிமார்கள் உயிருடன் இருக்கின்றார்கள். மினாவில் ஆண்டு தோறும் அவர்கள் சந்தித்துக் கொள்கின்றார்கள் என்ற ஹதீஸ்கள்.

மறைந்த சூரியன் அலீ (ரலி) அவர்களுக்காக மீண்டும் உதித்தது.

முஹம்மது என்று பெயர் வைக்கப்பட்டவர் சொர்க்கம் செல்வார் என்பது.

எதிர்காலத்தில் இந்த வருடத்தில் இது நடக்கும்.

இத்தனை ஆண்டுகளுக்குப் பின் அது நடக்கும்.

செஸ் விளையாடுபவன் சபிக்கப்பட்டவன்.

இப்படியெல்லாம் இட்டுக்கட்டினார்கள். மக்கள் புதுமையாகப் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே இவர்களின் குறிக்கோளாக இருந்ததால் நல்ல கருத்துக்கள் அடங்கிய பழமொழிகள் தத்துவங்கள் ஆகியவற்றையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றாக அரங்கேற்றியவர்களும் இவர்களே!

அன்பு அதிகமானால் மரியாதை போய்விடும்.

சிறிய கவளமாக உண்ண வேண்டும். மென்று சாப்பிட வேண்டும்.

கஞ்சன் அல்லாஹ்வின் பகைவன்.

தட்டு சிறியதாக இருப்பதில் பரகத் உள்ளது.

சிறிது நேரம் சிந்திப்பது ஒரு வருடம் வணங்குவதை விடச் சிறந்தது.

நாட்டுப்பற்று ஈமானில் ஒரு பகுதி.

வறுமை எனக்குப் பெருமை.

உண்ணும் போது பேசக் கூடாது.

தடுக்கப்படட்டவைகள் இனிமையாகத் தெரியும்.

ஒருவனுக்கு எது தெரியவில்லையோ அதற்கு அவன் எதிரியாக இருப்பான்.

அடுத்தவனுக்குக் குழி வெட்டியவன் அதில் வீழ்வான்.

தெரியாது என்று கூறுவது பாதிக் கல்வியாகும்.

நபிகள் நாயகத்தின் வியர்வையிலிருந்து தான் ரோஜா படைக்கப்பட்டது.

நல்லவர்கள் செய்யும் நல்ல காரியங்கள் மிக நல்லவர்களுக்குக் கெட்டதாகத் தெரியும்.

முஃமினின் உமிழ்நீர் நோய் நிவாரணியாகும்.

தனிமையில் தான் ஈமானுக்குப் பாதுகாப்பு.

பல் துலக்குவது பேச்சாற்றலை அதிகரிக்கும்.

நல்லடியார்களைப் பற்றிப் பேசினால் அங்கே அருள் இறங்கும்.

வாதத் திறமையுள்ளவர்களிடம் நல்ல செயல்கள் இருக்காது.

எந்த இடத்தில் மக்கள் கூட்டமாக இருக்கின்றார்களோ அங்கே நிச்சயம் ஒரு வலியுல்லாஹ் இருப்பார். ஆனால் அவர்கள் அதை அறிய மாட்டார்கள். அவரும் கூட தான் வலியுல்லாஹ் என்பதை அறிய மாட்டார்.

நோயாளி முனகுவது தஸ்பீஹ் ஆகும்.

சாவதற்கு முன் செத்து விடுங்கள்.

அறிவு இல்லாதவனுக்கு மார்க்கம் இல்லை.

அலீ (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் செய்த வஸிய்யத் என்ற பெயரில் கட்டுக்கதைகள்.

இப்படி ஏராளமான ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டன.

7. சுயலாபத்திற்காக இட்டுக்கட்டியோர்

ஒவ்வொருவரும் தாம் சார்ந்துள்ள துறையைக் குறித்து நபி (ஸல்) அவர்கள் சிலாகித்துச் சொன்னதாக இட்டுக்கட்டினார்கள்.

இவர்களில் மகாக் கெட்டவர்கள் வைத்தியர்களாவர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மருத்துவம் கற்றுக் கொடுக்க அனுப்பப்படவில்லை. தேன் பேரீச்சம்பழம் கருஞ்சீரகம் போன்ற மிகச் சில பொருட்களின் சில மருத்துவ குணம் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஆனால் யூனானி வைத்தியர்கள் என்ற பெயரில் உருவான சில பித்தலாட்டக்காரர்கள் நபிவழி மருத்துவம் என்று பெயர் சூட்டிக் கொண்டு ஏராளமான ஹதீஸ்களை இட்டுக்கட்டியுள்ளனர்.

இவர்கள் செய்யும் எல்லா வைத்தியமும் நபிவழி மருத்துவம் என்றனர்.

ஒவ்வொரு நோய்க்கும் நபி (ஸல்) அவர்கள் மருந்து கூறியதாகச் சித்தரித்தனர். ஒவ்வொரு பொருளின் மருத்துவ குணம் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதாகவும் இட்டுக்கட்டினார்கள்.

இன்றும் கூட இந்த யூனானி வைத்தியர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரில் கூறுவதில் 99 சதவிகிதம் இட்டுக்கட்டப்பட்ட பச்சைப் பொய்யாக இருப்பதைக் காணலாம்.

8. மூளை குழம்பியவர்களின் உளறல்கள்

சிலர் முதுமையின் காரணமாக - மூளை குழம்பியதன் காரணமாக - நினைவாற்றல் குறைவு காரணமாக பொய் சொல்ல வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல் பொய்யான ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்.

இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் சில உதாரணங்களைத் தான் இங்கு குறிப்பிட்டுள்ளோம்.

நல்லறிஞர்கள் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களையெல்லாம் அம்பலப்படுத்தும் வகையில் தனியாக நூற்களையே எழுதியுள்ளனர்.

இப்னுல் ஜவ்ஸீ முல்லா அலீ காரி சுயூத்தி போன்ற அறிஞர்களின் நூற்கள் இவற்றில் பிரபலமானவையாகும்.

தங்களின் முழு வாழ்நாளையும் இந்த ஆய்வுக்காக அர்ப்பணித்து இட்டுக்கட்டப்பட்டவைகளை இந்த நல்லறிஞர்கள் இனம் காட்டிச் சென்றார்கள்.

இந்தப் பொய்களை இவர்கள் களையெடுக்கும் முயற்சியில் இறங்காவிட்டால் இஸ்லாத்திற்கும் ஏனைய மார்க்கங்களுக்கும் வித்தியாசம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும்.

ஆனால் இன்றைக்கும் கூட மார்க்க அறிஞர்கள் இந்தப் பொய்களை மேடைகளிலும் ஜும்ஆப் பிரசங்கங்களிலும் கூறி வருகின்றார்கள் என்பது தான் வேதனையான ஒன்று! குறைந்தபட்சம் இட்டுகக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் பற்றிய நூற்களையாவது மதரஸாக்களின் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

ஹதீஸ் கலையின் நான்கு வகையான தலைப்புகளில் ளயீஃப் மற்றும் மவ்ளூவு ஆகியவற்றைப் பற்றி அறிந்தோம். அடுத்து மூன்றாவது வகையான மத்ரூக் என்பதைப் பற்றி பார்ப்போம்.

3. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது)

மவ்ளூவு எனும் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களுக்கு அடுத்த நிலையில் அமைந்தவை மத்ரூக் எனப்படும் ஹதீஸ்களாகும்.

அறிவிப்பாளர்களில் பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்டவர் இடம் பெறுவது மத்ரூக் எனப்படும். ஹதீஸ்களில் அவர் பொய் கூறினார் என்பது நிரூபிக்கப் படாவிட்டாலும் பொதுவாக அவர் பொய் பேசக் கூடியவர் என்று நிரூபிக்கப்பட்டிருந்தால் அவர் அறிவிக்கும் ஹதீஸ்களும் மத்ரூக் எனப்படும்.

இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களுக்கும் மத்ரூக் எனும் ஹதீஸ்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் மவ்ளூவு என்றால் அறிவிப்பாளர் பொய்யர் என்று சந்தேகமற நிரூபிக்கப் பட்டிருக்கும். மத்ரூக் என்பதில் பொய்யர் என்று நிரூபிக்கப் பட்டிருக்காது. எனினும் பரவலாக அவர் மேல் பொய்யர் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருக்கும்.

மவ்ளூவு, மத்ரூக் ஆகிய இரண்டுமே அடியோடு நிராகரிக்கப்படும் என்பதில் எந்த அறிஞரும் மாற்றுக் கருத்து கொள்ளவில்லை.

ஹதீஸ் கலையின் ஸஹீஹ் மவ்ளூவு மத்ரூக் ளஃயீப் ஆகிய நான்கு தலைப்புகளில் முதல் மூன்று தலைப்புகளை இது வரை பார்த்துள்ளோம். இனி நான்காவது வகையான ளயீஃப் என்பதன் விளக்கத்தைப் பார்ப்போம்.

4. ளயீஃப் (பலவீனமானவை)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்களா இல்லையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடியவை ளயீஃப் எனப்படும். அந்தச் சந்தேகம் பல காரணங்களால் ஏற்படலாம். காரணம் எதுவாயினும் சந்தேகத்துக்குரியவற்றை நாம் பின்பற்றக் கூடாது.

சந்தேகம் ஏற்பட்டால் ஏன் பின்பற்றக் கூடாது?

உனக்குத் திட்டவட்டமான அறிவு இல்லாததைப் பின்பற்றாதே (அல்குர்ஆன் 17:36) என்று அல்லாஹ் கூறுகின்றான். உனக்குச் சந்தேகமானதை விட்டு விட்டு சந்தேகமற்றதின் பால் சென்று விடு என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். (அறிவிப்பவர்: ஹஸன் (ரலி) நூற்கள்: திர்மிதீ அஹ்மத் ஹாகிம்)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்களா என்று சந்தேகம் வந்தால் அதைப் பின்பற்றுவது தடை செய்யப்பட்டுள்ளதை மேற்கண்ட ஆதாரங்கள் கூறுகின்றன.

பலவீனமான ஹதீஸ்கள் நூறு இருந்தாலும் அவை ஒருக்காலும் பலமானதாக ஆகாது. நூறு நோய்கள் இருந்தால் நோய் அதிகமாகுமே தவிர நோய் போகாது.

அந்தச் சந்தேகம் எப்படியெல்லாம் ஏற்படுகின்றது என்பதைப் பொறுத்து பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை ளயீஃபான ஹதீஸ்களின் வகைகள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அ) அறிவிப்பாளர் தொடரை வைத்து ளயீஃபான ஹதீஸ்களை கீழ்க்கண்ட விதமாக வகைப்படுத்தலாம்.

1. முர்ஸல்

ஹதீஸ்களுக்கு அறிவிப்பாளர் தொடர் அவசியம் என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். எல்லா அறிவிப்பாளரையும் சரியாகக் கூறி விட்டு நபித்தோழரை மட்டும் கூறாவிட்டால் அத்தகைய ஹதீஸ்கள் முர்ஸல் எனப்படும்.

உதாரணத்துக்காக நாம் முன்னர் சுட்டிக் காட்டிய திர்மிதீயின் முதல் ஹதீஸையே எடுத்துக் கொள்வோம்.

ஹன்னாத் - வகீவு - இஸ்ராயீல் - ஸிமாக் - முஸ்அப் - நபிகள் நாயகம் என்ற சங்கிலித் தொடரில் மேற்கண்ட ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வைத்துக் கொள்வோம்.

அறிவிப்பாளர் தொடர் சரியாகவே கூறப்பட்டாலும் நபித்தோழர் மட்டும் விடப்பட்டு விட்டார். முஸ்அப் என்பவர் நபித்தோழர் அல்ல. அவர் இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்கவே முடியாது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக தாபியீன்களைச் சேர்ந்த முஸ்அப் கூறுகின்றார்.

இத்தகைய தன்மையில் அமைந்த ஹதீஸ்கள் முர்ஸல் எனப்படும்.

முர்ஸல் எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ்களை ஏற்கலாமா? கூடாதா? என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. அதற்கு ஒரு அடிப்படையும் உள்ளது.

அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மையை ஆராயும் போது நபித்தோழர்களைப் பற்றி ஆராய மாட்டார்கள். ஏனெனில் நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள். அவர்கள் மனிதர்கள் என்ற அடிப்படையில் தவறுகள் செய்திருக்கக் கூடும். என்றாலும் நிச்சயமாக நபிகள் நாயகத்தின் பெயரால் எதையும் இட்டுக்கட்டவே மாட்டார்கள். நபித்தோழர்களை அல்லாஹ்வும் புகழ்ந்து பேசுகின்றான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் புகழ்ந்து கூறியுள்ளார்கள்.

மேலும் ஒருவர் நம்பகமானவர் அல்ல என்று கூறுவதாக இருந்தால் அவரது காலத்தவர் தான் கூற வேண்டும். ஒரு நபித்தோழர் பற்றி வேறொரு நபித்தோழர் தான் நம்பகமற்றவர் என்று கூற வேண்டும். எந்த நபித்தோழரும் எந்த நபித்தோழர் பற்றியும் இத்தகைய விமர்சனம் செய்ததில்லை. எனவே நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பது ஷியாக்களைத் தவிர உலக முஸ்லிம் அறிஞர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்ட உண்மையாகும்.

இப்போது முர்ஸல் என்ற தன்மையில் அமைந்த ஹதீசுக்கு வருவோம். இந்த ஹதீஸில் நபித்தோழர் தான் விடப்பட்டுள்ளார், விடப்பட்டவரின் பெயரோ, மற்ற விபரமோ தெரியாவிட்டாலும் விடப்பட்டவர் நபித்தோழர் என்பது உறுதி. அவர் யாராக இருந்தால் நமக்கென்ன? நபித்தோழர் தான் விடுபட்டுள்ளார் என்று தெரிவதால் மற்ற அறிவிப்பாளர்களும் நம்பகமானவர்களாக இருப்பதால் இது ஏற்கப்பட வேண்டியது தான் என ஒரு சாரார் கூறுகின்றனர்.

இந்த வாதம் பாதி தான் சரியானது. நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் முர்ஸல் என்ற நிலையில் உள்ள ஹதீஸ்களில் நபித்தோழர் மட்டும் தான் விடுபட்டிருப்பார் என்பது நிச்சயமானதல்ல.

இத்தகைய ஹதீஸை அறிவிக்கும் தாபியீ ஒருவர் தம்மைப் போன்ற மற்றொரு தாபியீயிடம் இதைக் கேட்டிருக்கலாம். அந்தத் தாபியீ நபித்தோழரிடம் கேட்டிருக்கலாம். இதற்கும் சாத்தியம் உள்ளது. முர்ஸல் என்றால் விடுபட்டவர் நபித்தோழர் மட்டும் தான் என்று நிச்சயமாகக் கூற முடியாது. ஒரு தாபியீயும் நபித்தோழரும் கூட விடுபட்டிருக்கலாம்.

அந்தத் தாபியீ யார்? அவர் நம்பகமானவர் தானா? என்பதைக் கட்டாயம் பரிசீலிக்க வேண்டும். அவர் யார் என்பதே தெரியாத போது பரிசீலிக்க எந்த வழியும் இல்லை.

எனவே நபித்தோழர் மட்டுமோ அல்லது நபித்தோழரும் ஒரு தாபியுமோ விடுபட்டிருக்க வாய்ப்புள்ளதால் சந்தேகத்திற்குரியதை ஆதாரமாகக் கொள்ள முடியாது என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர்.

இவர்களின் வாதத்தில் வலிமை உள்ளதால் இதுவே சரியானதாகும்.

ஒரு நம்பகமான தாபியீ, நான் எந்த ஹதீஸையும் நபித்தோழர் வழியாக மட்டுமே அறிவிப்பேன்'' என்று அறிவித்திருந்தால் அத்தகைய முர்ஸலை ஆதாரமாகக் கொள்ளலாம். ஆனால் எந்தத் தாபியீயும் அவ்வாறு கூறியதாக நாம் அறியவில்லை.

2. முன்கதிவு (தொடர்பு அறுந்தது)

நபித்தோழர் விடுபட்டிருந்தால் அல்லது நபித்தோழர் தான் விடுபட்டிருக்கின்றார் என்ற சந்தேகம் இருந்தால் அதை முர்ஸல் என்கிறோம். வேறு அறிவிப்பாளர்கள் இடையில் விடுபட்டிருப்பார்கள் என்றால் அல்லது விடுபட்டிருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால் அத்தகைய ஹதீஸ்களை முன்கதிவு (தொடர்பு அறுந்தவை) என்று கூறுவார்கள்.

உதாரணத்திற்கு நாம் முன்னர் சுட்டிக் காட்டிய திர்மிதீயின் முதல் ஹதீஸையே எடுத்துக் கொள்வோம்.

ஹன்னாத் - வகீவு - இஸ்ராயீல் - ஸிமாக் - முஸ்அப் - இப்னுஉமர் - நபிகள் நாயகம்

இதில் சிமாக் என்பவர் முஸ்அபிடம் இதைச் செவியுறவில்லை என்று வைத்துக் கொள்வோம். முஸ்அபிடம் இதைச் செவியுறவில்லையானால் முஸ்அபிடம் யார் இதைச் செவியுற்றாரோ அவரிடமிருந்து இதை சிமாக் செவியுற்றிருப்பார். ஆனால் அவரைக் குறிப்பிடவில்லை என்பது இதன் பொருள்.

இதைப் புரிந்து கொள்ள ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.

2004வது ஆண்டில் 40 வயதில் உள்ள ஒருவர் காந்தி கூறியதாக ஒரு செய்தியைக் கூறுகின்றார். அவர் பொய் சொல்லாத நம்பிக்கைக்குரியவராகவும் இருக்கின்றார். இவர் பிறந்தது 1964ஆம் ஆண்டு. காந்தி கொல்லப்பட்டது 1948ம் ஆண்டு. காந்தி கொல்லப்படும் போது பிறக்காத இவர் காந்தி கூறியதாக ஒரு செய்தியைத் தெரிவித்தால் யாரோ இவருக்கு அதைச் சொல்லியிருக்க வேண்டும்.

இது போன்ற தன்மைகளில் அமைந்தவை முன்கதிவு எனப்படும். இதைக் கண்டுபிடிக்க பல வழிகள் உள்ளன.

ஆ என்ற அறிவிப்பாளர் ஹிஜ்ரி 120ல் மரணித்து விட்டார். இ என்ற அறிவிப்பாளர் 120ல் தான் பிறந்தார் என்று வைத்துக் கொள்வோம். ஆ என்பவர் இ வழியாக ஒரு செய்தியை அறிவித்தால் நிச்சயம் இடையில் ஒருவரோ இருவரோ விடுபட்டிருப்பார்கள் என்பதைக் கண்டுபிடித்து விடலாம்.

ஆ மக்காவில் வாழ்ந்தார். இ எகிப்தில் வாழ்ந்தார். ஆ ஒரு போதும் எகிப்து செல்லவில்லை. இ ஒரு போதும் மக்கா செல்லவில்லை. வேறு பொது இடத்தில் இருவரும் சந்தித்ததாகவும் வரலாற்றுக் குறிப்பு இல்லை. ஆயினும் ஒரே காலத்தில் வாழ்ந்திருக்கின்றார்கள். இந்த நிலையில் ஆ என்பார் இ வழியாக ஒன்றை அறிவித்தால் யார் மூலமாகவோ தான் அதை அறிந்திருக்க முடியும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

120ம் ஆண்டு இறந்தார். இ 115ல் பிறந்தார். இப்போது ஆ யிடமிருந்து இ அறிவித்தாலும் இடையில் யாரோ விடுபட்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் ஆ மரணிக்கும் போது இயின் வயது ஐந்து தான். ஐந்து வயதில் ஹதீஸ்களைக் கேட்டு அறிவிக்க முடியாது.

ஆ யிடமிருந்து அறிவிக்கும் இ என்பவர், தான் அவரைப் பார்த்ததே இல்லை என்று வாக்குமூலம் தருகின்றார். அப்போதும் யாரோ விடுபட்டதைக் கண்டு பிடித்து விடலாம்.

இத்தகைய தன்மைகளில் அமைந்த ஹதீஸ்கள் ஆதாரமாகக் கொள்ளப்படாது. இதை ஏற்று அமல் செய்ய முடியாது. ஏனெனில் விடுபட்டவர் பொய்யராக இருக்கக் கூடும் அல்லது நினைவாற்றல் இல்லாதவராக இருக்கக் கூடும்.

3. முஃளல்

ஒரே ஒரு அறிவிப்பாளர் விடுபட்டிருந்தால் அதை முன்கதிவு என்றனர். முஃளல் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட அறிவிப்பாளர்கள் விடுபட்டதாகும்.

ஒரு அறிவிப்பாளர் விடுபட்டதையே ஆதாரமாகக் கொள்ள முடியாது என்றால் பலர் விடுபட்டிருப்பதைப் பற்றி கூறத் தேவையில்லை. எனவே இவையும் பலவீனமான ஹதீஸ்களாகும்.

4. முஅல்லக்

ஒரு நூலாசிரியர் தமக்கு அறிவித்தவரை விட்டு விட்டு அறிவிப்பவை முஅல்லக் எனப்படும்.

வேறு சிலரின் கருத்துப்படி அறிவிப்பாளர் தொடர் அறவே இல்லாதவை முஅல்லக் எனப்படும்.

உதாரணமாக எந்த அறிவிப்பாளர் வரிசையும் இல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் என்று திர்மிதீ கூறுவதாக வைத்துக் கொள்வோம். அது முஅல்லக் ஆகும்.

அல்லது உதாரணத்திற்கு நாம் சுட்டிக்காட்டிய திர்மிதீ முதல் ஹதீஸில் ஹன்னாத் என்ற அறிவிப்பாளரை மட்டும் விட்டு விட்டு மற்றவர்களைக் கூறுவதாக வைத்துக் கொள்வோம். அதுவும் முஅல்லக் தான்.

ஸஹீஹுல் புகாரியில் முஅல்லக் என்ற வகையில் பல ஹதீஸ்கள் உள்ளன. எந்த அறிவிப்பாளர் வரிசையும் இல்லாமல் ஹதீஸை மட்டும் கூறுவார்.

இத்தகைய நிலையில் உள்ள ஹதீஸ்களை ஆய்வு செய்ய வேண்டும். புகாரி போன்றவர்கள் அப்படிக் கூறினால் அவரிடம் அறிவிப்பாளர் தொடர் இருக்கின்றதா? என்று தேடிப் பார்க்க வேண்டும். வேறு எங்காவது அறிவிப்பாளர் தொடருடன் கூறியிருந்தால் அல்லது வேறு நூற்களில் அதற்கு அறிவிப்பாளர் தொடர் கிடைத்தால் அது நம்பகமானதாகவும் இருந்தால் அதை ஏற்றுச் செயல்படலாம்.

அவ்வாறு கிடைக்கவில்லையானால் விடுபட்டவர்கள் யார் என்பது தெரியாததால் அதை விட்டுவிட வேண்டும்.

ஆ) அறிவிக்கப்படும் செய்தி மற்றும் அறிவிப்பாளரைக் கவனத்தில் கொண்டு ளயீஃபான ஹதீஸ்கள் பின்வருமாறு பிரிக்கப்படும்.

1. ஷாத்

அரிதானது என்பது இதன் பொருள்.

ஒரு ஆசிரியரிடம் பல மாணவர்கள் ஒரு ஹதீஸைச் செவியுறுகின்றனர். பத்து மாணவர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.

இந்தப் பத்து பேரும் தாம் கேட்ட ஹதீஸைப் பலருக்கும் அறிவிக்கின்றார்கள். ஒன்பது பேர் அறிவிப்பது ஒரே மாதிரியாக உள்ளது. ஆனால் ஒரே ஒருவர் அறிவிப்பது மட்டும் ஒன்பது பேர் அறிவிப்பதற்கு முரணாகவுள்ளது. இப்படி அமைந்த அறிவிப்பைத் தான் ஷாத் என்று கூறுவர்.

தொழுகையில் நான்கு தடவை நபி (ஸல்) அவர்கள் கைகளை உயர்த்தினார்கள் என்ற ஹதீஸை எடுத்துக் கொள்வோம்.

இப்னு உமர் (ரலி) மூலம் ஸாலிம், நாஃபிவு, முஹாரிப் ஆகியோர் அறிவித்துள்ளனர். அதே இப்னு உமர் (ரலி) மூலம் முஜாஹித் அறிவிக்கும் போது முதல் தக்பீரில் தவிர கைகளை உயர்த்தவில்லை என்கிறார்.

நால்வருமே நம்பகமானவர்கள் தான். ஆனாலும் மூவருக்கு மாற்றமாக ஒருவர் அறிவிக்கும் போது அது ஷாத் எனும் நிலையை அடைகிறது.

இஙகே இரண்டு செய்திகளும் ஒன்றுக்கொன்று நேர் முரணானவையாக உள்ளன. இரண்டில் ஏதேனும் ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும். இந்த நிலையில் என்ன செய்ய வேண்டும்?

மூன்று பேர் தவறுதலாகக் கூறுவதை விட ஒருவர் தவறாகக் கூறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே மூவர் கூறுவதை ஏற்றுக் கொண்டு ஒருவர் கூறுவதை விட்டு விடவேண்டும்.

நபித்தோழரிடம் கேட்டவர்களுக்கிடையே தான் இந்த நிலை ஏற்படும் என்று கருதக்கூடாது. அறிவிப்பாளர் வரிசையில் எந்த இடத்திலும் இந்த நிலை ஏற்படும்.

உதாரணமாக குதைபா என்ற அறிவிப்பாளரை எடுத்துக் கொள்வோம். இவரிடம் ஏராளமானவர்கள் ஹதீஸ்களைக் கற்றுள்ளனர். புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, மூஸா பின் ஹாரூன், ஹஸன் பின் சுஃப்யான், ஆகியோர் இவர்களில் முக்கியமானவர்கள். எல்லோரும் அறிவிப்பதற்கு மாற்றமாக நஸயீ மட்டும் வேறு விதமாக அறிவித்தால் அதுவும் ஷாத் என்ற வகையில் சேரும்.

ஷாத் என்பது ஹதீஸின் வாசகத்திலும் ஏற்படலாம். அறிவிப்பாளர் பெயரைப் பயன்படுத்துவதிலும் ஏற்படலாம்.

ஒரு ஹதீஸை ஒரு ஆசிரியர் வழியாக நான்கு பேர் அறிவிப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த ஹதீஸின் மூன்றாவது அறிவிப்பாளர் பெயர் இஸ்மாயீல் பின் முஹம்மத் என்று மூன்று பேர் குறிப்பிடுகின்றார்கள். ஒருவர் மட்டும் இஸ்மாயீல் பின் மூஸா என்று குறிப்பிடுகின்றார்.

ஒரே ஆசிரியரிடமிருந்து அறிவிக்கும் இந்தப் பெயர்ப் பட்டியலில் மூவர் குறிப்பிட்ட பெயருக்கு மாற்றமாக ஒருவர் குறிப்பிடுவதால் இதுவும் ஷாத் என்ற வகையைச் சேர்ந்தது தான். மூவர் குறிப்பிடக்கூடிய பெயர் தான் சரியானதாக இருப்பதற்கு அதிக சாத்தியம் உள்ளது.

அதாவது மூன்றாவது அறிவிப்பாளராக குறிப்பிட்ட இஸ்மாயீல் பின் முஹம்மத் பலவீனமானவராக உள்ளார். ஆனால் இஸ்மாயீல் பின் மூஸா பலவீனமானவர் இல்லை என்று வைத்துக் கொள்வோம். இந்த இடத்தில் தான் அறிவிப்பாளர் வரிசையிலும் ஷாத் ஏற்படுத்தும் விளைவைப் புரிந்து கொள்ள இயலும்.

இஸ்மாயீல் பின் முஹம்மத் நம்பகமானவரா? இஸ்மாயீல் பின் மூஸா நம்பகமானவரா? என்பதை விட வேறொரு விஷயத்தைத் தான் நாம் கவனிக்க வேண்டும்.

அதாவது இஸ்மாயீல் பின் முஹம்மத் என்பவரைத் தான் மூன்று பேர் கூறுகின்றனர். எனவே இவர்களின் ஆசிரியர் இந்தப் பெயரைத் தான் குறிப்பிட்டிருப்பார். இஸ்மாயீல் பின் மூஸா என்று ஒருவர் கூறுவதால் அந்த அறிவிப்பு ஷாத் என்ற நிலைக்கு வந்து விடும்.

இஸ்மாயீல் பின் முஹம்மத் என்பது தான் சரியானது என்று நாம் நினைக்கும் போது அந்த ஹதீஸ் பலவீனமானதாக ஆகி விடுகின்றது. ஏனெனில் இஸ்மாயீல் பின் முஹம்மத் பலவீனமானவராக உள்ளார்.

அதாவது இஸ்மாயீல் பின் முஹம்மத் என்ற பெயரைக் குறிப்பிட்டது தான் சரி என்பது வேறு.பலவீனராக உள்ளதால் இந்த அறிவிப்பை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது வேறு. இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு ஆசிரியரிடமிருந்து ஒரு ஹதீஸை அறிவிக்கும் ஐந்து பேரில் நால்வர் அறிவிப்பதற்கு மாற்றமாக, முரணாக ஒருவர் அறிவிப்பது தான் ஷாத். நால்வர் கூறாத ஒரு விஷயத்தை சேர்த்துக் கூறினால் அது ஷாத் அல்ல. அதையும் நாம் ஏற்கலாம். ஏற்க வேண்டும்.

முதல் ரக்அத்தில் இக்லாஸ் அத்தியாயம் ஓதினார்கள்'' என்பது ஒரு ஆசிரியர் வழியாக நால்வரின் அறிவிப்பு.

முதல் ரக்அத்தில் இக்லாசும், இரண்டாம் ரக்அத்தில் நாஸ் அத்தியாயமும் ஓதினார்கள்'' என்று ஒருவர் அறிவிக்கின்றார்.

இது ஷாத் எனும் வகையில் சேராது. ஏனெனில் நால்வர் கூறியதை இது மறுக்கவில்லை. மாறாக அதை ஒப்புக் கொள்வதுடன் மேலும் அதிகமான ஒரு செய்தியைக் கூறுகின்றது. இவரும் நம்பகமானவராக உள்ளதால் இந்த அறிவிப்பையும் நாம் ஏற்க வேண்டும்.

பலபேர் கூறாமல் விட்டு விட்டதை ஒரே ஒருவர் மட்டும் கூறுவது சர்வ சாதாரணமான நிகழ்வு தான்.

இது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விளக்கமாகும்.

ஒரு ஆசிரியர் வழியாக இல்லாமல் வெவ்வேறு ஆசிரியர் வழியாக பலரும் பலவிதமாக அறிவித்தால் ஷாத் என்ற பேச்சு அங்கே எழாது.

நான்கு பேர் ஹன்னாத் வழியாக ஒரு செய்தியை அறிவிக்கின்றனர். ஆனால் ஒருவர் குதைபா வழியாக அதற்கு மாற்றமாக அறிவிக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் ஒருவர் அறிவிப்பது தவறு. நால்வர் அறிவிப்பது சரி என்று கூற முடியாது. ஏனெனில் உண்மையில் இவர்கள் முரண்படவில்லை. இவர்கள் யாரிடம் செவியுற்றார்களோ அவர்களிடம் தான் முரண்பாடு உள்ளது. இந்த ஒருவர் தனது ஆசிரியரிடம் தான் கேட்டதை 'அறிவிக்கின்றார். அந்த நால்வர் தங்களது ஆசிரியரிடம் கேட்டதை அறிவிக்கின்றார்கள்.

எனவே இதை ஷாத் என்று கூறு முடியாது. முரண்பாடாகக் கூறிய இவர்களது இரு ஆசிரியர்களின் தகுதிகளையும் இன்னபிற அம்சங்களையும் கவனத்தில் கொண்டு எது சரியானது? என்ற முடிவுக்கு வரவேண்டும்.

ஒரு ஆசிரியரிடமிருந்து பல மாணவர்கள் அறிவிக்கும் போது பலர் ஒரு விதமாகவும், ஒருவர் அறிவிப்பது அதற்கு முரணாகவும் இருந்தால் அதை ஷாத் என்கிறோம். முரணாக ஒருவர் அறிவிப்பது ஷாத் என்பதைப் போல் பலர் ஒருவிதமாக அறிவிப்பதற்கும் ஒரு பெயரைச் சூட்டியுள்ளனர். இதை மஹ்பூள் என்று கூறுவார்கள். ஒரு ஹதீஸைப் பற்றி மஹ்பூள் என்று கூறப்பட்டால் எதிராக ஷாத் எனும் அறிவிப்பு உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மஹ்பூள் என்பது ஆதாரமாகக் கொள்ளத் தக்கதாகும்.

2. முன்கர் (நிராகரிக்கப்பட்டது)

ஒரு ஆசிரியரிடமிருந்து கற்ற பல மாணவர்கள் ஒரு செய்தியை எப்படி அறிவிக்கின்றார்களோ அதற்கு முரணாக ஒரே ஒருவர் அறிவித்தால் அவர் நம்பகமானவராகவும் இருந்தால் அதை ஷாத் என்று அறிந்தோம். மற்றவர்களை விட உறுதி குறைந்தவராக, நினைவாற்றல் குறைவானவராக அந்த ஒருவர் இருந்து விட்டால் அது முன்கர் எனப்படும்.

ஒருவர் அறிவிக்கும் ஹதீஸ் பற்றி முன்கர் என்று கூறப்பட்டால் அதற்கு மாற்றமாக அதே ஆசிரியர் வழியாக மற்ற மாணவர்கள் அறிவித்துள்ளனர். அவர்கள் நம்பகமானவர்களாகவும் அந்த ஒருவர் பலவீனமானவராகவும் உள்ளார் என்பது பொருளாகும். ஷாத் என்ற நிலையில் அமைந்த ஹதீஸ்களையே ஆதாரமாகக் கொள்வதில்லை எனும் போது முன்கர் என்ற நிலையில் அமைந்த ஹதீஸைப் பற்றி சொல்லத் தேவையில்லை.

இப்னுஸ் ஸலாஹ் போன்ற அறிஞர்கள் முன்கர், ஷாத் இரண்டுமே ஒரு வகைக்கான இரண்டு பெயர்கள் என்று கூறுகின்றனர்.

முன்கர் என்ற நிலையில் இல்லாத ஹதீஸ்கள் மஃரூஃப் என்று கூறப்படும்.

அதாவது ஒரு ஆசிரியரிடமிருந்து ஐந்து மாணவர்கள் அறிவிக்கின்றனர். ஐவரில் நால்வர் அறிவிப்பதற்கு மாற்றமாக ஒருவர் மட்டும் அறிவிக்கின்றார். அந்த நால்வர் நம்பகமானவர்களாக இருப்பது போல் இந்த ஒருவர் நம்பகமானவர்களாக இல்லை. இந்த ஒருவர் அறிவிப்பது முன்கர் என்போம். அந்த நால்வர் அறிவிப்பது தான் மஃரூஃப் ஆகும். மஃரூஃப் என்பது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் ஒரு வகையாகும்.

ஹதீஸ் கலையில் ளயீஃப் எனப்படும் பலவீனமான ஹதீஸ்களின் வகைகளைப் பற்றி பார்த்து வருகிறோம்.

இ) அறிவிக்கப்படும் விதத்தைக் கவனத்தில் கொண்டு ளயீஃபான ஹதீஸ்கள் கீழ்க்கண்டவாறு பிரிக்கப்படும்.

1. முதல்லஸ்

பலவீனமான ஹதீஸில் முதல்லஸ் என்பதும் ஒரு வகையாகும். முதல்லஸ் என்றால் என்ன? என்பதைப் புரிந்து கொள்ள ஹதீஸ்களின் அறிவிப்பாளர் வரிசை எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு திர்மிதீயின் இரண்டாவது ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை எவ்வாறு அமைந்துள்ளது? என்பதைப் பார்ப்போம்.

1. நமக்கு இஸ்ஹாக் பின் மூஸா அல்அன்சாரி அறிவித்தார்.

2. மஃன் பின் ஈஸா நமக்கு அறிவித்தார் என்று அவர் கூறினர்.

3. மாலிக் பின் அனஸ் நமக்கு அறிவித்தார் என்று மஃன் பின் ஈஸா கூறினார்.

4. நமக்கு குதைபா அறிவித்தார் என்று மாலிக் பின் அனஸ் கூறினார்.

5. குதைபா மாலிக் வழியாக அறிவித்தார்.

6. மாலிக் ஸுஹைல் பின் அபீஸாலிஹ் வழியாக அறிவித்தார்.

8. அபூஸாலிஹ் அபூஹுரைரா (ரலி) வழியாக அறிவித்தார்.

9. அபூஹுரைரா (ரலி) நபி (ஸல்) கூறியதாக பின்வரும் செய்தியைக் கூறினார்.

இது திர்மிதீ நூலின் இரண்டாவது ஹதீஸின் அறிவிப்பாளர் தொடராகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய இந்தச் செய்தி சங்கிலித் தொடராக ஒன்பது நபர்கள் வழியாக திர்மிதீ இமாமுக்குக் கிடைத்துள்ளது.

இந்தப் பட்டியல் எவ்வாறு அமைந்துள்ளது? என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.

ஆரம்பத்தில் நமக்கு இஸ்ஹாக் அறிவித்தார்'' என்று கூறப்படுகின்றது. இமாம் திர்மதீ நேரடியாக இஸ்ஹாக்கிடம் கேட்டிருந்தார் என்பது நமக்கு அறிவித்தார்' என்ற வாசக அமைப்பிலிருந்தே விளங்குகின்றது.

இது போல் 2,3,4 ஆகிய அறிவிப்பாளர்களும் தமக்கு முந்திய அறிவிப்பாளர்களிடமிருந்து அதைக் கேட்டுள்ளனர் என்பது வாசக அமைப்பிலிருந்தே அறியப்படுகின்றது. எல்லோருமே நமக்கு இதை அறிவித்தார் (ஹத்தஸனா) எனக் கூறுகின்றனர்.

ஆனால் ஐந்தாவதாக குதைபா மாலிக் வழியாக அறிவித்தார்'' என்று தான் கூறப்பட்டுள்ளது.

இந்த வாசக அமைப்பைப் பார்க்கும் போது இரு விதமாகப் புரிந்து கொள்ள இயலும்.

குதைபா, மாலிக்கிடம் நேரடியாகவே கேட்டிருக்கலாம்.

குதைபா நேரடியாக மாலிக்கிடம் கேட்காமல் மாலிக்கிடம் கேட்ட இன்னொருவரிடம் கேட்டிருக்கலாம். அவரை விட்டு விட்டு மாலிக்கைக் கூறியிருக்கலாம்.

இன்றைக்கும் கூட நாம் அன் அபீஹுரைரா (அபூஹுரைரா மூலம்) என்று கூறுகின்றோம். அபூஹுரைராவிடம் நாம் கேட்டோம் என்பது இதன் பொருளன்று.

இந்த இடத்தில் குதைபா என்பார் மாலிக்கிடம் நேரடியாகக் கேட்டாரா? இடையில் இன்னொருவர் துணையுடன் கேட்டாரா? என்பதைப் பொறுத்தே ஹதீஸின் தரம் முடிவாகும்.

குதைபா, மாலிக்கிடம் நேரடியாகக் கேட்டிருந்தால் இருவரும் நம்பகமானவர்கள் என்பதால் இந்த அறிவிப்பு சரியானது என்று எளிதாக முடிவு செய்து விடலாம்.

இடையில் ஒருவரை அவர் விட்டிருக்கலாம். அந்த ஒருவர் பொய்யராக இருக்கலாம். நம்பகமற்றவராக இருக்கலாம். அவரிடம் ஹதீஸைப் பலவீனமாக்கும் ஏனைய குறைபாடுகளில் ஏதேனும் ஒன்று இருக்கலாம்.

எனவே நேரடியாகக் கேட்டாரா? இல்லையா? என்பதை முடிவு செய்யும் கட்டாயம் ஏற்படுகின்றது.

இது எல்லா நேரத்திலும் அவசியப்படாது.

குதைபா என்பவர் தாம் யாரிடம் நேரடியாகச் செவியுற்றாரோ அவரைத் தான் குறிப்பிடுவார். யாரையும் இடையில் விட்டு விடும் வழக்கமுடையவரல்ல என்பது வேறு வழியில் நமக்குத் தெரிந்திருந்தால் இந்த இடத்தில் யாரோ விடுபட்டிருப்பார்கள் என்ற சந்தேகம் நமக்கு ஏற்படாது. மாலிக் வழியாக குதைபா என்பதை மாலிக் நமக்கு அறிவித்தார்'' என்ற நிலையில் வைத்துக் கொள்ளலாம்.

ஆனால் குதைபா என்பவர், தாம் நேரடியாகக் கேட்காவிட்டாலும் அவர் வழியாக என்று கூறுவார்; நேரடியாகக் கேட்டவரை விட்டு விட்டு அதற்கடுத்த அறிவிப்பாளரைக் குறிப்பிட்டு அவர் வழியாக என்று அறிவிப்பார் என்று வைத்துக் கொள்வோம். (குதைபா அப்படிப்பட்டவர் அல்ல. உதாரணத்திற்குத் தான் இவ்வாறு கூறுகின்றோம்)

இப்போது மாலிக் வழியாக என்று அவர் கூறுகின்றார் என்றால் தனது ஆசிரியரை விட்டு விட்டு, தனது ஆசிரியருடைய ஆசிரியரைக் குறிப்பிடும் அவரது வழக்கம் காரணமாக யாரோ இடையில் விடுபட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் வருகின்றது. இப்படி அமைந்த ஹதீஸ்கள் தாம் முதல்லஸ் எனப்படும். இந்த வழக்கமுடையவர் முதல்லிஸ் எனப்படுவார். இவரது செயல் தத்லீஸ் எனப்படும்.

இத்தகைய ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது. ஏனெனில் விடுபட்ட ஒருவர் மோசமானவராகவும் இருக்கக் கூடும்.

ஒருவர் தமது ஆசிரியரை விட்டு விட்டு அடுத்தவரைக் கூறும் வழக்கமுடையவராகவும் இருக்க வேண்டும். அந்த ஹதீஸிலும் அவ்வாறு வார்த்தையைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். இரண்டும் சேர்ந்தால் மட்டுமே ஒரு ஹதீஸ் முதல்லஸ் என்ற நிலைமையை அடையும்.

ஒரு நபர் சில நேரங்களில் தாம் யாரிடம் செவியுற்றாரோ அவரைக் கூறாமல் அவருக்கு முந்திய அறிவிப்பாளரைக் கூறும் வழக்கமுடையவராக இருந்தார் என்று வைத்துக் கொள்வோம். இத்தகைய வழக்கமுடைய ஒருவர், குறிப்பிட்ட ஹதீஸை அறிவிக்கும் போது இந்த வழக்கத்தைக் கடைப்பிடிக்கவில்லை. மாறாக நமக்கு இவர் அறிவித்தார்'' என்று தெளிவாக அறிவிக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

இவர் முதல்லிஸ் (தத்லீஸ் செய்பவர்) என்றாலும் இந்த ஹதீஸில் யாரையும் அவர் விட்டு விடவில்லை என்பதால் இந்த ஹதீஸை நாம் ஏற்கலாம்.

ஒவ்வொரு ஹதீஸிலும் தத்லீஸ் என்ற தன்மை உள்ளதா? என்று பார்க்க வேண்டுமே தவிர ஒரு நபர் தத்லீஸ் செய்பவர் என்பதால் அவர் அறிவிக்கும் எல்லா ஹதீஸ்களையும் நிராகரித்து விடக்கூடாது.

இந்த விஷயத்தில் அறிஞர் பெருமக்களிடையே கருத்து வேறுபாடு இல்லை.

2. முஅன்அன்

அன்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது முஅன்அன் எனப்படும்.

அன் அபீஹுரைரா - அன் ஆயிஷா (அபூஹுரைரா வழியாக - ஆயிஷா வழியாக) என்பது போல் குறிப்பிடப்படும் ஹதீஸ்கள் முஅன்அன் எனப்படும்.

நமக்குச் சொன்னார், நமக்கு அறிவித்தார், நம்மிடம் தெரிவித்தார், நான் காதால் அவரிடம் செவியுற்றேன் என்பது போல் அறிவிக்கப்படும் ஹதீஸ்களில் அறிவிப்பாளர் நம்பகமானவர்களாக இருந்தால் அப்படியே அதை ஏற்க வேண்டும்.

ஆனால் முஅன்அன் என்ற வகையில் அமைந்த ஹதீஸ்கள் பரிசீலனைக்குப் பிறகே ஏற்கப்படும்.

தத்லீஸ் செய்யும் வழக்கமுடையவராக அவர் இல்லாதிருந்து இவ்வாறு பயன்படுத்தினால் அதனால் ஹதீஸின் தரம் பாதிக்காது. அவர் வழியாக - இவர் மூலம் என்றெல்லாம் இவர் பயன்படுத்துவதற்கும், நமக்கு அறிவித்தார் என்பதற்கும் இவரைப் பொறுத்த வரை வித்தியாசம் இல்லை.

அவர் தத்லீஸ் செய்யும் வழக்கமுடையவராக இருந்து இவ்வாறு அவர் அறிவித்தால், நேரடியாகச் செவியுற்றது வேறு வகையில் நிரூபிக்கப்பட்டுள்ளதா? என்று பார்க்க வேண்டும். நிரூபிக்கப்பட்டிருந்தால் ஏற்கலாம். அவ்வாறு நிரூபிக்கப்படாவிட்டால் அதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

அதாவது முஅன்அன் என்று கூறப்பட்டவுடன் அதை ஏற்கவோ மறுக்கவோ கூடாது. மாறாக ஆய்வு செய்த பின்னர் தான் அது பற்றி முடிவு செய்ய வேண்டும்.

3. முத்ரஜ் (இடைச்செருகல்)

ஹதீஸின் அறிவிப்பாளர், ஹதீஸை அறிவிக்கும் போது ஹதீஸில் தனது வார்த்தையையும் சேர்த்துக் கூறி விடுவதுண்டு.

இந்த நேரத்தில் இதை ஓது என்ற கருத்தில் ஒரு ஹதீஸ் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதை அறிவிக்கும் அறிவிப்பாளர், இந்த நேரத்தில் இதை ஓது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைத் தெரிவித்து விட்டு, இவ்வளவு எளிமையான வணக்கத்தை விட்டு விடாதீர்கள் என்று சுய கருத்தையும் கூறிவிடுவார்.

இத்தகைய இடைச்செருகல் உள்ள ஹதீஸ்கள் முத்ரஜ் எனப்படும். இத்தகைய ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் கூறியது எது? இடைச் செருகல் எது? என்பதைப் பிரித்து அறிந்து இடைச் செருகலை மட்டும் விட்டு விட வேண்டும்.

இதே போன்ற மற்றொரு அறிவிப்பைப் பார்த்து இடைச் செருகலைக் கண்டு பிடிக்கலாம்.

அல்லது இந்த அறிவிப்பாளரே பிரிதொரு சந்தர்ப்பத்தில், இது நபி (ஸல்) அவர்களின் கூற்று அல்ல, மாறாக என்னுடைய கூற்று தான் என்றோ அல்லது எனக்கு அறிவித்தவரின் சொந்தக் கூற்று என்றோ கூறுவதை வைத்துக் கண்டு பிடிக்கலாம்.

அல்லது இது நிச்சயம் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இருக்க முடியாது என்று முடிவு செய்யத்தக்க வகையில் அதன் கருத்து அமைந்திருப்பதை வைத்துக் கண்டு பிடிக்கலாம்.

அல்லது இத்துறையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட நல்லறிஞர்கள் எண்ணற்ற அறிவிப்புகளை ஆய்வு செய்து கூறும் முடிவின் அடிப்படையில் தெரிந்து கொள்ளலாம்.

பலவீனமான ஹதீஸ்கள் எவ்வாறு வகைப்படுத்தப் படுகின்றன என்பதைப் பார்த்து வருகின்றோம். பின்வரும் விதமாகவும் ஹதீஸ்கள் வகைப்படுத்தப் படுகின்றன.

1. முள்தரப்

இதற்குக் குழப்பமானது என்று பொருள்.

முள்தரப் என்பதும் ஏற்கத் தகாத, பலவீனமான ஹதீஸ்களில் ஒரு வகையாகும்.

ஒரு ஆசிரியரிடமிருந்து ஒரு ஹதீஸைப் பல மாணவர்கள் செவியுற்று, ஒருவர் மட்டும் மற்றவர்கள் அறிவிப்பதற்கு முரணாக அறிவித்தால் அது ஷாத் எனப்படுகின்றது என்பதை ஏற்கனவே நாம் பார்த்துள்ளோம்.

முள்தரப் என்பதும் ஓரளவு இது போன்றது தான் என்றாலும் இரண்டுக்கும் முக்கியமான வித்தியாசம் உள்ளது.

ஒரு குறிப்பிட்ட செய்தியைப் பலரும் அறிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் அறிவிப்பதற்கு மாற்றமாக சிலர் அறிவிக்கின்றார்கள். இவர்கள் ஒரு ஆசிரியர் வழியாக அறிவிக்கவில்லை. வெவ்வேறு ஆசிரியர்கள் வழியாக இப்படி அறிவிக்கின்றார்கள் என்றால் அதற்கு முள்தரப் எனப்படும்.

ஒரு சம்பவம் மக்காவில் நடந்ததாக ஐந்து பேர் அறிவிக்க, மதீனாவில் நடந்ததாக இரண்டு பேர் அறிவிக்கின்றார்கள் என்றால் இரண்டு பேர் அறிவிப்பது முள்தரப் எனப்படும்.

இந்த முடிவைக் கூட அவசரப்பட்டு எடுத்துவிடக் கூடாது. மக்காவிலும் மதீனாவிலும் இருவேறு சந்தர்ப்பங்களில் நடந்திருக்க முகாந்திரமோ, ஆதாரமோ இருந்தால் அதை முள்தரப் என்று கூறக்கூடாது.

முள்தரப் என்பது இன்னொரு வகையிலும் ஏற்படும்.

ஒரு அறிவிப்பாளர் நேற்று மக்காவில் நடந்ததாகக் கூறி விட்டு, இன்று மதீனாவில் நடந்ததாக அறிவித்தால் அதுவும் முள்தரப் (குழப்பத்தால் நேர்ந்த தவறு) தான்.

கருத்துக்களில் முள்தரப் எனும் நிலை இருப்பது போலவே அறிவிப்பாளர் வரிசையிலும் இந்த நிலை ஏற்படலாம்.

இப்ராஹீம் எனக்கு அறிவித்தார் என்று ஒரு செய்தியை அறிவித்த அறிவிப்பாளர் பின்னொரு சமயத்தில் அப்துல் காதிர் அறிவித்ததாக மாற்றிக் கூறினால் இதுவும் முள்தரப் தான். பெயரில் குழப்பம் ஏற்பட்டதால் இவ்விருவர் அல்லாத மூன்றாவது ஒருவராகவும் அவர் இருக்கக் கூடும். அவர் பலவீனமானவராக இருந்திருக்கவும் வாய்ப்புள்ளது என்பதால் இதுபோன்ற நிலையில் அமைந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்வதில்லை.

2. மக்லூப் (மாறாட்டம்)

சில நேரங்களில் சில நிகழ்ச்சிகளை ஏறுக்கு மாறாகக் கூறி விடுவோம். இருப்பதாகக் கூறியதை இல்லை என்போம். இல்லை என்று கூறியதை உண்டு என்போம். இப்படி ஏறுக்கு மாறாகவும் ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிலால் பாங்கு சொன்னால் சாப்பிடுவதை நிறுத்த வேண்டாம். இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொன்னால் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு நோன்பு பிடியுங்கள் என்ற ஹதீஸ் பலர் வழியாக பல நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிலர், பிலால் இடத்தில் உம்மி மக்தூமையும், உம்மி மக்தூம் இடத்தில் பிலாலையும் போட்டு ஏறுக்கு மாறாக அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பாளர் நம்பகமானவர் என்றாலும் இத்தகைய தவறுகளிலிருந்து அப்பாற்பட்டவர்கள் இருக்கவே மாட்டார்கள்.

இது போன்ற ஹதீஸ்களையும் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது.

கருத்தில் இப்படி ஏற்படுவது போல் அறிவிப்பாளர் விஷயத்திலும் ஏற்படலாம். ஆசிரியரிடத்தில் மாணவரையும் மாணவர் இடத்தில் ஆசிரியரையும் போட்டு விடுவதுண்டு.

3. மஜ்ஹூல் (யாரென அறியப்படாதவர்கள்)

ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் வரலாற்றுக் குறிப்பு இருக்க வேண்டும். அவ்வாறில்லாதவர்கள் மஜ்ஹூல் எனப்படுவர்.

இஸ்மாயீலின் மகன் ஈஸா என்பவர் அறிவித்ததாக நம்பகமானவர் கூறுகின்றார். நமது சக்திக்கு உட்பட்டு தேடிப் பார்த்தால் அப்படி ஒருவர் பற்றிய எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். இவர் மஜ்ஹூல் எனப்படுவார்.

அல்லது இப்படி ஒருவர் இருந்ததாகத் தெரிகின்றது. ஆனால் அவர் எப்போது பிறந்தார்? எப்போது மரணித்தார்? அவரது நம்பகத்தன்மை எத்தகையது? அவரது நினைவாற்றல் எப்படி? என்ற எந்த விபரமும் கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். இவரும் மஜ்ஹூல் தான்.

ஒருவர் நம்பகமானவர் தானா? என்பதைத் தீர்மானிப்பதற்குத் தேவையான தகவல் கிடைக்கப் பெறாத ஒவ்வொருவரும் மஜ்ஹூல் எனப்படுவர்.

இத்தகையோர் அறிவிக்கும் ஹதீஸ்களும் ஆதாரமாகக் கொள்ளப்படாது. இதன் அடிப்படையில் எந்தச் சட்டமும் எடுக்கப்படக் கூடாது.

இதுவரை பலவீனமான ஹதீஸ்கள் எவ்வாறு வகைப்படுத்தப் பட்டுள்ளன என்ற விபரத்தைப் பார்த்தோம்.

யாரைப் பற்றிய செய்தி என்பதைப் பொறுத்தும் ஹதீஸ்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

யாருடைய சொல், செயல், அங்கீகாரம் அறிவிக்கப்படுகின்றது என்ற அடிப்படையில் ஹதீஸ்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்ட செய்திகளை மர்ஃபூவு என்றும், நபித்தோழர்கள் சம்பந்தப்பட்டதை மவ்கூஃப் என்றும், அதற்கடுத்த தலைமுறையினர் சம்பந்தப்பட்டதை மக்தூவு என்றும் கூறப்படும்.

இதை விரிவாகப் பார்ப்போம்.

1. முஸ்னத், மர்ஃபூவு

முஸ்னத் என்றால் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர்கள் முழுமைப்படுத்தப்பட்டது என்று பொருள். மர்ஃபூவு என்றால் சேரும் இடம் வரை சேர்ந்தது என்று பொருள்.

முஸ்னத் என்பது அறிவிப்பாளரின் நம்பகத்தன்மையின் அடிப்படையில் சூட்டப்பட்ட பெயர் இல்லை. நபி (ஸல்) அவர்களுடன் தொடர்பு படுத்திக் கூறப்படும் செய்திகளா? இல்லையா? என்ற அடிப்படையில் கூறப்பட்டது தான்.

முஸ்னதாக இருக்கும் ஹதீஸின் அறிவிப்பாளர்களில் அனைவருமோ அல்லது ஒருவரோ நம்பிக்கைக்குரியவராக இல்லாதிருக்கலாம். எனவே அது முஸ்னதாக இருந்தும் ஏற்கத்தகாத ஹதீஸாகி விடும்.

மர்ஃபூவு என்பதும் ஏறக்குறைய முஸ்னதைப் போன்றது தான். எனினும் இரண்டுக்கும் சிறிய வித்தியாசம் உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக - செய்ததாக அறிவிக்கப்படும் ஒரு ஹதீஸின் இடையில் எந்த அறிவிப்பாளரும் விடுபடாமல் இருந்தால் அது முஸ்னத் எனப்படும்.

மர்ஃபூவு எனக் கூறுவதற்கு இந்த நிபந்தனை இல்லை. அறிவிப்பாளர் இடையில் விடுபட்டிருக்கலாம். அல்லது விடுபடாமல் இருக்கலாம். ஆனால் நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது தான் மர்ஃபூவு என்பதன் முக்கிய நிபந்தனையாகும்.

மர்ஃபூவு எனக் கூறப்படும் ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடரும் ஆய்வு செய்யப்பட வேண்டும். மர்ஃபூவு என்று கூறியவுடன் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது.

2. மவ்கூஃப்

சில ஹதீஸ்கள் மவ்கூஃப் என்று கூறப்படும். தடைப்பட்டு நிற்பது என்பது இதன் பொருள். இவை அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மையின் அடிப்படையில் சூட்டப்பட்டதன்று.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல்லையோ, செயலையோ, அங்கீகாரத்தையோ அறிவிப்பவை தான் ஹதீஸ்கள் எனப்படும்.

அவ்வாறு இல்லாமல் ஒரு நபித்தோழர் இவ்வாறு செய்தார். இவ்வாறு சொன்னார் என்று ஒரு செய்தி அறிவிக்கப்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம். இச்செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படவில்லை. இவ்வாறு அமைந்தவை தான் மவ்கூஃப் எனப்படும்.

நம்பகமான அறிவிப்பாளர் வழியாக இது அறிவிக்கப்பட்டால் அந்த நபித்தோழர் அவ்வாறு கூறியது உண்மை என்று எடுத்துக் கொள்ளலாம். அதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் இல்லை என்றால் அந்த நபித்தோழர் அவ்வாறு கூறியிருக்க முடியாது என்று கருதிக் கொள்ளலாம்.

நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக நபித்தோழர் கூறியது நிரூபிக்கப்பட்டாலும் மார்க்கத்தில் அதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

அல்லாஹ்வும் அவனது திருத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறியவை மட்டும் தான் ஆதாரமாக ஆக முடியும். மற்றவர்களின் கூற்று எவ்வளவு நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் நபித்தோழர்களின் கூற்று என்பது தான் உறுதியாகுமே தவிர அது நபிகள் நாயகத்துடன் சம்பந்தப்படாது.

சில செய்திகள் மேலோட்டமாகப் பார்க்கும் போது மவ்கூஃப் போன்று தோற்றமளித்தாலும் அதை மவ்கூஃப் என்று கூற முடியாத வகையில் அமைந்திருக்கும்.

நாங்கள் நபி (ஸல்) காலத்தில் இப்படிச் செய்தோம்''

எங்களுக்கு இவ்வாறு கட்டளையிடப் பட்டிருந்தது'' என்பது போன்ற வாசகங்களைப் பயன்படுத்தி நபித்தோழர்கள் அறிவித்துள்ளனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாரும் நபித்தோழர்களுக்கு மார்க்கக் கட்டளை பிறப்பித்திருக்க முடியாது.

நபி (ஸல்) காலத்தில் நபித்தோழர்கள் ஒன்றைச் செய்தார்கள் என்று கூறப்பட்டால் அது நபி (ஸல்) அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டும் தடுக்கவில்லை என்று பொருள் கொள்ள வேண்டும். எனவே இதை மவ்கூஃப் என்று கூறக்கூடாது என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். சிலர் இதற்கு மாற்றுக் கருத்தும் கொள்கின்றனர்.

மவ்கூஃபுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் சொல் முஸ்னத் என்பதாகும்.

முஸ்னத் என்றால் நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்ட செய்தியாகும். மவ்கூஃப் என்றால் நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப்படாத செய்தி என்று பொருள்.

3. மக்தூவு (முறிக்கப்பட்டது)

நபித்தோழர்களின் சொல் செயல்களைக் கூறும் ஹதீஸ்கள் மவ்கூஃப் என்று கூறுவது போல் நபித்தோழர்களுக்கு அடுத்த தலைமுறையினரான தாபியீன்களின் சொல் செயல்களைக் கூறும் ஹதீஸ்கள் மக்தூவு எனப்படும். நபித்தோழர்களின் கூற்றே மார்க்க ஆதாரமாக ஆகாது எனும் போது அவர்களுக்கு அடுத்த தலைமுறையினரின் சொல்லோ செயலோ மார்க்க ஆதாரமாக ஆகாது என்பதில் சந்தேகம் இல்லை.

எத்தனை நபர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் ஹதீஸ்கள் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

1. முதவாதிர் (ஒருமித்து அறிவிக்கப்படுவது)

ஒரு செய்தியை ஒருவர், இருவர் அல்ல, ஏராளமானவர்கள் அறிவிக்கின்றனர். ஒவ்வொரு கால கட்டத்திலும் இவ்வாறு ஏராளமானவர்கள் அறிவித்துள்ளனர் என்றால் இத்தகைய செய்திகளை முதவாதிர் என்று கூறுவர்.

மக்கா எனனொரு நகரம் உள்ளது என்பதை ஒவ்வொரு காலகட்டத்திலும் எண்ணற்றவர்கள் அறிவித்துள்ளனர். பத்ருப் போர் என்றொரு போர் நடந்தது என்பது இதுபோல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்திகள் ஹதீஸ்களிலேயே மிகவும் பலமானவை. எக்காரணம் கொண்டும் நிராகரிக்கப்பட முடியாதவை.

நம்பகமான ஒருவர் மூலம் உங்களுக்கு ஒரு ஹதீஸ் கிடைக்கின்றது. அதை நீங்கள் ஒரு லட்சம் பேருக்கு அறிவிக்கின்றீர்கள். அந்த ஒரு லட்சம் பேரும் அடுத்த தலைமுறையினருக்கு அறிவிக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். இது முதவாதிர் என்று கருதப்படாது. ஏனெனில் அந்த ஒரு லட்சம் பேரும் உங்கள் ஒருவர் வழியாகத் தான் அறிந்தனர். நீங்கள் ஒரே ஒருவர் மூலமாகத் தான் அறிந்தீர்கள். எல்லா மட்டத்திலும் ஏராளமான பேர் அறிவித்தால் மட்டுமே அதை முதவாதிர் எனலாம்.

நபி (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்தது என்பதை ஏராளமான நபித்தோழர்கள் அறிவித்தனர். அவர்களிடம் கேட்ட ஏராளமான தாபியீன்கள் ஏராளமான தபவுத் தாபியீன்களுக்கு அறிவித்தனர். இப்படியே தொடர்ந்து இந்தச் செய்தி நம்மை வந்தடைந்துள்ளது. இன்றைக்கு 150 கோடி முஸ்லிம்களும் இந்தச் செய்தியை அடுத்த தலைமுறையினருக்கு அறிவிக்கின்றார்கள். இது தான் முதவாதிர் எனப்படும்.

குர்ஆனை அல்லாஹ்வுடைய வேதம் என்று முதவாதிரான ஹதீஸ்களின் துணையுடன் நம்புகிறோம்.

இப்படி அமைந்த ஹதீஸ்கள் மிகவும் அரிதாகவே உள்ளன. அதற்கு உதாரணம் காட்டும் அறிஞர்கள் அனைவரும், யார் என் பெயரால் ஒரு செய்தியை இட்டுக் கட்டிக் கூறுகின்றாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்'' என்ற ஹதீஸைத் தான் உதாரணம் காட்டுகின்றனர். இதை அறுபதுக்கும் மேற்பட்ட நபித்தோழர்கள் அறிவித்துள்ளனர். இப்படியே தலைமுறை தோறும் எண்ணற்றவர்கள் வழியாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.

2. ஹபருல் வாஹித் (தனிநபர் அறிவிப்பது)

இவ்வாறு அமையாத ஹதீஸ்களை ஹபருல் வாஹித் என்பர். தனிநபர்களின் அறிவிப்பு என்பது இதன் பொருள்.

இதையும் பல வகைகளாகப் பிரித்துள்ளனர். மஷ்ஹூர், கரீப், அஸீஸ் என்று பல வகைகளாகப் பிரித்துள்ளனர்.

இவையெல்லாம் எத்தனை அறிவிப்பாளர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் உள்ளனர் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டவையாகும். நம்பகமானவர்களா? இல்லையா? என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டவை அல்ல.

எந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்ளலாம்? என்பதை அறிந்திட மேற்கண்ட விபரங்களே போதுமானவையாகும். இவை தவிர இன்னும் பல அம்சங்களைக் கருத்தில் கொண்டு ஹதீஸ்களை வகைப்படுத்தியுள்ளனர். விரிவஞ்சி அவற்றைத் தவிர்த்துள்ளோம்.

ஆதார நூற்கள்

இதுவரை நாம் கூறிய விபரங்களில் வேறு விதமான விளக்கங்களும் கூறப்பட்டுள்ளன. இப்னு ஜமாஆ, சுயூத்தி ஆகிய அறிஞர்களின் வகைப்படுத்துதலே எளிமையாக உள்ளதால் அதன் அடிப்படையிலேயே இந்த விபரங்களை முன் வைத்துள்ளோம். சுயூத்தியின் தத்ரீபுர்ராவீ, இப்னு ஜமாஆவின் அல்மன்ஹல் ஆகிய நூற்களே இக்கட்டுரைக்கு ஆதாரமாகக் கொள்ளப்பட்டுள்ளன.

ஹதீஸ் கலையின் விதிகளை தெளிவுபடுத்தி வெளியிட்ட இக்கட்டுரையில் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்று தெளிவாகவே நாம் குறிப்பிட்டுள்ளோம். இவ்வாறு தெளிவாக எழுதப்பட்டிருந்தும் இந்த நூலுக்கு அபூபக்கர் சித்தீக் மதனி மதிப்புரை தந்துள்ளார். அவர்கள் சார்பில் இந்நூலை வரவழைத்து விற்பனை செய்கிறார்கள். அவர்களுக்கும் இக்கொள்கை சரியானது என்பது தெரிந்தே இருந்துள்ளது. நம்மை எதிர்ப்பதற்காகவே வலிந்து தங்கள் நிலையை மாற்றிக் கொண்டு இப்போது முழிக்கின்றனர். பால் குடி தொடர்பான ஹதீஸ் குறித்து நாம் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்பது தெரியாமல் விழிக்கின்றனர். பத்து வருடம் யோசித்தாலும் ஏற்கத்தக்க பதிலை அவர்கள் கூற முடியாத நிலையை அவர்களே ஏற்படுத்திக் கொண்டனர்.

28.09.2009. 03:43




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
80 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி