எடுபடாத வாதங்கள்
எடுபடாத வாதங்கள்
எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே
அன்புள்ள சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். ஜூலை 4 மாநாடு அல்லாஹ்வின் அருளால் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அல்ஹம்து லில்லாஹ்.
மாநாடு குறித்த முழு விபரங்களை நிர்வாகிகள் அறிவிப்பார்கள். இது குறித்த சில வாதங்களுக்கு மட்டும் நான் விளக்கம் அளிப்பதற்காக இந்த மடலை எழுதுகிறேன்.
இந்த மாநாட்டுக்கு மக்கள் வந்துவிடக் கூடாது என்பதற்காகப் பல விதமான தந்திரங்களைச் சிலர் கையாண்ட போதும் அவை மக்களிடம் எடுபடவில்லை.
இட ஒதுக்கீட்டுக்காக நாங்கள் பல மாநாடுகளை நடத்தி விட்டோம். எனவே மக்கள் செல்ல வேண்டாம் என்று பாப்புலர் பிரண்ட் இயக்கத்தினர் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தனர். இந்தப் பிரச்சாரத்தை மக்கள் அடியோடு நிராகரித்து விட்டனர்.
இட ஒதுக்கீடு ஹராம் என்று ஷம்சுத்தீன் காசிமி செய்த பிரச்சாரமும் எடுபடவில்லை. இவர் இட ஒதுக்கீடு அவசியம் என்பதை வலியுறுத்துவதற்காக ஜெயலலிதாவைச் சந்தித்த குழுவில் இடம் பெற்றவர் என்பதால் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இதை எதிர்க்கிறார் என்று மக்கள் கருதியதால் இவரது பிரச்சாரம் கடுகளவு கூட எடுபடவில்லை. இவர் இமாமாக இருக்கும் பள்ளிவாசலின் நிர்வாகி மெஜஸ்டிக் கரீம் அவர்கள் நமது மாவட்ட நிர்வாகிகளிடம் 5000 ரூபாய் மாநாட்டுக்காக நன்கொடை கொடுத்தார் என்றால் இவரது பிரச்சாரத்துக்கு உள்ள மதிப்பை எடை போட்டுக் கொள்ளலாம்.
ஜாக் இயக்கமும் மாநாட்டுக்கு எதிராகச் சில வாதங்களை முன் வைத்து ஜும்மா உரைகளில் மாநாட்டுக்குச் செல்ல வேண்டாம் என்று பிரச்சாரம் செய்தது.
நாம் உயர்ந்த சமுதாயம். ஆனால் இவர்கள் ஒடுக்கப்பட்டோர் என்று கூறுகின்றனர் எனவே மாநாட்டுக்குச் செல்ல வேண்டாம் என்பது இவர்கள் கண்டு பிடித்த காரணம்.
சிறந்த சமுதாயம் என்பதும் ஒடுக்கப்பட்டோர் என்பதும் முரண்பாடானது அல்ல. சிறந்த சமுதாயம் தான் உலகில் ஒடுக்கப்படும். நபிமார்கள் ஒடுக்கப்பட்டதால் அவர்கள் சிறந்தவர்கள் இல்லை என்று ஆகாது என்ற வித்தியாசம் மக்களுக்குத் தெரிந்ததால் இவர்களின் பிரச்சாரம் எடுபடவில்லை. மேலும் இவர்களே தங்கள் பிள்ளைகளைக் கல்விக் கூடங்களில் சேர்க்கும் போது பிற்பட்டோர் என்று சான்றிதழ் பெறுவதால் இவர்கள் காழ்ப்புணர்ச்சியில் தான் கூறுகிறார்கள் என்பதை மக்கள் விளங்கிக் கொண்டனர். இதனால் இதுவும் எடுபடவில்லை.
என்னை எதிர்க்க வேண்டும் என்பதற்காக காதியானிகளை முஸ்லிம்கள் என்று கூறும் அளவுக்கு மனநோய் முற்றிய அபூ அப்துல்லா என்பவரின் பிரச்சாரமும் வழக்கம் போல் எடுபடவில்லை.
அடுத்ததாக மிகவும் கேவலமான செயலில் ஈடுப்பட்டவார்கள் பொய்யன் பாக்கரின் கும்பல்.
பொய்யன் பாக்கர் என்று நான் எனது சொந்த இணைய தளத்தில் நேருக்கு நேராகத் தான் குறிப்பிட்டுள்ளேன். அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து பொய் சொல்வதில் இவரை மிஞ்ச ஆள் இல்லை என்பதால் இந்தப் பட்டம் இவருக்குப் பொருத்தமானது தான். தன் பெயரைப் பயன்படுத்தி நேருக்கு நேர் குற்றம் சொல்ல வக்கில்லாமல் காசுக்காக எதையும் செய்யும் கேடு கெட்ட ஒருவன் மூலம் அவதூறு பரப்பும் பொய்யன் பாக்கர் போல் யாருடைய முதுகுக்குப் பின்னாலும் நான் ஒளிந்து கொண்டு இப்படி கூறவில்லை.
பொய்யன் பாக்கர் மாநாட்டுக்கு எதிராக எழுப்பிய பயங்கரமான கேள்வி பெண்கள் மாநாட்டுக்குச் செல்லலாமா? என்பது தான். இதற்கு பல முறை ஆதாரத்துடன் பதில் சொல்லப்பட்டு விட்டது.
அன்னியப் பெண்ணுடன் தனியாகப் பயணம் செய்யலாம் என்று பத்வா கொடுக்கும் கூட்டம் இப்படிக் கூறுவதை மக்கள் பைத்தியக்காரனின் உளறல் என்றே எடுத்துக் கொண்டனர். மேலும் இதே பொய்யன் பாக்கர் பெண்களைக் கேடயமாக்கிக் கொண்டு டிசம்பர் ஆறில் நடத்திய போராட்டமும் மக்களுக்கு மறந்திடவில்லை. இது தவிர பொய்யன் பாக்கர் நீக்கப்படுவதற்கு முன்னர் நடத்தப்பட்ட மாநாடுகளுக்கும் பெண்கள் அழைக்கப்பட்டதும் மக்களுக்குத் தெரிந்ததால் இந்த வாதம் எடுபடவில்லை.
அதிராம்பட்டிணத்தில் இந்த வாதத்தை எடுத்து வைத்து மாநாட்டுக்குப் பெண்கள் போக வேண்டாம் என்று பிரச்சாரம் செய்த போது பொது மக்களே மேடையில் ஏறி பொம்பளப் பொறுக்கி பாக்கர் பெண்கள் பற்றி பேசுகிறாயா என்று மைக் பிடித்து கேள்வி கேட்கும் அளவுக்கு இந்த வாதம் பைத்தியக்காரத் தனமானதாக மக்களால் கருதப்பட்டது.
தேர்தல் நெருங்குவதால் தான் இந்த மாநாடு இப்போது நடத்தப்படுகிறது என்ற வாதமும் பொய்யன் கூட்டத்தால் பரப்பப்பட்டது. எந்தக் கோரிக்கையை எடுத்து வைப்பதாக இருந்தாலும் அதற்குரிய நேரம் பார்த்துத் தான் எடுத்து வைக்க வேண்டும். ஓட்டுப் பொறுக்கும் அரசியலில் தேர்தல் நெருங்கும் போது தான் கோரிக்கைகள் மதிக்கப்படும் என்பதை மக்கள் விளங்கி வைத்திருந்ததால் இந்த வாதம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
தவ்ஹீத் ஜமாஅத் பதவிகளைப் பெறாது; தேர்தலில் நிற்காது என்பதை தவ்ஹீத் ஜமாஅத்தின் எதிரிகளும் விளங்கி வைத்துள்ளதால் இது போன்ற வாதம் எந்தக் காலத்திலும் எடுபட்டதில்லை.
தீவுத்திடலின் நீள அகலம் குறித்தும் கேள்விகளை எழுப்பி பொய் சொல்லி அழைப்பதால் போகாதீர்கள் என்றும் பொய்யன் பாக்கர் கும்பல் பரப்பியது. ஷம்சுத்தீன் காசிமியும் இந்த வாதத்தை எடுத்து வைத்தார்.
பொய்யனைத் தவிர மற்றவர்கள் இதை எழுப்பினால் இந்த வாதம் மக்களால் கவனிக்கப்பட்டிருக்கலாம். பொய்யன் பாக்கர் கூறுயதால் இதுவும் எடுபடவில்லை. ஏனெனில் தீவுத்திடலை விட பல மடங்கு குறைவான இடம் கொண்ட கும்பகோனத்தில் பத்து லட்சம் பேர் கூடியதாக இதே பொய்யன் பாக்கர் அடித்தொண்டையில் கூறியது மக்களுக்கு இன்னும் மறக்கவில்லை.
மேலும் தீவுத்திடலை விடப் பல மடங்கு சிறிய இடம் கொண்ட வல்லத்தில் பத்து லட்சம் பேர் கூடியதாக பொய்யன் பாக்கர் கத்தியதும் மக்களுக்கு இன்னும் மறக்கவில்லை.
இவர்கள் இப்போது எடுத்துக் காட்டும் நீள அகலக் கணக்குகள் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்ட ஆத்திரத்தின் வெளிப்பாடு என்பது ஒருவருக்கும் தெரியாததல்ல.
இன்னொரு காரனத்தினாலும் இந்த வாதம் எடுபடாமல் போனது.
மிகைப்படுத்திக் கூறுதல் மார்க்கத்தில் தடுக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் போர்க்களத்தில் மிகைப்படுத்திக் கூற அனுமதி உண்டு. எதிரி நாட்டுடன் யுத்தம் செய்யும் போது நம்முடையை படையில் ஒரு லட்சம் பேர் இருந்தால் பல லட்சங்கள் இருப்பதாகக் கூறலாம். அதுவே எதிரிகளுக்குப் பாதி அச்சத்தை ஏற்படுத்தி விடும். படை எண்ணிக்கை ஆயுத பலம் பற்றி பேசும் போது இத்தகைய வழிமுறையைத் தான் அனைவரும் கடைப்பிடிக்கின்றனர். மார்க்கமும் இதை அனுமதிக்கிறது.
நியாயத்துக்காக அரசை எதிர்த்துப் போராடுவதும் ஜிஹாத் என்பது இஸ்லாத்தின் நிலைபாடு.
அரசாங்கம் தொடர்ந்து முஸ்லிம்களைப் புறக்கணித்து வரும் அநியாயத்தைத் தட்டிக் கேட்கும் போராட்டங்களில் அனைத்து இயக்கத்தினரும் எண்ணிக்கை விஷயத்தில் மிகைப்படுத்தியே கூறுவார்கள். கூறியுள்ளனர். வந்த மக்களின் தலையை எண்ணி எந்த இயக்கத்தினரும் கூறுவது கிடையாது. பொய்யன் பாக்கர் இதில் அனைவரையும் மிஞ்சியவர் என்பது மக்களுக்குத் தெரியும்.
இந்த விஷயத்தில் திடலின் நீள அகலத்தை அளப்பவர் யாராக இருந்தாலும் அவர்கள் கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீடு கிடைக்காமல் செய்து சமுதாயத்துக்குத் துரோகம் செய்தவர்களே.
ஆனால் பத்து பேர் கூடும் போது ஒரு லட்சம் என்று பொய்யன் பாக்கர் போல் ஓவராக மிகைப்படுத்தினால் அது கேலிக்கூத்தாகி விடும். ஐநூறு பேர் இருந்தால் அது மக்கள் பார்வையில் ஆயிரமாக மதிப்பிடப்படுவதால் ஆயிரம் என்று கூறி அதனால் சமுதாயத்தின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றால் அந்த மிகைப்படுத்துதல் போர் என்ற வகையில் அனுமதிக்கப்பட்டதே.
மாநாடு நடப்பதற்கு முன் நம்முடைய எதிர்பார்ப்பைச் சொல்வது பாரதூரமானது அல்ல. நடந்து முடிந்த ஒன்றை நம்ப முடியாத அளவுக்கு மிகைப்படுத்துவது தான் பாரதூரமானது. டிசம்பர் ஆறில் ஆயிரக்கணக்கான மக்கள் கைது என்று பாக்கர் புளுகியது போல் தவ்ஹீத் ஜமாஅத் புளுகியதில்லை.
இனி மேல் யார் நடத்தும் போராட்டமானாலும் அதில் கலந்து கொண்டவர்கள் குறித்து கேள்வி எழுப்பி கோரிக்கையை வென்றெடுப்பதற்கு முட்டுக்கட்டை போடும் வழக்கத்தை பொய்யன் பாக்கர் கும்பல் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இன்னொரு காரணத்தினாலும் பொய்யன் பாக்கரின் பிரச்சாரம் எடுபடாமல் போனது.
தீவுத்திடலின் கொள்ளளவை மட்டும் கருத்தில் கொண்டு மாநாடு நடத்தப்படவில்லை. தீவுத்திடலுக்குள் மக்கள் கொள்ளாமல் எந்த அளவுக்கு பிதுங்கி வெளியேயும் நிரம்பி வழிகிறதோ அந்த அளவுக்கு கோரிக்கை வலுப்பெறும் என்ற அடிப்படையில் தான் இவ்வாறு அழைப்பு விடப்பட்டது. தீவுத்திடலுக்குள் மக்கள் நிரம்பிய பின் அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் நீளமுள்ள உள்ள நான்கு வழிச் சாலை முழுவதும் மக்கள் அடர்த்தியாக நின்றனர். அது மட்டுமின்றி நெருக்கமாக இல்லாமல் கடற்கரை வரை மக்கள் கூட்டம் இருந்தது. இதை எல்லாம் கணக்கில் கொண்டு தான் நாம் மதிப்பிட்டோம்.
ஆனால் அதிகாரிகள் எவ்வளவு பேர் வருவார்கள் என்று கேட்டால் பதினைந்தாயிரம் பேர் என்று தான் கூறினோம்.
பேரணி முடிந்த பின் பதினந்தாயிரம் எனக் கூறி ஆறு லட்சம் பேரை அழைத்து வந்து விட்டீர்கள். இனி மேல் சென்னைக்குள் உங்கள் ஜமாஅத்துக்கு மாநாட்டு அனுமதி அளிப்பது பற்றி யோசிக்க வைத்து விட்டீர்கள் என்று உயர் அதிகாரிகள் கூறினார்கள்.
பொய்யன் கூட்டம் நீள அகலம் குறித்து பிரச்சாரம் செய்த போது ரோட்டையும் நிரப்புவோம் என்று அப்போது பதில் கூறினால் உடனடியாக மாநாட்டுக்கு வழங்கப்பட்ட அனுமதி மறுக்கப்படும் என்பதால் மாநாடு முடியும் வரை மவுனம் காத்தோம். ரோட்டை நிரப்பி கடற்கரை வரை மக்களைக் கூட்டுவோம் என்று அப்போது நாம் கூறி இருந்தால் மாநாட்டின் அனுமதியை மறுக்க இதை விட சிறந்த காரணம் காவல் துறைக்குத் தேவை இல்லை. எதை எப்போது சொல்ல வேண்டும் என்பது எமக்குத் தெரியும்.
அதே நேரத்தில் இவர்கள் பரப்பியது போல் தீவுத்திடல் அவ்வளவு சிறியதும் அல்ல. தீவித்திடலைப் போல் நான்கு மடங்கு மக்கள் வெளியே இருந்தனர். இதையெல்லாம் எதிர்பார்த்துத் தான் திடலுக்குள் மட்டும் எல் ஈ டி திரை வைக்காமல் மன்றோ சிலை வரை மாபெரும் வீடியோ திரைகள் இரண்டு அமைத்தோம்.
வாகனங்களை பார்க்கிங் செய்வதற்காக ஏழு பகுதிகளை ஒதுக்கி இருந்ததும் இதன் காரணத்தினால் தான்.
சமுதாயத்தின் முக்கிய கோரிக்கையை வென்றெடுப்பதற்காக ஒரு போர் நடக்கும் போது மக்கள் எண்ணிக்கையை உள்ளதை விட பல மடங்கு குறைத்துக் காட்டும் இவர்கள் சமுதாயத்தின் துரோகிகளே.
பண வசூலுக்காக இந்த மாநாடு நடக்கிறது என்றும் பொய்யன் பாக்கர் கும்பலால் வாதிடப்பட்டது. பண வசூல் செய்யாமல் மாநாடு நடத்த முடியாது. இதில் எந்த ஒளிவு மறைவும் கிடையாது. ஆனால் பண விஷயத்தைப் பொருத்தவரை தவ்ஹீத் ஜமாஅத்தில் தனி நபர்கள் தன்னிச்சையாகக் கையாள முடியாது. பொருளாளர் சாதிக் மற்றும் மாநில நிர்வாகிகள் அனைவரின் ஒப்புதலுடன் தான் நிதியாதாரத்தைக் கையாள முடியும். ஐந்தாயிரம் ரூபாய்க்கு உட்பட்ட செலவு என்றால் தலைவர், பொதுச் செயலாளர் பொருளாளர் என மூவர் ஒப்புதலுடன் தான் செலவிட முடியும். ஐந்தாயிரம் ரூபாய்க்கும் மேல் செலவிடுவதாக இருந்தால் அனைத்து நிர்வாகிகள் ஒப்புதல் பெற்றாக வேண்டும் என்பது தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகக் குழுவின் முடிவு. இதில் எந்த முறைகேடும் நடக்காதவாறு கண்கானிக்க அதிகாரம் படைத்த தணிக்கைக் குழுவும் இருக்கிறது.
மாநாட்டைச் சீர்குலைக்க பொய்யன் பாக்கர் கும்பல் இன்னொரு வாதத்தையும் எடுத்து வைத்தது. ஷிர்க் பித்அத் என்று காரணம் கூறி மக்களைத் திட்டி விட்டு இப்போது அனைத்து முஸ்லிம்களையும் அழைப்பது என்ன நியாயம் என்று பொய்யன் பாக்கர் கும்பல் பிரச்சாரம் செய்தது. இதே பிரச்சாரத்தை ஷேக் அப்துல்லா ஜமாலி கூட்டமும் சுவரொட்டி அடித்து பிரச்சாரம் செய்தது
இதுவும் எடுபடவில்லை. காரணம் பொய்யன் பாக்கரைப் பொருத்த வரை இதைக் கூற தகுதி இல்லை. ஏனெனில் தஞ்சை கும்பகோனம் ஆகிய மாநாடுகளின் போது பொய்யன் பாக்கர் இது போல் அனைவரையும் அழைத்துள்ளதால் இது காழ்ப்புணர்ச்சியினால் எடுத்து வைக்கப்படும் வாதம் என்பது மக்களுக்கு நன்றாகாவே புரிந்தது.
மார்க்க விஷயத்தில் வேறுபாடு இருந்தாலும் இட ஒதுக்கீடு போன்ற விஷயங்களில் தவ்ஹீத் ஜமாஅத் போல் யாரும் தூய்மையாகச் செயல் பட மாட்டார்கள் என்று கொள்கையில் மாறுபட்ட முஸ்லிம்களும் நம்பிக்கை வைத்துள்ளதால் அனைவரையும் நாம் அழைத்தோம். யார் எதைச் சரியாகச் செய்வார்கள் என்பது மக்களுக்குத் தெரிந்திருப்பதை முன்னரே நான் அனுபவ வாயிலாகக் கண்டறிந்துள்ளோம். எனவே தான் மக்களை அழைத்தோம். தொன்னூறு சதம் பள்ளிவாசல்களில் இது குறித்து ஜும்மாவில் அறிவிப்பு செய்தனர். ஷேக் அப்துல்லா ஜாமாலி இயக்கத்தின் நிர்வாகி இமாமாக இருக்கும் பள்ளி வாசலிலும் நிர்வாகிகள் இது குறித்து அறிவிப்புச் செய்தனர்.
அதே நேரத்தில் முஸ்லிம் இயக்கத் தலைவர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் மீது நம்பிக்கை இல்லை. அதனால் முஸ்லிம் இயக்கத் தலைவர்களில் தவ்ஹீத் ஜமாஅத் மீது நம்பிக்கை இல்லாதவர்களை அழைக்க வேண்டாம். மக்களும் ஜமாஅத் தலைவர்களும் இந்த ஜமாஅத் மீது நம்பிக்கை வைத்துள்ளதால் அவர்களை நாம் அழைத்தோம்.
பொய்யன் கூட்டத்தினர் மட்டும் வர வேண்டாம் எனவும் அறிவிப்புச் செய்தோம். பொய்யன் கூட்டத்தில் நாடு முழுவதும் 300 பேர் கூட தேற மாட்டார்கள். பொய்யனின் கேவலமான செயல்களை அறிந்த பின்னும் அவரை ஆதரிப்பவர்களை பெண்கள் அதிகமாகக் கூடும் இடங்களுக்கு அழைக்காமல் இருப்பது தான் பாதுகாப்பானது
மாநாட்டை எப்படியாவது சீர் குலைக்க வேண்டும் என்பதற்காக பிஜே என்ற தனிப்பட்ட என்னைப் பற்றியும் அவதூறுகளைப் பரப்பியது பொய்யன் பாக்கர் கூட்டம்.
மாநாட்டை பீஜே நடத்தவில்லை. பீஜே நிர்வாகியாகவும் இல்லை. பீஜே மாநாட்டுக் குழுவிலும் இல்லை. அரசியல் தலைவர்களைச் சந்தித்து அழைப்பு கொடுக்கும் பொறுப்பிலும் பீஜே இல்லை. பீஜே அழைக்கிறார் என்று மாநாட்டுக்கு அழைப்பு கொடுக்கப்படவும் இல்லை. மாநாட்டை தவ்ஹீத் ஜமாஅத் என்ற இயக்கம் தான் நடத்தியது.
பொறுப்பு எதுவும் எனக்கு இல்லாவிட்டாலும் நிர்வாகிகள் எனது ஒத்துழைப்பைக் கேட்டால் என்னால் இயன்ற அளவுக்கு வழங்கி வருகிறேன். முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு என்பதால் எனது ஒத்துழைப்பை வழங்கினேன். மாவட்டம் தோறும் நடத்தப்பட்ட செயல் வீரர்கள் கூட்டங்களிலும் கலந்து கொண்டேன். மாநாட்டு ஏற்பாடுகளில் எனது ஆலோசனையைக் கேட்டால் மட்டும் ஆலோசனை வழங்கினேன்.
ஆனாலும் என்னைப் பற்றி அவதூறு பரப்பினால் நான் ஒதுங்கி விடுவேன்; அதனால் மாநாடு தோல்வியடைந்து விடும் என்பது பொய்யன் பாக்கரின் எண்ணம்.
நான் எந்த ஒத்துழைப்பும் கொடுக்காவிட்டாலும் மாநாடு வெற்றி பெறும். இது தனி நபரைச் சார்ந்து நிற்கும் ஜமாஅத் அல்ல.
பொய்யன் பாக்கரும் நமது எதிரிகளும் தான் என்னை மையப்படுத்தியதாக இந்த ஜமாஅத்தைப் பற்றி சித்தரிக்கிறார்களே தவிர தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலை இதுவல்ல.
மேலும் அவதூறுப் பிரச்சாரங்கள் செய்யப்படும் போது முன்னை விட முனைப்பாக செயல்படுவதே என் இயல்பு. எனவே இதிலும் பொய்யன் பாக்கர் முயற்சி பலனளிக்கவில்லை.
தமுமுகவினர் கடந்த காலங்களில் நடந்து கொண்டது போல் இந்த மாநாட்டின் போது நடந்து கொள்ளவில்லை. ஒரு சில கிளைகளில் சிலர் பேனர்களைக் கிழித்து எறிந்தது தவிர பரவலாக அவர்கள் அமைதியாக இருந்து விட்டனர். பொய்யன் பாக்கரை விட தமுமுகவினர் ஆயிரம் மடங்கு மேலானவர்கள் என்று அடித்துச் சொல்லும் அளவுக்கு பாக்கரின் தரம் கெட்ட நடவடிக்கைகள் அமைந்துள்ளன. தமுமுக மீது இதுவரை நாம் கூறியதை மாற்றிக் கொண்டதாக இதைப் புரிந்து கொள்ள வேண்டாம். லட்ச ரூபாய் திருடையவனை கோடி ரூபாய் திருடியவன் நல்லவனாக்கி விட்டான் என்று கூறினால் அது லட்ச ரூபாய் திருடியவனுக்குக் கொடுத்த நற்சான்று ஆகாது. அவனை விட பெரிய திருடன் ஒருவன் தலையெடுத்து விட்டான் என்றே அறிவு உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். தமுமுக மீது தவ்ஹீத் ஜமாஅத் வைத்த அனைத்து குற்றச் சாட்டுக்களும் அப்படியே உள்ளன.
என் மீது எவன் குற்றம் சாட்டினாலும் தெளிவாக என் முன்னே அதைச் சுமத்தி நிரூபிக்கத் தயாரா? என்பதை மட்டுமே இதற்கு நான் பதிலாகக் கூறினேன். மாநாடு முடியும் வரை இதைக் கண்டு கொள்ள வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தேன்.
ஆனால் இப்போது மாநாடு முடிந்து விட்டதால் பண விஷயமாக, பெண்கள் விஷயமாக, குடும்ப விஷயமாக அவதூறு பரப்பியவர்கள் அதற்குத் துணை நின்றவர்கள் அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை இன்ஷா அல்லாஹ் எடுக்கவுள்ளேன். பல பெயர்களில் ஒளிந்து கொண்டு எழுதி வரும் அந்த ஒரு பொய்யன் சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியாது என்பதைச் சொல்லிக் கொள்கிறேன். இன்ஷா அல்லாஹ் எனது பதிலடி எத்தகையதாக இருக்கும் என்பதை மிக விரைவில் அறிந்து கொள்வார்கள்.
இனி மேல் பொய்யன் பாக்கரின் உளறல்களுக்கு பதிலளிக்க இந்த இணைய தளம் பயன்படுத்தப்பட மாட்டாது. எந்த மேடையில் புளுகுகிறார்களோ அந்த மேடையில் ஏறி மக்கள் கேட்கும் கேள்விகளை பாக்கர் கும்பல் சந்தித்தாக வேண்டும்.
மாநாட்டுக்காக பொறுமை காத்ததை கோழைத்தனம் என்று எண்ணிக் கொண்டார்கள். அந்த நிலை இனி இருக்காது.
மேலும் எல்லாவிதமான அவதூறுகளும் சட்டப்படி எதிர் கொள்ளப்படும் இந்த இணைய தளம் மூலம் பதில் அளிக்கப்படாது என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
05.07.2010. 13:21
