பீஜே அவர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத்தில்

பீஜேக்கு தவ்ஹீத் ஜமாஅத்தில் அதிருப்தியா
 ASSALAAMU ALLAIKUM, ANNAN PJ AVARGALE BAAKER VIDAYATHIL NEENGAL IPOLUTHUM NADUNILAI VAKIPPATHAGAVUM, MELUM BAAKER ENTHA THAPPUM SEIYAVILLAI ENDRUM, M.I.SULAOMAN.AND ALTHAFI PONDROUR BAAKER MEEDU IRUNTHA PORAAMAI THAN BAAKERAI VELIYETRINAARGAL. MELUM UNGALUKUM THATPOTHAYA JAMATH(TNTJ) NIRUVAAGIGALUKUM IDAIYE PANIPPOR NADAI PERUGIRATHAM ATHANAAL THAN NEENGAL JUMMA NATHTHUWATILLAI AND RAMALAN SOTPOLIVU KOODA THALAMAI ALUVAGATHIL NADATHTHAAMAL VERU ORU IDATHIL IRUNDHU NADATHUKIREERGAL ENDRU ILLANGAIYIL IRUKKUM BAKERIN NANBARGAL KOORUGIRAARGAL.!!!!! UNMAIYAAA ?

பாக்கர் மீது தலைமை எடுத்த எல்லா நடவடிக்கையிலும் நான் உடன்படுகிறேன்.

நான் எதற்கு உடன்படவில்லயோ அதை வெளிப்படையாக அறிவித்து விடுவேன். நீக்கப்பட்டவர்கள் இப்போது நடந்து கொள்ளும் விதத்தைப் பார்க்கும் போது அவருக்கு அதிக வாய்ய்ப்பை வழங்கியது தவறு என்று இப்போது உணர்கிறேன்.. பொதுவாக தவ்ஹீதை அதன் முழுப் பரிமானத்துடன் சொல்ல ஒரு அமைப்பு இருக்க வேண்டும் என்பது தான் எனது நோக்கம்.

நான் தலைமைப் பொறுப்பில் இருந்து இயக்க வேண்டும் என்று நான் விரும்பியது இல்லை. அதன் அடிப்படையில் தான் தலைவர்கள் மாறிக் கொண்டே இருக்கும் வகையில் பைலாவை உருவாக்கி நிர்வாக மாற்றமும் செய்தோம்.

புதிய நிர்வாகம் அமைந்த பின் பெயரளவுக்குத் தான் நிர்வாக மாற்றம் நடந்துள்ளது; பீஜே தான் பின்னால் இருந்து இயக்குகிறார் என்று சிலர் விமர்சனம் செய்து புதிய நிர்வாகிகளின் மன உறுதியைக் குலைக்க முயன்றனர். நாம் சிரமப்பட்டு நிர்வாகப் பொறுப்பைச் சுமக்கும் போது நம்மைப் பொம்மைகளாகச் சித்தரிக்கிறார்களே என்று அவர்கள் நினைத்தால் அவர்களின் செயல்பாடுகள் பாதிக்கும் என்று நான் கருதினேன்.

இதனால் தான் ரமலான், ஜும்மா உரை உட்பட எதற்கும் நான் நான் தலைமை அலுவலகம் செல்வதில்லை. இந்த ஜமாஅத் இப்போதைய நிர்வாகிகளால் சுயமாகத் தான் இயங்குகிறது என்பது அனைவருக்கும் தெளிவாகும் வரை இந்த நிலையைத் தொடர்வேன். இதைத் தான் பனிப்போர் என்று அவர்கள் சித்தரித்து ஆதாயம் அடைய முயல்கின்றனர். அதில் அவர்கள் வெற்றி பெற முடியாது.

பதவிக்கு ஆசைப்படுவோர் தான் உள்ளுக்குள் பனிப்போர் நடத்துவார்கள். விட்டால் போதும் என்று இருப்பவர்களுக்கு யாருடனும் பனிப்போர் இருக்காது. பொய்யன் ஜமாஅத் என்பதை மேலும் மேலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பீஜேக்கும் எனக்கும் எந்தப் பிரச்சனையும் கிடையாது; பிஜேயை உலக அளவில் பெரிய ஆளாக்க நினைத்தேன். அது பிடிக்காமல் என்னை வெளியேற்றி விட்டனர் என்றும் அவர் கூறி வருவதாகவும் என் கவனத்துக்கு கொண்டு வரப்படுகிறது. இதிலும் கடுகளவும் உண்மை இல்லை.

எனக்கு எதிரான எல்லா அவதூறுகளையும் தன் வாயால் சொல்லாமல் கைத்தடிகளை வைத்து அரங்கேற்றி விட்டு நான் எதுவும் விமர்சிக்கவில்லை என்றும் கூறுகிறார்.

இவரது மச்சானுக்கு சொந்தமான இடத்தில் தான் மூன் பப்ளிகேஷன் என்ற எனது நிறுவனம் வாடகைக்கு இயங்கி வந்தது. இவரை நீக்கியவுடன் உடனே இடத்தைக் காலி செய்ய வைத்தார். இந்தியச் சட்டப்படி உடனே நான் காலி செய்ய முடியாது என்று கூறினால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனாலும் இடத்துக்கு உரியவர் கேட்கும் போது உடனே காலி செய்வது தான் முறை என்று காலி செய்து விட்டு வேறு இடம் மாறி விட்டோம். அந்த இடம் தான் இப்போது அவர்களின் அலுவலகமாக உள்ளது. இவர் தனிப்பட்ட முறையிலும் எனக்கு நிறைய கேடுகள் செய்துள்ளார். இந்த நிலையில் எனக்கும் அவருக்கும் நல்லுறவு இருப்பதாகக் கூறுவதற்கு அவர் வெட்கப்பட வேண்டும்.

28.09.2009. 04:05




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
111 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி