கீழைப் பொய்யரின் கிறுக்கு வாதம்

கீழைப் பொய்யரின் கிறுக்கு வாதம்

பொய்யன் டீஜே என்று செல்லப் பெயர் பெற்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நம்மைப் பொய்யன் என்று சித்தரிப்பது வேடிக்கையாக உள்ளது.

இதற்கு முன் இவர்கள் புளுகிய ஒவ்வொன்றுக்கும் முதுகெலும்பை முறிக்கும் வகையில் நாம் பதில் அளித்த பின் அதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் முடங்கினார்கள்.

ஆனால் இவர்களின் புளுகுகளை நாம் பல தடவை அம்பலப்படுத்தினோம். அவற்றுக்கு இன்றைய தேதி வரை பதில் இல்லை.

இவர்களைப் பொய்யர்கள் என்று நிரூபிக்கும் அனைத்து ஆவணங்களும் நம் இணைய தளத்தில் உள்ளன.

பாக்கர் பஸ் பயணம் குறித்து பகலில் தான் பயணம் செய்தார் நான்கு மணி நேரம் தான் பயணம் செய்தார் என்பது தான் இவர்களின் கடைசிப் பொய்யாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் அஸ்திவாரமே பொய்யாக இருக்கும் போது இவர்கள் பொய் சொல்லாமல் இருந்தால் தான் அது ஆச்சரியமானது.

இப்போது பரப்பியுள்ள பொய்களையும் ஒவ்வொன்றாக தக்க ஆதாரத்துடன் நாம் அடையாளம் காட்டுவோம்.

இது பற்றி நாம் எழுதும் போது தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஆதரவாகக் குரல் கொடுக்கவில்லை என்று செய்தி பரப்பப்படுவதாக் நாம் தெரிவித்தோம்.

அதற்கு நம்மைப் பொய்யன் எனக் கூறும் கீழக்கரை பொய்யர் பின்வருமாறு கூறுகிறார்.

முதல் பொய்

அதில் துணிந்து பொய் சொல்லி இருக்கிறார். இந்த குழுமத்தில் யாராவது ஏன் ததஜா உதவி செய்ய போவில்லை என கேட்டார்களா? ஒன்று சேரும் இந்த சந்தர்ப்பத்தையாவது அல்லாஹ் தந்தானே என்றுதான் துஆச் செய்தார்கள்.

என்கிறார் கீழைப் பொய்யர் (பொதுவாகவே இவர் பொய் சொல்வதில் கைதேர்ந்தவர் என்பது துபையில் பிரசித்தம். பஸ் பயணப் பொய் ஒரு சாம்பிள்)

யாருமே ததஜ பற்றி எழுதவில்லை என்று இவர் எழுதியது முதல் பொய். இப்படி எழுதிய மேற்படியார் இதற்கு ஒரு நாளைக்கு முன் எழுதியதைப் பாருங்கள்

தமுமுக, மமக, எம்.என்.பி, ஜாக், ஜமுமுக உட்பட அனைத்து சமுதாய அமைப்புகளும் (ததஜ தவிர) இதஜா சகோதரர்களை அடைத்து வைத்து இருந்த இடத்திற்கு வந்து விட்டார்கள். அரசுக்கு எதிராக போராட்டம் வெடிக்கும் என மற்ற அமைப்பு சகோதரர்கள் சொன்னதின் காரணமாக, கைது செய்து ரிமாண்டில் அடைக்க இருந்த அரசு, ரிமாண்டை வபாஸ் வாங்கி விட்டு அத்தனை சகோதரர்களையும் விடுதலை செய்து விட்டது.

இதை எழுதியதும் இதே பொய்யர் தான். இதில் அடைப்புக் குறிக்குள் ததஜ தவிர என்று எழுதியிருக்கிறாரா? இல்லையா?

தான் எழுதியதையே ஒரே நாளில் மறுப்பவர் பொய்யரா? இல்லையா?

இரண்டாவது பொய்

சகோதர, சகோதரிகள் மற்றும் மாநில தலைவர்கள்உட்பட ஆயிரக்கணக்கனோர்முற்றுகையிட்டனர். அல்ஹம்துலில்லாஹ்

என்று மேற்படி பொய்யர் எழுதியுள்ளார்.

ஆயிரக்கணக்கானோர் என்று கூறினால் ஆயிரம் ஆயிரமாக எண்ணும் அளவுக்கு மக்கள் வெள்ளம் இருந்தால் தான் இவ்வாறு கூற முடியும். மண்டபத்தில் அடைக்கப்பட்டவர்களை இவர்கள் வீடியோ எடுத்துள்ளார்கள். அதை மெதுவாக ஓட விட்டு தலையை எண்ண முடியும். அவ்வாறு எண்ணி பல ஆயிரம் வேண்டாம். ஒரு ஆயிரம் பேர் இருப்பதை இந்தப் பொய்யர் நிரூபிக்கத் தயாரா?

அல்லது அவர்கள் அடைக்கப்பட்ட மணடபம் எவ்வளவு சதுர அடி கொண்டது? அதில் இவர்கள் எடுத்துக் கொண்ட சதுர அடி எவ்வளவு? அந்தச் சதுர அடியில் எதத்னை பேர் இருக்க முடியும் என்ற கணக்கின்படி இதை நிரூபிக்கத் தயாரா?

இதை நிரூபிக்கும் வரை இவர் பொய்யர் தான் என்பதில் சந்தேகம் இல்லை.

மூன்றாவது பொய்

அரசின் அராஜக நடவடிக்கைகளைக் கண்டு கோபமுற்ற பல்வேறு முஸ்லிம் இயக்க சகோதரர்கள், தன்னார்வத்தோடு ஐஎன்டிஜே தொண்டர்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளியின் அருகே குவிந்தனர்.

பிற இயக்கங்கள் கேள்விப்பட்டு ஓடி வந்தனர் என்று இந்தப் பொய்யர் கூறுகிறார்.

கைது செய்யப்படுவது உறுதியான உடன் இவர்கள் பிறரது உதவியை நாடினார்களா? அல்லது பிற இயக்கத்தினர் தானாக வந்தார்களா?

இவர்களின் தலைமை நிர்வாகி முனீர் தேசிய லீக தலைவர் பஷீரைத் தொடர்பு கொண்டு உதவி கேட்டதாக பஷீர் என்னிடம் தெரிவித்தார். இதை நான் குறிப்பிட்டிருந்தேன்.

இது உண்மையா? பொய்யா? பொய் என்றால் இதைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டியது தானே? உண்மை என்றால் தன்னார்வத்துடன் கலந்து கொண்டனர் என்று எழுதி இருப்பது பொய் தானே?

மேலும் இவர்களின் தரப்பில் வெளியிடப்பட்ட இன்னொரு செய்தியும் இவரைப் பொய்யர் என்று இனம் காட்டுகிறது.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்விடமும் பொதுச் செயலாளர் ஹைதர் அலியிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உயர்காவல்துறை அதிகாரிகளை தொடர்புக் கொண்ட தமுமுக தலைவர்

தகவல் தெரிவிக்கப்பட்டது என்றால் இதன் பொருள் என்ன? (தகவல் தான் தெரிவிக்கப்பட்டது உதவி கோரவில்லை என்று உளறி மாட்டிக் கொள்ள வேண்டாம்)

இந்த இடத்தில் அரசாங்கத்தின் உதவியை, பிற இயக்கங்களின் உதவியை நாடுவது குறித்தும் சில செய்திகளை நாம் தெளிவு படுத்த வேண்டியுள்ளது. ஏனெனில் அவ்வளவு மடத்தனமாக மேற்படி வகையறாக்களின் வாதம் அமைந்துள்ளது. இதோ ஒரு அரை வேக்காடு கூறுவதைப் பாருங்கள்

எஸ்.பி. பட்டினம் பள்ளிவாசல் பிரச்சினையின் போது காவல்துறை யினரிடத்திலும், அரசு அதிகாரிகளி டத்திலும் பேசுவதற்கு தனிநபர் இயக்கத்தினருக்கு செல்வாக்கும், ஆதரவும் இல்லாத காரணத்தால் ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு (ஆற்காடு வீராசாமி, நடிகர் ரித்தீஷ்) போன் போட்டு கெஞ்ச ஆரம்பித்தார்கள். தனிநபர் ஜமாஅத் தலைவரே போன் போட்டும் அவர்கள் போனை எடுக்காமல் அவமானப்படுத்திய மானங்கெட்ட கதையை அந்தத் தலைவரே அவர்கள் நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சொல்லிப் புலம்பியதை நாட்டு மக்கள் அறிவார்கள்,.

இவர்களுக்கு அறிவு இல்லை என்பதற்கு இதுவே போதுமான ஆதாரமாகும்.

அரசிடம் உதவி கேடப்து பற்றி அன்றும் இன்றும் நமது நிலைபாடு ஒன்று தான். நமக்குப் பிரச்சனை ஏற்படும் போது அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று அவ்ர்களின் உதவியைப் பெறுவது தான் நமது நிலைப்பாடு. எங்களுக்குச் சொந்தமான பள்ளிவாசலை இழுத்துப் பூட்டும் செயல் நடந்தால் அரசிடம் தான் நியாயம் கேட்க வேண்டும். இது போல் நாட்டில் எத்த்னையோ மக்களுக்குப் பிரச்சனை ஏற்படும் போது அதற்காக அரசை அணுகுவதற்குத் தான் நாம் அமைப்பு நடத்துகிறோம். நாங்கள் அரசாங்கம் நடத்தவில்லை.

இனி எதிர் காலத்தில் ஏற்படும் எந்தப் பிரச்சனையானாலும் அரசின் உதவியை அதிகாரிகளின் உதவியை நாடுவோம். இது போல் தான் எல்லா இயக்கங்களும் நாடுகின்றன. இது குறை சொல்லப்படும் செயல் அல்ல.

அது போல் ஒருவன் அநியாயமாகக் காவல் நிலையம் இழுத்துச் செல்லப்படுகிறான். அவனைப் பொய் வழக்கில் கைது செய்யப் போவது தெரிகிறது என்றால் அப்போதும் அதைத் தடுக்க அரசின் உதவியை நாடலாம். தலைவர்களுக்கு இது நடந்தாலும் பொது மக்களுக்கு இது நடந்தாலும் முடிந்த வரை அவரை விடுவிக்க அரசின் சகல மட்டத்திலும் தொடர்பு கொண்டாக வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் போராட்டக் களத்தில் இறங்கி நாங்கள் சிறை செல்லவும் தயார் என்று அறிவித்து விட்டு அதன் காரணமாகக் கைது செய்யும் நிலை வந்தால் அப்போது பின்வாங்குவது கோழைத் த்னம் என்பது தான் இங்கே நாம் எழுப்பிய பிரச்சனை.

கைது செய்து விடுவார்கள் என்று திட்டவட்டமாகத் தெரிந்தால் சமுதாயத்தன் மானம் தான் பெரிதாகத் தெரிய வேண்டும்.

இது போல் நானோ தவ்ஹீத் ஜமாஅத்தோ நடந்திருந்தால் அதை சுட்டிக் காட்டட்டும்.

அடுத்ததாக இவர்களின் அறியாமையைப் பாருங்கள்

மலேசியா தவிர இந்தியாவுல பீஜே வெறும் அரசியல் கைதியாத்தான் சில முறை உள்ளே போயிருக்காரு ஆனா பாக்கருக்கு கொடுஞ்சிறைகள் புதிதல்ல. தடாவை பாத்த பாக்கருக்கு 15 நாள் ரிமாண்ட் ஜூஜூபி அப்படித்தான் அவர் பின்னாடி அணிவகுத்த பொதுமக்களுக்கும். அப்படியே 15 நாள்கள் வைத்திருந்தால் கூட இது அரசியல் கைது லிஸ்ட்ல தான் வரும் ஏன்னா இது ஒட்டுமொத்த சமுதாயத்தின் பிரச்சனைக்கான கைதும் கூட, அதனால் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஒன்று கூடியதும் போரடியதும் கேவலமே இல்லை. அப்படியே கேவலம் தான் என்று வீம்புக்கு ஒத்துக் கொண்டாலும் எத்தனையோ அவர் சொன்ன தீமைகளை நாம் பின்பற்றியது போல் இதுவும் அண்ணன் காட்டிய வழிதான்.

பாக்கர் சிறைக்கு அஞ்சுபவர் அல்ல என்றெல்ல்லாம் கிறுக்குத் தனமாக எழுதுகின்றனர். பாக்கர் தடாவில் கைது செய்யப்பட்டது அவர் தானாக முன் வந்து வீரத்தைக் காட்டி செய்யப்பட்ட கைது அல்ல. அவரால் தவிர்க்க முடியாத அரசின் நடவடிக்கை. இது போல் அரசு யாரைக் கைது செய்தாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியாது. அப்படியானால் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் அஞ்சா நெஞசன் ஆகி விடுவார்கள்.

மேலும் நேதாஜி நகர் பள்ளிவாசலில் சுன்னத் ஜமாஅத்துக்கும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் தகராறு ஏற்பட்ட போது பாக்கரும் ஹைதரும் அங்கே சென்றார்கள். ஆனால் இவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை எனும் போது ஒரு வீட்டின் மாடிப்படியில் போய் ஒளிந்து கொண்டனர். இதை பாக்கரே சுவைபட தர்பியா நிகழ்ச்சிகளில் சொல்லி இருக்கிறார்.

இப்படி சிறை சென்றதை எல்லாம் எடுத்துக் காட்டுவது பாக்கரைக் கேவலப்படுத்துவதாக் உள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்து ரிமாண்ட் செய்யப்படும் நிலை இப்போது தான் அவருக்கு ஏற்படுகிறது. இதற்கெல்லம் நாங்கள் பயப்பட மாட்டோம் என்று கூறி சிறைக்குச் சென்றிருப்பது தான் அவர்களின் போராட்ட அறிவிப்பு உண்மை என்பதற்குச் சான்றாக இருக்கும்.

நாங்கள் சிறை செல்லவும் தயார் என்று அறிவிப்பவர்கள் இரண்டுக்கும் தயாராக இருக்க வேண்டும். எங்களை விட்டு விடுங்கள் என்று இந்தச் சந்தர்ப்பத்தில் அரசைக் கெஞ்சுவது வெட்கக் கேடானது தான் என்பதில் இப்போதும் நாம் உறுதியாக இருக்கிறோம்.

இதை மிஞ்சும் வகையில் இவர்கள் உளறுவதைப் பாருஙக்ள்

மலேசியாவின் சட்டத்தை மீறியதால் கிரிமினல் சட்டத்தின் கீழ் 24 மணி நேரம் உள்ளே வைக்கப்பட்டவருக்கு இந்த பாக்கரு, வின் டிவி தேவநாதன் மற்றும் அவரது மலேசிய உறவினர்கள், சென்னையில் மலேசியா தூதரகத்தை முற்றுகையிட்டு தனிப்பட்ட பிஜேயை விடுதலை செய்யக் கோரிய பல ஆயிரம் பேரின் செயலும் அவருடைய கேவல லிஸ்ட்ல வருமா? வராதா? (இதில் முஸ்லீம் சமுதாயத்திற்கு எதிராக பிஜேயே இன்ஃபாமராக (உதாரணம் கோவை) பணியாற்றும் உளவுத்துறையும் உதவியது தான் அவர் பாஷையில் கேவலத்தின் ஹைலைட்)

நான் மலேசியாவில் கைது செய்ய்யப்பட்ட போது எந்த முடுவு எடுக்கப்பட்டாலும் அதில் உண்மையில் எனக்குச் சம்மந்தம் இல்லை. ஏனெனில் என்னால் யாருடனும் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது. இது தான் உண்மை என்றாலும் சேர்ந்திருக்கும் போது ஏற்றுக் கொண்ட ஒன்றைப் பிரிந்த பின் மறுக்கும் குணம் எனக்கு இல்லை.

மலேசியா சென்றிருந்த போது என்னைக் கைது செய்யுங்கள் என்று ஒரு போராட்டத்தை அறிவித்து அதன் காரணமாக நான் கைது செய்யப்படவில்லை. நான் பிரச்சாரம் செய்யத் தான் சென்றேன். இதற்குக் கைது செய்வது சட்டவிரோதமானது. அநியாயமானது என்பதால் போராடினார்கள். அதுவும் எங்கள் இயக்கத்தினர் தான் போராடினார்கள். தமுமுக ஜாக் பாப்புலர் ஃப்ரண்ட் போன்ற எந்த இயக்கத்தின் உதவியையும் தவ்ஹீத் ஜமாஅத் நாடவில்லை. மலேசியா தூதரகத்தை முற்றுகை இட்டது தவ்ஹீத் ஜமாஅத்தினர் தானே தவிர மற்ற இயக்கத்தினர் அல்ல.

அதே நேரத்தில் போராட்டக் களத்தில் அல்லாமல் மற்ற சமயங்களில் அநியாயமாகக் கைது செய்யப்படும் போது அரசின் உதவியை நாடுவது ஏற்கனவே நான் குறிப்பிட்ட படி கேவலமானது அல்ல.

அடுத்து உளவுத்துறைக்கு நான் ஆள்காட்டியாக இருப்பதால் உளவுத்துறை எனக்கு உதவியதாக இந்த அரை வேக்காடு எழுதுகிறது.

உளவுத் துறைக்கு ஆள்காட்டி வேலை பார்த்ததாக எழுதியது மான நட்ட வழக்குக்கு உரியதாகும். கோவை நீதி மன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கும் எதிரானது என்பதால் தேவைப்பட்டால் வழக்குத் தொடுப்பேன். சைபர் கிரைம் மூலம் இந்த அரை வேக்காட்டை நீதி மன்றத்துக்கு இழுக்கலாமா என்பது குறித்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறேன்.

பாக்கரும் ஹைதரும் நேதாஜி நகர் வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அதே சிறையில் இருந்த ஏர்வாடி காசிம் என்பவர் இவ்விருவரையும் சிறைக்குள் வைத்து அடித்துப் புரட்டினார். காட்டிக் கொடுத்தார்கள் என்று கூறிக் கொண்டே நையப் புடைத்தார். பதிக்கப்பட்டவரே யாரை கைகாட்டினாரோ அவரை ஆள் காட்டி என்று சொல்லாமல் எவ்வித ஆதாரமும் இல்லாமல் என்னை ஆள்காட்டி என்று இந்த் அரை வேக்காடு சொல்வது வேடிக்கையாக உள்ளது.

பிற்சேர்க்கை: (காசிம் பாக்கரையும் தாக்கினார் என்பது பாக்கர் சொன்னதை நம்பி நான் எழுதியதாகும். பின்னர் பாக்கர் அப்படி சொன்னது பொய்; காசிம் ஹைதரை மட்டும் தான் தாக்கினார் என்பது தெரிய வந்ததால் அதைப் பின்னர் தெளிவு படுத்தியுள்ளேன். பார்க்க மேலும் உங்கள் கருத்து பகுதியிலும் இது குறித்து பின்வருமாறு விளக்கியுள்ளேன்.

 

 

 

'முரண்பாடுதான் பொய்யின் அளவுகோல்' என அடிக்கடி கூறும் பி.ஜே மீண்டும் தான் ஒரு பொய்யர் என நிருபித்துள்ளார். ஏர்வாடி காசிமை தான் காட்டி கொடுக்கவில்லை என கூறி ஆன்லைன-ல் கொடுத்துள்ள விளக்கத்தில் http://onlinepj.com/thamizaka-thavheed-varalaru/alumma_pirachanai_enna/
நேதாஜி நகர் வழக்கில் பாக்கரும் ,ஹைதரும் சிறை சென்ற போது சிறைக்குள் ஹைதரை குரல்வளையை கடித்து கொல்ல முயன்ற ஏர்வாடி காசிம் பாக்கரை ஒன்றும் செய்யவில்லை! ஏன் தெரியுமா பாக்கர் எப்போதும் தன்னை நல்லவர் போல் காண்பித்து கொள்வார் என தற்போது ஆன்லைன-ல் கூறியிருக்கும் பொய்.ஜே கடந்த டிசம்பர் ஆறில் சொன்னதை பாருங்கள்.
'நேதாஜி நகர் வழக்கில் சிறை சென்ற பாக்கரையும், ஹைதரையும் அடித்து புரட்டினார்.காட்டி
கொடுத்தீர்கள் என்று கூறிக்கொண்டே நையப்புடைத்தார்' . என கூறியிருப்பதை பாருங்கள்.
http://onlinepj.com/vimarsanangal/bakkar_vimarsanam/keelai_poyarin_kiruku_vatham/ சமிபகாலமாக மிகவும் உளறிக்கொட்டும் அண்ணனுக்கு பாக்கரோ போபியா வியாதி வந்துள்ளது. ஆகையால் அவருக்காக துவா செய்வோம்.. என்று சிலர் சொல்கிறார்களே? 

பதில்

அஸ்ஸலாமு அலைக்கும். பாக்கர் தர்பியா நிகழ்ச்சியில் சொன்னதைத் தான் http://onlinepj.com/vimarsanangal/bakkar_vimarsanam/keelai_poyarin_kiruku_vatham/ அதில் நான் குறிப்பிட்டிருந்தேன்.  அதே கட்டுரையில் பாக்கர் தர்பியா நிகழ்ச்சியில் கூறியதைச் சுட்டிக் காட்டி இருக்கிறேன்.

ஆனால் இவ்வாறு எழுதிய பின் சிறைவாசிக்ள் சிலர் மூலம் பாக்கர் மக்களைக் கவர்வதற்காக அப்படிச் சொல்லி இருக்கிறார். அவரை காசிம் தாக்கவில்லை ஹைதரை மட்டும் தான் தாக்கினார் என்று தெரிவித்தனர். இதை உறுதி செய்து கொண்ட பின்னர் தான் பாக்கரை காசிம் தாக்கவில்லை என்று தெரிவித்துள்ளேன். பாக்கர் கூறிய தவறான தகவலை நம்பி கூறிய ஒரு செய்தி பொய் என்று தெரிய வரும் போது அதை திருத்திக் கொள்வது முரண்பாடு அல்ல. பாக்கர் பொய் கூறியுள்ளார் என்பது தான் இதிலும் நிரூபணமாகிறது.

காசிம் என்னையும் தாக்கினார் என்று பாக்கர் சொல்லட்டும். அதில் எது உண்மை என்பதை சாட்சியத்துடன் நான் சொல்கிறேன்.

பாக்கரோ ஹைதரோ ஆட்காட்டினார்கள் என்று நான் கூறவில்லை. சிறையில் இருப்பவர்கள் இப்படித் தவறாக பலரையும் நினைத்தார்கள். ஆனால் யார் அவர்களுடன் நெருக்கமாக இருந்தார்களோ அவர்கள் தான் ஆட்காட்டினார்கள் என்பதைப் பின்னர் உணர்ந்து கொண்டார்கள். கோவை பாஷா அவர்கள் இன்றும் கூட நம்மோடு கடிதத் தொடர்பில் உள்ளார். என்னைப் பற்றி தவறாக நினைத்ததற்கும் பேசியதற்கும் வருத்தமும் தெரிவித்து விட்டார்.

அடுத்ததாக உளவுத் துறை எனது விடுதலைக்கு உதவியது என்று கூறுகிறார். ஆம் நிச்சயமாக் உதவியது. இன்றும் எத்தனையோ சமுதாயப் பிரச்சனைகள் அவர்கள் மூலம் தீர்க்கப்படுகிறது. நமக்கு மட்டுமின்றி களத்தில் நிற்கும் எல்லா இயக்கத்தினரும் உளவுத்துறை மூலமே அரசின் கவனத்துக்குப் பிரச்சனைகளைக் கொண்டு சென்றார்கள்.

குறிப்பாக இந்தியக் குடிமகன் வெளி நாட்டில் அநியாயமாகக் கைது செய்யப்பட்டால் அவருக்காக உதவுவது உளவுத்துறையின் கடமைகளில் ஒன்று.

அதிலும் முக்கியப் பிரமுகர் என்றால் அதனால் இந்தியாவில் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் பொறுப்பும் உளவுத்துறைக்கு உண்டு.

எங்கள் நாட்டின் கன்னியமான பிரஜையை நீங்கள் கைது செய்துள்ளீர்கள். மக்கள் கொந்தளித்து உங்கள் தூதரகத்தை முற்றுகை இட்டுள்ளனர். இதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நீங்கள் தான் பொறுப்பு என்று உளவுத்துறை செய்தி அனுப்பியது தான் எனது விடுதலைக்கு இரண்டாவது காரணம். முதல் காரணம் மக்கள் எழுச்சி.

நான் இலங்கை சென்ற போதும் இது போன்ற நிலையை நான் சந்தித்தேன்.. கைது செய்து சிறையில் அடைக்கக் கூடாது விசாவை ரத்துச் செய்து எங்கள் நட்டுக்கு அனுப்புங்கள் என்று அப்போதும் உளவுத்துறை உதவியது.

அரசாங்கத்துக்கு எதிரியாக இருக்கும் திரைப்பட இயக்குனர் சீமான் பத்து நாட்களுக்கு முன் கனடா நாட்டில் கைது செய்யப்பட்டார். அவரை சிறையில் அடைக்காமல் தாயகம் அனுப்பச் செய்ததிலும் உளவுத்துறையின் பங்கு உண்டு.

வெளி நாட்டில் சட்ட விரோதச் செயலில் ஈடுபடாமல் கருத்துச் சுதந்திரம் என்ற அடிப்படையில் யார் கைது செய்யப்பட்டாலும் அவர்களுக்கு உதவுவது உளவுத்துறையின் கடமைகளில் ஒன்று.

அரை வேக்காடுகளூக்கு இதெல்லாம் தெரியாததால் இப்படி உளறுகின்றனர்.

மற்ற எந்தத் தலைவர்கள் வெளி நாட்டில் கைது செய்யப்பட்டாலும் அவர்கள் இந்தியர் என்ற ஒரே பார்வை தான் உளவுத்துறைக்கு இருக்கும்.

மேலும் இந்த அரை வேக்காடுக்கு இன்னொன்றும் தெரியவில்லை. நான் சிறையில் இருந்ததால் உளவுத்துறையை என்னால் தொடர்பு கொள்ள முடியாது. பாக்கர் தான் தொடர்பு கொண்டார். அவரை உளவாளி என்று கூறாதது ஏன்?

பிரிவினைக்கு முன் ஆதரித்த ஒன்றை யார் எதிர்த்தாலும் முதலில் அவர்களின் மூளை தான் செயல் இழந்து போகின்றது என்பதற்கு இந்த அரைவேக்காடும் ஓர் உதாரணமாகும்.

மலேசியா பற்றி கேள்வி எழுப்பியதால் இது பற்றி இன்னும் சில தகவல்களை நான் சொல்லியாக வேண்டும்.

என்னோடு தொண்டியப்பாவும் வந்திருந்தார். நான் கைது செய்யப்பட்டவுடன் என்னை உடனே இன்றே அனுப்பி விடுங்கள் என்று மலேசிய நிர்வாகிகளிடம் கெஞ்சி ஓட்டம் பிடித்தார்.

அது போல் என்னுடன் வந்த முனீரும் என்னையும் கைது செய்து விடுவார்கள் என்று கூறி உறவினர்களின் வீட்டுக்குச் சென்று விட்டார் என்பதையும் கூடுதல் தகவலுக்காகக் கூறிக் கொள்கிறேன்.

அடுத்து பிற இயக்கங்களின் உதவியை நாடுவது பற்றியும் நாம் குறிப்பிட வேண்டியுள்ளது.

நாங்கள் மற்றவர்களை விட வீரியமாக் செயல்படுவோம் என்ற அஸ்திவாரத்தில் தான் அனைத்து இயக்கங்களும் உயிர் வாழ்கின்றன.

கைது செய்யப்படும் போது சிறை செல்லவும் துணிவு இல்லை. அல்லது சுய வலிமை கொண்டு அதைத் தவிர்க்கவும் முடியவில்லை என்றால் இந்த இயக்கம் எதற்கு?

தமுமுக தான் இவர்களைக் காப்பாற்ற முடியும் என்றால் அதில் இணைவது தானே முறை. எனக்கென்று ஒரு கூட்டம் வேண்டும் என்பது இவர்களின் நோககமா? அல்லது வீரியமிக்க தலமை என்று செயல்படுவது நோக்கமா என்ற கேள்விக்கு தெளிவாக விடை கிடைத்து விட்டது. இது போல் உள்ள பலவீனர்கள் பலமான இயக்கத்துடன் இணைந்தால் அந்த இயக்கமாவது பலப்படுமே?

தமுமுக ஒரு போராட்டம் நடத்தும் போது இவர்கள் ஏன் தனியாக நடத்த வேண்டும்? அவர்களை விட வீரியமாக இருப்போம் என்பதால் தானே தனி போராட்டம் நடத்தினார்கள். அது இல்லை என்பது வெளிச்சமாகாத வரை இவர்கள் இயக்கம் நடத்தலாம். ஆனால் எங்களால் ஒன்றும் இயலாது என்று காட்டிவிட்ட பின் இவர்கள் இயக்கம் நடத்துவது ஏன்?

இவர்கள் நம்மோடு இருந்த வரை பிற இயக்கங்களை ஊன்று கோலாகப் பயன்படுத்தவில்லை.

தேசிய லீக் பஷீர் வகையறாக்களும் இவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் விடுதலையில் உங்கள் பங்கு தான் அதிகம். நீங்கள் தான் ஆளும் அணியில் இருக்கிறீர்கள். அதனால் உங்களால் அவர்களுக்கு உதவ முடிந்தது ஆனால் காரியம் முடிந்ததும் தமுமுக மட்டுமே இவர்க்ளின் நன்றிக்கு உரியதாகி விட்டது.

அடுத்து அரை வேக்காடு பயங்கரமான நான்கு கேள்விகளைக் கேட்டுள்ளது.

1. வக்ஃபு வாரியச் சேர்மன் அப்துல் ரஹ்மான், முன்னாள் சேர்மன் ஹைதர்அலியின் ஊழலுக்குத் துணை போனதாக வீராவேசமாக தன்னுடைய டிரஸ்ட் பத்திரிகையில் எழுதினார். அதனைக் கண்டித்து அப்துல் ரஹ்மான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியவுடன் வீரத்தோடு எதிர்கொள்வதை விடுத்து, அப்துல் ரஹ்மான் மறுக்கிறார்' என்று செய்தி வெளியிட்டு மண்டியிட்ட கதை தெரியாதா? வந்தது மறுப்புக் கடிதமா? வக்கீல் நோட்டீஸ்? டிரஸ்ட் பத்திரிகையில் பிரசுரிக்கத் தயாரா?

கவிக்கோ அப்துர் ரஹ்மான் வாரிய ஊழலுக்குத் துணை செய்தார் என்று உணர்வில் எழுதப்பட்டது. உணர்வின் ஆக்கங்களை அச்சாவதற்கு முன் நான் பார்ப்பதில்லை. உணர்வில் அதைப் பார்த்த அந்த நிமிடமே அதன் பொறுப்பாளர் சையத் இப்ராஹீமைக் கண்டித்தேன். இது வழக்குத் தொடுக்கத்தக்க வார்த்தை. உடனே மறுப்புப் போடுங்கள் என்று கூறினேன். நான் சொன்னது போலவே வக்கீல் நோட்டீஸ் வந்தது. அதில் மறுப்பு போடுமாறு தான் கேடகப்பட்டிருந்தது. நோட்டீஸை வெளியிடுங்கள் என்று கேட்கவில்லை. எந்தப் பத்திரிகையும் வக்கீல் நோட்டிஸை முழுமையாக் வெளியிட மாட்டார்கள் இந்த சாதாரண அறிவு கூட இல்லாமல் இப்படி கேட்கிறார் என்றால் இவரது அறிவை எடை போட்டுக் கொள்ளுங்கள்

நானும் இது குறித்து பேசி இருக்கிறேன். கவிக்கோ அப்துர்ரஹ்மான் மூலம் சரிக்கட்டி வக்பு சொத்து தாரை வார்த்த்தாகக் கூறப்படுகிறதே அதை அப்துர்ரஹ்மான் இன்று வரை மறுக்காதது ஏன் என்று பேசியிருக்கிறேன் இப்படிக் கேட்டால் அதில் வழக்கு போட முடியாது. உதவினர் என்று திட்டவட்டமாகக் கூறினால் அதை நிரூபிக்குமாறு கேட்டு வழக்குப் போடலாம்.

அடுத்ததாக இரண்டாவது பாயிண்டைப் பாருங்கள்

2. அந்நஜாத் பத்திரிகை ஆசிரியர் மீது அவதூறு பேசிவிட்டு அவர் வழக்குத் தொடர்ந்தவுடன், வீரத்தோடு, தான் சொன்னது உண்மை தான் என்று நெஞ்சு நிமிர்த்தி சொல்லத் திரணியற்று வக்கற்று, வகையற்று, கோழையாக அப்படிச் சொல்லவில்லை'' என்று சொன்னது வீரமா? புறமுதுகா?

இந்தப் பொய்யனுக்கு வழக்கு என்ன என்று தெரியவில்லை. ஒரு ம்னநோயாளி எழுதியதை நம்பி என்னைப் பொய்யன் என்கிறார்.

அந்த வழக்கு குறித்தும் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

கோவை குண்டுவெடிப்புக்கு நான் தான் இரண்டு லட்சம் பணம் கொடுத்தேன் என்று கோவை பாஷா சிபிசிஐடி போலீஸாரிடம் பொய் வாக்கு மூலம் கொடுத்தார். (அவருக்கும் தமுமுகவுக்கும் முன் விரோதம் இருந்தததே இதர்குக் காரணம். பின்னர் அதற்காக அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டு விட்டார்.) அதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீஸார் என்னை நான்கு நாட்கள் கோவை அழைத்துச் சென்று விசாரித்தார்கள். பாஷா கூறியது பொய் என்பதைத் தக்க ஆதாரத்துடன் நான் நிரூபித்தேன். இதனால் என்னை வழக்கில் அவர்கள் சேர்க்க முடியவில்லை. (எப்படி நிரூபித்தேன் என்பதை தேவைப்பட்டால் எழுதுவேன்)

நான்கு நாட்கள் விசாரணை நடத்திய அவர்கள் நான் பேசியதை அடிப்படையாக வைத்து அவர்கள் எழுதினார்கள். அதில் கூடுதல் குறைவாக சில விபரங்களை எழுதியிருந்தார்கள். நான் அதில் கையெழுத்திட மறுத்து விட்டேன் நான் கையெழுத்துப் போட்டால் தான் அது என்னுடையதாகும். என் பெயரைப் பயன்படுத்தி அவர்களாக எழுதிக் கொண்டது என்னுடையதாகாது.

ஜோடிக்கப்பட்ட அந்த வாக்குமூலத்தை அந்த நேரத்தில் விடியல் வெள்ளி இயக்கத்தினர் பல பிரதிகள் எடுத்து நான் காட்டிக் கொடுத்ததாகப் பரப்பினார்கள். பாஷா என்பவர் (கோவை பாஷா அல்ல) இதைத் துண்டு பிரசுரமாகவும் வெளியிட்டார். இதற்காக அவர் மீது நானும் ஹைதரும் வழக்குப் போட்டோம். பின்னர் அவரது முதுமை காரணமாக அந்த வழக்கைத் தொடரவில்லை.

இந்தச் சமயத்தில் இது குறித்து உணர்விலும் விளக்கினோம். நான் எந்த வாக்கு மூலமும் கொடுக்கவில்லை. கூடுதல் குறைவாக போலீஸார் எழுதிக் கொண்டனர் என்றும் தெளிவுபடுத்தினேன்.

அந்த விசாரணையின் போது எனது பிறப்பு முதல் இன்று வரை உள்ள அனைத்தைப் பற்றியும் கேட்டார்கள்.

திருச்சியில் அபூ அப்துல்லா என்பவர் நஜாத் பெயரில் சொத்து வாங்கியது தொடர்பாக பிரச்சனை வந்தது. அதுவும் நஜாத் பத்திரிகையில் இருந்து விலகக் காரணமானது என்று தெரிவித்தேன்.

இதைக் காவல் துறை எழுதும் போது அபூ அப்துல்லா நஜாத் சொத்தை தன் பெயரில் எழுதிக் கொண்டார் என்று நான் கூறியதாக எழுதிக் கொண்டனர். சொத்து வாங்கியதில் பிரச்சனை வந்தது என்பதற்கும் அவர் பெயரில் எழுதிக் கொண்டார் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. நான் சொன்னதை அவர்கள் புரிந்து கொண்ட அடிப்படையில் அப்படி எழுதிக் கொண்டனர்.

இதன் பின்னர் கோவை நீதி மன்றத்தில் குண்டு வெடிப்பு வழக்கில் மூன்று முறை விசாரணைக்கு அழைக்கப்பட்டேன். அந்த விசாரணயின் போது நான் எந்த வாக்கு மூலமும் கொடுக்கவில்லை என்பதையும் நான் சொன்னதையும் சொல்லாததையும் போலீஸார் எழுதிக் கொண்டனர் என்பதையும் கோவை தடா நீதி மன்றத்தில் பதிவு செய்தேன்.. அப்போது வழக்கறிஞர் குறுக்கு விசாரணையின் போது அபூ அப்துல்லா விஷயமாக நான் கூறியது பற்றி கேட்டார். சொத்து வாங்கியதில் பிரச்சனை ஏற்பட்டது என்று கூறியது உண்மை. நஜாத்துக்கு வாங்கிய சொத்தை தன் பெயரில் எழுதிக் கொண்டார் என்று நான் வாக்கு மூலத்தில் கூறவில்லை என்று நீதி மன்றத்தில் கூறினேன். அது பதிவு செய்யப்பட்டது. அந்த ஆதாரம் என்னிடம் உள்ளது.

இது விஷயமாகத் தான் அபூ அப்துல்லா வழக்கு போட்டார். நஜாத் சொத்தை என் பெயரில் எழுதிக் கொண்டதாக பீஜே கூறியுள்ளார். எனவே அவரை தண்டிக்க வேண்டும் என்பது தான் வழக்கு.

பீஜே கையெழுத்து போடவில்லை. தடா நீதிமன்றத்திலும் இதைக் கூறியுள்ளார். அப்படி இருக்கும் போது பீஜே சொல்லாததைச் சொன்னதாக எப்படிக் கூறுகிறீர்கள் என்று நீதிபதி கேட்ட போது அவரால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. இதனால் இது பொய் வழக்கு என்று கூறி நீதிமன்றம் அவரது வழக்கைத் தள்ளூபடி செய்து விட்டது. அதாவது அவர் பொய்யர் என்பது இதன் கருத்து.

பொதுவாக கிரிமினல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட்வர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு சத்தியப் பிரமானம் வாங்குவது வழக்கம்.

பீஜே நாளை குற்றவாளிக் கூண்டில் ஏறப்போகிறார் என்று நீதி மன்றத்தால் பொய்யர் என்று அறிவிக்கப்பட்ட அபூ அப்துல்லாவும் ஜாக் இய்கக்கத்தினரும் எஸ்எம்எஸ் பரப்பினார்கள். அவரது நோக்கம் குற்றவாளிக் கூண்டில் நான் நிற்க வேண்டும் என்பது தான்.

அல்லாஹ் பல சந்தர்ப்பங்களில் நினைத்துப் பார்க்காத வகையில் எனக்குப் பேரருள் புரிந்துள்ளான். அது போல் இப்போதும் பேரருள் புரிந்தான். அன்று முழு நேர பவர் கட் என்று திருச்சி மின் வாரியம் அறிவித்தது. இதனால் கோர்ட் வளாகத்தில் வழக்கு நடத்த முடியவில்லை. சிறிய வராந்தாவில் தான் வழக்கு நடந்தது. அங்கே குற்றவாளிக் கூண்டு வைக்க முடியாது. மேலும் சத்தியப்பிரமாணம் குற்றவாளிக் கூண்டில் நிற்க வைத்துத் தான் எடுக்க வேண்டும். கூண்டு இல்லாததால் சத்தியப்பிரமானமும் எடுக்கப்படவில்லை. அபூ அப்துல்லா நின்ற அதே இடத்தில் தான் நானும் நிற்கும் அதிசயம் நடந்தது.
இந்த அற்ப சந்தோஷத்தைக் கூட அல்லாஹ் அவருக்குக் கொடுக்கவில்லை.
உங்கள் வழக்கறிஞர் சொல்வதை பதிவு செய்யலாமா என்று மட்டும்தான் நீதிபதி கேட்டார். ஆம் என்றதும் அவரே வார்த்தைகளைச் சொல்லி பதிவு செய்தார். அபூ அப்துல்லாவின் இந்த் ஆசை கூட நிறைவேறவில்லை.

தடா நீதிமன்றத்தில் நான் சொன்னதைத் தான் நீதிமணர்ம் பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணையில் எத்தனை பொய்கள் அவர் சார்பில் சொல்லப்பட்டது என்பதை முழு விசாரணையையும் வாசிப்பவர்கள் உணர முடியும்.

நான் அபூ அப்துல்லாவை அப்பழுக்கு இல்லாதவர் என்று நீதி மன்றத்தில் கூறவில்லை. அவர் பரிசுத்த்வான் என்றும் கூறவில்லை. சொத்து விஷயத்தில் பிரச்சனை இருந்தது என்று நான் கூறியிருக்கிறேன். நான் சொல்லாத ஒரு வார்த்தையைச் சொல்லவில்லை என்று கூறுவது கோழைத்தனமா?

என்னுடைய கையெழுத்து இல்லாமல் பொலீஸ் எழுதிக் கொண்டதை நம்பி மூளையுள்ள எவராவது வழக்கு போடுவார்களா? அதை இந்த அரை வேக்காடு வாந்தி எடுக்கலாமா?

நீதி மன்றத்தில் தீர்க்கப்பட்ட ஒரு விஷயத்தில் மாற்றுக் கருத்து சொன்னதற்கும் கடுமையான பிரிவின் கீழ் வழக்கு போட முடியும். பொய்ப் பெயரில் இந்த அரை வேக்காடு ஒளீந்து கொண்டிருந்தால் அதுவும் அப்போது அம்பலமாகும் என்று எச்சரிக்கிறேன்.

அபூ அப்துல்லா தான் பொய்யர் என்பது நீதிம்ன்றத்தின் தீர்ப்பு. அதற்கு மாற்றமாக எழுதுவது கடும் குற்றம் என்பதைத் தெரிவிக்கிறேன்

அடுத்ததாக இந்த அரை வேக்காடு உளறுவதைப் பாருங்கள்

3. சென்ற ஆண்டு தனிநபர் இயக்கம் நடத்திய கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தின் போது கலந்து கொண்ட தொண்டிப் பெரியவர், காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டு அருகே இருந்த பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டபோது, பத்து நிமிடம் மட்டுமே அங்கே இருந்துவிட்டு, அனைவரையும் கைது செய்யப்போவதாக உளவுத் துறையினர் நிர்வாகிகளிடம் சொன்னதை அறிந்தவுடன், யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் எஸ்கேப்' ஆன உண்மை தெரியதா? அந்த இடத்தை விட்டு வெளியேறியவுடன் வீட்டிற்கும் செல்லாமல், தலைமையகத்திற்கும் செல்லாமல், ரகசிய இடத்தில் ஒளிந்த உண்மை தெரியாதா? கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படும் வரை வெளியே தலைகாட்டாத விஷயம் ஊருக்கே தெரியாதா?

அட கூறு கெட்ட அறிவிலியே! எவனாவது எதையாவது சொன்னால் அதை எழுதி விடுவதா?

எந்தப் போராட்டமானாலும் கைது செய்யப்பட்டு மணடபத்தில் வைக்கப்பட்டால் அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக சில நிர்வாகிகள் வெளியே இருப்போம். மாபெய்யரும் இப்படி இருந்திருக்கிறார்.

ஒரு வேளை ரிமாண்ட் செய்யப்பட்டால் அதற்கான சட்ட உதவிகளுக்காகவும் சிலர் வெளியே இருந்தாக வேண்டும். அந்த அடிப்படையில் நான் பல போராட்டங்களில் வெளி விவகாரத்தைச் சுமந்திருக்கிறேன். இது பொதுவாக உள்ள நிலைமை.

ஆனால் கவர்னர் மாளிகைப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட போது நான் வெளி விவகாரப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பலரில் ஒருவனாக் நான் இருந்தேன். ஆனால் அந்தப் போராட்டத்தில் மிகவும் விசித்திரமான நிலை இருந்த்து.

கைது செய்யப்பட்டவர்களைக் காவல் துறை பதிவு செய்யவில்லை. வாசற்கதவை அடைக்கவில்லை. போறதாக இருந்தால் போங்கள் என்று தான் கூறினார்கள். இவர்கள் கைது செய்வதாகத் தெரியவில்லை. முக்கியமான எழுத்து வேலை உள்ளது நான் போகிறேன் என்று நிர்வாகிகளிடம் தெரிவித்து விட்டு வந்து விட்டேன். மேலும் அப்போது இயக்க நிர்வாகியாக நான் இருக்கவில்லை.

உளவுத்துறை ரிமாண்ட் செய்யப் போகிறது என்று இந்த கூறு கெட்டவருக்கு வஹீ வந்த்தா? உளவுத்துறை இதைச் சொல்வதாக இருந்தால் மாநில நிர்வாகியிடம் தான் சொல்லும். இந்த அறை வேக்காடு மாநில நிர்வாகியா?

நெருக்கடியான எந்தக் கட்டத்திலும் பின் வாங்கி ஓடியதாக என் வாழ்வில் ஒரு சமபவத்தையும் காட்ட முடியாது என்பதை அறை கூவலாகவே வைக்கிறேன்.

அடுத்ததாக அடுத்த உளறலைப் பாருங்கள்

4. மாநிலப் பொதுக் குழுவில் பேரணி - ஆர்ப்பாட்டம் என்று முடிவெடுத்துவிட்டு, பேரணி நடத்தினால் கைது செய்வோம் என்று காவல்துறை அறிவித்தவுடன் பின்வாங்கி, ஆர்ப்பாட்டத்தை மட்டும் நடத்திய வீரம் சொரிந்த வரலாறு சமுதாயத்திற்குத் தெரியாதா?

எத்தனையோ போராட்டங்கள் குறித்து செயற்குழுவில் முடிவு செய்வதுண்டு. தக்க காரணங்களால் மாற்றப்படுவதும் உண்டு.

பொதுவாக பலமுறை இப்படி நடந்ததுண்டு.

பேரணிக்கு அனுமதி இல்லை என்பதை மாவட்டங்கள் தலைமையின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். முடியுமானால் தடையை மீறி பேரணி நடத்துங்கள்! ஆர்ப்பாட்டம் தான் சிறந்தது என்று கருதினால் ஆர்ப்பாட்டம் நடத்துங்கள் என்று கடந்த கால மரபுப்படி மாநில நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தஞ்சை வடக்கு மாவட்டத்தினர் தடையை மீறி பேரணி சென்றனர். சென்னை மாவட்ட நிர்வாகிகள் மாபெரும் கண்டணக் கூட்டம் நடத்த உள்ளதால் தடை மீறி பேரணி என்பதை விட ஆர்ப்பாட்டம் கண்டனக் கூட்டம் என்று முடிவு செய்தனர்.

இதில் எனக்கோ மாநிலத் தலைமைக்கோ தலையீடு இல்லை.

அனுமதி கிடைக்கவில்லை என்றால் அவரவர் சக்திக்கு ஏற்ற போராட்டத்தில் ஈடுபடுத்துவது தான் மரபாகவும் உள்ளது. மார்க்கமும் சக்திக்கு மீறியதை சுமத்தக் கூடாது என்று கூறுகிறது.

அடுத்து இவர்களின் எழுச்சியைக் கண்டு பொறாமையால் நாம் எழுதுவதாகக் கூறுவது மிகப் பெரிய ஜோக் என்று சொல்லலாம்.

சென்னையில் நடந்த போராட்டம் பற்றி ஒப்பிட்டு எழுதிய தினத்தந்தி தமுமுக 200 பேர் என்றும் தவ்ஹீத் ஜமாஅத் 600 பெண்கள் உடபட் 2000 பேர் என்றும் கணிக்கும் அளவுக்கு வளர்ந்த இயக்கத்துக்கு இவர்களின் தொடை நடுங்கும் வீரியத்தைக் கண்டு பொறாமை என்கிறார்கள், கண்டதையும் உளறிக் கேவலப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பெண்களை நாங்கள் கேடயமாகப் பயன்படுத்தவில்லை என்பதற்கு இவர்கள் பெண்களின் வாக்கு மூலத்தைக் காட்டி ஏமாற்ற பார்க்கின்றனர். எந்த இயக்கத்துப் பெண்களாக இருந்தாலும் போராட்டங்களில் வீரியத்தைத் தான் காட்டுவார்கள். நிர்வாகிகளின் விருப்பம் அதுதான் என்று எண்னிக் கொண்டு இப்படி செய்வார்கள். கைது தான் என்பது உறுதியானால் பிற இயக்கத்தின் உதவி தேடாமல் சிறை செல்வது என்று இவர்கள் முடிவெடுத்து கட்டளை இட்டால் அப்போது பெண்கள் கட்டுப்படுவார்கள்.

நல்ல தலைவர்கள் இது போன்ற கட்டளையைத் தான் போட வேண்டும். கோவை போராட்டத்தில் எத்தனை பெண்கள் சிறை செல்ல துணிந்தார்கள். நாம் தான் கண்டிப்புடன் தடுத்து விட்டோம்.

பிற இயக்கங்கள் உதவாமல் சிறையில் அடைக்கும் நிலை ஏற்பட்டிருந்தால் இவர்கள் பெண்களை சிறையில் தள்ளி இருப்பார்கள். சிறைக் கூடம் பற்றி அறிந்த் எந்தத் தலைவனும் இந்த முடிவை எடுக்கவே மாட்டான்.

இந்த அரை வேக்காடுகள் தான் சிங்கத்தின் கூட்டமாம்! இவர்களின் வீரம் நார் நாராய் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கும் போது கூட சிங்கம் என்று தம்பட்டம் அடிப்பது என்றால்? உங்களுக்கு வெட்கமே இல்லையா? சூடு சொரணை அனைத்தயும் மூட்டை கட்டிவைத்து விட்டுத்தான் பேனாவை எடுப்பீர்களா?

அட வடி கட்டிய கோழைகளா?

இன்னும் உளறினால் பதிலடி தொடரும்,

10.12.2009. 15:24




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
122 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி