பாக்கர் பிரச்சனை என்ன

பாக்கர் பிரச்சனை என்ன

பாக்கர் அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதன் காரணங்கள் அனைவருக்கும் முழுமையாகத் தெரியவில்லை. நீக்கப்பட்டவர்கள் தாம் உண்டு தம் வேலை உண்டு என்று இருந்தால் நாமும் அது போல் இருந்து விடலாம்.

ஆனால் அவர்கள் அவ்வாறு நடப்பதற்குப் பதிலாக தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை கோட்பாடுகளில் வெறுப்படைந்து தாமாக விலகிச் சென்று தனி இயக்கம் கண்டது போலவும், அவர்கள் மீது வீண் பழி சுமத்தி தவ்ஹீத் ஜமாஅத் அவர்களை நீக்கி விட்டது போலவும் ஒரு பிரச்சாரம் திட்டமிட்டு நடத்தப்படுகிறது.

அது மட்டுமின்றி தவ்ஹீதின் பெயரால் மார்க்கத்துக்கு முரணான ஃபத்வாக்களும்  பாக்கர் கும்பலால் அளிக்கப்படுகின்றன. தமுமுகவினர் எப்படி முகமூடி அணிந்து பல அவதூறுகளைப் பரப்பினார்களோ அதே வழிமுறையை இவர்களும் கையாள்கிறார்கள்.  (இப்போது தமுமுகவினரின் இது போன்ற செயல்கள் பெருமளவு குறைந்துள்ளன)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவரான பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் பாக்கர் மீது பொய்ப்பழி சுமத்தி விட்டார் என்று மின்னஞ்சல் மூலம் துணிந்து இவர்கள் எழுதுகிறார்கள் என்றால் நடந்தது என்ன என்பதை விளக்கும் அவசியம் ஏற்படுகிறது.

 

பாக்கர் நீக்கப்பட்டது ஏன்? அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மையா? என்பதை தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி விளக்கியுள்ளார். அதன் காரணமாகத் தான் அவரைப் பொய்யர் என்கின்றனர். யார் பொய்யர்கள் என்பதை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

பாகம்-1

 

பாகம்-2

 

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

 


பாக்கர் மீது தொடர்ந்து பல குற்றச்சாட்டுக்கள் வந்தன. அவரை அம்பலப்படுத்தாமல் அவர் ஒதுங்கியிருக்க வேண்டும் என்று புதிய நிர்வாகம் கேட்டுக் கொண்டது. இதை அறிந்த ஹாமீம் இப்ராஹீம் அவர்கள் பாக்கர் மீது பகிரங்கமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிரூபிக்க நான் தயார் என்றும் தலைமைக்குக் கடிதம் எழுதினார். இதுவே பாக்கர் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கக் காரணமாக அமைந்தது. இதன் பின்னர் மண்ணடியில் நடந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் பகிரங்க சவால் விட்டு ஹாமீம் இப்ராஹீம் உரையாற்றினார். அந்த உரையிலும் போதிய விபரங்கள் உள்ளன. அந்த உரையைக் கேட்க இங்கே கிளிக் செய்யவும்.

 

பாகம்-1

 

பாகம்-2

 

 

 பாக்கர்அனைத்து குற்றச்சாட்டுக்களையும்ஹாமீம் இப்ராஹீம்

Published on: November 9, 2009, 8:32 PM Views: 9502

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top