ஆதீனத்தின் கடிதம் போர்ஜரியா?
ஆதீனத்தின் கடிதம் போர்ஜரியா?
போர்ஜரிப் பேர்வழியின் கேள்வி.
மதுரை ஆதீனத்தின் கடிதத்தை தவ்ஹீத் ஜமாஅத் இணைய தளம் வெளியிட்டது. அதன் எழுத்துக்களில் முதல் பகுதி ஒரு வகையான எழுத்திலும் இறுதிப் பகுதி வேறு வகையான எழுத்திலும் இருப்பதாலும் அதன் இறுதியில் ஆதீனத்தின் கையெழுத்து இல்லாததாலும் இதில் சந்தேகம் எழுப்பப்படுகிறது. அதாவது வருத்தம் தெரிவிக்கும் பகுதி நாமாக எழுதிக் கொண்டது போல் அந்தச் சந்தேகம் அமைந்துள்ளது.
இந்தக் கேள்வி சரிதான். ஆனால் கேட்பவன் தான் சரி இல்லை.
ஏனெனில் அவனைப் பற்றியே பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. நீ யார் என்று கேட்கும் போது நான் இன்னார் என் டஹ்நெஎன் தந்தை இன்னார் என்று சொல்லக் கூட முடியாத ஒருவர் - மானம் ரோஷம் இருந்தால் அது போகக் கூடிய வகையில் கேள்வி கேட்ட பின்பும் தான் யார் என்பதைச் சொல்லாமல் மறைக்கும் பலவேசத்தார் - ஒவ்வொரு பெயரில் ஒளிந்து கொண்டு தன்னைத் தானே பாராட்டி எழுதிக் கொள்வதாக சந்தேகிக்கப்படும் பேர்வழி - இந்தச் சந்தேகத்தை எழுப்பி இருப்பது தான் வேடிக்கையாக உள்ளது. தன்னைப் பற்றி எழும் பயங்கரமான சந்தேகத்தை போக்க கடமைப் பட்டவர் அதை செய்யாமல் செய்ய முடியாமல் சந்தேகம் எழுப்புகிறார். மார்க்க அடிப்படையில் இது அவசியம் என்று ஆதாரத்துடன் சுட்டிக்காட்டிய பிறகும் தன்னை அடையாளம் காட்ட மறுப்பவர் இப்படிக் கேட்கிறார். உனக்கு பல முகமூடி உண்டு என்று குற்றம் சாட்டிய பிறகும் தன்னை வெளிப்படுத்த மறுப்பவர் யாருடைய கையெழுத்து என்று சந்தேகம் எழுப்புகிறார்.
இது தான் கேவலமாக உள்ளது.
மதுரை ஆதீனத்தின் கடிதத்தை அவரது உதவியாளர் தான் எழுதினார். அது தான் கடிதத்தின் முதல் பகுதி. அதில் வருத்தம் தெரிவிக்கும் வாசகம் இல்லை. எனவே இதை ஏற்க முடியாது என்று மாவட்ட நிர்வாகிகள் உறுதியாகக் கூறினர். அதிகாரிகளும் வற்புறுத்தினார்கள். இதன் பின்னர் ஆதீனமே அந்தப் பேப்பரை வாங்கி வருத்தம் தெரிவிக்கும் வாசகத்தை தன் கைப்பட எழுதினார் அதை அவரே வாசித்தும் காட்டினார். அவர் எழுதியதும் அவர் வாசித்துக் காட்டியதும் விடியோவில் பதிவு செய்யப்பட்டது. வீடியோ ஆதாரம் இருப்பதால் அவரது கையெழுத்து இல்லாததை மாவட்ட நிர்வாகிகள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அவர் ஆசி வழங்கி பால் வழங்கியதை நம் சகோதரர்கள் அருந்த மறுத்தனர். அது தவறு என்பதையும் விளக்கினார்கள். அவருக்கு தஃவாவும் செய்தனர்.
இப்போது கடிதம் அவர் எழுதியது தானா என்ற சந்தேகம் எழுப்பப்பட்டதால் அந்தக் காட்சி மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து ஃபித்னா பன்னாமல் இருக்க மாட்டார்கள். அப்போது தேவையான விஷயங்கள் வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ்.
ஆதீனம் கடிதம் வாசிக்கும் வீடியோ
Play Without Downloading
Download To your computer
முழு விபரம் உணர்வில் காண்க
04.01.2010. 20:15
