கருணாநிதி ஓர் இறை நேசர் காதர் மைதீன் கூறுகின்றார்

கருணாநிதி ஓர் இறை நேசர் காதர் மைதீன் கூறுகின்றார்

அண்மையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு நடைபெற்றது. இதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதியும் அழைக்கப் பட்டிருந்தார். இப்பொதுக்குழுவில் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன் பேசும் போது, தனக்கு வேலூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தந்த கருணாநிதியைப் புகழ்ந்து தள்ளினார்.

பொதுக்குழுவிலோ, வேறு பொது மேடையிலோ கருணாநிதியைப் புகழ்வதற்கு மட்டுமல்ல! ஸ்தோத்திரம் செய்வதற்கும் அவருக்கு உரிமை இருக்கின்றது. அதை நாம் கண்டு கொள்ளப் போவதில்லை.

ஆனால் தேவையில்லாமல் திரைப்பட வசனகர்த்தா கருணாநிதியை திருக்குர்ஆன் வசன விரிவுரைகர்த்தாவாக சித்தரித்துப் பேசியிருக்கின்றார். அதுவும் தமிழக அளவில் அல்ல! உலக அளவிலான விரிவுரை கர்த்தாவாக ஆக்கி, முஸ்லிம்களின் உள்ளங்களைக் காயப்படுத்தியிருக்கின்றார். வேலூரில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததற்காக கருணாநிதியை வலியுல்லாஹ் ஆக்கி முஸ்லிம்களின் மனங்களில் வேல் பாய்ச்சியிருக்கின்றார்.

அல்லாஹ், வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாவான். அவனது ஒளிக்கு உவமை ஒரு மாடம். அதில் ஒரு விளக்கு உள்ளது. அவ்விளக்கு ஒரு கண்ணாடிக்குள் உள்ளது. அக்கண்ணாடி ஒளி வீசும் நட்சத்திரம் போன்றுள்ளது. பாக்கியம் பொருந்திய ஸைத்தூன் (ஒலிவ) மரத்திலிருந்து அது எரிக்கப்படுகிறது. அது கீழ்த்திசையைச் சேர்ந்ததுமன்று. மேல் திசையைச் சேர்ந்ததுமன்று. நெருப்பு படாவிட்டாலும் அதன் எண்ணையும் ஒளி வீசுகிறது. (இப்படி) ஒளிக்கு மேல் ஒளியாகவுள்ளது. தான் நாடியோருக்கு அல்லாஹ் தனது ஒளியை நோக்கி வழி காட்டுகிறான். மனிதர்களுக்காக உதாரணங்களை அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன். (அல்குர்ஆன்24:35)

அல்குர்ஆனின் இந்த வசனத்திற்கு 50 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்தாராம். தமிழகத்திலுள்ள வியாக்கியான கர்த்தாக்கள், உலக அளவில் திருக்குர்ஆனின் கமென்டேட்டர்கள், மாபெரும் அறிஞர்களின் உரையைப் படித்து விட்டாராம். அந்த வசனத்திற்கு இந்த பராசக்தி வசனகர்த்தாவைப் போல் யாரும் வியாக்கியானம் தரவில்லையாம்!

அப்படி அகில உலக திருக்குர்ஆன் விரிவுரையாளர் (?) கருணாநி என்ன தான் வியாக்கியானம் கொடுத்து விட்டார் என்று பார்த்தால் வெறும் கற்பனை தான், வெட்ட வெளி தான் தெரிந்ததே தவிர கருத்தை விளங்கக் கூடிய விளக்கம் ஏதுமில்லை.

"கற்பனைக்கு எட்டாத வெட்டவெளியிலிருந்து தானே எழுந்து வெளிக்கிளம்பி வருகின்ற ஒளி வெள்ளம்!'' இது தான் இஸ்லாமிய போதகர்(?) கருணாநிதி கொடுத்த விளக்கம்! நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது, நாம் என்று சொன்னால் உதடு ஒட்டும் என்ற அர்த்தமற்ற தத்துவத்தைப் போன்று தான் இந்த விளக்கமும் அர்த்தமற்று அமைந்திருக்கின்றது.

பொதுவாகவே குர்ஆனுக்குக் குர்ஆனே விளக்கமாகும். குர்ஆனில் விளக்கமில்லையெனில் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் விளக்கமாகும் என்பது சாதாரண முஸ்லிம்கள் கூட விளங்கி வைத்திருக்கும் அடிப்படை விளக்கம்! இது இவர்களுக்குத் தெரியாமல் போனது எப்படி? 24:35 வசனத்திற்கான விளக்கம் அந்த வசனத்திற்குள்ளேயே அடங்கியிருக்கின்றது.

இவ்வசனத்தில் அல்லாஹ் தன்னை ஒளி எனக் கூறி விட்டு தனது ஒளிக்கு உதாரணமாக ஒரு விளக்கைக் கூறுகிறான். இந்த விளக்கு உதாரணம் அல்லாஹ்வின் ஒளியோடு ஒப்பிடும் போது ஏற்புடையதாக இல்லை என்று சிலருக்குத் தோன்றலாம்.

ஏனென்றால் ஒளி வீசுகின்ற எண்ணையை விளக்கில் ஊற்றி எரித்தாலும், அதற்கு கண்ணாடியால் மூடி ஏற்படுத்தினாலும் அந்த ஒளி, அல்லாஹ்வின் ஒளியோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாதது என்பதை அனைவரும் அறிவோம். எனவே தான் இது எவ்வாறு அல்லாஹ்வின் ஒளிக்கு உதாரணமாக அமையும் என்று எண்ணி இது போன்ற வியாக்கியானங்களைக் கொடுக்க முன்வருகின்றனர்.

ஆனால் இங்கே அல்லாஹ் தனது ஒளிக்கு உதாரணம் என்று குறிப்பிடுவதை தனது மார்க்கத்திற்கும் தான் காட்டுகின்ற நேர்வழிக்கும் உதாரணம் என்றே கொள்ள வேண்டும்.

ஏனென்றால் இந்த வசனத்தை நிறைவு செய்யும் போது "தனது ஒளியை நோக்கி நாடியவர்களுக்கு அல்லாஹ் வழி காட்டுவான்'' என்று கூறப்படுகிறது.

நாடியவர்களுக்கு அல்லாஹ் வழி காட்டுவான் என்பது தனது மார்க்கத்தின் பால் வழி காட்டுவான் என்ற கருத்தில் தான் பயன்படுத்தப்படுகிறது. அல்லாஹ்வின் ஒளியை நோக்கி, அல்லாஹ் யாருக்கும் வழி காட்ட மாட்டான்; அல்லாஹ்வின் ஒளியை யாரும் காணவும் இயலாது.

எனவே இவ்வசனத்தில் உதாரணமாகக் கூறப்படுகின்ற ஒளி, அவனுடைய மார்க்கத்திற்கும், நேர்வழிக்கும் உதாரணமே தவிர அவனுடைய ஒளிக்கு உதாரணம் அல்ல. அல்லாஹ்வுக்கு நிகராக எதுவும் இல்லை என்று 42:11, 112:5 ஆகிய வசனங்கள் கூறுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்படி குர்ஆனே கூறுகின்ற இந்த விளக்கத்தை விட்டு விட்டு கருணாநிதியின் விளக்கம் மெய்சிலிர்க்க வைக்கிறதாம். அதோடு நின்றால் பரவாயில்லை! இது சாதாரண மனிதர் சொல்லக் கூடிய விளக்கம் இல்லை! வலியுல்லாக்களும் ஆன்மீகச் செல்வர்களும் கொடுக்கும் விளக்கம் என்று கூறியுள்ளார். கருணாநிதி தான் இவர்களுடைய மவ்லானாக்களுக்ùல்லாம் மவ்லானாவம்! ஆன்மீக குருவாம்!

இவர்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும்! நமக்குக் கவலையில்லை! ஆனால் தங்களுக்கு மடிப்பிச்சை போடுபவர்களைப் புகழ்வதற்காக குர்ஆன் ஹதீஸை, இந்தப் புனித மிகு மார்க்கத்தை ஒரு போதும் இழுக்கக் கூடாது என்று எச்சரிக்கக் கடமைப் பட்டுள்ளோம்!

பதவி பவிசு என்று வந்தவுடன் இலட்சியவாதிகள் கூட குப்புறக் கவிழ்ந்து விடுவதைப் பார்க்கிறோம். நிலையில்லாத இவ்வுலகின் அற்பமான இந்தப் பதவிகளுக்காக மார்க்கத்தை விலை பேசுபவர்கள் அல்லாஹ்வை அஞ்சி, மறுமையில் கிடைக்கும் பதவி தான் நிலையானது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இந்தச் சாக்கடை அரசியலில் நாமும் கவிழ்ந்து விடாமல் ஏகத்துவத்தை மட்டுமே இலட்சியமாகக் கொண்டு நமது பயணத்தைத் தொடர்வோம்.

 

(குறிப்பு: 2004 மார்ச் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை)
 

January 2, 2015, 6:52 AM

விவாதிக்க மறுப்பவர்களைப் பற்றி

விவாதிக்க மறுப்பவர்களைப் பற்றி

நீங்கள் பல விஷயங்கள் குறித்து விவாத அழைப்பு விடுக்கிறீர்கள். சிலர் அந்த அழைப்பை ஏற்று விவாதிக்க முன்வருகின்றனர். சிலர் அதை ஏற்க மறுத்து சில காரணங்களைக் கூறுகின்றனர். அந்தக் காரணங்கள் ஏற்புடையவையா?

நாசித் அஹ்மத்

(ஜெயமோகன் என்பவர் எழுதிய மறுப்பை ஒரு சகோதரர் சுட்டிக் காட்டி விளக்கம் கேட்ட அடிப்படையில் இது எழுதப்படுகிறது)

விவாதம் செய்ய மறுப்பவர்கள் தங்கள் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள எதையாவது எழுதத்தான் செய்வார்கள். அவர்கள் விவாதிக்கத் தயாராக இல்லை என்றும் விவாதிக்கும் அளவுக்கு அந்த விஷயத்தில் அவர்களிடம் உண்மை இல்லை என்றும் நாம் புரிந்து கொண்டு அத்துடன் அதை விட்டு விடுகிறோம். நேரடியாக தங்களிடம் உண்மை இல்லை என்று அவர்களால் ஒப்புக் கொள்ள முடியாது.

அவர்கள் என்ன தான் கூறினாலும் அதில் அவர்கள் உண்மையாளர்கள் அல்ல என்பதை நீங்கள் எளிதாகக் கண்டு பிடித்து விடலாம்.

நமது விவாத அழைப்பை ஏற்க மறுப்பதற்கு இவர்கள் சொல்லும் காரணம் உண்மை என்றால் அவர்கள் அதன்படி எல்லா நேரங்களிலும் நடந்து கொள்ள வேண்டும்.

ஆனால் அவர்கள் நமது அழைப்பை மறுப்பதற்கு முன்னால் பல விவாதங்களில் பங்கெடுத்துள்ளனர். தொலைக்காட்சியில் முகம் காட்டுவதற்காக நேரடி விவாதங்கள் பலவற்றைச் சந்தித்தவர்களாக இருக்கிறார்கள். அல்லது செய்தித்தாள்களில் பெயர் வர வேண்டுமென்பதற்காக பல விஷயங்களில் வாதங்களை எடுத்து வைத்து எதிரிகளின் வாதங்களை மறுத்துப் பேசியவர்களாக உள்ளனர்.

இதில் இருந்து அவர்கள் சொல்லும் காரணம் உண்மை இல்லை என்று அறிந்து கொள்ளலாம். கீழ்க்கண்ட காரணத்தையும் சொல்கிறார்கள்.

ஏனென்றால் அவற்றின் அடிப்படை என்பது நம்பிக்கை. அதாவது முதலில் இருப்பது உறுதியான மாற்றமுடியாத நம்பிக்கை. நபி மீது, அவர் முன்வைத்த அல்லாஹ் மீது ,அவரில் வெளிப்பட்ட குர்ஆன் மீது உறுதியான முழுமுற்றான நம்பிக்கையில் இருந்தே இஸ்லாம் உருவாகிறது. அவற்றைப்பற்றிய அவநம்பிக்கையை, மறுப்பை இஸ்லாம் மதநிந்தனைக் குற்றமாக மட்டுமே நினைக்கிறது. இந்நிலையில் எதைப்பற்றி விவாதிப்பது?

மதத்தில் பிடிமானம் இருப்பதால் விவாதிப்பதால் பயன் இல்லை என்று சொல்லும் காரணமும் கேலிக்குரியதாக உள்ளது. மதத்தில் நமக்குப் பிடிமானம் உள்ளது போல் அதற்கு எதிரான கருத்தில் அவர்களுக்குப் பிடிமானம் உள்ளது. பிடிமானம் உள்ளதால் தான் அவர்கள் ஒரு கருத்திலும் நாம் ஒரு கருத்திலும் இருக்கிறோம்.

ஆனால் இப்படி சொல்பவர்கள் ஊடகங்கள் மூலம் இஸ்லாத்தை விமர்சிப்பதற்கு இது ஏன் பொருந்தாமல் போனது? ஊடகங்கள் மூலம் எழுதும் போது மட்டும் முஸ்லிம்களின் பிடிமானம் இல்லாமல் போய்விடுமா?

இந்த வாதத்தில் இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இஸ்லாம் குறித்து எதையும் எப்போதும் எழுதாமல் இருந்திருக்க வேண்டும். யார் இவர்களின் வாதங்களுக்குப் பதில் சொல்லத் தயாராக இருக்கிறார்களோ அந்தக் களத்துக்கு வந்து சொல்ல மாட்டார்களாம். பதில் சொல்ல யாரும் இல்லாத களத்தில் அல்லது பதில் சொன்னாலும் அதை வெளியிட மாட்டோம் என்று முடிவு செய்துள்ள களத்தில் மட்டும் தமது கருத்தை விவாதிப்பார்களாம்

இவர்கள் சொன்ன காரணம் இதற்கு மட்டும் இது பொருந்தாதா?

அடுத்து அவர்கள் இன்னொரு விஷயத்தையும் சொல்லி இருக்கிறார்கள்.

ஆக, அந்த விவாதங்கள் எல்லாம் வெறும் மேடை நாடகங்கள் மட்டுமே. நானே ஜெய்னுலாப்தீன் அவர்களின் இரு நிகழ்ச்சிகளில் பார்வையாளராகப் பங்கெடுத்திருக்கிறேன். கேட்கப்படும் வினாக்கள் முன்னரே எழுதிக் கொடுக்கப்படுகின்றன. அந்த வினாக்களில் தேவையானவற்றை ஜெய்னுலாபிதீன் தேர்வு செய்கிறார். அதற்கு வழக்கமான விடைகளைச் சொல்கிறார். இதே நிகழ்ச்சியை இப்படியே சாது செல்லப்பா போன்ற பெந்தேகொஸ்தே பிரச்சாரகர்களும் செய்கிறார்கள்.

இதில் கடுகளவும் உண்மை இல்லை. அவர் என்னுடைய நிகழ்ச்சிக்கு வந்ததாக சொல்வது பொய்யாக இருக்க வேண்டும். அல்லது வேண்டுமென்றே அவர் பொய்யாகச் சொல்லி இருக்க வேண்டும்.

நான் பங்கேற்கும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற நிகழ்ச்சியிலோ வேறு கேள்விபதில் நிகழ்ச்சிகளிலோ இவர் கூறுவது போல் கேள்விகளை முன்னரே எழுதிக் கொடுத்து கேட்டகச் செய்யும் ஒரு நிகழ்ச்சி கூட நாம் நடத்தியதில்லை.

நிகழ்ச்சி ஆரம்பித்ததும் ஒரு முன்னுரையை நான் நிகழ்த்தி விட்டு ஒரு அறிவிப்பும் செய்வேன்.

இந்த நிகழ்ச்சி முன்னரே கேள்வியும், கேள்வி கேட்பவர்களும் தயார் செய்யப்பட்டு நடக்கும் நிகழ்ச்சி அல்ல. யார் கேள்வி கேட்க விரும்புகிறீர்களோ அவர்களுக்கு இனிமேல் தான் உங்கள் முன்னிலையில் தான் டோக்கன் கொடுக்கப்படும். யார் டோக்கன் வாங்கப் போகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. அவர்கள் என்ன கேள்வி கேட்பார்கள் என்பதும் எனக்குத் தெரியாது. இஸ்லாம் குறித்து எந்தக் கேள்வி கேட்டாலும் அதற்குப் பதில் இருக்கிறது என்ற தன்னம்பிக்கை காரணமாகவே உங்களின் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல நாம் தயாராக இருக்கிறோம் என்றும் இப்போது கேள்வி கேட்பவர்கள் கைகளை உயர்த்தினால் டோக்கன் தரப்படும் என்றும் அறிவித்து விட்டு டோக்கன் கொடுப்போம்.

உதாரணத்துக்கு கீழ்க்கண்ட நிகழ்ச்சியைப் பாருங்கள். இதில் 13 வது நிமிடத்தில் அந்த அறிவிப்பு உள்ளதைக் காணலாம்.

http://onlinepj.com/bayan-video/iniya_markam/iniya_markam_kobi/

கீழ்கண்ட நிகழ்ச்சியில் 6 வது நிமிடத்தில் அந்த அறிவிப்பு உள்ளது.

http://onlinepj.com/bayan-video/iniya_markam/iniya_markam_thirupur/

இப்படித்தான் எல்லா ஊர்களிலும் அறிவிப்பு செய்கிறோம்.

ஆனால் அந்தச் சகோதரர் கூறுவது போல் கேள்விகளை செட்டிங் செய்து வேறு சிலர் பதில் சொல்கிறார்கள் என்பதை நான் அறிவேன். அந்த நிகழ்ச்சிக்கு அவர் சென்றிருக்கலாம். அது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற நிழ்ச்சி அல்ல.

இரண்டையும் போட்டு குழப்பிக் கொண்டதால் அவர் இப்படி எழுதிவிட்டாரோ என்னவோ தெரியவில்லை.

செட்டிங் என்பது தான் இவர்கள் விவாதிக்க மறுக்க காரணம் என்றால் அந்தக் காரணமும் நமக்குப் பொருந்தாது.

ஈரானிலும் பாகிஸ்தானிலும் பலர் கொல்லப்பட்டுள்ளதாக இவர்கள் கூறுவதும் இதற்கு சம்மந்தமில்லாதது. இது போன்ற பயங்கரவாதச் செய்ல்களை நாம் இவர்களை விட வலிமையாக எதிர்க்கிறோம். இதற்கும் இஸ்லாத்துக்கும் சம்மந்தம் இல்லை என தெளிவுபடுத்தி வருகிறோம்.


February 10, 2013, 8:33 AM

பட்டப் பெயர் சூட்டலாமா?

கேள்வி

அஸ்ஸலாமு அலைக்கும்

பட்டப் பெயர் கொண்டு ஆழைக்காதீர்கள் என்று மார்க்கம் சொல்லும் போது கீழைப் பொய்யர் என்று ஒருவரை நீங்கள் குறிப்பிடுவது சரியானதா?

ஷாஹல் இஸ்மாயீல்

தொடர்ந்து படிக்க August 18, 2010, 3:35 AM

எடுபடாத வாதங்கள்

எடுபடாத வாதங்கள்

எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே

அன்புள்ள சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். ஜூலை 4 மாநாடு அல்லாஹ்வின் அருளால் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அல்ஹம்து லில்லாஹ்.

மாநாடு குறித்த முழு விபரங்களை நிர்வாகிகள் அறிவிப்பார்கள். இது குறித்த சில வாதங்களுக்கு மட்டும் நான் விளக்கம் அளிப்பதற்காக இந்த மடலை எழுதுகிறேன்.

தொடர்ந்து படிக்க July 5, 2010, 11:51 PM

சொர்க்கம் வானத்தில் இல்லை

சொர்க்கம் வானத்தில் இல்லை கேட்கப்பட்ட ஏழு கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக இந்தக் கேள்வியைப் பரப்பியவர்கள் நாம் விளக்கம் அளித்த பின் இரண்டில் ஒரு முடிவுக்கு வர வேண்டும். பீஜே அளித்த விளக்கம் இந்தக் காரணத்தால் சரியில்லை என்று கூற வேண்டும்.

அல்லது நான் தவறான தகவலைக் கூறி விட்டேன்; தவறான கேள்வியை கேட்டு விட்டேன் என்று பரப்ப வேண்டும்.

தொடர்ந்து படிக்க May 20, 2010, 9:07 AM

வாய்களால் ஊதி அனைக்க முடியாத சத்தியக

வாய்களால் ஊதி அனைக்க முடியாத சத்தியக் கொள்கை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து சக்திகளும் வரிந்து கட்டிக் களமிறங்கியுள்ளனர். இது தமிழக தவ்ஹீத் வரலாற்றில் முதல் முறை அல்ல. இதற்கு முன்னரும் இவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு களமிறங்கினார்கள்

தொடர்ந்து படிக்க October 12, 2010, 11:15 PM

இவன் தான் காதியானி

இவன் தான் காதியானி

மிர்ஸா  குலாம்  அஹ்மத்  என்பவன்  தன்னை  நபி  என்று  வாதிட்டு  தனி  மதத்தை  உருவாக்கி  இஸ்லாத்தை விட்டு  வெளியேறினான்.  

இவனைப்  பின்பற்றும்  குருட்டுக்  கும்பல்  தம்மை  அஹ்மதியா  ஜமாஅத்  எனக் கூறிக்  கொண்டு  முஸ்லிம்  வேடம்  போட்டு  அப்பாவிகளை  ஏமாற்றப்  பார்க்கிறது. 

தொடர்ந்து படிக்க January 4, 2011, 6:23 PM

ஷீஆக்களின் மறுபிரவேசம்

ஷீஆக்களின் மறுபிரவேசம்

அறிஞர் பீஜே அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். அல்ஜன்னத்தில் நீங்கள் எழுதிய ஷீஆக்களின் மறுபிரவேசம் என்ற ஆய்வுக் கட்டுரை அதன் முக்கியத்துவம் கருதி அண்மையில் ஏகத்துவத்திலும் மீள் பிரசுரிக்கப்பட்டது.

தொடர்ந்து படிக்க September 24, 2011, 1:25 AM

வழிகெட்ட சலபிக் கொள்கை

வழிகெட்ட சலபிக் கொள்கை

குழப்பவாதிகளிடம் சில கேள்விகள்

தமிழகத்தின் சில பகுதிகளில் சலபி என்ற பெயரில் பகிரங்க வழிகேட்டுக்கு ஒரு கூட்டம் அழைத்து திரிகிறது, அவர்களின் மடமையை அம்பலப்படுத்த விவாதிக்க அழைத்தால் ஓட்டம் எடுக்கிறது. எனவே அவர்களுக்கு பகிரங்க அறைகூவல் விடுக்கும் இப்பிரசுரம் அப்பாஸ் அலி அவர்களால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. சலபிக் கூட்டம் வாலாட்டும் ஊர்களில் இதை அச்சிட்டு விநியோகம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்

தொடர்ந்து படிக்க June 13, 2012, 12:57 AM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top