செருப்புடன் உளூச் செய்யலாமா?

செருப்புடன் உளூச் செய்யலாமா?

ஃபயாஸ்

பதில்

செருப்பு அணிந்து உளூஉ செய்யக்கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. இது மார்க்கச் சட்டமாக இருந்தால் இதைத் தடை செய்யும் விதமாக குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ கூறப்பட்டிருக்கும். ஆனால் குர்ஆனிலோ நபிமொழிகளிலோ செருப்பணிந்து உளூ செய்யக்கூடாது என்று கூறப்படவில்லை.

உளூவை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்த தொழுகைக்கே இப்படி தடை ஏதும் இல்லை.

செருப்பில் அசுத்தம் ஒட்டியிருப்பது கண்ணுக்குத் தெரியும் போது அதைக் கழற்றிவிட்டு தொழ வேண்டும். அசுத்தம் தெரியாவிட்டால் செருப்பணிந்து கொண்டே தொழலாம் என்று மார்க்கம் கூறுகின்றது. இதைப் பின்வரும் செய்திகள் விளக்குகின்றன.

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் தொழுது கொண்டிருக்கும் போது காலணிகளைக் கழற்றி தமக்கு இடப்பக்கத்தில் வைத்தார்கள். இதை (பின்னால் தொழுது கொண்டிருந்த) மக்கள் கண்டபோது அவர்களும் தங்களது காலணிகளைக் கழற்றிப் போட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தவுடன் ஏன் உங்களுடைய காலணிகளைக் கழற்றிப் போட்டீர்கள்? என்று வினவினார்கள். அதற்கு மக்கள் நீங்கள் காலணிகளைக் கழற்றுவதைக் கண்டதால் நாங்களும் எங்கள் காலணிகளைக் கழற்றினோம் என்று பதிலளித்தனர். அதற்கு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து என் காலணிகளில் அசுத்தம் அல்லது (பிறருக்கு) நோவினை தரும் பொருள் இருப்பதாகத் தெரிவித்தார்கள். (அதனால் தான் நான் கழற்றினேன்.) உங்களில் ஒருவர் பள்ளிக்கு வந்தால் (தமது காலணிகளை) அவர் பார்க்கட்டும். தனது காலணிகளில் அசுத்தத்தையோ அல்லது நோவினை தரும் பொருளையோ கண்டால் அதைத் துடைத்துவிட்டு அதனுடனே தொழுது கொள்ளலாம்.

நூல் : அபூதாவூத் 555

எனவே செருப்பணிந்து தொழலாம் எனில் தொழுகையின் ஒரு அங்கமாக இருக்கின்ற உளூவையும் செருப்பணிந்து கொண்டு செய்யலாம். அதில் தவறில்லை.

ஆனால் உளூவின் இறுதியில் காலைக் கழுவும் போது செருப்பைக் கழற்றி காலை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். கால்களை நன்கு கழுவ வேண்டும் சரியாக கழுவவில்லை எனில் தொழுகையே செல்லாது எனுமளவு என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நாசம்தான்'' என்று இரண்டு அல்லது மூன்று தடவை தமது குரலை உயர்த்திச் சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லா பின் அம்ர்  (ரலி)

நூல் : புகாரி 60

ஒரு மனிதர் அங்கத் உளூ செய்தார். அப்போது அவர்  தமது பாதத்தில் நகம் அளவு இடத்தை (கழுவாமல்) விட்டுவிட்டார். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "திரும்பிச் சென்று, சரியாக உளூச் செய்யுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே அவர் திரும்பிச் சென்று (மீண்டும் உளூச் செய்து) பின்னர் தொழுதார்.

அறிவிப்பவர் : உமர் பின் அல் கத்தாப் (ரலி)

நூல் : முஸ்லிம் 411

செருப்பு அணிந்த நிலையில் கால்களைக் கழுவும் போது சரியாக முழுமையாக்க் கழுவ முடியாமல் போகும் என்றால் அப்போது செருப்பைக் கழற்றிவிட்டு உளூ கால்களைக் கழுவவேண்டும்.

இது குறித்து மேலும் அறிய

http://onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/serupaninthu_pangu_sollalama/

September 8, 2013, 2:09 PM

தொழுகைக்கு ஒலிபெருக்கியைப் பயன்படு

தொழுகைக்கு ஒலிபெருக்கியைப் பயன்படுத்தலாமா?

செய்யத்

பதில்

கூட்டுத் தொழுகையில் இமாமின் நடவடிக்கைகளை மக்கள் அறிந்து கொண்டால் தான் முழுமை பெறும்.

சில நேரங்களில் இமாமுடைய குரல் உரத்த சப்தமாக இருக்காது. இதனால் கடைசியில் இருப்பவர்களுக்குக் கேட்காது. இதனால் குழப்பம் ஏற்படும்.

அல்லது ஒரு தளத்தில் இமாம் இருக்கும் போது மற்றொரு தளத்தில் நிற்கும் மக்களுக்கு இமாமுடைய சப்தம் கேட்க முடியாமல் போய் விடும்.

இமாமுடைய ஓதுதல் சிலருக்குக் கேட்காவிட்டாலும், டுகூவு ஸஜ்தா போன்றவற்றுக்காக அவர் கூறும் தஸ்பீஹ்கள் மக்களுக்குக் கேட்டால் தான் அவரைப் பின்பற்ற முடியும். எனவே இதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்ளலாம். இதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது அவர்களால் சப்தமாக ஓத முடியவில்லை. அவர்கள் ஓதுவதும் தக்பீர் கூறுவதும் அருகில் இருந்த அபூபக்ர் (ரலி) அவர்களுக்குத் தான் கேட்டது. பின்னால் இருந்த மக்களுக்குக் கேட்கவில்லை. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தக்பீர் கூறிய உடன் அதை அபூபக்ர் (ரலி) அவர்கள் உரத்த குரலில் சொன்னார்கள்.

 712 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது அவர்களிடம் பிலால் (ரலி) அவர்கள் தொழுகை பற்றி அறிவிப்பதற்காக வந்தார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்அபூபக்ர் அவர்களிடம் (மக்களுக்குத்) தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று சொன்னார்கள். அதற்கு நான், (என் தந்தை) அபூபக்ர் அவர்கள் இளகிய மனம் உடையவர்கள்நீங்கள் நிற்குமிடத்தில் அவர்கள் நின்றால் அழுது விடுவார்கள். அவர்களால் (தொழுகையில்) ஓத முடியாது என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூபக்ர் அவர்களிடம் (மக்களுக்குத்) தொழுவிக்கச் சொல்லுங்கள்என்று (மீண்டும்) சொன்னார்கள். நான் முன்பு சொன்ன பதிலையே மீண்டும் (மீண்டும்) சொன்னேன். மூன்றாவது அல்லது நான்காவது தடவையில் அவர்கள் (பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள் தாம். அபூபக்ர் அவர்களிடம் (மக்களுக்குத்) தொழுவிக்கச் சொல்லுங்கள்என்று கூறினார்கள். அவ்வாறே அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுவித்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (தம் உடல் நலம் சற்றுத் தேறியிருப்பதைக் கண்ட போது) இரண்டு மனிதர்களுக்கிடையே தொங்கியபடி (பள்ளிவாசலை நோக்கி) புறப்பட்டு வந்தார்கள். (நோயினால் கால்களை ஊன்ற முடியாமல் தம்மிரு கால்களையும் தரையில் பதித்து கோடிட்டு வந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் (தொழுவிக்கும் இடத்திலிருந்து) பின்வாங்க முயன்றார்கள். அப்போது அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீங்கள் தொழுகை நடத்துங்கள்என்று (கையால்) சைகை செய்தார்கள். ஆயினும் அபூபக்ர் (ரலி) அவர்கள் சற்று பின்வாங்கிக் கொண்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு (இடப்) பக்கத்தில் அமர்ந்(து தொழுவித்)தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபியவர்கள் கூறும்) தக்பீரை மக்களுக்குக் கேட்கும் விதமாக (உரத்த குரலில்) கூறிக் கொண்டிருந்தார்கள்.
புஹாரி 712, 664, 683, 687, 713

தொழுகையில் இமாம் கூறும் தக்பீர்களையும் அவரது கிராஅத்தையும் தொலைவில் உள்ளவர்களுக்கு எத்திவைக்கும் பணியை ஒலிபெருக்கி செய்கின்றது. பின்னால் தொழுபவர்கள் இமாமுடைய சப்தத்தைச் செவியுற்றால் தான் அவரைச் சரியாகப் பின்பற்ற முடியும். 

இமாம் வளல்லால்லீன் என்று கூறினால் பின்னால் தொழுபவர்கள் ஆமீன் என்று கூற வேண்டும். இமாம் ஓதுவதைச் செவிகொடுத்து கேட்க வேண்டும். இமாம் ருகூவிற்குச் சென்றால் நாமும் அவரைப் பின்தொடர்ந்து ருகூவிற்குச் செல்ல வேண்டும். இது போன்ற தொழுகைச் சட்டங்களை செயல்படுத்துவதற்கு ஒலிபெருக்கி உதவியாக இருப்பதால் இதைப் பயன்படுத்துவது தவறல்ல.

அறிவியல் சாதனங்களைப் பயன்படுத்துவதால் மார்க்க வரம்புகளை மீற வேண்டிய சூழல் ஏற்பட்டால் மட்டுமே அப்போது அவற்றை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். தொழுகையில் ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவது எந்த மார்க்கச் சட்டத்திற்கும் முரணாக இல்லை என்பதால் இதைப் பயன்படுத்துவது தவறல்ல.

அதிமான மக்களுக்கு இமாம் கூறுவது கேட்க வேண்டும் என்பதற்காக ஒலிபெருக்கி பயன்படுத்தும் போது திடீரென மின்சாரம் நின்று விடக் கூடும். அதற்கேற்ப பேட்டரிகள் மூலம் ஒலிபெருக்கியை இயக்குவது தான் நல்லது.

அதுவும் திடீரென பழுதாகி விட்டால் இமாமைப் பின்பற்றி தொழும் மக்களில் சிலர் இமாமின் தக்பீர்களை கடைசி வரிசையில் உள்ளவர்களும் கேட்கும் வகையில் இமாமின் தக்பீர்களை எதிரொலிக்க வேண்டும். இல்லாவிட்டால் பின்னால் நிற்பவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுவார்கள்.

 

March 31, 2013, 2:37 PM

தொழுகைச் சட்டங்கள் தொகுப்பு

 தொழுகைச் சட்டங்கள் தொகுப்பு

நமது இணைய தளத்தில் பல முறை விளக்கம் சொல்லப்பட்டவைகள் குறித்து மீண்டும் கேள்விகள் வந்து கொண்டே உள்ளன. இதற்குக் காரணம் நேயர்கள் எளிதில் தேடி எடுக்கும் வசதி சிரமமாக உள்ளதே இதற்குக் காரணம். எளிதில் தேடி எடுக்கும் வகையில் இன்ஷா அல்லாஹ் மாற்றம் செய்து கொண்டிருக்கிறோம்.

அது வரை நேயர்கள் எளிதில் அனைத்தையும் சிரமமில்லாமல் தேடும் வகையில் தலைப்பு வாரியாக தொகுத்து வழங்குகிறோம்.

முதல் கட்டமாக தொழுகை தொடர்பான ஆய்வுகள், கேள்வி பதில்கள், நூல்கள், உரைகள் அனைத்தையும் ஒரே தலைப்பில் தந்துள்ளோம். இவ்வாறு மற்ற தலைப்புகளும் ஒவ்வொன்றாகத் தொகுத்து வழங்கப்படும். இன்ஷா அல்லாஹ்.

தொழுகைச் சட்டங்கள் கேள்விபதில் தொகுப்பு

நூல்கள்

பொதுவாக தொழுகை குறித்து அறிந்து கொள்ள கீழ்க்காணும் நூல்களை வாசிக்கவும்

தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு நூல்

ஜனாஸா தொழுகை நூல்

ஜனாஸாவின் சட்டங்கள் நூல்

தொழுகை சட்டங்கள் நூல்

நோன்பு (பெருநாள் தொழுகை பாடம்) நூல்

தொழுகை நேரங்கள்

 களாத்தொழுகை உண்டா?
Play Without Downloadingdownload To your computer

களாத் தொழுகை உண்டா?

 தொழக்கூடாத மூன்று நேரங்கள்

369. களாத் தொழுகை

226 ஐவேளைத் தொழுகை

ஜமாஅத்தும் இமாமைப் பின்பற்றுவதும்

சப்தமாக ஆமீன் கூறுதல்

மவ்லித் ஓதும் இமாம் இணைவைத்தவர் ஆவாரா


நாம் ஓதுவதற்கு இமாம் வாய்ப்பு தராவிட்டால்


மத்ஹப்வாதிகளைப் பின்பற்றி தொழலாமா


பெண்களுக்கு பெண்கள் இமாமத் செய்யலாமா


தொழுகைக்கு ஒலி பெருக்கி பயன்படுத்தலாமா


 பெண்களுக்கு ஜமாஅத் பெருநாள் தொழுகை உண்டா

Play Without Downloading Download To your computer
இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றுதல்
Play Without Downloadingdownload To your computer

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றி தொழலாமா?

பிதஅத் செய்யும் இமாமைப் பின்பற்றி தொழலாமா

வீட்டில் தொழும் போது ஜமாஅத்தாக தொழ அனுமதி உண்டா

முன் வரிசைகளில் சிறுவர்கள் நிற்கலாமா

காலோடு கால் ஒட்டிக் கொண்டு நிற்க வேண்டுமா

இமாமின் தக்பீரை எதிரொலிக்கலாமா

ஒருவரின் முதுகைத் தொட்டு அவரைப் பின்பற்றலாமா

இமாம் ஓத ஆரம்பித்து விட்டால் ஆரம்ப துஆவை அப்போது ஓதலாமா

சிறுவர்கள் இமாமத் செய்தல்

இகாமத் சொன்ன பிறகு முன் சுன்னத்

முன் வரிசையில் நிற்பவரை இழுக்கலாமா

இரண்டாம் ஜமாஅத் மறுப்புக்கு மறுப்பு

இரண்டாம் ஜமாஅத் மறுப்பு

பாங்கு சப்தம் கேட்டால் பள்ளிக்கு வரவேண்டுமா

நாற்காலியில் அமர்ந்து தொழும் ஒழுங்கு என்ன

கூட்டு துஆ கூடாது 

ருகூவில் சேர்ந்தால் அந்த ரககாத் கணக்கில் சேருமா

பாங்கு சப்தம் கேட்கின்ற தொலைவில் உள்ளவர்கள் பள்ளிவாசலுக்கு கட்டாயம் வர வேண்டுமா?

Play Without Downloading Download To your computer

 துஆச் செய்தல் 

கைகளை உயர்த்தி துஆச் செய்ய ஆதாரம் உண்டா

அரபு மொழியில் தான் துஆ செய்ய வேண்டுமா
தொழுகைக்கும் துஆக்கள் நிறைவேறுவதற்கும் தொடர்பு உண்டா

பள்ளிவாசல்களின் சட்டங்கள்

தொழக்கூடாத பள்ளிவாசல் உண்டா
பள்ளிவாசல் கட்ட பிற மதத்தவர்களிடம் நிதி பெறலாமா

பள்ளிவாசலை எவ்வாறு பயன்படுத்துவது வீடியோ

தொழக் கூடாத பள்ளிவாசல்கள் வீடியோ

பள்ளிவாசல்களின் ஒழுங்குகள் வீடியோ

பள்ளிவாசல்களில் வியாபாரம் செய்தல்

32. பள்ளிவாசல்களை விட்டுத் தடுக்கக் கூடாது

418பெண்கள் பள்ளிக்கு வரலாமா?

200.பிற மதத்தவர் கஅபாவுக்கு வரத் தடை ஏன்?

இணை கற்பிக்கும் காரியம் நடக்கும் பள்ளியில் ஏன் தொழக் கூடாது

 ஜும்மா தொழுகை

பள்ளிவாசலில் தான் ஜும்மா தொழ வேண்டுமா
ஜும்மா நேரத்தில் பெண்கள் எந்த வேலையும் செய்யக் கூடாதா

ஜும்மா மட்டும் தொழுபவர் நிலை

கல்லூரி மாணவர்கள் எப்படி ஜும்மா தொழுவது

நாற்பது நபர்கள் இருந்தால் தான் ஜும்மா தொழுகையா

உரை நிகழ்த்தியவர் தான் தொழுவிக்க வேண்டுமா

ஜும்மா நாளில் கஹப் அத்தியாயம் ஓதுவது

ஜும்மாவுக்கு முன் சுன்னத்து உண்டா

ஜும்மா மேடைகளில் செய்யத்தகாதவை வீடியோ

ஜும்மாவின் சட்டங்கள் வீடியோ

காபாவில் ஜும்மா தொழுவது

பாங்கு சட்டங்கள்

உலூ செய்து தான் பாங்கு சொல்ல வேண்டுமா

பாங்கு சொல்லும் போது இரு புறமும் திரும்புவது அவசியமா

பாங்கு சொல்லும் போது கைகளால் காதுகளை மூட வேண்டுமா

ஹய்ய அலஸ்ஸலாத் சரியா? அலஸ்ஸலாஹ் என்பது சரியா

பாங்கு சொல்லும் போது படுத்துக் கிடக்கலாமா

பாங்குக்குப் பின் ஸலவாத் ஓதலாமா

சர்ச்சைக்கு உரிய சட்டங்கள்

விரல் அசைத்தல் நபி வழியா

நெஞ்சின் மீது கைகளைக் கட்டுதல்

தொழுகை அமர்வில் விரலசைத்தல் ஆய்வு

காலோடு கால் ஒட்டிக் கொண்டு நிற்க வேண்டுமா

கரண்டைக் கால் அளவுக்கு ஆடை அணிந்து தொழலாமா

தொப்பியும் தலைப்பாகையும்

தொப்பி ஓர் ஆய்வு வீடியோ

வித்ரு தொழுகை

வித்ரு தொழுகையில் குனூத் எப்போது ஓத வேண்டும்?

வித்ருக்குப் பின் தொழலாமா

வித்ரு தொழுகை கடமையா
Play Without Downloadingdownload To your computer 

ஜனாஸா தொழுகை

காயிப் ஜனசா தொழுகைக்கு ஆதாரம் உண்டா

ஜனாஸா தொழுகை நூல்

ஜனாஸாவின் சட்டங்கள் நூல்

பெருநாள் தொழுகை சட்டங்கள்

பெருநாள் தொழுகைக்கு ஒரு குத்பாவா? இரு குத்பாக்களா

பெருநாள் தொழுகை தக்பீர்கள் கூறும் போது கைகளை உயர்த்த வேண்டுமா

பெருநாள் தொழுகைக்கு எத்தனை தக்பீர்கள்

ஆடைகள் சட்டங்கள்

தொப்பி தலைப்பாகைக்கு ஆதாரமாகக் காட்டும் ஹதீஸ் சரியானதா

தொப்பி அணிவதற்கு ஆதாரம் உண்டா

உருவப்படம் உள்ள சட்டையை அணிந்து தொழலாமா

உடலுறவின் போது அணிந்திருந்த ஆடையில் தொழலாமா

கரண்டைக் கால் அளவுக்கு ஆடை அணிந்து தொழலாமா

தொப்பியும் தலைப்பாகையும்

தொப்பி ஓர் ஆய்வு வீடியோ

குழந்தையின் சிறு நீர் பட்டால் கழுவ வேண்டுமா

176. வழிபாட்டின் போது ஆடைக் குறைப்பு

 தயம்மும் சட்டங்கள்

குளிப்பு கடமையானவர் தயம்மும் செய்து தொழலாமா

உளூவின் சட்டங்கள்

தூய்மை இல்லாமல் குர்ஆனைத் தொடலாமா
சிறுநீர் கழித்த பின் சிறு நீர் வெளியேறுவது போல் உணர்ந்தால்

உளூ நீங்கியது போல் உணர்ந்தால்

பயணத் தொழுகை

தொழுகையைச் சுருக்கித் தஒழும் சட்டம் என்ன

பயணத்தில் எவ்வளவு நாட்கள் கஸ்ர் செய்யலாம்

126. போர்க்களத் தொழுகை

125. பயணத்தில் தொழுகையைச் சுருக்குதல்

 தொழுகை முறை குறித்த சட்டங்கள்

கடமை அல்லாத தொழுகையை நான்கு ரக்அத்தாக தொழலாமா

முதல் இருப்பில் ஸலவாத் ஓத வேண்டுமா

கைகளை மூடிக் கொண்டு ஊன்றி எழுவது நபிவழியா

தொழுகையில் மனக்குழப்பம் ஏற்பட்டால்

மூன்று ரக்அதுடன் ஸலாம் கொடுத்துவிட்டால்

நாற்காலியில் அமர்ந்து தொழும் ஒழுங்கு என்ன

ருகூவுக்குப் பிறகு ... ஹம்தன் கஸீரன் தய்யிபன்.. என ஓதுவது சரியா

பர்ளு தொழுகை மட்டும் தொழுதால் போதுமா

270. சப்தமிட்டும், சப்தமில்லாமலும் ஓதித் தொழுதல்

 ஆதாரம் இல்லாத தொழுகைகள்

தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரம் உண்டா

பெருநாள் தொழுகை சட்டங்கள்

பெருநாள் குர்பானி சட்டங்கள் வீடியோ

பெருநாள் தொழுகை சட்டங்கள் வீடியோ

நோன்பு (பெருநாள் தொழுகை பாடம்) நூல்

தராவீஹ் தொழுகை

தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு நூல்

தராவீஹ் ஜமாஅத்தாக தொழ ஆதாரம் உண்டா

Play Without Downloadingdownload To your computer
தராவீஹ் தொழுகை எத்தனை ரக் அத்துகள்?

 Play Without Downloadingdownload To your computer
வேலைப் பழுவினால் ஜும்மா தொழாதது குற

ஜும்மாவுக்கு இரண்டு பாங்கு உண்டா

ஃபஜ்ரு நேரம் வருமுன் ஃபஜ்ரு தொழுதல்

இமாம் உரை நிகழ்த்தும் போது ஸலாம் கூறலாமா

விரல் அசைத்தல் நபிவழியா

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா?

பள்ளிவாசல் கட்ட பிற மத்தினரிடம்

துஆவில் கைகளை உயர்த்தலாமா?

தொப்பி அணிவது பற்றி ஹதீஸ் உண்டா?

வித்ரில்குனூத் எப்போது ஓதவேண்டும்?

ருகூவிற்கு பிறகு என்ன கூறவேண்டும்?

காயிப்ஜனாஸா எப்போது தொழவேண்டும்?

ஜும்ஆத் தொழுகைக்கு 40பேர் அவசியமா?

பாங்குக்கு உளு அவசியமா

பாங்கு சொல்லும் போது

பெருநாள் தொழுகைக்கு இரு உரைகள் உண்டா

வீட்டில் ஜமாஅத்தாகத் தொழலாமா

முதல் வரிசையில் சிறுவர்கள் நிற்கலாமா

இரண்டிரண்டா? நான்கு நான்கா

அரபு மொழியில் தான் துஆ கேட்க வேண்டுமா

முதல் இருப்பில் ஓத வேண்டியவை?

காலோடு காலை ஒட்டி நிற்க வேண்டுமா

பாங்கு சொல்லும் போது கைகளால் காதுகளை மூட வேண்டுமா?

பெருநாள் தொழுகை தக்பீரில் கைகளை உயர்

தொப்பி தலைப்பாகை

பெருநாள் தொழுகை தக்பீர் எத்தனை?

இமாமின் தக்பீரை எதிரொலிக்கலாமா?

முதுகைத் தொட்டு ஜமாஅத்தில் சேரலாமா?

ஹய்யாலஸ்ஸலாத் சரியா ஸலாஹ் சரியா

பாங்கு சொல்லும் போது படுத்துக் கிடக்கலாமா?

முன் வரிசையில் நிற்பவரை இழுக்கலாமா

உருவம் வரைந்த சட்டை அணிந்து தொழலாமா?

உரை நிகழ்த்தியவர் தான் தொழுவிக்க வேண்டுமா?

கைகளை ஊன்றி எழுவது நபிவழியா

பர்ளு தொழுகையை மட்டும்

தொழுகையில் வஜ்ஜஹ்து என்ற

பயணத்தில் கஸர் செய்தல்

வித்ருக்குப் பின் தொழலாமா

தொழுகையில் மனக் குழப்பம்

3 ரக்அத்துடன் ஸலாம் கொடுத்து

நாற்காலியில் அமர்ந்து தொழுவதற்கு

தொழக் கூடாத மூன்று நேரங்கள்

கஃபாவில் தொழுவது

சிறுவர்கள் இமாமாக‌

இகாமத் சொன்ன பிறகு முன் சுன்னத்

குழந்தையின் சிறுநீர்

ஆடையைக் கழுவ வேண்டுமா

குளிப்பு கடமையான நிலையில்

உளூ நீங்கியது போல் உணர்ந்தால்

தொழுகைக்கும் நம்முடைய துவாக்கள் நிறைவேறுவதற்கும் சம்மந்தம் இருக்கிறதா?

ருகூவில் சேர்ந்தால் ரகாத் கிடைக்கும

ஷிர்கான செயல் நடக்கும் பள்ளியில் தொழ

பித்அத் செய்யும் இமாம்?

களாத் தொழுகை உண்டா

May 4, 2010, 11:39 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top