விஸ்வரூபத்திற்கு எதிராக வெகுண்டெழு

உலகளாவிய அளவில் விஸ்வரூபத்திற்கு எதிராக வெகுண்டெழுந்த டிஎன்டிஜே!

தமிழகத்தில் விஸ்வரூபம் படத்தை தடை செய்வதற்கு வெகுண்டெழுந்ததோடுமட்டுமல்லாமல், உலகளாவிய அளவில் டிஎன்டிஜே இந்தப் படத்தின் விஷமத்திற்குஎதிராக வெகுண்டெழுந்தது. ஸ்ரீலங்கா, மலேசியா, கத்தர், ஆஸ்திரேலியா உள்ளிட்டபலநாடுகளில் உள்ள தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளைகள் வாயிலாக பல்வேறு கட்டமுயற்சிகளின் மூலம் கமலஹாசனின் மலச்சிந்தனை அப்புறப்படுத்தப்பட்டது.

இலங்கையில் தடை உத்தரவு போடக் காரணமாக இருந்த டிஎன்டிஜே:

 ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் (ஷிலிஜியி) சார்பாக இலங்கை ஜனாதிபதி மகிந்த்ரராஜபக்சே, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் இலங்கைத் திரைப்படக்கூட்டுத் தாபனம் ஆகியோரது கவனத்திற்கு விஸ்வரூபம் பிரச்சினை கொண்டுசெல்லப்பட்டது.

 இறுதியாக 24.01.13 அன்று ஜனாதிபதியுடன் முஸ்லிம் எம்.பி.க்கள் நடத்தக்கூடியசந்திப்பில் இது தொடர்பாக பேசும்படி கேட்டுக் கொண்டதுடன், விஸ்பரூபத்தைத்தடை செய்வது குறித்த ஆவணங்களை ஜனாதிபதியிடம் ஒப்படைப்பதற்கும்உண்டான ஏற்பாடுகளை இலங்கை நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம் மூலம் செய்தனர்.

 ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் மண்டலச் செயலாளர் ராசிக் அவர்கள் தலைமையில்ஷிலிஜியியின் நிர்வாகிகள் இலங்கை திரைப்படக் கூட்டுத் தாபனத்துடன்மேற்கொண்ட அவசர சந்திப்பில் விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான செய்திகளைவிளக்கமாக எடுத்துக்கூறி அந்தப் படம் தடை செய்யப்படவேண்டும் என்பதற்கானகாரணங்களை தெளிவுபடுத்தினர்.

 செய்திகளைக் கேட்டறிந்த திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ‘திரைப்படம்என்பது பொழுதுபோக்காக இருக்க வேண்டுமே தவிர ஒரு மதத்தைப்புண்படுத்துவதாக இருக்கக் கூடாது. இதுவரை இலங்கையில் வெளியிடப்படும்திரைப்படங்களுக்கு நாம் இந்த நிபந்தனையைத்தான்விதித்து வருகின்றோம். ஆகவேஇது தொடர்பாக சரியான முடிவெடுக்கப்படும்’ என்று தெரிவித்ததுடன்,திரைப்படத்திற்கு தற்காலிகத் தடை விதிப்பதாகவும், திரைப்படத்தின் காட்சிகளைமுஸ்லிம் தலைவர்களுக்கு திரையிட்டுக் காட்டிய பின்பே தொடர்ந்துதிரைப்படத்தை வெளியிடுவது தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 மதக்கோட்பாடுகளை பின்பற்றக்கூடிய பௌத்த நாடான இலங்கைகூடமுஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தப்படத்திற்கு தடைவிதிக்கின்றதென்றால் நிலைமையின் விபரீதத்தை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.

 ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தீவிர அதிரடி நடவடிக்கைகளால் விஸ்வரூபம்படத்திற்கு இலங்கை அரசு இறைவனின் அருளால் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 வரக்கூடிய 28.01.13 அன்று அந்தத் திரைப்படத்தை திரையிட்டுக்காட்டுவதாகவும்அதை நீங்கள் பார்த்துவிட்டு ஆட்சேபணை தெரிவித்தால் அதை முற்றிலும் தடைசெய்துவிடுவதாகவும் நமது நிர்வாகிகளிடம் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் விஸ்வரூபத்திற்கு ஆப்பு வைத்த டிஎன்டிஜே:

 மலேசியா என்பது இஸ்லாமிய நாடு. இஸ்லாமிய நாடாக இருக்கக்கூடிய அந்தமலேசியாவே விஸ்வரூபம் படத்தை அங்கீகரித்து திரையிட்டுவிட்டது. நீங்கள் ஏன்இங்கு எதிர்க்கின்றீர்கள் என்று அறிவுஜீவிகள் என்று தங்களைச் சொல்லிக்கொள்ளக்கூடிய சிலர் நம்மிடம் கேள்வி கேட்டு வருகின்றனர்.

 மலேசியாவில் மலாய் மொழியில் விஸ்வரூபம் திரையிடப்படவில்லை என்பதுஇந்த அறிவாளிகளுக்குத் தெரியாதா? மலாய் மொழி மட்டுமே தெரிந்த அரசுஅதிகாரிகளுக்கு விஸ்வரூபத்தின் விஷமத்தனம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

 விஷ பாட்டிலின் மீது மலாய் மொழியில் விஷம் என்று எழுதி தமிழ் நாட்டுஅறிவுஜீவிகளிடம் குடிக்கக் கொடுத்தால் தண்ணீர் என்று நினைத்து வாங்கத்தானேசெய்வார்கள்.

 அதுதான் மலாய் மொழியில் விஷம் என்று எழுதியிருக்கும்போதே நீங்கள்வாங்கியுள்ளீர்களே! விஷத்தை ஏற்றுக் கொண்டுதானே கையில் வாங்கினீர்கள்என்று எந்த அறிவாளியும் சொல்லமாட்டான்.

 அதுபோல விஸ்வரூபத்தின் விஷமம் மலாய் மொழியில் இல்லாததால் மலேசியஅரசுக்கு விளங்கவில்லை.

 அந்தப் படத்தில் எத்தகைய விஷமக்கருத்துக்கள் உள்ளன என்பதை மலேசியஅரசின் கவனத்திற்கு மலாய் மொழியில் நமது மலேசியா தவ்ஹீத் ஜமாஅத்நிர்வாகிகள் தெளிவுபடுத்தினர்.

 மலேசியா தவ்ஹீத் ஜமாஅத் கோலாளும்பூரில் முஸ்லிம்களை தீவரவாதியாகசித்தரித்து எடுக்கப்பட்ட விஸ்வரூபம் படத்தை கண்டித்து 25.01.2013 அன்று மலேசியாதவ்ஹீத் ஜமாஅத் சார்பாக JAWI (கோலாளும்பூர் இஸ்லாமிய துறை)நிர்வாகியிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. தமிழகம் மற்றும் பல நாடுகளில் இந்தப்படம் தடை செய்யப்பட்டுள்ளது என்கிற பத்திரிக்கை செய்திகளும் அவர்களிடம்காட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுப்பதாகJAWI நிர்வாகி நமது நிர்வாகிகளிடம் வாக்குறுதியளித்தார்.

 காலை 10 மணிக்கு மலாய் மொழியில் எழுதப்பட்ட கடிதத்தை டிஎன்டிஜேநிர்வாகிகள் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து 25.01.2013 அன்று மதியமேவிஸ்வரூபம் திரைப்படம் மலேசியாவில் தடை செய்யப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் விஸ்வரூபத்திற்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்:

 விஸ்வரூபம் படத்தை விக்டோரியா மாகணத்தில் மெல்போர்ன் தலைநகரில்தடை செய்யக்கோரி ஆஸ்திரேலியா தவ்ஹீத் ஜமாத் 25/01/2013 அன்று விக்டோரியாடவுன் ஹாலின் முன்பு (ஸ்டேட் லைப்ரரி பில்டிங்கில்) ஆர்ப்பாட்டம் செய்வதாகஅறிவிப்புச் செய்தது ஆஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஆர்ப்பாட்டம் என்பது அரிதாக நடக்கக்கூடியஒன்று. அப்படியிருந்தும் இந்தத் தீமைக்கு எதிராக ஆஸ்திரேலியா தவ்ஹீத் ஜமாஅத்உடனடியாக களத்தில் குதித்தது.

 மெல்போர்ன் சென்சார் போர்டு தணிக்கையாளர் கிம் ராவ்சனிடம் ஆஸ்திரேலியாதவ்ஹீத் ஜமாத் செயலாளர் ஹிதயதுல்லாஹ் தொடர்புகொண்டு விஸ்வரூபம்படத்தினை பற்றி விவரமாக புகார் செய்ய, கிம் அவர்கள் கேட்டதற்கு ஏற்ப புகார்மனுவையும் அனுப்பியுள்ளார்.

 விஸ்வரூபம் படத்தினை பற்றிய 'விஷம'ரூபத்தை அறிந்தவுடன் செயலாளர்ஹிதயதுல்லாஹ் விஷமரூபம் திரையிடுவதைத் தடுத்திட களத்தில் குதித்தார்.மெல்போர்ன் தலைநகருக்கு விநியோகஸ்தர் யார் என்று விசாரணையில்இறங்கியவருக்கு காத்திருந்தது அடுத்த அதிர்ச்சி. நான் தான் முஹம்மது சாலிஹ்பேசுகிறேன் என்று வினியோகிஸ்தர் அறிமுகம் செய்தவுடன்...ஆஹா...இன்னொருகோடாரி காம்பா என்று வருந்தி விஷமரூபத்தை திரையிடுவதை நிறுத்திட வேண்டுகோள் விடுத்தார்.

 தமிழகத்திலும், உலகத்தின் பல நாடுகளிலும் விஷமரூபம் தடுக்கபட்டுவிட்டதைஅடுக்கடுக்கான ஆதாரங்களை செயலாளர் ஹிதயதுல்லாஹ் எடுத்துவைத்தும்,கேரளா புல்லுருவி விநியோகஸ்தரோ படத்திற்கு எந்தத் தடையும் இல்லையேஎன்று சுருதி இல்லாமல் பாடிக்கொண்டிருந்த நிலையில், உன்னைப்போல் ஒருவன்இல்லவே இல்லையடா என்று முடித்துக்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கையில்இறங்கினார்.

 திடீர் ஏற்பாடு நிமித்தமாக அரசாங்க அனுமதியுடன் கூடிய உத்தரவுடன்விக்டோரியா டவுன் ஹாலில் 25/1/13 அன்று காலை 10 மணிக்கு ஆர்பாட்டத்திற்குபதிவு செய்யப்பட்டது.

 இதில் கவனிக்க வேண்டியது 25/1/13 அன்று மாலை ஐந்து மணிக்கு விஷமரூபம்திரையிட இருப்பதாலும், 26/1/13 அன்று ஆஸ்திரேலியா தேசிய நாள் என்பதாலும் -வெள்ளிக்கிழமை வேலை நாள் என்று கூடப் பார்க்காமல் சிலர் வந்தால்கூட போதும்என முடிவெடுத்து ஆர்பாட்ட செயல்பாடுகள் முடுக்கிவிடப்பட்டன. பலபள்ளிவாயில்களில் ஆர்ப்பாட்டம் குறித்து பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. மின்மடல்,ஷிவிஷி மூலமும் ஆர்ப்பாட்டம் குறித்து விளம்பரப்படுத்தப்பட்டது.

ஆஸ்திரேலியாவை கலக்கிய ஆஸ்திரேலியா தவ்ஹீத் ஜமாஅத்தின்விஸ்வரூபத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம்:

Ban! Ban! Ban! Ban Viswaroopam Movie! - STOP HATRED AGAINST ISLAM - DON'T INSULT MUSLIMS - STOP BASHING MUSLIMS FOR PROFIT

போன்ற வாசகங்கள் தொகுக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் 90 நிமிடங்கள் நடத்தப்பட்டது.ஆர்பாட்டம் முடிந்து தணிக்கையாளர் கிம் ராவ்சனிடம் செயலாளர்ஹிதயத்துல்லாஹ் விஷமரூபம் படத்தில் அநியாமாக இஸ்லாத்திற்கு எதிராகவும்,முஸ்லிம்களை இழிவாகவும் திரைக்கதை அமைக்கபட்டிருப்பதை முந்தைய வாரம்வெளிவந்த ஆதாராமான செய்திகளைக் கொண்டு விவரமாக விளக்கி புகார்கொடுத்தார்.

 ஆங்கில நாளேடுகள் மின்இழை இணைப்புகள் பலவற்றை இணைத்து மின்மடல்மூலம் கிம் ராவ்சன் ஆலோசனைப் படி சென்சார் குழுவிற்கு (Australian Classification Board) அனுப்பி வைத்தார்.

 மெல்போர்னில் விசாரணை செய்யாமல் உலகளாவிய தடை மற்றும்கண்டனங்களைக் கொண்டு மட்டும் விஷமரூபத்தை மெல்போர்னில்திரையிடுவதை அவசர-அவசரமாக தடுக்க இயலாது என்று கிம் ராவ்சன் கூறினாலும்ஆஸ்திரேலியா தவ்ஹீத் ஜமாஅத்தின் மனு முழு பரிசீலினைக்கு உட்படுத்தப்படும்என்று கிம் ராவ்சன் தெரிவித்துள்ளார்.

 ஆஸ்திரேலியா தவ்ஹீத் ஜமாஅத் எடுத்திருக்கும் நடவடிக்கையினால் இனிவரும்காலங்களில் விஷம வில்லனுக்கு ஆஸ்திரேலியா திரை அரங்குகளில் கரும்புள்ளிசெம்புள்ளி என்பது உறுதி. ஆஸ்திரேலியா தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த முயற்சியால்விஸ்வரூபம் திரைப்படம் மிக விரைவில் ஆஸ்திரேலியாவிலும் தடைசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

விஸ்வரூபத்தை கவிழ்த்திய கத்தர் தவ்ஹீத் ஜமாஅத்: - கத்தர் அரசிற்கு விளக்கிபடத்தைத் தடை செய்ய வைத்தது!

 மற்ற அரபு நாடுகளைப் போலவே கத்தர் நாட்டிலும் கேடுகெட்ட“விஸ்வ(விஷம)ரூபம்” திரைப்படம் வெளியிடப்படமாட்டாது என எண்ணியிருந்தநிலையில் 24-01-2013 வியாழன் அதிகாலை 5:30 மணிக்கு ‘கல்ஃப் டைம்ஸ்’ நாளிதழ்அலுவலகத்தில் பணிபுரியும் கத்தர் தவ்ஹீத் ஜமாஅத் செயற்குழு உறுப்பினர்சகோதரர்.தஞ்சாவூர் ஜாஹிர் ஹுசைன் அவர்கள், கத்தர் மண்டல நிர்வாகிகளைடெலிஃபோனில் தொடர்பு கொண்டு, “இன்று மாலை தோஹாவிலுள்ள தியேட்டரில்“விஸ்வ(விஷம)ரூபம்” திரைப்படம் வெளியிடப்பட இருக்கிறது என இன்றையநாளிதழில் செய்தி போடப்பட்டிருக்கிறது” என்று கூறினார்.

 உடனே, மண்டல நிர்வாகிகள் கத்தர் அரசு இஸ்லாமிய பிரச்சாரத்துறை (ஃபனார்)அலுவலர்களை டெலிஃபோனில் தொடர்பு கொள்ள முயற்சித்தார்கள். அவர்கள்,மொபைலை/தொலைபேசியை எடுக்கவில்லை.

 பின்பு, சரியாக காலை 10:43 மணிக்கு, ஃபனார் மேற்பார்வையாளர் ஸூடான்நாட்டைச் சார்ந்த டாக்டர்.அலீ இத்ரீஸ் அவர்கள், மண்டலத் தலைவராகியடாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்களை மொபைலில் அழைத்து “என்ன விஷயம்?.பலமுறை எனக்கு ஃபோன் செய்துள்ளீர்களே! மீட்டிங்கில் இருந்ததால்,மொபைலைஎடுக்கவில்லை”என்றார். அதற்கு டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள், “இந்தியவரலாற்றில் 'விஸ்வ(விஷம)ரூபம்' என்ற திரைப்படம் போல், முஸ்லிம்களையும்இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் ஒரு படம் வெளியாகவே இல்லை” என்றுகூறிவிட்டு, நாளிதழ் செய்தியை மேற்கோள்காட்டி, அதை உடனடியாக கத்தரில்தடை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.

 அதிர்சிக்குள்ளான, டாக்டர்.அலீ இத்ரீஸ் அவர்கள், அபூ உபைதா என்ற அலுவலரைதொடர்புகொள்ளுமாறு கூறியிருக்கிறார்.

 டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள், அபூ உபைதா அவர்களை சரியாக காலை11:04 மணிக்கு மேற்சொல்லப்பட்ட எண்ணில் தொடர்பு கொண்டு விஷயத்தைகூறினார்கள்.

 அதிர்ந்து போன சகோதரர்.அபூ உபைதா அவர்கள், நன்றி தெரிவித்துவிட்டு, ‘படத்தின் பெயர் மொழி - திரையிடப்பட இருக்கின்ற தியேட்டர்’ ஆகிய விவரங்களைதனது மொபைல் ஃபோனுக்கு மெசேஜ் மூலம் அனுப்புமாறு கூறியிருக்கிறார்கள்.

 அவ்வாறே, சரியாக காலை 11:19 மணிக்கு மெசேஜை, டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம்அவர்கள் அனுப்பினார்கள்.

 சரியாக காலை 11:56 மணிக்கு அபூ உபைதா அவர்களே டாக்டர்.அஹ்மத்இப்ராஹீம் அவர்களைத் தொடர்பு கொண்டு ‘நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது;படம் தடை செய்யப்பட்டுவிட்டது; வெளியிடப்படமாட்டாது’ என்று கூறி, இந்தத்தகவலை இதுவரையிலும் யாரும் எங்களுக்குத் தெரிவிக்கவில்லை என்றும்,தவ்ஹீத் ஜமா’அத் நிர்வாகிகளாகிய நீங்கள்தான் எங்களது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளீர்கள்” என்றும் கூறிவிட்டு, அதற்காக பிரார்த்தனையும்’ செய்தார்.

 இருப்பினும் கத்தர் மண்டல நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட தியேட்டருக்கு கொள்கைச்சகோதரர்களை அனுப்பி படம் திரையிட தடை செய்யப்பட்டுள்ளதா என உறுதிசெய்தனர். ஆய்வு செய்ததில் படம் தடை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

கத்தர் அரசுக்கு நன்றி :

27-01-2013  ஞாயிறு காலை சுமார் 10:00 மணியளவில், கத்தர் மண்டலஇணைச்செயலாளர் சென்னை. சகோதரர். ஃபக்ருதீன் அலீ அவர்கள் தலைமையில்,ஆத்தூர் மவ்லவி, அப்துஸ்ஸமத் மதனீ, பண்டாரவாடை சகோதரர். சபீர் அஹ்மத்,சமயபுரம் சகோதரர். காதர் மீரான் ஆகியோர் அடங்கிய குழு, கத்தர் அரசு இஸ்லாமியபிரச்சாரத் துறையின் இயக்குநர்- கத்தர் நாட்டைச் சார்ந்த சகோதரர். ஃபஹத் பின்உக்ளா அல்-ருவைலி அவர்களை சந்தித்து, கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் [QITC ]வேண்டிக் கொண்டதன் அடிப்படையில், கேடு கெட்ட "விஸ்வ(விஷம)ரூபம்" திரைப்படத்தை தடை செய்வதற்கு உரிய அமைச்சகத்தை தொடர்பு கொண்டுநடவடிக்கை எடுத்ததற்காக நன்றி தெரிவித்தது.

 மேலும், கத்தர் அரசு இஸ்லாமிய அலுவல்கள் அமைச்சகத்திற்கு சென்று அங்குஊடகக் கண்காணிப்பாளராக பணிபுரியும் கத்தர் நாட்டைச் சார்ந்த சகோதரர். ஜாபிர்பின் ஹமத் ஆல- தஜ்ரான் அவர்களை சந்தித்து, இத்திரைப்படத்தைத் தடைசெய்வதற்கு 'கத்தர் அரசு கலை மற்றும் கலாச்சார அமைச்சகத்தை’ தொடர்புகொண்டு நடவடிக்கை எடுத்ததற்காக நன்றி தெரிவித்தது.

தடைபோட்ட ஏழு நாடுகள்:

 ஐக்கிய அரபு அமீரகத்தில் அடங்கியுள்ள அபுதாபி, துபை, ஷார்ஜா, ஃபுஜைரா, ராசல்கைமா, அஜ்மான், உம்மல் குவைன் ஆகிய ஏழு நாடுகளிலும் விஸ்வரூபம்படத்திற்கு தடை போடப்பட்டது.

Published on: January 31, 2013, 7:48 PM Views: 1088

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top