உங்களை நான் திட்டியதற்கு என்ன பரிகார

உங்களை நான் திட்டியதற்கு என்ன பரிகாரம்

நான் ஆரம்ப காலத்தில் உங்களை மிகவும் தவறாகப் பேசியுள்ளேன், தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளேன். கடுமையாக விமர்சித்துள்ளேன். நான் அல்லாஹ்வின் கிருபையால் தவ்ஹீத் ஜமாஅத்தில் இணைந்து விட்டேன். தற்போது நான் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் என்னை மன்னிப்பதற்கும், குற்றம் பிடிக்காமல் இருப்பதற்கும். உங்களுடைய ஜனாஸா தொழுகையில் நான் கலந்து கொள்ளலாமா? அல்லது காயிப் ஜனாஸா தொழலாமா?

-அப்பாஸ் ஷாஜி

தூத்துக்குடி-2

பிரச்சாரக் களத்தில் இது சர்வசாதாரணமான நிகழ்வு தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் நபிகள் நாயகத்தைத் திட்டியவர்கள் தான். அவர்களுக்குப் பல விதங்களில் இடையூறு செய்தவர்கள் தான். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதே அவர்களின் அனைத்து கொடுமைகளுக்கும் பரிகாரமாக ஆனது.

நபிகள் நாயகத்தைத் திட்டியதற்காக ஒவ்வொருவரும் வந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கவில்லை.  அது போல் தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்களை நீங்கள் எவ்வளவு தரக்குறைவாக ஏசி இருந்தாலும் நீங்கள் தவ்ஹீத் கொள்கையை ஏற்றவுடன் அனைத்தும் மன்னிக்கப்படும். இக்கொள்கையை ஏற்றதால நாங்கள் மன்னித்து விடுவதால் அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான். இன்ஷா அல்லாஹ்.

உங்களுக்கும், எங்களுக்கும் சொந்தப் பகை இருந்து அதற்காக எங்களுக்கு அநீதி இழைத்திருந்தால்தான் எங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். கொள்கையில் நீங்கள் உறுதியாக இருக்க அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன். யாருடைய ஜனாஸாவிலும் கலந்து கொள்வதற்கு அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. யாரும் ஜனாஸா தொழுகை நடத்தாமல் ஒருவர் அடக்கம் செய்யப்பட்டால் அல்லது நபிவழிப்படி ஜனாஸா தொழுகை நடக்காமல் இருந்தால் தான் காயிப் ஜனாஸா தொழுகை நடத்தலாம்.

உணர்வு 16:24

21.02.2012. 12:53




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
98 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி