தமுமுக பேரணியை டிஎன்டிஜே தடுத்ததா?

தமுமுக பேரணியை டிஎன்டிஜே தடுத்ததா?

தமுமுக போராட்டத்துக்குத் தடை போட தவ்ஹீத் ஜமாஅத்துதான் காரணம் என்றும், வெகுண்டு எழுந்த கூட்டத்தைக் கண்டு தவ்ஹீத் ஜமாஅத் கதிகலங்கிப் போயுள்ளது என்றும் முகநூல்களில் பரப்புகின்றனர். இது எந்த அளவுக்கு உண்மை?

சொல்லின் செல்வன், அதிராம்பட்டிணம்

தவ்ஹீத் ஜமாஅத் ஜெயலலிதா அவர்களை வானளாவப் புகழ்ந்து கொண்டிருக்கவில்லை. சட்டமன்றத்தில் பேசும்போதெல்லாம், இவர்கள் அடித்த ஜால்ராவைப்போல் ஜால்ரா அடிக்கவில்லை. மலர்க் கொத்து கொடுத்து வாழ்த்து கூறிக் கொண்டிருக்கவில்லை. அப்படியிருந்தும் தவ்ஹீத் ஜமாஅத் சொல்வதைக்கேட்டு முதல்வர் முடிவு செய்கிறார் என்று இவர்கள் சொல்வது உண்மையென்றால், இவர்கள் தங்களையும் அறியாமல் ஒரு உண்மையை ஒப்புக் கொள்கிறார்கள்.

ஜால்ரா அடிப்பவர்களைவிட தட்டிக்கேட்பவர்களுக்குத்தான் அல்லாஹ் மரியாதையை ஏற்படுத்துவான் என்ற உண்மையை இவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள் என்பது தெரிகிறது. அதையாவது புரிந்துகொண்டு தவ்ஹீத் ஜமாஅத் போல் நடக்க முயற்சித்து இவர்கள் சொல்வதையும் ஜெயலலிதா கேட்பது போல் நடந்து கொள்ளட்டும்.

ஜெயலலிதா அவர்கள் நம்மைக்கேட்டு எந்த முடிவையும் எடுக்கும் அளவுக்கு நமக்கு அவருடன் நெருக்கம் ஏதுமில்லை. பிற இயக்கங்கள் குறித்து எந்த முடிவை எடுக்க வேண்டும் என்று இரகசியக் கோரிக்கை வைப்பதும் தவ்ஹீத் ஜமாஅத்தின் வழிமுறை அல்ல.

பொதுவாக சென்னையில் பேரணி நடத்துவது என்றால் போக்குவரத்துக்குப் பாதிப்பு இல்லாத வகையில்தான் அனுமதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே இது போல் யார் பேரணி நடத்தினாலும் தடையை மீறி கைதாவதற்கு உடன்பட்டுத் தான் நடத்த வேண்டும். இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் நீதி மன்றத்தை அணுகினார்கள். நீதிமன்றம் இதை அனுமதிக்காது என்ற அறிவுகூட இவர்களுக்கு இருக்கவில்லை.

நீதிமன்றத்தை அணுகாமல் காவல் துறையிடம் பேசி நாங்கள் தடையை மீறுகிறோம் என்று சொன்னால் பேச்சுவார்த்தை மூலம் ஒரு இடத்தில் கூடச் செய்து அங்கே கைது செய்வார்கள். இதுதான் வழக்கமான நடைமுறை.

அதைச் செய்யாமல் உயர்நீதி மன்றத்தை இவர்கள் அணுகியது மடத்தனமானது. உயர்நீதிமன்றம் இதை அனுமதிக்காது என்ற சாதாரண விஷயம் கூட தெரியாமல் இவர்கள் என்ன இயக்கம் நடத்துகிறார்கள்? கடுகளவு அறிவுள்ளவனைக் கேட்டாலும் இவர்கள் கேட்ட இடத்தில் பேரணி நடத்த நீதிமன்றம் அனுமதிக்காது என்று கூறிவிடுவார்.

நீதிமன்றம் தடையை உறுதி செய்யும் நிலையை இவர்களே ஏற்படுத்தினார்கள்.

உயர்நீதி மன்றம் உத்தரவிட்ட பின்னர் காவல் துறையினர் பேரணிக்காக கூடாமல் தடுத்து ஆக வேண்டும். இல்லாவிட்டால் நீதி மன்றத்துக்குப் பதில் சொல்லியாக வேண்டும். இந்த நிலையை இவர்களே ஏற்படுத்தினார்கள்.

நீதிமன்றம் தலையிடும் வரைதான் புரிந்துணர்வு அடிப்படையில் காவல்துறை செயல்பட முடியும். நீதிமன்றம் தலையிட்ட பின்னர் நீதிமன்றத்துக்கு பதில் சொல்வதற்கேற்பவே காவல் துறை நடக்க முடியும்.

இயக்கம் நடத்தக் கூடியவர்களுக்கு அறிவு இல்லாவிட்டால் அடுத்தவர் மீது பழி போடுவது என்ன நியாயம்?

வெகுண்டெழுந்த கூட்டத்தைக் கண்டு தவ்ஹீத் ஜமாஅத் அரண்டு போய்விட்டது என்று இவர்கள் கூறுவது தான் உச்சகட்ட காமெடியாக உள்ளது.

தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் பெரிய பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளும் மக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அதைவிடக் குறைவான மக்களையே இவர்களால் திரட்ட முடிந்தது என்பதை அறியலாம்.

தவ்ஹீத் ஜமாஅத் பலவீனமாக உள்ள மாவட்டம் கரூர் மாவட்டம். காவல்துறையின் காட்டு தர்பாரைக் கண்டித்து கண்டனப் போராட்டம் சென்ற வாரம் நடத்தப்பட்டது. முடிவு எடுத்து இரு நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டத்தில் ஐயாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். எவ்வித விளம்பரமும் உழைப்பும் இல்லாமல் இரு நாட்களில் பலவீனமான மாவட்டம் கூட்டிய கூட்டத்தில் பாதியைக்கூட இவர்கள் மாநில அளவில் கூட்ட முடியவில்லை எனும் போது நாம் ஏன் கதி கலங்க வேண்டும்.

சில ஊடகங்கள் (சன் டிவி உட்பட) நூற்றுக் கணக்கானோர் கைது என்று குறிப்பிட்டனர். அதிகபட்சமாக சுமார் 3000 பேர்கள் என்று சில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. அந்தக் கூட்டத்தின் வீடியோவை நிறுத்தி நிறுத்தி எண்ணிப் பார்த்தால் மூவாயிரம் பேருக்குள் தேறுவார்கள்.

பல மாதங்கள் உழைத்து இலட்சக்கணக்கில் செலவு செய்த பின்னரும், நாற்பது மாவட்டங்களுக்கு 3000 பேர்கள் என்றால், மாவட்டத்திற்கு 75 பேர் வீதம் வந்துள்ளனர்.

சமுதாயத்தின் முக்கியமான கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டமாக இருந்தும், கடுமையாக உழைத்தும், இதற்காக ஏராளமான பொதுக்கூட்டங்கள் நடத்தி விழிப்புணர்வு ஊட்டியும், மாவட்டத்திற்கு 75பேர் வீதம்தான் வந்துள்ளனர் என்றால் அடித்தளம் அறவே சரிந்து விட்டதை அவர்கள் இதிலிருந்து உணர்வதற்கான எச்சரிக்கை மணியாகவே இது அமைந்துள்ளது.

இவர்கள் நீதி மன்றத்தை அணுகியது இதனால் கிடைக்கும் பரபரப்பிற்கும், விளம்பரத்திற்கும் உதவலாம். ஒரு நாள் செய்தியோடு இது முடிந்துவிடும்.

கட்டப் பஞ்சாயத்தைக் கைவிட்டு அடிமைச் சேவகம் செய்யும் போக்கில் இருந்து விடுபட்டு, 1995ல் காணப்பட்ட அர்ப்பணிப்பு மனப்பான்மையை நோக்கி இவர்கள் திரும்பாவிட்டால், இருக்கும் சிலரையும் இழப்பார்கள். இதைத்தான் இந்தக்கூட்டத்திலிருந்து இவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.

உண்மையில் சொல்லப்போனால் இவர்கள் தான் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

July 14, 2013, 2:04 AM

கல்வி நிறுவனம் துவங்க வசூல்?

கல்வி நிறுவனம் துவங்க வசூல்?

C.M.N. சலீம் என்பவர், தான் அமைப்பு சாராதவர், தன்னைப் பொறுத்தவரை 2020ல் தமிழகத்தில் நமது சமுதாயம் முழு கல்வியறிவு பெற்ற சமுதாயமாக மாற வேண்டும் என்பது தான் நோக்கம். என சொல்லிக் கொண்டு கல்வி ஸ்தாபனங்களை உருவாக்க வேண்டும் என வெளிநாடுகளிலும் சமுதாய மக்களிடமும் நிதி திரட்டுகிறார். நமது ஜமாத்தைச் சேர்ந்த ஒரு சிலர் அதில் பங்குதாரராக இருக்கின்றனர். C.M.N. சலீமைப் பற்றிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நிலைப்பாடு என்ன?

கூத்தாநல்லூர் ஜின்னா, குவைத்

பதில்

நீங்கள் குறிப்பிடும் நபர் திரட்டும் நிதியை தன் பெயரில் திரட்டுகிறாரா? அல்லது தனக்கு வேண்டப்பட்டவர்களைக் கொண்டு அமைத்துக் கொண்ட ட்ரஸ்டின் பெயரில் திரட்டுகிறாரா?

அல்லது சந்தா செலுத்தும் எல்லா உறுப்பினர்களுக்கும் உரிமை வழங்கும் சங்கத்தின் பெயரில் நிதி திரட்டுகிறாரா?

இதை நீங்கள் முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள்.

நாமறிந்தவரை அவர் எந்தச் சங்கமும் நடத்தவில்லை. ட்ரஸ்ட் என்ற பெயரில் நிதி திரட்டுவதாகவே கேள்விப்படுகிறோம்.

தனி நபர்களோ, அல்லது ட்ரஸ்டுகளோ எதற்கு நிதி திரட்டினாலும் அதை நம்ப வேண்டாம். சங்கமாகப் பதிவு செய்து அதன் நேர்மை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக இருந்தால் மட்டுமே மக்கள் நிதி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏமாற்றம் தான் மிஞ்சும் என்பதுதான் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு.

சங்கம் என்றால் அதைப் பிரச்சாரம் செய்து மக்களிடம் கொண்டு சென்று அதில் உறுப்பினர்களைச் சேர்ப்பார்கள். சந்தா செலுத்தும் எல்லா உறுப்பினர்களுக்கும் அதில் உரிமை இருக்கும். அதன் தலைவர் நம்பிக்கையாக நடக்காவிட்டால் உறுப்பினர்கள் கூடி அவரை நீக்கலாம்.

ஆனால் ட்ரஸ்ட் என்றால் பத்து இருபது நபர்கள் கூடி அதை அமைப்பார்கள். அதற்காக மக்களிடம் கோடிகோடியாக நிதி திரட்டினாலும் நிதி கொடுத்தவர்கள் அதில் உறுப்பினராக மாட்டார்கள். அந்தப் பத்து பேர் மட்டும் கூடி எடுக்கும் எந்த முடிவையும் யாரும் தட்டிக் கேட்க முடியாது.

பணத்தை ட்ரட்ஸ்டுக்கு அனுப்பியபின் கல்விக் கூடம் அமைக்காவிட்டால் பணம் கொடுத்தவர்களால் அதில் தலையிட முடியாது. அதிகபட்சமாக வெளியில் இருந்து கொண்டு வழக்குப் போட முடியும்.

மக்கள் பணத்தில் சொத்தை வாங்கிய பின் பணம் கொடுத்த மக்கள் குறைகளைத் தட்டிக் கேட்க முடியுமா? நிச்சயம் முடியாது.

டிரஸ்ட்டுகள் ஊழல் செய்தால், அவர்களைப் பணம் கொடுத்த மக்கள் பதவி நீக்கம் செய்து நம்பகமானவர்களை நியமிக்க முடியுமா? நிச்சயம் முடியாது.

டிரஸ்ட்டிகள் என்று யாரைப் பதிவு செய்துள்ளார்களோ அவர்களைத் தவிர வேறு யாருக்கும் எந்த உரிமையும் இருக்காது.

அந்தச் சொத்தை வங்குவதற்குப் பலரும் பலவித தியாகங்களைச் செய்திருப்பார்கள். அவர்கள் டிரஸ்ட்டில் உறுப்பினராக இருக்க மாட்டார்கள். குறிப்பிட்ட பத்துப்பேரின் கைப்பிடியில்தான் அந்தச் சொத்து இருக்கும். கோடி கோடியாக நிதி குவிந்தாலும் அதைப் பற்றி யாருக்கும் கேள்வி கேட்க சட்டப்படி உரிமை இல்லை.

ஆனால் மாநில அளவில் பதிவு செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் பெயரில் சொத்து வாங்கினால் அதற்கு நிதியளித்தவர்கள் கேள்வி கேட்க முடியும். பாடுபட்டவர்கள் தலையிட முடியும். இந்த உரிமைகள் சட்டப்படி ஒவ்வொரு உறுப்பினருக்கும் கிடைக்கும்.

இன்னும் சொல்லப் போனால் நிதி அளிக்கும் மக்கள் நமக்கெல்லாம் இதில் உரிமை இருக்கும் என்ற எண்ணத்தில் தான் வாரி வழங்குவார்கள். அறக்கட்டளையில் யார் பெயரைக் குறிப்பிட்டு பதிவு செய்தார்களோ அந்தப் பத்து பேரைத் தவிர வேறு எவருக்கும் எந்த உரிமையும் கிடையாது என்று தெரிந்து இருந்தால் உதவியிருக்க மாட்டார்கள்.

அடுத்ததாக நாடு விடுதலை அடைந்த நேரத்தில் நாங்கள் சொந்தமாகக் கல்விக் கூடம் அமைக்க அனுமதித்தால் போதும் என்று கூறி இட ஒதுக்கீட்டை நம் தலைவர்கள் காவு கொடுத்தார்கள். ஆனால் சிறுபான்மை என்ற சலுகையைப் பெற்று கல்விக் கூடங்களை ஆரம்பித்து வியாபாரம் செய்தார்கள். முஸ்லிம்களுக்கு ஒரு பயனும் இல்லை. பணம் கொடுத்தால்தான் இடம் என்று கூறி முஸ்லிமல்லாதவர்கள் நடத்தும் கல்விக் கூடங்களை விட அதிகக் கொள்ளை அடித்தார்கள். அடித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

எனவே அரசு நடத்தும் கல்விக் கூடங்களில் போதுமான இட ஒதுக்கீட்டுக்குத்தான் நாம் போராட வேண்டும். கல்வி வியாபாரிகளை ஊக்குவிக்கக் கூடாது.

மருத்துவக் கல்லூரி நடத்துவதாக கவிக்கோ அப்துர்ரஹ்மான் மூலம் ஒரு கும்பல் புறப்பட்டபோது நாம் எச்சரிக்கை செய்தோம். கொடுத்த பணம் அம்போவானதுதான் மிச்சம். மருத்துவக் கல்லூரியைக் காணவில்லை.

மேலும் பொருளாதார ரீதியாக நாணயமாக நடப்பார் என்ற அளவுக்கு சலீம் அவர்களின் செயல்பாடுகள் இதுவரை இருந்துள்ளதாக நமக்குத் தெரியவில்லை.

பல வருடங்களாக டிவியில் விளம்பரம் செய்து கல்வி உதவி செய்வதாக சொல்லி வருகிறார். தனக்கு நிதி அளிக்கும் படி விளம்பரம் செய்து வருகிறார்.

இது வரை வந்த வரவுகளை யார் யார் எவ்வளவு தந்தார்கள் என்றும் அது யார் யாருக்குக் கொடுக்கப்பட்டது என்றும் கணக்கு காட்டி தனது நேர்மையை அவர் நிரூபித்துக் காட்டவில்லை.

எனவே இது போல் புறப்படும் யாரையும் நம்ப வேண்டாம் என்று தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களை நாம் எச்சரிக்கிறோம். தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் இது போன்ற காரியங்களுக்கு உதவுவதாகத் தெரிந்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பாளர் ஒருவர் இதுபோல் வசூலிக்கும் போது தவ்ஹீத் ஜமாஅத் அதை ஆதரிக்கிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். நாம் எச்சரிக்கை செய்து தீய விளைவுகள் நாளை ஏற்படும்போது ஜமாஅத்தில் புகார் கொடுக்கும் நிலை ஏற்படும். எனவே இதுபோன்ற காரியங்களில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அனைத்து கொள்கைச் சகோதரர்களையும் நாம் எச்சரிக்கிறோம்.

July 14, 2013, 1:59 AM

புதிய தலைமுறை நிகழ்ச்சி தடை ஏன்?

புதிய தலைமுறை நிகழ்ச்சி தடை ஏன்?

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தலாக் குறித்து ஒளிபரப்பாக இருந்த நிகழ்ச்சி அறிவிக்கப்பட்ட நேரத்தில் ஒளிபரப்பாகவில்லை. இதற்கு முஸ்லிம் இயக்கங்களின் மிரட்டலே காரணம் என்று சிலர் சொல்கிறார்கள். விஜய் டிவியில் பர்தா குறித்த நிகழ்ச்சியை தவ்ஹீத் ஜமாஅத் தடுத்ததால் இதிலும் தவ்ஹீத் ஜமாஅத்தைத் தொடர்பு படுத்தி சிலர் பேசுகின்றனர். இது உண்மையா?

மசூது, கடையநல்லூர்.

தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை எதை எதிர்ப்பதாக இருந்தாலும் அதை நேருக்கு நேராகத் தான் செய்யும். கொல்லைப்புறமாக எதையும் செய்யாது. தவ்ஹீத் ஜமாஅத் இதை எதிர்க்கிறது என்று வெளிப்படையாக அறிவித்து விட்டுத் தான் தனது எந்த எதிர்ப்பையும் பதிவு செய்யும்.

  • விஸ்வரூபம் திரைப்படத்தை நாம் எதிர்த்தோம். வெளிப்படையாக அறிவித்து விட்டுத் தான் எதிர்த்தோம்.
  • மனுஷபுத்திரன் என்ற அறிவிலி ஆதாரமில்லாமல் உளறிய போதும் நேருக்கு நேராகத்தான் அவரை எதிர்த்தோம்.
  • கருணாநிதி அந்தப் பொய்யை வாந்தி எடுத்த போதும் அவரையும் நேருக்கு நேராகத் தான் எதிர்த்தோம்.
  • படித்தும் படிக்காத பதர் சயீத் உளறிய போதும் அதையும் நேருக்கு நேராகத் தான் எதிர்த்தோம்.

இவர்கள் இஸ்லாத்துக்கு எதிராக உளறிக்கொட்டிய போது எங்களுடன் விவாதம் செய்து உங்கள் கருத்தை நிரூபிக்கத் தயாரா என்று நேரடியாக அவர்களுக்கே கடிதம் எழுதினோம்.

விளம்பரத்துக்காக எதையாவது எழுதும் அறிவுஜீவிகள் எனும் விஷக்கிருமிகள் ஓட்டம் பிடித்தார்களே தவிர தாங்கள் சொன்னதை நிரூபிக்கத் தயாராக இல்லை.

மனுசபுத்திரன், கருனாநிதி, நக்கீரன், பதர்சயீத் உள்ளிட்ட யாரும் இஸ்லாத்துக்கு எதிராக எடுத்து வைத்த வாதங்களை நிரூபிக்கத் திராணியற்றவர்களாகவும், கோழைகளாகவும், இஸ்லாம் பற்றி அறிவீனர்களாகவும் தான் உள்ளனர் என்பது இதன் மூலம் நிரூபணமானது.

தலாக் குறித்து இப்போதும் யாராவது தவறான வாதங்களை வைத்தால் அதைத் தவறு என்று நிரூபிக்கும் திராணியும், துணிவும், தெளிவும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு இருக்கும் போது கொல்லைப்புறமாக மிரட்டல் விடும் அவசியம் இல்லை.

தலாக் குறித்த ஒரு நிகழ்ச்சி புதிய தலைமுறையில் ஒளிபரப்ப உள்ளதாக புதிய தலைமுறை நிர்வாகம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளரைத் தொடர்பு கொண்டு பீஜே அவர்களின் கருத்தையும் நாங்கள் அறிய வேண்டும் என்று கேட்டனர்.

என்னிடம் பொதுச் செயலாளர் சொன்ன போது நானும் அதை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கும் நமக்கும் வசதியான புதன்கிழமை காலை பத்து மணிக்கு பேட்டி எடுப்பதாக முடிவு செய்யப்பட்டது.

குறித்த நாளில் நான் புதிய தலைமுறை படக்குழுவினரை எதிர்பார்த்து காத்து இருந்தேன். ஆனால் அவர்கள் வரவில்லை. திடீரென்று இன்னொரு நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள் சென்று விட்டதாக நமக்குச் சொல்லப்பட்டது.

புதிய தலைமுறையில் செய்தியார்களுக்கும், படக்குழுவினருக்கும் பஞ்சம் இல்லை. நானறிந்த வரையில் குறித்த நேரத்தை அவர்கள் மீற மாட்டார்கள் என்பதால் வேறு ஏதோ காரணத்தால் நம்மைத் தவிர்க்கப் பார்க்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

இதன் பின்னர் ஏன் நிறுத்தினார்கள் என்று நமக்குத் தெரியவில்லை.

  • முக்கிய இயக்கத்தின் சார்பில் மிரட்டினார்களா?
  • மொட்டை மிரட்டல் வந்ததா?
  • நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது இதை ஒளிபரப்பினால் நீதிமன்ற அவமதிப்பாகி விடுமோ என்று கருதி இதை நிறுத்தினார்களா?
  • அல்லது அவர்களாகவே ஏதோ காரணத்துக்காக நிறுத்தினார்களா?

என்று தெரியவில்லை.

அதைப் புதிய தலைமுறை சொன்னால் தான் நமக்குத் தெரியும். அப்படியில்லாமல் ஊகமாக எதையும் நாம் சொல்ல முடியாது.

ஆனால் புதிய தலைமுறை தொலைக்காட்சி இப்படி எந்தக் குற்றச்சாட்டையும் சொல்லாதபோது அதில் முகம் காட்டியவர்கள் தங்கள் முகம் தெரியாமல் போய்விட்டதே என்பதற்காக மக்களை உசுப்பி விடுகிறார்கள்.

பர்தா பற்றி விஜய் டிவியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியை தவ்ஹீத் ஜமாஅத் தடுத்து நிறுத்தியது உண்மை தான். இது உலகத்துக்கே தெரிந்த உண்மை தான். இதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை.

மறைமுகமாக விஜய் டிவிக்கு நாம் எந்த மிரட்டலும் விடவில்லை. நமது லட்டர் பேடில் விஜய் டிவிக்குக் கடிதம் எழுதி இந்த நிகழ்ச்சி கிறுக்குத்தனமானது. வாதங்கள் அடிப்படையில் அமையவில்லை. பர்தா அணிந்த பெண்ணை நடிக்க வைத்து முடிவில் பர்தாவைக் கழற்றி வீசிச் செல்வது போல் தயாரிக்கப்பட்டுள்ள நாடகமாக இது உள்ளது.

பர்தா? சரியா இல்லையா என்பதைப் பற்றி கோபிநாத்தோ வேறு யாருமோ முஸ்லிம் அறிஞர்களுடன் விவாதிக்கட்டும். தை நாம் வரவேற்போம்.

ஒரு பெண்ணை நடிக்க வைத்து பர்தாவைக் கழற்றச் சொல்லி காட்டுவது என்றால் இது அறிவுப்பூர்வமானது அல்ல. கண்டிப்பாக அதைத் தயாரித்தவரின் விஷமத்தனம் தான் காரணம் என்பதைத் தகுந்த காரங்களுடன் விஜய் டிவி நிர்வாகத்துக்கு விளக்கினோம்.

ஒளிந்து கொண்டு மிரட்டல் எதுவும் விடவில்லை.

உதாரணமாக நிர்வாணமாக மனிதன் நடமாடலாமா என்று ஒரு நிகழ்ச்சியை அந்த தொலைக்காட்சி ஏற்பாடு செய்கிறது என்று வைத்துக் கொள்வோம். (விஜய் டிவி அப்படி ஒரு நிகழ்ச்சி தயாரித்தாலும் ஆச்சர்யம் இல்லை.) அதில் நிர்வாணம் தான் சரி என்று காட்டி அதில் கலந்து கொண்டு ஆடை அணிந்த மனுஷ(?) புத்திரன் என்பவரை எல்லா ஆடையையும் அவிழ்த்துப் போட்டு விட்டு ஓடுவது போல் காட்டினால் அது விவாதம் என்ற வகையில் சேருமா?

பர்தா பற்றிய நிகழ்ச்சி அது போல் இருந்ததால் தான் விஜய் டிவியின் அயோக்கியத்தனத்தை நேருக்கு நேராக எதிர்கொண்டோம்.  

விஜய் டிவி நிர்வாகமும் அதைப் பார்த்து விட்டு அது விஷமத்தனமாக தயாரிக்கப்பட்டதை அறிந்து தயாரித்தவரையும் கண்டித்து  அதை நிறுத்தியது.

எனவே தவ்ஹீத் ஜமாஅத் எதைச் செய்தாலும் சொந்தப் பெயரில் நேருக்கு நேராகத் தான் செய்யும். முதுகெலும்பில்லாமல் செயல்படாது.

புதிய தலைமுறையில் தலாக் என்ற நிகழ்ச்சி நிறுத்தப்பட்டற்கு தவ்ஹீத் ஜமாஅத் நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணம் இல்லை.

ஆனால் அந்த நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் சார்பில் பேசிய சிலர் ’வரும் ஆனால் வராது’ என்ற வகையில் பேசி இருமுகம் காட்டியுள்ளதாக ஊடக நண்பர்கள் சிலர் வருத்தப்பட்டு நம்மிடம் சொன்னார்கள்.

தலாக் என்பது தவறானது என்று அவர்கள் கருதினால் தவறு என்று சொல்ல வேண்டும். சரி என்று கருதினால் அதற்கேற்ப வாதிட வேண்டும்.

அப்படி இல்லாமல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தின் எதிரிகளையும் இரு சேர திருப்திப்படுத்தும் வகையில் பேசுவதைச் சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். எனவே ஊடக நண்பர்கள் சொன்னது நமக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை.

அது ஒளிபரப்பப்பட்டால் தான் இது உண்மையா என்று தெரியும்.

June 30, 2013, 9:01 PM

விபச்சாரத்தைத் திருமணமாக்கிய உயர்நீதி மன்றம்

விபச்சாரத்தைத் திருமணமாக்கிய உயர்நீதி மன்றம்

திருமணம் செய்யாமல் ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொண்டால், அதுவும் திருமணம்தான் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது சரியா? திருமணம் செய்யாமல், இருவர் சேர்ந்து வாழ்வதும் திருமணம் மூலம் சேர்ந்து வாழ்வதும் சமமானதுதான் என்று இதை ஒட்டி எழுப்பப்படும் வாதங்கள் சரியானவையா?

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆணும் பெண்ணும் முஸ்லிம்களாக உள்ளதால், முஸ்லிம் சட்டத்தில் நீதி மன்றம் தலையிடுவதற்கு இதை முன்னோடியாக எடுத்துக் கொள்ளலாமா?

அபுசாலிஹ், அரக்கோணம் மற்றும் சிலர்

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நாட்டின் சட்டப்படி சரியானதுதானா என்றால் நமது சட்டத்தில் உள்ள குளறுபடிகள் காரணமாக இதைச் சரி என்றும் வாதிட முடியும். தவறு என்றும் வாதிட முடியும்.

நமது நாட்டின்  சட்டப்படி ஒரு ஆணும் பெண்ணும் மனம் விரும்பி உடலுறவு கொள்வது விபச்சாரமாகக் கருதப்படுவதில்லை. அவர்கள் மீது விபச்சார வழக்குப் போட முடியாது. விபச்சாரம் இல்லை என்று சட்டம் சொன்னால் அது திருமணம் என்றுதான் சொல்ல வேண்டும் என்று புரிந்து கொள்ள முடியும்.

அது போல் ஒருவனுக்கு மனைவி இருக்கும் போது இன்னொருத்தியை அல்லது இன்னும் பலரை வைப்பாட்டியாக வைத்துக் கொண்டு குடும்பம் நடத்தினால் அந்த ஆண் மீதும், பெண் மீதும் விபச்சார வழக்குகள் போட முடியாது. அதாவது அது சட்டப்படியான செயல்தான் என்று நமது சட்டம் சொல்கிறது.

கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வதும், விபச்சாரத்தைத் தொழிலாக நடத்துவதும் தான் நமது நாட்டு சட்டப்படி குற்றமாகத் தெரிகிறது. இதை மட்டும் கவனத்தில் கொள்ளும் நீதிபதிகள் சட்டப்படி குற்றமில்லாத வகையில் உடலுறவு நடந்துள்ளதால் அது கணவன் மனைவி உறவாகத்தான் ஆகும் என்று தீர்ப்பளித்து விடுகிறார்கள்.

விரும்பிச் செய்தால் அது குற்றமில்லை என்று சட்டம் இயற்றப்பட்டுள்ள நாட்டில் இப்படி நீதிபதி தீர்ப்பளித்ததை முற்றாக எதிர்க்க முடியாது. அவர் மேற்கண்ட வாதங்களை வைத்து தனது தீர்ப்பை நியாயப்படுத்துவார். ஆனால் இதற்கு முரணாகத் தீர்பளிக்கும் வகையிலும் நமது நாட்டுச் சட்டம் அமைந்துள்ளதைக் காண முடிகிறது.

நமது நாட்டில் முஸ்லிமல்லாதவர்கள் ஒன்றுக்கு மேல் திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும்.

ஒரு மனிதனுக்கு மனைவி இருக்கும் போது இன்னொருத்தியை வைப்பாட்டியாக வைத்துக் கொள்கிறான்; அல்லது பலரை வைப்பாட்டியாக வைத்துக் கொள்கிறான்.

வைப்பாட்டிகள் நீதிமன்றத்தை அணுகி எங்களுடன் மனவிருப்பத்துடன் பத்து வருடம் குடும்பம் நடத்தினார். எங்கள்  பிள்ளைகளுக்கு தந்தை எனக் கூறி பள்ளிச் சான்றிதழிலும் குறிப்பிட்டுள்ளார். எனவே எங்களையும் அவரது மனைவியராக ஆக்கி உத்தரவு போட வேண்டும் என்று வழக்குப் போட்டால் என்ன தீர்ப்பு அளிப்பார்கள்? என்ன தீர்ப்பு அளித்துள்ளார்கள்?

இரண்டாம் திருமணம் செய்து நீதிமன்றங்களால் தண்டிக்கப்படாதவர்கள் :

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த, இந்து மதத்தைச் சேர்ந்த பாவ்ராவ் சங்கர் லோகாண்டே முதல் மனைவி இருக்க இரண்டாம் திருமணம் செய்தார். முதல் மனைவி இதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். கீழ்நிலை நீதிமன்றங்களும், உயர் நீதிமன்றமும் அவரைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தன.

ஆனால் பாவ்ராவ் சங்கர் லோகாண்டே உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தபோது இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் விடுபட்டதால் இரண்டாவதாக நடந்தது திருமணமே இல்லை. எனவே பாவ்ராவ் சங்கர் இரண்டாம் திருமணம் செய்யவில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 (பாவ்ராவ் சங்கர் லோகாண்டே எதிர் மராட்டிய அரசு 1965 - 1566)

சுரேஷ் சந்திர கோஷ் என்பவர் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாம் திருமணம் செய்தார். அவரது மனைவி பிரியா பாலா கோஷ் அவருக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கிலும் உச்சநீதிமன்றம் இரண்டாம் திருமணம் செய்த சுரேஷ் சந்திர கோஷைத் தண்டிக்கவில்லை. இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் நடந்தது நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி சுரேஷைத் தண்டிக்க மறுத்து விட்டது.

(பிரியா பாலா கோஷ் எதிர் சுரேஷ் சந்திர கோஷ் AIR 1971 sc 1153)

ஆந்திராவைச் சேர்ந்த எல்.வெங்கடரெட்டி என்பவர் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்தார். முதல் மனைவி லிங்காரி ஒப்புல்லம்மா கணவருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கிலும் உச்சநீதிமன்றம் வெங்கடரெட்டியைத் தண்டிக்கவில்லை. இரண்டாம் திருமணத்தின்போது சில சடங்குகள் செய்யப்படாததே காரணம்.

(லிங்காரி ஒப்புல்லம்மா எதிர் எல்.வெங்கடரெட்டி மற்றும் சிலர் AIR 1979 sc 848)

காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பங்காரி என்பவர் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாம் திருமணம் செய்தார். இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் விடுபட்டதால் அது திருமணமே அல்ல. இரண்டாம் மனைவி அவரது வைப்பாட்டி தான். வைப்பாட்டி வைத்துக் கொள்வதைத் தண்டிக்க சட்டத்தில் இடமில்லை என்று காஷ்மீர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 (பங்காரி எதிர் ஜம்மு கஷ்மீர் மாநில அரசு AIR 1965 jk105)

இப்படி ஏராளமான வழக்குகளில் நாட்டின் உச்சநீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் தீர்ப்பளித்துள்ளன.

மேற்கண்ட நீதிபதியிடம் இது போன்ற வழக்கு வந்தால் உடலுறவு நடந்துவிட்டதால் மனைவியர் தான் என்று சொல்வாரா? சொல்ல மாட்டார் என்றுதான் நாம் நினைக்கிறோம்.

இவர்களும் மனைவியர் தான் என்று சொல்வது மட்டும் போதாது.  ஒரு மனைவிக்கு மேல் திருமணம் செய்யக் கூடாது என்ற சட்டத்தை மீறியதற்காக அவருக்கு உரிய சிறைத் தண்டனை அளித்தும் உத்தரவிட வேண்டும்.

நாடு சுதந்திரமடைந்தது முதல் ஒரே ஒரு வழக்கில் கூட இப்படி தீர்ப்பளிக்கப்பட்டதாக நாம் அறியவில்லை. பல வழக்கறிஞர்களிடம் கேட்ட போது அவர்களுக்கும் இப்படி தீர்ப்பளிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

அப்படியானால் உடலுறவு நடந்தாலே போதும்! பள்ளிச்சான்றிதழில் பெயர் இருந்தாலே போதும் என்ற வாதம் இப்போது என்னாவது?

மேலை நாடுகளில் இருந்த குரூப் செக்ஸ் எனும் கலாச்சாரம் இங்கேயும் பரவி வருகிறது. ஒரு பெண்ணுடன் இரண்டு  மூன்று ஆண்கள் பல வருடங்கள் இப்படி உடலுறவு கொண்டால் அந்தப் பெண்ணிற்கு அந்த இருவரும் கணவர்களா?

அந்தப் பெண்ணுக்கு பிறந்த ஒரு குழந்தைக்கு ஒருவன் தந்தை எனவும், இன்னொரு குழந்தைக்கு இன்னொருவன் தந்தை எனவும் பள்ளிச் சான்றிதழில் குறிப்பிட்டு இருந்தால் நீதிபதி எப்படித் தீர்ப்பளிப்பார்? அந்தப் பெண்ணுக்கு இருவரையும் கணவர்கள் என்று தீர்ப்பளிப்பாரா?

குழப்பமான சட்டங்களை வைத்துக் கொண்டு தாமும் குழம்பி மக்களையும் குழப்புகிறார்கள் என்பது இது போன்ற முரண்பட்ட தீர்ப்புகள் மூலம் தெரிய வருகிறது.

இஸ்லாம் சொல்வதுபோல திருமணம் மூலம்  தவிர உடலுறவு நடக்கக் கூடாது. அப்படி நடந்தால் அது  தண்டனைக்குரிய குற்றம் என்று சட்டம் இருந்தால் பெண்ணும் ஆணைத் தன் வலையில் வீழ்த்த நினைக்க மாட்டாள். ஆணும் பெண்ணை ஏமாற்றி அனுபவிக்க நினைக்க மாட்டான். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினால் சட்டப்படி திருமணம் செய்து கொள்வார்கள். இதுபற்றிய வழக்குகள் நீதிமன்றத்துக்கே வராமல் போய்விடும்.

மேற்படி தீர்ப்பைப்பற்றி சட்டத்தின் பார்வை இதுதான்.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்குப் பின்னர் அறிவு ஜீவிகள் என்ற போர்வையில் நாட்டைக் கெடுக்கும் விஷக்கிருமிகள் புரட்சிகரமான தீர்ப்பு என்று கிருக்கித் தள்ளுகின்றனர்.

திருமணம் செய்தாலும் அவர்களிடையே பிரச்சனை வருகிறது; திருமணம் செய்யாவிட்டாலும் பிரச்சனை வருகிறது. எனவே இரண்டும் ஒன்றுதான் என்று உளறிக் கொட்டுகின்றனர்.

விஷம் குடித்தாலும் சாகிறார்கள் விஷம் குடிக்காதவர்களும் சாகிறார்கள். இரண்டும் ஒன்று தான் என்று கூறுவதற்குச் சமமாக இந்த விஷக்கிருமிகளின் வாதங்கள் அமைந்துள்ளன.

ஆரோக்கியமாக இருந்தவனும் சாவான், நோயாளியும் சாவான் என்பதால் இரண்டும் ஒன்றாகி விடாது. நோயாளிகளில் அதிக சதவிகிதம் சாவார்கள். ஆரோக்கியமானவர்களில் குறைந்த சதவிகிதம் சாவார்கள்.

நாட்டில் சுமார் 95 சதவிகிதம் மக்கள் திருமண வாழ்க்கையில் உள்ளனர். திருமணம் ஆகாமலே குடும்பம் நடத்துபவர்கள் 5 சதவிகிதம் கூட இருக்க மாட்டர்கள். ஆனால் திருமண வாழ்க்கையில் ஈடுபட்ட 95 சதவிகித மக்களிடம் ஏற்படும் அதே அளவு பிரச்சனை ஐந்து சதவிகிதத்திலும் உள்ளது என்றால் இது எவ்வளவு பெரிய வேறுபாடு?

அறிவைப் பயன்படுத்தி சிந்தித்தால் எது பாதுகாப்பானது? எது நன்மை பயக்கக் கூடியது என்று இவர்கள் அறிந்து கொண்டிருப்பார்கள். ஆனால் அறிவாளிகளுக்கு முற்போக்கு பட்டம் கிடைக்காதே? அதனால்தான் சிந்திக்க மறுத்து முற்போக்காளர்களாக ஆகிக் கொண்டு இருக்கிறார்கள்.

திருமணம் நடக்கும்போது அதில் ஒரு உறுதிமொழி உள்ளது. அதில் ஒரு ஒப்பந்தம் உள்ளது. ஒருவர் மற்றவரிடம் தலையிடும் உரிமை உள்ளது. இருவருக்கும் இடையே சமுதாயம் முன்னின்று நடத்தி வைத்ததால் அவர்களின் தலையீடு இருக்கும்.

பெண்ணின் இளமையை அனுபவித்துவிட்டு ஓடிப்போனால் கட்டிவைத்து உதைப்பார்கள் என்ற அச்சம் காரணமாகவும், வேறு  இடத்தில் யாரும் பெண் தர முடியாத நிலை ஏற்படும் என்பதற்காகவும் மனைவி அழகிழந்த போதும் அவருடனே ஆண்கள் வாழ்கிறார்கள்.

ஒரு ஆணும் பெண்ணும் தாமாகப் பேசி சேர்ந்து வாழும்போது பெண்ணுக்கு ஒரு குழந்தையுடன் அழகு போய்விட்டால் அடுத்தவளைத் தேடிச் சென்று இது போல வாழ்வான். அவளுக்கு ஆதரவாக அவரது குடும்பத்தினர் வர மாட்டார்கள்.  பெண்ணுக்கு அப்படி நினைத்த மாத்திரத்தில் துணை அமையாது.

திருமணம் மூலம் பெண்களின் வாழ்வுக்கும் எதிர்காலத்துக்கும் உத்தரவாதம் கிடைக்கின்றது.

திருமணம் இல்லாமல் வாழும் நூறு பேர் திருமணம் செய்த நூறு பேர் என்று எடுத்துக்கொண்டு பார்த்தால் முதல் நூறில் சரிபாதி பஞ்சாயத்தாக போய் விடும். இரண்டாம் நூறில் ஒரு பஞ்சாயத்து நடந்தால் அதுவே அதிகம்.

எனவே ஒழுக்க மாண்புகளின் அடிப்படையிலும், பெண்களின் பாதுகாப்பு என்ற அடிப்படையிலும் நீதிபதியின் தீர்ப்பு கண்டனத்துக்கு உரியது. அறிவு ஜீவிகளின் வாதம் கிறுக்குத்தனமானது.

அடுத்து இவ்வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என்பதால் நமக்குப் பாதிப்பு ஏற்படுமா என்பதை எடுத்துக் கொள்வோம்.

உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு முஸ்லிம்களையும், முஸ்லிம் தனியார் சட்டத்தையும் எள் முனையளவும் பாதிக்காது. முஸ்லிம் தனியார் சட்டத்துக்கு அரசியல் சாசனத்தில் உத்தரவாதம் இருக்கும்வரை நாட்டின் எந்த நீதிமன்றமும் அதில் தலையிட முடியாது.

அப்படித் தலையிட்டால் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் ஒருங்கிணைந்து அதைத் தக்க முறையில் சந்திப்பார்கள்.

வழக்கில் சம்மந்தப்பட்ட இருவரும் முஸ்லிம் சட்டப்படி திருமணம் செய்யாமலே சின்ன வீடு போல் வாழ்ந்ததால் அவர்கள் முல்லிம் தனியார் சட்டத்தின் கீழ் வர மாட்டார்கள்.

இஸ்லாம் கூறும் முறைப்படி திருமணம் நடந்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு முஸ்லிம் தனியார் சட்டப்படி தீர்ப்பு அளிக்கப்படும். எனவே இது முஸ்லிம்களின் பிரச்சனை அல்ல.  இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்த எந்த முஸ்லிமையும் இந்தத் தீர்ப்பு பாதிக்காது.

முஸ்லிமாகப் பிறந்தவன்  தாலி கட்டி திருமணம் செய்தால் அவன் பெயர் அரபு மொழியில் உள்ளதால் அவன் முஸ்லிம் தனியார் சட்டத்துக்குள் வரமாட்டான். அதுபோல இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்யாமல் பதிவுத் திருமணம் செய்து கொண்டால் அவர்களாகவே முஸ்லிம் தனியார் சட்டத்தில் இருந்து விடுவித்துக் கொண்டதால் அவர்களும் முஸ்லிம் தனியார் சட்டத்துக்குள் வரமாட்டார்கள்.

எனவே இந்தத் தீர்ப்பு முஸ்லிமாக வாழாத இஸ்லாமிய  தண்டனைச் சட்டத்தை மதிக்காத இருவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு என்பதால் இதுபற்றி நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

June 26, 2013, 1:08 AM

குஜராத்தில் நடந்ததை மறந்திட வேண்டுமாமே?

குஜராத்தில் நடந்ததை மறந்திட வேண்டுமாமே?

முஸ்லிம்கள் குஜராத் கலவரத்தை மறந்துவிட வேண்டும் என்று பா.ஜ.க தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளாரே!

மசூது, கடையநல்லூர்.

பாபர் மசூதி இடிப்பின் போது செய்த துரோகத்தை மறந்துவிட வேண்டும் என்று காங்கிசார்  சொன்னார்கள். அதையே இப்போது பா.ஜ.க வும் சொல்கிறது.

கலவரங்களின் போது காங்கிரஸ் செய்த கணக்கிலடங்காத துரோகங்களை மறந்து விட்டுத் தான் முஸ்லிம்கள் காங்கிரசுக்கு வாக்களித்து வருகின்றனர்.

அதுபோல பா.ஜ.க  செய்த அக்கிரமங்களை எப்போது மறக்கலாம்?

நாங்கள் இந்துத்துவா கொள்கையைக் கைவிட்டு விட்டோம்.

பாபர் மசூதி பிரச்சனையில் நாங்கள்  இனித் தலையிட மாட்டோம்.

முஸ்லிம்கள் கல்வி வேலை வாய்ப்பில் புறக்கணிக்கப்பட்டால் உரிய வாய்ப்புகளைப் பெற நாங்கள் உறுதி கூறுகிறோம்.

முஸ்லிம்கள் தங்கள் மத நம்பிக்கைப்படி நடந்து கொள்வதற்கு குறுக்கே நிற்க மாட்டோம். முஸ்லிம் தனியார் சட்டத்தில் கை  வைக்க மாட்டோம்.

என்று பகிரங்கமாக அறிவித்தால் அப்போது இது குறித்து பரிசிலனை செய்யலாம்.   

முஸ்லிம்களுக்கு நாம் ஒன்றும் செய்யாவிட்டாலும் பி.ஜே.பி. வரக்கூடாது என்பதற்காக நம்மை அதரிப்பதைத் தவிர முஸ்லிம்களுக்கு வழி இல்லை என்ற ஆயுதத்தை  காங்கிரசிடமிருந்து பிடுங்கியாக வேண்டும்.

ஆனால் பா.ஜ.க மறக்கச் சொல்வது இத்தகையதாக இல்லை.

உன்னை அடித்ததை மறந்து விடு! இனியும் உன்னை அடிக்கத்தான் செய்வேன்.

பள்ளிவாசல் இடத்தை மறந்து விடு! இனியும் பள்ளிகளை இடிப்பேன்

என்பது தான் பா.ஜ.கவின் கொள்கையாக இருப்பதால் நடந்ததை மறக்கச் சொல்வதை அயோக்கியத் தனமாகத்தான் கருத முடியும்.

June 26, 2013, 12:43 AM

பத்ரு சையதுக்கு பகிரங்க அறை கூவல்

 பத்ரு சையதுக்கு பகிரங்க அறை கூவல்

தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவராகவும், சென்னை திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் பத்ரு சைய்யத். மேல்தட்டுக் கலாச்சாரத்தைப் பின்பற்றும் வழக்கறிஞரான இவர் இஸ்லாமிய ஆடையான புர்காவை அணியாதவர் என்பதோடு, இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு எதிராக வாளை வீசும் குணம் கொண்டபவருமாவார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் (?) வழக்கு தாக்கல் செய்துள்ளார்.  அதில் இஸ்லாமியப் பெண்களுக்கு விவாகரத்து விவகாரங்களில் மற்ற மதத்தினருக்கு உள்ள சட்ட உரிமைகள் இல்லை. முஸ்லிம் பெண்களுக்கு மதம் சார்ந்த கட்டுப்பாட்டுகள்; இருப்பதால் அவர்களின் உரிமைக்காக முஸ்லிம் பெண்களால் போராட முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, ஜைனம், புத்தம் என்று ஏராளமான மதங்கள் உள்ளன.  இந்த மதங்களில் திருமணச் சட்டங்கள் பற்றி நிறைய சொல்லப்பட்டு உள்ளன.  ஆனால் விவாகரத்து எப்படிச் செய்ய வேண்டும்?  அதற்கான சட்டங்கள், விதிமுறைகள் என்ன? என்று தெரிவிக்கப்படவே இல்லை. 

இஸ்லாம் ஒரு மதமல்ல.  மாறாக அது ஒரு வாழ்க்கை நெறி.  அதனால் விவாகரத்து பற்றி அது சொல்லாமல் இருக்காது.  இருக்க முடியாது.  உலகிலேயே விவாகரத்து சம்பந்தமாக சரியான சட்ட நெறிகளை வகுத்த மார்க்கம் என்றால் அது இஸ்லாம் மட்டுமே! பத்ரு சையிது இஸ்லாம் குறித்து சரிவர தெரிந்து வைத்திருக்கவில்லை.  அதனால்தான் உயர்நீதிமன்றத்தில் கன்னா பின்னா என்று எழுதி
பிரமாண பத்திரம் தாக்கல் செய்கிறார். 

விவாகரத்து செய்வதற்கு ஆணுக்கு மட்டும் உரிமை வழங்கி, பெண்ணுக்கு அந்த உரிமையை இஸ்லாம் வழங்காமல் இருந்தால் இஸ்லாம் பெண்களுக்கு விவாகரத்து விவகாரங்களில் இஸ்லாம் உரிமை வழங்கவில்லை என்று சொல்லலாம். இஸ்லாத்தில் அப்படிப்பட்ட பாகுபாடு எதுவும் இல்லை.  ஒரு கணவன் தனது மனைவியை விவாகரத்து செய்வது போல ஒரு மனைவி தனது கணவனை விவாகரத்து செய்ய முடியும்.  இவ்வாறு மனைவி, கணவனை விவாகரத்து செய்யும் முறைக்கு குலா என்பது பெயர். இது குறித்து குர்ஆன் சொல்வதைப் பாருங்கள். 

அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் (மஹ்ராக) வாங்கியதில் எதையேனும் ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை.  இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும்.  எனவே அவற்றை மீறாதீர்கள்.  அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்களாவர்.  (திருக்குர்ஆன் 2 :229) 

இஸ்லாமியப் பெண்களுக்கு விவாகரத்து உரிமை வழங்கப்பட்டுள்ளது என்பதை மேற்காணும் திருக்குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகிறது.  அப்படி இருக்கும் போது விவாகரத்து விஷயங்களில் மற்ற மதத்தினருக்கு உள்ளது போன்ற சட்ட உரிமைகள் முஸ்லிம் பெண்களுக்கு இல்லை என்று பத்ரு சையது சொன்னால் அவர் கருத்துக்  குருடராக இருக்க வேண்டும்.  அல்லது இஸ்லாம் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவராக இருக்க வேண்டும்.  இதில் அவர் எந்த ரகம்? என்பதை அவர்தான் சொல்ல வேண்டும். 

ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஸாபித்பின் கைஸ் (ரலி) என்பவரின் மனைவி வருகிறார் அவர் அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ, நற்குணத்தையோ நான் குறைகூற மாட்டேன்.  ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்.(அதாவது கணவர் நல்லவராக இருந்த போதும் அவருடன் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை என்கிறார்.)  உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்படியானால் (அவர் உனக்கு திருமணக் கொடையாகத் தந்த) அவரது தோட்டத்தை திருப்பிக் கொடுத்து விடுகிறாயா? என்று கேட்டார்கள்.  அதற்கு அப்பெண்மணி சரி என்றார்.  உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்துவிடு என்றார்கள்

அறிவிப்பவர் :   இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி 
5273
 

முஸ்லிம் பெண்களுக்கு விவாகரத்து உரிமை உண்டு என்பதை மேற்கண்ட நபி வழி நிரூபிக்கிறது. இஸ்லாத்தின் அடிப்படை திருக்குர்ஆனும், நபி வழியும் மட்டுமே! இந்த இரண்டும் பெண்களுக்கு விவாகரத்து உரிமையை வழங்கி இருக்கும் போது முஸ்லிம் பெண்களுக்கு விவாகரத்து விஷயங்களில் உரிமை இல்லை என பத்ரு சையது சொல்வது அவரது அறிவின்மையை வெளிப்படுத்துகிறது அல்லவா? 

முஸ்லிம் அல்லாத பெண்ணை அவளது கணவர் விவாகரத்து செய்ய வேண்டுமானால் நீதிமன்றத்திற்கு சென்று அவளை நடத்தை கெட்டவள் என்று சொல்ல வேண்டும்

அல்லது சட்டம் ஏற்கும் ஏதாவது காரணத்தை அவள் மீது பழியாக தூக்கிப் போட வேண்டும். 

அப்போதுதான் விவாகரத்து கிடைக்கும். 

முஸ்லிம் பெண் மீது இப்படி அவதூறு சுமத்தி
, விவாகரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை. காரணத்தை வெளியில் காட்டாமலேயே ஒரு முஸ்லிம் பெண்ணால் விவாகரத்து பெற்று விட முடியும்.  முஸ்லிம் பெண்களுக்கு உள்ள இந்த உரிமைகளைப் பிற மத பெண்களுக்கும் தர வேண்டும் என்று பத்ரு சையது சொன்னால் அது நியாயம்.  அதை விட்டு விட்டு இஸ்லாமியப் பெண்களுக்கு விவாகரத்து பிரச்சனையில் சட்டஉரிமை இல்லை என்று சொன்னால் விவாகரத்து செய்யும் ஒவ்வொரு முஸ்லிம் கணவனும், தனது மனைவியை நடத்தை கெட்டவள் என சொல்ல வேண்டும் என்று பத்ரு சையது சொல்ல வருகிறாரா? இது தான் அவருடைய நோக்கம் என்றால் முஸ்லிம் சமுதாயம் இதை எதிர் கொள்ள வேண்டிய விதத்தில் எதிர்கொள்ளும். 

மனைவிக்குத் தெரியாமலேயே மூன்று முறை தலாக் கூறிவிட்டு, ஹாஜிக்களிடம் விவாகரத்துக்கான ஒப்புதல் மற்றும் சான்றிதழைப் பெற்றுக் கொள்கின்றனர்.  இது இஸ்லாமியப் பெண்களுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.  எனவே தலாக் கூறி விவாகரத்து செய்யும் கணவருக்கு ஒப்புதலும், சான்றிதழும் அளிப்பதற்கு தமிழக தலைமை ஹாஜி மற்றும் ஹாஜிக்களுக்கு தடை விதிக்க வேண்டும்.  விவாகரத்துக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம்  ஹாஜிக்களுக்கு இல்லை என்று அறிவிக்க வேண்டும் என்று பத்ரு சையது தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய மார்க்கத்தில் ஒரே சமயத்தில் மூன்று முறை தலாக் சொல்லும் முறையே கிடையாது.  இதை ஹாஜிக்களும் புரிந்து கொள்ளவில்லை. பத்ரு சையதுக்கும் தெரியவில்லை.  ஒருவர் டவுன் ஹாஜியிடம் செல்கிறார்.  நான் எனது மனைவியை ஒரே சமயத்தில் முத்தலாக் சொல்லிவிட்டேன்.  அதற்கான ஆதாரம் இதோ! என்று காட்டுகிறார்.  இவருடைய ஆதாரத்தின் அடிப்படையில் இது குறித்து விளக்கமளிக்கவும், நேரில் ஆஜராகவும் டவுன் ஹாஜி மனைவிக்கு நோட்டீஸ் அனுப்புகிறார்.  இந்த நோட்டீஸை மதித்து நேரில் ஆஜரானால் உனது கணவர் உன்னை முத்தலாக் கூறிவிட்டார்.  இனிமேல் நீங்கள் கணவன், மனைவி கிடையாது.  இனி இருவரும் கணவன், மனைவி ஆக வேண்டும் என்றால் மனைவி இன்னொருவரை திருமணம்செய்து அந்த கணவர் விவாகரத்து செய்தால் மட்டுமே நீங்கள் மறுபடியும் திருமணம்  செய்ய முடியும் என்று சொல்லி, விவாகரத்துக்கான ஒப்புதல் சான்றை வழங்கி விடுகிறார். 

மனைவி வராவிட்டாலோ
, விளக்கம் சொல்லாவிட்டாலோ குறிப்பிட்ட அவகாசத்திற்குப் பிறகு ஹாஜி விவாகரத்து வழங்கி விடுகிறார்.  ஒரே சமயத்தில் முத்தலாக் சொல்வது செல்லும் என சொல்லி, கணவன், மனைவியை நிரந்தரமாக பிரிப்பது பாவமான செயலாகும். இதை ஹாஜிக்கள் செய்யக் கூடாது என்று பத்ரு சையது சொன்னால் அது சரி.

ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரே சமயத்தில் மூன்று தலாக் கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது. 

அறிவிப்பாளர்.  இப்னு அப்பாஸ்
,

நூல்
, முஸ்லிம் 2691.

இந்த நபி வழியின் அடிப்படையில் பத்ரு சையது வாதம் வைக்கவில்லை.  மாறாக தலாக் சான்றிதழையே ஹாஜிக்கள் தரக் கூடாது என்கிறார். 

இந்த வாதம் இஸ்லாமியக் கொள்கை
, கோட்பாடுகளுக்கு எதிரானது.  ஸாபித்பின் கைஸ் (ரலி) அவர்களின் மனைவி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் முறையிட்டு விவாகரத்து பெற்றதின் மூலம் டவுன் ஹாஜி மட்டுமல்ல. சமுதாயத் தலைவர் எவரிடமும் முறையிட்டு ஒரு இஸ்லாமியப் பெண் விவாகரத்து பெற முடியும் என்பதே சட்டத்தின் நிலையாகும். 

இந்த சட்டத் தெளிவு இல்லாமல் டவுன் ஹாஜிக்கு உள்ள உரிமையைப் பறிக்க வேண்டும் என பத்ரு சையது சொல்வது அபத்தமானது. விவாகரத்து பெறுவது சிரமமானால் அங்கு கொலைகளும்
, கள்ள உறவுகளும் தான் அதிகாரிக்கும். இதைத் தான் பத்ரு சையது விரும்புகிறாரா? எனத் தெரியவில்லை.

மனைவிக்குத் தெரியாமலேயே கணவர்கள் தலாக் கூறி வருகிறார்கள் என்ற அபத்த வாதத்தையும் பத்ரு சையது வைக்கிறார். அது எப்படி முடியும் என்று தெரியவில்லை. இஸ்லாமிய மார்க்கத்தில் ஒரு கணவன் எடுத்த எடுப்பில் மனைவியை தலாக் சொல்லி விட முடியாது.

திருகுர்ஆனின் 4:34 வது வசனப்படி

ஒரு கணவன்
,  தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு முன் அறிவுரை கூறி மனைவியை திருத்த முயல வேண்டும்.

அது பயன்தராத போது மனைவியை படுக்கையில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்.

அதுவும் பயன்தராத போது லேசாக அடித்து திருத்த முயல வேண்டும்.

இதன் பிறகும் கணவனுக்கும்
, மனைவிக்கும் இடையில் இணக்கம் ஏற்படவில்லை என்றால் இருவரது குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர்கள் மூலம் பேசித் தீர்க்குமாறு திருக்குர்ஆனின் 4:35வது வசனம் கட்டளையிடுகிறது.

இந்த நான்கு வழிமுறைகளும் பயனில்லாத போதுதான் கணவன்
, மனைவியை தலாக் சொல்ல வேண்டும். தலாக்கிற்கு முன்பு கணவன் மனைவிக்கு அறிவுரை சொல்லும் போதே கணவனின் தலாக் நோக்கம் மனைவிக்கு தெரிந்து விடும். மனைவியை படுக்கையில் இருந்து விலக்கி வைக்கும் போது சந்தேகத்திற்கு இடமின்றி தலாக் நோக்கம் புரிந்துவிடும். அடிக்கும் போது தலாக் நோக்கம் அப்பட்டமாக தெரிந்து விடும். இரு குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர்கள் சமரசம் பேசும் போது இரு குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் தலாக் நோக்கம் தெரிந்து விடும். பின்னர் கணவன் முதல் தலாக் சொல்லும் போது மனைவிக்கு தெரியாமல் கணவன் தலாக் சொல்லி விட்டான் என்று எப்படி சொல்ல முடியும்?

கணவன் தனது மனைவியை தலாக் சொல்வதற்கு முன்பு திருக்குர்ஆனின் கூறும் 4 வழிமுறைகள் பின்பற்றப்பட்டனவா? என்று டவுன் ஹாஜி விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும். இதை அவர் சரிவர செய்வது கிடையாது. ஒரே சமயத்தில் சொல்லப்படும் முத்தலாக் செல்லாது. இந்த இஸ்லாமிய சட்டத்தை டவுன் ஹாஜி விளங்கிக் கொள்ளாமல் பல சமயங்களில் சொல்லப்படும் மூன்று தலாக்குக்கான சட்டத்தை ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லப்படும் தலாக்குக்கு  பயன்படுத்தி குடும்பத்தில் பெரும் குழப்பம் செய்துவிடுகிறார். 

டவுன் ஹாஜியின் இந்தத் தவறான செயலைத் தடுத்து நிறுத்தும் வகையில் பத்ரு சையதின் மனு இல்லை.  மாறாக விவாகரத்து விஷயங்களில் முஸ்லிம் பெண்களுக்கு சட்ட உரிமைகள் இல்லை என்பது போலவும்
, இஸ்லாமியத் தலைவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் தந்துள்ள சட்ட உரிமைகளைப் பறிக்கும் நோக்கத்திலும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். 

விவாகரத்து விஷயத்தில் இவர் இஸ்லாமியக் கொள்கைகளைத் தெரிந்து கொள்ள நினைத்தால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை பத்ரு சையித் அணுகலாம்.  அல்லது தனது கொள்கையில் பத்ரு சையத் உறுதியாக இருந்தால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தோடு அவர் நேரடி விவாதம் செய்து தனது நிலைப்பாடு சரி
என நிரூபிக்க முன் வர வேண்டும். 

ஆரோக்கியமான இந்த இரு வழிமுறைகளை பத்ரு சையது புறக்கணித்து இஸ்லாத்திற்கு எதிராக வாளை உருவினால் இவரை முஸ்லிம் சமுதாயம் எதிர் கொள்ள வேண்டிய முறையில் எதிர் கொள்ளத் தயங்காது என சொல்லிக் கொள்கிறோம்.

குறிப்பு : பதர் சையதுக்கு விவாத அறைகூவல் கடிதம் அனுப்பப்பபட்டுள்ளது. (காண்க : ஸ்கேன் செய்யப்பட்ட கடிதம்)

June 22, 2013, 10:09 PM

அதிக மதிப்பெண் போதை

அதிக மதிப்பெண் போதை

கேள்வி

 – இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களில் போதுமான முஸ்லிம்கள் தேறவில்லையே? இந்தப் பின்னடைவுக்குக் காரணமென்ன? இதை எப்படிச் சரி செய்வது?

பதில்

 – இதில் பின்னடைவு ஏதும் இல்லை. சரி செய்வதற்கும் ஒன்றுமில்லை. முதல் மூன்று இடங்களைப் பிடிக்க வேண்டும் என்று வெறியூட்டப்படுவதே கண்டிக்கத்தக்கதாகும். பிஞ்சுப் பருவத்திற்கென்று சில ஆசைகளும், தேவைகளும் உள்ளன.

உடலை வலுவாக வைத்திருக்க துணைபுரியும் விளையாட்டுக்கள், நண்பர்களுடன் பொழுதுபோக்குதல், போதுமான தூக்கம், தேவையான ஓய்வு, குறித்த நேரத்தில் சாப்பாடு என்று அனைத்தையும் வழக்கம்போல் செய்து கொண்டு படிக்கவும் வேண்டும். ஆடல், பாடல், சினிமா போன்ற பயனற்றவைகளைத் தவிர்க்கலாமே தவிர எப்போது பார்த்தாலும் புத்தகமும் கையுமாக இருக்கப் பழக்கப்படுத்தக் கூடாது.

பிள்ளைப் பருவத்தின் சந்தோஷங்களைக் கெடுத்து முதல் மதிப்பெண்தான் லட்சியம் என்று போதிக்கப்படுவதாலும், அனைவரும் இதை ஊக்குவிப்பதாலும், மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காவிட்டால், இதை அவமானமாகக் கருதி தற்கொலையும் செய்கிறார்கள்.

சில பெற்றோர்கள் அதிக மதிப்பெண் எடுக்காவிட்டால், நடப்பதே வேறு என்று எச்சரித்து பயம் காட்டுவதாலும், மதிப்பெண் குறைவாகப் பெறும்போது, தற்கொலை செய்ய மாணவர்கள் தூண்டப்படுகின்றனர். இந்த மனநிலை மாற வேண்டும். முஸ்லிம் மாணவர்களுக்கு இதுபோல் வெறியேற்ற வேண்டிய அவசியம் இல்லை.

படிப்பில் ஆர்வமூட்டி அவனது நினைவாற்றலுக்கு ஏற்ப எடுக்கும் மதிப்பெண்களைப் பெற்றோரும் பொருந்திக் கொள்ள வேண்டும்பெற்றோர் பொருந்திக் கொள்வார்கள் என்பதை அந்த மாணவனுக்கு உணர்த்த வேண்டும்.

அதிக மதிப்பெண் குறித்த இன்னும் சில உண்மைகளையும் நாம் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளோம். அதில் மறைந்துள்ள மர்மங்களை அறிந்து கொண்டால் அதிக மதிப்பெண் என்ற வெறிபிடித்து அலைவது ஒழிந்துவிடும்.

நமது நாட்டில் உள்ள கல்வி முறையில் திறமைக்கோ, சிந்திக்கும் திறனுக்கோ மதிப்பெண்கள் போடுவதில்லை. மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதற்குத்தான் மதிப்பெண்கள் போடப்படுகின்றன. புரியாமல் மனப்பாடம் செய்திருந்தால்கூட அதை எழுதினால் மதிப்பெண் கிடைத்துவிடும்.

இதன் பின்னர் எதிர்கொள்ள வேண்டிய சவால்களைச் சமாளிக்க இந்த மனப்பாடமும் அதனால் கிடைத்த மதிப்பெண்களும் உதவாது.

மொழியறிவும், சிந்திக்கும் திறனும் உடைய முன்னாள் முதல்வர் கருணாநிதி எஸ்.எஸ்.எல்.சி.யில் பெயில் ஆனவர்தான்.

கடந்த 20 ஆண்டுகளாக 12ஆம் வகுப்பில் முதலிடம் பெற்றவர்களின் பட்டியலைத் திரட்டிப் பாருங்கள். அவர்கள் அனைவருமே நாட்டில் சிறந்த விஞ்ஞானியாக, சிறந்த மருத்துவராக, சிறந்த எஞ்சீனியராக, சிறந்த பேராசிரியராக இருக்கிறார்களா? ஓரிருவர் அப்படி இருப்பார்களே தவிர, மற்றவர்களால் பிரகாசிக்க இயலவில்லை என்பதை அறியலாம்.

அதே நேரத்தில் முதல் நிலையில் பல்வேறு சாதனைகள் படைத்தவர்களிடம் நீங்கள் 12ஆம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பிடித்தவரா என்று விசாரித்துப் பாருங்கள். அவர்களில் அதிகமானவர்கள் சராசரியான மதிப்பெண் பெற்றவராகவே இருப்பார்கள்.

எனவே மதிப்பெண்களுக்காக அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அது மட்டுமே திறமைக்கும், அறிவுக்கும் ஒரே அடையாளம் அல்ல. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

மனப் பாடத்திற்காகத்தான் மதிப்பெண்கள் கிடைக்கின்றன என்பது கூட முழுமையான உண்மை அல்ல. அது ஓரளவுக்குத்தான் உண்மை.

100 கேள்விகளிலிருந்து 10 கேள்விகள் கேட்கப்படும் என்பதற்காக 100 கேள்விகளுக்கான விடைகளையும் மாணவர்கள் மனப்பாடம் செய்கிறார்கள்.

அதில் ஒரு மாணவன் 95 கேள்விகளுக்கான விடைகளை மனப்பாடம் செய்துவிட்டான். ஆனால் கேட்கப்பட்ட பத்து கேள்விகளில் எட்டு கேள்விகள் அவன் மனப்பாடம் செய்ததாகவும், இரண்டு கேள்விகள் அவன் மனப்பாடம் செய்யாத ஐந்து கேள்விகளில் இருந்து கேட்கப்பட்டால் அவனுக்கு 80 சதவிகித மதிப்பெண்தான் கிடைக்கும்.

இன்னொரு மாணவனோ 70 கேள்விகளுக்கான விடைகளை மனப்பாடம் செய்தான். கேட்ட கேள்விகள் அனைத்தும் அந்த 70க்குள் அடங்கியிருந்தால் அவன் 100 சதவிகித மதிப்பெண் பெறுவான்.

அதாவது 95 சதவிகிதம் மனப்பாடம் செய்தவனுக்கு 80 மதிப்பெண்களும், 70 சதகிவிதம் மனப்பாடம் செய்தவனுக்கு 100 மதிப்பெண்களும் கிடைக்கிறது. முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் சில நேரங்களில் இந்தத் தரத்திலும் இருப்பார்கள்.

இதில் திறமை மட்டுமின்றி, மனப்பாடத் திறனும் கவனிக்கப்படாமல் விடப்படுகிறது. நாம் மனப்பாடம் செய்ததில் கேள்விகள் அமைவதைப் பொருத்துத்தான் இது முடிவு செய்யப்படுகிறது.

அதாவது வாய்ப்புக்கள்தான் இதைத் தீர்மானிக்கின்றன. தினசரி வகுப்புகளிலும், டெஸ்டுகளிலும் முதலிடத்தில் வந்த மாணவர்கள் சிலரது மதிப்பெண்களை விட அது போன்ற தேர்வுகளில் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் முந்திவிடும் அவலத்திற்கும் இதுதான் காரணம்.

இது போக மதிப்பெண்கள் போடக்கூடியவர்களின் குணநலன்களும் இதைத் தீர்மானிக்கின்றன. நன்றாகத் தேர்வு எழுதியவனின் விடைத்தாள் கஞ்சத்தனம் செய்யும் ஆசிரியரின் கைக்குக் கிடைத்தால், அவனுக்கு கிடைக்க வேண்டியதை விடக் குறைவான மதிப்பெண்ணே கிடைத்திருக்கும். சுமாராக எழுதியவனின் விடைத்தாள் தாரள சிந்தனை கொண்டவர்களிடம் போனால், அவன் எதிர்பார்த்ததை விட கூடுதல் மதிப்பெண்ணுடன் முதலாமவனை இவன் முந்திவிடுகிறான்.

விடைத்தாள்களை யார் திருத்துகிறார்கள் என்பதும் இதைத் தீர்மானிப்பதால் திறமைக்கும் மனப்பாடத்திற்குமான அடையாளமாக மதிப்பெண்களை எடுத்துக் கொள்ளக் கூடாது. என்ன எழுதியிருக்கிறது என்பதை வாசித்து நேரத்தை வீணாக்க விரும்பாத ஆசிரியர்கள் அதிக வரிகளுக்கு அதிக மதிப்பெண்களும், குறைந்த வரிகளுக்கு குறைந்த மதிப்பெண்களும் போட்டு கடமையை நிறைவேற்றுவதும் உண்டு.

முன்னாள் முதல்வரின் கைங்கரியத்தால், கண்பார்வை குறைந்த, ஊனமானவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் தேர்வுத்தாள் திருத்தும் பணியில் நியமிக்கப்படுகின்றனர். கண்ணுக்கு அருகில் வைத்தால் கூட எழுத்தைச் சரியாக வாசிக்கத் தெரியாதவர்கள், தேர்வுத்தாளைத் திருத்தினால், அவரது மனநிலையைப் பொருத்து, கீழே உள்ளவன் மேலே வருவான். மேலே வர வேண்டியவன் கீழே போய் விடுவான். இப்படியும் மதிப்பெண்கள் போடப்படுகின்றன.

இது தவிர சில தனியார் பள்ளிகள் தங்கள் பெயரைத் தக்க வைப்பதற்காக, கேள்வித்தாளுடன் விடைகளையும் கொடுத்து, விடை எழுத ஆசிரியர்கள் துணை செய்வதும், மேற்பார்வையாளர்களுக்குப் பெருந்தொகை கொடுத்து சரிக்கட்டுவதும் நடப்பது உண்டு.

எப்போதுமே நாமக்கல் மாவட்டத்தினரைச் சேர்ந்தவர்களே முதல் இடங்களைப் பிடித்து வருகின்றனர். இது ஏன் என்று ஆய்வு செய்த போது நாமக்கல்லில் இந்த மோசடி நடப்பதைக் கண்டறிந்தனர்.

இந்த ஆண்டு சிறப்பு பறக்கும் படை அமைத்து மாணவர்கள் காப்பி அடிக்க பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் உடந்தையாக இருப்பதைக் கையும் களவுமாகப் பிடித்து பள்ளிக்கூட அனுமதியையும் ரத்து செய்தன. சில பள்ளிகள் அப்படியும் தப்பித்து விட்டன. முதல் இடங்களைப் பிடிக்கும் பள்ளிக் கூடங்களில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க லட்சக்கணக்கில் கொட்டிக் கொடுக்க சில பெற்றோர்கள் தயாராக இருக்கின்றனர்.

எனவே கோடி கோடியாகக் கொள்ளையடிக்க உதவும் என்பதால், ஆசிரியர்களே தில்லுமுல்லு செய்து சராசரி மாணவனை முதல் மதிப்பெண் எடுக்க வைக்கிறார்கள். இவ்வளவும் சில நேரங்களில் முதல் மதிப்பெண்ணைத் தீர்மானிக்கின்றன.

மனப்பாடம் செய்தால் நிச்சயம் சிறந்த மதிப்பெண் என்பதற்கே உத்தரவாதம் இல்லை எனும்போது, இடம் பெறும் கேள்விகளும், திருத்தக்கூடிய ஆசிரியர்களும், தேர்வு கண்காணிப்பாளர்களும் தான் இதைத் தீர்மானிக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொண்டால் மதிப்பெண்ணுக்காக அளவற்ற தியாகங்களைச் செய்ய மாட்டார்கள்.

மாணவர்கள் உண்ணாமலும், உறங்காமலும், சிறுபிள்ளைத் தனங்களைச் செய்யாமலும் எந்திரத் தன்மையுடன் வளர்க்கப்படுவதை நாம் ஊக்குவிக்கக் கூடாது. எல்லாக் கடமைகளையும் செய்துகொண்டு உயர் கல்வி கற்பதற்கான மதிப்பெண்களை எடுக்கும் அளவுக்கு பாடுபடுங்கள் என்று ஆர்வம் ஊட்டுவதே போதுமானது.

முதல் 10 இடம் என்பதெல்லாம் லட்சியம் இல்லை. எல்லா உயர்கல்வி இடங்களும் முதல் 10 இடத்திற்கு வந்தவர்களைக் கொண்டு மட்டும் நிரப்பப்படாது. அந்தப் பத்துப் பேருக்கு ஒதுக்கியது போக எஞ்சியவை அடுத்தடுத்த மதிப்பெண் எடுத்தவர்களைக் கொண்டுதான்  நிரப்பப்படும். இதை அனைவரும் உணர்வது நல்லது.

June 11, 2013, 12:28 PM

வந்தேமாதரம் பாடத்தேவை இல்லை - உயர்நீதிமன்றம்

வந்தேமாதரம் பாடத்தேவை இல்லை - உயர்நீதிமன்றம்

வந்தே மாதரம் பாடச்சொல்லி  எவரையும் வற்புறுத்த முடியாது:

- லக்னோ நீதிமன்றம்  அதிரடித் தீர்ப்பு..! 

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வந்தே மாதரம் பாடல் ஒலிக்கப்பட்ட போது, கூட்ட அரங்கை விட்டு வெளிநடப்பு செய்த, பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி ஷஃபீகுர் ரஹ்மானுக்கு எதிராக, சவுரப் ஷர்மா என்பவர் லக்னோ உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி  எஸ்.கே.சிங் மற்றும் வீ.கே.அரோடா  ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

 அப்போது இவ்வழக்கில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்; ‘ஜன கன மன’ தான் இந்தியாவின் தேசிய கீதம் எனவும், வந்தே மாதரம் என்பது தேசிய கீதமாகாது என்றும் வாதிட்டார். ஆகவே இதை பாடச் சொல்லி எவரையும் வற்புறுத்தவும் முடியாது என்றும் தனது வாதத்தை பதிவு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, சவுரப் ஷர்மா தாக்கல் செய்த பொது நல வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர் ஷஃபீகுர் ரஹ்மான் வந்தே மாதரம் நிகழ்ச்சியை புறக்கணித்தது, அவரது தனிப்பட்ட நிலைப்பாடு, அதை எதிர்த்து பொது நல வழக்கு தாக்கல் செய்யமுடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்..!

ஜனகன மன பாடலை புறக்கணித்துவிட்டு வந்தே மாதரம் பாடுவது என்பது தேசவிரோத செயலாகும். அந்த தேசத்  துரோகத்தை சங் பரிவாரக் கும்பல் செய்து வருகின்றது.

வந்தே மாதரம் பாடலை இந்தியக்குடிமகன்கள்  பாட வேண்டும் என்பதோ, வந்தே மாதரம் பாடும் போது அதற்கு எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும் என்பதோ இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாத ஒன்றாகும்.

வந்தே மாதரம் பாடல் ஒலிக்கப்பட்டபோது அவையை விட்டு வெளிநடப்புச் செய்த ஷஃபீக்குர் ரஹ்மான்  எம்.பி அவர்களை தேசத்துரோகி  போல சித்தரித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஆனால் அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு, அந்த வழக்கை லக்னோ உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த செய்தியை சொல்லி வைத்தாற்போல அனைத்து ஊடகங்களும் இருட்டடிப்புச் செய்துள்ளன.

இதுவே இவர்களது நடுநிலை(?) தன்மையை பறைசாற்றுகின்றது. வந்தே மாதரம் பாடலை பாடக்கூடாது என்ற முஸ்லிம்களின் தீர்மானத்திற்கு எதிராக வழக்குத் தொடராலாமா என மத்திய அரசு ஆலோசனை செய்து மண்ணைக்கவ்விய செய்தியை சென்ற இதழில், “வந்தே மாதரம் பாடலை பாட மறுப்பது தேசத்துரோகமா?” என்ற கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில்கள் பகுதியில் தெளிவுபடுத்தியிருந்தோம். நமது அந்த நிலைப்பாட்டை தற்போது லக்னோ உயர்நீதி மன்றத் தீர்ப்பும் உறுதி செய்துள்ளது.

May 24, 2013, 11:33 PM

வந்தேமாதரத்தின் போது முஸ்லிம் எம்பி வெளிநடப்பு சரியா

வந்தேமாதரத்தின் போது முஸ்லிம் எம்பி வெளிநடப்பு சரியா

கேள்வி
பாராளுமன்றத்தில் வந்தேமாதரம் பாடும்போது அனைத்து எம்.பி.க்களும் எழுந்து நின்றபோது, பகுஜன் சமாஜ் எம்.பி. ஷபிகுர் ரஹ்மான் வெளி நடப்பு செய்துள்ளார். தேசிய கீதத்தை அவமதித்துவிட்டதாக சபாநாயகர் மீராகுமாரும் அவரைக் கண்டித்துள்ளார். அதிகமான எம்.பி.க்களும் இதைக் கண்டித்துள்ளார்கள்.

ஷபிகுர் ரஹ்மான் வெளிநடப்பு செய்தது சரியா? சபாநாயகர் கண்டித்தது சரியா?

சந்தான கிருஷ்ணன், ஆவடி

பதில் அனைத்து முஸ்லிம் எம்.பி.க்களும், கடவுள் நம்பிக்கை இல்லாத எம்பிக்களும், இந்து மதம் சாராத எம்பிக்களும் வெளிநடப்பு செய்திருக்க வேண்டும். அனைவரும் கோழைகளாக இருக்கும்போது, துணிச்சலாக, ஷபிகுர் ரஹ்மான் வெளிநடப்பு செய்ததை நாம் பாராட்ட வேண்டும்.

எனது இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிரான பாட்டை நான் பாட முடியாது என்று துணிவாக தனது கருத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.

இந்திய சுதந்திர வரலாறும், இந்திய அரசியல் சட்டமும் தெரியாத மீராகுமார் என்ற அறிவிலி உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடான இந்தியாவின் பாராளுமன்றத்துக்கு சபாநாயகராக இருப்பதால் தேசிய கீதத்தை அவமதித்ததாகக் கூறி கண்டிக்கிறார். நாட்டின் தேசிய கீதம் எது என்று தெரியாதவர் எல்லாம் நாடாளுமன்றத்திற்கு தலைமை தாங்க முடிகிறது என்றால் இதைவிட தேசிய அவமானம் எதுவும் இருக்க முடியாது.

வந்தேமாதரத்தை முஸ்லிம்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

நாடு சுதந்திரமடைவதற்கு முன்னாள் வங்காள மொழியில் ஆனந்த மடம் என்ற நாவல் வெளியானது. இந்த நாவல் கல்கத்தாவில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நடந்த கலவரத்தைப் பின்னனியாகக் கொண்டதாகும்.

கலவரம் நடந்தால் ஒருவரை ஒருவர் சரியாக இனம் கண்டு தாக்கவேண்டும் என்பதற்காக இந்துக்கள் வந்தே மாதரம் என்பதை தங்கள் அடையாளமாக ஏற்படுத்திக் கொண்டார்கள்வந்தே மாதரம் சொன்னால் அவன் இந்து என்று தாக்காமல் விட்டுவிடுவதற்காகவும், அதைச் சொல்ல மறுப்பவர்கள் முஸ்லிம் என்று அறிந்து கொன்று போடவும் வந்தே மாதரம் என்பது உருவாக்க்கப்பட்டதாக அந்தக் கதையில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.

இந்த நாவலுக்கு முன் வந்தே மாதரம் என்பது தேசப்பற்றின் அடையாளமாகக் கருதப்பட்டதில்லை. கலவரத்தின்போது இந்துக்கள் வந்தே மாதரம் சொல்வதுபோல் முஸ்லிம்களும் சொல்லிவிட மாட்டார்களா என்றால் வந்தே மாதரம் என்பதை உயிர் போனாலும் சொல்ல மாட்டார்கள் என்பதை அந்தக் கதையில் வரும் இந்துக்கள் விளங்கி வைத்திருந்தனர். ஏனெனில் வந்தே மாதரத்தின் பொருள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது என்பதால், முஸ்லிம்கள் இதைச் சொல்லவே மாட்டார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரிந்தது.

வந்தே மா தரம் என்பதில் மூன்று சொற்கள் உள்ளன.

வந்தே என்றால் வந்தனம் செய்கிறோம்வணங்குகிறோம்வழிபடுகிறோம் என்பது பொருள்.

மா என்றால் தாய் என்று பொருள்.

தரம் என்றால் மண் என்பது பொருள்.

அதாவது தாய்மண்ணாக இருக்கிற இந்த நிலத்தைக் கடவுளாகக் கருதி வணங்குகிறோம் என்பது மொத்த வார்த்தையின் பொருளாகும்.

வங்காள மொழிச் சொல்லான இந்த வார்த்தையின் பொருளை நாம் தெரிந்துகொள்ள அகராதியைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. பாரதியார் தனது பாட்டில் இதன் அர்த்தத்தைத் சொல்லித் தந்துவிடுகிறார்.

வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதுமென்போம்.

இது பாரதியார் பாட்டின் முதல் வரிகள்.

எங்கள் மாநிலத் தாயை வணங்குகிறோம் என்பதுதான் வந்தே மாதரத்தின் பொருள் என்று பாரதியுஆர் பொருள் சொல்லிவிட்டார்.

பராசக்தியையும், கற்சிலைகளையும் கடவுளாகக் கருதிய பாரதியார் மண்ணை வணங்கினால் நமக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. அவரைப்போல் நாமும் மண்ணைக் கடவுளாக்குமாறு சொன்னால் இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

பாரதியார் பாட்டை மக்கள் என்றைக்கோ மறந்துவிட்டார்கள் என்பதற்காக இஸ்லாத்தின் பெயரால் சமாதியை  அதாவது கல்லை வழிபடும் .ஆர்.ரஹ்மான் என்ற சினிமாக்காரர்தாய் மண்ணே வணக்கம்என்று காட்டுக்கூச்சல் போட்டு ஆல்பம் வெளியிட்டு புதிய தலைமுறைக்கும் இதன் பொருளைப் புரிய வைத்துவிட்டார்.

பாரதியார் போலவே மண்ணை வணங்கும் சினிமாக்காரர் வந்தேமாதரம் பாடிவிட்டுத் தொலையட்டும். அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்க மாட்டோம் என்று உறுதி மொழி கூறி இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள் எப்படி இதைப் பாடமுடியும்?

இந்த விஷயங்கள் எல்லாம் தெரியாத அறிவிலியாக சபாநாயகர் மீராகுமாரி இருக்கிறார்.

இவர் அறிவிலியாக இருந்தாலும் இவரது தந்தையிடமிருந்து  வந்தே மாதரம் வரலாற்றை அறிந்து கொண்டிருந்தால் இப்படி உளறி இருக்க மாட்டார். பாபு ஜெகஜீவன்ராம் அவர்களின் மகள் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் நாட்டு மக்கள் எவருக்குமே தெரியாத இவர் சபாநாயகராக்கப்பட்டார்.

பிரதமருக்கு அடுத்த நிலையில் இருந்த இராணுவ அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் காந்தி சிலையைத் திறந்து வைத்தார். தலித் சமுதாயத்தைச் சேர்ந்த  ஜெகஜீவன்ராம் உயர் ஜாதியைச் சேர்ந்த காந்தி சிலையைத் திறந்ததால் அந்தச் சிலை தீட்டாகிவிட்டது என்று கூறி சங்பரிவாரக் கும்பல் தீட்டுக் கழிக்கும் சடங்கையும் நடத்தியது.

அப்படிப்பட்ட சங்பரிவாரக்கும்பலுடன் சேர்ந்துகொண்டு வந்தேமாதரத்திற்கு ஜெகஜீவன்ராமின் மகள் வக்காலத்து வாங்குகிறார் என்றால் இது ஆச்சரியமான உண்மையாக உள்ளது.

ஆனந்த மடம் நாவல் பிரபலமடைந்த பின்னர், சங்பரிவாரத்தினர் (இந்து மகாசபை) தங்களது நிகழ்ச்சிகளில் வந்தேமாதரம் பாட ஆரம்பித்தனர். முஸ்லிம்கள் எதை ஏற்க மாட்டார்களோ அதை தேசியகீதமாக்கினால் முஸ்லிம்கள் பாட மறுப்பார்கள். அதை வைத்து அவர்களை தேசவிரோதிகளாகச் சித்தரிக்கலாம் என்ற திட்டத்துடன் அந்தக் கருத்தை படிப்படியாக உருவாக்கி பாரதியார் வரைக்கும்  கொண்டு சேர்த்தனர்.

வெள்ளையர் ஆட்சியில் சங்பரிவாரத்தினர் இதை தேசியகீதம் போல் சித்தரித்ததால், காங்கிரஸுக்கும் இந்த நோய் பரவியது. காங்கிரஸ் மாநாடுகளிலும் வந்தே மாதரம் பாடும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள். 1923ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் வந்தே மாதரம் பாடியபோது அப்போது காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்த முகம்மது அலி அவர்கள் மேடையிலேயே இதைக் கண்டித்து வெளிநடப்புச் செய்தார்.

வெள்ளையர் ஆட்சியில் நடந்த மாகாணத் தேர்தலில் ஏழு மாகாணங்களில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. ஏழு மாகாணங்களிலும் வந்தே மாதரம் என்பதை தேசியகீதமாக அறிவித்தார்கள். ஆனால் முகம்மது அலி அவர்களின் எதிர்ப்புக்குப் பின்னர் விழிப்புணர்வு பெற்ற முஸ்லிம்கள் வந்தே மாதரத்திற்குக் கடுமையான எதிர்ப்பை பரவலாகத் தெரிவிக்க ஆரம்பித்தனர்.

முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் வந்தே மாதரம் எதிராக உள்ளதைக் காலம் கடந்து உணர்ந்து கொண்ட காங்கிரஸ் கட்சி முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் வந்தே மாதரம் பாடத் தேவையில்லைஅவர்கள் ஸாரே ஜஹான்சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா ஹமாரா என்ற கவிஞர் இக்பாலின் பாடலைப் பாடிக் கொள்ளலாம் என்று இரட்டை தேசிய கீதத்தைக் கொண்டுவந்தது.

இக்பாலின் பாடலின் பொருள்அகில உலகிலும் சிறந்த நாடு எங்கள் இந்தியாஎன்பதாகும்.முஸ்லிம் கவிஞன் பாடிய பாடலில் தேசத்தின் சிறப்பை மட்டுமே பார்க்கிறான். இஸ்லாத்தின் கொள்கை எதையுமே திணிக்கவில்லை.

ஆனால் முஸ்லிம் அல்லாதவர்கள் உருவாக்கிய தேசிய கீதத்தில் இந்துமத நம்பிக்கை முஸ்லிம்கள் மீதும், கிறித்தவர்கள் மீதும் மத நம்பிக்கை அற்றவர்கள் மீதும் திணிக்கப்பட்டது கவனத்தில் கொள்ளத்தக்கது.

இந்த வரலாற்றை தனது தந்தையிடமிருந்து மீராகுமார் கற்றிருந்தால், ஷபீகுர் ரஹ்மான் வெளிநடப்பு செய்த காரணம் தெரிந்தாக வேண்டும் என்று கூறியிருப்பாரா?

நாடு சுதந்திரமடைந்த போது சில பகுதிகளில் ஸாரே ஜஹான்சே அச்சா பாடலும் சில பகுதிகளில் வந்தே மாதரமும் பாடப்பட்டு வந்தன. நாடு சுதந்திரமடைந்த பின்னர் எதை தேசிய கீதமாக ஆக்கலாம் என்ற விவாதத்தின்போது மேற்கண்ட இரு பாடல்களுக்கும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.

இரண்டும் வேண்டாம். ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஜனகனமன என்பதே தேசிய கீதமாக இருக்கட்டும் என்று 1950ஆம் ஆண்டு ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. அதிலும் சிறிய அளவிலான மறுப்பு முஸ்லிம்களுக்கு இருந்தபோதும், வந்தேமாதரம்போல் அப்பட்டமான மதத் திணிப்பாக இல்லாத காரணத்தால், முஸ்லிம்களும் இதை ஏற்றுக் கொண்டனர்.

வந்தேமாதரம் தேசியகீதம் போட்டியில் தோற்றுப் போனதையும், ஜனகனமன என்பதுதான் தேசிய கீதம் என்பதையும் அறியாதவர் நாட்டின் குடிமகன்களில் ஒருவராக இருப்பதற்கே தகுதியற்றவராவார்.

சுதந்திரப் போராட்ட கால வரலாறுதான் தெரியவில்லை. சமகால வரலாறாவது சபாநாயகருக்குத் தெரிந்திருக்க வேண்டாமா? அந்த அறிவும் சபாநாயகருக்கு அறவே இல்லை.

2009ஆம் ஆண்டு நாட்டின் தலைநகரமாகிய டெல்லியில் ஜம்மியத்துல் உலமா சபையின் மாநாடு நடந்தது. இரண்டு நாட்கள் நடந்த அந்த மாநாட்டில் முதல் நாளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வந்தேமாதரம் என்பது இஸ்லாமியக் கொள்கைக்கு எதிரானது. முஸ்லிம்கள் அதைப் பாடக்கூடாது என்பதும் தீர்மானங்களில் ஒன்றாகும்.

முஸ்லிம் மதஅறிஞர்களின் சபை இது இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிரானது என்று நிறைவேற்றிய தீர்மானத்தை மீராகுமார் அறிந்திருந்தால் இப்படிப் பேசியிருக்க மாட்டார்.

அந்தத் தீர்மானம் நிறைவேற்றிய பின் உலமா சபை தேசிய கீதத்தை அவமதித்துவிட்டதாக சங்பரிவாரத்தினர் கொந்தளித்தனர்.

ஜம்மியதுல் உலமா சபைக்கு எதிராக தேசதுரோக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாட்டையே ரணகளப்படுத்தினார்கள். தமிழகத்திலும் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

மத்திய அரசும் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இயலுமா என்று சட்ட வல்லுனர்களைக்  கலந்து பல ஆலோசனைகளை நடத்தியது. வந்தேமாதரம் தேசிய கீதமே இல்லை எனும்போது இதற்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாது என்று கூறப்பட்டதால் மத்திய அரசு அடங்கியது. இந்த வரலாறும் சபாநாயகருக்குத் தெரியவில்லை.

ஊடகங்களும், சினிமாக்காரர்களும், சங்பரிவாரக்கும்பலும் வந்தே மாதரத்தை தேசிய கீதம் போல் சித்தரித்து தவறான கருத்தை மக்கள் மனதில் பதித்து வைத்து விட்டன.

ஆனால் சட்டப்புத்தகத்தில் வந்தே மாதரத்திற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. அது இந்துக்களின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கும்  ஒரு பாடல் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

நடுநிலை இந்துக்களும் இதைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர். சிறுபான்மை மக்களின் மத நம்பிக்கைக்கு எதிரான ஒரு பாடலை அவர்களும் பாடவேண்டும் என்று வற்புறுத்துவது  நேர்மையானதாக இருக்குமா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அனைத்து மதத்தினரும், மதத்திற்கு அப்பாற்பட்டவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துக்கள்தானே எல்லோருக்கும் பொதுவாக இருக்க முடியும்? இதை உணர்ந்து இந்துக்களும் அந்தக் கருத்து வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.

அந்தப் பாடலில் சரஸ்வதி, லட்சுமி போன்றவர்களை கடவுளாகச் சித்தரிக்கும் வரிகள் உள்ளன. இதை எப்படி ஏற்க முடியும் என்று இடதுசாரிகளும், பகுத்தறிவாளர்களும் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

சட்டப்பூர்வமான தேசிய கீதமான ஜனகனமனவை சங்பரிவாரத்தினர் இன்றுவரை தங்களது நிகழ்ச்சிகளில் பாடாமல் வந்தேமாதரம் பாடுகின்றனர். இவர்களின் இந்த அடாவடித்தனம் தான் தேசத் துரோகம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்

இந்த பதில் வெளியான பின்னர் முத்துப்பேட்டை அன்சாரி அவர்கள் கீழக்கண்டவாறு எழுதி விளக்கம் கேட்டார்.

கடந்த வாரம் வெளியன உனர்வு வார இதழ் [உரிமை 17,குரல் 38] கேள்விபதிலில் பாபுஜெகஜீவன்ராம் இரானுவ அமைச்சராக இருந்த போது காந்தி சிலையை திறந்துவைத்ததால் அது தீட்டாகிவிட்டது என சுத்தம் செய்ததாக எழுதி இருந்தீர்கள் ஆனால் நான் கொடிக்கால் செல்லப்பா எழுதிய புக்கில் படித்தேன் அதில் பாபுஜகஜீவன்ராம் அவர்கள் டாக்டர் சம்புரணானந்து அவர்களின் சிலையை திறந்ததை தீட்டு என சுத்தம் செய்ததாக எழுதியிருந்தது
கடந்த காலங்களில் ஒரு நூலில் வாசித்ததை நினைவில் இருந்ததன் அடிப்படையில் நான் எழுதினேன். காந்தி என்று தான் என் நினைவில் உள்ளது. ஆனால் தலித் சமுதாய மக்களின் வரலாறை நன்கு அறிந்த கொடிக்கால் செல்லப்பா அவர்கள் அப்படி எழுதியிருந்தால் அது சரியாக இருக்கலாம்.

May 12, 2013, 3:36 PM

பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இரட்டை அளவுகோல் சரியா

பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இரட்டை அளவுகோல் சரியா

கேள்வி
எல்லை அத்து மீறலில் சீனாவுக்கு ஒருமாதிரியாகவும், பாகிஸ்தானுக்கு ஒரு மாதிரியாகவும் இந்திய நிலைப்பாடு உள்ளதாக உமர் அப்துல்லாஹ் கூறியது சரியா?

அபுதாஹிர், கம்பம்

பதில் அவரது கருத்து முழுமையாக சரியானது அல்லஎந்த நாட்டு ராணுவமும் நமது நாட்டுக்குள் ஊடுறுவலாம் என்பதில் அனைவருக்கும் சமமான வாய்ப்பைத்தான் நமது நாடு அளித்து வருகிறது.

சீனாவைவிட அதிக தூரம் (கார்கில்) ஊடுறுவும் வாய்ப்பை பாகிஸ்தான் ராணுவத்துக்கு வழங்கியது.  அனைவருக்கும் சமமாக எல்லைகளைத் திறந்துபோட்டு, சமத்துவத்தைத்தான் மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இந்த வகையில் பார்க்கும் போது உமர் அப்துல்லாவின் கருத்து ஏற்கத்தக்கதல்ல.

ஆனால் பாகிஸ்தான் ஊடுறுவும்போது அதை எதிர்த்து இந்திய ராணுவம் போர் செய்கிறது. சீனா ஊடுறுவும்போது மென்மையாகப் பேச்சு வார்த்தை நடத்துகிறது. போர் நடவடிக்கை மூலம் சீனாவை விரட்டி இருக்க வேண்டும் என்ற கருத்தில் அவர் சொல்லி இருந்தால் அது சரியா என்பதைப் பார்ப்போம்.

எந்த மனிதனாக இருந்தாலும் தனக்குச் சமமானவன் அல்லது தன்னைவிட பலவீனமானவன் தனது பொருளைப் பறித்துக் கொள்ளும்போது அதை பலப்பிரயோகம் செய்து மீட்பான். தன்னைவிட வலிமையானவன் அபகரித்துக் கொண்டால் பலப்பிரயோகம் செய்து மீட்க மாட்டான். பலப்பிரயோகம் செய்யவும் இயலாது. கெஞ்சுவான். பேச்சுவார்த்தை நடத்தவான். பஞ்சாயத்து வைப்பான்.

இது தனிமனிதனுக்கு மட்டுமின்றி நாடுகளுக்கும் பொருந்தும். இந்த அடிப்படையை அவர் புரிந்து கொள்ளவில்லை.

அமெரிக்காவின் கப்பலும், விமானங்களும் நமது அனுமதியின்றி எத்தனையோ தடவை அத்துமீறி நமது நாட்டுக்குள் நுழைந்துள்ளன.  இதற்காக அமெரிக்காவுடன் இந்தியா போர் செய்யவில்லை. அறிக்கை, பேச்சு வார்த்தை, ஐநா கட்டப்பஞ்சாயத்து போன்ற நடவடிக்கைள் தான் எடுக்க முடியும்.

இன்றைய உலகில் அமெரிக்காவுக்குப் பயப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. ஆனால் அமெரிக்காவே ஓரளவு அஞ்சக்கூடிய பலம் பொருந்திய நாடாக சீனா உள்ளது.

இந்த நிலையில் சீனாவுடன் போர் நடத்துவது அறிவுடைமை ஆகாது. வெட்டிப் பெருமை பேசலாமே தவிர, சீனாவுடன் நேருக்கு நேர் மோதுவது நமக்குத்தான் சேதத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே போரில் சீனாவிடம் இழந்ததையே மீட்க முடியாத நிலையில் இருக்கிறோம்.

நமது பலத்தையும் எதிரியின் பலத்தையும் சரியாக எடை போட்டுத்தான் களத்தில் இறங்க வேண்டும். இல்லாவிட்டால் நமக்குத்தான் நட்டம் ஏற்படும். இந்த வகையில் மத்திய அரசு நடந்துகொண்ட விதம் சரியானதுதான்.

எதிர்க்கட்சிகள் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் பேசுவது அரசியல் ஆதாயத்திற்காகத்தான்.

உமர் அப்துல்லாஹ்வே பிரதமராக இருந்தாலும் இப்படித்தான் நடக்கமுடியும். எந்த மனிதனும் இப்படித்தான் நடப்பான்

May 12, 2013, 3:33 PM

இட ஒதுக்கீட்டை tntj கண்காணிக்கிறதா?

இட ஒதுக்கீட்டை tntj கண்காணிக்கிறதா?

கேள்வி
மூன்றரை சதவிகித ஒதுக்கீடு முறையாக இஸ்லாமியருக்குக் கிடைத்து வருவதை என்று தவ்ஹீத் ஜமாஅத்  கண்காணிக்கிறதா?

அப்துல் ரவூப், பரங்கிப்பேட்டை

பதில் அனைத்தையும் கண்காணிக்க நாம் அரசாங்கம் நடத்தவில்லை. அனைத்து விபரங்களையும் நாமாக அறிந்து கொள்ளவும் முடியாது.

இடஒதுக்கீட்டின் பயன் கிடைக்கவில்லை என்றால் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தால், இயன்றவரை போராடி, உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுசெல்லும் வேலையைத்தான் செய்ய முடியும். அதைக் குறைவின்றி இந்த ஜமாஅத் செய்து வருகிறது.

அன்றாடம் எங்கே அரசுத் தேர்வு நடக்கிறது? எந்தத் துறைக்கு எத்தனை முஸ்லிம்கள் விண்ணப்பித்துள்ளனர்? அவர்களுக்குத் தகுதி இருந்தும் வாய்ப்பு மறுக்கப்பட்டதா? இதுபோன்றவற்றை பாதிக்கப்பட்டவர்கள் சொன்னால்தான் நாம் அறிய முடியும்.

May 12, 2013, 3:31 PM

ராமதாஸுக்கு கருணாநிதி குரல் கொடுத்தது ஏன்

ராமதாஸுக்கு கருணாநிதி குரல் கொடுத்தது ஏன்

கேள்வி
ராமதாஸை கருணை அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும் என்ற கருணாநிதியின் கோரிக்கை சரியா?

மசூது, கடையநல்லூர்

பதில் கருணாநிதி எப்போதுமே நியாயத்தின் பக்கம் நிற்க மாட்டார். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது போல்தான் அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் இருக்கும்.

தலித்துகள் மீது ராமதாஸ் கும்பல் தாக்குவதை இவர் கண்டிப்பதாக இருந்தால், ராமதாஸ்மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றுதான் கூற வேண்டும்.

அல்லது ராமதாஸ் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக இவர் கருதினால் அதை தெளிவாகச் சொல்லி அவரது விடுதலைக்கு குரல் கொடுத்திருக்க வேண்டும்.

யார் பக்கம் நியாயம் என்பதைப் பார்க்காமல், விலாங்கு மீனைப்போல் வழக்கமான இரட்டை வேடத்தை இப்போதும் போட்டுள்ளார்.

பார்த்தீர்களா, உங்கள் தலைவரின் விடுதலைக்காக நான் குரல் கொடுத்துவிட்டேன் என்று வன்னியர்களுக்கு ஒரு முகம் காட்டுகிறார்.

மனிதாபிமான அடிப்படையில் என்றுதான் சொல்லியிருக்கிறேன். அவர் குற்றவாளிதான் என்பதை இதன் மூலம் தெளிவுபடுத்தி விட்டேன். மேலும் ராமதாசுக்கு நாவடக்கம் வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறேனே என்று தலித்துகளுக்கு இன்னொரு முகம் காட்டுகிறார்.

ஒரு காலத்தில் இதுபோன்ற வார்த்தை ஜாலங்கள் எடுபட்டன. இப்போது எல்லா சமுதாய மக்களும் விழிப்படைந்து விட்ட நிலையில் எதிர்மறையான விளைவத் தான் கருணாநிதி சந்திப்பார்.

கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் நாவடக்கம் வேண்டும் என்றும் கூறுவதன் மூலம் வன்னியர்கள் மீதுதான் தவறு உள்ளதுஎனக் கூறுகிறார். இவரை நம்பக் கூடாது என்ற முடிவுக்குத் தான் வன்னியர்கள் வருவார்கள்.

நமது வீடுகளைக் கொளுத்தி சொத்துக்களை சேதப்படுத்தியவரை கடுமையாகத் தண்டிக்க வேண்டும் எனக் கூறாமால், விடுதலை செய்யச் சொல்கிறாரே என்று தலித்துகள் கருதுவார்கள்.

இவரது இந்த அறிக்கையால் இந்த விளைவுதான் ஏற்படுமே தவிர இவர் எதிர்பார்த்த  விளைவு ஏற்படாது.

May 12, 2013, 3:28 PM

ஆசிட் வீச்சைத் தடுக்க என்ன வழி

ஆசிட் வீச்சைத் தடுக்க என்ன வழி

காதலிக்க மறுக்கும் பெண்மீது ஆசிட் வீசுவதைத் தடுக்க ஆசிட் கிடைக்காத வகையில் சட்டம் போடுவதும், ஆசிட் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதும் தீர்வாகுமா?

அப்துல்லாஹ், கீழக்கரை

காதலிக்கவில்லை என்ற கோபம்தான் இதற்குக் காரணம். இந்தக் கோபத்தை வெளிப்படுத்த ஒருவன் ஆசிட்டைப் பயன்படுத்துகிறான். ஆசிட் கிடைக்காவிட்டால் அரிவாளைப் பயன்படுத்துவான். அல்லது வேறு எத்தனையோ சாதனங்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்துவான். எனவே ஆசிட் கிடைக்காமல் செய்வது இதற்கான தீர்வாகாது.

ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் அவர்கள் எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளப் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

குறிப்பிட்ட மாடலில் ஒரு சட்டை வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அது கிடைக்காவிட்டால், அல்லது கிடைத்து விலை கட்டுப்படியாகாவிட்டால், என்ன செய்கிறோம்?

அதை மறந்துவிட்டு கிடைப்பதை வாங்கி அணிந்து கொள்கிறோம்.

குறிப்பிட்ட உணவுக்கு ஆசைப்படுகிறோம். அந்த உணவு கிடைக்கவில்லை எனில், அதையே ஜெபம் செய்துகொண்டு செத்துப் போகமாட்டோம். அது கிடைக்காவிட்டால் வேறு உணவைச் சாப்பிட்டுக் கொள்கிறோம்.

மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காவிட்டால், மருத்துவக் கல்லூரிகளைக் கொளுத்துவோமா? வேறு துறையைத்தான் தேர்வு செய்வோம். இதுதான் எதார்த்தம்.

இதுதான் வேண்டும். இது தவிர வேறு எதுவும் வேண்டாம் என்பது மனநோய்.

அதுபோல் ஒரு ஆணுக்குப் பெண் தேவை. பெண்ணிற்கும் ஆண் தேவை. ஒருவனை அல்லது ஒருத்தியை விரும்புகிறோம். அவள் இன்னொருவன் மனைவியாக இருக்கலாம். இன்னொருவனை விரும்புபவளாக இருக்கலாம். அல்லது நம்மை அவளுக்குப் பிடிக்காது இருக்கலாம். அதன் காரணமாக அவள் நம்மை நிராகரித்துவிட்டால், வேறு ஒருவரைத் தேடிக் கொண்டால், அதுதான் எதார்த்தம்.

அவன்தான் வேண்டும் - அவள்தான் வேண்டும் என்று அதையே நினைத்துக் கொண்டு இருந்தால், அது மனநோய். இந்த மனநோய்தான் ஆசிட் வீச்சிற்கும் தன்னைப் பிடிக்காதவரை அழித்தொழிக்கவும் காரணம்.

இந்த மனநோயை அறிவு ஜீவிகள்(?), ஊடகங்கள் போன்ற விஷக்கிருமிகள் காதல் என்ற பெயரில் பரப்புகின்றன.

இவன்தான் வேண்டும் - இவள்தான் வேண்டும் என்று உருகுவதுதான் சிறந்தது. அதுதான் தெய்வீகக் காதல் என்றெல்லாம் மக்களுக்கு மனச் சிதைவை இவர்கள் தான் ஏற்படுத்துகின்றனர்.

எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இந்த நிலை மாறாதவரை இதுபோன்ற எழுத்தாளர்கள் ஊடகத்துறையினரில் உள்ள விஷக்கிருமிகளை அடக்கி ஒடுக்க சட்டம் போடாதவரை இதுபோன்ற சம்பவங்களை ஒருக்காலும் தடுக்கவே முடியாது.

ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்புவதும், ஒரு பெண் ஒரு ஆணை விரும்புவதும் தான் காதல். விருப்பம் நிறைவேறாவிட்டாலும் நான் அவளையே/அவனையே நினைத்து உருகுவேன் என்பது காதல் அல்ல - அது மனநோய்தான்.

தங்களது மகன் அல்லது மகளுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டு, அதையே நினைத்து உருகிக் கொண்டு இருந்தால், ஆகா தெய்வீகக் காதல் என்று ஊடகங்களின் முன்னாள் பாராட்டிக் கொண்டா இருப்பார்கள்?

தான் விரும்புவதையே மக்களுக்கும் விரும்புபவன்தான் அறிவாளி.

தொலைக்காட்சியில் முகம் காட்ட வாய்ப்புக் கிடைக்கிறது என்பதற்காக பேசுபவன் அறிவாளி இல்லை என்ற விழிப்புணர்வை எற்படுத்தினால், இதுபோன்ற செயல்களை ஓரளவு தடுக்கமுடியாது

(குறிப்பு ஆசிட் வீசியவன் அவள் தனக்கு கேடு செய்தால் என்பதற்காகவோ தனது சொத்தைப் பறித்துக் கொண்டால் என்பதற்காகவோ ஆசிட் வீசவில்லை. தனக்கு அவள் கிடைக்கவில்லை என்ற வெற்தான் காரணம். அந்த வெறியை அவனுக்கு ஊட்டியவர்கள் அறிவு ஜீவிகள் எனும் விஷக்கிருமிகள் தான்)

April 30, 2013, 5:02 PM

நம் ராணுவ வீரர்களை பாகிஸ்தான் கொன்றது ஏன்?

நம் ராணுவ வீரர்களை பாகிஸ்தான் கொன்றது ஏன்?

இந்திய வீரர்கள் இருவர் எல்லைப்பகுதியில் தலை வெட்டிக் கொல்லப்பட்டதன் உண்மை நிலவரம் என்ன?

முகம்மது அபுதாஹிர், கம்பம்

காரணத்தைக் கண்டுபிடிக்காமல் அனைவரும் பிதற்றிக் கொண்டு உள்ளனர். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உள்ள எல்லைக்கோட்டை இருநாடுகளும் காவல் காப்பதில்லை. வாகா எல்லையில் ஒரு கோட்டைப் போட்டுவிட்டால் இங்கிருந்தும் அங்கிருந்தும் எவரும் உள்ளே போக முடியாது என்று இரு நாடுகளும் நினைக்கின்றன.

பாதுகாப்பு போடப்பட்ட சாலைகள் தவிர மற்ற பகுதிகளில் அந்த நாட்டில் இருந்து இந்த நாட்டிற்கும், இந்த நாட்டிலிருந்து அந்த நாட்டிற்கும் யாரும் போகலாம் என்ற பாதுகாப்பற்ற நிலையில்தான் எல்லைப்பகுதி அமைந்துள்ளது.

அதனால்தான் பாகிஸ்தானிலிருந்து கார்கில்வரை நெடுந்தூரம் இந்தியாவுக்குள் பாகிஸ்தான் ஊடுருவி, கார்கிலில் பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களைக் குவித்து வைத்தது. இதை இந்திய அரசாங்கம் அறிந்து கொள்வதற்கே பல மாதங்கள் ஆயின.

இதன் பின்னர் இந்தியாவிற்கு உள்ளேயே இந்தியா - பாகிஸ்தான் போர் நடந்தது. பின்னர் கார்கிலிலிருந்து பாகிஸ்தான் வீரர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர்.

அந்த நிலையில் இப்போதும்கூட பெரிய மாற்றம் ஏற்படவில்லை. எல்லையைக் காக்கும் இராணுவத்தினர் உள்நாட்டுப் பிரச்சினைகளைச் சமாளிக்கவும் குடிமக்களைக் கொன்று குவிக்கவும் பயன்படுத்தப்படுகின்றனர். பல இராணுவ அதிகாரிகளும் வீரர்களும் குடித்துவிட்டு காமக்களியாட்டத்தில் வீழ்ந்து கிடக்கின்றனர்.

இப்படி எல்லை திறந்து கிடக்கும்போது இந்திய வீரர்கள் நமது எல்லையை அறியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் போய்விடுவார்கள். பாகிஸ்தான் வீரர்கள் கண்களில் தப்பித் தவறி பட்டுவிட்டால் அவர்களைச் சுட்டுக் கொன்று பிணத்தை இந்திய எல்லைக்குள் போட்டு விடுவார்கள்.

இந்தச் செயலை இந்திய வீரர்களும் செய்கிறார்கள்.

அரசும் இராணுவமும் எதிரி நாட்டின் எல்லையை வரையறுத்து, ஒவ்வொரு அங்குலத்தையும் கண்காணிப்பதுடன் எல்லையைக் காப்பதுதான் இராணுவத்தின் முதல் வேலை என்பதை உணர்ந்து பாதுகாப்பைப் பலப்படுத்தினால் தவிர இதுபோன்ற கொலைகளைத் தடுக்க முடியாது.

பாகிஸ்தானிலிருந்து ஊடுருவும் பாகிஸ்தான் வீரர்களை இந்திய வீரர்கள் சுட்டுக் கொன்றாலும், இந்தியாவிலிருந்து ஊடுருவும் இந்திய வீரர்களை பாகிஸ்தான் இராணுவம் சுட்டுக் கொன்றாலும், இரு அரசுகளின் உத்தரவோ, இராணுவத் தலைமையின் உத்தரவோ இதற்குக் காரணமில்லை.

மாறாக ஆயுதம் தரித்து நமது எல்லைக்குள் யார் வந்தாலும் சுட்டுக் கொல்லலாம் என்ற பொதுவான இராணுவ விதிகள்தான் காரணம். மீன் பிடிப்பதற்காக எல்லை தாண்டி இலங்கை எல்லைக்குள் செல்லும் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இராணுவ வீரர்கள் இன்னொரு நாட்டு எல்லைக்குள் போனால் சுட்டுத் தள்ளுவதும் அதை விடக் கடுமையானது.

பாகிஸ்தான் இராணுவத்தினர் இந்தியாவுக்குள் புகுந்து இங்குள்ள வீரர்களைக் கொன்று போட்டுவிட்டு ஓடிவிட்டது போல் கதையளந்து கொண்டு இருக்கிறார்கள்.

இவர்கள் கதையளப்பது உண்மை என்றால் நாட்டின் பாதுகாப்பு இன்னும் பலவீனமாக உள்ளது என்பதுதான் பொருள். பாகிஸ்தான் இரணுவம் நமது நாட்டுக்குள் ஊடுருவி வந்து கொன்றுபோடும் வரை நமது இராணுவ வீரர்கள் அப்படி என்ன கடமையைச் செய்துகொண்டு இருந்தார்களோ, தெரியவில்லை.

அப்படி நடந்திருந்தால், பொறுப்பற்ற நமது இராணுவ வீரர்கள்தான் கண்டிக்கப்பட வேண்டும்.

இது போன்று பா.ஜ.க. ஆட்சியின் போதும் நடந்தது என்று இராணுவத் தளபதியே கூறியிருக்கிறார். இப்போதுதான் இது முதல் முறையாக நடக்கவில்லை.

எல்லா ஊடகங்களும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இருப்பதால், வரும் தேர்தலில் காங்கிரஸைத் தோற்கடிக்க இதைக் கையில் எடுத்துப் பெரிதாக்குகின்றன. தேர்தல் நெருங்கும் போதெல்லாம் ஊடகங்களின் இதுபோன்ற பாசிசம் தலைவிரித்தாடுவது வழக்கம்.

நாடு முழுவதும் சிறுமிகள் கற்பழிக்கப்படுகின்றனர்.டெல்லியை எடுத்துக் கொண்டால் கூட பா.ஜ.க. ஆட்சியிலும் இதுபோன்ற எண்ணற்ற சம்பவங்கள் நடந்து வழக்குகளும் நடந்து வருகிறது. தேர்தல் நெருங்கி வருவதால்,  எல்லா ஊடகங்களும் சங்பரிவாரத்தில் பயிற்சி எடுத்தவர்களின் ஆதிக்கத்தில் உள்ளதால், டெல்லியை மட்டும் குறிவைத்து விமர்சிக்கிறார்கள்.

பா.ஜ.க.வுக்கு ஆதரவான  நிலையை ஏற்படுத்த இதைப் பயன்படுத்துகிறார்கள்.

இது போன்றது தான் இராணுவ வீரர்களின் தலையை வெட்டி கொலை செய்த சம்பவமும்.

இது இரு தரப்பிலும் அடிக்கடி நடக்கும் சம்பவம்தான். இரு தரப்பிலும் எல்லையைக் காப்பதில் காட்டும் மெத்தனமும் அலட்சியமும் தான் காரணம்.

இதைப் புரிந்த நடவடிக்கை எடுத்தால் தவிர இது போன்ற சம்பவங்களைத் தடுக்க முடியாது.

April 30, 2013, 4:53 PM

ஞானியின் அஞ்ஞானம்

ஞானியின் அஞ்ஞானம்

திரைப்படங்களில் முஸ்லிம்களைப் புண்படுத்துவதாகக் கூறினால், கடவுள் நம்பிக்கையாளர்களைக் காட்டும்போது, அந்த நம்பிக்கை இல்லாத நாங்களும் புண்படுகிறோம் என்று ஞானி என்பவர் புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில் கூறியிருந்தார். இது சரியா?

அப்துல் ரசீது, குனியமுத்தூர்

அப்படிச் சொல்லியிருந்தால், அவருக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்றுதான் கருத வேண்டியுள்ளது. அஞ்ஞானி என்று அவரது பெயரை மாற்றிக் கொள்வதுதான் பொருத்தமானது. நாங்கள் புண்பட்டாலும் எதிர்க்காமல் இருப்பதுபோல் முஸ்லிம்களும் எதிர்க்காமல் இருக்க வேண்டும் என்பது இதன் அர்த்தம்.

கடவுள் நம்பிக்கையாளர்களை படத்தில் காட்டுவதுபோல், கடவுள் நம்பிக்கையற்றவர்களையும் படத்தில் காட்டுகிறார்கள். இதனால் யாரும் புண்படவில்லை. புண்படவும் மாட்டார்கள்.

முஸ்லிமாக இருக்கும் ஒருவன் அயோக்கியனாகக் காட்டப்பட்டால் அதற்காக முஸ்லிம்கள் புண்படமாட்டார்கள்.

முஸ்லிம்கள் அனைவரும் அப்படித்தான் எனவும், இஸ்லாம் மார்க்கமே அப்படித்தான் எனவும் காட்டினால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின்மீது  பழி சுமத்தப்படுகிறது என்பதால் முஸ்லிம்கள் கோபப்படுகிறார்கள்.

இந்த வித்தியாசம் ஞானிக்குத் தெரியவில்லை.

கடவுள் நம்பிக்கை இல்லாத ஞானி என்ற கதாபாத்திரம் குண்டு வைப்பதாகக் காட்டுவதுடன், அவனது குழுவில் உள்ள அனைவரும் நாத்திகக் கொள்கையுடையவர்கள் என்றும், 
அத்தகைய நாத்திகக் கொள்கைதான் குண்டு வைப்பதற்குக் காரணம் எனவும்  அவரது மனைவி உள்ளிட்ட குடும்பப் பெண்களும் இதற்கு உடந்தை எனவும் காட்டி, பெரியாருடைய புத்தகங்களையும் ஆங்காங்கே காட்டி அவர்களின் அடையாளமான கருப்புச் சட்டை மற்றும் கருப்பு சிவப்பு கொடி ஆகியவற்றையும் பின்னணியில் காட்டினால்  ஜோல்னா பை மாட்டிக் கொண்டு ஞானி வேஷம் போடுபவன் எல்லாம் பைக்குள் குண்டு வைத்துள்ளனர் எனவும் காட்டினால் அப்போது இந்த ஞானி இதுபோல்தான் சொல்வாரா?

ஞானிபோல் கடவுள் நம்பிக்கையற்ற அனைவருமே அயோக்கியர்கள்தான் என்று காட்டினால், கடவுள் நம்பிக்கையற்றவர்கள் அப்போது முஸ்லிம்களை விட அதிகக் கடுமையாக தங்களது எதிர்ப்பைக் காட்டுவார்கள்.

மதத்தையும்,  குர்ஆனையும், இஸ்லாமியச் சொல் வழக்குகளையும் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் அனைவருமே முஸ்லிம்களாக இருப்பது போலவும் காட்டப்படும் படங்களுக்குத்தான் முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதைப் புரிந்து கொள்வதற்குக்கூட இவரது அறிவுக்கு இயலவில்லை என்றால் இவர் என்ன ஞானியோ?

April 30, 2013, 4:45 PM

பெங்களூர் குண்டுவெடிப்பில் முஸ்லிம்கள் கைது சரியா?

பெங்களூர் குண்டுவெடிப்பில் முஸ்லிம்கள் கைது சரியா?

பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்பில் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளது பற்றி உங்கள் கருத்து என்ன? இது தவறு என்றால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நடவடிக்கை என்ன?

மசூது, கடையநல்லூர்

எவ்வித அடிப்படையும் ஆதாரமும் இல்லாமல் பொய்யாகக் கைது செய்துள்ளனர் என்பதில் கடுகளவும் சந்தேகம் இல்லை. அத்துடன் குமரி மாவட்ட பா.ஜ.க. பிரமுகர் தாக்கப்பட்ட வழக்கிலும் இவ்வாறு பொய்யாகக் கைது செய்துள்ளனர்.

தமிழக அரசும், கர்நாடக பா.ஜ.க. அரசும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சு நடத்தி முஸ்லிம்கள் சிலரைக் கைது செய்தால், தேர்தலில் கைகொடுக்கும் என்று கள்ள ஒப்பந்தம் செய்திருப்பார்களோ என்று நினைக்கும் அளவுக்கு இந்தக் கைதுகள் அமைந்துள்ளன. இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

ஒன்றும் செய்யாமல் உள்ளே போவதைவிட எதையாவது செய்துவிட்டுப் போகலாம் என்ற எண்ணத்தை விதைக்கும் அநியாயமாகவே இதை நாம் காண்கிறோம்.

இதில் எள்முனையளவு கூட உண்மை இல்லை என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நடுநிலையாளருக்கும் தெரிகிறது.

ஆனால் நாம் ஏன் இதற்காகப் போராட்டம் நடத்தவில்லை என்பதற்கு முன்னரே நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்.

சில ஆண்டுகளுக்கு முன் சிறைவாசிகளுக்காக நாம் குரல் கொடுத்த போது எங்களை வைத்து அரசியல் பண்ண வேண்டாம் என்று அவர்கள் துண்டுப் பிரசுரம் வெளியிட்டு நாடெங்கும் பரப்பினார்கள்.

அவர்களை வைத்து தவ்ஹீத் ஜமாஅத் அரசியல் நடத்தவில்லை. சிறைவாசிகள் பெயரைச் சொல்லி நாம் எந்த வசூலும் செய்வதில்லை. சிறைவாசிகளுக்கு உதவுகிறோம் என்பதைக்கூறி நாம் ஆள் சேர்ப்பதும் இல்லை. ஏகத்துவக் கொள்கையை மட்டுமே முன் வைத்துதான் நாம் மக்களை வென்றெடுத்து வருகிறோம். அப்படி இருந்தும் அவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று பகிரங்கமாக அறிவித்தனர்.

அப்போது முதல் ஏற்கனவே வழக்கில் உள்ளவர்களுக்காக போராட்டம் எதுவும் நடத்துவதில்லை. ஆனால் இதுபோன்ற அக்கிரமங்களை உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம். அரசியல் செய்கிறோம் என்று சொல்லமுடியாத வகையில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் மனுக்கள்அளித்துள்ளோம்.

 அந்த அடிப்படையில்தான் இதை இப்போது கடுமையாகக் கண்டிக்கவும் செய்கிறோம்.

கடந்த காலத்தில் தடா என்ற பொய் வழக்கை ஆரம்பித்து வைத்த தமிழக அரசின் நடவடிக்கைதான் குண்டு வெடிப்பு வரை கொண்டு போய் சேர்த்தது. அதே வழிமுறையில் செல்ல வேண்டாம். சந்தேகத்தின் பெயரில் இது போன்ற கைது நடவடிக்கை வேண்டாம். இது மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

April 30, 2013, 4:38 PM

மகாவீர் ஜெயந்திக்கு கறிக்கடையை மூடவேண்டுமா

 

மகாவீர் ஜெயந்திக்கு கறிக்கடையை மூடவேண்டுமா?

(இந்த வார உணர்வு இதழில் வெளியான கேள்வி பதில்)

ஆண்டுதோறும் மகாவீர்ஜெயந்தி அன்று கறிக்கடைகளை மூடவேண்டும் என்று அரசாங்கம் தடைபோடுவது நியாயம்தானா? தவ்ஹீத் ஜமாஅத் இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது?

மசூது, கடையநல்லூர்

மதுபானக்கடைகள் போன்ற தீமைக்குத் துணைபோகும் கடைகள் எப்போதும் மூடவேண்டியவை என்பதால், குறிப்பிட்ட நாட்களிலாவது மூடுகிறார்களே என்று வரவேற்கலாம்.

நல்லவற்றுக்குத் துணை செய்யும் கடைகளை மூடச்சொல்வது கண்டிக்கத்தக்கது. யாரோ ஒருவர் அறிவில்லாமல் புலால் உண்ணக்கூடாது என்று சொன்னால், அதில் நம்பிக்கை உள்ளவர்கள் கடைப்பிடித்து விட்டுப் போக வேண்டியதுதான். அதை நம்பாத மக்களிடமும் அதைத் திணிப்பதில் எந்தவித நியாயமும் இல்லை.

மகாவீரராக இருந்தாலும் வள்ளுவராக இருந்தாலும் அவர்கள் புலால் உண்ணக்கூடாது என்ற கொள்கையில் இருந்தால் அதுவே தவறு என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். கிறித்தவர்கள் நம்புகின்றனர். இந்து மதத்தில் உள்ள சிறுபிரிவைத் தவிர மற்ற அனைவரும் நம்புகின்றனர். அறிவுக்குப் பொருந்தாததும் நடைமுறைக்கு சாத்தியமில்லாததுமான இந்தக் கொள்கையைக் கண்டிக்க வேண்டுமே தவிர அதற்கு மதிப்பளிக்கக்கூடாது.

ஆட்சியில் இருப்பவர்கள் அப்படி மதிப்பளிப்பதாக இருந்தால் காலமெல்லாம் கசாப்புக்கடையை மூடிக்காட்டட்டும். யாரையோ திருப்திப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடிக்கின்றன. ஒருநாள் மட்டும் கசாப்புக்கடையை மூடிவிட்டு மற்ற நாட்களில் சாப்பிடுங்கள் என்பதுதான் மகாவீரரின் கொள்கையா? ஆட்சியில் உள்ளவர்களுக்குச் சிந்திக்கும் திறன் இருந்தால் இதுபோல் மக்கள் விரோதச் சட்டங்களைப் போடமாட்டார்கள்.

எவருடைய பிறந்த நாளுக்காகவும் ஒருமதத்தின் நம்பிக்கையை மற்ற மதத்தினர் மீது திணிப்பது அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயலாகும்.

பெருநாள் தினத்தில் மகாவீர் ஜெயந்தி வந்து, அன்று கறிக்கடைகளை மூடவேண்டும் என்று உத்தரவு போட்ட கொடுமையை மூன்று ஆண்டுகளுக்கு முன் நாம் சந்தித்தோம். இதை எதிர்த்து கசாப்புக் கடைக்காரர்கள்தான் போராடினார்கள். அதில் முஸ்லிம் சமுதாயம் பெரிய அளவில் பங்கு கொள்ளவில்லை. கிறித்தவர்களும் பங்கு கொள்ளவில்லை. அசைவ உணவு உட்கொள்ளும் இந்துக்களும் பங்கு கொள்ளவில்லை.

இது அனைத்து மதத்தினருக்குமான பிரச்சனை. அடிப்படை உரிமை சம்பந்தமான பிரச்சனை என்று மக்கள் விளங்காமல் உள்ளனர். இதனால்தான் இந்தச் சட்டம் இன்னும் குப்பைக் கூடைக்குப் போகாமல் உள்ளது.

மற்றவர்கள் ஒதுங்கி இருந்தாலும் முஸ்லிம்களாவது நம்முடைய உரிமைகளுக்கு எதிரானதாகவும், நம்முடைய மதநம்பிக்கைக்கு எதிரானதாகவும் உள்ளது என்று கருத வேண்டும். அவ்வாறு கருதாமல் கசாப்புக் கடைக்காரர்களின் பிரச்சினையாகப் பார்க்கிறார்கள். எங்கள் மதநம்பிக்கையில் தலையிடுவதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று ஊரே திரண்டு போராடினால் இது போன்ற சட்டங்கள் குப்பைக்கூடைக்குப் போய் இருக்கும்.

பெருநாள் தினத்தில் மகாவீர் ஜெயந்தி வந்தால் தயிர் சாதம்தான் சாப்பிட வேண்டிவரும் என்பதையும், ஹஜ்ஜுப் பெருநாளின் போது குர்பானி கொடுப்பதற்கும் தடை செய்யப்படும் என்பதையும் புரிந்துகொண்டு அனைவரும் இதற்கு எதிராகத் திரள வேண்டும். பெருநாள் மட்டுமின்றி தனிமனிதனின் திருமணம், குடும்ப நிகழ்ச்சிகள், விருந்தினரை உபசரித்தல் போன்ற நேரங்களில் ஒவ்வொருவரும் பாதிக்கப்படுவோம்.

ரமலான் மாதத்தில் நாங்கள் நோன்பு வைப்பதால், எல்லா ஹோட்டல்களையும் பகலில் அடைக்க வேண்டும் என்று நாம் கோரினால் இவர்கள் ஏற்பார்களா?

பெரியாரின் பிறந்தநாள் அன்று எல்லா கோவில்களும் மூடப்பட வேண்டும் என்று சட்டம் கொண்டு வருவார்களா?

ஏசுவின் பிறந்த நாளையொட்டி அனைவரும் சிலுவையைச் சுமக்க வேண்டும் என்பார்களா?

என்றெல்லாம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அந்த நிலை சமுதாயத்தில் ஏற்பட நிறைய விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் செய்து, இதன் மோசமான விளைவுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி தயார்படுத்திய பிறகே போராட்டத்தில் இறங்க வேண்டும்.

அடுத்த மகாவீர் ஜெயந்திக்குள் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். இந்தச் சட்டம் குப்பைக் கூடைக்குப் போகாவிட்டால் சமுதாயமே திரண்டு எதிர்கொள்ள வேண்டும். இதை இப்படியே விடக்கூடாது

நீதிமன்றத்தை அணுகினால் மதச்சார்பின்மை அடிப்படையிலும் சட்டத்தின்படியும் தீர்ப்பு வழங்குவார்களா என்ற சந்தேகம் நமக்கு இருக்கிறது. பாபர் மசூதி தீர்ப்பைப் போலவும், ஒட்டகத்தை குர்பானி கொடுக்கக் கூடாது என்ற தீர்ப்பைப் போலவும் தீர்ப்பு வழங்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை நமக்கு இல்லை. நீதிமன்றத்தை அணுகவே அஞ்சும் நிலைதான் நமக்கு இருக்கிறது. இல்லாவிட்டால் இதை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்திப் பார்க்கலாம்.

இன்ஷா அல்லாஹ் - இது கசாப்புக் கடைக்காரர்களின் பிரச்சினை இல்லை என்பதை முஸ்லிம் சமுதாயத்திற்கும் பிற சமுதாய மக்களுக்கும் புரிய வைத்து பின்னர் நாம் கடுமையான போராட்டத்தை இதற்காக நடத்துவோம்.

 

April 30, 2013, 4:32 PM

வஞ்சிக்கபடும் முஸ்லிம் சமுதாயம்!

வஞ்சிக்கபடும் முஸ்லிம் சமுதாயம்!

மராட்டிய மாநிலம், புனே நகரில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் 2010-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி பயங்கர குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் சிக்கி 5 வெளிநாட்டவர்கள் உட்பட 17 பேர் இறந்தனர். 64 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பந்தமாக அதே ஆண்டு செப்டம்பர் மாதம் புனே பேருந்து நிலையத்தில் வைத்து மிர்சா ஹிமாயத் பெயக் என்பவரை போலீசார் கைது செய்தனர். இது தவிர அபு ஜிண்டால் என்பவரையும் இந்த குண்டு வெடிப்பு வழக்கில் சேர்த்தனர்.

ஜெர்மன் பேக்கரியில் குண்டு வெடித்தபோது அபு ஜிண்டால் வெளியில் இல்லை. மாறாக மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்தார். இப்படி சிறைக்குள் இருந்தவரைத்தான் ஜெர்மன் பேக்கரியில் குண்டு வைத்த வழக்கில் போலீசார் சேர்த்தனர். ஒருவர் சிறைக்குள் இருந்துகொண்டு, வெளியில் வந்து ஜெர்மன் பேக்கரியில் குண்டு வைத்தார் எனில் இந்தக் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய்யாக இருக்க வேண்டும். அல்லது சிறை அதிகாரிகள் இவரை சட்ட விரோதமான முறையில் வெளியில் அனுப்பி குண்டுகளை வெடிக்கச் செய்தார்கள் என்று சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லும்போது அபு ஜிண்டாலுடன் சேர்த்து, சிறை அதிகாரிகளையும் ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு வழக்கில் சேர்க்க வேண்டும். இதில் எதையுமே செய்யவில்லை.

இதில் இன்னொரு கூத்தும் நடந்துள்ளது. அபு ஜிண்டாலை ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பில் போலீசார் சேர்த்தார்களேதவிர இந்த வழக்கில் இவரை போலீசார் கைது செய்யவே இல்லை. கைது செய்து, போலீஸ் கஸ்டடியில் எடுத்து இவரை விசாரிக்கவும் இல்லை. இவர் மீதான வழக்கை நடத்தவும் இல்லை. இவருக்கு நீதிமன்றம் எந்தத் தண்டனையும் வழங்கவில்லை.ஆனால் ஹிமாயத் பெய்க்குக்குமட்டும் புனே அமர்வு நீதிமன்றம் 18.04.2013 அன்று தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பெய்க்கின் வழக்கறிஞர் அப்துர் ரஹ்மான் ‘ஜெர்மன் பேக்கரியில் குண்டு வெடித்தபோது பெய்க் புனேவிலேயே இல்லை. மாறாக அவர் ஔரங்காபாத்தில் இருந்தார். ஔரங்காபாத்தில் இருந்துகொண்டு ஒருவர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் புனேயில் எப்படி வெடிகுண்டு வெடிக்கச் செய்ய முடியும்? இதை நீதிபதி கவனிக்கத் தவறி விட்டார். எனவே நாங்கள் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்’ என்று தெரிவித்தார்.

இந்த நாட்டில் குண்டு வெடிப்பு வழக்கில் ஒருவரை தூக்கில் போடுவதற்கு அவர் குற்றம் செய்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவர் முஸ்லிமாக இருந்தால்போதும். இந்த குறைந்தபட்ச தகுதிக்காகவே அவர் தூக்கில் போடப்படுவார் என்பது கடந்த கால வரலாறு.

பாராளுமன்றத் தாக்குதலில் பேராசிரியர் ஜிலானி, அப்சல் குரு ஆகியோருக்கு நேரடியான எந்த சம்பந்தமும் இல்லை. இந்த இருவருக்கும் செசன்ஸ் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து, உயர் நீதிமன்றம் அதை உறுதி செய்து, உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டில் பேராசிரியர் ஜிலானி குற்றவாளி அல்ல என்று நிரூபிக்கப்பட்டு அப்சல் குரு மட்டும் தூக்கில் போடப்பட்டார். அப்சல் குருவும் கூட பாராளுமன்றத் தாக்குதலில் நேரடியாக சம்பந்தப்பட்டு துப்பாக்கியை தூக்கிக் கொண்டு பாராளுமன்ற வளாகத்திற்குள் அத்து மீறி புகுந்து சுட்டார் என்பதற்காக அவர் தூக்கிலிடப்பட வில்லை. இப்படி ஆதாரங்களும், சாட்சிகளும், ஆவணங்களும் உள்ளன என்பதற்காகவும் அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட வில்லை. இவ்வாறு அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என்று சொல்லியும் இவருக்கு நீதிபதிகள் தூக்குத் தண்டனை விதிக்கப்பட வில்லை. மாறாக கூட்டு மனசாட்சி என்ற ஒன்று இருக்கிறது. அப்சல்குரு தாக்குதல் நடத்தினார் என்று நிரூபிக்கப்பட வில்லையாயினும், கூட்டு மனசாட்சி அடிப்படையில் தூக்குத் தண்டனை விதிக்கிறோம் என்று சொல்லித்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை விதித்தனர். அவரும் தூக்கில் போடப்பட்டார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை அடிப்படையாக வைத்து உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தீர்ப்புகளை அடிப்படையாக வைத்து செசன்ஸ் நீதிமன்றம் உள்ளிட்ட நாட்டில் உள்ள எல்லா கீழ் நீதிமன்றங்களும் தீர்ப்பு வழங்கலாம். அதனால் ஹிமாயத் பெய்க் குற்றம் செய்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கவும் வேண்டியதில்லை. மாறாக கூட்டு மனசாட்சி அடிப்படையில் ஆதாரங்கள், சாட்சிகள், ஆவணங்கள் இல்லாமலும் பெய்க்கிற்கு தூக்குத் தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. இப்படி கூட்டு மனசாட்சி அடிப்படையில் எந்த நாட்டிலும் எவருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்படுவதில்லை. இந்தியாவில் மட்டும்தான், அதுவும் முஸ்லிம்களுக்கு மட்டும்தான் இந்த வகையில் தூக்குத் தண்டனை விதிக்கப்படும். இதை எதிர்த்து முஸ்லிம்கள் எதுவும் பேசி விடக்கூடாது. அவ்வளவுதான்.

2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரோடா பாட்டியா என்ற இடத்தில் 97 அப்பாவி முஸ்லிம்களை மோடியின் அமைச்சரவையில் இருந்த பெண் மந்திரி மாயா கோட்னானி, பஜ்ரங்தள் தலைவர் பாபு பஜ்ரங்கி தலைமையிலான கும்பல் கொடூரமாக கொன்று குவித்தது. இவர்கள் குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. அப்போது நீதிபதி என்ன செய்திருக்க வேண்டும்?

97 அப்பாவி முஸ்லிம்களைக் கொன்ற இவர்கள் அனைவருக்கும் தூக்குத் தண்டனை விதித்திருக்க வேண்டும். அப்படி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதா? இல்லவே இல்லை. ஒருவருக்குக் கூட தூக்குத் தண்டனை விதிக்கப்படவில்லை. மாறாக அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஏனெனில் கொலையாளிகள் அனைவரும் காவிக் கட்சிக்காரர்கள். கொல்லப்பட்ட 97 பேரும் அப்பாவி முஸ்லிம்கள். முஸ்லிம்களின் உயிருக்கு இந்த நாட்டில் அவ்வளவுதான் மதிப்பு. இதை முஸ்லிம்கள் புரிந்து கொண்டு குற்றம் நிரூபிக்கப்பட்ட மாயா சோட்னானிக்கு ஏன் தூக்குத் தண்டனை விதிக்கவில்லை? ஔரங்காபாத்தில் இருந்த ஹிமாயத் பெய்க்குக்கு ஏன் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது என்று கேள்வி கேட்கக்கூடாது. அப்படி கேள்வி கேட்டால் அது தேசத் துரோகமாகிவிடும். நீதிமன்ற அவமதிப்பும் ஆகிவிடும்.

அதே குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின்போது குல்பர்க் சொஸைட்டியில் வைத்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.இஹ்ஸான் ஜாப்ரி உள்ளிட்ட 69 பேர் சங்பரிவார பயங்கரவாதிகளால் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த கொலைக் குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதே தவிர ஒருவருக்குக் கூட தூக்குத் தண்டனை விதிக்கப்படவில்லை. 17 பேர் மரணத்திற்கு காரணம் என சொல்லப்படும் ஹிமாயத்திற்கு ஏன் தூக்குத் தண்டனை?

69 முஸ்லிம்களைக் கொன்று குவித்த காவி பயங்கரவாதிகளுக்கு ஏன் ஆயுள் தண்டனை? இவ்வாறு முஸ்லிம்கள் இந்த நாட்டில் நியாயம் பேசிவிடக் கூடாது. பேசினால் தீவிராவதிகள், பயங்கரவாதிகள் என்று அவர்களுக்கு பட்டம் சூட்டப்படும்.

அதே குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் போது தர்வாஜா என்ற இடத்திலும் அப்பாவி முஸ்லிம்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். இந்த பச்சைப் படுகொலைகளுக்காகவும் சங் பரிவார பயங்கரவாதிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்கள். அந்த தண்டனை ஆயுள் தண்டனையாக இருந்ததே தவிர ஒருவருக்குக்கூட தூக்குத் தண்டனை விதிக்கப்படவில்லை. இதைத் தெரிந்து முஸ்லிம்கள் கேள்வி கேட்டு, ஹிமாயத் பெய்க்குக்கு பரிந்து பேசிவிடக் கூடாது. பேசினால் தீவிரவாதி, பயங்கரவாதி பட்டத்தைத்தான் சுமக்க வேண்டி வரும்.

மாலேகான் குண்டு வெடிப்பு, மர்ம கோவா குண்டு வெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு, நான்டெட் குண்டு வெடிப்பு ஆகிய இடங்களில் குண்டுவெடிப்புகளைச் செய்து நூற்றுக் கணக்கான அப்பாவி முஸ்லிம்களை நாடு முழுவதும் திட்டமிட்டுக் கொன்று குவித்த பெண் சாமியார் பிரக்யா சிங், ஆண் சாமியார் அசிமானந்த், கர்னல் புரோஹித் ஆகியோர் மீதான வழக்கு விசாரணை பல்லாண்டுகள் ஆன பிறகும் நடக்கவில்லை. இன்னும் அவர்கள் விசாரணைக் கைதிகளாகவே உள்ளனர். ஆனால் ஹிமாயத் பெய்க் மீதான வழக்கு 2 ஆண்டுகளுக்குள் விசாரிக்கப்பட்டு, தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டது. முஸ்லிம் மீதான வழக்குமட்டும் ஏன் இவ்வளவு சீக்கிரம் விசாரிக்கப்படுகிறது? காவி பயங்கரவாதிகள் மீதான வழக்குகள் மட்டும் ஏன் விசாரிக்கப்படாமல் கிடப்பில் போடப்படுகின்றன என்று கேள்வி கேட்க இரண்டாம் தர குடி மக்களான முஸ்லிம்களுக்கு உரிமையில்லை என்பதை முஸ்லிம்கள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

ஹிமாயத் பெய்க்கிற்கு மாவட்ட அமர்வு நீதிமன்றம்தான் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. இதற்கு மேல் உயர் நீதிமன்றம்,  உச்ச நீதிமன்றம் ஆகியவை இந்த தூக்குத் தண்டனையை உறுதி செய்து, ஜனாதிபதியும் கருணை மனுவை நிராகரித்தால்தான் அவர் தூக்கில் போடப்படுவார் என எதிர்பார்க்கக் கூடாது. ஆள்வோர் நினைத்தால் நாளையே கூட பெய்க்கை தூக்கில் போட்டு விடுவார்கள். இதற்கும் முன் உதாரணங்கள் உள்ளன. ஆம். அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோரின் கருணை மனுக்களை ஜனாதிபதி நிராகரித்தவுடன் இவ்விருவரும் கமுக்கமாக தூக்கில் போடப்பட்டார்கள்.

காலிஸ்தான் தீவிரவாதி தேவேந்தர் சிங் புல்லாரின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்து விட்டார். அதற்காக புல்லாரை ஆட்சியாளர்கள் தூக்கில் போடவில்லை. கருணை மனு நிராகரிக்கப்பட்ட புல்லார் உச்ச நீதிமன்றத்தில் தண்டனையை குறைக்க மனு செய்ய ஆள்வோரால் அனுமதிக்கப்பட்டார். அந்த மனுவையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது. அதற்குப் பிறகும் புல்லார் தூக்கில் போடப்பட வில்லை. புல்லாருக்காக வளைந்த சட்டம் அஜ்மல் கசாபுக்கும், அப்சல் குருவுக்கும் ஏன் வளையவில்லை? என்று கேட்கக் கூடாது. ஏனெனில் அவர்கள் முஸ்லிம்கள். புல்லார் முஸ்லிம் அல்லாதவர்; இதை முஸ்லிம்கள் புரிந்து அடக்கமாக நடந்து கொள்ள வேண்டும்.

ராஜிவ் காந்தி கொலையாளிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன், சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பனின் கூட்டாளிகளான மாதையன், சைமன், பிலவேந்திரன், ஞானப்பிரகாசம், உள்ளிட்ட 16 தூக்குத் தண்டனை கைதிகளின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்து நீண்ட வருடங்களாகிவிட்டது. அஜ்மல் கசாபையும், அப்சல் குருவையும் போல கருணை மனு நிராகரிக்கப்பட்ட இவர்கள் ஏன் தூக்கில் போடவில்லை? என்று எந்த முஸ்லிமும் கேள்விகேட்கக் கூடாது. ஏனெனில் முஸ்லிம் சமுதாயம் அடிமைச் சமுதாயம். இப்படி அடிமைச் சமுதாயமாக இருப்பதற்காகத்தான் ஆங்கிலேயரிடம் இருந்து போராடி விடுதலை பெற்று, இன்றைய ஆள்வோருக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து அடக்கமுடன்(?) நடந்துகொள்ள வேண்டும்.

பாபரி மஸ்ஜித் - முஸ்லிம்களுக்குத்தான் சொந்தமானது என்று உலகுக்கே தெரியும்! ஆனால் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாபரிமஸ்ஜிதை 3 பங்காகப் பிரித்து அதில் ஒரு பங்கு முஸ்லிம்களுக்கு உரியது. மீதி இரண்டு பங்கு முஸ்லிம் அல்லாதவர்களுக்கு உரியது என்று அளித்த வினோதத் தீர்ப்பை இன்றுவரை முஸ்லிம்களால் மாற்ற முடிந்ததா?

25 கோடி முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட பாபரிமஸ்ஜித் பிரச்சினையிலேயே இப்படித்தான் தீர்ப்பு இருக்கும் என்று அறிந்த பிறகு, பெய்க் சட்டப்படி தண்டிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பது அறியாமை ஆகும்.

ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்திற்கே நீதி கிடைக்கவில்லை எனும்போது தனிப்பட்ட பெய்க்கிற்கு எப்படி நீதி கிடைக்கும்? என முஸ்லிம் சமுதாயம் புரிந்து அடங்கி நடந்து கொள்ள வேண்டும்.

பாபரிமஸ்ஜித் இடிப்பில் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, சாத்வி ரிதம்பரா, உமாபாரதி, வினய் கத்தியார், அசோக் சிங்கால், தொகாடியா ஆகியோருக்கு இருந்த பங்கு அகில உலக பிரசித்தம். பாபர் மஸ்ஜித் வழக்கில் இவர்களுக்கு எதிரான ஆதாரம் இருந்த அளவுக்கு இந்தியாவில் நடந்த எந்த வழக்குக்கும் ஆதாரம் இருக்கவில்லை. அதற்காக இவர்கள் தண்டிக்கப்பட்டு விட்டார்களா? இல்லையே! இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் பெய்க்கிற்காக முஸ்லிம்கள் உரிமைக்குரல் எழுப்பி தேசத்தின் அமைதியை கெடுக்கக் கூடாது. இந்த நாடு மதசார்பற்ற நாடு. ஆனால் இங்கு சட்டம் ஆட்சி செய்யவில்லை. மனு நீதிதான் ஆள்கிறது. ஆள்வோரின் மற்றும் அதிகார வர்க்கத்தின் உள்ளத்தில் இந்த மனுநீதிதான் மண்டிப்போய் கிடக்கிறது. இந்நிலை மாறாதவரை முஸ்லிம்களுக்கு எதிரான அநியாயங்கள் நடக்கத்தான் செய்யும். இந்த அவலநிலை மாறி, சட்டத்தின் முன் முஸ்லிம்களும் சமமாக நடத்தப்பட வேண்டுமெனில் முஸ்லிம் மக்கள் திரண்டெழுந்து வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும்.

உள்ளாட்சி, சட்டமன்ற, பாராளுமன்றங்களில் உள்ள முஸ்லிம் பிரதிநிதிகள் இந்த அநியாயங்களுக்கு எதிராக உரத்து உரிமை முழக்கமிடவேண்டும். உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றக் கதவுகளை பொது நலன் வழக்குப்போட்டு ஓங்கித் தட்ட வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் இவற்றில் இட ஒதுக்கீடு பெற்று, ஆளும் இடத்திற்கு முஸ்லிம்கள் வரவேண்டும்.

(முஹம்மதே!) உம்மை இப்பூமியிலிருந்து கிளப்பி வெளியேற்றிட அவர்கள் முயன்றனர். அப்போது உமக்குப் பின்னர் அவர்கள் குறைவாகவே தங்கியிருப்பார்கள். (முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய தூதர்கள் விஷயத்தில் (இதுவே நமது) வழி முறையாகும். நமது வழி முறையில் எந்த மாற்றத்தையும் காண மாட்டீர்!

அல்குர் ஆன் 17 : 76, 77

 

April 24, 2013, 10:25 PM

ஆபாசப் படத்தால் சீரழியும் குடும்ப வா

ஆபாசப் படத்தால் சீரழியும் குடும்ப வாழ்க்கை:


இன்டர்நெட்   ஆபாசங்களால் சிறார்கள் சீரழிவது போதாதென்று பலரது குடும்ப வாழ்வும் சீரழிந்து வருகின்றது.

 ஆபாசப் படங்களைப் பார்ப்போரால் படுக்கையறையில் சிறப்பாக செயல்பட முடியாது என்று ஒரு ஆய்வு எச்சரிக்கிறது. ஆண்கள்தான் பெருமளவில் ஆபாசப் படங்களை அதிகம் பார்க்கின்றனர். பெண்களிலும் ஆபாசப் படம் பார்ப்போர் உண்டு. அவர்களின் எண்ணிக்கை குறைவுதான்.  

 இப்படி ஆபாசப் படம் பார்க்கும், குறிப்பாக இன்டர்நெட்டில் ஆபாசப் படங்களை அடிக்கடி பார்ப்போரால், படுக்கை அறையில் நிஜமான உடலுறவு நடவடிக்கையில் முழுமையாக செயல்பட முடியாமல் போகின்றது என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளனர். ஆபாசப் படங்களை பார்ப்போர் பல பிரச்சினைகளுக்கு ஆளாவதாக இந்த ஆய்வு கூறுகிறது.

 வீடியோவில் ஆபாசப் படங்களை பார்ப்பதில் இருக்கும் ஆர்வத்தில் பாதியளவு கூட ஆண்களால் படுக்கை அறையில் காட்ட முடிவதில்லை.

 இதற்கு   முக்கியக் காரணம்மூளையின் உற்சாக மையத்தை தூண்டி விடக் கூடிய ஹார்மோனான, டோபமைன் அபரிமிதமான அளவில் சுரப்பதே ஆகும் என்று கண்டுபிடித்துள்ளனர். அடிக்கடி ஆபாசப் படங்களைப் பார்த்து உணர்ச்சிவசப்படுவோருக்கு டோபமைன் அதிக அளவில் சுரந்து, சுரந்து கடைசியில், உண்மையான இன்பத்தை அனுபவிக்க நேரிடும்போது அதனால் பலன் இல்லாமல் போய் விடுகிறது என்று அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

 இப்படி ஆபாசப் படம் பார்த்து உண்மையான உற்சாகத்தையும், இன்பத்தையும் தொலைத்து நிற்கும் பலரும் தற்போது இது குறித்த கவுன்சிலிங்கிற்கு அதிக அளவில் வர ஆரம்பித்துள்ளனர் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

 இதுகுறித்து செக்ஸாலஜிஸ்ட் ஒருவர் கூறுகையில், ஆபாசப் படம் பார்ப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடிதான் உள்ளது. இன்டர்நெட் மூலம் ஆபாசப் படம் பார்ப்போர் பெருமளவில் பெருகி விட்டனர். இதனால் உண்மையான செக்ஸ் நடவடிக்கைகளில் இவர்களால் ஈடுபடுவதில் பல சிரமங்களைச் சந்திக்கின்றனர்.

 அதிக அளவிலான செக்ஸ் நடவடிக்கைகளைப் பார்த்துப் பார்த்து இவர்கள் மன ரீதியாக களைத்துப் போய் விடுகின்றனர். அதில் ஒரு சலிப்பும், அலுப்பும் வந்து விடுகிறது. டோபமைன்தான் இதற்கு முக்கியக் காரணம் என்கிறார்.

 இப்படிப்பட்ட செக்ஸ் பட அடிமைகள், படிப்படியாக ஆபாசப் படம் பார்ப்பதை நிறுத்திக் கொள்வது நல்லது. இல்லாவிட்டால் இல்லற வாழ்வை இழந்து தவிக்க நேரிடும் என்று அவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.

 மேற்கண்ட ஆய்வு முடிவை உண்மைப்படுத்தும் விதமான ஒரு வழக்கு சென்ற மாதம் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்தது. அந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு விபரம் பின்வருமாறு :

ஆபாசப் படம் பார்த்ததால் வந்த கேடு!

 எழும்பூரைச் சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜினியர் ஒருவருக்கு 25 வயதுப் பெண்ணுடன் திருமணம் செய்துவிக்கப்பட்டது. 2007ஆம் ஆண்டு இந்தத் திருமணம் நடைபெற்றது.

 2 ஆண்டுகள் குடும்பம் நடத்திய பிறகு 2009ஆம் ஆண்டு கணவர் சென்னை குடும்ப நலக் கோர்ட்டில் தன் மனைவிக்கு உடலுறவில் நாட்டம் இல்லை; எனவே எனக்கு அவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று மனு செய்திருந்தார்.

 ஆனால் மனைவியும் ஒரு விவாகரத்து மனு செய்தார். அதில் அவர், “தன் கணவர் ஆண்மையற்றவர்; தங்கள் இருவருக்கும் உடலுறவே நடக்கவில்லை; எனவே தனக்கு விவாகரத்து வேண்டும்என்றும் தனியாக மனுச் செய்தார்.

 பிறகு நீதிபதி தம்பதியினரை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இருவரும் உறவு வைத்துக் கொள்ள உடல் ரீதியாக எந்த விதத் தடையுமில்லை என்று மருத்துவர்கள் அறிக்கை சமர்ப்பித்தனர்.

 இதைத் தொடர்ந்து கவுன்சிலிங் முறையில் பிரச்சனையை அறிய தம்பதியினர் உளவியல் நிபுணரிடம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

 உளவியல் நிபுணர்கள் இருவரையும் தனித்தனியாக, சேர்ந்து என்று பலநாட்கள் கவுன்சிலிங் நடத்தியதில் தெரியவந்த உண்மை வேறுவிதமாக இருந்துள்ளது.

 கணவர் இயற்கைக்கு மாறாக நடந்துகொள்ள வற்புறுத்துவதாகவும், ஆபாச வீடியோக்களை தினமும் பார்ப்பதாகவும் மனைவி கூறினார்.

 இதனையடுத்து கணவரும் தனது ஆபாசப் பட ஆர்வத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் தன் மனைவியிடம்  இயற்கையான முறையில் உறவுகொள்ள நாட்டமில்லை என்றும், தன்னால் உறவு கொள்ள இயலவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார் கணவர்.

 இதையே உளவியல் நிபுணர்கள் அறிக்கையாகத் தயாரித்து, “இப்படி ஒருவர் ஆபாசப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தால் இயற்கையான உறவில் அவர்களுக்கு நாட்டமில்லாது போய்விடும்; இந்தக் கேசிலும் இதுதான் நிலைமைஎன்று அறிக்கை தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

 இதனையடுத்து கணவர் தொடர்ந்த விவாகரத்து வழக்கை தள்ளுபடி செய்த குடும்ப நல கோர்ட், மனைவியின் விவாகரத்து மனுவை ஏற்று விவாகரத்து வழங்கியது.

 ஆபாசப் படங்களைப் பார்ப்பதால் இத்தகைய விளைவுகள் ஏற்பட்டு கடைசியில் உடலுறவிலேயே நாட்டமில்லாத அளவிற்குச் சென்று ஆண்மையை இழந்து நிற்கும் இந்த இழிநிலை தேவைதானா என்பதை ஆபாசப் படம் பார்ப்போர் சிந்திக்க வேண்டும்.

 இப்படி ஆண்மையற்ற கணவன்கள் அதிகரிக்கும்போது அவர்களது மனைவிமார்கள் தங்களுக்கு வேறு வடிகாலின்றி விபச்சாரத்தின் பக்கம் தள்ளப்படுகின்றனர். விபச்சாரத்தின் பக்கம் செல்ல வழியில்லாத பெண்கள் தங்களது கணவனின் கதையை முடிப்பதற்கும் இதுதான் காரணமாக உள்ளது. இதனால் விபச்சாரமும், கொலைகளும் பெருகுகின்றன.

 கள்ளக்காதல்களும், அதனால் ஏற்படும் கொலைகளுக்கும் இந்த ஆபாசப் படங்கள்தான் காரணமாக உள்ளது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  ஆபாசப் படம் பார்த்தால் மட்டுமல்ல; அறைகுறை ஆடை அணிந்த பெண்களைப் பார்ப்பதும் ஆபத்து!

 ஆபாசப் படங்களை பார்ப்பது மட்டும்தான் ஆண்மைக்குறைவுக்கு காரணம் என்று நாம் விளங்கிக் கொள்ளக்கூடாது. அறைகுறையாக கவர்ச்சியாக ஆடை அணிந்து செல்லும் பெண்களைப் பார்ப்பதும் கூட ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட்டு உடலுறவில் நாட்டமில்லாமல் செய்துவிடும் என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளனர்.

 பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது.

 அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்தப் புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

 ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் இதுகுறித்து கூறுகையில், நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும், ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும், அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்பதாகவும், தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் பல்வேறு காரணங்களை அடுக்குகிறார்.

 இப்படி பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு இட்டுச் செல்கிறதாம்.

 அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் மிகவும் குறைவு.

 முதலில் இதற்கு கால நிலையும், உணவுப் பழக்கவழக்கங்களே காரணம் என கருதப்பட்டது. ஆனால் அதே காலநிலை, உணவுப் பழக்கத்தில் மேலை நாட்டினரால் அரேபிய ஆண்களைப் போல இருக்க முடியவில்லை. இது ஆராய்ச்சியாளர்களை வெகுவாகக் குழப்பியிருக்கிறது. அந்தக் குழப்பம் அவர்களுடைய கவனத்தை பிற காரணிகளின் மேல் திரும்பியிருக்கிறது

 உடலை முழுதும் மறைக்கும் ஆடை அணியும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள பெண்கள் வாழும் அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் பெரும்பாலும் இல்லை என்பதனால் இதற்கும் ஆடைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா எனும் யோசனை முளைத்திருக்கிறது.

 அதன் பின்பே பெண்களின் ஆடைக்கும் ஆண்களின் ஆரோக்கியத்துக்கும் இடையேயான இந்தத் தொடர்பு தெரியவந்திருக்கிறது. தெருவிலும், பணித்தளங்களிலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் உடைகள் மறைக்காத உடலின் பாகங்களால் ஆண்களின் தூண்டப்படும் பாலியல் சிந்தனைகளும், ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரிப்பதே இந்த ஆண்மைக்குறைவு மற்றும் புரோஸ்ட்ரேட் புற்று நோய் இவற்றின் மூல காரணம் என்று இந்த ஆராய்ச்சி தனது முடிவை ஆதாரங்களுடன் வரையறை செய்திருக்கிறது.

 முக்கால்வாசி ஆண்மைக்குறைபாடுகளும் இத்தகையதே என்பது இந்த ஆராய்ச்சியின் தீர்க்கமான முடிவாகும்.

 நாங்கள் ஆபாச ஆடை அணிந்தால் உங்களுக்கென்ன? என்று வெட்டி நியாயம்பேசும் பெண்கள் மேற்கண்ட செய்தியை கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிறபெண்கள் அணிந்து செல்லும் ஆபாச ஆடைகளையும், கவர்ச்சிக் காட்சிகளையும் உங்கள் வீட்டு ஆண்கள் உற்றுநோக்கினால் அதனால் ஆண்மைக்குறைவு ஏற்பட்டு, இல்லற வாழ்வை இழந்து அவதிப்பட்டு, அதனால் பாதிக்கப்படுபவர்கள் வெட்டி நியாயம் பேசும் இந்தப் பெண்கள்தான் என்பதை இவர்களுக்கு நினைவுபடுத்திக் கொள்கின்றோம்.

(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

அல்குர் ஆன் 24 : 30

செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை.

அல்குர் ஆன் 17 : 36

ஆபாச இணையதளங்கள் தடை செய்யப்படுமா? :

- சுப்ரீம் கோர்ட் நடவடிக்கை!

ஆபாச இணையதளங்கள் அதிகரித்துள்ளது குறித்து, கவலை தெரிவித்த சுப்ரீம் கோர்ட், அவற்றைத் தடை செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்து, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 கமலேஷ் வஸ்வானி என்பவர், சுப்ரீம் கோர்ட்டில், பொதுநலன் கோரும் மனு, தாக்கல் செய்திருந்தார். அதில், "ஆபாச இணையதளங்கள் ஏராளமாக பெருகியுள்ளன. அவற்றைத் தடை செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத், தெரிவித்திருந்தார்.

 அந்த மனு, தலைமை நீதிபதி, அல்டமாஸ் கபீர் தலைமையிலான, "டிவிஷன் பெஞ்ச்' முன், 15.04.13 அன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கருத்தை ஏற்றுக் கொண்டனர்.

 "இணையதளங்களில், ஆபாச இணையதளங்கள் ஏராளமாக உள்ளன; அவற்றில், குழந்தைகளை நிர்வாணமாக காட்டும் இணையதளங்கள் பெருகியுள்ளன; அத்தகைய இணைய தளங்களைப் பார்க்கும் சிறுவர் சிறுமியர், அது போன்ற குற்றங்களில் ஈடுபட, வாய்ப்பு இருக்கிறது' என, கவலை தெரிவித்தனர்.

 மேலும், "ஆபாச இணையதளங்களைக் கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்ட நீதிபதிகள், "அவற்றை முழுவதும் தடை செய்ய என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை விளக்கம் அளிக்க வேண்டும்' என்றும் தெரிவித்தனர்.

 மத்திய அரசாங்கம் நினைத்தால்  ஆபாச இணையதளங்களை ஒரே நிமிடத்தில் தடை செய்துவிடலாம். ஆபாச இணையதளங்களால் ஏற்படும் கேடுகளை மத்திய அரசாங்கம் அறியாமலில்லை. மத்திய அரசாங்கத்தின் ஆசியோடுதான் அவை அரங்கேறி வருகின்றது என்பதுதான் உண்மை.

 நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு இவைகளை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்பதுதான் ஒழுக்க சீலர்களின் எதிர்ப்பார்ப்பு.

ஆபாசப்படம் பார்ப்போருக்கு மன அழுத்தம் :

-  லண்டன் ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

 பிரிட்டன் ஆண்கள் அதிக அளவில் ஆபாச படங்களை பார்ப்பதால், அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, பணியிடங்கள், கணவன்-மனைவி உறவு உள்ளிட்டவற்றில் பிரச்னைகள் ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அண்மையில், பிரிட்டனில் ஆபாசப்படம் பார்ப்பவர்கள் குறித்து, ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில், 18 முதல் 24 வயதுக்குட்பட்ட பிரிட்டன் இளைஞர்களில் நான்கில் ஒரு பங்கு இளைஞர்கள் ஆபாசப்படம் பார்க்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. இதனால் அதிக நேரம் தொடர்ந்து ஆபாசப்படம் பார்ப்பதால், மன அழுத்தம் ஏற்பட்டு வேலையில் கவனமின்மை, உறவுகள், தாம்பத்ய வாழ்க்கை போன்றவற்றில் பிரச்னை எழுவது தெரியவந்துள்ளது.

 

April 23, 2013, 12:32 PM

இண்டர்நெட்டினால் பெருகும் ஆபாசம்! டி

இண்டர்நெட்டினால் பெருகும் ஆபாசம்! டிவியினால் பெருகும் வன்முறைகள்!! - ஆய்வில் தகவல்!!!


பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உருவாவதற்கு
, இணைய தளங்களில் வலம் வரும் ஆபாசப் படங்களும், முறைகேடான உறவுகளை சித்தரிக்கும் காட்சிகளுமே காரணம் என்று நீதிபதி சந்திரசேகர் கமிட்டி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

 பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய, நீதிபதி. சந்திரசேகர் தர்மாதிகாரி கமிட்டியை, மகாராஷ்டிரா அரசு நியமித்தது. விசாரணை நடத்திய கமிட்டி, முதல் இடைக்கால அறிக்கையை, 2010ம் ஆண்டு டிசம்பரிலும், இரண்டாவது அறிக்கையை 2011 செப்டம்பரிலும் தாக்கல் செய்தது. மூன்றாவது அறிக்கையை, கடந்த பிப்ரவரி 16ம் தேதி தாக்கல் செய்தது.

 இந்த அறிக்கையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, எடுக்க வேண்டிய பல்வேறு நடவடிக்கைகளை சுட்டிக் காட்டியிருந்தது.

 இந்நிலையில், மும்பை ஐகோர்ட்டில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து, தொடரப்பட்ட பொது நல மனு மீதான விசாரணையின்போது, மேற்கண்ட கமிட்டியின் பரிந்துரை அறிக்கையின் பிரதி தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி சந்திரசேகர் கமிட்டி தன் பரிந்துரையில் கூறியிருப்பதாவது:

·         பொதுவாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உருவாவதற்கு, இணைய தளங்களில் வலம் வரும் ஆபாசப் படங்களும், முறைகேடான உறவுகளை சித்தரிக்கும் காட்சிகளுமே காரணம்.

·         இவை எளிதாகக் கிடைப்பதால், இளம் வயதினர் மத்தியில் தவறான எண்ணத்தை தோற்றுவிக்கிறது.

·         இதுவே குற்ற செயல்களுக்கு காரணமாக அமைகிறது.

·         இதை, உடனடியாகத் தடுக்க வேண்டும்.  பெண்களுக்கு எதிராகக் குற்றங்களை செய்து தண்டிக்கப் பட்டவர்கள் பற்றிய விவரங்களை பகிரங்கப் படுத்த வேண்டும்.

·         பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர், 15 வயதுடையவராக இருந்தாலும், அவரை சிறாராகப் பார்க்கக் கூடாது. இது போன்ற குற்றங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கவும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இதைச் செய்ய வேண்டும்.

·         பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டவர்களை, அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிட டிக்கெட் தரக்கூடாது.

·         பள்ளிகளில், தங்களுக்கு எதிராக நடந்த குற்றங்களை, மாணவியர் புகாராகத் தெரிவிக்க, குறை தீர்ப்பு மையங்களை அமைக்க வேண்டும்.

·         இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் நியூசிலாந்தில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வும் பிள்ளைகள் எப்படிச் சீரழிகின்றார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.

அதிகமாக "டிவி' பார்க்கும் சிறுவர்கள், சமூக விரோதச் செயல்களில் ஈடுபட வாய்ப்பு அதிகம் : - ஆய்வில் தகவல்!

 வாஷிங்டன்: அதிகமாக "டிவி' பார்க்கும் சிறுவர்கள், எதிர்காலத்தில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட வாய்ப்பு அதிகம் என, சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

 நியூசிலாந்தில் உள்ள, "ஒட்டாகோ' பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், அந்நாட்டில் உள்ள டுனெடின் நகரத்தில், 1972-73 ஆண்டுகளில் பிறந்தவர்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். ஐந்து முதல், 15 வயதாகும்வரை, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, அவர்களின் "டிவி' பார்க்கும் அளவு கண்காணிக்கப்பட்டது.  

 அதிகமாக "டிவி'      பார்க்கும் பழக்கம் கொண்டவர்களிடையே, அவர்கள் பெரியவர்களானதும் குற்றச்செயல்களில் ஈடுபடும் வாய்ப்பு, 30 சதவீதம் அதிகமாக இருந்ததை, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

 மேலும், அவர்களிடையே முரட்டுத்தனம் மற்றும் சமூக விரோத நடவடிக்கை போன்ற எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டுள்ளதும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:

 சிறுவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் பல்வேறு வகையான நிகழ்வுகள், பிற்காலத்தில் அவர்கள் வாழ்வில் அழுத்தமான விளைவுகளை ஏற்படுத்த வல்லவை. அந்த வகையில், அதிகமாக "டிவி' நிகழ்ச்சிகளைப் பார்த்து வளரும் சிறுவர்கள், பெரியவர்களாகும்போது, அவர்களிடம் சமூக விரோத மற்றும் குற்ற நடவடிக்கைள் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம். டிவி' பார்ப்பதால் மட்டும்தான், குழந்தைகளிடம் சமூக விரோத எண்ணங்கள் வளர்கின்றன என, நாங்கள் சொல்லவில்லை. எனினும், குழந்தைகள் மற்றும் இளம்வயதினர் "டிவி' பார்க்கும் நேர அளவைக் குறைத்தால், சமூகவிரோதத் செயல்கள் குறைய வாய்ப்புள்ளது.

 ஒரு நாளில், "டிவி'யில் ஒளிபரப்பாகும் நல்ல நிகழ்ச்சிகளை ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் மட்டும் குழந்தைகள் பார்ப்பது நல்லது. இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

 நமது குழந்தைகளை செல்ஃபோன், இன்டர்நெட், டிவி ஆகியவற்றிலிருந்து தள்ளி வைப்பது நல்லது. அதை அவர்கள் பயன்படுத்தும்போது கண்காணிப்பது ரொம்ப ரொம்ப நல்லது என்பதை இந்த ஆய்வுகள் நமக்குத் தெரிவிக்கின்றன.

 

April 23, 2013, 12:30 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top