முஸ்லிம் தலைவர்கள் சமுதாயத்துக்கு ஒ

முஸ்லிம் தலைவர்கள் சமுதாயத்துக்கு ஒன்றும் செய்யவில்லை
காமராஜர் முதல்வராக இருந்த போது அவருடைய சமுதாய மக்கள் ஆட்சி
, அதிகாரம், கல்வி வேலைவாய்ப்பு, தொழில்துறை உள்பட தற்போது வரைக்கும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். இந்தியாவின் முதல் கல்வி மந்திரியாக இருந்த அபுல்கலாம் ஆசாத், முன்னாள் ஜனாதிபதி ஜாகிர் உசேன் போன்ற பெரும் தலைவர்கள் இருந்தும் நாம் முன்னேற முடியவில்லை என்று முஸ்லிம் மக்களிடத்தில் வருத்தம் இருக்கிறது. நாம் முன்னேறாததற்கு காரணம் என்ன?

- உ. முஹம்மது அபுதாஹீர், கம்பம்.

சுய அதிகாரம் உள்ள பதவிகள் மாநில அளவில் முதல்வர் பதவியும் இந்திய அளவில் பிரதமர் பதவியும் தான். சில நேரங்களில் மட்டும் ஆளுனர் அதிகாரம் படைத்தவராக இருக்கும் நிலை ஏற்படலாம்.

இதைத் தவிர அனைத்து பதவிகளும் சுய அதிகாரம் கொண்ட பதவிகள் அல்ல. மாநிலத்தில் அமைச்சராக இருப்பவர் மாநில முதல்வரின் விருப்பத்தின்படிதான் நடப்பார். ஒரு முஸ்லிம் அமைச்சராக இருந்தாலும் முதல்வர் கட்டளை இட்டால் முஸ்லிம்களை ஒழிப்பதற்கும் தயாராக இருப்பார். இல்லாவிட்டால் அவரது அமைச்சர் பதவி நீடிக்காது.

அது போல் மத்திய அமைச்சர்கள் பிரதமரின் கைப்பாவையாக மட்டுமே செயல்பட முடியும். பிரதமர் விரும்பாத வரை அவர்கள் முஸ்லிம்களுக்கு எந்த நன்மையும்  செய்ய மாட்டார்கள். முஸ்லிம்களுக்கு அரசால் இழைக்கப்படும் எந்தk கொடுமைக்கு எதிராகவும் குரல் கொடுக்க மாட்டார்கள்.

திமுக அதிமுக ஆகிய கட்சிகளில் முஸ்லிம் அமைச்சர்கள் இருந்தனர். மேற்கண்ட கட்சிகள் பாஜகவுடன் கூட்டு வைத்த போது அதை அந்தக் கட்சிகளின் ஒரு பிரமுகரும் எதிர்க்கவில்லை. மாறாக கட்சியின் கட்டளைக்கு ஏற்ப பாஜகவுக்கு ஆதரவாகp பிரச்சாரம் செய்த வரலாறு உண்டு.

அபுல் கலாம் அவர்கள் என்ன பாடுபடுத்தப்பட்டார் என்பதை அவரே எழுதி முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தான் இதை வெளியிட வேண்டும் என்று உயில் எழுதிச் சென்றார். அந்த ஆவணம் வெளியான போது அவர் பொம்மையாக இருந்ததை அவர் வாயாலே அறிந்து கொள்ள முடிந்தது. நீங்கள் சுட்டிக் காட்டிய சுய அதிகாரம் அறவே இல்லாத பதவியாகிய ஜனாதிபதி பதவி பற்றி பேசத் தேவை இல்லை.

இந்தியாவில் சில உரிமைகளை நாம் பெற்றுள்ளோம் என்றால் அது முஸ்லிம் அமைச்சர்களால் அல்ல. நம் சமுதாயத்தின் போராட்டம் காரணமாகவே அதை பெற்றுள்ளோம்.
உன்றவு 16:7

Published on: November 14, 2011, 6:35 PM Views: 978

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top