முஸ்லிம் நாடுகளில் புரட்சிகள் நடப்ப

முஸ்லிம் நாடுகளில் புரட்சிகள் நடப்பது ஏன்

கேள்வி: உலக இஸ்லாமிய நாடுகளில் அடுத்தடுத்த அதிபர்கள் அரசுகள் மாற்றப்பட்டு உள்நாட்டுப் புரட்சிகள் ஏற்பட என்ன காரணம்?

- அபூஜஸீம் ஸார்ஜா

பொதுவாக மனிதர்கள் சுதந்திரத்தை விரும்பக் கூடியவர்களாக உள்ளனர். அரசாங்கம் எவ்வளவு நல்லதாக இருந்தாலும் அதன் தவறுகளைச் சுட்டிக்காட்டவும் தேவைப்பட்டால் அந்த ஆட்சியை மாற்றவும் நமக்கு உரிமை வேண்டும் என விரும்புகிறார்கள். கருத்துச் சுதந்திரமும், ஆட்சியாளர்களை மாற்றும் அதிகாரமும் மக்களிடம் வழங்கப்பட்டுள்ள நாடுகளில் இதுபோல் புரட்சி நடப்பதில்லை.

எழுத்தாலும் பேச்சாலும் அரசின் தவறுகளைச் சுட்டிக் காட்டும் வாய்ப்பு இருந்தால் அவர்களின் கோபத்துக்கு அது வடிகாலாக ஆவதால் புரட்சிக்கு வேலை இல்லை.

மேலும் ஜனநாயக நாடுகளில் ஆட்சியாளர்கள்  மோசமானவர்கள் என்றால், அடுத்த தேர்தலில் ஆட்சியை மாற்ற முடியும் என்பதால் பொறுமையுடன் காத்திருக்கிறார்கள்.

ஆனால் முஸ்லிம் நாடுகளில் கருத்து சுதந்திரம் இல்லை. ஆட்சியாளர்களை மாற்றும் அதிகாரமும் மக்களுக்கு இல்லை எனும்போது அடக்கி வைக்கப்பட்ட கோபம் ஒரு நேரத்தில் பொங்கி விடுகிறது.

இந்தியாவில் இந்திரா காந்தி அவசர நிலைப் பிரகடனம் செய்த போது லஞ்சம், கலப்படம், ஊழல் அனைத்தும் கட்டுக்குள் வந்தன. அரசு அலுவலர்கள் விரைவாக தங்கள் கடமையைச் செய்தனர். விலைவாசியும் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. ஆனால் கருத்துச் சுதந்திரம் மட்டும் இல்லை. இதன் காரணமாக இந்திரா காந்தி படுதோல்வியைச் சந்தித்தார். மக்கள் சுதந்திர உணர்வைத்தான் பிரதானமாகக் கருதுகிறார்கள் என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

உணர்வு 16:14

29.12.2011. 04:17




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
113 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி