ஜோஸபின் பாபாவின் குருட்டுப் பார்வை

ஜோஸபின் பாபாவின் குருட்டுப் பார்வை

விஷம் காக்கும் கிறித்தவ பேராசிரியையின் பொய்களும், உளறல்களும்

இஸ்லாத்தைக் கருவறுக்க வேண்டும் என்ற கேடுகெட்ட எண்ணத்தில் நக்கீரனால் களமிறக்கி விடப்பட்டவர்தான் பாளையங்கோட்டையில் எக்ஸேவியர் கல்லூரியில் துணை பேராசிரியையாக பணிபுரியக்கூடிய கிறித்தவப் பெண் ஜே.பி.ஜோஸபின் பாபா.

இவர் கிறித்தவ வெறியராக இருப்பதால் முஸ்லிம்கள் மீதும்
, இஸ்லாத்தின் மீதும் தன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு விஷத்தைக் கக்கியுள்ளார்.
 

முஸ்லிம்களை விமர்சிப்பதில் கிறித்தவ ஃபார்முலா
:

கிறித்தவ போதகர்களுக்கே உரிய பாணியில் தன்னால் இயன்ற அளவு பொய்களைப் புனைந்து தள்ளி ரிசானா விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மற்றுமொரு துப்பாக்கி தூக்கி தனது எழுத்தால் படம் காட்டியுள்ளார் இந்த கிறித்தவ பெண்மணி
.
 

புனையப்பட்ட விஷம் கக்கும் கதைகள்
:
 

ரிசானா
10நபர்கள் கொண்ட சவுதி குடும்பத்தில் வீட்டு பணியாளராக அமர்த்தப்படுகின்றார். ஒரே மாதத்தில் அவ்வீட்டிலுள்ள 4மாத குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று விட்டார் என கைது செய்யப்படுகின்றார். இந்த குழந்தை எவ்வாறாக மரித்தது என்று போஸ்டுமார்ட்டம் கூட செய்யாது அடக்கம் செய்தது சவுதி காவல்துறை

மேற்கண்டவாறு தனது கற்பனைக் குதிரையை அவிழ்த்துவிட்டுள்ளார் ஜே
.பி.பாபா.
இறந்த குழந்தையை போஸ்ட் மார்டம் கூட செய்யாமல் அடக்கம் செய்துவிட்டார்களாம். அதற்குக்கூட சவூதி அரசாங்கம் அனுமதியளிக்கவில்லையாம். எவ்வளவு பெரிய அண்டப்புளுகு?

ரிசானா அந்த குழந்தையைக் கொன்றார் என்பதற்கு முக்கிய ஆதாரமே அந்தக் குழந்தையின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்தான்
. அந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் குழந்தை மூச்சுத்திணறல் மூலமாக இயற்கையாக இறக்கவில்லை. கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுத்தான் இறந்துள்ளது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மை இவ்வாறு இருக்க போஸ்ட் மார்டம் கூட செய்ய சவூதி அரசாங்கம் அனுமதியளிக்கவில்லை என்று இந்த விஷக்கிருமி எழுதியிருப்பதிலிருந்து இவர் இஸ்லாமியர்களுக்கு எதிராக எத்தகைய விஷத்தையும் கக்கக் துணிந்தவர் என்பது தெளிவாகின்றது.

போஸ்ட் மார்டம் செய்யாமல் அந்த குழந்தையை புதைத்ததாக சொன்ன அறிவாளி யார்
? என்பதை பாப்பா விளக்குமா?

அத்தனை நோய்க்கும் அடிப்படை காரணம்
:
 

அடுத்ததாக இந்த ஜே
.பி.பாபா வைக்கும் கூறுகெட்ட ஆதாரத்தைப் பாருங்கள்:
 

ரிசானாதான் கொலை செய்தாள் என
2007ல் மரண தண்டனை விதிக்கின்றது. இந்த வீட்டிலிருக்கும் வேறு நபர்கள் இந்தக் குழந்தையைக் கொன்றனரா அல்லது இந்த குழந்தைக்கு மரபனுவாகவே வேறு ஏதும் நோய் இருந்ததா என்று பரிசோதிக்க இயலாத சவுதி அரசு, மதச்சட்டத்தின் பெயரில் 7வருடம் சிறையில் கழித்த இளம் பெண்னைப் படுகொலை செய்தது அதிர்ச்சியாக உள்ளது. தற்போது மரணப்பட்ட நாலுமாத குழந்தையின் சகோதர குழந்தை கூட தீர்க்க இயலாத நோயில் அகப்பட்டு மருத்துவம் பெற்று வருவதாகத்தான் செய்திகள் உள்ளன.

வீட்டில் உள்ள வேறுயாரும் இந்தக் குழந்தையைக் கொன்றார்களா
? என்று இவர் அந்த வீட்டில் ரிசானாவோடு சேர்ந்து ஒன்றாக வேலை பார்த்த வேலையாள் போல எழுதி கேள்வி கேட்டுள்ளார். வேறு யாரோ குழந்தையைக் கொலை செய்துவிட்டார்கள் என்று கொலைக்குற்றத்திற்கு ஆளான ரிசானா கூட இது வரை கூறவில்லை. ஆதாரங்கள் இருக்கும் போது ஆதாரத்தின் அடிப்படையில் பேசுவதை விட்டுவிட்டு தமிழ் பேசும் பெண் என்பதற்காக இஸ்லாத்தை குறைகூறுவதுதான் இவர்களது அத்தனை நோய்க்கும் அடிப்படை காரணம்.

உறவினருக்கு நோய் என்றால் கொலை செய்யப்பட்டவரும் தாமாக இறந்திருப்பாரா
?:

மேலும்
, இறந்த குழந்தையின் சகோதர குழந்தை கூட தீராத நோயால் அகப்பட்டு தற்போது மருத்துவம் பார்த்து வருவதால், அதுதான் அந்த குழந்தை இறந்ததற்கு காரணம் என்று அற்புதமான(?) கண்டுபிடிப்பை இந்தப் ஜே.பி.பாபா செய்துள்ளார்.

இவரது மகனை ஒருவர் தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்துவிட்டதாக வைத்துக் கொள்வோம்
. இந்தப் பெண்மணிக்கு ஒரு நோய் இருந்து அந்த நோயால் தற்போது அவர் அவதிப்படுவதாகவும் வைத்துக் கொள்வோம். அப்போதும் இப்படித்தான் இவர் தீர்ப்பெழுதுவாரா?

எனக்கு நோய் உள்ளது
; அந்த நோய்தான் என் மகன் இறப்புக்கும் காரணமாக இருந்திருக்கக்கூடும் என்று இவர் சொல்ல முன்வருவாரா?

மகாத்மா காந்தியின் தாத்தாவிடத்தில் இருந்த நோய்தான் அவரது மரணத்திற்கு காரணமேயன்றி
, கோட்சே கொலை செய்ததால் காந்தி சாகவில்லை என்று இவர்கள் சொன்னால் என்ன பதிலோ அந்த பதில்தான் இவர்களுக்கும் பொருந்தும்.
 

கோட்சேவுக்கு இரக்கம் காட்டும் கொடியவர்கள்
:

நல்ல வேளை கோட்சே தூக்கிலிடப்படும்போது இவர்கள் இருக்கவில்லை
. அப்போது இருந்திருந்தால் காந்திக்கு மனிதநேயம் பார்த்து பச்சாதாபப்படுவதைக் காட்டிலும், கோட்சேவுக்கு மனிதநேயம் பார்த்து உச்சு கொட்டி இருப்பார்கள்.

கோட்சேவின் இரத்தத்தின் விலை என்ன?” என்று நக்கீர கோபால்களும், ஜே.பி.பாபாக்களும், “கோட்சே விஷயத்தில் துண்டிக்கப்பட்ட நீதிஎன்று விகடக் கோமாளிகளும், “கோட்சே என்ற சிறுவனை தூக்கிலிட்ட காட்டுமிராண்டி இந்தியாஎன்ற தலைப்பில் மிருக புத்திரன்களும் ஆனந்த விகடனிலும், நக்கீரனிலும் கட்டுரை எழுதி இந்தியாவை அப்போதே வல்லரசாக்கியிருப்பார்கள். தப்பித்தார் காந்தி.
 

அடுத்த அண்டப்புளுகு
:

இந்த நிகழ்வைக் காணும்போது சவூதிக்காரர்கள் மனதில் இரக்கமே இல்லையா என ஆச்சரியம் கொள்ள வைக்கின்றது
. ரிசானாவுடன் இன்னும் 45க்கும் மேலுள்ள இளம் பணியாளர் பெண்கள் மரண தண்டனை காத்து சிறையில் வாடுகின்றனர் என்று அடுத்த அண்டப்புளுகளை அவிழ்த்துவிட்டுள்ளார்.

மரணதண்டனைக்காக காத்திருக்கும்
45 இளம் பெண்கள் யார்? யார்? அவர்கள் குறித்த சவூதி அரசாங்கம் வெளியிட்ட பட்டியல் எங்கே? அவர்களது பட்டியலை வெளியிடத்தயாரா? என்று இந்த கிறித்தவ வெறியருக்கு அறைகூவல் விடுக்கின்றோம்.

அடுத்ததாக சவூதியில் வேலை பார்க்கும் பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு நிர்பந்தப்படுத்தும் சவூதி எஜமானர்களை கொன்றதால் மரணதண்டனைக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள்தான் அதிகமாக சிறையில் இருக்கிறார்கள் என்றும் எழுதி இந்த விஷயத்தில் தானே நேரடியாக பாதிக்கப்பட்ட பெண்ணைப் போன்று படம் காட்டியுள்ளார் ஒன்றும் அறியாத பாப்பா
.
 

பைபிள் படித்ததால் வந்த கற்பனை
:

இதுவும் கற்பனைக் கதைதான்
. பைபிளை அதிகமாகப் படித்ததால் ஜே.பி.ஜோஸிபின் என்ற பெண்மணிக்கு வந்த கற்பனையாக இது இருக்கலாம். தனக்கு கீழுள்ள போர்ச் சேவகரின் மனைவியை அபகரித்து கற்பமாக்கிய தாவீது ராஜாவைப்போல சவூதி எஜமானர்களும் இருப்பார்கள் என்ற கிறித்தவ பேராசிரியையின் நினைப்பு தவறு என்று அவருக்கு சொல்லிக் கொள்கின்றோம். அல்லது அவரது சொந்த அனுபவமாகவும் இது இருக்கலாம்.
அதிகமாக பைபிள் படித்தால் இதுபோலத்தான் தேவையில்லாத கற்பனைகள் வரும் என்பதை நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
 

ஆண்களை விரட்டும் பெண்கள்
(?):

அங்குள்ள எஜமானப் பெண்கள் கூட சில வீட்டு வேலையாட்களான ஆண்களை கெடுக்க நினைத்து நடக்காத சந்தர்ப்பங்களில் அவர்களை சட்டத்தால் பழி தீர்த்துக் கொள்ளும் சம்வங்களும் கேட்டுள்ளோம்
என்றும் இவரது கற்பனைக் குதிரை இவரது கட்டுரையில் கொடிகட்டி பறக்கின்றது
.

இதுவும் பைபிள் படித்ததனால் ஏற்பட்ட தாக்கம்தான்
. விரும்பாத ஆணை எவ்வளவுதான் வற்புறுத்தினாலும் அவனை உடலுறவுக்கு இசைய வைக்க முடியாது என்பது ஊரறிந்த உண்மை. அப்படியிருக்க லோத் என்ற தீர்க்கதரிசியை வலுக்கட்டாயமாக மதுவை ஊத்திக் கொடுத்து அவர்களது மகள்கள் இருவரும் அவரது விருப்பமின்றி அவரை வன்புணர்வு செய்ததாக பைபிள் கூறுகின்றதே அந்தக் கதையை சவூதி அரேபிய பெண்களுக்குப் பொருத்தி முஸ்லிம்கள் மீதான தனது கோபத்தைத் தணித்துக் கொண்டுள்ளார் பாப்பா.

இதில் ஏழை மக்கள் கலங்கி தவிப்பதை படைத்தவர்தான் விரும்புவாரா
? என்ற கேள்வி வேறு. கொலைகாரப் பாவிகளுக்கு இறைவன் நிச்சயமாக இரக்கம் காட்டமாட்டான். கொலை செய்யப்பட்டவர்களுக்கும், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்தான் இறைவன் இரக்கம் காட்டுவான்.
 

பகிரங்க சவால்
:

கடவுள் என்ற பெயரில் மனிதநேயமில்லா செயல்களை யார் செய்தாலும் எந்த மதம் செய்தாலும் தண்டிக்கும் துணிவு ஒவ்வொருவருக்கும் வர வேண்டும்
. இங்கு சுயநலமான மத சிந்தனையில் பொய் புரட்டு பேசுவது வருந்தத்தக்கது என்று சொல்லி நல்லபிள்ளை நாடகமாடுகின்றார் ஜே.பி.பாபா.

கொலைக்கு கொலை என்ற சட்டத்தை திருக்குர்ஆன் மட்டும் சொல்லவில்லை
. இவர் வேதமாக ஏற்றுள்ள பைபிளும்தான் கூறுகின்றது. மோசேவுக்கு வழங்கப்பட்ட நியாயப்பிரமாணத்தில் இதுதான் சட்டம். இந்தச் சட்டத்தை உண்மைப்படுத்தத்தான் தன்னைக் கர்த்தர் அனுப்பியதாகவும், தான் வருகை புரிந்துள்ளதாகவும் இயேசு புதிய ஏற்பாட்டில் சொல்லிக்காட்டியுள்ளார்.

அப்படியானால் குழந்தையைக் கொன்றதற்காக அந்தக் குழந்தையை கொலை செய்தவர் கொல்லப்பட வேண்டும் என்ற சட்டத்தை பைபிளும் சொல்கின்றது
. எனவே நான் இத்தகைய காட்டுமிராண்டி சட்டத்தைச் சொன்ன கிறித்தவ மதத்தில் இருக்கமாட்டேன் என்று அறிவிப்புச் செய்து கிறித்தவ மதத்தை காட்டுமிராண்டி மதமாக அறிவிக்க ஜே.பி.ஜோஸிபின் பாப்பா தயாரா?

கொலைக்கு கொலை செய்வது மட்டுமல்ல
; அப்பாவி குழந்தைகளைக்கூட அவர்களது தலையைப் பிடித்து பாறையில் முட்டி கொலை செய்பவன் பாக்கியவான் என்று இயேசு நாதர் மேற்கோள்காட்டிய சங்கீதத்தில் எழுதப்பட்டுள்ளதே! இந்த அக்கிரமத்திற்கு எதிராக இந்த பாப்பா என்றைக்காவது வாய்திறந்திருக்குமா?

அப்படியானால் முஸ்லிம்கள் சரியான செயலைச் செய்தால்கூட அதுதவறு
. கிறித்தவர்கள் எத்தகைய அயோக்கியத்தனத்தைச் செய்தாலும் அவை சரி என்று இவர் சொல்ல வருகின்றாரா?

இந்த தண்டனையால் மனிதம் மதத்தால் படுகொலைசெய்யப்பட்டது என்பது மட்டுமே உண்மை
. ஒரு தாயின் தீராத அழுகைக்கு காரணம் ஆகிவிட்ட சவுதியை இறைவனும் மன்னிக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

இப்படி மனித நேயத்திற்கு எதிராக கருத்துக்கூறி இவர்கள்தான் மனிதாபிமானத்தையும்
, மனித நேயத்தையும் படுகொலை செய்ய முயல்கின்றார்கள். இவர்களை மனித நேயமுள்ள எவரும் மன்னிக்கமாட்டார்கள் என்பதுதான் உண்மை.

இவர்கள் நம்முடன் விவாதத்திற்கு வந்தால் மேற்கண்ட விஷயங்களில் இவர்களின் இரட்டை வேடத்தை இறைவனின் துணைகொண்டு அம்பலப்படுத்துவோம்
.


Published on: January 20, 2013, 5:13 PM Views: 1230

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top