இயேசு அழைக்கிறார் என்பது சரியா

இயேசு அழைக்கிறார் என்பது சரியா
இயேசு அழைக்கிறார் என்று தவ்ஹீத் ஜமாஅத் இணையதளம் நடத்துகிறது. இயேசு இப்போதும் அழைத்துக் கொண்டிருக்கிறார் என்று பொருள்படுகிறதே. இது சரியா..
?

- முஹம்மது ஷேக், அபுதாபி.

பதில் :

இயேசு இப்போது நம்மை அழைத்துக் கொண்டிருக்கிறார் என்ற கருத்தில் இதைக் கூறினால் அது கூடாது.

இஸ்லாம் அழைக்கிறது. குர்ஆன் அழைக்கிறது என்றெல்லாம் கூறுகிறோம். அது போன்ற கருத்தில் நபிகள் நாயகம் அழைக்கிறார்கள் இயேசு அழைக்கிறார் என்று கூறுவது தவறல்ல. 

நபிகள் நாயகம் சொல்கிறார்கள் எனக் கூறுகிறோம். இலக்கணப்படி சொன்னார்கள் என்று தான் கூற வேண்டும். சொல்கிறார்கள் என்று நிகழ்கால வினைச் சொல்லாகக் கூறக் கூடாது.

நபிகள் நாயகம் இப்போது சொல்லிக் கொண்டு இலலாவிட்டாலும் அவர்களின் போதனை நம்மை அடைவதால் நம்மிடம் நேரடியாகக் கூறுவதாக நாம் எடுத்துக் கொள்கிறோம்.

அது போல் இயேசு சொன்ன போதனைகள் நம்மை ஏகத்துவத்தின் பால் அழைக்கிறது என்ற கருத்தில் இவ்வாறு கூறுவதில் தவறு இல்லை.
உணர்வு 16:5

Published on: November 14, 2011, 6:46 PM Views: 781

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top