பிப் 14ல் ஒரே இட்த்தில் போராட்டம் நடத்

பிப் 14ல் ஒரே இட்த்தில் போராட்டம் நடத்தலாமே

பிப்ரவரி 14 போராட்டத்தை ஒரே இடத்தில் நடத்தினால் என்ன?

- அஸீலா பீ.,

திருவல்லிக்கேனி

போராட்ட வழிமுறைகள் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுதல் அடையக் கூடியது தான். ஒரே இடத்தில் மக்களைத் திரட்டிப் போராடுவது தான் இப்போதைக்கு நல்லது என்று நாம் கருதும் போது அவ்வாறு முடிவு செய்வோம். பரவலாக நடத்துவது தான் நல்லது என்று கருதும் போது அதற்கேற்ற முடிவை எடுப்போம். எப்போதும் ஒரே மாதிரியான போராட்டத்தை நடத்துவது விவேகமாகாது.

தேர்தல் நெருங்கும் போது தான் போராட்டங்களை அரசியல் கட்சிகள் கூர்ந்து கவனிப்பார்கள். அந்த நேரத்தில் மாநில அளவில் மக்களைத் திரட்டி ஒரே இடத்தில் போராட்டம் நடத்தினால் அது அதிகம் கவனிக்கப்பட்டு கோரிக்கைகள் நிறைவேற அதிக வாய்ப்பு இருக்கும்.

இப்போது தேர்தல் எதுவும் இல்லாததால் ஒரே இடத்தில் மக்களைத் திரட்டும் வகையிலான போராட்டத்தைக் கையில் எடுக்கவில்லை. மேலும் ஒரே இடத்தில் மக்களைத் திரட்டும் வகையிலான போராட்டங்களுக்கு அதிகமான செலவுகள் ஏற்படும். வரக்கூடிய மக்களும் அதிகமான பணத்தையும் அதிகமான நேரத்தையும் ஒதுக்க வேண்டிய நிலை ஏற்படும். தலைமைக்கும் அதிகமான செலவுகள் ஏற்படும். அதிக செலவு பிடிக்கும் போராட்டத்தை அடிக்கடி நடத்திக் கொண்டிருக்க முடியாது.

மாவட்ட அளவில் நடத்தும் போராட்டங்களுக்கு குறைந்த நேரத்தையும் குறைந்த அளவு பணத்தையும் செலவிட்டு மக்கள் கலந்து கொள்ள இயலும்.

இது போன்ற காரணங்களால் தான் தற்போதுள்ள நிலையில் மாவட்ட அளவில் அதிகமான மக்களைத் திரட்டி அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டது.

உணர்வு 16:24 

21.02.2012. 12:56




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
114 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி