எல்லா ஆட்சியாளர்களும் ஊழல் செய்வது ஏ

எல்லா ஆட்சியாளர்களும் ஊழல் செய்வது ஏன்
ஆட்சி செய்பவர்கள் மக்கள் பணத்தைக் கொள்ளை அடிக்கிறார்கள். பிறகு வருபவர்களும் இதைத்தான் செய்கிறார்கள். போராட்டங்களால் அதிகமான மாற்றங்கள் இல்லை. இதற்கு மாற்று வழி என்ன
?

- லியாகத் அலி, மேலக்கோட்டை.

இது ஆட்சிக்கு வருபவர்கள் பற்றிய பிரச்சனை அல்ல. யார் ஆட்சிக்கு வந்தாலும் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அதிகாரம் செலுத்தும் அதிகாரிகளும் மக்களின் பணத்தைக்கொள்ளை அடிக்கிறார்கள்.

இது போன்ற ஊழலைக் களை எடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ஊழல் தடுப்பு ஏஜன்சிகளும் அப்படித் தான் உள்ளனர்.

இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரைத் தண்டிக்கும் இடத்தில் அமர்ந்துள்ள நீதிபதிகளும் அப்படித்தான் உள்ளனர்.

இஸ்லாத்தின் பெயரால் இயக்கம் நடத்துவோரும் தங்களால் இயன்ற அளவுக்கு தங்களை நம்பி ஒப்படைக்கும் மக்களின் பணத்தை மோசடியாக உண்கிறார்கள்.

இன்னும் சொல்லப் போனால் இதைப் பற்றி பேசுகின்ற பொதுமக்களின் மனநிலையும் அப்படித்தான் இருக்கிறது. அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் அவர்கள் அடுத்தவரின் சொத்தை எடுத்துக் கொள்ள முடிவதில்லை.

தெருவில் யாரோ தவற விட்ட ஒரு லட்சம் ரூபாய் கிடந்தால் அதை எடுத்துக் கொள்ள விரும்பாதவர்கள் பொது மக்களில் எத்தனை பேர் இருப்பார்கள்
? மிக மிக குறைவானர்கள் தான் இருப்பார்கள். கூடப் பிறந்த சகோதரனின் சொத்தையே சுருட்டிக் கொள்வோரை நாம் பார்க்கிறோம். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க மறுப்பவர்களை அதிகமாக காண்கிறோம். ஒட்டு மொத்த செட்டப்பே நாசமாகிக் கிடக்கின்றது...

கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும்  கிடைத்த வாய்ப்பு பொதுமக்களுக்கும் கிடைத்தால் அவர்கள் செய்ததைத் தான் இவர்களும் செய்வார்கள். இந்த நிலை இருக்கும் வரை ஊழல் ஒழியாது.

நம்மைப் படைத்த இறைவன் இருக்கிறான் அவன் நம்மைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான். பிறர் சொத்தை நாம் சாப்பிட்டால் இதற்காக இறைவன் தரும் தண்டனை கடுமையாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் வந்தால் தவிர இது ஒழியாது. இதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும்
உணர்வு 16:7

Published on: November 14, 2011, 6:32 PM Views: 849

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top