டில்லி சென்று போராடினால் என்ன

டில்லி சென்று போராடினால் என்ன
முஸ்லிம்களுக்கு இட ஓதுக்கீடு அளிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய மந்திரி அறிவித்திருக்கும் இந்த நேரத்தில் டெல்லியில் இட ஒதுக்கீடு கோரி tntj போராட்டம் நடத்துமா
?

- மும்பை ஹனிப் மும்பை

இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு முன்னரே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்திய அளவிலான கோரிக்கைக்கு இந்தியாவின் தலைநகரில் போராட்டம் நடத்துவது தான் சிறந்தது. ஆனால்  அந்தப்  போராட்டம்  அதிக மக்களைத்  திரட்டி நடத்தப்பட வேண்டும். அப்போது தான் அது ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் கோரிக்கையாகக் கருதப்படும்.

மாநில அளவிலான ஒரு பெரிய இயக்கம் டெல்லியில் போராட்டம் நடத்தும் போது அதிக பட்சம் ஐந்தாயிரம் பேருக்கு மேல் திரட்ட முடியாது. ஒரு நபரை டெல்லிக்கு அழைத்துச் செல்லவும் அவர்களுக்கான உணவு தங்கும் வசதிகள் ஏற்பாடு செய்யவும் ஒரு நபருக்கு இரண்டாயிரம் ரூபாய் வரை செலவாகும். இந்த வகைக்கு மட்டும் சுமார் ஒரு கோடி ரூபாய் ஆகிவிடும். ஒரு கோடி ரூபாய் செலவிட்டு ஐந்தாயிரம் பேரை அழைத்துச் சென்றாலும் அந்த எண்ணிக்கை குறைவு என்பதால் அதனால் எதிர்பார்த்த பலன் கிடைக்காது.

ஆனால் குறைந்த செலவில் தமிழக நகரங்களில் பல லட்சம் மக்களை நாம் திரட்ட முடியும். தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் உடனே செய்திகள் டெல்லியை எட்டி விடும். எனவே தான் நாம் டெல்லியில் போராட்டம் நடத்தும் திட்டத்தை கையில் எடுக்கவில்லை. லட்சக்கணக்கான மக்களை டெல்லியில் திரட்டிக் காட்டும் நிலை ஏற்படும் போது அது பற்றி பரிசீலிக்கலாம்.
உணர்வு 16:7

Published on: November 14, 2011, 6:42 PM Views: 954

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top