அரசு ஊழியர் தவ்ஹீத் ஜமாஅத்தில் சேர ம

அரசு ஊழியர் தவ்ஹீத் ஜமாஅத்தில் சேர முடியுமா
கேள்வி: அரசாங்க  ஊழியராக  இருப்பவர்  தமிழ்நாடு தவ்ஹீத்  ஜாமாஅத்தின் எந்த ஒரு பொறுப்புகளிலும்  இருக்க முடியுமா
? ஆர்ப்பாட்டம், போராட்டம் விசயத்தில்  ஈடுபடும் போது பிரச்சினை ஏற்படுமா?

- ரபிக், பவானி

பதில் :

அரசு ஊழியர்கள் அரசியல் கட்சிகளில் தான் அங்கம் வகிக்கக் கூடாது. சமுதாய ஆன்மிக இயக்கங்களில் ஈடுபடலாம். தேர்தலில் போட்டியிடும் கட்சியில் தான் உறுப்பினராக இருக்கக் கூடாது.

தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி
, அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினர்களாகவோ, சந்தா செலுத்துபவர்களாகவோ இருக்கக் கூடாது. தங்கள் குடும்பத்தினர் நேரடி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டிய கடமை, அரசு ஊழியருக்கு உண்டு.

தடுக்கப்படும் சூழல் இல்லாத சமயத்தில் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடும் குடும்பத்தினர் குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். அரசு ஊழியர்கள் தேர்தலில் போட்டியிடவும் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

தவ்ஹீத் ஜமாஅத் போன்ற சமுதாய இயக்கங்களில் தாராளமாக அங்கம் வகிக்கலாம். சுமார்
25 சதவிகித அரசு ஊழியர்கள் ஆர் எஸ் எஸ் பயங்கரவாத இயக்கத்திலேயே அங்கம் வகிக்கின்றனர்.
உணர்வு 16:05

Published on: October 24, 2011, 3:51 PM Views: 856

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top