2தடவை தான் பொறுப்புக்கு வரவேண்டும் எ
2தடவை தான் பொறுப்புக்கு வரவேண்டும் என்பது சரியா?
டிஎன் டிஜே பைலாவில் இருமுறைக்கு மேல் ஒருவர் பதவிக்கு வரக் கூடாது என்று திருத்தம் செய்தீர்களே! ஆனால் அன்றைய கலீஃபாக்கள் ஒருவர் மறைவிற்குப் பின் தான் அடுத்த கலீஃபா ஆட்சியாளர் (மன்னர்) வருகின்றார். இதுதான் முஸ்லிம்களாகிய நமது நிலை. அப்போதுதான் ஒரு அமைப்பை ஒரு சமூகத்தை சிறப்பாக வழி நடத்த முடியும். டிஎன் டிஜே வில் இதற்கு நேர் மாற்றமாக இருக்கின்றதே! விளக்கம் வேண்டும்.
- புதுக்கோட்டை அக்பர் அலி,
குவைத்
? நாம் ஆட்சி எதுவும் நடத்தவில்லை. சில பணிகளைச் செய்வதற்காக ஒரு கூட்டமைப்பாகச் செயல்படுகிறோம். எனவே நீங்கள் சொல்வது இதற்குப் பொருந்தாது. "அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு" எனும் நூலில் இது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
மேலும் நபிகள் நாயகத்துக்குப் பின்னர் ஆட்சி செய்த கலீஃபாக்கள் கடைசி வரை ஆட்சியில் இருந்ததற்குக் காரணம் அவர்கள் அதிகமான மக்களின் ஆதரவைப் பெற்று இருந்ததால் தான். அதிகமான மக்களின் ஆதரவு இருக்கும் வகையில் அவர்களின் ஆட்சி இருந்ததே இதற்குக் காரணம்.
உணர்வு 16:24
21.02.2012. 12:35
