விவாதத்திலிருந்து தப்பி ஓட்டம்!

பெங்களூரிலுள்ள DIET என்கின்ற ஸலஃபுக் கொள்கையுடைய அமைப்பினர் சுன்னத் வல் ஜமாஅத்தினரை விட தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக கடுமையான விஷமப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். வழிகெட்ட எல்லா இயக்கங்களையும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக திருப்பிவிடும் வேலையையும் கள்ளத்தனத்தையும் இவர்கள் செய்து வந்தனர். எனவே இவர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி இவர்களிடம் நேர்வழி இல்லை என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியத்தை இவர்களே ஏற்படுத்திய காரணத்தால் கட்ந்த 09.09.2007 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைச் சகோதரர்கள் பகிரங்க விவாதத்திற்கு இவர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

அப்போது விவாதத்திற்கு வராமல் ஓட்டமெடுத்த ஸலஃபுகள் கடந்த 5ஆண்டுகளாக ஓடிக்கொண்டே இருந்தனர்.

நீங்கள் சொல்லக்கூடிய கொள்கை சரியானது என்றால் தவ்ஹீத் ஜமாஅத்தினரிடத்தில் நீங்கள் நேரடியாக விவாதிக்க வேண்டியது தானே! அவர்கள்தான் உங்களை பல ஆண்டுகளாக விவாதம் செய்ய அழைத்து அறைகூவல் விட்டு வருகின்றார்களே! என்பன போன்ற சராமரிக் கேள்விகளால் பொதுமக்கள் அவர்களைத் துளைத்தெடுக்க, வேறு வழியின்றி நம்முடன் விவாதிக்க சென்ற மாதம் சம்மதம் தெரிவித்தனர் அந்த ஸலஃபுக் கூட்டத்தினர்.

விவாதிக்கும் அளவுக்கு சரியான கொள்கையும் மார்க்க அறிவும் இல்லாத இவர்கள் விவாதிக்க சம்மதம் தெரிவித்து நமக்கு கடிதம் எழுதியது நமக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இவர்களுடன் நடந்த விவாத ஒப்பந்தத்தின் போது தான் இதன் சூட்சமம் நமக்கு விளங்கியது. நாங்களும் விவாதம் நடத்தினோம் என்று காட்டுவது தான் இவர்களின் நோக்கம். ஒவ்வொரு தலைப்பிலும் யார் சொல்வது சரி என்று கண்டறிவது இவர்களின் நோக்கம் அல்ல என்பதை இவர்களே விவாத ஒப்பந்தத்தின் போது உளறிக் கொட்டினார்கள். இதை ஒப்பந்த வீடியோவில் நீங்கள் காணலாம்.

அவர்களோடு கடந்த 06.10.12 அன்று மாநிலத் தலைமையகத்தில் நடைபெற்ற விவாத ஒப்பந்தத்தில்,

• மொத்தம் 6 தலைப்புகளில் விவாதம் செய்வது எனவும்,

• ஒவ்வொரு தலைப்பிலும் 2 நாட்கள் விவாதம் செய்வது எனவும்,

• உருது மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் விவாதம் நடைபெறும் எனவும்,

• மார்க்க ஆதாரம் எது? என்ற தலைப்பை முதல் தலைப்பாக வைத்து விவாதிப்பது எனவும்,

• முதல் தலைப்பில் வரக்கூடிய டிசம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் சென்னையில் வைத்து விவாதம் செய்வது எனவும்

விவாத ஒப்பந்தம் கையெழுத்தானது.

முதல் இரண்டு தலைப்புகளில் இரு தரப்பினருடைய நிலைப்பாடுகளும் எழுதப்பட்டு இரு தரப்பினரும் விவாத ஒப்பந்தத்தில் 06.10.12 அன்று கையெழுத்திட்டனர்.

கையெழுத்திடப்பட்ட விவாத ஒப்பந்த நகல் இணைக்கப்பட்டுள்ளது.


விவாத ஒப்பந்தம் (Click to download)

விவாத ஒப்பந்தம் முழுவதும் முழுமையாக வீடியோ எடுக்கப்பட்டது.

விவாத ஒப்பந்த வீடியோ

 

பாகம் 1

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் 2

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் 3

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் 4

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் 5

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ 

இந்நிலையில் கடந்த 06.10.12 அன்று விவாத ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டுச் சென்ற விஷயங்களை மறுத்து அந்தர்பல்டி, ஆகாய பல்டி அடித்து, இரு தரப்பும் பேசி ஒப்புக்கொண்ட விஷயங்களை மறுத்து கடந்த அக்டோபர் 16ஆம் தேதி சலஃபுக் கூட்டத்தினர் ஒரு ஈமெயிலை தலைமைக்கு அனுப்பி தங்களது தொடை நடுங்கித்தனத்தை வெளிக்காட்டியுள்ளனர்.

அந்த மெயில் விபரமும், அதற்கான பதிலும் கீழே தரப்பட்டுள்ளது:


Click here to download

நாம் அனுப்பிய பதிலுக்கு, “நாங்கள் குறித்த தேதியில், குறித்த தலைப்பில்  ஏற்கனவே விவாத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபடி விவாதிக்க ஒப்புக் கொள்கின்றோம்” என்று இதுவரை  நமக்கு பதில் வரவில்லை.மொத்தம் 6 தலைப்புஒவ்வொரு தலைப்பிலும் 2 நாட்கள்உருது மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிமார்க்க ஆத

Published on: October 28, 2012, 6:47 PM Views: 1418

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top