பிரதமர் சந்திப்பு (புகைப்படம்)

 அல்லாஹ்வின் திருப்பெயரால்…

பிரதமருடன் தவ்ஹீத் ஜமாஅத் சந்திப்பு

 முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீட்டை இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் வலியுறுத்தியதன் தொடர்ச்சியாக தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் இன்று 06-07-2010 பகல் 11.00 மணி முதல் 11.15 வரை பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தினார்கள்.  

டெல்லியில் இருந்து தகவல் அனுப்பிய ரஹ்மதுல்லா அனுப்பிய கூடுத்ல் விபரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

பிரதமருடன் தவ்ஹீத் ஜமாஅத் சந்திப்பு 

முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீட்டை இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் வலியுறுத்தியதன் தொடர்ச்சியாக தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் இன்று 06-07-2010 பகல் 11.00 மணி முதல் 11.15 வரை பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தினார்கள்.

பகல் 12.25 முதல் 12.35 வரை காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களையும்சந்தித்து இட ஒதுக்கீட்டை வலியுதித்தினார்கள்.

 இது குறித்த முழு விபரம் வருமாறு:

மாநாட்டுக்கு முதல் நாள்  ஜூலை மூன்றாம் தேதியன்று பிரதமருக்கும், காங்கிரஸ் தலைவி திருமதி சோனியா காந்திக்கும் முஸ்லிம் சமுதாயத்தின் தனி இட ஒதுக்கீடு குறித்து வலியுறுத்துவதற்காக நேரம் ஒதுக்கித் தருமாறு கோரும் இரு கடிதங்கள் தயார் செய்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. எம். ஹாரூன்  அவர்கள் மூலம் இருவருக்கும் சேர்ப்பிக்கச் செய்தோம்.

மாநாடு நடத்துவது மட்டும் போதாது. இட ஒதுக்கீடு தரும் இடத்தில் இருப்பவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? இட ஒதுக்கீடு தரும் எண்ணம் அவர்களுக்கு இருக்கிறதா? இலட்சக்கணக்கான மக்களின் உணர்வுப்பூர்வமான மாநாடு மற்றும் பேரணி குறித்த தகவல்கள் அவர்களைச் சென்றடைந்துள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்காக இந்தச் சந்திப்பை விரும்பினோம்.

பிரதமரும் காங்கிரஸ் தலைவியும் இட ஒதுக்கீடு தரும் எண்ணமில்லாமல் உள்ளனர் என்று நாம் கருதியதால் பிரதமரும் சோனியா காந்தி அவர்களும் நேரம் ஒதுக்குவார்கள் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. அப்படியே நேரம் ஒதுக்கினாலும் இவ்வளவு சீக்கிரத்தில் நேரம் ஒதுக்குவார்கள் என்றும் நாம் எதிர்பார்க்கவில்லை.

மாநாடு முடிந்த மறுநாளே ஆறாம் தேதி நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வந்தது.

தமிழக வரலாறு காணாத அளவுக்கு இலட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் கட்டுக்கடங்காத எண்ணிக்கையில் உணர்ச்சிப் பிளம்பாகக் கலந்து கொண்ட தகவல் உளவுத்துறை மூலமும் மாநாட்டில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ. எம். ஹாருன் அவர்கள் மூலமும் பிரதமருக்கும் காங்கிரஸ் தலைவருக்கும் சென்றடைந்ததே இந்தச் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கக் காரணமாக இருந்தது. பிரதமரின் சந்திப்பின் போது இதைக் கண்டு கொண்டோம்.

தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழுத் தலைவர் சம்சுல்லுஹா, மேலாண்மைக் குழு உறுப்பினர் பி. ஜைனுல் ஆபிதீன், பொதுச் செயலாளர் எம். அப்துல் ஹமீது, மாநில துணைத் தலைவர் கோவை ரஹ்மத்துல்லா ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. எம் ஹாரூன், தேசிய லீக் தலைவர் எம்.பஷீர் அஹமது ஆகியோர் காலை 7.00 மணிக்கு விமானத்தில் புறப்பட்டு குறித்த நேரத்தில் பிரதமரைச் சந்திக்கச் சென்றோம். வழக்கமான பாதுகாப்பு சோதனை முடிந்த பின் பிரதமர் அலுவலகம் அழைத்துச் செல்லப்பட்டோம்.

அனைவரிடமும் பிரதமர் கைகுலுக்கி வரவேற்றார். திருக்குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் மாமனிதர் நபிகள் நாயகம் ஆங்கில மொழிபெயர்ப்பையும்  பி. ஜே. வழங்கினார்கள். குர்ஆன் மொழிபெயர்ப்பைப் பிரித்துப் பார்த்து கண்களில் ஒற்றிக் கொண்ட பின் நன்றி நன்றி நன்றி எனக் கூறினார்.

இதன் பின்னர்  நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. எம். ஹாரூன் அவர்கள் பிரதமருக்கு சால்வை வழங்கினார்கள். தேசிய லீக் தலைவர்  பஷீர் அஹமது அவர்கள் ஏல்க்காய் மாலை வழங்கினார்கள்.

இதன் பின்னர் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் லட்டர் பேடில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி எழுதப்பட்ட கோரிக்கை மனுவை வழங்கினோம்.

பிரதமர் வெளிநாட்டு அதிபர்களைச் சந்திக்கும் அறையில் எங்களைப் பிரதமர் சந்தித்தார். பிரதமருக்கு அருகில் பிரதமர் இருக்கை போல் ஒரு இருக்கையும் வலது இடது புறங்களிலும் எதிரிலும் சோபாக்கள் போடப்பட்டு இருந்தன.

தனது அருகில் போடப்பட்ட இருக்கையில் பி. ஜே. அவர்களை பிரதமர் அமரச் செய்தார்கள்.

(இது குறித்து வெளியில் வந்த பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாரூன் அவர்கள் கூறும் போது இந்த இருக்கையில் வெளிநாட்டு அதிபர்கள் தவிர யாரும் அமர வைக்கப்பட மாட்டார்கள். இந்தக் கண்ணியத்தை பிரதமர் தங்களுக்கு மட்டும் வழங்கினார் என்று பீஜேயிடம் கூறினார்கள். ஆனால் இது பீஜேவுக்கு வழங்கப்பட்ட கண்ணியம் அல்ல. மாநாட்டுக்கு வந்த இதற்காக உழைத்த துஆ செய்த அனைவருக்குமான கண்ணியமே இது என்று பீஜே கூறினார்.)

அமர்ந்த உடன் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே உபசரிப்பும் நடந்தது.

பொதுவாக முக்கியத்துவம் இல்லாத சந்திப்பு என்றால் நின்று கொண்டு மணு வாங்குவார்கள். அல்லது உள்ளே அனுப்பும் போதே டூ மினிட்ஸ் என்று சொல்லி அனுப்புவார்கள். ஓரளவு முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்தால் ஒரு டீ வழங்குவார்கள்.

முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு என்றால் அவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதற்கேற்ப உபசரிப்பு இருக்கும்.

நாம் தமிழகத்தில் இருந்து சென்றதால் தமிழக உணவான வடை மற்றும் தமிழகப் பலகாரங்களுடன் உபசரிப்பு இருந்தது. வெறுமனே மனுவை வாங்கிக் கொண்டு அனுப்பாமல் கல்ந்துரையாடலாக கருத்துப் பரிமாற்றம் செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்றால் மாநாடு பற்றிய செய்தி உரிய முறையில் சென்றடைந்துள்ளது என்பதே காரணம்.

பதினைந்து நிமிட நேரம் முஸ்லிம்களின் அவல நிலையையும், காங்கிரசின் தேர்தல் வாக்குறுதியையும் பி. ஜே. தமிழில் கூற, ஹாரூன் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறினார்கள்.

மாநாட்டைப் பற்றியும், கட்டுக்கடங்காமல் திரண்ட கூட்டத்தைப் பற்றியும் பி. ஜே. தெரிவித்த போது தெரியும், ரிப்போர்ட் வந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்கள்.

ஷம்சுல்லுஹா, அப்துல் ஹமீது, ரஹ்மத்துல்லா ஆகியோரும், பஷீர் அஹமது, ஹரூன் பாய் ஆகியோரும் ஆங்கலத்தில் இட ஒதுக்கீடு குறித்து பல வகையிலும் தங்கள் கருத்தைப் பதிவு செய்தார்கள்.

அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட பிரதமர் நீதிபதி மிஸ்ரா அவர்களின் அறிக்கை வந்தது முதல் அது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். இந்த சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு நிச்சயம் தருவோம் எப்படி யூனி பார்மாக இதைச் செய்வது என்பது குறித்துத் தான் ஆலோசனை நடக்கிறது என்று நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பேசினார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத்துக்கு பிரதமர் தந்த மரியாதையும் முக்கியத்துவமும் ஆச்சரியப்படத் தக்க வகையில் இருந்தன. லட்சக்கணக்கான மக்கள் பட்ட கஷ்டமும் உழைப்பும் துஆக்களுமே இதற்குக் காரணம் என்பதில் சந்தேகம் இல்லை.

 நின்று கொண்டே மனுவை வாங்கிக் கொண்டு அனுப்பக் கூட நேரமில்லாத பிரதமர் நாங்களாக எழும் வரை கலகலப்பாகப் பேசிக் கொண்டே இருந்தார்கள். காரணம் தீவுத் திடலை நிறைத்த மக்கள் சக்தி தான் என்பதை நாங்கள் எங்களுக்குள் நினைவுபடுத்திக் கொண்டோம்.

அடுத்ததாக காங்கிரஸ் தலைமை அதிகார மையத்தின் நம்பர் ஒன் ஆகக்  கருதப்படும் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களைச் சந்திக்கச் சென்றோம். ட்ராபிக்கில் மாட்டிக் கொண்டதால் குறித்த நேரத்தை விட ஐந்து நிமிடம் தாமதமாகி விட்டது.

எத்தனையோ வேலைப் பளுவில் இருக்கும் பெரும் தலைவர்கள் மற்றவர்களுக்காகக் காத்திருக்க மாட்டார்கள். ஒரு விநாடி காலதாமதமானாலும் யாரையும் சந்திக்க மாட்டார்கள். இந்த அடிப்படையில் செக்யூரிட்டிகள் நமது சந்திப்பை கேன்சல் செய்து விட்டதாகக் கூறினார்கள். ஆனால் ஹாரூன் பாய் அவர்கள் உள்ளே சென்று தாமதத்துக்கான காரணம் பற்றி தெரிவித்தவுடன் எங்கள் காலதாமதத்தைப் பொருட்படுத்தாமல் சோனியா அவர்கள்உடனே எங்களை வரச் சொன்னார்கள்.

சோனியா காந்தி அவர்களை அவர்களின் அலுவலகத்தில் சந்தித்தோம். அவருக்கும் குர்ஆன் ஆங்கில மொழிபெயா;ப்பு மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம்  ஆங்கில மொழிபெயர்ப்பும் கொடுத்தோம். கோரிக்கை மனுவையும் அளித்தோம். பிரதமரிடம் எடுத்துச் சொன்னது போல் முழுமையாக கோரிக்கைகளை அவர்களுக்கும் விளக்கினோம்.

அபுல்கலாம் ஆஸாத் அறக்கட்டளை மூலம் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி உள்ளிட்ட திட்டங்களை எடுத்துக் கூறி முஸ்லிம்கள் மீது தமக்கு உள்ள அக்கரையை சோனியா விளக்கிக் கூறினார்.

நீதிபதி மிஸ்ரா அவர்கள் மத்திய அரசுப்பணிகளிலும் மாநிலங்களிலும் முஸ்லிம்களூக்கு பத்து சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்குமாறு கூறுகிறார். மாநிலங்களில் முஸ்லிம்கள் சதவிதம் ஒரே மாதிரியாக இருக்கவில்லை. சில மாநிலங்களில் பத்து சதவிகிதத்தை விடக் குறைவாக உள்ளது. சில மாநிலங்களில் பத்து சதவிகிதத்தை விட அதிகமாக உள்ளது.

எனவே அனைத்து மாநிலங்களிலும் பத்து சதவிகிதம் கொடுக்க முடியாது. ஏற்கனவே இட ஒதுக்கீடு அளித்த மாநிலங்களும் உள்ளன. அளிக்காத மாநிலங்களும் உள்ளன. இதையெல்லாம் சீர் செய்து நாடு முழுவதும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வேலைகள் நடந்து வருகின்றன என்று சோனியா அவர்கள் கூறினார்கள்.

 புது டில்லியில் இருந்து கோவை ரஹ்மதுல்லாஹ்

குறிப்பு ஜேஎம் ஹாரூன் அவார்களுக்கும் நமக்கும் கொள்கையில் வேறுபாடு இருந்தாலும் இந்த மாபெரும் மக்கள் திரளை சமுதாய நன்மைக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதில் அவர் காட்டிய ஆர்வம் எங்கள் ஆர்வத்தை விட குறைந்ததாக இல்லை. மேலும் தேசிய லீக் தலைவர் பஷீர் அவர்கள் மாநாட்டூக் நீங்கள் அழைக்காவிட்டால் கூட நான் உரிமையுடன் வந்து கலந்து கொள்வேன் எனக் கூறி ஹாரூன் அவர்களுடன் சேர்ந்து இந்த சரித்திரம் காணாத மக்கள் சக்தியக் காட்டி மக்களூக்கு நம்மால் ஆன நன்மையைச் செய்ய வேண்டும் என்று முனைப்பு காட்டியது குறிப்பிடத் தக்கது.

ஜமாஅத் அழைக்கப்பட்டதா?

தமிழகத்தைக் குலுக்கிய தீவுத்திடல் மாநாட்டினால் வயிறு எரிந்து போனவர்கள் இட ஒதுக்கீட்டைப் பின்னுக்குத் தள்ளி மக்கள் எழுச்சியை மறக்கடிக்கச் செய்யும் எண்ணத்துடன் பயனற்ற கேள்விகளைக் கேட்டு வருகின்றனர்.

பிரதமரிடம் அப்பாயிண்ட் மெண்ட் கேட்டார்களா? பிரதமரே அழைத்தாரா? என்பதும் அதில் ஒரு கேள்வியாகும்.

பிரதமர், முதல்வர் ஆகிய பொறுப்புக்களில் உள்ளவர்கள் அதிகாரிகள் அமைச்சர்களைத் தவிர யாரையும் அழைப்பது மரபு அல்ல. அழைப்பதாக இருந்தாலும் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டதன் அடிப்படையில் அழைப்பதாகத் தான் பதிவு செய்யப்படும். பிரதமர் அழைக்கும் அளவுக்கு யாரும் முக்கியமானவர் அல்ல என்பது இதற்குக் காரணம்.

தமிழக முதல்வர் அவராக நம்மைச் சந்திக்க விரும்பினால் கூட முதல்வர் சந்திக்க விரும்புகிறார்; நீங்கள் சந்திக்க நேரம் கேட்டு கடிதம் கொடுங்கள் என்று தான் தகவல் தருவார்கள். அதன்படி கடிதம் கொடுத்த பின் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதைத் தெரிவிப்பார்கள்.

தமிழக முதல்வர் அவர்களை இந்த அடிப்படையில் தவ்ஹீத் ஜமாஅத் சந்தித்துள்ளது.

மாநாடு முடிந்ததும் கவர்னர் வழியாக மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் திட்டம் தான் இருந்தது. ஆனால் மாநாடு எதற்காக நடத்துகிறீர்களோ அந்தக் கோரிக்கையை பிரதமருக்கும் காங்கிரஸ் தலைவிக்கும் சொல்லலாமே என்று உளவுத்துறை மூலம் எங்களுக்குச் சொல்லப்பட்டது. நீங்கள் பிரதமரிடம் இது குறித்து பேசுவதற்காக நேரம் ஒதுக்கிக் கேளுங்கள்! கூட்டம் நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு வந்தால் உடனே உங்களுக்கு அழைப்பு வரும். இல்லாவிட்டால் கவர்னர் வழியாக மத்திய அரசுக்குத் தெரிவிக்கலாம் என்று உளவுத்துறை அதிகாரிகள் சொன்ன பின் மாநாட்டுக்கு அழைப்பு கொடுப்பதற்காக ஹாரூன் எம்பி அவர்களை தவ்ஹீத் ஜமாஅத் சந்தித்தது.

அவர் மாநாட்டுக்கு வருவதில் காட்டிய ஆர்வத்தைக் கண்டபின் இட ஒதுக்கீடு விஷயத்தில் அவருக்கு இருக்கும் ஈடுபாட்டை அறிந்து கொண்டதால் அவர் மூலமே பிரதமர் சந்திப்பு குறித்த கடிதத்தை அனுப்ப எண்ணி அவரிடம் கேட்ட போது மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டார். அதன் அடிப்படையில் கடிதம் கொடுக்கப்பட்டது.

அரசின் விருப்பங்கள் உளவுத்துறை வழியாகத் தான் சொல்லப்படும்.

இட ஒதுக்கீடு குறித்து பேசுவதற்கு நேரம் கேட்டு விட்டு தவ்ஹீத் ஜமாஅத் போய் காத்துக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் அழைத்தால் போவது, இல்லாவிட்டால் கவர்னரிடம் கொடுப்பது என்று முடிவு செய்திருந்த நேரத்தில் தான் அழைப்பு வந்தது.

அழைப்பு வந்தது என்பதும் நாம் நேரம் ஒதுக்கிக் கேட்டோம் என்பதும் முரண்பாடானது அல்ல. ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது தான். நாம் நேரம் ஒதுக்கிக் கேட்டோம் என்பதும் உண்மை. அவர்கள் எங்களை அழைத்தார்கள் என்பதும் உண்மை. ஒரு முரண்பாடும். இல்லை. அழைக்காமல் போய் நினைத்தவுடன் பிரதமரைச் சந்திக்க முடியாது.

Published on: July 7, 2010, 3:38 AM Views: 1027

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top